வாஞ்சிநாதன்

நெல்லை மண் என்பது உணர்ச்சியும், மானமும், அறிவும் நிரம்பியது.

தமிழ் பிறந்ததும் அங்கேதான். அகத்தியன் தொல்காப்பியன் வாழ்ந்ததும் அங்கேதான். பாரதி, வையாபுரி பிள்ளை, சேதுபிள்ளை என எத்தனையோ முத்திரைகள் தமிழுக்காய் வந்ததும் அங்குதான்

பாண்டியன் காலம் தொட்டு அது வித்தியாசமான பூமி, ஏன் நாயக்கன் வரும்பொழுது கூட அவன் ஆட்சி நெல்லையில் பெரும் தாக்கமாக இல்லை

நெல்லை அவர்களுக்கு சவால் கொடுத்திருக்கின்றது

நாயக்கமன்னர்களுக்கே வரிகொடுக்காமல் போராடிய பாண்டியமன்னரின் வாரிசுகள் உண்டு, இறுதிவரை அவர்கள் நிலைத்ததும் உண்டு.

ஆர்காடு நவாபிற்கே வரிசெலுத்தாமல் பின்னாளில் ஆங்கிலேயரிடம் போராடிய பூலித்தேவன் ஆகட்டும், எமது உரிமைகளில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை என சீறிய கட்டபொம்மன் என ஒரு வரிசை உண்டு.

அந்த வரிசையில் வந்தவர் வாஞ்சிநாதன்.

அதாவது வாஞ்சிநாதன் என்பவர் செங்கோட்டைகாரர், சுதந்திரபோராட்டகாரரில் ஒருவராக அறியபடுபவர், மற்றபடி கேப்டனின் “வாஞ்சிநாதன்” படத்திற்கும் அவருக்கும் சம்பந்தமேயில்லை.

அவரது காலத்தில் அதாவது காந்திக்கு முந்தைய காலத்தில் ஒருங்கிணைந்த போராட்டம் இந்தியாவில் இல்லை, ஆளாளுக்கு ஒரு முறையில் எங்கோ எப்பொழுதாவதோ போராடினார்கள். அதனை அடக்குவது வெள்ளையனுக்கு வெகு சுலபாமக இருந்தது.

ஆஷ் அயர்லாந்து பிரபுகுடும்பதுக்காரர், கலெக்டராக நெல்லைக்கு வந்தவர். வர்க்கபேதம் தெரியுமே அன்றி தீண்டாமை தெரியாது.

குற்றாலம் அருவியில் தாழ்த்தபட்டோருக்கு இருந்த கட்டுபாடுகளை நீக்கினார் என்பதும், தாழ்த்தப்ட்ட பெண்ணுக்கு அவசர உதவியாக உயர்சாதி தெருவின் வழியாக அழைத்துசென்றார் என்பதும் அவரின் இன்னொரு முகம்.

சில நல்ல விஷயங்களும் அவரிடம் இருந்திருக்கின்றன‌

அதாவது 1857க்கு பின் வெள்ளையர் இந்தியரை பிரிட்டன் அரசின் குடிமக்களாகத்தான் கருதினார்கள், அப்படித்தான் ஆட்சியும் செய்தார்கள்.

தென்னிந்தியாவில் சென்னைக்கு அடுத்து மிக முக்கியமான துறைமுகமாக அன்று அறியபட்டது தூத்துகுடி. அங்கு கப்பல்விட்டு வெள்ளையனை நஷ்டபடுத்தினார் வ.உ.சி.
உப்பையே விடாத வெள்ளையன் இந்திய கப்பலை விடுவானா?

பல சர்ச்சைகளுக்கு இடையே சிதம்பரம்பிள்ளை கைதுசெய்யபட்டார், போராட்டம் வெடித்தது அப்பொழுது நெல்லையின் கலெக்டர் ஆஷ் (ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷி சுருக்கமாக ஆஷ்,) வெள்ளையர் என்றால் நம்மவருக்கு துரை, ஆனானபட்ட முருகனை துரைமுருகன் ஆக்கியவர்கள், அவரை ஆஷ்துரை அக்கினார்கள்.

அவர் போராட்டத்தை கட்டுபடுத்த சுட சொன்னார், 4 பேர் பலி, நெல்லை அரண்டது. வ.உ.சி மேல் மரியாதை கொண்டவர்கள் 
எல்லாம் கொதித்தனர் அதில் ஒருவர்தான் வாஞ்சிநாதன்.

அவர் ஒரு குழுவில் இருந்தார், அது சுதந்திர இந்தியாவினை ஆதரித்தகுழுதான் ஆனால் கூடவே இந்துதர்மம், இது இந்து பூமி என்பதனை வலுகட்டாய கொள்கையாக‌ கொண்டிருந்தது.

வ.வே.சு அய்யர் என்பவர்தான் அந்தகுழுவின் பிராதானம். அந்தகாலத்திலே லண்டனில் பாரிஸ்டர் படித்தவர், பிரிட்டன் அரசுக்கு விசுவாசமாக இருப்பேன் எனும் பிரமாணத்தை சொல்ல மறுத்து பாரிஸ்டர் பட்டத்தை இழந்தவர், ஆனால் சகலவித்தைகளும் அறிந்தவர், அதில் சண்டைபயிற்சிகளும் உண்டு, துப்பாக்கி சுடுவதில் கெட்டிக்காரர். வாஞ்சிநாதன் இவரிடம் கற்றது ஏராளம் உண்டு.

இந்நிலையில் பிரிட்டனின் அரசர், அந்நாளைய உலக அரசர் ஜார்ஜ் இந்தியா வந்தார், மாதம் மும்மாரி இந்தியாவில் பொழிகின்றதா என‌ கேட்டுகொண்டிருந்த அவர் அன்றுதான் காண வந்தார். மும்பையின் புகழ்பெற்ற கேட் ஆப் இந்தியா அவருக்காக கட்டபட்டிருந்தது.

ஜார்ஜ்புஷ் வந்தாலே “திரும்பிபோ..” என கத்துவோம் அல்லவா? உலகாளும் மன்னர் வந்தால் அதுவும் போராட்டகாலத்தில் வந்தால் எப்படி? நாடெல்லாம் ஒரு பரபரப்பு உண்டாயிற்று, அது நெல்லையிலும் வந்தது. வாஞ்சியின் கூட்டம் ஒரு பெரும் எதிர்பிற்கு தயாராயிற்று. வ.உ.சி கைது மற்றும் இன்னும் சில காரியங்களால் ஆஷ் துரை குறிவைக்கபட்டார்.

திருவுளசீட்டு குலுக்கிபோட்டு வாஞ்சிநாதனை தேர்ந்தெடுத்தார்கள். அன்று கொடைக்கானல் செல்வதற்காக ரயிலில் மனைவியோடு சென்றார் ஆஷ். 
(அன்றும் சாரல்மழை பிந்தி தொலைத்திருக்கின்றது, இல்லை என்றால் குற்றாலத்திற்குதான் சென்றிருப்பாராம். கடும் வெயில்காரணமாக கொடைக்கானலுகு சென்றர்),

மணியாச்சி அன்றே ஒரு சந்திப்பு ஆனால் காட்டுபகுதி, அங்கு நின்றிருந்த ரயிலில் ஏறி ஆஷினை சுட்டுகொன்றார் வாஞ்சிநாதன். நடந்தது 17.06.1911

அதுவரை இந்தியாவில் ஒரு கலெக்டர் கொல்லபட்டதில்லை, அதுவே முதன் முதலானது (கலெக்டர் என்பது அன்றி மிக உச்ச பதவி), அக்கொலைக்கு பின்னாலும் இல்லை.

முதன்முதலாக ஆடிப்போனது வெள்ளை நிர்வாகம், அந்த அடியை கொடுத்தது நெல்லை மண், உலகமே அன்று திரும்பிபார்த்தது.

வாஞ்சிநாதன் அந்த இடத்திலே தற்கொலை செய்ய,அவரை சோதித்தபொழுது ஒரு கடிதம் சிக்கியது. கடிதம் எழுதாமல் செத்திருந்தால் இன்று பகத்சிங் அளவிற்கு கொண்டாடபட்டிருப்பார்,

ஆனால் கடிதம் “ஒரு தீண்டதகதவான ஜார்ஜ்மன்னர் ( அதாவது மாட்டுகறி உண்பவராம், பார்த்தீர்களா? அன்றே அது சர்ச்சைகுரியது 🙂 ) புனிதமான இந்திய தேசத்துக்கு வருவதை நாங்கள் எதிர்க்கின்றோம், அவனை ஒழிக்கும் பொருட்டு..” என்ற ரீதியில் இருந்து அவரை மதவாதி ஆக்கிற்று.

ஆனாலும் அந்த கடிதத்தில் வ.உ.சி கைதை கண்டித்து ஒரு வார்த்தையும் இல்லை என்பதுதான் விசித்திரம்.

ஆனாலும் ஆங்கிலேயர் பதிலடி பயங்கராமானதாய் இருந்தது, அந்த குழுவின் பெரும்பாலான அய்யர்கள் தற்கொலை செய்யுமளவு, கடும் மூர்க்கத்தை ஆங்கிலேயர் காட்டினார்கள்.

இந்திய எதிர்ப்பினை காட்டவேண்டிய வாஞ்சிநாதனின் வரலாறு, வருணாசிரம தர்மத்தை காக்க நடந்தபோராட்டமாக அவரின் கடிதம் மூலமே காட்டபட்டது.

ஆயினும் முதன்முதலாக ஒரு ஆங்கில கலெக்டரை கொன்று பிரிட்டனை அலறவைத்த நிகழ்வில் வாஞ்சிநாதன் வரலாற்றில் நிலைத்துவிட்டார்.

அந்த மணியாச்சி ஜங்ஷனுக்கு வாஞ்சிபெயரே சூட்டபட்டது, இன்னும் அந்த ரயில்நிலையத்தை கடக்கும் பொழுதெல்லாம் அவர் நினைவுக்கு வந்துதான் செல்வார்.

ஆஷ்துரை உடல் பாளையங்கோட்டை ஜாண்ஸ் கல்லூரி எதிரே உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யபட்டுள்ளது, சுருக்கமாக சொன்னால் ஒரு பெரும் வரலாற்று சம்பவம் அங்கு அமைதியாக தூங்கிகொண்டிருக்கின்றது.

இப்படியாக அன்னிய ஆதிக்க ஆபத்து எவ்வழி வந்தாலும் முடிந்தவரை போராடி பார்ப்பதுதான் நெல்லை குணம், அதன் மண்ணின் குணம் அப்படியானது.

குற்றாலத்தில் தன்னை கலெக்டர் அவமானபடுத்தினான் என கட்டபொம்மன் மனதில் அது விஸ்வரூபமெடுத்தது, செங்கோட்டைகாரனான வாஞ்சிநாதனுக்கு அது மனியாச்சியில் வெறியாய் முடிந்தது.

ஆனால் கட்டபொம்மனும்,வாஞ்சியும்,சிதம்பரனாரும் வீழ்ந்திருகலாம் ஆனால் அவர்கள் எதிர்த்த அந்த நோக்கம் பின்னாளில் நிறைவேறி வெள்ளையன் வெளியேறியது சரித்திரம்.

எல்லா ஆட்சியாளருக்கும் ஆட ஒரு காலம் உண்டு, அடங்கவும் ஒரு காலம் உண்டு.

அது உண்மையான நோக்கத்துகாய் போராடும் எல்லா போராளிகளும் ஆட்சியாளர்களால் வீழ்த்தபட்டாலும் காலத்தால் வீழ்த்தபடுவதே இல்லை.

இன்று வாஞ்சிநாதன் நினைவுநாள், அதாவது ஆஷ் கொல்லபட்டநாள். வருணாசிரமத்தை காக்கத்தான் ஆஷினை கொன்றதாக அவர் சொல்லியிருந்தாலும், வஉசிக்கு ஆஷ் கொடுத்த நெருக்கடிகள் ஏராளமானவை.

ஆங்கில அடக்குமுறையின் ஒரு வடிவமாகத்தா ஆஷ்துரை அந்நேரத்தில் அறியபட்டார்.

இந்தியாவில் கலெக்டர் கூட நிம்மதியாக இருக்கமுடியாது எனும் ஒரு பயம் இந்நாளில்தான் வெள்ளையனுக்கு உண்டாயிற்று. கலெக்டர் இல்லை என்றால் நிர்வாகம் ஏது? ஆட்சி ஏது? (இந்நாளில் கலெக்டரின் வேலை எல்லாம் கட்சியின் மாவட்ட செயலாளரே செய்துகொள்வது வேறு, ஆனால் வெள்ளையன் ஆட்சி வேறு)

மணியாச்சி ஜங்ஷனும், பாளையங்கோட்டை ஆஷ்துரை கல்லறையும் வெள்ளையனுக்கு மரணபயத்தை காட்டிய நெல்லையின் வரலாற்று அடையாளங்கள்.

இந்த தேசத்தின் சரித்திர சுவடுகள்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s