“வாக்கிங்”

இப்பொழுதெல்லாம் எது அதிகரிக்கின்றதோ இல்லையோ ஆளாளுக்கு நடப்பது அதிகரித்துவிட்டது, காலையோ மாலையோ யாரை அழைத்தாலும் “வாக்கிங்” என சொல்வது வாடிக்கையாகிவிட்டது

சிலநாட்டு அரசாங்கங்கள் அதை வலியுறுத்துகின்றன, மக்கள் மேல் அவ்வளவு அக்கறை

பயமுறுத்தும் நோய்கள், உடல்பருமன் சிக்கல்கள் இன்னும் ஏகபட்ட அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி ஒரு கூட்டமும், எல்லோரும் செல்வது போல் நாமும் செல்லவேண்டும் என்றொரு கூட்டமும் செல்கின்றது

வீட்டில் கணவனுக்கோ மனைவிக்கோ கொஞ்சநேரமாவது விடுதலை வேண்டாமா? என கருதி செல்வோரும் உண்டு

நாய்குட்டி வாக்கிங் எல்லாம் நாய்க்காக செய்யும் தியாகங்கள், நாய்க்கு கொஞ்சம் தனக்கு கொஞ்சம் என நடக்கும் நடைகள்

நாம் அடிக்கடி காணும் அந்த பூங்காவினை சுற்றி காலையும் மாலையும் நடையோ நடை என நடப்பார்கள், 15 வயதில் இருந்து 90 வயது வரை எல்லா வயதும் உண்டு

சுற்றி சுற்றி வருவார்கள், 10 , 20, அல்லது30 ரவுண்டு வரை செல்லும், கையில் சிலர் மீட்டர் பொருத்தி செக் செய்து கொள்வார்கள், சிலர் பாட்டு கேட்டு நடப்பார்கள், சிலர் பாடிகொண்டே நடப்பார்கள்

நமக்கு நடப்பது சுத்தமாக பிடிக்காது, நடக்கது நடக்கட்டும் என பெஞ்சில் அமர்ந்துவிடுவேன். ஏதும் கொடியிடை பிடிநடை சீனத்தியினை கண்டால் மட்டும் மனம் போகும் போக்கில் கால் போகும், ஆனால் நிச்சயம் எதிர் திசையில்தான் நடக்கவேண்டும் அப்பொழுதுதான் கடிகார முள் போல ரவுண்டுக்கு ஒருமுறை பார்த்து புன்னகைக்கலாம்

சீன மங்கையரின் இடுங்கிய கண்களோடு கூடிய மஞ்சள் புன்னகை அவ்வளவு அழகு, பல்லாயிரம் கிலோ கலோரியினை ஒரே நொடியில் எரிக்கும் ஆற்றல் அதற்கு உண்டு

அவர்கள் நடக்காத பூங்கா வெறுமையானது
என்பதால் தவம் செய்யும் புத்தர் நிலையில் அமர்ந்துவிடுவது வழக்கம், பலர் நடந்து கொண்டிருந்தனர் சிந்தனை மேலோங்கிற்று

நிச்சயம் நடப்பது உடலுக்கு நல்லது, ஏகபட்ட உடல் சிக்கல்களுக்கு அது தீர்வு

இன்று டாக்டர் , பரிசோதனை, கலோரி, சர்க்கரை, ரத்த அழுத்தம் என பயமுறுத்தி நடக்க வைக்கின்றார்கள். நடக்காவிட்டால் செத்துவிடுவாய் என்ற பயமுறுத்தல் இன்று இருக்கின்றது.

ஆனால் அன்று?

இப்படி சர்க்கரை அது இது என மிரட்ட வழியில்லை, ஆனால் சமூகம் நடந்தாக வேண்டும். இல்லாவிட்டால் நோய் பிடித்து நோஞ்சான் சமூகமாக மாறும்

இதனை அன்றே கணித்து முன்னோர்கள் ஏற்படுத்தியதுதான் ஆலயத்தை சுற்றி வந்து வணங்குவது

ஒவ்வொரு இந்து ஆலயமும் மகா பிரமாண்டமாய் அமைந்து சுற்றி வந்து வணங்க வீதிகள் போல பிரகாரமும் அமைத்தது அதற்காகத்தான்

கிரிவலம் வலம் வருதல் என்பதெல்லாம் இந்த ஏற்பாடே..

நடப்பது நல்லது என சொன்னால் அக்கால சமூகம் நிச்சயம் நடக்காது, ஆனால் கோவிலை சுற்றி நடந்தால் கடவுள் அருள் பெறுவாய் என சொன்னால் நடக்க வாய்ப்பு உண்டு

ஆலயத்தை சுற்றி சுற்றி வந்து வணங்க வேண்டும் என்பதில் பக்தி முயற்சி இருக்கின்றதோ இல்லையோ உடலை வலுவாக்கும் அறிவியில் இருந்தது

ஒரே சிந்தனையில் பல நிமிடங்கள் தொடர்ந்து ஆலயத்தை சுற்றும் பொழுது மனமும் உடலும் பலமாகின்றன‌

கர்ப்பகிரகத்தை சுற்று, கொடிமரத்தை சுற்று, ஆலயத்தை சுற்று என அக்காலத்தில் இருந்த வழிபாட்டு முறைகள் எல்லாம் இன்றைய “வாக்கிங்” சிஸ்டத்தின் முன்னோடி

அரசமரத்தை சுற்றினால் பெண்கள் கர்ப்பம் தரிக்க என்ன வாய்ப்பு? என சில பகுத்தறிவாளர்கள் கேட்கலாம்

அரசமரம் வீட்டு அருகில் வளராது தொலைவில்தான் இருக்கும், அங்கு நடந்து சென்று சுற்றி சுற்றி வருவது இந்நாளைய “வாக்கிங்”

சும்மா நட என்றால் ஒரு பயலும் நடக்கமாட்டான் என்பதால் அந்த அறிவுடை சமூகம் ஆலயம், கடவுள், பக்தி என மிரட்டி நடக்க வைத்தது

அந்நாளைய மன்னர்களும் மிக பிரமாண்ட ஆலயங்களை அமைத்தார்கள், அதில் ஒரு சுற்று சுற்றி வந்தாலே உடலுக்கு மிக நல்லது எனும் அளவு அவை பிரமாண்டம்

உள் பிரகாரம், வெளிபிரகாரம் ஆலயத்தை சுற்றிவர வழிகள் என அவர்களும் மிக மிக கவனமாக அதை வடிவமைத்தார்கள்

ஏன் பிரமாண்ட ஆலயங்களை அமைத்தார்கள் என்றால் நடை உடற்பயிற்சி அதில் இருந்தது, நடந்தாக வேண்டும்

மலைமேலும் அவர்கள் ஆலயம் வைத்த தத்துவம் அதுவே, குன்றுகள் மேல் ஆலயம்வைத்து மலையேறி வர சொன்னார்கள், இன்றைய மலையேறும் உடபயிற்சி அன்றே செய்யவைக்கபட்டது

இன்று அரசுகள் பூங்காக்கள், நடக்கும் மைதானம் என செல்லும் செயலை அன்றே ஆலய வளாகம் என அமைத்து தந்தனர் மன்னர்கள்

இன்று நடந்துவிட்டு உடலை நெளித்து பல பயிற்சிகளை செய்யும் நடைமுறை, இந்துக்கள் ஆலயத்தை சுற்றி வந்து வணங்கி அங்க பிரதட்சணம் வரை செய்யும் பல விஷயங்களின் சாயலே

வாங்கிங் செல்ல காலை மாலையே சிறந்தது, அந்த சூரிய கதிர்கள் உடலுக்கு நல்லது என சொல்கின்றது இன்றைய மருத்துவம்

அதை அன்றே சொல்லி வைத்தது இந்துமதம், “காலையும் மாலையும் ஆலயம் சேர்” என்றார்கள்

இன்றைக்கு நாம் பார்க்கும் உடலை பேணும் முறையினை என்றோ பக்தி , ஆன்மீகம் என சொல்லி தந்திருக்கின்றது இந்துமதம்

அதன் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்து இன்றைய வாழ்வோடு ஒப்பிட்டால் ஒரு பெரும் நாகரீகமும் அறிவும்மிக்க சமூகம் அன்று வாழ்ந்திருப்பது தெரியும்

உடலை வலுபெற செய்யும் வழிபாடுகள் இந்துமதத்தை தவிர வேறு எந்த மதத்திலும் இல்லை, சில வகை புத்த மத பிரிவுகளில் உண்டு ஆனால் அவற்றின் மூலம் இந்துமதம்

இதைபற்றி சிந்தித்தால் சிந்தித்து கொண்டே இருக்கலாம்

இந்துமதம் மானிட உடல்நலனை சிந்தித்திருகின்றது, மன்னர்களும் அதை எப்படி எல்லாம் மக்களை பின்பற்ற வைக்க முடியுமோ அப்படி எலலாம் உதவியிருகின்றார்கள்

அந்த சமூகம் அறிவும் உடல் நலமும் பெற்றதுமாயிருந்திருக்கின்றது

இன்று பூங்காக்களிலும் கடற்கரையிலும் நடையாய் நடந்து விட்டு அதை “வாங்கிங்” என்றும் ஆலயத்தை சுற்றி நடக்க சொன்னால் அது மூடநம்பிக்கை என்பவனை என்ன சொல்வது?

அவனின் பகுத்தறிவு அவ்வளவுதான் என நகர்ந்துவிட்டு செல்ல வேண்டியதுதான்

நிச்சயம் இந்துமதம் ஒரு கடல் ஏகபட்ட விஷயங்களை தன்னுள் அடக்கிகொண்டு அது அமைதியாக அலைவீசுகின்றது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s