கூடன்குளம் அணுவுலை கழிவுகள்

அணுகழிவுகளை கூடங்குளத்தில் புதைப்பது என்பது பெரும் சர்ச்சையாக ஓடிகொண்டிருக்கின்றது

இந்தியாவில் மொத்தம் 22 அணுவுலைகள் 7 இடங்களில் இயங்குகின்றது, தமிழகம் தவிர்த்து இன்னும் 5 இடங்கள் உண்டு

இப்பொழுது சிக்கல் கூடன்குள அணுவுலை கழிவுகள் கூடன்குளம் வளாகத்திலே புதைக்கபடும் என்பதில் வெடிக்கின்றது

நிச்சயம் கூடன்குளம் அணுவுலை 7ம் அணுவுலை, அதற்கு முன்பே 6 உலைகள் இயங்கதொடங்கியாயிற்று

அவற்றிலும் கழிவுகள் 1980களில் இருந்தே உண்டு, அவை எல்லாம் எங்கு புதைக்கபட்டன என்றால் அங்கேதான்

கல்பாக்கம் மட்டும் தன் அணுவுலை கழிவுகளை மறுசுழற்சிசெய்யும் வகையில் சில நவீன மாடல்களை பெற்றிருக்கின்றது என்கின்றார்கள்

கூடன்குளம் அணுவுலை சில ஆண்டுகளாக இயங்க தொடங்கிய பின் இந்த சிக்கல் எப்படி வெடிக்கின்றது என்பதுதான் தெரியவில்லை

நாட்டின் மொத்த அணுகழிவுகளையும் இங்கே புதைக்கின்றார்கள் என ஒருகோஷ்டி கிளம்புகின்றது

அப்படிஅல்ல கூடன்குள அணுவுலை கழிவுகள் மட்டுமேதான் அங்கு புதைக்கபடும் என்கின்றது ஒரு கோஷ்டி

அப்படியானால் இவ்வளவு நாள் கூடங்குளத்து கழிவு எங்கே என்றால் அங்கேதான் என்கின்றார்கள், பின் ஏன் பரபரப்பு என்றால் சத்தமே இல்லை

ஆளாளுக்கு குழம்பி குழபுகின்றார்கள்

மாநில அரசுக்கு இதைவிடமுக்கியமான ஒற்றை தலமை கட்சி உட்பட ஏக சிக்கல் இருப்பதால் கட்சியின் அணுஆலையே அவர்களுக்கு பிரதானம்

எதிர்கட்சி தலைவருக்கு அணு சிக்கலை விளக்கி சொன்னால் அவர்திருப்பிகேட்டு நம்மை குழப்பிவிடுவார்

“நியூக்ளியர்..” என சொல்ல சொன்னால் “நிக்கி கல்ராணி..” என திருப்பிசொல்வார் அவர்

வேறு மாநிலத்துக்கு நாதி யார்?

ஒருவருமில்லை சைமன் கோஷ்டி சும்மா, உதயகுமார் கோஷ்டி ஓவர் பில்டப்

அவர்களிடம் பேசினால் இன்றே வேறுகிரகத்துக்கு ஓடிவிடலாம் அளவு பயமுறுத்தி கடைசியில் பிரபாகரனில் வந்து நிற்பார்கள்..

ஆக ஒன்றும் சரியில்லை, மத்திய அரசாவது இதுபற்றி விளக்கவேண்டும், ஆனால் அவர்கள் சத்தமே இல்லை

என்ன அணுகொள்கை என அவர்களும் சொல்லவில்லை

நாங்கள் பாராளுமன்றம் சென்றால்.. என முழங்கிய தமிழக புது எம்பிக்களும் சத்தமில்லை, எழும்புங்கள் இதுபற்றி கேளுங்கள் என்றால் திராவிடம், சமூக நீதி, பெரியார் என சொல்லிவிட்டு தூங்கிவிடுகின்றார்கள்

இதுபற்றி தமிழகம் ஒன்றை சொல்ல, ஊடகம் ஒன்றை சொல்ல, திடீர் குபீர் அணு விஞ்ஞானிகள் ஒன்றை சொல்ல ஒரே குழப்பம்

மத்திய அரசு நிலைப்பாட்டை விளக்க வேண்டும்

மற்றபடி தென் தமிழகத்தின் தெற்கு தொங்கலில் புரட்சி வெடிக்க வாய்பில்லை

நன்றாக கவனித்திருக்கின்றேன் KKNPP என்பது இவ்வளவு காலம் சும்மா அல்ல‌

ஏகபட்ட பணத்தினை வளர்ச்சி பணி என அள்ளிவிட்டிருக்கின்றது, சாலைமுதல் கட்டடம் வரை இறைத்திருகின்றது

அதில் பலன் பெற்றோர் பணம் பெற்றோர் ஏராளம் ஏராளம்

மிக வசமாய் வளைத்துவிட்டது தெரிகின்றது, ஒப்புக்கு ஏதோ கருத்து அது என கேட்பார்கள்

முடிவு எடுத்துவிட்டு ஏதோ கண்துடைப்பு செய்கின்றார்கள்

மற்றபடி ஆகபோவது ஒன்றுமில்லை, எதிர்ப்பே வராதவாறு எல்லா பக்கமும் அணைகட்டியாயிற்று

கூடங்குள அணுவுலை ஆபத்துதான் அதே நேரம் அந்த ஆபத்து நாட்டின் 7 இடங்களுக்கு இருக்கின்றது, அதில் தலைநகரமும் இருக்கின்றது , மோடியின் குஜராத்தும் இருக்கின்றது என்பதுதான் நிஜம்

திராவிட இயக்கத்தின் மாபெரும் சாதனை

நாமும் கம்பனையும் அவனின் சுந்தர காண்டத்தையும் படித்திருக்கின்றோம்

வால்மீகியினையும் புரட்டியிருக்கின்றோம்

இப்படி ஒரு காட்சி எங்குமே இல்லை, இருந்திருந்தால் அன்றே அண்ணாவும் அவரை விட கலைஞரும் அக்காட்சியினை கிழித்தெறிந்திருப்பார்கள்

அன்று நெருப்பாய் இருந்த திராவிட கொழுந்துகளுக்கு இது பெட்ரோலாய் கிடைத்திருக்கும்

அண்ணா தன் புகழ்பெற்ற “கம்ப ரசம்” பகுதியில் கூட இப்படி எழுதவில்லை என்பது குறிப்பிடதக்கது

அப்படி ஒரு வரி ராமாயணத்தில் இல்லை மாறாக கம்ப ராமாயணம் அந்த சுந்தர காண்ட காட்சியினை சொல்கின்றது இப்படி

அசோகவனத்தில் சீதை தற்கொலை செய்ய செல்கின்றாள், சரியான நேரத்தில் வந்த அனுமன் அவளை தடுக்கின்றான், அவன் ராவணின் ஆள் என அஞ்சும் சீதை அவனிடம் பல கேள்விகளை கேட்டு இறுதியில் நம்புகின்றாள்

அந்த பல பக்கம் வரும் பாடல்களில் எங்குமே இப்படி வரிகள் இல்லை, இல்லவே இல்லை

தான் நலமாக இருப்பதை ராமனிடம் தெரிவிக்க சொல்லி தன் சூடாமணி ஒன்றை கொடுக்கின்றாள், அது இப்பாடலில் வரும்

‘சூடையின் மணி கண்மணி ஒப்பது தொல்நாள்
ஆடையின்கண் இருந்தது பேர் அடையாளம்
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை! நல்லோய்! கோடி! ‘என்று கொடுத்தனள் மெய்ப்புகழ் கொண்டாள். “

“சிறந்தவனே! கடல் தாண்டி நாடி வந்து, (போவதற்கிருந்த) என் இன்னுயிரை வழங்கினாய். என் கண்மணி போன்ற இந்தச் சூடாமணி, நீண்ட நாட்களாக என்னுடைய ஆடையில் பொதிந்து வைக்கப் பெற்றது.

எனது அன்பின் பேரடையாளமாக இதை இராமனுக்கு எடுத்துச் செல்வாய்” என்று கூறி உண்மையான புகழைக் கொண்ட சீதை சூடாமணியை அனுமனிடம் வழங்கினாள்.

சூடாமணியினை கண்ட ராமன் கண்ணீர் விட்டு அழுது, தன் மோதிரத்தை அனுமனிடம் கொடுத்துவிடுகின்றான், அதை இப்பாடல் சொல்லும்

“அறிவுறத் தெரியச் சொன்ன, பேர் அடையாளம் யாவும்,
செறிவுற நோக்கி, நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை
முறிவு அற எண்ணி, வண்ண மோதிரம் காட்ட, கண்டாள்;
இறுதியின் உயிர்தந்து ஈயும் மருந்து ஒத்தது, அனையது – எந்தாய் ..”

“எம் தலைவனே! பிராட்டி அறியும்படி அடியேன் தெளிவாகச் சொன்ன அடையாளங்களை எல்லாம் பொருத்தமாகப் பார்த்து, அடியேன் மனத்தில் குழப்பம் ஏதும் இல்லை என்பதை நன்றாக யோசித்து, அழகிய (உனது)
மோதிரத்தை நான் காட்ட, பார்த்தாள்.

அந்த மோதிரம், முடிவுக் காலத்திலும் உயிர் போகாதபடி நிலை நிறுத்திக் காக்கின்ற சஞ்சீவினி என்ற மருந்தைப் போன்று அவளுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளித்தது”

இதுதான் ராமாயணம் சொல்லும் காட்சி, சீதையும் அனுமனும் சந்திக்கும் காட்சி

இதில் எங்கிருந்து இவர்கள் சொல்லும் வரி வந்ததென தெரியவில்லை

உண்மை இப்படி இருக்கலாம், இவர்கள் புத்தி அப்படித்தான் போகும், அதனால் சொல்லலாம்

சுந்தர “காண்டம்” என்றவுடன் , அந்த “காண்டம்” என்பதை அவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் அந்த காண்டமாக நினைத்திருக்கலாம்

உடனே ஆண்குறி அது இது என நினைவுக்கு வந்து இவர்களாக ஒரு “கம்பு” ராமாயணம் எழுதியிருக்கலாம்

அதில் இப்படி பட்ட விளக்கத்தை, திராவிட கம்பு கோஷ்டிகள் எழுதியிருக்கலாம்

பாவம் அவர்கள்

சிவலிங்கத்தை பார்த்தால் அது ஆண்குறி என அலறுகின்றார்கள்

ராமாயணத்தை படித்துவிட்டு அய்யய்யோ ராமனின் ஆண்குறி என அலறுகின்றார்கள்

இன்னும் யார் யாரின் ஆய்வில் இறங்கி அடுத்த கம்பு ராமாயணம் எழுத‌ போகின்றார்களோ இந்த கம்பு கோஷ்டிகள் தெரியவில்லை

ஆனால் இந்த பெரியாரின் கம்பு பற்றி ஏன் ஒரு பயலும் ஆய்வு நடத்தவில்லை என்பதுதான் தெரியவில்லை..

இவனுகளும் இவனுக ஆராய்ச்சீசீ யும்..

திராவிட நாடு அடைந்து தமிழரை வாழ்வாங்கு வாழவைக்க எண்ணிய கூட்டம், அதுவும் நடக்காத பட்சத்தில் மாநில சுயாட்சி வாங்கி தமிழனை வாழவைக்க கிளம்பிய தன்மான கூட்டம் ராமனின் ஆண்குறியினை அளக்க சென்றிருப்பது காலத்தின் கோலம்

திராவிட இயக்கத்தின் மாபெரும் சாதனை ராமனின் ஆண்குறியினை அளந்தது…

தஞ்சை கோவிலின் நிழல்

தஞ்சை கோவிலின் நிழல் தரையில் விழாது என்பதல்ல, ஆலய வளாகத்தை தாண்டி விழாது என்பதுதான் ஐதீகம்

அதாவது ஆலய வளாகத்தை தாண்டி விழுந்தால் அந்த நிழலை யாரும் மிதித்துவிட கூடாது என்பதால் வளாகத்துக்குள் மட்டும் விழுமாறு சுற்று சுவர் அமைக்கபட்டது என்பார்கள்

அந்த கோபுர நிழல் தரையிலே விழாது என எங்கு சொல்லபட்டது? இவர்கள் எங்கு படித்தார்கள் என்பதுதான் தெரியவில்லை..

கோபுர கலசத்தின் நிழல்தான் தரையில் விழாது என்பது அதன் அமைப்பு, இன்றும் அது விழுவதில்லை

இந்தியாவில் கல்வி இருந்த வரலாறு

பிராமணன் மற்ற சாதிக்கு கல்வி கொடுக்கமாட்டான், நாமெல்லாம் படித்தது இந்த வெறும் 80 ஆண்டுகளுக்குள்ளேதான், அதனால் இதுதான் புரட்சிகாலம் புண்ணாக்கு காலம் , எல்லாம் திராவிட சாதனை என ஏக குரல்கள்

100 வருடத்துக்கு முன் என்ன விஞ்ஞான கல்வி இருந்தது என்பதுதான் தெரியவில்லை

ராக்கெட் சயின்ஸ் இருந்ததா? இல்லை கம்பியூட்டர் சயின்ஸ் இருந்ததா? இல்லை மருத்துவமோ இதர துறையோ இந்த அளவு இருந்ததா?

உலகில் கல்வி என அன்று எதுவுமில்லை

அன்றிருந்த கல்வியில் இருவகை இருந்தது, பொதுமுறை இருந்தது

இருவகையில் அரசனுக்கான கல்வி வேறு, அது ஆட்சி, போர் முறை, ராஜநீதி என அவனுக்கு போதிக்கபட்டது. கற்ற அரசன் எவனும் பிராமணன் அல்ல‌

சாதாரண மனிதனுக்கு ஓலை சுவடி எழுத்தும் கூட்டல் கழித்தல் போன்ற சாதாரண கணக்குகள் இருந்தன‌

செட்டி இனம் இதில் வட்டியினை கணக்கிட கற்றது

ஆக அரசனுக்கொரு கல்வி, பாமர மக்களுக்கு தனி கல்வி என நிலமை இருந்தது

இது போக தொழில் எனப்படும் வாழ்க்கைகான கல்வி தகப்பனிடம் இருந்து மகனுக்கு சொல்லிதரபட்டது

அது கொல்ல பட்டறை, விவசாயம், தச்சு வேலை, படகு செய்தல், சமையல், இரும்பு வேலை, சிற்பம் என குலதொழிலாக இருந்தது

பிராமண இனம் அதை வானசாஸ்திரம் ஜோதிடம் என தன் குலத்துக்கு கற்று தந்தது

அவனவன் தொழிலில் அவனவன் தேறினான், ஒவ்வொரு தந்தையும் தன் வித்தையினை அப்படியே மகனிடம் இறக்கிவைத்தான்

வைத்தியமும் குலம் குலமாக வந்தது , சலவை தொழில் உட்பட எல்லாமும் அப்படியே தொடர்ந்து வந்தது

அன்றொரு கொடுமை இருந்திருக்கின்றது, ஒருவன் தன் தொழிலை தன் குடும்பத்தாரை தவிர இன்னொருவனுக்கு கற்றுதர தயாராக இல்லை

அது சிற்ப தொழில் முதல் போர்கலை வரை இருந்திருக்கின்றது, துரோணர் சம்பவங்களில் இதை காணலாம்

ஒவ்வொருவனும் தன் வித்தை தன் குலம் ஒன்றுக்கே என உறுதியாய் இருந்திருக்கின்றான்

இந்த தொழிலாளர்கள் எல்லாம் ஒன்றாக கூடித்தான் அச்சமூகம் வளமாக வாழ்ந்தது

கொல்லனும் தச்சனும் ஒன்று கூடி மாட்டுவண்டி செய்தனர், கொல்லனும் கல் தச்சனும், தச்சனும் சேர்ந்து அழகிய ஆலயங்களை உருவாக்கினர்

சமூகம் கலைகளிலும் அறிவிலும் வளர தொடங்கியது, ஒரு குலம் இன்னொரு குலத்திற்கு உதவியாக சமூக வாழ்வில் இருந்தது

பிராமண இனம் ஆலயங்களிலும் அரசனிடமும் குனிந்தே நின்றது, என்னதான் அறிவான இனம் என்றாலும் அது அரசனுக்கு அடங்கி கிடந்தது

அரசனே தெய்வம்

அன்று இவ்வளவுதான் கல்வி அதாவது தமிழ் படிப்பது கொஞ்சம் கூட்டல் கழித்தல் , குலதொழில் கல்வி

வெள்ளையன் வந்தே இங்கு நிலமையினை மாற்றினான்

தன் அதிகாரத்தை நிறுத்த அவனுக்கு ஆங்கிலம் அதிகம் தெரிந்தோர் தேவைபட்டனர், பிராமண சமூகம் அதை பயன்படுத்தி ஆங்கிலம் கற்றது

அரசன் முன் குனிந்து அவனுக்காக பலமொழி கற்ற அச்சமூகத்திற்கு ஆங்கிலம் கற்பதும் எளிதாக வந்தது

இதெல்லாம் 1800களின் காலங்கள்

அதன் பின் வெள்ளையன் நவீன கல்வியினை திறந்தான், அதில் பிராமணர் ஆசிரியராயினர்

அவர்கள் கூலிக்கே பணியாற்றினர், எந்த சாதி படித்தாலும் அவர்கள் கற்பித்தனர்

அதில் எல்லா சாதியும் படித்தது, எல்லோருக்கும் பிராமணர் கற்பித்தனர்

வெள்ளையன் கல்வி கூடங்களில் கிறிஸ்தவ சாயல் தெரிய இந்துக்களின் கல்வி கூடங்கள் பெருகின, பச்சையப்ப வள்ளல், செட்டிகள், ஆதீனங்கள் கல்வி கூடங்களை திறந்தனர்

அதிலும் பிராமண இனம் கூலிக்கு பணியாயிற்று

பிராமணன் தனி கல்வி கூடங்களை நடத்தியதாகவும் அங்கு மற்ற சாதிக்கு கல்வி மறுக்கபட்டதாகவும் எங்காவது கேட்டிருக்க முடியுமா? காட்சிகள்தான் உண்டா?

முதல் இரு உலக போர்கள் உலகை மாற்றிபோட விஞ்ஞானம் வேகமாக வளர்ந்தது, அது சுதந்திர இந்தியாவில் நவீன கல்வியினை கொடுத்தது

இந்திய அரசும் சட்டம், மருத்துவம், விஞ்ஞானம் உட்பட ஏகபட்ட கல்விகளை உருவாக்கி தன் மக்களை படிக்க வைக்க தொடங்கியது

அந்த கல்விதான் இன்று நாம் காணும் கல்வி

இந்தியாவில் கல்வி இருந்த வரலாறு இதுதான்

இதில் எங்கே பிராமணன் யாருக்கு எதை மறுத்தான் என சொல்லுங்கள்

பிராமண ஆசிரியரிடமே அண்ணா படித்தார், அம்பேத்கர் படித்தார், கலைஞரும் தமிழ் படித்தார்

எல்லோரையும் கற்க வைத்த அந்த இனமே அவர்களிடம் அடியும் வாங்கியது

சும்மா 100 வருடத்துக்கு முன் நமக்கு கல்வி இல்லை பிராமணன் மறுத்தான்என்பவனிடம் , 100 வருடத்துக்கு முன் இங்கு என்ன நவீன கல்வி இருந்தது என கேளுங்கள்

அதன் பின் பேசவே மாட்டான்

அண்ணே நீங்க சங்கியாயிட்டீங்க

“அண்ணே பிராமணர் பத்தி உங்களுக்கு தெரியாது, ஒருத்தரையும் முன்னேற விடமாட்டாங்க‌ , எல்லா வாய்ப்பையும் பறிச்சுட்டு நம்மளை அடிமையா வச்சிருவாங்க‌

பெரியார் யார்டா?

புரட்சியாளர், அவர் காலத்துல பிராமண அட்டகாசம் அப்படி

அது தெரியும், அவர் சொத்துமதிப்பு எவ்வளவு?

அண்ணே அவர் சொத்து அன்னைக்கே பல லட்சம் இப்போ ஏராளமான கோடிண்ணே

எல்லாம் எப்படி வந்தது?

உழைப்புண்ணே அவங்க அப்பா அப்படி உழைச்சார், பெரியாரும் நல்ல உழைச்சி சேத்துட்டுத்தான் வந்தாரு

டேய் கலைஞர் சம்பாதிக்கலையா?

ஆமாண்ணே அவர் உழைப்பாளின்னே

ஆக அந்த காலத்திலே உழைச்சி சொத்து சேத்துருக்காங்க‌

கண்டிப்பாண்ணே

இப்போதானடா பிராமணர் யாரையும் வாழ விடமாட்டங்கண்ணு சொன்ன, அவர் அவ்வளவு சொத்து பிராமணர் காலத்துலே சேர்த்திருக்க முடியதுடா எப்படிடா?

அதெல்லாம் உழைப்புண்ணே வேலை செய்யணும்

அதான் நாய நானும் சொல்றேன், பிராமணன நோண்டாம ஒழுங்கா வேலை செய், கஷ்பட்டு உழைச்சி பாரு. வாழ்க்கையில முன்னேறுவ, இல்ல இப்படித்தான் அழுதுட்டே இருப்ப போடா..

அண்ணே பிராமணன் யாரையும் படிக்கவிடமாட்டான்

ஏண்டா அண்ணா என்ன படிச்சாரு?

எம்.ஏ இரண்டு எம்.ஏ

அன்பழகன்?

அவரு பேராசிரியரு

இந்த நீதிகட்சி பன்னீர்செல்வம்?

அவரு அப்பவே வக்கீல் லண்டனுக்கு போனவரு

அவங்க எல்லாம் பிராமணனா? அவங்க எல்லாம் அந்த காலத்துலே படிக்கல?

அண்ணே நீங்க சங்கியாயிட்டீங்க, இனி உங்கட்ட பேசமாட்டோம்

இவர்கள் கேட்பதன் தீர்வு என்ன?

தலித்துக்களுக்கு ஒரு உரிமையும் 2 ஆயிரம் ஆண்டுகளாக இல்லையாம், அதனால் போராடுகின்றார்களாம்

இதில் என்ன சொல்ல வருகின்றார்கள் என்றால்,இந்தியாவிலும் தமிழகத்திலும் இதற்கு முன் ஆண்ட திராவிட கட்சிகளும் ஒன்றும் செய்யவில்லை என சொல்ல வருகின்றார்கள்

இட ஒதுக்கீடு இத்தேசத்தில் கொடுக்கபட்டிருக்கின்றது, தீண்டாமை சட்டம் , வன்கொடுமை தடுப்பு சட்டம் என ஏகபட்ட பாதுகாப்பு இருக்கின்றது

உண்மையில் இத்தேசம் அவர்களை சட்ட ரீதியாக‌ பாதுகாத்துகொண்டுதான் இருக்கின்றது, தமிழக கலைஞர் அரசு அவர்களுக்கு செய்திருப்பதெல்லாம் ஏராளம்

காமராஜர் காலமுதல் இன்றைய பழனிச்சாமி காலம் வரை அமைச்சரவையில் தலித் இருந்துகொண்டேதான் இருக்கின்றார்கள்

கக்கன் முதல் இன்றைய தனபால் வரை ஏராளமானவர் கொண்ட வரிசை அது

அவர்கள் முன்னேறுவதை அது சுய தொழிலோ அரசு பணியோ எதிலும் யாரும் தடுக்கவில்லை

தலித் இந்த வியாபாரம் செய்ய கூடாது என்றோ, இந்த தொழிற்சாலையினை தொடங்க கூடாது என்றோ எங்கே தடை இந்நாட்டில் இருக்கின்றது?

இன்னும் எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, எங்களை வாழவிடவில்லை என்பதெல்லாம் என்ன வகை?

இத்தேசத்தில் மொத்தமும் அவர்களுக்கே கொடுத்துவிட முடியுமா?

பல இனங்கள் கலந்து வாழும் நாட்டில் அப்படி எதிர்பார்க்க முடியாது

அக்காலங்களில் விவசாயம் மட்டுமே தொழில், அது இல்லாவிட்டால் பட்டினி சாவு என்ற கொடுமையில் பல அட்டூழியங்கள் இருந்தன‌

இன்றோ விவசாய பணிக்கே ஆளில்லை, தலித்துகள் வாழ்க்கையில் முன்னேற எல்லா வாசலும் திறந்திருக்கின்றது

அரசுபணி அவர்களுக்கு எளிது, வியாபாரம் செய்தால் அதை தடுப்பது யார்? செய்யட்டும், முன்னேறட்டும்

அவர்கள் கற்பதையோ முன்னேறுவதையோ யாரும் தடுக்கவில்லை, முன்னேறட்டும்

வாசல்கள் திறந்துள்ள இக்காலத்திலும் அந்நாளில் நாங்கள் ஒடுக்கபட்டோம் என கொடிபிடித்து அலைவது சரியல்ல‌

உழைத்து வாழ்ந்தால் கோடி வாய்ப்புகளில் முன்னேறலாம் கோடி வாய்ப்பினை உருவாக்கி கொடுக்கலாம்

ஒரு நாடென்றால் எல்லா இனமும் மதமும் சாதியும் கலந்தே இருக்கும், அதில் சில சிக்கல்களும் சிற்சில இடைஞ்சல்களும் இருக்கும் இது எல்லா நாட்டிலும் உண்டு

வாய்ப்புகளை கொட்டி கொடுத்தபின்னும் 2000 ஆண்டு அடிமை என சொல்லிகொண்டிருந்தால் என்ன தீர்வு? இன்னும் அழுதுகொண்டிருந்தால் என்ன அர்த்தம்?

கொட்டிகிடக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த மாட்டோம், முன்னேறினாலும் தலித் அடையாளத்தை விட மாட்டோம் என்பதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியதனம்

இவர்கள் கேட்பதன் தீர்வு என்ன?

கேட்டதெல்லாம் கொடுத்தாகிவிட்ட பின்பும் இன்னமும் வேண்டும் எங்களை ஒடுக்குகின்றார்கள், சுரண்டுகின்றார்கள் என்றால் என்றால் தலித் நாடுதான் சரி

ஒரு சாதி மட்டும் வாழும் நாடுதான் இவர்களுக்கு சரி, இனி இவர்கள் அதையாவது கேட்கட்டும்

ஒரு சாதி மட்டும் வாழும் நாடு சாத்தியமா என்றால் நிச்சயம் இல்லை

இங்கு எல்லா நாட்டு சாதியும் கலந்து கிடக்கின்றது

தமிழகத்தில் தமிழக சாதி மட்டும் இல்லை, இங்கு எல்லா நாட்டு சாதியும் கலந்து கிடக்கின்றது

அதில் ஐரோப்பிய சாதி, அரேபிய சாதி, ஆப்கன் சாதி என எல்லாமும் உண்டு

அப்படி இன்னொரு சாதி இங்கே கலந்திருக்கின்றது அது இலங்கை சாதி

ஆம் சிங்கள அடிமைகளை இழுத்து வந்து காவேரி கரைகளை பலபடுத்தினான் கரிகாலன் என்கின்றது வரலாறு

அந்த அடிமை கூட்டம் எங்கே போயிற்று?

ஈழ வெற்றியின் அடையாளமாக அனுராதபுரத்து அடிமைகளை இழுத்து வந்து தஞ்சை கோவிலை கட்ட பயன்படுத்தினான் ராஜராஜன் என்கின்றது அவன் காலத்து செய்தி

அந்த அடிமை கூட்டம் எங்கே போயிற்று?

எகிப்தில் யூத இனத்தை மோசே மீட்டது போல இந்த அடிமைகளை இலங்கையில் இருந்து யாரும் வந்து மீட்கவில்லை

நிச்சயம் அவை திரும்ப செல்லவில்லை,

ஆக இங்கேதான் கலந்திருக்கின்றது, அவற்றில் சிலதான் இப்பொழுது அவனை விமர்சிக்கின்றோம் என களமிறங்கியிருக்கலாம்

ஆம் அவைகளின் புத்த அபிமானத்தையும், ஒருமாதிரி சீறுவதையும் கண்டால் அவை இலங்கையில் இருந்து பிடித்துவரபட்ட அடிமை கூட்டங்களின் வாரிசே

அவைகளுக்கு இங்கே நிலம் எங்கிருந்தது? அவற்றை எப்படி ராஜராஜன் பறித்திருக்க முடியும்?

இனபாசத்தின் படி அவற்றை சிங்களினிடமே திருப்பி அனுப்புவதுதான் சரி

புத்தன் கண்ட சமத்துவத்தை அனுராதபுரத்தில் அவை நிலைநாட்டிவிட்டு அங்கேயே வாழட்டும்