இந்தியாவுக்கு அதை அறியாமலே கொம்பு சீவி விடுகின்றது

இந்தியாவுக்கு அதை அறியாமலே கொம்பு சீவி விடுகின்றது அமெரிக்கா, ஒரு வகையில் பார்க்க போனால் இது நாட்டுக்கு அவ்வளவு நல்லதல்ல‌

சீனாவினை சீண்ட இந்தியாவுக்கு பல நவீன ஆயுதங்களை கொடுக்கின்றது அமெரிக்கா, நிச்சயம் அவை மகா நவீனமானவை

சீனாவுக்கு எதிராக இந்தியாவினை ராணுவ ரீதியாக வளர்ப்பதில் அமெரிக்காவுக்கு ஆர்வம் அதிகம், 1962 சீனபோரின் பொழுதே ஓடிவந்து நின்றது

ஆனால் அன்றைய அரசுகள் சிந்தித்தன , நேரு போன்றவர்கள் இரு பக்கமும் பகையாகும் என சிந்தித்தனர், அமெரிக்க ஆதரவினை பெற்றுகொள்ள தயங்கினர்

இது காங்கிரஸ்காலம் வரை நீடித்தது

சிக்கிம் எல்லையில் சீனா அட்டகாசம் செய்தால் வியட்நாம் ஜப்பானிய எல்லையில் இந்தியா செல்லமுடியும் என காட்டிவிட்டு அமைதி காட்டினர்.

அதிலும் சில கணக்குகள் இருந்தன குறிப்பாக அமைதி மற்றும் பொருளாதார கணக்குகள்

ஆனால் மோடி அரசு அதை எல்லாம் கடாசிவிட்டு அமெரிக்காவுடன் இணைந்துவிட்டது எப் 21 உட்பட இன்னும் ஏராளமான விஷயங்களை கொடுக்கும் அமெரிக்கா இந்திய கப்பலுடன் தென் சீன கடலுக்குள் நுழைந்துவிட்டது

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து தன் காலடிக்கு வந்துவிட்டதில் பல்லை கடிக்கின்றது சீனா

ஏற்கனவே அமெரிக்காவுடன் பொருளாதார போரில் சீனா சிக்கியிருக்கும்பொழுது இந்த விவகாரம் சீனாவின் சீற்றத்தை தூண்டலாம்

அமெரிக்க ஆதரவுடன் நம் ஆயுதங்களை பெருக்குவது சரிதான், ஆனால் ஆயுதம் கொடுத்துவிட்டு சும்மா சென்றுவிடும் நாடு அல்ல அது

அவர்கள் வரலாறு அப்படித்தான்

ஒரு நாட்டுக்கு ஆயுதம் கொடுத்தால் அவர்களை தூண்டிவிட்டு கொண்டே இருப்பார்கள். முன்பு இந்தியாவினை ஒழிக்க பாகிஸ்தானுக்கு கொடுத்தார்கள் இப்பொழுது சீனாவினை ஒழிக்க இந்தியாவுக்க்கு

அரேபியாவில் சதாமுக்கு கொடுத்து ஈரானை அடிக்க சொன்னார்கள், இப்பொழுது சவுதி சிக்கியிருக்கின்றது

இந்தியா அவர்களிடம் சிக்கி என்னபாடு படபோகின்றதோ தெரியவில்லை, இது பற்றி பக்தாளிடம் கேட்டால் ராகுல்காந்தியினையே விரட்டி விட்ட மோடிக்கு அமெரிக்கா என்ன பெரிய விஷயமா? என சீரியசாக சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

Advertisements

பிரியங்கா கணக்கு

காங்கிரஸில் வழக்கமாக கோஷ்டி பூசல்தான் வெடிக்கும் சத்திய மூர்த்தி பவன் முதல், டெல்லி அக்பர் ரோடு வர எங்கெல்லாம் காங்கிரஸ் அலுவலகம் உண்டோ அங்கெல்லாம் கோஷ்டி சண்டை உண்டு

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை எந்த காங்கிரஸ் அலுவலகமும் அதற்கு தப்பமுடியாது

அட அலுவலகம் என்ன? கட்சி கொடி ஏற்றினால் கூட ஒரு கோஷ்டி கொடியேற்றும்பொழுது ஒரு கோஷ்டி கொடி இறக்கும் ஒரு கோஷ்டி கயிற்றில்தொங்கும், ஒரு கோஷ்டி கொடிகம்பத்தை பிடுங்கும்

இன்னும் ஏக அழிச்சாட்டியங்கள் அங்கு சாதாரணம் , பார்ப்பவர்களும் பெரிதாக அலட்டிகொள்ளமாட்டார்கள். அவர்கள் அப்படித்தான் என்பது போல் சென்றுவிடுவார்கள்

அப்படிபட்ட கோஷ்டி பூசல் காங்கிரஸில் முதல் முறையாக மூத்த கோஷ்டி இளைய கோஷ்டி என வரிந்து கட்டுகின்றார்கள்

இதில் முதல் கல்லை எறிந்திருப்பவர் பிரியங்கா

அம்மணி மிக தைரியமாக சொல்லிவிட்டது “என் சகோதரனுக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒருவர் கூட பிரச்சாரதிற்கு வரவில்லை, பின் எப்படி அவன் மட்டும் தோல்விக்கு காரணம்?”

பெரிசுகள் செவிட்டில் அடித்து கேள்வி கேட்டுவிட்டார் பிரியங்கா

ராகுலும் அதை தொடர்ந்து பெரிசுகள் தங்கள் வாரிசுகளுக்காக மல்லுகட்டியதை பட்டவர்த்தனமாக போட்டு உடைத்துவிட்டார்

(ப.சிதம்பரத்தை சாடியிருப்பாரோ? )

ஆக காங்கிரஸில் சலசலப்பு ஆரம்பித்தாயிற்று, பிரியங்காவின் வார்த்தைகள் சாதாரணம் அல்ல‌

அரசியல் ரீதியாக மிகபெரும் முடிவினை அக்கட்சி எடுக்க போவதின் எச்சரிக்கை அறிகுறி

“ஏ பெருசுகளே நீங்களே கழன்றுகொண்டு இளைய சமூகத்துக்கு வழிவிடுகின்றீர்களா? இல்லை காலை பிடித்து இழுத்து எறிய வேண்டுமா? ” என்பது போன்ற எச்சரிக்கை அது

ஒரு காலத்தில் காமராஜர் போன்றவர்களையே இந்திரா விரட்டி அடித்த காட்சி வரலாற்றில் உண்டல்லவா? அக்காலம் இனி பிரியங்கா வடிவில் திரும்பினாலும் திரும்பலாம்

ஒருவேளை மூத்த காங்கிரஸ் பெருச்சாளிகளை அங்கிருந்து விரட்டிவிட்டால் என்னாகும்?

பாஜக ஓடிசென்று தூக்கி அணைக்காதா? நிச்சயம் அணைக்கும்

அதன்பின் என்னாகும்?

காங்கிரசை கெடுத்த அந்த பெரிசுகள் பின் பாஜகவினை ஒழிக்காமாலா போய்விடும்?

பிரியங்கா கணக்கு அப்படி இருக்கலாம். அது மிக சரியான கணக்காகவும் இருக்கலாம்

Surface to Air Missile

அடுத்த தலைமுறைக்கான SAM எனப்படும் Surface to Air Missile வகை ஏவுகனையான ஆகாஷ் 1 ஏவுகனையினை வெற்றிகரமாக சோதித்திருக்கின்றது இந்தியா

ஆகாஷ் ஏற்கனவே உண்டு என்றாலும், மேம்படுத்தபட்ட வகையாக ஆகாஷ் 1 என வந்திருக்கின்றது

இந்த வகை ஏவுகனைகளால் வானில் வரும் எதிரிவிமானம் ,சிறிய ரக ஏவுகனைகளை கூட தடுக்க முடியும்

கலாம் காலத்தில் அக்னி,நாக்,பிரித்வி, திரிசூல், ஆகாஷ் எனபல ஏவுகனை திட்டங்கள் தீட்டபட்டன, செயல்படுத்தபட்டன‌

இப்பொழுது அது மேம்படுத்தபட்டு அடுத்த தலைமுறைக்கு வந்துவிட்டது

விஞ்ஞானிகளுக்கு தேசம் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.

மனோரமா

ஆணாதிக்கம் மிக்க தமிழ் திரையுலகில் ஒரு சில பெண்களே அடையாளமிட்டார்கள், ஆனால் ஒரு கட்டத்தில் விலகிவிட்டார்கள்

சுந்தராம்பாள், கணம்பாள், டி.ஆர் ராஜகுமாரி என ஒரு வரிசை உண்டு. சாவித்திரி சரோஜா தேவி, சவுகார் ஜாணகி என அடுத்த வரிசை உண்டு , ஜெயலலிதா அரசியலில் நடிக்க வந்தார்.

அவரின் அப்போல்லோ நடிப்பினை மட்டும் உலகம் பார்க்கவில்லை

மற்றபடி எல்லா நடிகைகளும் ஒரு கட்டத்தில் இடைவெளி எடுத்தவர்கள் அல்லது ஓடியவர்கள் ஆனல் தமிழ் சினிமாவில் இறுதிவரை நிலைத்து நின்று பெயரிட்டுகொண்டவர் மனோரமா.

இயற்பெயர் கோபிசாந்தா, தஞ்சாவூர் அருகே பிறந்தவர், குடும்பம் வறுமையில் சிக்க பின் பள்ளத்தூரில் குடியேறிய குடும்பம் அது, 12 வயதிலே நாடக கம்பெனிகளில் நடிக்க தொடங்கினார். இந்த காலகட்டத்தில் இவர் பெயர் பள்ளத்தூர் பாப்பா.

வைரம் நாடக சபாவில் மனோரமா எனும் பெயரில் நடித்துகொண்டிருந்த இவர், நடிப்பு திறமையினால் பெரும் நாடகங்க‌ளில் நடிக்க வைக்கபட்டார்.

பெரும் நடிகர்கள் என்றால் அண்ணாவின் நாடகங்கள், கலைஞரின் நாடகங்களில் எல்லாம் அவர்களோடு நடித்தார்.
அந்தகாலங்களில் அண்ணா,கலைஞர் எல்லாம் நாடகம் போடுவார்கள், திராவிட கருத்துக்கள் கடுமையாக எதிரொலிக்கும்.

இருவருமே மிக சிறந்த நாடக ஆசிரியர்,வசனகர்த்தா எல்லாவற்றிற்கும் மேல் மிகசிறந்த நடிகர்கள், அதாவது நாடகத்தில் மட்டும் நன்றாக நடிப்பவர்கள் என மிக அழுத்தமாக சொல்லிகொள்கிறேன்.

பின்னாளில் கண்ணதாசனின் மாலையிட்ட மங்கையில் அறிமுகமானார் மனோரமா, அதுதான் முதல்படம்.

அதன்பின் தமிழக படங்களிலும், தெலுங்கு படங்களிலெல்லாம் நடித்தார், ஒரு சிங்கள மொழிபடத்திலும் அவர் நடித்த செய்தி உண்டு, ஆனால் படம் வரவில்லை.

ஒரு நடிகைக்கு தேவை குரலசைவு, முகபாவம் எல்லாவற்றிற்கும் மேல் உடல்மொழி, இந்த மூன்று விஷயங்களிலும் சந்தேகமே இல்லாமல் முதல் இடம் மனோரமாவிற்கு.

தமிழ் திரையுலகம் மகா விசித்திரமானது, அதுவும் ரசிகர்கள் மிக கண்டிப்பானவர்கள். ஒருவர் ஒரு வேடத்தில் மிக பிரமாதமாக நடித்தால் அவர் அந்த வேடத்திற்காக ஒதுக்கிவைக்கபடுவார். எம்ஜிஆரின் வாள் சண்டை, சிவாஜி கணேசனின் அழுகை,மோகனின் மைக் , ராமராஜனின் பசுமாடு என அது மிக பெரிது, அப்படியே மிக சிறந்த வில்லன் நடிகராகான ரஜினிகாந்தும் ஹீரோவாகவோ வைக்கபட்டார்.

அப்படி மனோரமாவும் நகைச்சுவை நடிகை என குறிக்கபட்டாலும், எல்லா வேடங்களிலும் நடித்து தான் மிகசிறந்த நடிகை என்பதை நிரூபித்தார். அவர் இருக்கும் காட்சிகளில் அவர் மட்டும்தான் தெரிவார், அப்படித்தான் தில்லானா மோகனம்பாளில் சில இடங்களில் சிவாஜிகணேசனையும் மிஞ்சினார்.

எம் ஆர் ராதாவிற்கு பின் அது மனோரமாவிற்கு மட்டும் சாத்தியம்.

சோ ராமசாமி, நாகேஷ், எம் ஆர் வாசு, சுருளிராஜன் என அக்கால கட்டத்தில் அவர் கொடுத்த காமெடி காட்சிகளாகட்டும், பின்னாளில் சின்னதம்பி, சின்ன கவுண்டர் போல கொடுத்த குணசித்திர வேடமாகட்டும், விசு படங்களின் பாத்திரமாகட்டும், பின்னாளைய பாட்டி வேடங்களாகட்டும், அவர் தனித்து நின்றார்.

உலகில் 90 சதவீத சினிமா நட்சத்திரங்களின் சொந்த வாழ்வு மகா சோகம் நிறைந்தது, அதிலும் 95% தமிழக நட்சத்திரங்களின் சொந்த வாழ்வு சந்தோஷமாக அமைவதில்லை, அதற்கு மனோரமாவும் விதிவிலக்கு அல்ல, சந்தித்த சவால்கள் ஏராளம்.

ஆனாலும் அந்த கவலைகள் எல்லாம் தன் திரைவாழ்வினை பாதிக்காமல் பார்த்துகொண்டார், தடுமாறிய இடமென்றால் வடிவேலு போல அரசியல் பிரச்சாரத்தில் மாட்டியது, ஆனாலும் சீனியர் அல்லவா? மீண்டு வந்துவிட்டார்.

கிட்டதட்ட 1000 படங்களுக்கு மேல் நடித்தவர், 5 முதல்வர்களோடு பணியாற்றியவர், 100 பாடல்களை சொந்தமாக பாடிய ஒரு பாடகி, 4 தலைமுறை நடிகர்களுடன் போட்டியிட்டு நடித்த ஒரு மிக சிறந்த நடிகை என அவருக்கு பல முகங்கள் உண்டு.

பத்திரிகையாளர் சோ மிக சிறந்த நகைச்சுவை நடிகர், அவரின் பல காட்சிகள் நெஞ்சைவிட்டு அகலாதவை, அவருடன் மனோராமா சொந்த குரலில் பாடி ஆடிய “ஜாம் பஜார் ஜக்கு” , “கைபடாத ரோசாப்பூ” போன்ற பாடல்களெல்லாம் சென்னை மொழிவழக்கினில் இருவரும் பின்னி எடுத்த படங்கள்.

ஒரு நடிகன் நல்ல நடிகன் என்றால், தங்களின் பாதிப்பைனை அடுத்த தலைமுறையினரிடம் பதிய வைக்கவேண்டும், ஒரு பாதிப்பினை ஏற்படுத்த வேண்டும், சிவாஜி கணேசன், சந்திரபாபு, எம் ஆர்ராதா போன்றோர் அதனைத்தான் செய்தனர், பின் ரஜினிகாந்தும் அதனையே செய்தார், நடிப்பால் பாதித்தார்.

ஆனால் தமிழக நடிகைகளில் அப்படி சாதித்த ஒரே நடிகை மனோரமா மட்டுமே, பல நடிகைகள் தன் நடிப்பினை பின் தொடருமாறு அவர் பாதித்திருந்தார்.

இன்றுசின்னதிரை நாடகங்களிலும், திரையியுலகிலும் சில நடிகைகள் மனோரமாவின் இடத்தினை பிடிக்க படாதபாடு பட்டுகொண்டிருப்பது ஒன்றும் பரம ரகசியம் அல்ல,

இதுதான் மனோரமாவின் வெற்றி, மாபெரும் வெற்றி.
இன்று அந்த அற்புத நடிகையின் நினைவு நாள் நாள்
இன்றும் திரைபடங்களில் பாட்டி வேடத்தில் “சாப்டியாய்யா ” என அவர் வந்து நிற்கும்பொழுது, பலருக்கு தங்கள் பாட்டி நியாபகம் வராமல் போகாது

அவ்வளவு உருக்கமான பாசம் நிறைந்த குரல் அது. அன்னை, அண்ணி, பாட்டி என எல்லா குடும்ப உறவுகளுக்கும் தன் நடிப்பால் தனி இடம் பெற்று கொடுத்தவர்.

மனோரமாவின் குரல் போலவே அவரின் மனமும் இரக்கம் நிறைந்தது, உங்களின் நிறைவேறாத ஆசை எது என கேட்டதற்கு சொன்னார்

“இந்த திருநங்கைகள் வாழ்க்கை வலி நிறைஞ்சதுங்க, ஊனமுற்றோரை விட மிக கஷ்டமான வாழ்க்கை அது. அவங்க கையேந்தி நிற்கும்போது கண்ணீர் வருமுங்க. கொஞ்ச நேரம் அவங்கட்ட பேசினா மனசு கலங்கமுங்க‌

ஆண்டவன் அவங்கள‌ அப்படி படைச்சிட்டான், அவங்க வலியினை சொல்றமாதிரி ஒரு படத்துல திருநங்கையா நடிக்கணும்னு நினைச்சேன் அது நடக்காமலே போயிட்டு”

இதைவிட அவரின் மனதை சொல்ல என்ன வேண்டும்?

“மன்மத லீலை” பட வெற்றிவிழா, மேடையில் கண்ணதாசன் சொன்னார், ” பாலசந்தர் எத்தனையோ நடிகைகளை அறிமுகபடுத்தினார், என்னால் மனோரமாவினை மட்டும்தான் அறிமுகபடுத்த முடிந்தது”
பாலசந்தர் சொன்னார், ” நான் ஆயிரம் நடிகைகளை கொண்டு வந்தாலும், அது நீங்கள் கொண்டுவந்த ஒரே ஒரு மனோரமாவிற்கு ஈடாகுமா?”

ஆயிரம் அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் பாலசந்தருடையது.

அது நிதர்சனமான உண்மையும் கூட.
தமிழகத்தை ஆண்ட ராணிகளில் மங்கம்மா மறக்க முடியாதவர் என்பது போல, திரையுலகினை ஆண்ட பெண்களில் மனோரமா என்றுமே மகாராணி
நேற்று அவரின் பிறந்தநாள்

தமிழ் சினிமாவில் கலைஞர் போன்ற நீண்ட நெடிய வரலாறு கொண்ட ஒரே நடிகை மனோரமா மட்டுமே..

ஜப்பான் சென்றிருக்கின்றார் டிரம்ப்

இந்த இயக்குநர் ஹரி படத்தில் வரும் ஹீரோ வில்லன்கள் போல ஈரானும் அமெரிக்காவும் ஆக்ரோஷமாக “ஏய்ய்ய்ய்..டேய்ய்” என கத்திகொண்டிருக்கும் நேரம் ஜப்பான் சென்றிருக்கின்றார் டிரம்ப்

அவரிடம் இந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையிடம் கட்டபொம்மனை பற்றி புகார் கொடுக்கும் விகே ராமசாமி போல் “துரை அவர்களே, அந்த வடகொரிய பயல் நேற்றும் ஏவுகனை சோதனை நடத்தினான் துரை அவர்களே, எசமான் இவ்வளவு கண்டித்தும் அவன் இதை செய்தால் என்றால் அவ்வளவு தைரியம்

அய்யா துரை சமூகம், அவனை விட கூடாதுங்க” என கோரிக்கை வைத்தார் ஜப்பான் பிரதமர்

“அவனா? அவன் நம்ம பையனாயிட்டான், இந்த ஏவுகனை ரொம்ப சின்ன ரேன்ஞ், பயப்பட ஒண்ணுமே இல்லை. அவன் குட்பாய் ஆயிட்டான்..” என சொல்லிவிட்டு வந்துவிட்டார் டிரம்ப்

அவர் எண்ணமெல்லாம் ஈரான் மேலும் அதன் எண்ணெயின் மேலும் இருப்பதால் வடகொரியாவினை தற்போதைக்கு மன்னித்துவிட்டார்

ஆயினும் “இந்த ஆளு என்ன லூசா?” என்பது போல் டிரம்பை பார்த்து கொண்டிருகின்றார் ஜப்பானிய பிரதமர்

மராட்டிய மாநிலத்தில் பெரும் சர்ச்சை

மராட்டிய மாநிலத்தில் பெரும் சர்ச்சை ஓடிகொண்டிருக்கின்றது

அங்கு பின் தங்கிய சமூகத்து மாணவி தாயல் பாட்வி விவகாரம் அது. அந்த மாணவி படிப்பில் சுட்டி என்பதாலும் இட ஒதுக்கீட்டு முறையாலும் மருத்துவ கல்லூரியில் நுழைந்திருக்கின்றாள்

ஆனால் உயர்சாதி மாணவர்கள் அவளை சாதி ரீதியாக படாதபாடு படுத்தியிருகின்றார்கள்

லட்சியத்தில் மிக உறுதியாக நின்ற அவள் முடிந்தவரை சமாளித்திருக்கின்றாள். ஆனால் ஒரு கட்டத்தில் அச்சீண்டல்களும் அவமானமும் அதிகரிக்க அதிகரிக்க தற்கொலை செய்து கொண்டாள்

ஏழை பிற்படுத்தபட்ட மாணவி ஒருத்தி மருத்துவ கனவோடு கல்லூரியில் கால்வைத்து சாதிகொடுமையால் பிணமாக திரும்பியிருக்கின்றாள்

இந்நாடு சாதிகொடுமையால் ஒரு மருத்துவரை இழந்துவிட்டது என்பது நினைக்கவே முடியாத கொடூரம்..

இவ்வளவுக்கும் அம்பேத்கர் பிறந்த மண் அது

சில நேரங்களில் அந்த பெரியாரையும் நினைக்கத்தான் வேண்டியிருக்கின்றது.

இந்தியா எதையோ கணக்கிட்டு களத்தில் இறங்குகின்றது

இலங்கையினை எப்படி எரிய வைக்க வேண்டும் என்ற ராஜதந்திரத்தில் கைதேர்ந்தநாடு இந்தியா

முன்பு தமிழன் என்ற இனவிவகாரத்தை சொல்லி பெரும் நெருப்பை பற்றவைத்தார்கள், அதில் எதிர்பாரா விதமாக இந்தியாவின் கரங்களும் சுட்டுகொண்டது வேறு விஷயம்

இப்பொழுது மதரீதியாக இலங்கையில் கொள்ளிவைக்கும் காரியத்தில் இறங்கி இறக்கின்றார்கள்

பழைய காலத்தில் தமிழன் என்ற தொடர்பை விட சைவ சமய தொடர்பே இங்கும் அங்கும் தொப்புள் கொடியாக இருந்தது

அதை மறுபடி கையில் எடுக்கின்றார்கள்

சங்கிலிமன்னன் என்பவன் நம்ம ஊர் ராஜராஜ சோழன் போல மதவெறியின் உச்சம்

இந்தியா எதையோ கணக்கிட்டு களத்தில் இறங்குகின்றது

ஆனால் இறக்கும் ஆள்தான் சரியில்லை

சீமானை விட கடும் காமெடியானவர் இந்த அர்ஜூன் சம்பத் என்பதுதான் சோகம்..