அந்த அபூர்வ பிறப்பின் பிறந்த நாள் இன்று

வாழ்வில் ஒருவன் தலைவிதிபடியே அவனுக்கான சூழல் அமையும், ஜாதகம் அல்லது விதி என்பது அதுதான் என்பார்கள் ஞானிகள்

பந்தயத்தில் வேகமாக ஓடுவபவனே வெற்றிபெறுவான் என்பதும், புத்திசாலியே வெல்வான் என்பதெல்லாம் அல்ல விஷயம்

வாய்ப்பும் சூழலும் ஒருவனுக்கு சரியாக அமைய வேண்டும்

அது கலைஞர் என்பவருக்கு அட்டகாசமாக அமைந்தது, இயல்பாகவே எதை செய்தாலும் முழு கவனத்துடனும் அழகுடனும் செய்யும் அவருக்கு காலமும் பல வழிகளை அமைத்து கொடுத்தது

பெரியார் திராவிட கழகம் நடத்தி பின் மணியம்மையினை மணந்தது முதல்படி, அதில்தான் திமுக உருவானது

பாடலில் இருந்து வசனத்துக்கு தமிழ்சினிமா திரும்பிய சரியான காலத்தில் சினிமாவில் நுழைந்தார் கலைஞர், அதுதான் அவர் வாழ்வின் மிகபெரும் திருப்புமுனை

அக்காலம் அவருக்கு புகழையும் பணத்தையும் கொட்டி கொடுத்தது

அக்கால சூழலும் இன்னும் பல காரணங்களும் திமுக வேகமாக வளர உதவின, இந்தி எதிர்ப்பு போராட்டமும் அண்ணா எனும் பண்பான தலமையும் கலைஞருக்கு இரண்டாம் படி

சினிமாவில் சரியான நேரத்தில் நுழைந்தது போலவே அரசியலிலும் மிக சரியான நேரத்தில் நுழைந்தார் அவர்

அண்ணாவின் திடீர்மரணமே கலைஞருக்கு முதல்வர் பதவியினை கொடுத்தது, அதுவும் ராமசந்திரன் என்பவர் பெரும் ஆதரவாக இருந்தார்

அந்த ராமசந்திரனின் ஆட்டமும் வெறும் 10 ஆண்டுகளே, அதன் பின் அவரும் இல்லை

இந்திரா, ராஜிவ் என கலைஞரை விரட்ட கங்கணம் கட்டிய யாரும் நெடுநாள் நிலைக்கவில்லை

கலைஞரை மனதார வணங்கி வெளியில் ஆர்ப்பாட்ட அரசியல் செய்த ஜெயா மட்டும் 20 ஆண்டு காலம் நின்றார், கலைஞர் எதிரிகளில் அதிக நாள் நின்றது அவர் ஒருவர்தான்

மற்றபடி கலைஞருக்கான வாய்ப்பு ஏதாவது ஒரு உருவத்தில் அவருக்கு கை கொடுக்கும்

தலைவர்களின் திடீர் மரணம், கட்சி பிரிவு, தொழில் நுட்ப புரட்சி போன்ற சன்டிவிகளின் உருவாக்கம் என எதாவது வந்து அவரை தாங்கிகொள்ளும்

இம்மாதிரி வாய்ப்பு பெற்றவர்கள் அரசியலில் மிக குறைவு என்பதை விட யாருமே இல்லை,

அண்ணா அதில் துரதிருஷ்டசாலி

ராமாயணத்து வாலி போன்ற அமைப்பு கலைஞருக்கு, அவரை எதிர்த்த யாரும் வென்றதில்லை வென்றாலும் நிலைத்ததில்லை, நிலைத்தாலும் நிம்மதியாக செத்ததில்லை

விஜயகாந்தும் அந்த விதிக்கு தப்பவில்லை, வைகோ என்பவர் மென்டலாக அனாதையாக அலைந்ததெல்லாம் வரலாறு

அவரை மதியா பிரபாகரன் மண்டை பிளந்து செத்தான்

அது பூர்வஜென்ம பலனோ எதுவோ அவருக்கு நிரம்ப இருந்தது, எதிரிகள் தானாகவே அழிந்து விடைபெற்று அவருகு வழிவிடும் வாய்ப்பு அவர் வாழ்வில் நிரம்ப இருந்தது

மத்தியில் பின்னாளில் குழப்பமான அரசுகள் அமைந்து அதில் கலைஞர் தொடர்ந்து 15 ஆண்டுகள் பங்குபெறும் யோகமும் அவருக்கே கிடைத்தது

ஜெயாவுக்கும் அது இல்லை, ஸ்டாலினுக்குமில்லை இனி யாருக்கும் இப்போதைக்கு இல்லை

அவரின் ஒவ்வொரு கட்டத்தையும் ஆய்வு செய்தால் அதை தெளிவாக காணலாம்

மிக நீண்ட ஆயுள் அவருக்கு பெரும் பலமும் அனுபவுமாக கைகொடுத்தது, அதிலும் கடைசி 11 மாதம் தவிர அவர் முழு நினைவோடேத்தான் இருந்தார்

மகா முக்கியமான விஷயம், பிராமண ஆதிக்கத்தை ஒழிக்க பிராமண மூளைதான் வேண்டும்

அது அவரிடம் இயல்பாக அமைந்திருந்தது என்பது கூடுதல் விஷேசம்

இனி ஒரு கலைஞர் கருணாநிதி பிறந்து உருவாகிவர முடியாது, அதற்கான காலச்சூழல் இனி இல்லை

ஏதோ ஒரு மகா புண்ணிய ஆத்மா இங்கு பிறந்து எல்லா வகையிலும் உச்சம் தொட்டுவிட்டு சென்றது, காலம் அதற்கு மிக மிக அழகாக ஒத்துழைத்தது

அலெக்ஸாண்டரின் குதிரை போல காலம் அவரை சுமந்து திரிந்தது , இதனால் அவர் தலைவைத்த பக்கமெல்லாம் வெற்றி கிட்டிற்று

அந்த அபூர்வ பிறப்பின் பிறந்த நாள் இன்று..

என்னய்யா திமுகவுக்கு பயந்து நாம இந்தியில் பின் வாங்கிட்டதா பேசிக்கிறாங்க அப்படியா?

“என்னய்யா திமுகவுக்கு பயந்து நாம இந்தியில் பின் வாங்கிட்டதா பேசிக்கிறாங்க அப்படியா?

பின்ன என்னய்யா? நாம தமிழ்நாட்டுபக்கம் போனா அடிக்க வருவானுக, கத்துவானுக, அந்த 22 பேரும் இந்தபக்கம் வரும் போது நாம ஏதும் சொன்னா அய்யகோ தமிழன அடிக்கிறான்னு ஒப்பாரி வைப்பானுக, லேசுபட்டவனுக இல்ல அவனுக..

ஆமா பங்கு, ஆனானபட்ட இந்திராகாந்திக்கே பெப்பே காட்டுன மாநிலம் அது, நமக்கென்ன வந்துச்சி? விட்ருவோம்

ஆனா நமக்கு அவமானமில்ல?

பழிவாங்கத்தான பழனிச்சாமிய பதவிலே வச்சிருக்கோம், அத பார்த்து பார்த்து அவனுக அழுது சாகட்டும், 5 வருஷம் முடிஞ்சாலும் எக்ஸ்டன்ஷன் கொடுத்து வச்சிரணும், பார்த்து பார்த்து அழட்டும்

ஆமா பங்கு , இது பத்தாது செல்லூர் ராஜூவ முதல்வராக்கி இன்னும் கதறவைப்போம்…”

சீன ராணுவமே மாறுவேடத்தில் இலங்கையில் கால்பதிக்கும் போல தெரிகின்றது

இலங்கையில் சீன முதலீடுகள் நிறைய உண்டு, இப்பொழுது குண்டுவெடிப்புக்கு பின் சீன சொத்துக்களுக்கு பாதுகாப்பு வழங்க சீன ராணுவமே மாறுவேடத்தில் இலங்கையில் கால்பதிக்கும் போல தெரிகின்றது

முன்பு இந்தியா படையினை அனுப்பியபொழுது அதை புலிகளை வைத்தே விரட்டிய இலங்கை இப்பொழுது செய்வதறியாது தவிக்கின்றது

புலிகளை ஒழிக்க சீனா ஏன் அவ்வளவு உதவியது என்பது இப்பொழுது உள்ளங்கை நெல்லிகனியாக விளங்கலாம்

சீனராணுவம் வருவதை இந்தியா விரும்பாது, அதனால் திரிகோணமலை பக்கம் இந்தியாவும் படைகளை குவிக்கலாம் என எதிர்பார்க்க படுகின்றது

இது நடக்கும் பட்சத்தில் நெல்லை மாவட்டம் ஐ.என்.எஸ் கட்டபொம்மன் கடற்படைதளம் புத்துயிர் பெறும்

1986களில் இலங்கையில் இந்தியா நிரந்தரமாக ராணுவ தளம் அமைக்கும் முடிவில் இருந்தபொழுது இந்த தளம் தொடங்கபட்டது

புலிகளின் அட்டகாசத்தால் இந்தியா வெளியேறியபொழுது அதன் முக்கியத்துவம் குறைந்தது, இனி அது அதிகமான கவனம் பெறலாம்

இனி இந்தியபடை செல்லும்பொழுது புலிகள் இல்லை என்பதால் கற்பழிப்பு படை என சொல்ல யாரும் இருக்கமாட்டார்கள் என்பது குறிப்பிடதக்கது

எனினும் அங்கிள் சைமன் கோஷ்டி இந்தியராணுவம் அங்குசென்றால் தூக்கில் தொங்குவோம் என மிரட்டலாம்

சைமன் எத்தனைமுறைதான் தூக்கில் தொங்குகின்றார்?

ஈழம் அமையவில்லை, ராஜபக்சே இன்னும் கைதாகவில்லை, இந்தியபயணிகள் கப்பல் இலங்கைக்குசெல்லுதல் என பல விவகாரங்கள் பொறுக்க முடியாமல் தூக்கில் தொங்கிய அங்கிள் சைமன் இனி இந்தியராணுவம் இலங்கைக்குசெல்வதை பொறுக்காமல் மறுபடியும் தூக்கில் தொங்குவார்….