ஹாய் மோடி, கங்ராட்ஸ்

ஹாய் மோடி, கங்ராட்ஸ். உன்னால மட்டும்தான்யா இப்படி எல்லாம் ஜெயிக்க‌ முடியுது

அது இருக்கட்டுமுங்க ஒரு உதவி

என்ன அமெரிக்க விசாவா? உடனே வாய்யா

இல்லீங்க, ஜூன் 2 ஈரான்ல இருந்து வர்ற எண்ணெய நிறுத்தணும்னு சொல்லிட்ட்டீங்க. நானும் தேர்தல் முடியட்டும்னு இருந்தேன், தெரிஞ்சோ தெரியாமலோ வந்துட்டேன் ஏதாவது பண்ணுங்க எசமான்

அதெல்லாம் முடியாது, சவுதில இருந்து வாங்கிக்க. அவன் நம்ம பையன் எவ்வளவு கேட்டாலும் தருவான்

இல்லீங்க ஈரான பகைக்க முடியாதுங்க, வேற ஐடியா இருந்தா சொல்லுங்க‌

ஒஹோ, ஈரான பகைக்க முடியாதா? உங்க நாட்டுல எப்படி பிரச்சினை கொண்டுவரணமும்னு எங்களுக்கு தெரியும், இன்னும் விமானம் வாங்கணமுல்ல, எங்க அமெரிக்க தூதர் அங்க விசா மட்டும் அடிப்பார்னு நினைக்கிறீங்களா? பாகிஸ்தானுக்கு எப்35 கொடுக்கட்டுமா?

அய்யோ எசமான், நானே ஜெயிப்பேன்னு நினைக்கல எப்படியோ ஜெயிக்க வச்சிட்டாங்க, ஏதாவது பண்ணி ஈரான்ல இருந்து எண்ணெய் வாங்குறமாதிரி செய்ங்க இல்ல இங்க சிக்கலாயிரும்

ஈரான நொறுக்க போறோம், கொஞ்ச நாளைக்கு சவுதி பக்கம் போய் வாங்கிக்க, ஈரான் நம்ம கையில கிடைச்ச அப்புறம் நோ பிராப்ளம்

அதுக்கில்லீங்க‌…

என்னய்யா நீ? இங்கேயும் தேர்தல் வருதுய்யா. நீ மட்டும் பாகிஸ்தானை அடிச்சிட்டு களத்துக்கு வரலியா? அப்படி நானும் ஈரானை 2 தட்டு தட்டுனாதான்யா ஊருக்குள்ள பேசமுடியும், இது யாருக்கு புரியலண்ணாலும் உனக்கு புரியலண்ணா எப்படிய்யா?

ராகுல் ராஜினாமா செய்ய கூடாது

தோல்விக்கு பொறுப்பேற்று மிக உருக்கமான அறிக்கையினை வெளியிட்டிருகின்றார் ராகுல் காந்தி, தலைவர் பதவி ராஜினாமா செய்யும் வரை விஷயம் செல்லலாம் என்கின்றார்கள்

நிச்சயம் ராகுல் ராஜினாமா செய்ய கூடாது, இங்கு சிக்கல் ராகுலிடம் அல்ல, அவரிடம் அல்லவே அல்ல.

இது தேசம், ராகுல் ஒருவரால் இங்கு மாற்றம் வந்திவிடும் என்பது மடத்தனம். அரசியலில் எல்லா நாளும் யாராவது ஆதிக்கம் செலுத்துவார்கள், நிச்சயம் மோடி இல்லை என்றால் இன்னொருவர் வந்திருப்பார்

விஷயம் அது அல்ல, ராகுலை பாஜக எதிர்கொண்டது. அவர் தங்கள் அரசியல் எதிரி என பகிரங்கமாக ஒப்புகொண்டது

ஆனால் காங்கிரஸின் நண்பர்கள் அல்லது மோடிக்காக காங்கிரஸ் பக்கம் நெருங்கியவர்கள் எல்லோருமே அடிப்படையில் காங்கிரஸ் எதிரிகள்

அவர்களுக்கு இந்திய தேசியம் பிடிக்காது, ஒன்றுபட்ட இந்தியா மேல் இந்திரா காலத்திற்கு முன்பிருந்தே கசப்பை உமிழ்ந்தவர்கள். வாய்ப்பு கிடைத்தால் முன்னாள் எஜமான் காங்கிரஸ் தனக்கு பல்லக்கு தூக்கட்டும் என காத்திருந்த கொடியவர்கள்

அவர்களுக்கு நாடு என்ற சிந்தனையுமில்லை மோடி பொது எதிரி என்ற நோக்கமுமில்லை , எல்லாம் சுயநலம்

திமுக மட்டும் அதிலிருந்து வேறுபட்டு கடைசிவரை ஏன் இப்பொழுது வரை காங்கிரஸுடன் நிற்கின்றது

மற்ற கட்சிகள் அப்படி அல்ல, வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும் என காத்திருந்து மோடிக்கு வலுசேர்த்துவிட்டார்கள்

இதில் ராகுல் வருந்த ஒன்றுமே இல்லை

பாட்டியும் தந்தையும் கொல்லபட்ட சிறிய பால்யத்தில் இருந்து வந்தவர், வெளிநாட்டு வாழ்க்கையினை உதறிவிட்டு இங்கு வந்தவர். நாட்டுக்காக ஏதோ செய்ய துடிப்பவர்

அவருக்கு இன்னும் காலமிருக்கின்றது, நேரமிருக்கின்றது, அரசியல் வாழ்க்கை இருக்கின்றது

இது காங்கிரசுக்கு எதிரான தோல்வி அல்ல, மோடிக்கு எதிராக மற்ற கட்சிகள் அணிதிரளாததால் வந்த தோல்வி

இதற்கு ராகுல் பொறுப்பு எப்படி ஏற்கமுடியும்?

மோடி போலவே அகில இந்திய அடையாளம் ராகுல், சட்டமன்ற தேர்தலில் அவர் வெல்லத்தான் செய்தார், அசாத்திய வெற்றி

இப்பொழுது சூழல் சரியில்லை, அவர் என்ன செய்யமுடியும்?

அகில இந்திய அடையாளமாக , தேசத்தின் மகத்தான நம்பிக்கையான ராகுல் மனம் தளர கூடாது

தொடர்ந்து அவர் காங்கிரஸ் பேரியக்கத்தை நடத்தட்டும்

அவருக்கான காலம் நிச்சயம் ஒருநாளில் வரும், தேசம் நிச்சயம் ஒருநாளில் அவரை தலமை ஏற்க அழைக்கும்

மோடிக்கு மாற்று என தேசம் விரைவில் அவரைத்தான் கைகாட்டும்

கம்பன் சொன்னபடி “நதியின் பிழையன்று நறும்புணலின்மை விதியின் சதியன்றி வேறென்ன?”

ஆம் ஆற்றில் நீர் வரவில்லை என்றால் ஆறு செய்த குற்றமா?

காலம் அப்படி இருக்கின்றது, காலம் மாறும்பொழுது எல்லாம் மாறும்

பாரதியின் வரிகளில் சொல்வதென்றால்

“கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்..”

அதுவரை ராகுல் பொறுமையாய் உழைக்கட்டும், இன்னும் ஏராளமான உள்ளங்களை அவர் வென்று பொறுமையாய் முடிசூடட்டும்

ராகுலுக்கு பலமும் தைரியமும் வரவேண்டுமானால் அந்த பெருமகன் நேரு போராடிய மாபெரும் போராட்டத்தை நினைத்து பார்க்கட்டும்

எவ்வளவு சிறை? எவ்வளவு போராட்டம்? எவ்வளவு சிரமம்? அதை தாண்டி அவன் வரலாறாய் நிலைக்கவில்லையா?

அதை படித்தாலே ராகுலுக்கு ஆயிரம் யானை பலம் வரும்

தேசம் உங்களை பின்னாளுக்காக குறித்து வைத்திருகின்றது ராகுல், அதுவரை பொறுமையாய் இருங்கள்.

இளைய இந்தியாவின் கடைசி நம்பிக்கையான ராகுல் எங்கும் சென்றுவிட கூடாது, அவரை எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கு துரோகம் செய்துவிடலும் கூடாது

அயோத்திவிட்டு வெளியேறி 14 வருடம் ராமனே காட்டில் அலைய கொடும் விதி இருந்தது

அவனை வெளியே தள்ளிய காலம் பின்பு அவனை மன்னனாக ஏற்கவும் செய்தது

தோற்பவன் தோற்றுகொண்டும் வெல்பவன் வென்றுகொண்டும் இருப்பது உலகில் எங்குமே இல்லை

எந்த தோல்வியும் நிரந்தரமல்ல வெற்றியும் நிரந்தரமல்ல‌

தோற்க ஒரு காலம் உண்டாயின் வென்று முடிசூடவும் காலம் வரும்

அக்காலம் வரை மன்னவன் பொறுக்கட்டும், காலங்கள் கூடட்டும்

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகபோகின்றோம் …

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகபோகின்றோம் என அறிவித்து பிரிட்டன் படும் பாடு கொஞ்சமல்ல‌

அது மிக சிக்கலான பிரச்சினை, அந்த ஒப்பந்தபடி ஐரோப்பாவின் மற்ற தேசங்களின் மக்களால் பிரிட்டானிய மக்கள் பாதிக்கபடுகின்றார்கள், பிரிட்டன் நாசமாகின்றது பிரிட்டன் சுரண்டபடுகின்றது என வந்த குரலை அடுத்து பிரிட்டன் அதிலிருந்து விலக தயாரானது

ஆனால் விவகாரம் அவ்வளவு சுமூகமாக இல்லை, விலகினால் தனித்துவிடபடும் பிரிட்டன் கடும் விளைவுகளை சந்திக்கலாம் என்பதால் அரசுக்கு கடும் தயக்கம்

நாட்களை நீட்டித்துகொண்டே சென்றார்களே தவிர இன்னும் முழுமையாக விலகவில்லை

இந்த சிக்கலில்தான் கடந்த பிரதமர் தலைதெறிக்க ஓடி தெரசா மே வந்தார்

அவர் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகினாலும் சில ஒப்பந்தங்களை செய்ய முனைந்தார்

அது மறுபடியும் சர்ச்சையாகி இப்பொழுது பிரிட்டன் பிரதமர் தெரசா மே பதவி விலகுகின்றார்

யாராவது வரும்வரை பொம்மையாக நீட்டிக்க ரெடி என தழுதழுத்த குரலில் சொல்லிவிட்டார் அம்மணி

சிக்கலை சரியாக கையாளமுடியாமல் அம்மணி அழுதுகொண்டே விலகுவது உலக அரங்கில் அதிர்வினை ஏற்படுத்துகின்றது

உலகை ஆண்ட பிரிட்டனே ஒரு யூனியனில் இருந்து பிரியமுடியாமல், பிரிந்தால் பலத்த சிக்கலை எதிர்நோக்குவோம் என பரிதவிக்கின்றது

ஆம் அது முடியவும் முடியாது, பிரிந்தாலும் பல விஷயங்களில் அண்டை நாடுகளுடனான பல ஒப்பந்தமும் அனுசரிப்பும் அவசியம்

பிரிட்டனே , அதுவும் ஒரு யூனியனில் இருந்து பிரியவே தடுமாறும் பொழுது இங்கே சிலர் தமிழ்நாட்டை பிரித்து வாழ்வாங்கு வாழ்வார்களாம், சொல்லிகொள்கின்றார்கள்.

அதையும் சிலர் நம்புகின்றார்கள்

தமிழக தேர்தல் முடிவுகள்

தமிழக தேர்தல் முடிவுகள் யாவரும் நலம் என முடிந்திருப்பதுதான் வினோதம், எல்லோருக்கும் மகிழ்ச்சி ராமதாஸ், விஜயகாந்த் தவிர‌

தன்னை நிரூபித்துவிட்டதில் முக ஸ்டாலினுக்கு திருப்தி, நிச்சயம் அவர் மகிழ வேண்டிய தருணம்

ஆட்சி தப்பி பிழைத்ததில் பழனிச்சாமிக்கும் மகிழ்ச்சி, டெல்லி எப்படி போனால் அவர்களுக்கென்ன? மோடி பெருமான் கைவிட மாட்டார்

9 இடம் வென்றதில் காங்கிரசுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி

lokசபா தேர்தலில் பட்டை நாமம் வாங்கினாலும், சட்டமன்ற தேர்தலில் நெருக்கடி கொடுத்ததில் தினகரனுக்கும் உள்ளூர மகிழ்ச்சி

நாம் தமிழர் சொல்லவே வேண்டாம், காதோரம் வந்து “அண்ணே டிடிவி விட நாங்க அதிக வாக்குண்ணே , யார்கிட்டேயும் சொல்லாதீங்கண்ணே” என கிசுகிசுத்துவிட்டு செல்கின்றன‌

அடேய் சத்தமா சொன்னால் என்ன என்றால், அண்ணே அவனுக அடிக்கவருவானுகண்ணே என சொல்ல்விட்டு ஓடுகின்றன‌

சில இடங்களில் கமலஹாசனும் வாக்குகளை அள்ளியிருக்கின்றார் அவரும் மகிழ்ச்சி

ஆக எல்லா இடத்திலும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி, திருமா கோஷ்டி உட்பட

“எதை கொண்டுவந்தோம் இழப்பதற்கு?” எனும் தத்துவபடி தமிழிசை அக்கா கோஷ்டியும் மகிழ்ச்சி

டெல்லி செல்லும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

திமுக 37 எம்பிக்களை வைத்து கொண்டு என்ன செய்ய போகின்றது என ஏக விவாதங்கள், எம்பிக்கள் வெல்வதே டெல்லியில் ஆட்சி அமைக்க என நினைக்க தொடங்கிவிட்டதின் விபரீத விளைவு அது

டெல்லியில் காங்கிரஸின் கொடி உரக்க பறந்த காலங்களில் எல்லாம் திமுக அங்கு அரசில் பங்குபெற்ற கட்சி அல்ல, அதெல்லாம் சமீபத்திய காலங்கள்

அதற்கு முன் அதன் வரலாறு மகத்துவமானது. ஏன் பார்வர்டு பிளாக் கட்சியின் பிரதிநிதியாக டெல்லி சென்ற பசும்பொன் சிங்கம் அங்கு முழங்கியது இன்றளவும் சிலாகிப்பான பேச்சு

அண்ணா அன்று மாநில கட்சியின் எம்பியாக சென்று டெல்லியில் அசத்தினார், நகைகடையில் ஆர்வமுடன் அமர்ந்திருக்கும் பெண்கள் போல அவரை அந்த சபை வியப்புடன் பார்த்தது

அழகான ஆங்கிலமும், தாவி வந்த உவமையும், யாரையும் காயபடுத்தாமல் அவர் தென்னக நியாயங்களை எடுத்து வைத்த வாதமும் அப்படியானவை

அண்ணாவிற்கு பின்னரான காலங்களில் திமுக முத்திரை பதித்த எம்பிக்களை அனுப்பியது

அதில் குமாரமங்கலம், வலம்புரி ஜாண் என பல பிரபலங்கள் உண்டு

வைகோ பேசிய பேச்சில் இந்தியாவே ஈழபிரச்சினைக்கு ஆதரவாக களமிறங்கி வந்தது, அவரை பேசவைத்து ரசித்து கைதட்டினார் இந்திரா

வடகிழக்கு மாநிலங்கள் பிரச்சினையினை ஜெயலலிதா பேசியபொழுது அந்த சபையே ஆச்சரியமுடன் பார்த்தது

ஆம், ஆட்சியில் இல்லா காலங்களில் திமுக எம்பிக்களும், திறமையான அதிமுக எம்பிக்களும் வாத திறமையால் அந்த சபையினை அதிசயிக்க வைத்தனர்

இதில் இன்னொரு சோகமும் உண்டு

குமாரமங்கலம் முதல் வலம்புரி ஜாண் வைகோ என யாரை எல்லாமோ அனுப்பி கைதூக்கிவிட்டார் கலைஞர் , அவர்கள் அவருக்கு எதிராகவே திரும்பினர்

பாவம் அந்த மனிதன் அதையும் தாங்கினான்

ஜெயாவினை ராமசந்திரனுக்கு எதிராக சரியாக ஏவியது டெல்லி, அதுவும் பலன் கொடுத்தது

கலைஞருக்கு முரசொலிமாறன், திருச்சி சிவா, டி,ஆர் பாலு ஆ.ராசா போன்றோர் கடைசிவரை நன்றிகடனோடு இருந்தனர்

அதுவும் மாறனுக்கு இருந்த நன்றி அவர் பிள்ளைகளுக்கு இருந்ததாக தெரியவில்லை

எதையோ சொல்லவந்து எங்கோ சென்றுவிட்டோம், விஷயம் இதுதான்

ஆட்சியில் பங்கு என்பது வரும் போகும். அது அதிர்ஷ்டத்தை பொறுத்தது

ஆனால் தமிழக எம்பிக்கள் முத்திரை பதிக்க வாய்ப்பு உண்டு

கனிமொழி, தமிழச்சி, திருமா, ஆ.ராசா போன்றோர் செல்லும் சபையில் ஓரளவு தமிழக நியாயங்கள் அரங்கேறும் அதற்கு வாய்ப்பு உண்டு

அண்ணா, வலம்புரி ஜாண், குமாரமங்கலம், வைகோ, ஜெயலலிதா போன்ற திராவிட பிரபலங்கள் வரிசையில் இவர்களும் இடம்பெறட்டும்

தமிழக நலனை காக்கும் குரல் டெல்லியில் எக்காலமும் ஒலிக்கும் என நிரூபித்து காட்டட்டும்

மோடியும், நேருவும் இந்திராவும் தமிழக குரல்களை ஒலிக்க வைத்து அவர்கள் நியாயத்தை அகில இந்தியா அறிந்து கொள்ள வழி செய்தது போல் பெருந்தன்மையுடன் நடத்தட்டும்

தேசம் செழிக்கட்டும், யாரும் ஆளட்டும் ஆனால் தமிழகம் செழிக்கட்டும்

ஒரு விஷயம் உறுதியாக சொல்லமுடியும்

இன்று கலைஞர் இருந்தால் கனிமொழி டெல்லி செல்வதை விட திருமா டெல்லி செல்வதையே உச்சி முகர்ந்து அனுப்பி வைத்திருப்பார்

அடிமட்டத்தில் இருந்து உருவாகி வந்த அந்த திருமாமேல் கலைஞருக்கு எப்பொழுதும் அபிமானம் இருந்தது

ஆயிரம் கருத்துக்கள் மோதட்டும் அதில் உண்மை பூக்கள் மலரட்டும் என்ற தத்துவபடி பாராளுமன்றம் இந்நாட்டை வழிநடத்தட்டும்

டெல்லி செல்லும் அனைவருக்கும் வாழ்த்துக்கள், உங்களால் செழிக்கட்டும் தமிழகம்

அதே நேரம் பில்லி சூனியம் போல டெல்லி சூனியமும் பொல்லாதது, அது கட்சியினை உடைக்க சொல்லும் தீட்டிய மரத்தில் கூர்பார்க்க சொல்லும், சோறிட்ட கரங்களை வெட்ட சொல்லும், ஏறி வந்த கயிறை வெட்ட சொல்லும்

அதில்மட்டும் எச்சரிக்கையாய் இருங்கள், கலைஞர் சமாதியில் நன்றியோடு வணங்க்விட்டு செல்லுங்கள் , மனசாட்சி உங்களை வழிநடத்தும்

கவுண்டமணி

ஆயிரம் காமெடி நடிகர்கள் வந்தாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகர்கள் குறைவு

அதவாது டிரண்ட் செட்டர் என்படும், எக்காலமும் நிற்கும் காமெடிகளை செய்தவர்கள் மிக குறைவு

அதில் மகா முக்கியமானவர் கவுண்டமணி, கலைஞரின் வசனம், எம்.ஆர் ராதாவின் வரிகள் போல வரலாற்றில் நின்றுவிட்டது கவுண்டமணியின் பல காட்சிகள்

மிக ரசனையான நடிகர் கவுண்டமணி, ஒருவகையில் இந்த கலாபவன் மணி என்பவருக்கு அவர்தான் முன்னோடி

கவுண்டமணியின் தொடர்ச்சியே கலாபவன் மணி இங்கு கொண்டாடபட்டது

இரண்டு மணிகளுமே மகத்தான கலைஞர்கள்

கவுண்ட மணியின் பெயர் மணி அவ்வளவுதான் தெரியும், கோவைவாசிகளிடம் கேட்டால் அவர் கவுண்டரே அல்ல என்பார்கள்

அதாவது அவர்கள் சாதியில் ஒரு காமெடியன் இருந்துவிட கூடாதாம் அவ்வளவு கெத்து

கவுண்டமணியினை கூட ரசிக்க தெரியாதவர்கள் என்ன ரகமோ தெரியாது, இன்னொரு குறிப்பு அது அவர் ஊரின் சுருக்கம் என சொல்லும்

எப்படியும் போகட்டும், நமக்கு அவர் கவுண்டவுன் வைத்து சிரிக்க்க வைத்த கவுண்ட மணி அது போதும்

கலைஞனுக்கு ஏது ஜாதி? ஆனால் அந்த நடிகனின் போராட்டம் மிக நீண்டது

அவர் சர்வர் சுந்தரம் படத்திலே அறிமுகமானார் ஆனால் இன்று பார்த்தாலும் தெரியாது, அப்படி ஒரு துக்கடா வேடம்

பின் ஆங்காங்கே தோன்றினார், 16 வயதினிலே படம் அவரை கவனிக்க வைத்தது

சுருளிராஜனின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பினார் கவுண்டமணி, நிச்சயம் 1980களில் கவுண்டமணியால் தமிழகம் கவலை மறந்து சிரித்தது.

கொங்குநாட்டு குசும்பு அவரிடம் இருந்தது, கிராமத்து கலாச்சாரமாக‌ எதையும் அசால்ட்டாக சொல்லி செல்லும் வெகுளிதனம் அவரிடம் இருந்தது

திரையில் அவரை காணும்பொழுது சக மனிதராக அவர் உணரபட்டு மக்கள் மனதில் இடம்பிடித்தது இதனால்தான்

அந்த கிராமத்து குணமான “என்றா..” “டேய்..கோமுட்டி தலையா” போன்ற பேச்சுக்களை அதே தொணியில் கொடுத்தபொழுது மக்கள் மனதில் அவரால் எளிதில் அமர முடிந்தது

அதிலும் செந்தில் இணைந்தபின் எங்கோ சென்றார், கரகாட்டகாரன் படம் மாபெரும் வெற்றி பெற முதல் காரணம் இளையராஜா இரண்டாம் காரணம் கவுண்டரும் செந்திலும்

இன்னும் ஏராளமான படங்கள் அவரால் வென்றன‌

கவுண்டமணிக்கு ஒரு சிறப்பு என்னவென்றால் சலவை தொழிலாளி வேடம் முதல் முதல் அமைச்சர் வேடம் வரை சகல வேடத்திலும் நடித்தவர்.

எந்த நடிகனுக்கும் இல்லா சிறப்பு அது

அதனால்தான் எல்லா தரப்பும் அவரை சிலாகித்து கொண்டாடியது

ஒரு விசித்திரமான நடிகர் அவர், திரையில் கலக்குவாரே தவிர தனிபட்ட முறையில் பேட்டிகளோ, இம்சை பேட்டிகளோ ஒருகாலும் இல்லை

தனக்கு வாழ்வு கொடுத்த சுருளிராஜனை தவிர யாரையும் பற்றி அவர் பேசியதுமில்லை

திரை வாழ்வில் அரசியல்வாதி, தொழிலதிபர் முதல் தெருவில் வம்பிழுப்பவன் வரை கலாய்த்த ஒரே நடிகர் கவுண்டமணி

அவருக்கான இடம் நிச்சயம் பெரிது, காலத்திற்கும் பொருந்தும் வசனங்களை பேசியவர். இன்று அவர் பேசிய வசனங்கள் சால பொருந்துகின்றன‌

அந்த அற்புதமான கலைஞனுக்கு இன்று பிறந்த நாள்

கவுண்டமணி என்ற பெயரை சொன்னவுடன் முகத்தில் எல்லா தமிழருக்கும் ஒரு புன்னகை வருமல்லவா?

அதுதான் அவரின் மாபெரும் வெற்றி

திரையில் தமிழகத்து யதார்த்தங்களை மிக அழகாக சிரிக்க சிரிக்க சொன்ன கவுண்டணி இன்னும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

வெறும் மிரட்டல்?

மேலதிக துருப்புக்களை பாரசீக வளைகுடா பகுதிக்கு அனுப்புகின்றது அமெரிக்கா, நிச்சயம் பெரும் மிரட்டல்தான்

ஆனால் ஈரானை அடிக்குமா என்றால், அடித்தாலும் அமெரிக்கா நிம்மதியாக அங்கு நிலைக்க முடியுமா என்றால் சிக்கல்

அமெரிக்க கணக்குகள் வேறுமாதிரியானவை, ஆழ அலசி ஆராயாமல் உள்ளே கால் வைக்க மாட்டார்கள்

அதாவது தனிமனித துதி என்றாலோ ஒரே மனிதன் ஆட்சி என்றாலோ புகுந்துவிடுவார்கள், ஒரே மனிதனை வீழ்த்திவிட்டால் நாடு அழியும்

அது ஈராக், லிபியா, வெனிசுலா என பல இடங்களில் நடக்கின்றது. குழம்பிய அம்மக்களை திசை திருப்புவது எளிது

ஆனால் சித்தாந்தம் அப்படி அல்ல, சித்தாந்தத்தால் உருவான கூட்டம் மகா ஒற்றுமையாக எழும்பி நிற்கும் அதை கைவைத்தால் அழிவே மிஞ்சும்

இதை வியட்நாமில் உணர்ந்தது அமெரிக்கா

அந்த சித்தாந்த்ததில் உருவான எந்த இரும்பு நாட்டிடமும் அமெரிக்கா வால் ஆட்டாது, அதாவது மக்கள் புரட்சியாலும் ஒரே சித்தாந்தம் கீழ் வாழும் மக்கள் இருக்கும் நாட்டில் அமெரிக்க திட்டம் பலிக்காது

உதாரணம் சீனா, மிகபெரும் உதாரணம் வடகொரியா

இப்போதைய உதாரணம் ஈரான்

ஆம் தனிநபர் சர்வாதிகாரம் என்பது வேறு, அவனை வீழ்த்திவிட்டால் சகலமும் வீழும் பிரபாகரன்,பின்லேடன் போல‌

ஆனால் சித்தாந்தம் அப்படி அல்ல, தொடர்ந்து தலைவர்களை உருவாக்கி கொண்டே இருக்கும்

அப்படி சீனாவில் நடந்தது, வடகொரியாவில் நடந்தது

இதோ ஈரானிலும் அதுவேதான். கோமேனி ஏற்றி வைத்த வெளிச்சத்தில் மிக தைரியமாக நடைபோடுகின்றது ஒட்டுமொத்த ஈரான்

அமெரிக்கா இன்னும் தயங்கி நிற்பதும் வெறும் மிரட்டலை மட்டும் விட்டுகொண்டிருப்பதும் இதனாலேதான்

சித்தாந்தம் அப்படி மிக பெரும் கூட்டத்தை, கொள்கை வீரர்களால் நிரம்பிய கூட்டத்தை உருவாக்கி நிலைக்குமா சவால் விடுமா? என்ற சந்தேகம் இருந்தால், இன்னும் இருந்தால்

அதிமுக, அமமுகவினை பாருங்கள், காங்கிரஸை பாருங்கள். அப்படியே திமுகவினையும் பாருங்கள் உண்மை புரியும்

அரசியல் என்பது இப்படித்தான்

தேர்தல் பரபரப்பில் சில விஷயங்களை பத்திரிகைகள் சொல்லாமல் விட்டுவிட்டன இவர்கள் பொறுப்பு அப்படித்தான்

தேர்தல் முடிவுக்கு 4 நாட்களுக்கு முன்பு திட்டமிட்டபடி இந்திய தரப்பு பிரம்மோஸ் ஏவுகனைகளை சோதித்தது. பிரம்மோஸ் என்பது தரையிலிருந்து தரைக்கு, வானில் இருந்து தரைக்கு, தரையில் அல்லது வானத்தில் இருந்து கப்பலுக்கு என பல வகைகளில் தாக்கும் திறன் கொண்ட விஷேஷ ரகம்

இந்தியா தும்மினால் பதிலுக்கு பாகிஸ்தானும் தும்ம வேண்டும் அல்லவா? இதனால் பிரம்மோஸ் சோதனை முடிந்ததும் அவர்கள் தங்கள் ஷாகீன் ரகத்தை சோதித்தது அது வெறும் தரைக்கு தரை தாவும் வகை

அதாவது இந்தியாவோடு எப்பொழுதும் சரிக்கு சரி நிற்கும் பாகிஸ்தான் தங்களிடமும் ஏவுகனை இருப்பதை காட்டிவிட்டு மோடிக்கு வாழ்த்து சொல்கின்றது

அரசியல் என்பது இப்படித்தான்

மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து சொல்கின்றார் அல்லவா அப்படி