அவர்கள் தமிழர்கள் என கிளம்புவர்கள் என்ன ரகம்?

இந்தியாவில் பயிற்சி பெற்ற போராளிகுழுக்கள் ஒவ்வொன்றிற்கும் ஒருவித சிறப்பு பயிற்சிக்களை அளித்திருந்தது இந்தியா, அதாவது டாங்கி படை எதிர்ப்பு ஒன்றிற்கு, கப்பல் படை எதிர்ப்பு ஒன்றிற்கு, கண்ணிவெடி நடவடிக்கைகளுக்கு ஒன்று என கொடுத்திருந்தது

எல்லா குழுக்களும் களத்தில் இருந்தவரை சிங்கள ராணுவம் வடக்கில் நடமாட கூட முடியவில்லை, காரணம் பல குழுக்கள் பலமுனை தாக்குதல்கள், சிங்களம் சுத்தமாக தளர்ந்திருந்தது.

இனி தமிழருக்கு ஏதும் உரிமை கொடுக்காமல் சாத்தியமில்லை என சிங்கள உச்சபீடம் கதறிகொண்டிருந்தது.

ஆனால் சக குழுக்களை, அதாவது தன்னிடம் இல்லா பயிற்சிகள் அவர்களிடம் இருக்கிறது என்பதற்காகவே போட்டு தள்ளினர் புலிகள், பத்மநாபா குழு மட்டும் பாதிக்கபட்ட போராளிகளை ஓரளவு காப்பாற்றியது,

கொஞ்சம் ஒதுங்கியும் இருந்தது, அவர்களிலும் ஏராளமானோர் காலி, புலிகள் அவர்களை தடை செய்தும் விட்டனர்.

4 மாடும் ஒரு சிங்கமும் கதை 2ம் வகுப்பில் படித்திருக்கலாம், அதே நிலைதான், இது சரியான நேரம் புலிகள் மட்டும்தான் , காப்பாற்ற யாருமில்லை என களமிறங்கிய சிங்களம் அதிரடியாக ஈழத்தை சுற்றியது, ஆப்ரேஷன் லிபரேஷன் என பெயரும் சூட்டியது, பிரிட்டன் காலத்திற்கு பின் இலங்கை செய்த முதல் யுத்தம் அதுதான்.

சரியாக 32 ஆண்டுகளுக்கு முன்பு இதே காலகட்டத்தில் ஈழம் எரிந்துகொண்டிருந்தது, அதாவது இஸ்ரேலிய வழிகாட்டலில் மிக அற்புதமான யுத்த வியூகத்தில் சிக்கியது புலிகள், இன்றுவரை இலங்கையில் தீட்டபட்ட யுத்த வியூகத்தில் தலைசிறந்த வியூகம் அது, இஸ்ரேலிய ராணுவ மூளை கொடுத்த திட்டம், செய்வதறியாது திகைத்தனர் புலிகள்.

எங்கும் அழுகுரல் உணவில்லை, மருந்தில்லை, மக்கள் கடும் அவதி அதுவும் வடமராட்சி பகுதி முள்ளிவாய்க்காலாக மாற இருந்தது.

காரணம் அதேதான் மக்களை சுற்றிவைத்துவிட்டு நடுவில் அமர்ந்துகொள்ளும் யுத்திதான், ஆனால் இஸ்ரேலிய பயிற்சி கடுமையாக இருந்தது, மக்களை பற்றி கவலையில்லை, புலிகள் இருக்க கூடாது, 2 நாட்களில் பிரபாகரன் துடைக்கபடும் நிலை.

அப்பொழுதுதான் ராஜிவ் உத்தரவில் இந்திய ராணுவ விமானம் ஐ.நாவின் உத்தரவு கூட பெறாமல் உணவு வீசிற்று, அம்மக்கள் காக்கபட்டனர், இன்னும் முற்றுகை நீடித்தால் அடுத்து குண்டுவீச்சுதான் என மிரட்ட அலறிகொண்டு ஓடியது சிங்களபடை, வழிகாட்டிய இஸ்ரேலோ இதனை எதிர்பார்க்கவில்லை, கழன்றது

அது நடந்தது இதே ஜூன் 4.

அம்மக்களுக்காகத்தான் களமிறங்கியது இந்தியா, புலிகளால் ஒரு காலமும் இலங்கை ரானுவத்தை வெற்றிகொள்ள‌ முடியாது, ஆனால் இதனால் மக்கள் செத்துகொண்டே இருப்பார்கள் என்றுதான், அம்மக்கள் கொல்லபடாமல் இருப்பார்கள் என்றுதான் ஒப்பந்தமும் ஆனது அமைதிபடை அனுப்பியது.

அன்று ஒரு சிங்கள கடற்படை வீரன் ராஜிவினை கொல்லமுயன்றதும் இதற்காகத்தான், வெற்றியினை தடுத்தற்காகத்தான்.

ஆனால் அதன்பின் அமைதிபடையினை புலிகள் சீண்டியதும், அது அவமானத்தில் வெளியேறியதும், ஒப்பந்தம் கிழித்தெறிபட்டதும், புலிகளும் சிங்களனும் சேர்ந்துகொண்டதும் வரலாற்றின் கருப்புபக்கங்கள்.

பின் 22 ஆண்டுகள் கழித்து முள்ளிவாய்க்காலில் அதே முற்றுகை, அதே வெளிநாட்டு தொடர்புடன் இலங்கை எடுத்தது.

அன்று ஜெயவர்த்தனே, அதுலத்முதலி, விமலரத்னே என்றால் பின்ன்னாளில் மகிந்த,கோத்தபாய, பொன்சேகா கூட்டணி, அதே தமிழக அப்பாவி மக்கள் நடுவில் புலிகள், அதே அழுகை, அதே கதறல்

ஆனால் காப்பாற்ற ராஜிவும் இல்லை, அமைதிபடையாக அவமான அனுபவபட்ட இந்திய ராணுவவிமானங்கள் அங்கு செல்ல தயாராகவுமில்லை, நடக்க கூடாதது எல்லாம் நடந்தது.

அதனை பின்பு ஒரு சிங்கள அமைச்சர் சொன்னார் ” அன்றே பிரபாகரனை முடித்திருப்போம், இந்திய ராஜிவின் தலையீட்டினால் அது முடியவில்லை, பின்னாளில் இந்தியா அவ்வாறன தவறை தனது கசப்பான அனுபவம் மூலம் திருத்திகொண்டதால் இங்கு தீவிரவாதம் தடுக்கபட்டது”

அவர் சொல்லவருவது புரியவேண்டியவர்களுக்கு புரியும், வடமராட்சி முற்றுகை நினைவுநாளில் சிங்களன் ராஜிவினை நினைவு கூறுவான்.

அதே ராஜிவினை நிச்சயம் முள்ளிவாய்க்காலின் இறுதி நொடியில் அவர்களும் நினைவு கூர்ந்திருப்பார்கள்.

அந்த முள்ளிவாய்க்கால் அபலை மக்களின் நினைவு வரும்போதெல்லாம் , அம்மக்களுக்காக உலகையே எதிர்க்க துணிந்த ராஜிவின் நினைவு வருவதை தடுக்க முடியவில்லை.

முள்ளிவாய்க்கால் படுகொலைக்காக இந்தியாவினை யாராவது திட்டிகொண்டிருக்கின்றார்கள் என்றால் அவர்களுக்கு வடமராட்சி சம்பவமும், ஈழபோராட்ட உண்மை முகமும் அறவே தெரியவில்லை என பொருள்.

இவ்வளவு நடந்தபின்னும் அந்த ராஜிவ் கொலையாளிகளை விடுவி, அவர்கள் தமிழர்கள் என கிளம்புவர்கள் என்ன ரகம்? என்பதை நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்

Advertisements

முழுக்க முழுக்க அரசியல்

முன்பு கிறிஸ்தவ ஆலயங்களில் லத்தீன் ஆங்கிலம் தமிழ் பிரெஞ்சு டச்சு என பலமொழிகள் இருந்தன, திராவிட சிகாமணிகள் பார்த்து கொண்டே இருந்தன‌

இஸ்லாமிய சமூகத்தில் உருது, அரபி, தமிழ், ஆங்கிலம் என பல மொழிகள் இருந்தது, திராவிட கும்பல் மவுனமாக ரசித்தது

ஏன் திமுகவிலே தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் என மும்மொழி கொள்கை இருந்தது

வெளியே தமிழும் வீட்டுக்குள் தெலுங்கும் பத்திரிகைகளுக்கு ஆங்கிலமுமாக அவர்கள் எழுதிகொண்டிருந்தார்கள்

சென்னை பகுதி திமுக பிரபலங்களுக்கு தமிழ் தெலுங்கு ஆங்கிலம் என மும்மொழி கொள்கை என்றால் நாஞ்சில் நாட்டு பிரபலங்களுக்கு மலையாளம், தமிழ் ,ஆங்கிலம் எனும் மும்மொழி கொள்கை

இங்கே இருமொழி கொள்கை கொண்ட எதுவுமில்லை

திமுக பிரபலங்களுக்கு தாரமே இரண்டுக்கு மேற்பட்டது என்பது போல மொழியும் நிறைய தெரிந்திருந்தது

லத்தீன், உருது, அரபி, தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு , மலையாளம் என பல மொழிகள் வலம் வந்த‌ மாநிலத்தில் இந்தி என்றால் மட்டும் விடவே மாட்டார்களாம்

தெலுங்கு வருட பிறப்புக்கும், கேரள ஓணத்துக்கும் தமிழகத்தில் விடுமுறையே அளிப்பார்களாம்

ஆனால் இந்தி என்றால் நஹியாம்

எல்லாம் அரசியல், முழுக்க முழுக்க அரசியல்

திமுக என்பது நல்ல சிந்தனையாளர்களின் சிறைகூடம்

ஏன் நீ திராவிடவாதி ஆகவில்லை, முன்பு ஏன் எழுதினாய் என்றால் விஷயம் இதுதான்

நாம் புலிகளின் அட்டகாசத்தையும் முன்பு திமுக அவர்களுக்கு செய்த உதவியினையுமே சொன்னோம்

திராவிட திமுக சித்தாந்தம் மிக குறுகியது, அதில் கலந்துவிட்டால் தமிழ், தமிழகம் தமிழக அரசியல் திராவிடம் இந்த குறுகிய வட்டத்தில் சிக்கி கொள்வீர்கள்

அது மலைமேல் ஏறி உலகத்தை பார் என காட்டாது, மாறாக அய்யகோ ஆபத்து வளையில் பதுங்கு என்றுதான் பயமுறுத்தும்

யாரையாவது பார்த்து சினேகமாக புன்னகைத்தால் அய்யகோ அவனுடன் பழகாதே என தனிமைபடுத்தும்

மொழிகற்க விடாது, மதத்தை நோக்க விடாது, உலக சமூகத்தோடு தமிழனை கலக்க விடாது.

அங்கு பெருந்தன்மையான உலக பார்வையோ, பல விஷயங்களையோ படிக்கவோ பேசவோ முடியாது

பெரியார், அண்ணா, கலைஞர், திமுக என சுற்றி சுற்றி குண்டு சட்டிக்குள் எலி போல சுற்றவேண்டுமே தவிர வேறு வழியில்லை

மகா திறமையானவர்கள் எல்லாம் திமுகவில் சிக்கி இறக்கை ஒடிக்கபட்ட பறவையாக சிறைபட்டு வீழ்ந்துவிட்டார்கள்

அது முழுக்க முழுக்க அரசியல் மேடை

உலகின் பல விஷயங்களை ரசிக்க, ஆன்மீக விவகாரங்களில் திளைக்க, பல இனங்களொடு பழக, எல்லா மக்களையும் நேசித்து கடக்க திராவிடம் தமிழகம் என சிக்கிவிட்டால் நிச்சயம் முடியாது

உலகமே தமிழனை ஒழிப்பது போலவும்,இந்தியா கொல்ல துடிப்பது போலவும், தமிழுக்கு இவர்களை விட்டால் யாருமில்லை என்பது போலவும் பயமுறுத்துவார்கள்

உண்மைக்கும் அதற்கும் வெகுதூரம்…

அவர்களிடம் சிக்கினால் உலகமே தமிழனுக்கு எதிரி என்பது போல மாயபிம்பம் ஏற்படும், ஏதோ தமிழகம் பெரும் ஆபத்தில் இருப்பது போல மனநோய் ஏற்படும்

அந்த நோய்க்கு மருந்தும் மருத்துவமும் நாங்களே என இவர்கள் அரசியல் செய்வார்கள்..

அதில் கவனமாக சம்பாதிப்பார்கள்

அங்கு உங்கள் சிந்தனை கட்டபடும், கண்களுக்கு கடிவாளம் இடபடும், கால்களுக்கு சங்கிலி இடபடும்

இப்படித்தான் பார்க்க வேண்டும்,இப்படித்தான் சிந்திக்க வேண்டும், இப்படித்தான் நடக்க வேண்டும் என இழுத்து செல்லபடுவீர்கள், நிறைய பேர் அப்படித்தான் தொலைந்து போனார்கள் அல்லது அடிமையானார்கள்

அந்த கோழி கூட்டத்தில் எத்தனையோ கழுகுகள் தாம் கழுகுகள் என்பதை அறியாமல் குப்பையினை கிளறிகொண்டிருகின்றன‌

எத்தனையோ சிங்கங்கள் தாம் சிங்கமென்பதை உணராமல் ஆட்டுமந்தை பின்னால் அடங்கி செல்கின்றன‌

எத்தனையோ குயில்கள் தாம் குயிலென அறியாமல் காக்கைகளோடு கத்திகொண்டிருக்கின்றன‌

எல்லாம் பட்டம்,பதவி,அதிகாரம், அங்கீகாரம் என்ற ஏக்கமன்றி வேறல்ல‌

திமுக என்பது நல்ல சிந்தனையாளர்களின் சிறைகூடம், ஓடிவரும் நதியின் அணைகட்டு

அதில் சிக்கிகொண்டால் மிக குறுகிய சிந்தனையும், மிக குறுகிய வட்டமுமே போட்டுகொண்டு ஒருமாதிரி எழுத வேண்டும் வாழ வேண்டும்

அதற்கு தயார் என்பவன் அதில் இருக்கட்டும், நமக்கு என்ன வந்தது?

செய்தி சொல்வதென்ன?

சீனா இலங்கையில் கால்பதிக்கும் நேரம், இது ஒன்றும் புதிதல்ல என வரலாற்று உண்மைகளை அள்ளிவிடுகின்றன பல பத்திரிகைகள்

அதன் பின்னணியில் சீனா இருக்கின்றதா இல்லை இலங்கைஇருக்கின்றதா என்றால் நிச்சயம் சீனா இருக்கலாம்

செய்தி சொல்வதென்ன?

அதற்கு முன் வரலாற்றையும் பார்த்துவிடலாம் , தமிழன் மட்டுமே கப்பல் செய்தான், தமிழன் மட்டுமே கப்பல் படை வைத்திருந்தான் என்பதெல்லாம் வடிகட்டிய பொய், மேடைக்க்கான அரசியல் பொய்

உண்மையில் கடல் அருகே இருந்த‌ எல்லா இனமும் கப்பல் வைத்திருந்தன, சோழனுக்கு 1000 வருடம் முன்பிருந்த ஜூலியஸ் சீசரே வைத்திருந்தான்

சீசர் என்ன? சிங்களரின் பிதாமகன் விஜயனே கப்பலில்தான் தன் பரிவாரங்களோடு இயேசு காலங்களுக்கு முன்பே இலங்கைக்கு வந்தான் என்கின்றது ஆய்வு

அப்படி சீனரிடமும் கடல் சாகச வரலாறு உண்டு, சீன கப்பல்கள் கேரளாவுக்கு வந்த காட்சிகள் உண்டு, சீன ஆலய சாயலும் கூரையும் கேரளத்தில் இந்துஆலயங்களாக அமைந்திருப்பதை ஆழ கவனித்தால் உங்களுக்கே புரியும்

அப்படிபட்ட சீனா இலங்கையிலும் வியாபாரம் செய்தது, அப்பொழுது கோட்டை கட்டி ஆண்ட தமிழ் மன்னன் ஒருவனுக்கும் சீனருக்கும் சண்டை எல்லாம் வந்திருக்கின்றது

கொலம்பஸ், வாஸ்கோடகாமா போல சீனருக்கும் ஒரு கடலோடி உண்டு அவன் பெயர் செங்க் ஹோ

15ம் நூற்றாண்டு அவனின் காலம்

இந்த செங் ஹோ என்பவனுக்கும் இலங்கையின் கிழக்கு பகுதியினை ஆண்ட மன்னனுக்கும் நடந்த போரில் அவனை வீழ்த்தி குடும்பத்தோடு அவனை சீனாவுக்கு நாடுகடத்திய சம்பவமெல்லாம் நடந்திருக்கின்றன‌

செங்க் ஹோவால் வீழ்த்தபட்ட மன்னன் பெயர் என்ன தெரியுமா ?

அழகேஸ்வரன்

கோட்டா நாட்டின் தலைவன் அழகேஸ்வரன் என்பவனை சிறைபிடித்து சீனாவுக்கு இழுத்து வந்த செங்க் ஹோ என சீனாவில் அவனின் மெய்கீர்த்தி கல்வெட்டு சொல்கின்றது

கோட்டா என்பது கோட்டை எனும் சொல்லாக இருக்கலாம் என்கின்றார்கள், கிழக்கு இலங்கையின் ஏதோ ஒரு கோட்டை

அம்மன்னன் தமிழனாக இருந்திருக்கலாம், பெயர் அப்படித்தான் தெரிகின்றது

ஆக தமிழன் ஒருவனை சீனன் பிடித்து சென்றிருக்கின்றான் , தும்பிகள் இதை எப்படிதாங்குமோ தெரியாது, செத்தாலும் சாகலாம்

விஷயம் சொல்லவருவது இதுதான்

சீனா இலங்கைக்கு வருவது புதிதல்ல, போர்த்து கீசியர் காலத்துக்கு முன்பிருந்தே இலங்கைக்கு அது தொடர்பான நாடு

அழகேஸ்வரன் காலத்தில் இலங்கையின் ஒரு பகுதியினை அது ஆண்டிருக்கின்றது

போர்ச்சுக்கல், ஹாலந்து வரிசையில் அமெரிக்கா இலங்கையில் கால்பதிக்க உரிமை உண்டென்றால், திரை கடல் ஓடியும் அரை கொடுத்த சீனாவுக்கும் உரிமை உண்டு, உறவும் உண்டு என்பதுபோல் செய்திகள் வருகின்றன‌

சீனா இப்படி வரலாற்றை தோண்டினால் இனி இந்தியாவும் சோழர் பாண்டியர் வரலாற்றை தோண்ட வேண்டும்

அதில் மோடி தீர்க்கதரிசி, ஏற்கனவே சோழர் பற்றியும் கடற்படை பற்றியும் இந்தியர்கள் பெருமை பற்றியும் அவர் சில இடங்களில் பேசியிருப்பதால் இந்தியாவுக்கு சிக்கல் இல்லை

எரித்தியா என்றொரு ஆப்ரிக்கா தேசம்

எரித்தியா என்றொரு ஆப்ரிக்கா தேசம் உண்டு அது எத்தியோப்பியா எனும் தரித்திர தேசத்தில் இருந்து பிரிந்தது

எரித்தியா என்பது தமிழன் பூமி என்றும், அன்று சிகப்பு நிற கடல்பாசி கொண்ட நாடு என்றும் அதனால் எரி திரை என அழைக்கபட்டு எரித்தியா ஆனாது என்றும் சில ஆய்வுகள் உண்டு

இந்த தமிழ் ஆய்வாளர்களுக்கு உலகம் என்ன? அண்ட சராசரம் எல்லாமே தமிழனுக்குத்தான்

இவர்கள் இப்படி சொன்னதால் என்னவோ அவர்களுக்கும் ஈழபோராட்டத்துக்குமான தொடர்பு அதிகம்

புலிகளை போலவே எரித்திய விடுதலை முண்ணணி எனும் தீவிரவாத இயக்கம் துப்பாக்கி தூக்கியது

அங்குள்ள பிரபாகரன் அப்வெர்கி, அவர் நாடு அடைந்து அதிபருமானார்

ஒரு ரவுடி இன்னொரு ரவுடிக்கு உதவுவது போல புலிகளை அப்வெர்கி ஆதரித்தார்

கிளிநொச்சி மாநாட்டில் பாலசிங்கம் சொன்ன வார்த்தைகளை நீங்கள் கவனித்திருக்கலாம், எரித்திரியா போன்ற தேசங்கள் எங்களை அங்கீகரிக்கின்றன‌

எரித்தியா ஏதோ வல்லரசு நாடு போல அவர்கள் உளறிகொண்டிருந்தார்கள்

இறுதி யுத்தத்தில் தப்பிய புலிகளின் கப்பலும் விமானமும் சில புலிகளும் இன்னும் எரித்தியாவில் இருக்கலாம் எனும் அளவு பலத்த உளவுபார்த்தல் இன்றும் உண்டு

இப்பொழுது எதற்கு எரித்திரியா கதை?

விஷயம் இருக்கின்றது, நாடு அடைந்த்த எரித்திரியாவினை அந்த சர்வாதிகார கோஷ்டியே ஆண்டது

தேர்தல் என்பது கிடையவே கிடையாது, மாறாக எல்லை மீட்பு யுத்தம் இன்னும் பல யுத்தம் என நாடு நாசமாகி கிடக்கின்றது

இதனிடையே எரித்திய அதிபர் அப்வெர்கி லண்டன் சென்றிருக்கின்றார், அங்கும் புலம் பெயர்ந்த அல்லது வந்தேறி எரித்தியர்கள் உண்டு

அதாவது ஈழதமிழர் அங்கு நிரம்ப உண்டல்லவா அப்படி

இதில் இருவகை அகதிகள் உண்டு 1980களில் எரித்தியா யுத்தம் நடக்கும் பொழுது இன விடுதலைகோஷம் எழுப்பியபடி லண்டன்சென்ற கோஷ்டி ஒன்று

1990களில் எரித்தியா விடுதலை பெற்றபின் தேர்தல் வேண்டும், எல்லை போர் வேண்டாம் என சொல்லி சுதந்திர எரித்தியாவின் மேதகு அப்வெர்கிக்கு பயந்து சென்ற கூட்டம் ஒன்று

ஆக மாவீரர் அப்வெர்கியே வருக என பழைய அகதி கோஷ்டியும் , இனபடுகொலையாளி, இனதுரோகி அப்வெர்கி வரகூடாது என புதிய கோஷ்டியும் லண்டனின் மோதிகொண்டிருக்கின்றன‌

சரி போராடி நாடு அடைந்தார்களே எரித்தியர்கள், தேசம் எப்படி இருக்கின்றது?

நாங்கள் சிங்கப்பூராக மாறுவோம், நாங்கள் ஹாங்காங்காக மாறுவோம் இனவிடுதலை என சொல்லிஆயுதம் தூக்கிய கும்பல் தேர்தலை அனுமதிக்கவில்லை, ஜனநாயகமில்லை

துப்பாக்கி தூக்கிய கும்பலின் அட்டகாசத்தில் நாடு ஒரு முன்னேற்றமின்றி வறுமையில் வாடி அழுது கொண்டிருக்கின்றனர்

இத்தனைக்கும் இலங்கை போலவே வளமான கடற்பாதையில் இருக்கும் நாடு எரித்தியா

ஆக ஈழம் அமைந்திருந்தால் என்னாகியிருக்கும் என்பதை எரித்தியாவினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

ஈழம் அமைந்திருந்தாலும் தேர்தல் கிடையாது, கம்யூனிசம் கிடையாது சகல முடிவுகளையும் பிரபாகரனே எடுத்து ஈழத்தை எரித்திரியா போல ஆக்கியிருப்பார்

தனிதமிழ்நாடு என கிளம்பும் கோஷ்டியும் எரித்தியாவினை பார்த்து பாடம் படிப்பது நல்லது

அவ்வகையில் ஈழமக்கள் பரவாயில்லை அவர்களின் அப்வெரிகி பிரபாகரனை ஒழித்து அம்மக்களை உலகம் காப்பாற்றிவிட்டது

எரித்திரிய பிரபாகரன் அண்டை நாட்டு அதிபருக்கு மனிதவெடிகுண்டு அனுப்பாத காரணத்தால் அவனை தொலைக்க ஆளில்லை

துப்பாக்கி தூக்கிய கட்டபஞ்சாயத்து கோஷ்டியிடம் எரித்தியா சிக்கிவிட்டது

கொஞ்சமும் அரசியல் இல்லா, தொலை நோக்கு இல்லா, ஜனநாயகம் இல்லா காட்டுமிராண்டி கும்பலிடம் நாடு சிக்கினால் என்னாகும் என்பதற்கு எரித்திரியா உதாரணம்

ஈழமும் அப்படி ஆகியிருக்கவேண்டிய நாடு எப்படியோ தப்பிவிட்டது

கண்டி கதிர்காம முருகனும், நல்லூர் கந்தசாமியும் அவர்களை கைவிடவில்லை

எஸ்பி பாலசுப்பிரமணியம்

அக்கால கட்டத்தில் அப்படி ஒரு குரலை தேடிகொண்டிருந்தார்கள், சீர்காழி போல வெண்கல குரலும் அல்லாமல், ஸ்ரீனிவாஸ் போல புல்லாங்குழல் குரலும் அல்லாமல் இடைபட்ட குரலை தேடிகொண்டிருந்தார்கள்

அக்காலம் ராமசந்திரன், சிவாஜி கணேசன் போன்றோர் உச்சத்தில் இருந்தாலும் சில இளைஞர்கள் வந்துகொண்டிருந்த காலமது, அவர்களுக்காக தேடிகொண்டிருந்தார்கள்.

அப்பக்கமோ அந்த இளைஞன் பொறியில் படிப்பினை பாதியில் விட்டுவிட்டு பட்டபடிப்பில் ஓப்பேற்றிகொண்டே இசைகுழுக்களில் பாடிகொண்டிருந்தான். மிக திறமையான பாடகன் அன்றே சுசீலாவோடு சில மேடைகளில் பாடும் அளவு திறமை இருந்தது

திரையுலகின் அன்றைய ஜாம்பவான் ராமசந்திரனுக்கு சந்தேகபுத்தி அதிகம், அப்படிபட்ட நிலையில் டி.எஸ் சவுந்திரராஜன் தன்னை விட சிவாஜிக்கு நன்றாக பாடுவதாக சந்தேகம் எழுந்தது, அவரின் பிறவிகுணம் அது

அதே காலகட்டத்தில் சுசீலாவிற்கும் சவுந்தரராஜனுக்கும் பிணக்குகள் எழுந்தன‌

உடன் இருந்தவர்கள் வேறு “அண்ணே நீங்க இன்னும் இளமையாய் இருக்கின்றீர்கள், ஆனால் டிஎம்.சவுந்திரராஜன் பாடினால் கிழவன் போல் பாடல் குரல் இருக்கின்றது, உங்கள் இமேஜ் என்னாவது?” என சிரிக்காமல் சொன்னார்கள்

உடனே இதை நம்பிய ராமசந்திரன், இளவயது கதாநாயகி தேடிகொண்டிருந்த ராமசந்திரனுக்கு இளம்குரல் பாடகனும் தேவைபட்டார்கள், அந்த இளம் பாடகரும் வந்தார்

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் எனும் எஸ்பி பாலசுப்பிரமணியம் திரைக்கு வந்த கதை இப்படித்தான்

1970களில் அவர் ராமசந்திரனுக்கு பாட வருமுன் சுந்தர தெலுங்கிலும் சிலபாடல்கள் பாடியிருந்தார், எனினும் அடிமைப்பெண் படத்தில் “ஆயிரம் நிலவே வா” என்பதே அவரின் முதல் தமிழ்பாடலாயிற்று

ராமசந்திரனுக்கு மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து சில பாடல்களை பாடிய பாலசுப்பிரமணியத்திற்கு 1975க்கு பின் வாய்ப்புகள் பெருகின.

ராமசந்திரன் வாழ்வில் செய்த மிக உருப்படியான விஷயம் இதுதான்.

அரசியலுக்கு ராமசந்திரன் கிளம்ப ஏகபட்ட இளைஞர்கள் குதித்தனர், அவர்களுக்கு பாலசுப்பிரமணியம் குரல் அட்டகாசமாக பொருந்தியது

அப்பொழுது இளையராஜா யுகம் வேறு ஏற்பட மேடைபாடல் காலங்களிலே நண்பர்களாக இருந்த அவர்களுக்கு நேரம் போதா அளவு பாடல்கள் குவிந்தன‌

1980களில் உச்சம் பெற்ற எஸ்,பி.பி அதன் பின் கிட்டதட்ட 30 வருடங்கள் அதிலே நின்றார். தமிழ் மட்டுமல்ல தென்னக மொழி அனைத்திலும் பாடினார்

அன்று அவர் முகம் தெரியாது, இன்றுள்ள வசதி அன்றில்லை, வெறும் ரேடியோ மட்டுமே. கச்சேரிகள் என்ற கொடுமை தெருவுக்கு தெரு நடக்கும் காலகட்டமது

அங்கெல்லாம் எஸ்பி குரல் மட்டுமே ஒலித்தது. உண்மையில் வசீகரமான குரல் அது. வெண்கல குரலை தேனில் குழைத்து கொடுத்தது போல ஒரு ஏகாந்தம் அதில் உண்டு, இன்றுவரை உண்டு

எந்த பாடல் ஆனாலும் அதன் தன்மை மாறாமல் பாடுவதில் அவரை மிஞ்ச முடியாது. அது காதல், கடவுள், உருக்கம், துக்கம் என எதுவானாலும் அதுவாகவே உருகிபாடுவார்

தமிழகத்தில் எல்லோரும் அவர் குரலை கேட்டார்கள், அவரை தேடினார்கள்

பொதுவாக எல்லோரும் நடித்துவிட்டு பாடுவார்கள், ரஜினி கூட “அடிக்குது குளிரு..” என பயமுறுத்தினார், ஜெயலலிதா “அம்மா என்றால் அன்பு” அன்றே அரசியல் பாடினார் இன்னும் ஏராளம்

ஆனால் பாடிவிட்டு நடிக்க வந்தவர் எஸ்.பி. அவர் குரல் அவருக்கு கொடுத்த அங்கீகாரம் அப்படி

உண்மையில் அற்புதமான நடிப்பு அவரிடம் இருந்தது. திருடா திருடா படத்தின் அந்த சுவாரஸ்யமான சிபிஐ அதிகாரியினை மறக்க முடியாது, இன்னும் ஏராளமான வேடங்கள்

அற்புத நடிகனும் அவருக்குள் இருந்தான் நேரம் வரும்பொழுது வெளிவந்தான்

பாடகர்களில் ஆச்சரியமானவர் எஸ்பி, அவர் முறையாக சங்கீதம் பயின்றதாக செய்தி இல்லை, பொறியில கல்லூரி கனவில்தான் வளர்ந்தார்

ஆனால் அவர் தந்தைக்கு இசைஞானம் இருந்திருக்கின்றது, அது எப்படியோ இவருக்குள் இறங்கிவிட்டது

ஆச்சரியமாக முறையே சங்கீதம் படிக்காவிட்டாலும் எந்த ராகத்திலும், எந்த தாளத்திலும் அட்டகாசமாக பாடலை இழுத்துகொண்டு போகும் வித்தை அவருக்குள் இருந்தது

சங்கராபரணம் படத்திற்காக 4 மொழிகளிலும் விருது வாங்கிய சாதனையாளர் அவர் வாங்கியது சாதாரண விஷயம் அல்ல‌

4 மொழி இசை விற்பனர்களும் ஒரு குற்றம் கண்டுபிடிக்கமுடியாதபடி அப்பாடல் இருந்தது

பிறவி கலைஞன் என சொல்லபடும் விஷயம் இதுதான்

அந்த பாடல் ஞானம் அவருக்கு எல்லா விருதுகளையும் கொடுத்தது, தேசிய விருதுகளை கொடுத்தது

40 ஆயிரம் பாடலை பாடியவர் எனும் கின்னஸ் சாதனையினையும் கொடுத்தது

கிட்டதட்ட 4 தலைமுறை நடிகர்களுக்கு பாடியிருக்கின்றார், எம்.எஸ் விஸ்வநாதன் காலமுதல் இப்பொழுதிருக்கும் இசை அமைப்பாளர் வரை 5 தலைமுறையினருடன் பணி செய்திருக்கின்றார்

சுசிலாவோடு இணைந்து பாடியது முதல் ஜாணகி, வாணி ஜெயராம் என தொடர்ந்து இன்றைய பாடகிகள் வரை பாடியிருகின்றார்

கண்ணதாசன் காலமுதல் இன்றைய இம்சை கவிஞர்கள் காலம் வரை பாடியிருகின்றார்

நிச்சயமாக இது அவருக்கு பெரும் ஆசீர்வாதம், ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம்

பாடகராக மட்டும் கடந்து செல்லமுடியாத மனிதர் அவர். இசை அமைப்பாளர், பிண்ணணி குரலாளர், நடிகர், தயாரிப்பாளர் என ஏக முகங்கள் உண்டு

எல்லாவற்றிற்கும் மேல் கொஞ்சமும் பந்தா இல்லாத பாடகர், அவரின் பேட்டிகளிலோ நெரலை நிகழ்ச்சிகளிலோ கொஞ்சமும் ஆணவம் இருக்காது, யாரையும் புண்படுத்தும் சொற்களும் இருக்காது

ஜென்டில்மேன் என சொல்லபடும் அந்த பண்பு அவரிடம் நிரம்ப உண்டு

அந்த அற்புத பாடகனுக்கு இன்று பிறந்த நாள்

நிச்சயம் தமிழ் திரையுலகின் அற்புதமான பாடல்கள் 1970க்கு பின் கிடைத்தன, தமிழ் திரையிசையின் பொற்காலங்கள் அவை

கண்ணதாசனும், வாலியும், வைரமுத்துவும் இன்னும் சிலரும் பண்டைய இலக்கியங்களை பிழிந்து சாறு கொடுத்தனர். அந்த தேன் தமிழை தன் குரல் மூலம் உயர நிறுத்தியவர் எஸ்.பி.பி

ரஜினியின் வளர்ச்சி முதல் பலர் வளர்ச்சியில் அவருக்கும் மறைமுக பங்கு உண்டு மறுக்க முடியாது

இன்றும் ரஜினி படங்களின் தொடக்கபாடல் அவர் பாடினால்தான் ஹிட்டாகும் என்ற சென்டிமென்ட் உண்டு, கபாலி காலா போன்ற படங்கள் அதை மெய்பித்தும் காட்டின‌

பேட்ட படத்தின் தொடக்க பாடலில் எஸ்பியின் குரல் இருந்தது, படம் வெற்றி

தமிழ் திரை இசைக்கு தன் அற்புத குரலால் காலத்தை வென்ற பாடலை கொடுத்த அந்த காந்தர்வ குரல் பாடகருக்கு, திராவிட குரல் செல்வனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

சூரியநாராயண சாஸ்திரிகள்

அவர் பெயர் சூரியநாராயண சாஸ்திரிகள்

ஆம் அவர் ஒரு பிராமணர், சுத்தமான ஆச்சாரியமான பிராமணர்

தனிதமிழ் இயக்கம், தமிழ்மொழி மேலான அபிமானங்கள் பெருகிய 1900களில் அவரின் தமிழ்பற்று சிலாகிக்க கூடியது

நிச்சயம் தமிழில் மறுமலர்ச்சி உ.வே சாமிநாதய்யர் காகித ஏட்டுக்கு ஓலைசுவடியினை மாற்றியபொழுது வந்தது. கல்வி முறை கொஞ்சம் வளர ஆரம்பித்த காலத்தில் சற்றும் சளைக்காமல் தமிழகமும் வாசிப்பு வழக்கத்தில் இறங்கியது

பெரியார் ஈரோட்டு சந்தையில் மஞ்சள் மண்டி நடத்தும் முன்பே இங்கு தமிழுக்கான எழுச்சி இருந்தது, கலைஞர் அப்பொழுது பிறக்கவே இல்லை

சைவ சித்தாந்த கழகங்கள் உட்பட ஏக பட்ட கழகங்கள் தமிழ் வளர்த்தன..

பல தமிழறிகர்கள் ஈழத்திலும் தமிழகத்திலும் உருவானார்கள், அவர்களில் ஒருவர்தான் சூரிய நாராயண சாஸ்திரிகள்

தூய தமிழனாக தன்னை உணர்ந்த அவர் செய்த முதல் வேலை தன் வடமொழி பெயரை தமிழுக்கு மாற்றியது

ஆம் சூரிய நாராயண சாஸ்திரி எனும் பெயரை பரிதி மால் கலைஞர் என மாற்றிகொண்டார்

சாஸ்திரிக்கு தமிழ்பெயர் கலைஞர் என்றுதான் வரும்

இதை ஏன் சொல்கின்றோம் என்றால் “உதய சூரியன்” என்பது தமிழே அல்ல‌

திமுகவினர் மானமும் தமிழும் தெரிந்தவர்கள் என்றால் அதை “எழும் பரிதி” “எழும் ஆதவன்” என மாற்ற வேண்டும்

ஆம் உண்மையான தமிழர்கள் என்றால் மாற்றவும்

செய்வார்களா என்றால் செய்யமாட்டார்கள்

அவர்கள் கட்சி சின்னமும் தமிழ் பெயர் அல்ல, “திராவிட “என்பதும் தமிழ்பெயர் அல்ல, அல்லவே அல்ல‌

ஆனால் கேளுங்கள், தமிழை மொத்த குத்தகைக்கு எடுத்திருப்பது போல சத்தம்

அந்த பிராமணன் பரிதிமாற்கலைஞனுக்கு அறிவு இருந்தது, கூடவே மானம் இருந்தது