உங்கள் தரத்திலே நின்று கொள்ளுங்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கபட்டிருப்பது கண்டிக்கதக்கது, கற்றவர்கள் நிரம்பிய ஊர் என மார்தட்டும் நாகர்கோவிலில் இப்படி நடந்திருப்பது வருத்ததிற்குரியது

சல்லி பயல்கள் எல்லா இடத்திலும் இருப்பார்கள் என்பது பொது விதி..

நிச்சயம் ஜெயமோகன் மாபெரும் எழுத்தாளன் , அவரின் நாவல்களும் எழுத்தும் பயணகட்டுரையும் வரலாற்று எழுத்தும் கொண்டாடபடவேண்டியவை

பொதுவாக எழுத்தாளர்கள் விஞ்ஞானிகள் உலகம் வேறு, அவர்கள் வழக்கமான உலகில் இருந்து விலகித்தான் இருப்பார்கள், அப்படியாக சில குணாதிசயங்கள் அவருக்கு இருக்கலாம்

ஆனால் தமிழுலகின் மிகசிறந்த எழுத்தாளர் என்பது ஒப்புகொள்ள வேண்டிய ஒன்று..

அந்த மாபெரும் எழுத்தாளனை எவனோ அவரின் அருமை தெரியாமல் தாக்கியிருப்பது நிச்சயம் கொடுமை

அந்த மனிதனின் அறிவுக்கும் சிந்தனைக்கும் அற்புதமான எழுத்துக்கும் உரிய மரியாதை கொடுக்கபட்டே தீரவேண்டும்

அறிவாளிகளை, சிந்தனையாளர்களை சொந்த ஊரில் மதிக்கமாட்டார்கள் என்பது இயேசுநாதர் வாக்கு

இயேசுவின் வரிகளில் சொல்லலாம்

“பன்றிகளின் முன்னால் முத்துக்களை எறிய வேண்டாம்..” மிஸ்டர் ஜெயமோகன்…

உங்கள் தரத்திலே நின்று கொள்ளுங்கள், யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே என்பது கவியரசர் வாக்கு..

ரகசிய டீல் ?

ஆளும் கட்சியாக இருப்பதை விட எதிர்கட்சியாக இருக்கும் பொழுது நெருப்பாக இருப்பார் கலைஞர்..

ஒரு பிரச்சினை சிக்காதா? அட இல்லாவிட்டாலும் ஒரு பிடி கிடைக்காதா? என காத்திருப்பார். சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் இறங்கி சிக்சர் அடிப்பார்

அது காமராஜர், ராமசந்திரன், ஜெயா என யாராக இருந்தாலும் சரி, வாய்ப்பு கிடைத்தாலும் அவர் வீணாக்கியதில்லை

அப்படிபட்ட கலைஞர் இருந்த திமுகவுக்கு சென்னை குடிநீர் பஞ்சம் அட்டகாசமான வாய்ப்பு

ஆனால் திமுக ஏதோ அதிமுக பங்காளி போல் அமைதி காப்பதும், ஸ்டாலின் சிங்கப்பூர் செல்வதும் உதைக்கின்றது

சந்தேகம் வலுத்ததால் சொல்கின்றோம்

அதிமுகவுக்கும் திமுகவுக்கும் ஏதோ ஒரு ரகசிய டீல் ஓடுகின்றது ..

எல்லாம் தமிழக சாபம்

“காத்திருந்த கண்கள் ” என்றொரு படம் உண்டு, ஜெமினியும் சாவித்திரியும் வாழ்ந்திருப்பார்கள்

கதைபடி சாவித்திரி இரட்டை வேடம், ஜெமினிகணேசனுகு தங்கையினை காட்டிவிட்டு அக்காவினை மணம் செய்துவைத்துவிடுவார்கள்

பின் உண்மை தெரியும் ஜெமினி “வளர்ந்த கதை மறந்துவிட்டாள்” என பாடல் எல்லாம் பாடுவார், படம் எப்படியோ முடியும்

“பாலும் பழ”த்தில் கூட அப்படி இரண்டு சரோஜாதேவி உண்டு

இந்த இருபடங்களையும் பார்த்து காப்பி அடித்து கரு.பழனியப்பன் எடுத்த படமே “பார்த்திபன் கனவு”

சொந்தமாக சினிமா சரக்கு கூட இல்லாமல் பழைய படங்களை ஜெராக்ஸ் எடுத்த கரு.பழனியப்பன் எல்லாம் ஏதோ ஆபிரஹாம் லிங்கன் அளவுக்கு பேசிகொண்டிருக்கின்றார்

எல்லாம் தமிழக சாபம்

இதன் பெயர்தான் பெரியாரின் திராவிட புரட்சி

நீ சொல்வது தவறு அன்று தொழிலதிபர்களையும், நிலச்சுவாந்தாரையும் பிராமணன் ஆட்டிவைத்தான் பெரியார் அதை உடைக்கத்தான் பிராமணனை விரட்டினார் உனக்கு புரியாது

அடேய் அன்றே வெள்ளையன் ஆட்சிதானே, வெள்ளையனிடம் பிராமணணை விரட்ட சொல்லி அவர் கேட்க வேண்டியதுதானே ஏன் அவன் அவனிடம் சொல்லவில்லை

அது..ம்ம்.. ஆங் பிராமணனை பகைத்தால் வெள்ளையனால் ஆள முடியாது

ஏண்டா இது ஓவராக இல்லை? பிராமணனா நாட்டை வாள்முனையில் வெள்ளையனுக்கு கொடுத்தான், நாட்டை ஆளத்தான் பிராமணணை வெள்ளையன் வேலைக்கு வைத்திருந்தான், அவனுக்கு ஏதடா அதிகாரம்?

இல்லை இல்லை, பிராமணரே நாட்டை ஆண்டனர்

ஏது இங்கிலாந்து மகாராணியும், சர்ச்சிலும் பிராமணரா?

உமக்கு ஒண்ணுமே தெரியவில்லை

பின் ஏன் வெள்ளையனிடம் விடுதலை கேட்டார்கள்?

அதெல்லாம் பார்மாலிட்டி

சரி சுதந்திரத்திற்கு பின் என்ன இருந்தது?

மக்களாட்சி

மக்களாட்சியில் பெரியார் தொழிலாளருக்கு எத்தனை போராட்டம் நடத்தினார்? தின கூலிகளுக்கு என்ன வாங்கி கொடுத்தார்?

ம்ம் அவர் சமூக போராளி

கிழிச்ச போராளி போடா, அதிகாரம் யாரிடம் இருந்ததோ அவரை பெரியார் பகைத்ததே இல்லை, அது வெள்ளையன்,காமராஜர், அண்ணா, கலைஞர் ஆடை என தொடர்ந்தது அப்படியே பணக்காரனையும் பண்ணையாரையும் பெரியார் எதிர்த்ததாக சரித்திரமே இல்லை

இது என்ன புதுசா இருக்கு?

இதுதாண்டா உண்மை, ஊரில் இருக்கும் பணக்க்காரன் தொழிலதிபர் ஆட்சியாளன் என யாரையும் பெரியார் பகைத்ததில்லை, கோவிலில் மணியடித்த அல்லது அரசாங்க கூலியாக இருந்த அப்பாவி பிராமணனே அவர் எதிரி

ஏண்ணே அப்படி?

அந்த பிராமணன் திருப்பி அடிக்கமாட்டான், வேறு யாரிடமாவது வம்பிழுத்தால் அவன் நொறுக்கிவிடுவான் அல்லவா?

ஆமாம்

இதன் பெயர்தான் பெரியாரின் திராவிட புரட்சி போடா..

காலமே உன்னை இணைத்தது, காலமே பிரித்தது

இந்த வாழ்வு எவ்வளவுக்கு எவ்வளவு ரசனையானதோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிர்ச்சிகளையும் வழங்க கூடியது, ஒரே ஒரு செய்தி மொத்தமாக புரட்டி போட்டுவிடும்

ஏன் உலகிற்கு வந்தோம், பலநூறு கோடி மக்கள் கொண்ட உலகில் ஏன் இந்த பகுதிக்கு வந்து இவர்களை எல்லாம் சந்திக்கின்றோம்?, நம்மை நடத்தும் விதி எது என நமக்கு தெரியாது

அது முதலாம் வகுப்பில் அப்பா அம்மாவினை தாண்டி காலடி எடுத்து வைப்பதில் தொடங்குகின்றது, வாழ்வு முடிவது வரை அப்பயணம் தொடரின்றது

அப்படி சரியாக 9ம் வகுப்பில் அறிமுகமானான் அவன், அந்த கறுப்பான வகுப்பில் அவன் நல்ல நிறம். சிறுவயதில் போலியோவினால் ஒரு கால் ஊனம் என்றாலும் அதை தன் சிரிப்பாலே மறைத்துகொண்டிருப்பான்

முளைவிட்டு வளர்ந்த இரண்டு மாத வாழை கன்றுகள் போல‌ எல்லோரும் ஒன்றுபோல வகுப்பறையில் அமர்ந்திருந்த காலங்கள் அவை

அவனின் குறும்ம்பான பேச்சும், சிரித்த முகமும் பழகும் பாங்கும் அவனுக்கு ஒரு வட்டத்தை பெற்று கொடுத்தன‌

எல்லோரும் விளையாடினால் அவன் ஓரமாக அமர்ந்திருப்பான், ஆனால் அதில் கொஞ்சமும் சோகம் தெரியாது, தன் விதியினை தன் சிரிப்பால் வென்றுகொண்டிருந்தான்

12ம் வகுப்பு வரை அவன் நண்பன்

கல்லூரியில் அவன் என் விடுதிவாசி மற்றும் ஒரே வகுப்பு, கிட்டதட்ட 7 வருடம் தொடர்ந்து வந்த நட்பு அது

அவன் இளநிலையோடு படிப்பை முடித்து மும்பை சென்றான், அங்கு போராடினான்

செல்லும்பொழுது சாதாரணமாக சென்றவன் வரும்பொழுது நல்ல ஆளுமையாக மாறினான், அதிகம் படிக்கவில்லை என்றாலும் கணிப்பொறி உலகில் குறிப்பிடதக்க இடத்தை பிடித்தான்

ஜாவா உட்பட பல மொழிகளுக்கு புத்தகமும் எழுதினான், காலம் அவனுக்கு சாதகமாக மாறியது

நன்றாக கொட்டிகொடுத்த காலத்தில் அவன் மும்பையில் வீடு, கார் என செட்டில் ஆகிவிட்டான். அவனுக்கு காதலும் வந்தது அதுவும் கைகூடியது

கோடி அழகு கொட்டியது போல ஒரு பெண் குழந்தையும் காலம் அவனுக்கு கொடுத்தது

என்ன நடந்ததோ தெரியவில்லை, நன்றாக இருந்த அவன் வாழ்வில் மது அரக்கன் நுழைந்திருகின்றான். அவனும் எப்படி சிக்கினானோ தெரியவில்லை, சிக்கிவிட்டான்

ஒரு கட்டத்தில் அவன் மதுவினை விட்டிருக்கின்றான், ஆனால் அது அவனை விடவில்லை

அது உயிர்குடிக்கும் அளவு சென்று, நேற்று மாலை 38 மணிக்கு அவன் விதி முடிந்துவிட்டது

சிறுவயதில் இருந்தே தன் சோகத்தை எல்லாம் தன் சிரிப்பாலே கடந்த அவன், மதுவின் முன்னால் தோற்றிருக்கின்றான்

அவனுக்கு என்ன கவலை, அப்படி என்ன சிக்கல் என்பதை அவன் மனம் தவிர யாரும் அறியமுடியாது. எதையும் சிரிப்பாலே கடந்து செல்வது அவன் குணம்

ஆனால் மரணத்தை கடந்து செல்ல அவனால் முடியவில்லை

இப்பொழுதெல்லாம் இளவயது வாலிபர்களை குறிவைத்து தூக்கும் மது அரக்கனின் கைகளுக்கு அவனும் தப்பவில்லை

அது என்ன அரக்கன்?

விதி மதுவால் முடியும் என இருந்தால் அதை மாற்றும் சக்தி எவனுக்கு உண்டு.

அவனின் நினைவுகளில் இருந்து மீளமுடியவில்லை

அவனின் அந்த சிரிப்பு, அவன் பேசிய பேச்சுக்கள் அவனோடு உண்டு பழகி கணிபொறியினை தட்டிய காலங்கள்

உறங்காமல் தேர்வுக்கு படித்த நாட்கள், தியேட்டரில் சுற்றிய நாட்கள்

அந்த வாலிபத்திற்கே உரிய அந்த குறும்பான காலங்களின் நாட்கள்

அவன் அன்னையின் கரங்களால் நானும் அவனும் உண்ட நாட்கள்

இதுதான் சுற்றி சுற்றி வருகின்றது

அதை கொஞ்சம் மீறி எழுந்தால் அவன் மகளின் அந்த அழகிய முகம் மறுபடி வந்து நிற்கின்றது

அதை கண்டவுடன் உடைந்துவிட்ட அணை போல கண்ணீர் கொட்டுகின்றது

என்னருமை நண்பனே போய்வா,

மிக விரைவாய் வேலை தேடினாய், மிக விரைவாய் சம்பாதித்தாய், மிக விரைவாய் மரணத்தையுமா தேடவேண்டும்?

ஒவ்வொரு மரணமும் சில ஞானங்களை வழங்கும், உன் மரணம் முழு சோகத்தை தவிர ஒன்றையும் கொடுக்கவில்லை

நாம் ஒன்றாக உண்ட அந்த அறையில் உன்னை கிடத்தியிருக்கின்றார்களாம்

நாம் `சைக்கிள் ஓட்டிதிரிந்த வீதிவழியே உன்னை தூக்கி செல்ல போகின்றார்களாம்

நாமெல்லாம் கலாய்த்த ஆசிரியர்கள் உனக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகின்றார்களாம்..

போய்வா நண்பனே போய்வா

இனி எங்கு திரும்ப வருவாய்? நீயும் வரமாட்டாய், அந்த காலங்களும் வராது

உன் மகளின் முகத்தில் உன்னை கண்டு ஆறுதல் அடைவதை தவிர வேறு என்ன வழி

இனி அழ கண்ணீரும் இல்லை, கதறி அழ வார்த்தையுமில்லை

நீ வாழா வாழ்வெல்லாம் உன் மகள் வாழட்டும், உனக்கு கிடைக்க தவறிய எல்லா நிம்மதியும் ஆயுளும் அவளுக்கு அமையட்டும்

காலமே உன்னை இணைத்தது, காலமே பிரித்தது

என்றேனும் ஒருநாள் உன்னை காண்பேன், அதுவரை அமைதியாக தூங்கு..

மீதி அன்று அழுது தீர்க்கலாம்

சர்வதேச அரங்கில் மாபெரும் அவமானம்

சர்வதேச அரங்கில் மாபெரும் அவமானம் சென்னைக்கு ஏற்பட்டிருக்கின்றது. ஒரு நகரம் நீர் ஆதாரங்களுக்கு பெரும் வாய்ப்பு இருந்தும், முன்பே நிபுணர்கள் எச்சரித்தும் அரசு அலட்சியம் காட்டி இந்த பெரும் தலைகுனிவினை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஆம் ஒரு மாநகர் தண்ணீர் இல்லாமல் சிக்கி இயங்காமல் நிற்பது சர்வதேச அவமானம், அதாவது வறட்சி அல்லது நீர் ஆதாரங்கள் இல்லை என்பது வேறு விஷயம்

ஒரே ஒருவருடம் மழை பொய்த்தது என்பதற்காக தெலுங்கு கங்கை , வீராணம் என பல வாய்ப்புகள் இருந்தும் ஒரு மாநகரம் ஸ்தம்பிஸ்து நிற்பது என்பது ஆட்சியாளர்களின் அலட்சியம் அன்றி வேறல்ல‌

சென்னையினை சுற்றியுள்ள ஏரிகள் ஒரு காலத்தில் சோழனால் உருவாக்கபட்டவை பின்னாளில் நாயக்கரால் பராமரிக்கபட்டன‌

வெள்ளையனும் நன்றாக பராமரித்திருந்தான் அவன் காலத்தில் நீர்வழி போக்குவரத்தே இருந்தது

கடைசி பிரமாண்டமான சென்னை நீர்தேக்கம் சத்தியமூர்த்தியால் பூண்டியில் அமைக்கபட்டது

சென்னையில் திராவிட கட்சிகள் முதலி உள்ளாட்சிக்கு வந்தது, அதன் பின் காட்சிகள் மாறின‌

1970களில் இருந்து சென்னையின் ஆட்சிமுகம் மாறியது அதே நேரம் சென்னையின் மக்கள் தொகை எகிற தொடங்கியது

ஒலிம்பிக் வேகத்தில் அதற்கான மாற்றங்களையும் தொலைநோக்கு திட்டங்களையும் செய்ய வேண்டிய அரசுகள் அவ்வளவுக்கு ஒன்றும் செய்யவில்லை

இதில் கலைஞர் ஓரளவு பரவாயில்லை போக்குவரத்துக்காவது ஏதாவது செய்தார், சில வசதிகளுக்கு முயற்சித்தார்

இந்த எதிர்கோஷ்டி ஒன்று இருக்கின்றதே அது மகா மோசம்

ஆக 1970களில் இருந்து தொடங்கிய சிக்கல் இப்பொழுது பெரும் பூதாகரமாக வெடித்து நிற்கின்றது, இதுவரை ஆண்ட அல்லது ஆண்டுகொண்டிருக்கும் அரசுகளின் திறமை தோல் உரிந்து தொங்குகின்றது.

இந்த இடத்தில் நாம் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம் அதிமுக அரசு, ஆம் 8ம் வருடமாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் இவர்களே இந்த அவமானத்துக்கு காரணம்

உள்ளாட்சி தேர்தல் நடத்தாது, பெரும் தண்ணீர் சிக்கல் வரும் என தெரிந்தும் அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய்யாமல் உட்கட்சி பூசல், தேர்தல் என ஆட்சியினை தக்க வைக்கவே சிந்தித்தது என அவர்களே முழு காரணம்

ஒருவகையில் பழனிச்சாமி அரசு இதற்கு பொறுப்பேற்று பதவி விலகத்தான் வேண்டும், ஆனால் செய்வார்களா?

சென்னையில் நீர் இன்றி உணவகம் மூடலாம், ஐடி நிறுவணங்கள் மூடலாம், மக்கள் காலி செய்கின்றார்களாம் எனும் செய்தி சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்தியாகின்றது

விமான பயணம் திட்டமிட்டவர்கள் கூட யோசிக்கின்றார்கள்

இது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தலாம், சென்னையின் பொருளாதாரம் பாதிக்கபடலாம்

சென்னையில் ஏற்படும் தொழில் முடக்கம் தமிழகத்திலே ஒருவித சுணக்கத்தை ஏற்படுத்தலாம்

பெரும் குழப்பம் ஆரம்பிக்கும் நேரமிது

கவனியுங்கள், இது தென்மேற்கு பருவமழை சீசன் நிச்சயம் சென்னைக்கு அதனால் தம்பிடி பிரயோசனமில்லை

சென்னைக்கான மழை ஐப்பசி கார்த்திகை அதாவது அக்டோபர் நவம்பரில்தான் வரும்

ஆக இன்னும் 4 மாதங்கள் கடும் சவால் காத்திருக்கின்றது, எங்கிருந்து நீர் கொணடுவந்து எப்படி காக்க போகின்றார்களோ தெரியாது

இந்த மாபெரும் சிக்கலுக்கு யார் காரணம் என்றால் , அது உங்களுக்கே தெரிந்திருக்கும். நிச்சயம் அரசியல்வாதிகள் முட்டாள் அயோக்கியர்கள், பிழைப்பு ஒன்றுக்காக அரசியலுக்கு வருபவர்கள்

அவர்களை தேர்ந்தெடுத்த மக்கள் எவ்வளவு முட்டாள்களாக இருக்க வேண்டும்? இந்த ஆர்.கே நகர் எல்லாம் நினைவுக்கு வருகின்றது.

முட்டாள்கள் தேர்ந்தெடுத்த முட்டாள்களின் அரசு எப்படி இருக்கும்?

இப்படித்தான் இருக்கும்

இந்த சிக்கலில் இருந்து சென்னையினை மீட்கும் பொறுப்பு மத்திய அரசுக்கும் உண்டு, ஒரு வகையால் அந்த அரசே இதற்கான உடனடி தீர்வினை கொடுக்க முடியும்

மற்றபடி திமுக எல்லாம் தண்ணீர் லாரி ஓட்டி சீன் போட்டு அவசர உதவிகள் செய்யலாமே தவிர நிரந்தர தீர்வு கொடுக்க முடியாது, அவர்களிடம் அதிகாரமும் இல்லை

இந்த அதிமுக அரசுக்கு ஒன்றும் செய்ய தெரியாது

இந்தியாவின் மகா முக்கியமான நகரங்களுள் ஒன்று தண்ணீர் இன்றி முடங்கி நிற்கும் வேளையில் மத்திய அரசு களமிறங்கட்டும்

இங்கிருக்கும் கட்சிகளும் அரசியல் ஆதாயம் கருதாமல் அவர்களோடு இணைந்து பணியாற்றி போர்கால அடிப்படையில் சென்னையினை தொடர்ந்து இயங்க வைக்கட்டும்

காசுக்கு வாக்களித்தால் என்னாகும் என்பதை இனியாவது சென்னை மக்கள் உண்ரட்டும், ஆட்சி என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை சென்னை மக்களும் அரசியல்வாதிகளும் உணரட்டும்

நிச்சயம் சென்னை இதிலிருந்து மீண்டெழும்

ஆனால் மிக விரைவாக எழவேண்டுமே என்ற கவலை மேலோங்குகின்றது

கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் படியளக்கும் ஈசன், கல்லுக்கு மேல் இருக்கும் மனிதனுக்கு நீர்வார்க்கமாட்டானா?

நல்லவை மிக விரைவில் அரசுகள் மூலம் நடக்கட்டும், இதை தேசிய பேரிடராக அறிவித்து காரியங்கள் நடந்தாக வேண்டும்

சென்னை தன் வரலாற்றில் முதன் முறையாக தலைகுனிந்து நிற்கின்றது

அதன் ஏரிகளும் குளங்களும் அரசியல்வாதிகளின் அராஜகத்தால் பிளாட் போட்டு விற்கபட்டபின் வந்த அவல நிலை இது, சென்னைக்குள் மட்டும் என்றால் பரவாயில்லை சுற்றுபுறம் எங்கும் எல்லாவற்றையும் மூடிவிட்டால் என்னாகும்?

நிறைய இழந்தாகிவிட்டது, இப்பொழுது அதற்கான விலையினை திருப்பி கொடுக்கும் நேரம்

வொட்டுக்கு 5 ஆயிரம் என கொடுத்துவிட்டு மல்லாக்க கிடந்தால் நீருக்கு மட்டுமே ஒரு நாளைக்கு 5 ஆயிரம் ஆகும் என காலம் சென்னை மக்களுக்கு செவிட்டில் அடித்து சொல்லியிருக்கின்றது

இதை எல்லாம் பார்க்கும்பொழுது ஒரு ஏக்க பெருமூச்சு வருகின்றது

மொழிவாரி மாநிலங்கள் பிரியும்பொழுது சென்னையினை ஆந்திராவுக்கு கொண்டு செல்ல பார்த்தார்கள் தெலுங்கர்கள், நாம் விடவில்லை

ஆனால் இன்று அவர்களிடம் இருந்தால் கூட நன்றாய் இருந்திருக்குமோ என தோன்றுகின்றது

பெங்களூர் ஐதரபாத் விசாகபட்டினம் என அன்று சிறு நகரங்களாக இருந்தவை எல்லாம் இன்று எல்லா வசதிகளுடனும் எதற்கும் தட்டுபாடு இன்றி பரந்து விரிகின்றன‌

அருமை சென்னையோ இப்படி நாசமாயிற்று என்றால் என்ன காரணம்?

அவர்கள் தேசியத்தில் இருந்தார்கள், இருகின்றார்கள் வாழ்கின்றார்கள்

நாம் திராவிடம், மாநில சுயாட்சி என என்னவெல்லாமொ பேசி நாசமாகிவிட்டோம்

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றால் கொதிப்பார்கள்

உண்மையான திராவிட சிந்தனையிலா வந்தோம் இல்லை அது பூசிய சினிமாவால் இங்கு ஆட்சிக்கு வந்தது திராவிடம்

அந்த வேடம் கலைகின்றது, உண்மை விளங்குகின்றது அவ்வளவுதான் விஷயம்

சென்னை மக்கள் மிக விரைவில் மீண்டெழ பிரார்த்திப்போம், இந்த மாபெரும் அவமானம் மிக விரைவில் துடைக்கபடட்டும்

மாஸ் ஆடியோ