கவுண்டமணி

ஆயிரம் காமெடி நடிகர்கள் வந்தாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகர்கள் குறைவு

அதவாது டிரண்ட் செட்டர் என்படும், எக்காலமும் நிற்கும் காமெடிகளை செய்தவர்கள் மிக குறைவு

அதில் மகா முக்கியமானவர் கவுண்டமணி, கலைஞரின் வசனம், எம்.ஆர் ராதாவின் வரிகள் போல வரலாற்றில் நின்றுவிட்டது கவுண்டமணியின் பல காட்சிகள்

மிக ரசனையான நடிகர் கவுண்டமணி, ஒருவகையில் இந்த கலாபவன் மணி என்பவருக்கு அவர்தான் முன்னோடி

கவுண்டமணியின் தொடர்ச்சியே கலாபவன் மணி இங்கு கொண்டாடபட்டது

இரண்டு மணிகளுமே மகத்தான கலைஞர்கள்

கவுண்ட மணியின் பெயர் மணி அவ்வளவுதான் தெரியும், கோவைவாசிகளிடம் கேட்டால் அவர் கவுண்டரே அல்ல என்பார்கள்

அதாவது அவர்கள் சாதியில் ஒரு காமெடியன் இருந்துவிட கூடாதாம் அவ்வளவு கெத்து

கவுண்டமணியினை கூட ரசிக்க தெரியாதவர்கள் என்ன ரகமோ தெரியாது, இன்னொரு குறிப்பு அது அவர் ஊரின் சுருக்கம் என சொல்லும்

எப்படியும் போகட்டும், நமக்கு அவர் கவுண்டவுன் வைத்து சிரிக்க்க வைத்த கவுண்ட மணி அது போதும்

கலைஞனுக்கு ஏது ஜாதி? ஆனால் அந்த நடிகனின் போராட்டம் மிக நீண்டது

அவர் சர்வர் சுந்தரம் படத்திலே அறிமுகமானார் ஆனால் இன்று பார்த்தாலும் தெரியாது, அப்படி ஒரு துக்கடா வேடம்

பின் ஆங்காங்கே தோன்றினார், 16 வயதினிலே படம் அவரை கவனிக்க வைத்தது

சுருளிராஜனின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பினார் கவுண்டமணி, நிச்சயம் 1980களில் கவுண்டமணியால் தமிழகம் கவலை மறந்து சிரித்தது.

கொங்குநாட்டு குசும்பு அவரிடம் இருந்தது, கிராமத்து கலாச்சாரமாக‌ எதையும் அசால்ட்டாக சொல்லி செல்லும் வெகுளிதனம் அவரிடம் இருந்தது

திரையில் அவரை காணும்பொழுது சக மனிதராக அவர் உணரபட்டு மக்கள் மனதில் இடம்பிடித்தது இதனால்தான்

அந்த கிராமத்து குணமான “என்றா..” “டேய்..கோமுட்டி தலையா” போன்ற பேச்சுக்களை அதே தொணியில் கொடுத்தபொழுது மக்கள் மனதில் அவரால் எளிதில் அமர முடிந்தது

அதிலும் செந்தில் இணைந்தபின் எங்கோ சென்றார், கரகாட்டகாரன் படம் மாபெரும் வெற்றி பெற முதல் காரணம் இளையராஜா இரண்டாம் காரணம் கவுண்டரும் செந்திலும்

இன்னும் ஏராளமான படங்கள் அவரால் வென்றன‌

கவுண்டமணிக்கு ஒரு சிறப்பு என்னவென்றால் சலவை தொழிலாளி வேடம் முதல் முதல் அமைச்சர் வேடம் வரை சகல வேடத்திலும் நடித்தவர்.

எந்த நடிகனுக்கும் இல்லா சிறப்பு அது

அதனால்தான் எல்லா தரப்பும் அவரை சிலாகித்து கொண்டாடியது

ஒரு விசித்திரமான நடிகர் அவர், திரையில் கலக்குவாரே தவிர தனிபட்ட முறையில் பேட்டிகளோ, இம்சை பேட்டிகளோ ஒருகாலும் இல்லை

தனக்கு வாழ்வு கொடுத்த சுருளிராஜனை தவிர யாரையும் பற்றி அவர் பேசியதுமில்லை

திரை வாழ்வில் அரசியல்வாதி, தொழிலதிபர் முதல் தெருவில் வம்பிழுப்பவன் வரை கலாய்த்த ஒரே நடிகர் கவுண்டமணி

அவருக்கான இடம் நிச்சயம் பெரிது, காலத்திற்கும் பொருந்தும் வசனங்களை பேசியவர். இன்று அவர் பேசிய வசனங்கள் சால பொருந்துகின்றன‌

அந்த அற்புதமான கலைஞனுக்கு இன்று பிறந்த நாள்

கவுண்டமணி என்ற பெயரை சொன்னவுடன் முகத்தில் எல்லா தமிழருக்கும் ஒரு புன்னகை வருமல்லவா?

அதுதான் அவரின் மாபெரும் வெற்றி

திரையில் தமிழகத்து யதார்த்தங்களை மிக அழகாக சிரிக்க சிரிக்க சொன்ன கவுண்டணி இன்னும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

பின்னூட்டமொன்றை இடுக