இன்றைய துளிகள் 18/06/2019

மோடியிடம் சொல்லவேண்டிய யோசனை

கடல்நீரை குடிநீராக்கும் புதுமையான திட்டத்தை இஸ்ரேல் சென்று பார்த்து அதனை இங்கேயும் கொண்டு வர வேண்டும் : தமிழிசை யோசனை

சரி அக்கா, இது ஒரே தேசம் அல்லவா? அந்த திட்டத்தை மோடியிடம் சொல்லி சென்னைக்கு கொண்டுவந்தால் கடல்நீர் குடிநீர் ஆகாதா?

மோடியிடம் சொல்லவேண்டிய யோசனையினை உங்களுக்கு நீங்களே சொல்லிகொண்டால் எப்படி?

என்னது?

தமிழச்சி உடைவகையினை கிண்டல் செய்வது மனித தன்மையே இல்லையா?

ஆஹான்..

இந்த ஊறுகாய் மாமி , “லூஸ் ஜாக்கெட் ” நிர்மலா என கலாய்த்ததெல்லாம் என்ன வகை?

அக்கா தமிழிசை என்ன பாவம் செயதது? அதை எப்படி எல்லாம் கலாய்த்தீர்கள்?

ஆக உங்களுக்கு ஒரு நியாயம் தமிழிசை அக்காவுக்கு ஒரு நியாயமா? இதுதான் திராவிட சமத்துவ நீதியா?

Advertisements

இருங்கடா இருங்க‌….

ஆக ஒரு பயவுள்ளையும் “இந்தியா வாழ்க” என சொல்லி பதவி ஏற்கவே இல்லை

இவ்வளவுக்கும் தேர்தலை நடத்தியது “இந்திய” தேர்தல் ஆணையம், இவர்களை எம்பி என சொன்னதும் அந்த “இந்திய” தேர்தல் ஆணையமே, கொஞ்சமேனும் நன்றி வேண்டாமா?

இதற்காகவே இவர்கள் பதவியினை ரத்து செய்து டெல்லியிலிருந்து நடந்து செல்லுங்கள் என விரட்டியிருக்க வேண்டும்…

பாராளுமன்றத்தில் மார்க்ஸுக்கும் பெரியாருக்க்கும் என்ன வேலை என்பதுதான் தெரியவில்லை..

ஏற்கனவே பெரியாரின் பூமியில் குடிக்க தண்ணீரில்லை, மார்க்ஸின் வங்கம் நாறி கிடக்கின்றது

தமிழகம் இன்னமும் நாசமாக வேண்டும் போல‌

எந்த பெரியார் டெல்லியினை , அந்த பாராளுமன்றத்தை அறவே வெறுத்தாரோ அங்கு சென்று “பெரியார் வாழ்க” என சொன்னால் இவர்கள் அறிவு எப்படி இருக்கும்?

இருங்கடா இருங்க‌….

நாளைக்கு எவனாவது படையெடுத்து வரட்டும் இல்லை வெள்ளம் போன்ற இடர்பாடு வரட்டும் பெரியாரும் மார்க்ஸும் உங்கள காப்பாற்றட்டும் என பிடித்து கொடுக்கின்றோமா இல்லையா என மட்டும் பாருங்கள்

ஜெயமோகன் இலக்கிய வேர்

ஜெயமோகன் மிக சிறந்த எழுத்தாளர் என்பதெல்லாம் இல்லை, அவரின் இலக்கிய வேர் மலையாளத்தில்தான் உண்டு

மலையாளிகளின் இலக்கிய படைப்புகள் பிரமாதமானவை, அவைகளில் சில‌ படமாக வந்து வெற்றி அடையும், நம் தமிழ்நாட்டில் அவை டப் செய்யபட்டு நம் ஹீரோக்களும் ஹிட் கொடுப்பார்கள்

செம்மீன் முதல் பாபநாசம் வரை நிறைய உண்டு

அந்த மலையாள இலக்கியங்களை, மலையாளம் அறிந்தவர் என்ற முறையில் ஆசான் ஆழபடிப்பார். பின் அதை தமிழுக்கு ஏற்றவாறு கொஞ்சம் வடிவமைப்பார்

தனக்கே உரித்தான சில சொற்களை புகுத்தி புதுமை செய்வார் அவரின் நாவல் ரெடி

அவரின் பெரும்பான்மையான கதைகள் மலையாள தழுவலே

திராவிட கட்சிகள் சோவியத்தின் கம்யூனிச கோட்ப்பாட்டினை ரகசியமாக உருவி அதில் மாற்றம் செய்து கொள்கை ஆக்கியது போன்றது ஆசானின் இலக்கிய உலகம்

அன்னார் ஏன் அடிக்கடி சர்ச்சையில் சிக்குகின்றார் என்றால் விஷயம் எளிது

அன்னாருக்கு உள்ளூர ஒரு பயமும் எரிச்சலும் அதிகம், நகைச்சுவை என்பது மருந்துக்கும் கிடையாது

ஒருவிதமான இறுக்கமான உலகம் அவருடையது, பா.ரஞ்சித் போன்ற சீரியசான மனிதர் அவர்

நகைச்சுவை உணர்வில்லா எந்த எழுத்தாளனும் கலைஞனும் உப்பில்லா பண்டம் போன்றவன் என்பது அவருக்கு தெரியவில்லை

“நயம்பட உரை” எனும் வாக்கியமே அவர் அகராதியில் இல்லை

நகைச்சுவை உணர்வு என்.எஸ் கிருஷ்ணனுக்கு போல் கலைஞருக்கு போல் ரத்தத்திலே வரவேண்டும், இடையில் புகுத்த முடியாது

ஆசான் ஜெயமோகன் மேல் எல்லோரும் புளிச்சமாவினை வீசி அடித்துகொண்டிருப்பது அதனால்தான்

மிக சீரியசான , சிரிக்க தெரியாத மனிதர்களுக்கு எல்லாம் சமூகம் சீரியசாக அடி கொடுக்கும்

ஆசானுக்கும் அதுதான் விழுந்து கொண்டிருக்கின்றது, ஆசானும் வழக்கம் போலவே சீரியசாக அழுது கொண்டிருக்கின்றார்

வேலு நாச்சியார்

வட இந்தியர்கள் தமிழகத்து வேலு நாச்சியாரை கொண்டாடாத வரை ஜான்சி ராணி பற்றி எழுதும் திட்டமே இல்லை

வேலு நாச்சியாரே ஜான்சி ராணிக்கு முன்னோடி, சிவகங்கையின் அந்த வீர பெண்புலி ஆங்கிலேயனை ஓட அடித்தகாலங்களில் ஜான்சியில் லட்சுமிபாய் பிறக்கவே இல்லை

என்று இத்தேசம் வீரமங்கை வேலுநாச்சியாரை பிரதானமாக கொண்டாடுகின்றதோ அதன் பின் ஜான்சிராணி பற்றி பார்க்கலாம்

வேலுநாச்சியாரின் வீரம் நிறைந்த போராட்டத்துக்கு ஜான்சி ராணி அருகில் கூட‌ வரமுடியாது

இந்நாட்டில் மக்கள் உயிரை காக்கும் ஒரே வழி..

இந்திய மாநிலங்களில் தனி சிறப்பு கொண்டது பீஹார்

அது மகத நாடு என அழைக்கபட்டது, மஹாபாரத காலத்திலே அது வாழ்வாங்கு வாழ்ந்திருந்தது

பவுத்தமும் சமணமும் அங்குதான் தோன்றின‌

புகழ்பெற்ற நாளந்தா பல்கலைகழகம் அங்குதான் இருந்தது

பாஹியானும், யுவான் சுவாங்கும் பல்லாயிரம் மைலுக்கு அப்பால் இருந்து அதை தேடிவந்து வணங்கினர்

குப்தர் முதல் அசோகர் வரை எத்தனையோ பொற்காலங்களை கண்ட பூமி அது

தரையில் கங்கையும் அதன் துணையாறுகளும் அதை செழிப்பாக்கின, தரைக்கு அடியில் கனிமவளங்களும் அள்ளி கொடுத்தன‌

ஒன்றா இரண்டா அதன் வளம்?

எல்லாம் நிறைந்த பொன்விளையும் பூமியாக அது இருந்தது, அந்த பூமி அப்படி கொழித்தது

அதன் அருமை எல்லோருக்கும் தெரிந்தது போலவே பிரிட்டிசாருக்கும் தெரிந்தது, கல்கத்தாவினை தன் தலைநகராக கொண்டிருந்தாலும் பீகாரை தன் வர்த்தக பூமியாக மாற்றினான்

அதன் சுரங்கங்களும் வயல்வெளிகளும் அள்ளி அள்ளி கொடுத்தன‌

1900களின் கடைசியிலே தடுமாற தொடங்கியது பீகார்

அதன் செல்வம் குவிந்த அளவு கல்வி வளரவில்லை, அதன் தன்மை அதற்கு வழிவிடவுமில்லை

சுல்தான்கள் போன்ற மன்னராட்சியும் அதன் விதிப்படி அதை நாசமாக்கின‌

“கடல் இல்லா நாடு குடல் இல்லா உடலுக்கு சமானம்” என்பது போல துறைமுகம் இல்லா பீகார் சரிவினை தொடர்ந்தது

அதை தூக்கி நிறுத்துவார் இல்லை

விவசாயம் எல்லோர் வாழ்விலும் மண்ணை அள்ளி போட்டது போல அவர்கள் வாழ்விலும் போட்டது, ஆனால் மண்ணுக்குள் இருக்கும் கனிமம் அவர்களை வாழவைக்க போதுமானது, அதை செய்யவும் ஆளில்லை

கல்வியறிவு இல்லா மக்கள், ஆளாளுக்கு தலைவர் என கிளம்பிய கூட்டம், இன்னும் பல்வேறு கும்பல்களின் கூலிபடைகள் எல்லாம் சேர்ந்து அதனை அதல பாதாளத்தில் தள்ளின‌

விவசாய தோல்வியும் பரகாசுர கம்பெனிகளின் சுரங்கங்களும் அம்மாநில மக்களை நாசமாக்கின‌

வறுமையும் துயரமும் அவர்களின் வாழ்க்கை சொத்தானது

எந்த அரசும் அவர்களை உயர்த்தமுடியவில்லை எல்லாம் தோல்வியிலே முடிந்தன‌

வாழ்வாங்கு வாழவேண்டிய மாநிலம் அவர்கள் அறியாமையாலும் அமைவிட தன்மையாலும் தாழகிடக்கின்றது

அறியாமையே அவர்கள் எதிரி

இப்பொழுது அந்த சாபம் வாங்கிய மாநிலத்தின் கூடுதல் சாபமாக குழந்தைகள் கொத்து கொத்தாக மடிந்து சாகின்றார்கள்

மூளை காய்ச்சலுக்கு இதுவரை 115 குழந்தைகள் பலி

அந்த மொட்டுக்கள் செத்துவிழும் மருத்துவமனையின் பெயர் கிருஷ்ணா மருத்துவமனை

குழந்தைகள் ஒருநாட்டின் வரம், எதிர்காலம்

அட பீகார் அரசுக்குத்தான் அக்கறை இல்லை, மத்திய அரசவாது உடனே களமிறங்கியிருக்க வேண்டாமா?

நோயும் காலமும் யாருக்கு காத்திருக்கும்?

ஆட்டு மந்தையில் வரும் நோய்களால் சாகும் ஆட்டுகுட்டிகள் போல அக்குழந்தைகள் செத்துகிடக்கின்றன‌

ஏன் இப்படி ஆயிற்று நிலை?

தெற்கின் தன்மை வேறு, இங்கு வெள்ளையன் மன்னர் ஆட்சி அல்லாமல் நேரடியாக கவர்னர் மூலம் ஆண்டான்

அதனால் நவீன கல்வி முதல் மருத்துவமனை வரை அன்றே இங்கு அவனால் கொண்டுவரபட்டது

கடற்புற மாநிலம் என்பதும் தமிழ்நாட்டுக்கு கூடுதல் பலம், துறைமுகங்கள் இருந்ததால் பல வசதிகள் கிடைத்தன‌

வெள்ளையன் காலத்து வளமான பீகார் பின்னாளில் நாசமானது போல இங்கு ஆகவில்லை

காரணம் இங்கு வளர்ச்சி சீரான வேகத்தில் இருந்தது குறிப்பாக கல்வி வெள்ளையன் காலத்துக்கு பின்பும் தடையின்றி வளர்ந்தது

அவ்வகையில் தமிழ்நாடு ஆசிபெற்றதே

எனினும் பள்ளிகள் வரை சென்னையில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்ட நிலையில் சென்னை மருத்துவமனைகளும் அப்படி ஆகிவிடுமோ என அச்சம் மேலிடுகின்றது

அதை அரசு விரைந்து தடுத்தாக வேண்டும் இல்லை பீகாரிய மருத்துவமனை அளவு சென்னையும் சென்றாகிவிடும்

பீகாரில் நடந்திருபது வதை கொலை, இந்த பாவத்துக்கு மத்திய அரசுக்கும் பங்கு உண்டு , மாநில அரசுக்கும் மீதி உண்டு

ஆறாது, அழுதாலும் தீராத சோகம் இது

இந்நாட்டின் பின் தங்கிய மாநிலத்தில் பிறந்து செத்துவிட்ட அந்த பிஞ்சுகளுக்காய் அழுவோம்..

அதை தவிர என்ன செய்யமுடியும்?

இனியாவது அரசுகள் விழிக்கட்டும், எஞ்சியிருக்கும் குழந்தைகள் விரைந்து காக்கபடட்டும்.

இந்நாட்டுக்கு நிச்சயம் ஏகபட்ட மருத்துவர்கள் தேவை

இந்த நீட் இம்சைகள் இல்லாமல் நல்ல மருத்துவர்களை உருவாக்கலாம், தேவை ஏற்படின் படித்து முடித்த பின் அவர்களுக்கு என்ன தேர்வையும் வைக்கலாம்

முதலில் செய்ய வேண்டியது விரைந்து மருத்துவர்களை உருவாக்குவது

இரண்டாவது செய்யவேண்டியது அரசு பணத்தில் படித்த மருத்துவர்கள் வெளிநாட்டுக்கு செல்லாமல் தடுப்பதும் இந்நாட்டின் அரசு மருத்துவமனையில் மட்டும் பணியாற்றுமாறு கட்டளை பிறப்பிப்பதுமாகும்

அதுவே இந்நாட்டில் மக்கள் உயிரை காக்கும் ஒரே வழி..

இலங்கை முதலாம் செயற்கை கோள் ராவணா

இலங்கை தன் முதலாம் செயற்கை கோளை விண்ணில் செலுத்தியிருக்கின்றது

அதாவது இலங்கைக்கு சொந்தமான செயற்கை கோள் அமெரிக்க ராக்கெட் மூலமாக விண்ணுக்கு அனுப்பட்டாயிற்று

செயற்கை கோளின் பெயர் என்ன தெரியுமா? “ராவணா”

அது ராவணனின் பெயர் என்பது ஒன்றும் ரகசியமல்ல‌

ஆக சிங்களன் , தமிழ்தேசிய தமிழரின் முப்பாட்டன் ராவணன் என தெரிகின்றது

இலங்கையில் நடப்பது பங்காளிகள் தகறாறு என்பதும் புரிகின்றது

எப்படியோ தமிழரின் முப்பாட்டன் ராவணனின் புகழை விண்ணுக்கு அனுப்பிவிட்டான் சிங்களன்

இதை ஒரு தமிழ்தேசிய, திராவிட கும்பல்களும் வரவேற்கவில்லை என்பதுதான் “விபீஷ்ணன்” வேலை

பிதாவே.. இவரை மன்னிக்காதேயும்

அந்த கால இவரின் சபை பாடல்களே எப்படி இருக்கும் தெரியுமா?

“இந்து தேச மாதசிரோன்மணிகளை
விந்தை ஒளிக்குள் வரவழைப்போம்..”

இன்னும் ஏகபட்ட ஆதாரமும் விஷயங்களும் இந்து மதத்தை பற்றியும் இது இந்துநாடு என்பது பற்றியும் அவர்களிடமே அதிகம் உண்டு

இது இந்துக்கள் நாடு என ஆணித்தரமாக எழுதி வைத்தது ஆங்கிலேய மிஷினரிகளே

ஆக இந்துக்கள் திருப்பி இவர் முகத்தில் குத்தினால் மனிதர் தாங்கமாட்டார்

நேரே கல்லறை தோட்டத்தில் சென்று இவர் படுத்துகொள்வது நல்லது

“பிதாவே.. இவர் செய்வது எது என தெரிந்தே செய்கின்றார்.. இவரை மன்னிக்காதேயும்”