தென்கிழக்கு ஆசியாவினை ஆண்ட கடல்ராசனும் அந்த ராஜராஜ சோழனே

எங்கோ பாய்ந்துகொண்டிருந்தது காவேரி, அதனை தஞ்சைக்கு திருப்பினான் கரிகாலன்

கரிகாலன் செய்து கொடுத்த அந்த பெரும் காரியத்தில் சோழநாடு செழித்தது, நிரந்தர செழிப்பு அது. அந்த செழுமை கல்வி, கலை, வீரம் என எல்லாவற்றிலும் தஞ்சையினை முன்னுறுத்தியது

அதனால் எழுந்த செழிப்பான சோழ நாட்டில் பிறந்தவன் தான் ராஜராஜ சோழன்

ஒரு நாட்டின் செழுமை எப்படி நல்ல விஷயமோ, அதன் ஆபத்தும் அதுவேதான். எப்பொழுதும் எதிரிகள் தனியாகவோ, கூட்டமாகவோ பாய கூடும்.

அந்த ராஜ ராஜன் இதில்தான் உருவானான். அக்காலம் பாண்டியர், சிங்களர் இன்னும் சாளுக்கிய மன்னர்கள் என பல அச்சுறுத்தல் இருந்த நேரம் ராஜராஜன் முடிசூடினான்

அவனிடம் அன்றே எல்லா படையும் இருந்தது, கப்பல் படை இருந்தது, நாவாய் படை என்று அதற்கு பெயர், இன்று உலகம் கொண்டாடும் நேவி எனும் வார்த்தை அதிலிருந்தே வந்தது

சோழ்நாட்டை காக்க பெரும் போர்களை அவன் தொடுத்தான். பாண்டிய நாடு முதல் சேரநாடு வரை அவன் கட்டுபாட்டில் இருந்தது

சேரநாட்டில் காந்தளூர்சாலை என்றொரு இடம் இருந்திருக்கின்றது, அங்கு பகைவரின் கப்பல்கள் எல்லாம் வந்திருக்கின்றன, அங்கு சென்று அந்த கடற்கலன்களை எல்லாம் அழித்திருக்கின்றான், இது அவனது மெய்கீர்த்தியில் இருக்கின்றது

பாண்டியரும் சிங்களரும் சேர்ந்து தொடுக்கும் போர் அபாயத்த்தில் இருந்து தப்பிக்க பெரும் கடற்படையுடன் சிங்கள நாட்டைதாக்கி இருக்கின்றான்,

அநுராதாபுரம் எனும் சிங்கள நகரம் அவனால் நொறுக்கபட்டிருக்கின்றது

வடக்கே கலிங்கம் வரை அவன் கைபற்றியிருக்கின்றான்.
ராஜராஜன் காலம் புத்த மதத்தை வீழ்த்தி சைவ மதம் செழித்த காலம், தான் கைபற்றிய நாடுகளில் எல்லாம் சைவ மதம் வளர்த்திருக்கின்றான்

இன்றைய இந்தோனேஷியா , மலேசியா , கம்போடியா நாடுகள் அடங்கிய அன்றைய ஸிரி விஜயா நாட்டின் மீதும் தன் மகன் தலமையில் பெரும் போர் புரிந்து வென்று வெற்றிகொடி நாட்டி, சைவ மதம் வளர்த்திருக்கின்றான்
அவனது கடற்கலன்களும், அவனின் போர்முறையும் அவனுக்கு அப்படி பெரும் வெற்றிகளை கொடுத்திருக்கின்றன‌

உலகில் தோல்விபெறாத அரசர்கள் வரிசையில் ராஜராஜனின் பெயரும் உண்டு, ஆனால் மேல்நாட்டு வரலாற்று ஆய்வாளர்கள் அலெக்ஸாண்டர், சீசர் என வேறு வரிசை வைத்திருப்பார்கள் வைக்கட்டும்.

சிவன் மேல் தீராதபற்றுகொண்ட ராசராசன், தன் வெற்றிக்கெல்லாம் சிவனே காரணமென்றும், சிவனுக்கு காலத்தால் அழியாத ஆலயம் கட்டவும்ட் திட்டமிட்டான்.
ஆலய பணிகளில் சிவனடியாரான கரூர் சித்தரைத்தான் முன்னிறுத்தினான்,

அதுதான் அவன் அடியார்களை அற்புதமாக மதித்த விதம்.

பல நாடுகளில் திரட்டபட்ட செல்வமும், பல மன்னர்கள் கொடுத்த வரியும், அவன் அடிமைகளாக பிடித்த எதிரி நாட்டு வீரர்களும் அதற்கு பயன்பட்டன‌

காலத்தை வென்று நிற்கும் கற்காவியமான பெரிய கோவில் அவனால்தான் கட்டபட்டது, முழுக்க முழுக்க கல்லான் ஆன கோவில் அது.

இத்தனை பெரிய கற்களை எப்படி செதுக்கினார்கள், எப்படி கொண்டு வந்தார்கள், எந்த ஆயுதத்தால் செதுக்கினார்கள், எத்தனை பேர் வேலை செய்தார்கள் என்பதை கண்டவரும், எழுதி வைத்தவரும் எவருமில்லை, எல்லாம் யூகமே

ஆனால் அப்படி அற்புதமாக, பெரும் அதிசயமாக கட்டியிருக்கின்றான் என்பது நம் கண்முன்னே நிற்கின்றது

கற்தூண்கள் உச்சியில் பாரம் இல்லையென்றால் விலகிவிடும் என்பதற்காக பெரும் கல்லை உச்சியில் நிறுத்தி , ஆலயத்தை நிலைபெற்றிருக்க செய்வதில் நிற்கினது அவனின் கட்டட கலை அறிவு

ஆலய பாதுகாப்பும் அதுதான், எவனாவது அழிக்க முயன்றால் ஒரு தூணை தொட்டாலும் முடிந்தது விஷயம்.
அந்த கோவிலில்தான் அவன் ஒரு மூலையில் தங்கி அவை நடத்தியிருக்கின்றான், அக்கோவிலை சுற்றி இருக்கும் அகழி முதலானவை அதனைத்தான் சொல்கின்றன, அவனுக்கு எல்லாமுமாக இருந்தது அந்த ஆலயம், அவ்வளவு நேசித்திருக்கின்றான்

தன்வாழ்வின் மிகபெரும் வெற்றியாக அவன் அந்த அலயத்தைத்தான் கருதியிருக்கின்றான், அக்காலங்கள் வித்தியாசமானவை

அதாவது அந்நியநாட்டு படைகள் முதலில் தாக்குவது அந்த ஆலயத்தைத்தான், காரணம் இந்திய முறைபடி அளவுக்கு அதிகமான செல்வம் அங்குதான் சேர்ந்திருக்கும்
அதனை எண்ணித்தான்,

தன் காலத்திற்கு பின்பு என்றாவது எவனாவது அதனை அபகரிக்கும் எண்ணத்தில் வந்தால் அவன் அழிந்து போகவேண்டும் என்று சில வரங்களை அவன் ஆலயத்தில் நிறுத்தியதாக சொல்லபடுகின்றது

நம்பாதவர்கள் விட்டுவிடலாம், ஆனால் நானே அதிபதி என சொல்லி அங்கு சென்ற அரச பிரதிநிதிகள், ஏன் மக்களாட்சி பிரதிநிதிகள் , நாத்திகர்கள் எல்லாம் கடும் அனுபவத்தில் அதன் பின் உணர்ந்திருக்கின்றார்கள்

அப்படி தன் மூச்சே அந்த ஆலயம் என வாழ்ந்திருக்கின்றான் ராச ராசன்

அக்கோவில் சென்டிமென்ட் பிற்காலமும் தொடர்ந்திருக்கின்றது, நாயக்க மன்னர்கள் ஆட்சியிலும், மாராட்டியர் ஆட்சியிலும் ஆட்சியாளர்கள் அதனை ஒதுக்கியே வைத்திருக்கின்றார்கள்
எல்லா கோவிலிலும் உருண்டு புரண்ட நாயக்கர்கள் தஞ்சை ஆலயத்தில் ஒரு வகையான விலகலை கடைபிடித்திருக்கின்றார்கள்

பின் வவ்வால்கள் கூடாரமாக ஆகிய ஆலய பகுதிகளில் சில வாவ்வால் கழிவுகளால் ஆன சுவர்களால் பிரிக்கபட்டன, ஆம் வாவ்வால் கழிவு சுவராகும் அளவிற்கு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.

வெள்ளையன் ஆட்சியில் இந்நாட்டிற்கு வந்த ஐரோப்பியன் ஒருவந்தான் உள்ளே புகுந்து தேடினான், அந்த வவ்வால் உருவாக்க்கிய சுவரை எல்லாம் இடித்து உள்சென்றான், பல கல்வெட்டுக்களை படித்தான்

அதில்தான் இக்கோவிலை கட்டியது ராஜராஜன் என்றிருந்தது, அதில் இருந்துதான் தமிழகம் அக்கோவிலை கட்டியது அவன் என நம்புகின்றது,

அவன் ஆலய கல்வெட்டுகளே அவன் வரலாற்றினை சொன்னது.

அதுவும் இல்லையென்றால் அது ஏலியன்கள் கட்டிய ஆலயமாக மாறியிருக்கும்

அவன் மன்னர்களுக்கு எல்லாம் மன்னராக இருந்ததால் அவன் ராஜ ராஜன் என அழைக்கபட்டான், மற்றபடி அவன் இயற்பெயர் என்பது மிக சரியாக தெரியவில்லை.
(ராஜராஜன் வரலாறே இப்படி சிரமபட்டு வந்த நிலையில்தான் சிலர் அவன் எங்கள் சாதி எனவும் சொல்கின்றார்கள், அதனை விட அபத்தம் இருக்க முடியாது)

ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம், தமிழர்களின் தனிபெரும் அரசன் ராஜராஜன், தமிழர்களின் தனிபெரும் அடையாளம் அந்த கோவில்

எகிப்தியருக்கு பிரமிடு போல, யூதர்களுக்கு சாலமோனின் ஆலயம் போல, தமிழரின் பெருமையினை சொல்வது அக்கோவில்

தமிழக அரசின் சின்னமாக நிச்சயம் அதுதான் அறிவிக்கபட்டிருக்க வேண்டும், ஆனால் பிற்காலங்களில் மாறிற்று. அதற்கு ஆயிரம் காரணங்கள்

தமிழகம் கண்ட அந்த தனிபெரும் அரசனுக்காக கலைஞர் கருணாநிதி ஆலயத்தில் சிலை நிறுவ விரும்பினார்.

கலைஞர் எது செய்தாலும் எதிர்ப்பது டெல்லியின் கொள்கை என்பதால் , அது தொல்பொருள் துறையின் கட்டுபாடு என சொல்லி மறுக்கபட்டது

அதனால் ஆலயத்தின் வெளியே அவன் சிலையினை நிறுவினார் கலைஞர்

தான் பெற்ற முடிகளை விட, தான் பெற்ற செல்வங்களை விட, தான் பெற்ற அரசுகளை விட தன்னால் கட்டப்ட்ட ஆலயமே சிறந்தது என உலகிற்கு தன் சிவபக்தியினை விட்டு சென்ற ராஜராஜன் அந்த சிலை வடிவில் அந்த ஆலயத்தை அனுதினமும் வணங்கிகொண்டே இருக்கின்றான்

சந்தேகமில்லை கிரேக்கருக்கு அலெக்ஸாண்டர், ரோமருக்கு ஜூலியஸ் சீசர், மங்கோலியருக்கு செங்கிஸ்கான், பிரான்சுக்கு நெப்போலியன் போல தமிழரின் தனிபெரும் அரசன் ராஜராஜ சோழன்

அவனை நினைக்கையில் அக்கால காவேரியும், செழித்த சோழநாடும், தென்கிழக்காசியா எங்கும் பறந்த சோழ புலிகொடியும் இன்னும் பிற காட்சிகளும் நினைவுக்கு வருகின்றன‌

அந்த மாபெரும் தமிழ் சாம்ராஜ்யத்தின்
அடையாளமாக எஞ்சியிருப்பது இப்போது தஞ்சாவூர் ஆலயம் மட்டுமே.

வரலாற்றில் பெரும் அடையாளம் மிக்கவனும் , உலகின் மிக வலுவான கப்பல் படையினை நிறுவியவனும், தென்கிழக்கு ஆசியாவினை ஆண்ட கடல்ராசனும் அந்த ராஜராஜ சோழனே..

Advertisements

போங்கடா நீங்களும் உங்க புரட்சி புண்ணாக்கும்

அமெரிக்க பண்ணைகளுக்கு உழைக்க சென்றதுதான் கருப்பு ஆப்ரிக்க இனம், அவர்பட்ட அடிமைதனமும் கொடுமையும் ஏராளம்

பின்னாளில் கருப்பர் சந்ததி ஒபாமா அங்கு அதிபரானார், இன்று கருப்பருக்கு வாழ்வியல் வசதிக்கு அங்கு குறைவில்லை

மலேசிய ரப்பர் தோட்டங்களுக்கு உழைக்கத்தான் சென்றனர் தமிழர், இன்று ஆட்சியில் பங்குவரை கிடைத்திருக்கின்றது

பிஜூ, தென்னாப்ரிக்கா, மொரிஷியஸ், ரியூனியன் ஐலண்ட், கயானா, மேற்கு இந்திய தீவு என ஏகபட்ட நாடுகளுக்கு அடிமையாகவும் ஒடுக்கபட்டவனாகவும் கொண்டு செல்லபட்ட இனங்களில் தமிழ் இனமும் ஒன்று

அது அங்கெல்லாம் கடுமையாக உழைத்தது, தன் சந்ததியினை படிக்க வைத்தது, சிந்திக்க வைத்தது

இன்று நல்ல நிலையில்தான் இருக்கின்றார்கள்

அடிமைதனமோ அடக்குமுறையோ எதில் ஒரு சமூகம் சிக்கினாலும் உழைப்பும் கல்வியுமே சமூகத்தை உயர்த்தும்

ஒழுங்காக திருந்தி கடுமையாக உழையுங்கள், சிந்தியுங்கள் பிள்ளைகுட்டிகளையாவது படிக்க வையுங்கள்

“சும்மா 2000 ஆண்டு அடிமைகள்.” நாங்கள் என கத்துவதால் அரசியல் செய்யலாமே அன்றி உருப்படியாக ஒரு சமூகத்தை கைதூக்கிவிட முடியாது.

அதுவும் சட்ட பாதுகாப்பு,இட ஒதுக்கீடு என எல்லாவற்றையும் சுளையாக பெற்றுவிட்டு இன்னும் வேண்டும் நாங்கள் அடிமைகள் என்பதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியதனம்

உழையுங்கள் கடுமையாக உழையுங்கள், உழைக்கும் மனிதனுக்கு காலமே ஏணியாகும் அவனும் உயர்வான் பலரை உயர்த்துவான்

சும்மா கத்திகொண்டே இருப்பவனால் குழப்பத்தை அன்றி வேறு ஒன்றும் செய்துவிடமுடியாது

சோம்பேறிகளின் வார்த்தை வாய் புரட்சி, எவனையாவது குற்றம்சாட்டிவிட்டு திண்ணையில் மல்லாக்க கிடப்பது

போங்கடா நீங்களும் உங்க புரட்சி புண்ணாக்கும்

மங்கம்மாள்

தென் தமிழகத்தை பாண்டிய மன்னனின் வீழ்ச்சிக்கு பின் ஆளவந்தது நாயக்கம் வம்சம்

அதில் விஸ்வநாத நாயக்கன் தொடங்கி, திருமலை நாயக்கன் மஹாலை எல்லாம் கட்டிய பின் அந்த தலைமுறையில் வந்தவன் சொக்கநாத நாயக்கன், அவன் மனைவிதான் மங்கம்மா

அவள் ராணுவதளபதியின் மகளாய் இருந்ததால் வீரம் இயல்பாய் இருந்தது. அரசகுடும்பத்தை சாராதவளாயினும் மங்கம்மாளை திருமணம் செய்தான் மன்னன்

சொக்கநாத நாயக்கன் இறக்கும்பொழுது அவன் மகனுக்கு சிறிய வயது என்பதால் மங்கம்மா ஆட்சிபொறுப்பாளர் ஆனார்

ராணி அல்ல மாறாக ஆட்சி அவர் வசம் இருந்தது

ஒரு கட்டத்தில் மகன் முத்துவீரப்ப நாயக்கன் மரித்துவிட தன் பேரன் ஆட்சிக்கு வரும் வரைக்கும் ராணியாக வந்தாள்

மங்கம்மாவின் முன்னோடி ராணி ருத்ரம்மா , அவள் காகதீய பேரரசு எனும் ஆந்திர ராணி. அவளின் சாயல் மங்கம்மாளிடம் நிறைய இருந்தது

நாயக்க மன்னர்களில் இல்லை இல்லை மதுரையினை ஆண்ட அரசுகளிலே தலைசிறந்த அரசு மங்கம்மாளுடையது

மதுரை சாம்ராஜ்யத்தை 72 சீமைகள் அதாவது (சேர்மை) என பிரித்தார் மங்கம்மா, நிர்வாகம் இதனால் சீரானது

வறண்ட பகுதியில் ஏராளமான குளங்களை உருவாக்கினார், அது வயல்கள் கழனிகள் என செழித்தன‌

தென்னக வறண்ட நிலத்தின் ஏரி குளங்கள் எல்லாம் அவர் காலத்தில் உருவானதே

மங்கம்மாளின் மகத்தான சாதனை சாலைகளை உருவாக்கியது, ரோமை சாம்ராஜ்யத்தில் அத்தனை சாலையும் ரோமுக்கு என்பது போல மங்கம்மாள் காலத்தில் அத்தனை சாலைகளும் ஆலயங்களை இணைப்பதாக இருந்தது

தென்னகத்தின் பிராதன ஆலயங்களை இணைக்கும் மங்கம்மாள் சாலை இன்றும் உண்டு, அது திருச்செந்தூர் உட்பட பல முக்கிய ஆலயங்களை இணைக்கும் வழி

இந்த சாலை வந்தபின்புதான் சாத்தூரும், விருதுநகரும் வணிக மையங்களாயிற்று, மங்கம்மாளின் பெரும் சாதனை அது

சாலை அமைத்தது பெரிதல்ல, அதன் ஓரம் மரங்களை நட்டார் , வண்டிமாடுகளும் பயணிகளும் ஓய்வெடுக்க சத்திரங்களை அமைத்தார்

மாட்டு தாவாணி என்பது அப்படி உருவாயிற்று, மங்கம்மாள் சத்திரங்கள் இன்றும் உண்டு

அவள் ஆட்சி மதுரையின் பொற்கால ஆட்சி, பாதுகாப்பு, ஆன்மீகம், வியாபாரம், கலை என எல்லாம் செழித்து வளர்ந்தது

அவள் பல போர்களையும் நடத்தினாள், திருச்சி நாயக்கருக்கு ஆதரவாக மைசூருடன் போர் நடத்தி காவேரியினை மீட்ட மைசூர் போர், திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் நடத்திய போர் என பல போர்கள் பிரசித்தி பெற்றன‌

பின்னாளில் தஞ்சை மராட்டியருக்கும் மதுரை நாயக்கருக்கும் மோதல் வர, தஞ்சை மராட்டியரை ஒடுக்கி வைத்தவளும் அவளே

இல்லையெனில் மராட்டியர் ஆட்சி மதுரைக்கும் வந்திருக்கலாம்

மராட்டியருக்கும் அவளுக்குமான போர்காலங்களில் மொகலாய படைகள் தென்னகம் பாய்ந்து தமிழகத்தை விழுங்க இருந்த ஆபத்தை சமாதானமாக பேசி திருப்பிவிட்டவளும் அவளே

எம்மால் உறுதியாக சொல்லமுடியும் 18 ஆண்டுகாலம் மதுரையினை ஆண்டு நின்ற மீனாட்சியின் வடிவம் அவள்

இங்கு சாதாரண‌ மணியம்மை முதல் ஏ1 குற்றவாளி வரை பல பெண்களை கொண்டாடுபவர்கள் மகாராணியும் மிகபெரும் சக்தியாக வாழ்ந்த மங்கம்மாளை மறந்துவிடுவது என்பது கண்டிக்கதக்கது

மங்கம்மாள் காட்டிய வழியில்தான் பின்னாளில் வேலு நாச்சியார் வந்தாள்

ஜான்சிராணி மங்கம்மாள் காலத்துக்கு பிந்தையவள், ஆனால் அவளை தெரியும் அளவு மங்கம்மாளை யாருக்கும் தெரியாது

மங்கம்மாள் திருச்சி முதல் ஆரல்வாய்மொழி வரை பெரும் அடையாளங்களை கொண்டிருந்தார்

அவரின் திருச்சி மாளிகை இன்று ஏதோ அரசு அலுவலகமாயிற்று

மதுரையில் அவள் வாழ்ந்த மாளிகை காந்தி மியூசியமாயிற்று

நிச்சயம் வரலாறை நோக்குபவர்கள் அதில் வருந்துவார்கள், ஆம் தனியே கட்டடம் கட்டித்தான் காந்திக்கு மியூஸியம் அமைத்திருக்க வேண்டும்

திருமலை மகால் போலவே மங்கம்மாள் மாளிகை தனி அடையளமாக தொடர்ந்திருக்க வேண்டும்

எப்படிபட்ட மாதசி மங்கம்மாள்?

அவள் பெண்கள் ஆளமுடியும் என்பதை தைரியமாக நிரூபித்தாள், சாலைகளை செம்மைபடுத்தினாள், ஆலயங்கள் அவரால் புத்துயிர்பெற்றன‌

எத்தனையோ போர்களை நடத்தினார்

நாயக்க மன்னர்கள் எத்தனையோ பேரிலும் நாயக்க அரசி மங்கம்மாளின் ஆட்சியே சாலசிறந்தது என சொல்கின்றது வரலாறு

இப்படி வாழ்வாங்கு வாழ்ந்த மங்கம்மா என்ன ஆனாள்?

பேரனுக்கும் மங்கம்மாளுக்கும் மோதிற்று, எத்தனையோ மன்னர்களை அடக்கிய மங்கம்மாள் பேரன் மேலான பாசத்தில் தவித்தாள்

நினைத்தால் அவனை நொடிபொழுதில் சரித்திருக்கலாம், ஆனால் பாசம் அவளை தடுத்தது

அந்த சொக்கநாத நாயக்கன், ஆம் தன் கணவனின் பெயரை தன்பேரனுக்கு சூட்டி யாரை வளர்த்தாளோ, யாருக்காக உயிரை பணயம் வைத்து ஆண்டாளோ அவளையே
சிறையில் அடைத்தான் அந்த பேரன்

ஷாஜகானின் கடைசி காலம் போலவே மங்கம்மாளின் கடைசி காலமும் நிம்மதியாக இல்லை..

மதுரை சிறையிலே வாடி மறைந்தாள் அந்த மகாராணி

மங்கம்மாளின் துணிவும் வாழ்வும் ஆட்சியும் மாபெரும் சரித்திரம்

அதை தமிழகம் படித்ததோ இல்லையோ ஆந்திர இயக்குனர் ராஜமவுலி படித்திருந்தார்.

அதில் வரும் அந்த “சிவகாமி தேவி” பாத்திரம் ருத்ரம்மா என்பார்கள்

அல்ல, அவள் கதை வேறு

கைகுழந்தையோடு ஆட்சிக்கு வந்து மிக திறமையாக ஆண்ட அந்த பாத்திரம் சாட்சாத் மங்கம்மாளின் சாயலே

தமிழ் இயக்குநர் செய்ய வேண்டியதை ராஜமவுலி செய்தார்

மங்கம்மாளின் சாயலை ஓரளவு சொன்னபடம் அந்த பாகுபலி, சில சினிமா மசாலாக்கள் உண்டெனினும் ரம்யா கிருஷ்ணனின் பாத்திரம் மங்கம்மாளுடையது

அரச அரியணையினை விட்டுதள்ளி இருப்பது, போர்வியூகம் வகுப்பது, களத்திற்கே செல்வது என , கைகுழந்தையுடன் அரியணையில் அமர்வது என மங்கம்மாளை கண்முன் நிறுத்தினார் ராஜமவுலி

குறிப்பாக ஒரு காலை நேராக மடக்கி, ஒருகாலை குறுக்காக மடக்கி கம்பீரமாக அமரும் அந்த காட்சியில் மங்கம்மா நாச்சியாளை அப்படியே நிறுத்தினார் ராஜமவுலி

அந்த காட்சியினை பார்க்கும்பொழுது மனம் ராஜமவுலிக்கு இனம்புரியா நன்றியினை சொன்னது

பாகுபலி படமே மங்கம்மாளின் கதை அன்றி வேறல்ல‌

அந்த ராஜமவுலி தேடி படித்திருகின்றான், மங்கம்மாளின் அருமையினை உணர்ந்திருக்கின்றான், படத்தில் வென்றிருக்கின்றான்

இங்கே படிக்க யாருண்டு? தமிழக சாபம் அப்படி

இவனுக்கு வரலாறே பெரியார் காலத்தில் தொடங்கி மணியம்மை காலத்தில் வந்து கலைஞர் காலம் வந்து இப்பொழுது முக ஸ்டாலினுடன் நிற்கின்றது

அவனை பொறுத்தவரை தமிழினம் 100 ஆண்டுக்கு முன்புதான் திடீரென பூமிக்கு வந்தது, அவன் அப்படித்தான், அவன் என்ன செய்வான் பாவம்?

அவனை ஆட்டிவைக்கும் அரசியல் அப்படி

(எந்த பெண்ணுரிமை கும்பலுக்காவது, பெண் விடுதலை அழிச்சாட்டியங்களுக்காவது மங்கம்மாளை தெரியுமா என்றால் தெரியாது..

ஏன் என்றால் அவர்கள் அறிவும் அனுபவமும் புரட்சி சிந்தனையும் அவ்வளவுதான், பரிதாபம்)

திருச்சி மாளிகையும், காந்தி மியூசியமும் மங்கம்மாள் சுவாசித்த காற்றின் நினைவுகளையும் அவள் காலடி சுவடுகளையும் தாங்கி நிற்கின்றது

தமுக்கம் மைதானம் அவள் யானைகளை மோதவிட்டு விளையாடிய காட்சிக்கு சான்றாக நிற்கின்றது

மதுரை ஆலயம் அவள் செய்த திருப்பணிகளுக்கு சான்றாய் நிற்கின்றது

மங்கம்மாள் சாலை அவளின் பெரும் சாதனையினை இன்றும் சொல்லி நிற்கின்றது

அவள் உருவாக்கிய சத்திரங்களும், மாட்டு தாவாணியும் இன்னும் எஞ்சியிருக்கின்றன‌

செந்தூர் ஆலயமும் குலசேகரன் பட்டின ஆலயமும் அந்த மகாராணி தன் பக்தர்களுக்காக அமைத்து வைத்த சாலைகாக அவளை நோக்கிகொண்டிருக்கின்றன‌

அந்த உத்தம ராணிக்கு, பெண்குல பேரரசிக்கு இன்று பிறந்தநாள்

தமிழகத்தின் தனிபரும் அரசியின் 370ம் பிறந்த நாளில் அந்த‌
மங்கம்மாளை வணங்குவதில் தமிழகம் பெருமை அடைகின்றது

ராஜராஜ சோழன் நான்

ஆளாளுக்கு “ராஜராஜ சோழன் நான்” என பாட ஆரம்பித்தாயிற்று

இந்த ரஞ்சித் என்பவனுக்கு சொந்தமாக யோசிக்க தெரியாது, யாராவது கொளுத்தி போட்டால் அதை நம்பி கத்துவான்

அப்படி அவனுக்கு முன்பே ராஜராஜனின் பிம்பத்தை உடைக்க கிளம்பியது பெரியார் கோஷ்டி, குறிப்பாக அந்த தோசை மதிமாறன்

ஏன் இவர்களுக்கு ராஜராஜன் மேல் குறி?

கடவுள் பக்தி மிக்க, கடவுளுக்கு பெரும் ஆலயம் அமைத்து வழிபட்ட தமிழ் மன்னனை இவர்களுக்கு பிடித்தால்தான் ஆச்சரியம், பிடிக்காவிட்டால் ஒன்றுமில்லை

மதிமாறன் எனும் மடையன் பேசுகின்றார்

“கங்கை கொண்ட சோழன்” என
ராஜேந்திரனை அழைப்பது அவன் பிராமணர் பேச்சை கேட்டு கங்கையிலிருந்து சோழபுரம் கோவிலுக்கு நீர் கொண்டு வந்தான் என்பதற்காக, அவன் பார்பன அடிமை”

சரி “கடாரம் கொண்டான்” என பெயர் பெற்றானே அவன்?, அங்கே கடாரங்காய் என்ற நார்த்தங்காய் பறிக்க சென்றானா?

“ஈழம் கொண்டான்” என பெயர் பெற்றானே அவன் என்ன ஈழத்துக்கு கணவாய் மீன் உண்ண சென்றானா?

இவனுகளும் இவனுக திராவிட பகுத்தறிவு தத்துவமும்..

எல்லாவற்றுக்கும் இல்லை இல்லை என தலையாட்டும் கோவில் மாட்டைவிட இவர்கள் பகுத்தறிவு மகா மோசம்..

நாட்டிய தாரகை பத்மினி

அந்த கேரள‌ சகோதரிகள் மூவருமே பரதநாட்டியத்தை கசடற ஆட கற்றவர்கள், கேரளம் அன்று திருவிதாங்கூர் சமஸ்தானம், அந்த திருவனந்தபுரத்தில் மன்னரின் மாளிகை உட்பட பல முக்கிய இடங்களில் அவர்கள் நடனம் அரங்கேறியது

அதில் பத்மினி செல்லமாக பப்பி,

அவரின் மாமா ஒருவர் அவரை தத்தெடுத்திருந்தார், அவர் பெரும் பணக்காரர் என்பதால் அன்றே மும்பை சென்னை என அவர்கள் சுற்றி கொண்டிருந்ததால் மும்பையில்
14 வயதில் இந்தி சினிமாவிலும் அந்த பெண் நடித்திருந்தாள்

அந்த சகோதரிகளின் நடன நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் நடந்த பொழுது அதை காண சென்றிருந்தார் என்.எஸ் கிருஷ்ணன் , அது சினிமாவிற்கு பெண்கள் வர ஒருவித தயக்கம் இருந்த காலம் எனினும் அவர்தான் அவர்களை சினிமாவிற்கு கொண்டுவந்தார்

சென்னையில் அக்குடும்பம் இன்னொரு புகழ்பெற்ற நடன குடும்பத்தின் வீட்டில் தங்கியது, இன்றைய நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியம் பிறந்த காலமது.

பத்மா சுப்பிரமணியத்திற்கு அரங்கேற்ற நிகழ்வின்பொழுது சலங்கை எடுத்து கொடுத்தது பத்மினியின் தாயார், அவ்வளவு நெருக்கம்

என்.எஸ் கிருஷ்ணனின் “மண‌மகள்” படமே அவருக்கு முதல் படம் எனினும் அதில் அவர் கவனம் பெறவில்லை, மாறாக பராசக்தி வெற்றிக்கு பின் சிவாஜியுடன் அவர் பணம் படத்தில் ஜோடியானார், வசனம் கலைஞர் கருணாநிதி

(இந்த படத்தின் வெற்றியில்தான் கலைஞருக்கு அன்றே கார் பரிசளித்தார் என்.எஸ்.கே, அன்றே கலைஞரின் சம்பளம் 10 ஆயிரம், 1950களில் ஒரு சவரன் தங்கம் என்ன விலை என விசாரித்தால் இந்த மதிப்பு புரியும்)

படம் வெற்றிக்கு பின் அதுவரை பண்டரிபாய், பானுமதி என்றிருந்த சிவாஜியின் ஜோடி இடத்தை அனுசயமாக தட்டிபறித்தார் பத்மினி. சிவாஜிக்கேற்ற ஜோடி என பத்மினியே கொண்டாடபட்டார்

லலிதா, ராகினி என இவரின் மற்ற சகோதரிகளும் நடிக்க வந்தாலும், ஏன் மூவருமே சேர்ந்து நடித்தாலும் காற்று பத்மினி பக்கமே வீசிற்று

அக்காலத்தில் வந்த சாவித்திரியினை ஜெமினி களவாடி போக, சரோஜா தேவி, ஜெயலலிதா எல்லாம் ராமசந்திரனின் கண் அசைவில் கட்டுபட்டிருக்க சிவாஜிக்கேற்ற ஜோடி பத்மினி என்றானது

அது தில்லானா மோகனப்பாள், வியட்நாம் வீடு என ஏராளமான படங்களில் தெரிந்து , இறுதியில் தாய்கொரு தாலாட்டு என்ற அளவில் முதுமைகாலத்தில் முடிந்தது

இருவருக்கும் காதல் என்றார்கள், திருமணம் செய்ய முடிவு என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் சிவாஜி கணேசனுக்கு அப்பொழுதே திருமணம் ஆகி இருந்தது

ஆனால் இருவருமே காதல் செய்தியினை மறுக்கவில்லை, பின்னாளில் பத்மினி மட்டும் ஒப்புகொண்டார்.

சிவாஜி தனக்கே உரித்தான தொனியோடு “எத்தனைபேரு எனக்கு சோடியா நடிச்சாலும், எனக்கு ஈடா பொருத்தமா நடிச்சது பப்பி மட்டும்தான்” என குறீயீடாக சொல்லி இருந்தார்.

பத்மினியும் வைஜெயந்திமாலாவும் பிறவி நடன கலைஞர்கள், அந்த வஞ்சிகோட்டை வாலிபன் நடனம் மறக்க முடியாதது

நாட்டிய பேரோளி என போற்றபட்ட பத்மினி மன்னாதி மன்னனில் ராமசந்திரனோடு ஆட வேண்டிய கொடுமையும் நடந்தது, அதில் தலைவெட்டபட்ட ஆடு போல குதித்த ராமசந்திரன் வென்றும் தொலைப்பார்

அந்த அவமானத்தை தவிர ஒரு அசம்பாவிதமும் பத்மினிக்கு தமிழ் திரையுலகில் இல்லை

அவரின் சகோதரிகளில் லலிதா வில்லியாகவும், ராகினி காமெடி நடிகையாகவும் மாறிப்போக பத்மினி அட்டகாச நாயகியாக அப்படியே தொடர்ந்தார்

பரத நாட்டியம் என்பது உணர்ச்சிகளை முகத்திலும் அசைவிலும் கொண்டுவரும் விஷயம் , பரத கலையின் அடிநாதம் அதுதான்

அந்த வித்தை பத்மினிக்கு நடனத்தில் வந்தது போலவே, நடிப்பிலும் வந்தது. ஒரிரு இடத்தில் அது மிகை என்பார்கள் மற்றபடி இயல்பான நடிப்பு

1961லே மருத்துவரை திருமணம் செய்து அமெரிக்கா சென்ற பத்மினி அதன் பின் வெகுவிரைவிலே திரும்பிவிட்டார்
பொதுவாக திருமணமான பின் ஒரு நடிகைக்கு நாயகி வாய்ப்பு கிடைக்காது, கிடைத்தாலும் நிலைக்காது

ஆனால் பத்மினி அதன்பின்பே உச்சம் தொட்டார் அவரின் தில்லானா மோகனம்பாள் போன்ற படங்கள் அதன் பின்பே வந்தன‌

சிவாஜி, ராமசந்திரன், ஜெமினி என மூன்று நடிகர்களோடும் மாறி மாறி நடித்த நடிகை அவர், அல்லது அவர்கள் மூவரும் பத்மினியோடு நடிக்க வரிசையில் நின்றனர்

சந்திரபாபு தனியாக அவர் படத்தை வைத்து உனக்காக எல்லாம் உனக்காக என ஆடிகொண்டிருந்தது தனிக்கதை
அப்படி கொண்டாடபட்டார் பத்மினி, அவருக்கு நாட்டிய பேரோளி எனும் பட்டம் அண்ணாமலை பல்கலைகழகம் கொடுத்தது

பத்மினி வரலாற்றில் குறிப்பிடதக்க சம்பவம் உண்டு, அது மறக்கமுடியாதது

1971ல் அமெரிக்க இந்திய தூதரகம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் பத்மினி அப்பொழுது அமெரிக்காவில் இந்துகோவில் இல்லை என டாக்டர் அழகேசன் என்பவர் சொல்லி அதனை கட்ட நிதி திரட்டுகின்றார்

பத்மினி தன் நடன நிகழ்ச்சி மூலம் நிதி திரட்டி தருவதாக சொல்லி கிட்டதட்ட 55 நிகழ்ச்சிகள் மூலம் திரட்டி கொடுத்தார், அந்த மகாபல்லவ கணபதி கோவில் அப்படித்தான் உருவாக்க பட்டது

அதில் பத்மினி பங்கு அதிகம், கடவுள் கொடுத்த கலையினை கடவுளுக்கே திருப்பிகொடுத்தார், அன்னை வேளாங்கண்ணி படத்து சம்பளத்தை கணபதி கோவிலுக்கு அவர் கொடுத்த வினோதம் அன்று நடந்தது

அந்த நிகழ்ச்சி கொடுத்த யோசனையே அவரை அமெரிக்காவில் நடனபள்ளி தொடங்க வைத்தது, அதை தொடங்கி நடத்திகொண்டிருந்தார்

அவர் மனதில் பெரும் ஆசை இருந்தது, மனோரமா போல கடைசி வரை நடித்துகொண்டே இருக்கவிரும்பினார், அவரே வாய்விட்டு சொன்ன விஷயம் அது

அப்படித்தான் பூவே பூச்சுடவா பாட்டியாக திரும்பி வந்தார்,

எப்படி வஞ்சிகோட்டை வாலிபன் பத்மினி, வியட்நாம் வீடு பத்மினியினை மறக்க முடியாதோ அப்படி பூவே பூச்சுடவா பத்மினி பாட்டியினை மறக்கவே முடியாது

அதன் பின் அப்படியான படங்கள் வரவில்லை, அவரும் அமெரிக்காவில் ஒதுங்கினார்

ஆச்சரியமான சம்பவங்கள் சிவாஜிக்கும் பத்மினிக்கும் உண்டு, இருவருமே சம காலத்தில் அறிமுகமானார்கள், இருவருமே ஒரே நேரத்தில் உச்சம் தொட்டார்கள், அப்படியே ஒரே நேரத்தில் ஓய்வும் பெற்றார்கள்

இருவருமே அப்பல்லோ மருத்துவமனையில் மரித்தும் போனார்கள்

பத்மினிக்கு ஒரு மகன் உண்டு எனினும் அவரின் உறவுபெண் ஷோபனா, உறவுக்கார வாரிசு வீனீத் என அவரின் குடும்பம் இன்றும் தமிழ்சினிமாவில் உண்டு
ஆயிரம் பேர் ஆடினாலும் தமிழ்திரையின் பரத நாட்டியம் இன்றும் ஷோபனா வடிவில் பத்மினி குடும்பத்திடமே இருக்கின்றது, இன்னும் அவர்கள் குடும்பமே அந்த நாட்டியத்தை ஆள்கின்றது

இன்று நாட்டிய பேரோளி பத்மினிக்கு பிறந்த‌ நாள்
அற்புதமான பரத நடனம் எப்படி இருக்கும் என தன் மிகசிறந்த நடனத்தால் நிரூபிக்கபிறந்தவர் அவர், மிக சிறந்த நடிகையும் கூட‌

1950 முதல் 1970 வரையான காலங்கள் அவருக்கானவை

“என் சலங்கைக்கு பதில் சொல்லடி; ’மன்னவன் வந்தானடி’, ’மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன’ ’நலம் தானா உடலும் உள்ளமும் நலந்தானா’ பாடல்கள் எல்லாம் பத்மினி கொடுத்த நடன கல்வெட்டுக்கள்

அந்த காலங்கள் அப்படி அருமையானவை, ரஷ்ய அழைப்பின் பேரில் சென்ற கலைகுழுவில் பத்மினி ஆடிய ஆட்டம் கண்டு சோவியத் அரசாங்கம் பெரும் கவுரவம் கொடுத்தது

1965ல் எல்லைக்கு சென்று போர் வீரர்களுக்கு நடத்திய கலை நிகழ்ச்சியில் பஞ்சாபிய பங்காரா நடனம் ஆடிய பத்மினி சீக்கிய வீரர்களால் கொண்டாடபட்டார், அவரின் ஆட்டம் அவ்வளவு அழகாக இருந்ததாம்

பத்மினி எப்படி எல்லாம் செய்திகளில் அடிபட்டார் என்றால் இப்படியும் கூட‌

அது ராமசந்திரனுக்கும், எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கும் பிணக்கு வந்திருந்த நேரம். உண்மையில் எஸ்.எஸ் ராஜேந்திரன் நல்ல நடிகர் ஆனால் திமுக மகா உத்தமான இயக்கம் என எண்ணி லட்சிய வேடத்தில் நடிப்பேன், கட்சி கொள்கை அது என பேசி நாசமாய் போனவர்

பிற்காலத்தில் கலைஞர் கருணாநிதி ராமானுஜருக்கு வசனம் எழுதுவார் என எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்?

அப்பொழுது ராமசந்திரனை தாக்கி அடிக்கடி பேசிகொண்டிருந்த ராஜேந்திரன் ஒருநாள் “ராஜா தேசிங்கு படத்தில் என்னுடன் திருமதி பத்மினி அவர்கள் நெருங்கி நடிக்கக்கூடாது என்பதற்காக எம்ஜியார் செய்த சூழ்ச்சிகளை நாடு மறக்குமா?” என சொல்லிவிட்டார்

சோ ராமசாமி தனக்கே உரித்தான ஸ்டைலில் சொன்னார்

“எஸ் எஸ் ஆர் சார் ! கேட்கவே பதறுகிறதே.நெஞ்சு கொதிக்கிறது. இப்படியெல்லாம் அநியாயமா ? எப்பேர்ப்பட்ட அநீதி இது? இதையெல்லாம் இந்த நாடு மறந்தால் இந்த நாட்டிற்கு விமோசனம் ஏது?
இந்த நாடு, நன்றி கொன்ற நாடு
ஆகிவிடாதா ?”

தமிழ் திரையுலகம் ஆணாதிக்கமிக்கது, ஆண்கள் வேடமே பிரதானம்

ஆனால் பத்மினியின் மிகசிறந்த படங்களை பாருங்கள், நடிப்பினாலும் நாட்டியத்தாலும் அப்படத்தை அவர்தாங்கி நிற்பார். அவர் அல்லாது அப்படங்கள் அமைந்திருக்காது, நின்றிருக்காது

பத்மினி எனும் பெரும் நடிகையினை தவிர யாருக்கும் அது சாத்தியமில்லை, அவரின் மிகபெரும் பலம் அது

தமிழ் திரையுலகில் தவிர்க்கவே முடியாத தனி இடம்பெற்ற நாட்டிய தாரகைக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்