இன்றைய துளிகள் 21/06/2019(1)

எரியும்டா எரியும்

“அண்ணே ஒரு சின்ன புள்ள வாக்குசாவடில அவங்க அப்பா கைய பிடிச்சி எங்க விவசாயி சின்னத்துக்கு வாக்கு போட வச்சிருக்குண்ணே, அண்ணன் சீமான் அத உருக்கமா வீடியோவுல சொல்லிட்டாரு, கண்ணீர் வந்துட்டுண்ணே, நாங்க அந்த அளவு மக்கள் மனச உருக்கிட்டோம்ணே

ஓஹோ

அதெல்லாம் பார்க்க மாட்டீங்களே? பொறாமை புடிச்சவரு நீங்க‌, இனி என்னாகும் தெரியுமா?

என்னாகும்?

அதுக்கு விவரம் தெரியும் போது கண்டிப்பா எங்களுக்குத்தான் வோட்டு, அந்த குடும்பமே எங்களுக்கு வோட்டு போட வச்சிரும், அடுத்த சமுதாயமே எங்க கட்சிதாண்ணே, தீ வச்சாச்சி இன்னும் கொஞ்ச வருஷத்துல பத்திட்டு எரியும்

எரியும்டா எரியும்

என்னண்ணே வயிறு எரியுதா? தமிழ் புரட்சிண்ணே

அடேய் அது விவரம் இல்லாத புள்ள இப்போ அப்பா கைய பிடிச்சி வோட்டு போட்டுட்டு

ஆமாண்ணே

இனி விவரம் தெரியும் பொழுது உங்க கட்சி பக்கம் தலைவச்சி படுக்கும்னு நினைக்கிற, உங்கள கண்டாலே தலை தெறிக்க ஓடிரும், உங்க நிலமை கடைசி வரை இப்படித்தான்..”

யோகா என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது இந்த இரண்டு முகம் தான்…

இந்த இரண்டு பேரையும் மனமார பின்பற்றினாலே எல்லா வகை “யோகா”வும் தானாக வரும்..

வில்லன்கள் எப்பொழுதும் மிக கவனமான வில்லன்களே….

எதிலுமே அவர்கள் சிக்கவே மாட்டார்கள்…

யாருகிட்ட? லேசுபட்ட ஆட்களா அவர்கள்?

ரஜினி முதல்வராக வேண்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்பு யாகம்

நடராஜர் கோவில் என்ன? நேரடியாக அந்த நடராஜரிடமே சென்று உருண்டு புரண்டாலும் ஆக போவது ஒன்றுமில்லை ஓல்டுமென் குரூப்ஸ்..

அண்ணன் ஆக்ஸ்போர்டில் படித்துவிட்டு அமெரிக்காவில் பட்டம் வாங்கிய டாக்டர்

அதனால் அவர் கையெழுத்து இப்படித்தான் இருக்கும், சுத்த தமிழில் இருக்காது..

ஆனால் டமில் வாழ்க என முழங்குவார் என்பது வேறு விஷயம்..

திராவிட தமிழ் சூர்ப்பநகையும், தாடகையும் தமிழில் தங்கள் பெயரை எழுதிய அற்புத காட்சி

வெல்க தமிழ், சரி எங்கே தமிழ்?

Advertisements

இன்றைய துளிகள் 21/06/2019

நிச்சயம் வன்மமிக்கது

யோகாவினை கொண்டாடி தொலைக்கட்டும்

ஆனால் இந்திரா பிறந்தநாளை கழிப்பறை தினம் என்பதும், ஹோவர்க்கர் நினைவுநாளை உலக யோகா தினம் என்பதும் எம்மாதிரியான விஷயங்கள்

அதுதான் சரியல்ல, நிச்சயம் வன்மமிக்கது.

அண்ணே என்னெண்ணே பெரிய யோகா? நாங்கெல்லாம் எவ்வளவு செய்வோம் தெரியுமா?

அப்படியா? எப்பொழுது?

எல்லாம் இரவு 7 மணிக்கு பிறகு

யார் உங்கள் குரு?

அவரெல்லாம் எதுக்குண்ணே? வோட்கா உள்ளே போனால் யோகா தானாக வரும்..”

யோகா தாரகை

“யோகா தாரகை” ஷில்பா ஷெட்டியினை தவிர யாரிடமும் யோகா கற்க முடியாது என பிடிவாதமாய் அமர்ந்திருக்கின்றது சங்கம்.

யோகா கற்றால் ஷில்பா ஷெட்டியிம் மட்டுமே கற்போம், அவர் கற்றுதராத யோகா வேண்டவே வேண்டாம்..

(தலைவியிடம் இன்று ஒருநாள் மட்டும் மன்னிப்பு கேட்டுவிட்டே சங்கம் பதிவிடுகின்றது,

அவரும் மன்னித்துவிட்டார்..)

இதுதான் பெரியார் மண்..

குஜராத்திலும் வடக்கே எங்கேயும் நிகழ்ந்த விஷயங்கள் என்றால் உடனே காவி தீவிரவாதம் , பாசிசம் என பொங்கும் யாரும் கோவையில் இப்பொழுதும் 3 பேர் பயங்கர சதிதிட்டத்துடன் கைது செய்யபட்டபட்டிருக்கும் நிலையில் வாயே திறக்கமாட்டார்கள்.

ஏன் என்றால் அப்படித்தான்

இதெல்லாம் என்ன வகை நியாயம்? என சட்டையினை பிடித்து கேட்டாலும் ஜனகராஜ் ஸ்டைலில் சிரித்துகொண்டே செல்வார்களே தவிர வாயே திறக்கமாட்டார்கள்

இதே தமிழகத்தில் அரைகிலோ வெடிபொருளுடன் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரன் சிக்கியிருந்தால் நடந்திருப்பதே வேறு

இதுதான் பெரியார் மண்..

நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் ஓடிசென்று எடுத்து கொள்வதில் அவர் கவனமாக இருந்தார்

அவரின் நீண்ட ஆயுளுக்கு யோகாவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்

கடன் பாக்கிக்காக விஜயகாந்தின் வீடு, கல்லூரியை ஏலத்திற்கு விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.

விஜயகாந்தின் பிறபகுதி இவ்வளவு சிக்கலாகும் என யாரும் எதிர்ப்பார்த்திருக்க முடியாது

எல்லாம் ஆழம் தெரியாமல் அரசியலில் விழுந்தும், அதிலிருந்து மீள தெரியாமல் தவிப்பதுமே காரணம்

அதிமுகவினர் அழும் அதே அழுகை..

அதிமுகவினர் எப்பொழுதும் திமுக ஊழல் கட்சி, திருட்டு கட்சி என சொல்லிகொண்டே இருப்பார்கள்

அவர்களின் ஊழலை நிரூபியுங்கள் என கேட்டால் கடைசி வரை பதிலே வராது

திமுகவின் ஊழல் எதில் நிரூபிக்கபட்டு யார் சிறைக்கு சென்றார்கள்? ஆதாரம் பிளீஸ் என்றால் அவர்களால் கொடுக்கவே முடியாது

மாறாக அது திருட்டு கட்சி என மட்டும் கத்தி சொல்வார்கள், கோபமாக சொல்வார்கள் , கடைசியில் அழுதும் சொல்வார்கள்

அப்படியாக ஈரான் ஒரு ரவுடி நாடு , தீயசக்தி நாடு என அமெரிக்கா கத்திகொண்டே இருகின்றது

உலக நாடுகள் ஆதாரம் பிளீஸ் என கேட்டால் அமெரிக்காவால் கொடுக்க முடியவில்லை, “என்னை நம்புங்கள் நம்புங்கள் அவனை விட கூடாது..” என சொல்கின்றதே தவிர ஆதார பூர்வமாக ஒன்றையும் செய்ய முடியவில்லை

ஈராக் மேல் பேரழிவு ஆயுதங்கள் என சொல்லி படையெடுத்து அரை பிளேடு கூட கிடைக்காத பழம் கதையினை உலகநாடுகள் மறக்கவில்லை

இதனால் ஈரானால் உலகிற்கு ஆபத்து, கப்பலை தாக்கியது ஈரான் இப்படி எல்லாவற்றிற்கும் ஆதாரம் கொடுங்கள் என உலகம் கேட்க தொடங்கியாயிற்று

டிரம்போ அதே அழுகையில் இருக்கின்றார்?

என்ன அழுகை?

அதிமுகவினர் அழும் அதே அழுகை..

கேவி மகாதேவன்

தமிழ் சினிமாவில் அவர் தவிர்க்கமுடியா இசை அமைப்பாளர், நிச்சயம் அவரே இன்றைய தமிழ் இசையின் அடிக்கல்

அவரின் பாதிப்பில் இருந்தே விஸ்வநாதனும், இளையராஜாவும் இன்னும் பலரும் வந்தார்கள்

அவரின் பாதிப்பில்லா இசை அமைப்பாளர்கள் இனி தமிழ்திரையுலகிற்கு வரமுடியாது

கேவி மகாதேவன்

அவர் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலை சேர்ந்தவர், பூதபாண்டியில்தான் அவர் இசைபயின்றார்

1940களிலே திரையுலகுக்கு வந்தவர்

படிக்காத மேதை, திருவிளையாடல் வசந்தமாளிகைஉட்பட ஏகபட்ட படங்களுக்கு இசை அமைத்தவர்

அந்த தில்லானா மோனமப்பாள் , மகாகவி காளிதாஸ் அவரின் கிளாசிக் வகை

பாகவதர் காலத்தில் இருந்து எஸ்பி ஜேசுதாஸ் காலம் வரை, சுசீலாவுக்கு முந்தைய கேபி சுந்தரம்பாள் காலம் முதல் சித்ரா காலம் வரை இசை அமைத்தவர்

எத்தனையோ பாடகர்களை அறிமுகபடுத்தியவர், எம்.எஸ் விஸ்வநாதன் அவரின் கண்டுபிடிப்பில் ஒருவர்

விஸ்வநாதனுக்கும் அவருக்கும் நல்ல உறவு இருந்தது, மகாதேவனை மனமார உயர்த்தியிருந்தார் விஸ்வநாதன்

கிட்டதட்ட 50 ஆண்டுகாலம் தமிழ் திரையுலகில் செங்கோல் செலுத்தினார் மகாதேவன்..

தமிழ் கன்னடம் மலையாளம் தெலுங்கு என எல்லா பக்கமும் சுற்றி வந்தவர் அவர்.

அவர் காட்டிய வழியில்தான் இன்று தமிழ் பாடல்கள் வருகின்றன, அவர் கட்டிய மாளிகையின் வடிவில்தான் பின்னாளைய இசைவடிவங்கள் எழும்பின‌

அந்த மாபெரும் இசை அமைப்பாளருக்கு இன்று நினைவுநாள்

நாகர்கோவிலின் கிருஷ்ணன் கோவிலும், பூதபாண்டி காற்றும் எந்நாளும் அவரின் நினைவோடு கலந்திருக்கும்

இன்று உலக இசை தினம் என்பது கூடுதல் தகவல்..

அமெரிக்கா இப்பொழுது கனத்த அமைதி

அமெரிக்க உளவு விமானத்தை (MQ 9) இரண்டாம் முறையாக சுட்டு வீழ்த்தியிருக்கின்றது ஈரான்

இதற்கு முன் முன்பு ஒருமுறை இப்படி அடித்திருந்தார்கள்

பொதுவாக உளவு விமானங்கள் மிக வேகமாக பறப்பவை அல்ல, பெரும் உயரம் செல்பவையும் அல்ல என்பதால் அடிப்பது எளிது

அமெரிக்க உளவு விமானம் ஏமனில் கடந்தவாரம் வீழ்த்தபட்டது, அதை தொடர்ந்து ஈரானிலும் அடிக்கபட்டிருகின்றது

எண்ணெய் கப்பல் எண்ணெய் நிலையம் மீதான தாக்குதல் என அதிரடி காட்டும் ஈரான் இதிலேயும் காட்டிவிட்டது

வழக்கமாக இம்மாதிரி சம்பவங்களுக்கு கடும் எச்சரிக்கை செய்யும் அமெரிக்கா இப்பொழுது கனத்த அமைதி

ஒருவேளை டிரம்பிற்கு வழக்கமாக “எச்சரிக்கை அறிக்கை” எழுதி கொடுக்கும் நபர் விடுமுறையில் சென்றுவிட்டாரா இல்லை ராஜினமா செய்துவிட்டாரா என்பது தெரியவில்லை

அதை தடுப்பது நிச்சயம் சரியல்ல

கேரளா 20 லட்சம் லிட்டர் நீரை சென்னைக்கு அனுப்புவதாக கேட்டுகொண்டதை பழனிச்சாமி அரசு வேண்டாம் என சொல்லிவிட்டது

இதுபற்றி கேட்டால் இப்பொழுது வாங்கினால் முல்லைபெரியாறில் கேரளா நீர் கொடுக்காதாம்

இதைவிட அறிவுகெட்ட தனம் இருக்க முடியாது

இது ஒரேநாடு, ஒரு நாட்டின் ஒரு நகரத்துக்கு தட்டுபாடு என்றால் இன்னொரு நகரத்தில் இருந்து கொண்டு செல்லலாம்

இதில் என்ன அரசியல் கண்டார்களோ தெரியவில்லை

ஏதோ முல்லைபெரியாற்றில் இருந்து ரயில்வருவது போல பில்டப்

இப்பொழுது ஆந்திர அரசிடம் 2 டிம்சி தண்ணீருக்காக தமிழக அரசு பேசிகொண்டிருக்கின்றது

இரண்டு டிஎம்சி நீரின் விலை 20 கோடிரூபாயாம்

இந்த லட்சணத்தில் கேரள ரயினை விரட்டிவிட்டோம் தன்மானம், தீர்க்கதரிசனம் என்பதெல்லாம் புலம்பல்

கேரளா வெள்ளத்தில் தத்தளித்தபொழுது நாம் உணவு அனுப்பினோம்

இப்பொழுது நமக்கு சிரமம் என்றால் அவர்கள் உதவ முற்படுகின்றார்கள்

இதில் என்ன அரசியல் மண்ணாங்கட்டி?

கேரளாவில் இருந்து பத்மினி வரலாம், பாசில் வரலாம் , நயனும் நித்யாமேனனும் வரலாம்

ஏன் எம்ஜி ராம்சந்திரனே வரலாம்

ஆனால் நீரோடு ரயில்மட்டும் வரகூடாதாம். 20 லட்சம் லிட்டர் நீர் யாரோ சென்னை
ஏழைகளுக்கு பயனளிக்கத்தான் செய்யும்

அதை தடுப்பது நிச்சயம் சரியல்ல.

இப்பொழுது இருதரப்புமே அமைதி

திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இல்லையா என கேட்கின்றது காவி கோஷ்டி

பசு வதையினை தடுக்க போராடும் பாஜக கட்சியினர் மாட்டுகறி ஏற்றுமதி செய்வதில்லையா என பதிலுக்கு கேட்கின்றனர் திமுகவினர்

திமுகவினரிடம் கேள்விகேட்டால் இப்படித்தான் எதிர்கேள்வி கேட்பார்கள், அவர்களின் தயாரிப்பு அப்படி

இப்பொழுது இருதரப்புமே அமைதி

ஆக திமுகவினர் பள்ளிகளில் இந்தி இருப்பதும், பாஜகவினர் மாட்டுகறி ஏற்றுமதி செய்வதும் அவர்களாலே ஒப்புகொள்ளபட்டாயிற்று

மல்யுத்த வீரர்களின் பிடிபோல் இருவரும் கிடுக்கிபிடி பிடித்திருக்கின்றார்கள்

பார்க்கும் கூட்டம் என்ன சொல்கின்றது?

ஆக இவர்களுக்கு அரசியல் வியாபாரமும், சொந்த வியாபாரமும் ஒரே முதலீடுதான் என முடிவு செய்துவிட்டது.

அவனவனுக்கு தேவையான மொழியினை அவனவன் படிக்கட்டும்,

அவனவனுக்கு பிடித்த உணவினை அவனவன் உண்ணட்டும்