பப்ளிக் பப்ளிக்..ஸ்மைல்..ஸ்மைல்.

அந்த சுனந்தா புஷ்கர் எப்படி செத்தாங்க?

சாதிக் பாட்சா எப்படி செத்தாரோ அப்படியேதான்.

உங்க முகத்த பார்த்தா அப்படி தெரியலியே

உங்க முகத்தை பார்த்தாலும்தான் தெரியல..

இப்போ அவங்க செத்திருந்தா சங்கிங்க கொலைன்னு கிளம்பலாம், ஆனா அவங்க செத்தது நம்ம ஆட்சியில அதுனால வேற வழியில்லாம‌ சைலன்ட்.

சரி..சரி… பப்ளிக் பப்ளிக்..ஸ்மைல்..ஸ்மைல்..

Advertisements

வடக்கே எதுவும் நடந்துவிட கூடாது

வடக்கே எதுவும் நடந்துவிட கூடாது

உடனே இதோ தமிழ்நாடு அதைவிட முன்னேறிற்று, பீகாரை , உபி, மபியினை விட முன்னேறிற்று, தமிழகம் அற்புதமான முன்னேற்ற மாநிலம் என ஒரு கோஷ்டி கிளம்புகின்றது

தமிழகம் அவ்வளவு நல்ல மாநிலமா என்றால், ஆம் அதைவிட சிறந்தமாநிலத்தை காட்டு என சட்டையினை பிடிக்கின்றனர்

நாமும் அவர்கள் சட்டையினை பிடித்து திருப்பி கேட்கலாம்

“அந்த அற்புதமான மாநிலத்தை ஆளும் பழனிச்சாமி கோஷ்டியினை ஏண்டா கரித்து கொட்டுகின்றீர்கள்?

அவர்கள் நிரந்தரமாக ஆள வழிவிட்டால்தான் என்ன? ?”

அய்யா முதல் திராவிட முதல்வன் நான், அதை நினைத்தால்

“அய்யா, உங்கள் பெயரை சொன்னார்கள் தமிழை சொன்னார்கள். ஆனால் “அண்ணா வாழ்க..” என் பெயரை ஒருவனும் பார்லிமென்டில் சொல்லகாணோம் கண்டீரா? வேதனை அவமானம் வெட்கம்..

என்ன வெங்காயம் வெட்கம்? நான் கோடிகணக்கில சொத்துவிட்டுட்டு வந்துருக்கேன், நீ என்ன விட்டுட்டு வந்தே? அதான் ஒரு பயலும் உன்ன நினைக்கல வெங்காயம்..

அய்யா நானே கட்சி கண்டேன், நானே ஆட்சி கண்டேன்

என்ன கண்டு என்ன கிழிச்சே? உன் பிள்ளைகள வச்சியா? உன் மருமகனை கட்சியில வச்சியா? ஒண்ணுமில்ல. இன்னைக்கும் உன் கல்லறையில ஒரு காய்ஞ்ச பூ கூட இல்ல, ஆனா கருணாநிதி பயலுக்கு எவ்வளவு மாலை பாத்தியா?

ஆமா அய்யா தாங்கலை, இவ்வளவுக்கும் திமுக முதல் பார்லிமென்ட் எம்பி நான், திராவிட கருத்தை முதலில் அங்கு முழங்கியவன் நான், அதை நினைத்தால்தான்…..

இதுக்குத்தான் சொன்னேன் கட்சி வேணாம், இங்க பூரா அயோக்கிய பயலுகண்ணு, கேட்டீயா? இனி தனியே இருந்து அழு வெங்காயம், உனக்குத்தான் எதையும் தாங்கும் இதயம் இருக்கே, நல்லா அழு

அய்யா முதல் திராவிட முதல்வன் நான், அதை நினைத்தால்

வெங்காயம், அதுக்குத்தான் உன் தம்பி, உன் இதயகனி, அவனோட இதயகனி எல்லாம் வரிசையா உன் கிட்டேயே வச்சிருக்கு நல்லா அழு, நமக்கு அரசியல் வேண்டாம்னு எவ்வளவு சொன்னேன் கேட்டீரா? நல்லா இருந்து பாரும்..

சந்தடி சாக்கில் நாமும் கொளுத்தி போடுவோம்

அடேய் எதையும் பொறுத்து கொள்ளலாம்

அவரை வசனகர்த்தா என சொன்னால் மணிரத்னம் என்பவரே சுனாமி “கடல்” என பொங்கிவிடுவார்.

சரி சந்தடி சாக்கில் நாமும் கொளுத்தி போடுவோம்..

அந்த “காவிய தலைவன்” படத்திலும், “அங்காடி தெரு” படத்தில் கடை முதலாளி வடிவிலும், அந்த “கடல்” படத்தில் வில்லன் அர்ஜூன் பாத்திரத்திலும் நாடாரை இழிவுபடுத்திய ஜெயமோகனை தமிழக அரசே விடாதே….

மாபெரும் குடிநீர் தட்டுபாடு

மாபெரும் குடிநீர் தட்டுபாட்டை ஏதோ உட்கட்சி விவகாரம் போல கடந்து செல்ல நினைக்கின்றது அதிமுக அரசு

அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் பேச்சுக்கள் அப்படித்தான் தெரிகின்றன‌

இது கடந்து செல்லும் விஷயமென அவர்கள் நினைத்தால் அவர்கள் அறியாமையினை நினைத்து கோபமே மிஞ்சும்

பூசனிக்காயினை சோற்றில் மறைக்க முடியுமா? ஊர்வாயினை மூட முடியுமா ? என்பார்கள்

அப்படி இதெல்லாம் மறைக்க கூடிய விஷயம் அல்ல, ஊருக்கு உண்மை தெரியாதா என்ன?

ஆளும் கட்சி அப்படித்தான் மறைக்கும், ஆனால் எதிர்கட்சிகளின் பணி அந்த முகதிரையினை கிழிப்பது

அவர்கள் ஏன் அமைதி என்பதுதான் புரியவில்லை

திமுக என்றல்ல, எல்லா கட்சியுமே அதில் கனத்த அமைதி

ஆக கட்சிகள் இடையே கனத்த ஒற்றுமையும் கள்ள மவுனமும் இருக்கின்றது

மக்கள்தான் பாவம், உண்மையில் அவர்களுக்காக எந்த கட்சியுமே இல்லை…

குடிநீருக்காவது வருங்கால தலைமுறைக்கு ஏதாவது செய்ய முயற்சிப்போம்

சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடாம், வரும் செய்திகளை எல்லாம் அப்படியே நம்பமுடியாது, விசாரித்து பார்ப்போம் என்றால் நிலமை அப்படித்தான் கொடுமையாக இருக்கின்றது

மகா ஆச்சரியமான விஷயம் அது

ஒரு வருடம் மழை பொய்ததற்கே இவ்வளவு பெரும் நெருக்கடி என்றால் அது பெரும் அபாயத்தினை அறிவிக்கின்றது

காரணம் விவசாயம் இல்லை, அது அழிந்துகிடக்கின்றது. இன்றைய தேதியில் மிக விரைவாக இந்த நீர் நெருக்கடி வருகிறதென்றால் சில் விஷயங்கள்தான்

முதலில் நீர் நிலை பாதுகாப்பு அறவே இல்லை, எல்லாம் முள் நிரம்பி கால் வைக்க முடியா அளவு கெட்டுபோயிற்று, கரைகள் பலமாக இல்லை, மடைகள் இல்லை நிறைய இப்படித்தான்

சென்னை குடிநீர் வழங்கும் ஆதாரம் என எதனை சொல்வீர்கள்? அவை எல்லாம் வெள்ளையன் காலத்திலும் காங்கிரஸ் காலத்திலும் உருவாக்கபட்டவை

இன்றைய காலகட்டத்தின் மக்கள் தொகைகு ஈடுகட்டும் வகையில் பெரும் அணைகட்டோ அல்லது நிரந்தர நீர் ஆதாரமோ இல்லை

செனைர் வெறும் 30 வருடங்களில் மிக‌ வெடித்து பெரிதாகிவிட்ட ஊர். ஆனால் அதன் நீர் தேவைகள் அதே வேகத்தில் வளரவில்லை

இன்னொன்று வியாபாரமாகிவிட்ட நீர், கவனியுங்கள் காணுமிடமெல்லாம் போர்வெல் அமைத்தாகிவிட்டது, யாரும் எங்கும் தோண்டலாம், தோண்டி விற்கலாம் அதற்கு வரைமுறையே இல்லை.

அது உறிஞ்சபடுகின்றது, விற்கபடுகின்றது வீட்டிற்கு 4 கேன் தினமும் கொடுக்கபடுகின்றதென்றால் அது என்ன தொழிற்சாலை தயாரிப்பா?

சில பள்ளிகளில் பெரும் நீச்சல்குளம் அமைத்திருக்கின்றார்கள், அவைகளுக்கு தேவைபடும் நீரின் அளவென்ன? அவை என்ன கங்கை நதி கிளையில் அமைந்திருக்கின்றதா?

எல்லாம் நிலத்தடி நீர்

வியாபாரமாகிவிட்ட நீரே இப்பெரும் பிரச்சினைக்கு மறைமுக காரணம்.

நிலத்தடி நீரினை நம்பி இருப்பதை விட்டுவிட்டு பெரும் நீராதாரங்களை அமைக்காமல் இனி சென்னையில் குடிநீர் பிரச்சினையினை தீர்ப்பது சாத்தியமில்லை

பூண்டி அணைபோல 5 இருந்தாலும் தாங்காத அளவு சென்னை மக்கள் தொகை பெருத்துவிட்டது. இதற்கு சென்னைமட்டுமல்ல அதனை சுற்றியுள்ள பகுதிகள் எல்லாம் பயன்பெறும் வண்ணம் பெரும் திட்டம் தீட்டபடவேண்டும்

எப்படி தீட்டுவது?

தன் சுயநலத்தினை விட பொதுவான நலனை முதலில் கருதாமல் தீர்வு கிட்டாது, காரணாம் நீர் பிரச்சினையா? சரி நான் போர்வெல் அமைத்து என்னை காத்துகொள்வேன் அல்லது விலைக்கு நீர்வாங்கி காப்பேன், யார் எப்படி போனால் என்ன? என்பதுதான் இன்றைய சீர்கேட்டின் முதல் அடிப்படை

நீர் நிலைகளை மீட்டெடுத்து, மீட்டதை காத்து, முட்களை அகற்றி அவற்றை பாதுகாத்த்தாலே பாதி பிரச்சினைகள் தீரும்

அன்றைய காலங்களில் ஒருவருடம் பெய்யும் மழை 6 வருடம் மக்களை காத்தது, அந்த அளவு குளங்கள் பேணிவைக்கபட்டிருந்தன, மினரல் வாட்டர், போர்வெல் இம்சைகள் இல்லாததால் நீர் தட்டுபாடு இன்றி கிடைத்தது

அன்று பாலாற்றில் கைககளால் மணலை விலக்கினாலே நீர் சுரந்தது, இன்று மணலும் இல்லை நீரும் இல்லை

அதாவது நம்மை நாமே நிறைய கெடுத்துகொண்டோம்

அந்த மணல் திருடர்களும், , மினரல் வாட்டர் வியாபாரிகளும் இருக்கும் ஊரில் இருந்துகொண்டுதான் “நீர் இல்லை, குடிக்க நீர் இல்லை, ஏய் உள்ளாட்சியே.., ஏய் தமிழக அரசே.., ஏய் மத்திய அரசே.. ஏய்ய் என பாய்ந்துகொண்டிருக்கின்றோம்”

தவறு நம்மிடையே நிறைய உண்டு

மழை தாமதமானதும் இன்னொரு காரணம் , மாறிவிட்ட பருவகாலங்களில் அதனை கணிப்பதும் சிரமம்

நிச்சயம் சென்னை அனுதினமும் மழை பெய்யும் பகுதி அல்ல, கிடைக்கும் நீரை சேர்த்துவைப்பதை பொறுத்துத்தான் வாழ முடியும்

அரசுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் சில பொறுப்புக்கள் உண்டு

சென்னையில் விசாரியுங்கள், அது 10 கோடி, இந்த வீடு 20 கோடி, இது 50 லட்சம் என சொத்து மதிப்பாய் சொல்வார்கள்

சரி இந்த சொத்துக்களை எல்லாம் நாம் சேர்த்துவைப்பது யாருக்காக? நிச்சயம் வருங்கால சந்ததிக்காக‌

அப்படி சேர்த்து வைத்துவிட்டு , குடிக்க நீர் கூட இல்லாத வருங்காலத்தையா அவர்களுக்கு விட்டுசெல்ல போகின்றோம்? அந்த சொத்துக்களால் நீரில்லா ஊரில் என்ன பயன்?

வாழமுடியா வருங்கால ஊரிலா அவர்களுக்கு சொத்து சேர்த்து வைக்கின்றோம்?

இது அவர்களுக்கு நம்மை அறியாமல் நாம் செய்யும் துரோகம், சொத்துகளை சேர்த்துவைத்துவிட்டு நம்மை அறியாமல் ஒரு பலைவவனத்தினை உருவாக்குகின்றோம், அவைகள் எப்படி வாழும்?

பொதுநலநோக்கோடு பெரும் தீர்வுகாண வேண்டிய நேரமிது.

மிக சுயநலமாக இப்பொழுது காலி குடங்களோடு வீதிக்கு வருவோம், உரிமை கேட்போம்

நாளையே மழை வரட்டும், கதவுகளை அடைத்துவிட்டு வீட்டிற்குள் அமர்ந்துவிடுவோம், வீதிக்கும் நமக்குமான தொடர்பு துண்டிக்கபடும்.

இந்நிலை மாறவேண்டும், எல்லோருக்கும் எல்லா பொறுப்பும் உண்டு.

ஏதாவது செய்தாகவேண்டும், முதலில் நல்ல மழை வரட்டும், தாகம் தீர்க்கட்டும்

நிரந்தரமாக குடிநீர் தேவையினை தீர்க்க செய்யவேண்டிய வேலைகள் ஏராளம் உண்டு

அது அரசின் வேலை மட்டுமல்ல, நமது பங்கும் நிரம்ப உண்டு.

குடிநீருக்காவது வருங்கால தலைமுறைக்கு ஏதாவது செய்ய முயற்சிப்போம்.

ஹாங்காங் போராட்டம்

ஹாங்காங் போராட்டம் சூடுபிடித்து 20 லட்சம் மக்கள் களத்தில் இருக்கின்றனர், உலகம் உன்னிப்பாக கவனிக்கின்றது

இப்போது ஹாங்காங் சீனாவின் பகுதி என்றாலும் அது தன்னாட்சி பகுதி

அங்கு அரசு ஒரு சட்டத்திருத்தம் செய்கின்றது அது என்னவென்றால் ஹாங்காங் வாசிகள் வெளிநாடுகளில் குற்றம் செய்தால் அவர்கள் எந்த நாட்டில் குற்றம் புரிந்தார்களோ அந்த நாட்டு சட்டபடி தண்டிக்கபட ஒப்புவிக்கபடுவார்கள்.

இதுதான் ஹாங்காங் வாசிகளின் கோபத்துக்கு காரணம், இச்சட்டம் தங்களை கைவிடுவதாகவும், இனி வெளிநாடுகளில் வரி விவகாரம் கூட தங்களை அந்நாட்டு சிறையில் தள்ளிவிடும் என கொதிக்கின்றார்கள்..

விஷயம் இல்லாமலும் இல்லை, ஹாங்காங் என்பது வியாபார உலகம் எல்லா நாட்டிலும் அதன் சங்கிலி உண்டு

ஹவாலா முதல் ஏகபட்ட சமாச்சாரங்களின் சொர்க்க பூமி அது

இதனால் மக்கள் கொதிக்கின்றனர், விஷயம் பெரிதாகின்றது, 20 லட்சம் பேர் வீதிக்கு வந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல என்பதால் உலகமும் உற்று கவனிக்கின்றது