இன்றைய துளிகள் 17/06/2019

ஜெயமோகனும் பெட்டிகடைகாரனும்

ஜெயமோகனும் பெட்டிகடைகாரனும் வாய்சண்டையில் முதலில் ஈடுபட்டார்கள் என்கின்றது ஒரு கோஷ்டி

ஆனால் ஒரு பயலும் அவர்கள் என்ன வார்த்தையில் திட்டி கொண்டார்கள் என சொல்லவே இல்லை

நாரோயில் (நாகர்கோவில் )மக்கள் சண்டையிட்டு கொண்டால் கேட்கவே ரசனையாக இருக்கும்

அந்த வார்த்தைகளுக்கு பாதிதான் அர்த்தம் புரியும் என்றாலும் அப்படி ஒரு ஸ்லாங்கில் ஆக்ரோஷமாக திட்டி தீர்ப்பார்கள்

அங்கிள் சைமன் எல்லாம் அவர்கள் முன் நிற்க முடியாது, அலறி அடித்து ஓடிவிடுவார்

“தள்ளைய..” என தொடங்கி தாயோழி என வளர்ந்து … எங்கெல்லாமோ போகும்.

வாத்சாயனர் நாகர்கோவில் பக்கம்தான் பிறந்திருப்பாரோ என்ற அளவு யோசிக்க செய்யும் வார்த்தைகள் அவை

.உலகத்திலுள்ள மொத்த கெட்டவார்த்தையும் அந்த ஒரு ஊருல அடங்கும்ணா சும்மாவா?

அந்த சண்டையினை கேட்டவர்கள் யாராவது சொன்னால், காது குளிர கேட்கலாம்…

Happy Fathers Day….

“யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் 
யானும் நீயும் எவ்வழி அறிதும் ..”

விஷால் பல பெண்களை சீரழித்தார் நடிகை ஸ்ரீரெட்டி புகார்

சினிமா உலகில் வாய்ப்புகளை மிக கச்சிதமாக பயன்படுத்தும் நடிகை அம்மணி ஒருத்திதான்

எப்பொழுது யார்மேல் எந்த குண்டை வீசவேண்டும் என அவருக்கு கனகச்சிதமாக தெரிகின்றது

ஜெகமோகன் ரெட்டி தப்பியதே தகப்பன் செய்த புண்ணியம் போல..

இதோ அட்டகாசமாக விஷால் மீது ஏவிவிட்டார்கள், இனி விஷால் அலறி அடித்து ஓடுவதை தவிர வேறு வழியே இல்லை

இந்திய கிரிக்கெட் அணியை வாழ்த்தினார் அமித்ஷா

அறை நண்பன் நேற்றே சொன்னான், “அண்ணாச்சி நாளைக்கி மோடி கண்டிப்பா இந்திய அணியினை வாழ்த்துவார் பாரும்..”

அட அட, நம்மை விட அவனுக்கு இந்திய அரசியல் நன்றாகவே தெரிகின்றது.

இனி அந்த மகானை சாதாரணமாக எண்ண கூடாது…

Advertisements

இச்சம்பவம் கூறும் சமூக நீதி என்ன?

தந்தையர் நாள் என உலகம் கொண்டாடிய நேரம் இப்படியும் ஒரு சோகம் நிகழ்ந்திருக்கின்றது

இதெல்லாம் தமிழ்நாட்டு கலாச்சாரங்களில் ஒன்று.

அவரும் கொஞ்சம் விவஸ்தை கெட்ட தகப்பனாக இருந்திருப்பார் போல, மொய்கணக்கை கேட்க இதுவா நேரம்?

அப்பொழுது போய் மொய் கணக்கு, மய் கணக்கு என்றால் சவத்து மூதிய தூக்கி போட்டு மிதிக்கமாட்டானா?

இச்சம்பவம் கூறும் சமூக நீதி என்ன?

அதாவது திருமணம் முடித்துவிட்டு முதலிரவு வைப்பதை விட, முதலிரவினை வைத்துவிட்டு தாலிகட்டினால் வரதட்சனை கொடுமையே இல்லை என்றாகிவிடும் போல..

“மகனே இன்னும் வரதட்சனை வரவில்லை, உள்ளே செல்லாதே..” என பெற்றோர் தடுத்தால் எந்த மகனும் அவர்கள் மண்டையினை பிளந்துவிட மாட்டானா?

அணையில் சீறும் வெள்ளத்தில் மின்சாரம் தயாரிப்பது போல, “சில வகை” வேகங்களை சமூக நீதிக்காக பயன்படுத்துவது ஒன்றும் தவறல்ல..

சாரா இப்பொழுது சிக்கலில்

சர்வ சக்தி படைத்த நாட்டின் பிரதமர் நேதன்யாகு அவரின் மனைவி சாரா

சாரா இப்பொழுது சிக்கலில் இருக்கின்றார், காரணம் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி சுவையாக தின்று தீர்த்துவிட்டாராம்

அம்மணி நம் வகை போலிருக்கின்றது, தேடி தேடி நாக்குக்கு சுவையானதை உண்டு கழித்திருக்கின்றது

ஆனால் “நான் யார் தெரியுமா? என் கணவனுக்கு டிரம்ப் வரை செல்வாக்கு உண்டு தெரியுமா?” என மிரட்டி உண்டிருக்கின்றது.

காக்கை குருவி எங்கள் சாதி என்பது போல உணவகம் இருக்குமிடமெல்லாம் அடித்து பிடித்து உருண்டு புரண்டு சாப்பிட்டிருக்கின்றது அம்மணி..

பாதிக்கபட்ட பலரும் சேர்ந்து வழக்கு தொடுத்ததில் அம்மணி 70 லட்சம் ரூபாய்க்கு கள்ள தீனி தின்றிருப்பது தெரிகின்றது.

வழக்கில் அம்மணிக்கு அபராதமும் அந்த பணத்தை திருப்பி கட்ட கால அவகாசமும் வழங்கி தீர்ப்பாகியிருக்கின்றது

நமது ஊரில் ஊழல் செய்து வீடு, கார், நகை, எஸ்டேட் என வாங்கி குவிப்பார்கள், இந்த அம்மணி அப்படியா செய்திருக்கின்றது?

பாவம் வாய்க்கு ருசியாக நன்றாக தின்றிருக்கின்றது, இதெல்லாம் அங்கு குற்றமாம்

இஸ்ரேல் அப்படித்தான் எந்த கொம்பனின் மனைவி என்றாலும் 1 பைசா என்றாலும் தப்பமுடியாது

மனைவியின் “உணவு ஊழல்” பற்றி கொம்பன் நேதன்யாகு இன்னமும் ஒன்றும் சொல்லவில்லை எனினும் கடன் அடைக்க வேண்டிய கஷ்டம் அவருக்கு

அம்மணி இவ்வளவு பெரும் உணவுபிரியையாக இருப்பது நமக்கே உற்சாகமாக இருக்கின்றது, இனி அவருக்கும் ஒரு சங்கம் தொடங்கலாம் என முடிவெடுத்திருக்கின்றோம்

யூதர்களும் மீன் விரும்பிகள் என்பதால், ஒருநாள் நமது மீன்குழம்பு விருந்துக்கு அவரை அழைத்தாக வேண்டும்

இது பற்றி உலக ஊடகங்கள் பரபரப்பாக விவாதிக்க, இதை முன் கூட்டியே உணர்ந்துதான் எங்கள் மோடி மனைவியினை பிரிந்து தனித்து நாட்டுக்காக வாழ்கின்றார் என கண்களை கசக்குகின்றது பாஜக கோஷ்டி

அவர்கள் என்ன?

இனி மோடியினை சந்தித்தால் நேதன்யாகு கூட அதைத்தான் நிச்சயம் நினைப்பார்..

மோடியினை வீழ்த்துமா ஐ.நா…

“முகிலன் விவகாரத்தை கையிலெடுத்த ஐ.நா.. மத்திய பாஜக அரசுக்கு அதிரடி உத்தரவு..மோடியினை வீழ்த்துமா ஐ.நா…”

இப்படி ஒரு கும்பல் கிளம்பிவிட்டது

ஐ.நாவின் இந்த உத்தரவு சென்னை குடிநீர் பஞ்சத்திற்கு உதவும் டாய்லெட் பேப்பருக்கு சமம் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் ஐ.நா தலையிடமுடியாது, 40 ஆயிரம் பேரை டினான்மன் சதுக்கத்தில் உலகறிய கொன்ற சீனாவின் மயிரை கூட ஐ.நா தொட்டதில்லை

சரி , முகிலனுக்கு ஐ.நா வந்துவிட்டது.ஐ.நா சூப்பர்.. ஐ.நா வந்துவிட்டால் அவ்வளவுதான் என குதிப்பவர்கள் யார் தெரியுமா?

இன்னமும் போர்குற்ற விசாரணை என ராஜபகசேவினை தொட முடியாத ஐ.நாவினை நேற்றுவரை கரித்து கொட்டி அது பயனற்றது என சொன்ன கோஷ்டிதான்

நேற்றுவரை திருட்டு ஐ.நாவாக இருந்த அமைப்பு இன்று இவர்களுக்கு புனிதமாகிவிட்டது.

ராஜபக்சேவினையே தொடமுடியா ஐ.நா இந்தியாவினை தொட்டுவிடுமா என கேட்டால் சத்தமே இல்லை

வீரனின் கொட்டாவி

பாகிஸ்தான் கொந்தளித்து ஆடிகொண்டிருக்கின்றது, இனி பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியாதான் அடைக்கலம் கொடுக்க வேண்டி இருக்கும் போல‌

இந்தியாவுடன் தோற்றதற்கு அங்கு கையில் எதைஎல்லாமோ தூக்கி வைத்து ஆடி கொண்டிருக்கின்றார்கள்.

நமக்கு தெரிந்த பாகிஸ்தானி நண்பர் கேட்டார், கோலி அவுட் இல்லையே ஏன் மறுப்பு சொல்லாமல் போய்விட்டார்?

நாம் சொன்னோம் “உங்கள் அணியினை பார்க்க பாவமாய் இருந்ததாம், ச்ச்சே இவர்களிடமா ஆடுவது அய்யோ பாவம் என அவராக கிளம்பிவிட்டாராம்”

மனிதர் பல்லை கடித்தார், ஏன் பல்லை கடிக்கின்றீர் , கொட்டாவி விடுவதல்லவா உங்கள் பாணி என்றேன். அவர் கண்கள் சிவப்பதற்குள் ஓடிவந்துவிட்டேன்.

பாகிஸ்தானும் அந்த கொட்டாவியில்தான் பற்றி எரிகின்றது

இந்தியா அடித்து நொறுக்கும் பொழுது நீங்கள் கொட்டாவி விட்டீர்களா படுபாவிகளா உங்களை ஊருக்குள் விடமாட்டோம் என திரண்டு நிற்கின்றது பாகிஸ்தான்.

அந்த வீரனின் கொட்டாவி பெரும் சிக்கலாயிற்று, அவரோ நான் பர்கர் தின்றதால் வந்த வினை என்கின்றார்,

ஆனால் நம்பத்தான் யாரும் தயாராக இல்லை

12ம் வகுப்பு கணக்கு பாடத்தை கண்டால் கொட்டாவி விடும் மாணவன் போல அவருக்கு கொட்டாவி வந்திருக்கின்றது, அவர்தான் என்ன செய்வார் பாவம், ரோஹித் சர்மா பின்னால் பந்தை அனுப்பினால்தானே அவருக்கும் வேலை இருக்கும்?

சும்மா நின்றால் தூக்கம்தான் வரும், எப்படியோ அவன் பாகிஸ்தான் திரும்பினால் அவ்வளவுதான்

அதனால் அவன் இந்தியா வரலாம், இந்தியா அவனை பர்கரோடு வரவேற்று அடைக்கலம் கொடுக்கலாம்..

அவனும் பாகிஸ்தான் தூதரகத்தை பார்த்து கொட்டாவி விடலாம்..

இனி தேசம் செழிக்கும்

நிச்சயம் இது மாபெரும் சாதனை, எங்கெல்லாமோ நூல்பிடித்து மிக சரியாக இலங்கையினை எச்சரித்து அங்கும் வெடித்தபின் இங்கிருக்கும் மிச்ச மீதிகளை பிடித்திருப்பது வாழ்த்துகுரிய விஷயம்

ஆனால் தமிழக பத்திரிகைகள் அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போலவும், ஏதோ கோழிதிருடன் 3பேரை பிடித்தது போலவும் முடித்துகொண்டன‌

டிவிக்கள் அதுபோக்கில் விவாதம், சமையல்குறிப்பு என தன் ஜனநாயக கடமையினை செவ்வனே செய்கின்றன‌

தமிழகம் பொதுவாக அமைதி பூங்கா, இதற்கு முதல் சவால் தமிழ்தேசிய இயக்கங்கள் எனப்படும் புலிகளின் ஒட்டுகுழுக்களால் இங்கு வந்தது

நக்சலைட்டுகளை இங்கு ஒடுக்கிய காவல்துறை அவர்களையும் ஒடுக்கியது

ஆனால் 1987க்கு பின் புலிபயங்கரவாதம் வந்தது, திமுக அதனை ஆதரித்தது, அது ராஜிவ் கொலையில் முடிந்தது அதன் பின் புலிபக்கம் திமுக செல்லவில்லை

ஆனால் இஸ்லாமிய தீவிரவாதபக்கம் கலைஞர் தலைகாட்டவே இல்லை, விளைவு 1998ல் கோவையில் வெடித்தது

அதன் பின்பும் தீவிர நடவடிக்கை என இல்லை 
அத்வாணி மயிரிழையிலே இங்கு தப்பினார்.

இங்குள்ள வாக்கு வங்கி அரசியல் அப்படி, அவமானமான அரசியல்

ஜெயா காலத்தில் சில விஷயங்கள் கடுமையாயின அதில் முக்கியமானது இமாம் அலி போன்றவர்கள் சுடபட்டது

ஜெயா ஒருநாளும் பாதுகாப்பு விஷயங்களில் சமரசம் செய்ததில்லை, திமுக அதனை செய்தது பின்பு சூடுபட்டது

மத்தியில் காங்கிரஸ் அதைவிட மோசம்

2001ல் உலகநிலை மாறும்பொழுதே இந்தியாவும் அதற்கேற்ப மாறியிருந்தால் 2008 மும்பைதாக்குதல் நடந்திருக்காது

ஆனால் மோடி அரசு உலக அளவில் கடும் வலைப்பின்னல் நாடுகளுக்கிடையான தகவல் பகிர்வு என பல நடவடிக்கைகளை எடுத்து செய்யவேண்டியதை செய்கின்றது

அப்படித்தான் இந்த சதி முறியடிக்கபட்டிருக்கின்றது

இல்லையேல் ஓர்நாளில் இங்கு ஆலயங்களில் வெடித்திருக்கும் பலநூறு பேர் செத்திருப்பார்கள்

அத்தோடு விஷயம் முடியுமா?

பெரும் கலவரம் வரும், ரத்த ஆறு ஓடும். இறுதியில் இந்துத்வா வெறி என முடித்திருப்பார்கள்

பெரும் ஆபத்தை முளையிலே கிள்ளிவிடுவதுதான் நல்ல ஆட்சி, அவ்வகையில் இந்த ஆட்சி சாதித்திருக்கின்றது

அன்றே காங்கிரஸும் திமுகவும் விழிப்பாக இருந்திருந்தால் பல தாக்குதல்களை தடுத்திருக்கலாம், அவர்களும் தயாராக இருந்தார்கள் ஆனால் வாக்கு வங்கிங்கிக்கு அஞ்சினார்கள்

இந்த அரசு அஞ்சவில்லை, ஏனெனில் அது அவர்களிடம் நிரம்ப இருக்கின்றது

நாம் முன்பே சொன்னோம் ராகுல் தோற்க முதல் காரணம் பாதுகாப்பு நிரம்ப வேண்டிய நாட்டில் பாதுகாப்பு சட்டங்களை தளர்த்துவோம் என்பது, மக்கள் அதற்கு ராகுலின் மண்டையிலே தேர்தலில் அடித்தார்கள், வாழ்க மக்கள்

இதோ மதுரையிலும் கோவையிலும் அள்ளியிருக்கின்றார்கள். இதை மணிரத்னமும் கமலஹாசனும் திரையில் சொன்னபொழுது பொங்கிய அந்த கோஷ்டியினை இப்பொழுது காணவே இல்லை

வரமாட்டார்கள், வரவே மாட்டார்கள். வந்தால் அவர்களும் உள்ளே செல்வார்கள்

நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கை இது

ஒருவேளை தமிழகத்தில் சதிகாரர்கள் திட்டம் வென்றிருந்தால் யாரெல்லாம் பலியாகியிருப்போமோ தெரியாது, ஆனால் இப்பொழுது காப்பாற்றபட்டிருக்கின்றோம்

அவ்வகையில் பிழைத்தோர் சார்பாக அரசுக்கும் , பாதுகாப்பு அமைப்புகளுக்கும் , கண்ணுக்கு தெரியாத தெய்வங்களாகிய உளவாளிகளுக்கும் கண்ணீர் நன்றிகள்

இந்த திராவிடம், தலித்தியம், சமூக நீதி இவை எல்லாம் ஒரு நாட்டையும் நாட்டுமக்களையும் காக்க முடியாது

அந்த தத்துவத்தால் குழப்பம் விளைவிக்க முடியுமே அன்றி தீர்வு சொல்லமுடியாது.

ஒரு நாடு பாதுகாப்பாக இருக்க, மக்கள் நிம்மதியாக வாழ இரும்பு கோட்டை மாதிரியான ஆட்சியும் காவலும் வேண்டும்

அதுதான் இப்பொழுது நடக்கின்றது, இம்மாதிரி சதிகார கும்பல் சிக்குகின்றது, இனி தேசம் செழிக்கும்.

வந்தே மாதரம்..ஜெய்ஹிந்த்

போடா ஆரிய அடிவருடி, திராவிட எதிரி

15 வருடமாக மத்தியில் திமுக இருந்ததே, காவேரியில் திமுக நீர் பெற்று கொடுத்ததா?

வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது

இந்த நீட் தேர்வு

வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது

இந்த ஹைட்ரோ கார்பன்?

வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது

இந்த 10% இட ஒதுக்கீடு?

வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது

இதற்கு தமிழகம் நீதிபதிக்கே வாக்களிக்கலாமே உங்களுக்கு எதற்கு?

ஏன் அதிமுக பற்றி பேசமறுக்கின்றாய்

அடேய் அவனுக மகா மோசம், அவனுகள விட நீங்க மோசம், ஒரு பிரச்சினையும் உங்க ரெண்டு கட்சியாலுமே தீர்க்கமுடியாது, எல்லாம் சும்மா உதார் அரசியல்

போடா ஆரிய அடிவருடி, திராவிட எதிரி