என்னது சூடுபட்டாரா?

என்னது சூடுபட்டாரா?

முதலில் இவரின் …..ல் சூடு வைத்து அமெரிக்காவின் குவாண்டமாவோ தீவு சிறைக்கு அனுப்ப வேண்டும்.

நாட்டை மறுபடியும் ஆயிரம் வருடம் பின்னோக்கி இழுத்து செல்ல ஒரு கூட்டம் கிளம்பியிருக்கின்றது, இவர்களை முளையிலே கிள்ளி கடலில் தள்ளுவதே சமூகத்துக்கு நல்லது


கன்னியாகுமரியில் அந்த கொடுமை நிகழ்ந்திருக்கின்றது

கன்னியாகுமரியில் அந்த கொடுமை நிகழ்ந்திருக்கின்றது

அவள் 11ம் வகுப்பு மாணவி, வகுப்பறையில் கணித ஆசிரியர் திட்டியிருக்கின்றார், பின் அமர சொல்லியிருக்கின்றார்

அமர்ந்த மாணவி அப்படியே இறந்திருக்கின்றாள், ஆனால் அது தெரியாமல் வகுப்பு ஓடியிருக்கின்றது

1மணி நேரம் கழித்தே வகுப்பு கலையும் பொழுது அவள் இறந்த நிலையில் இருந்திருப்பது தெரிகின்றது

இதெல்லாம் மகா அச்சமூட்டும் விஷயம்

மாரடைப்பால் அவள் இறந்திருக்கலாம் அதுதான் வாய்ப்பு

கல்வி சுமையும், அது கொடுக்கும் அழுத்தமும் வெறும் 16 வயது மாணவிக்கே மாரடைப்பு கொடுக்கும் நிலைக்கு சமூகம் இருக்கின்றது

மாணவர்கள் தேர்வுக்காக சாகின்றார்கள், தேர்வு முடிவுகளில் சாகின்றார்கள்

இப்பொழுதெல்லாம் வகுப்பறையிலே சாக தொடங்கிவிட்டார்கள்

பெரும் அழுத்தத்தை அவர்கள் மேல் கொடுத்து அவர்களின் இளமையினையும் அழகிய காலங்களையும் கொல்லும் சமூகம் இப்பொழுது உயிரையும் எடுக்க தொடங்கியாயிற்று

அந்த மாணவிக்கு ஆழ்ந்த‌ அஞ்சலிகள்

கல்விதான் வாழ்க்கை என நம்பும் சமூகம் இனியாவது திருந்தட்டும், வாழ்வில் கல்வியினை தாண்டி ஏராளமான விஷயங்கள் உண்டு

விவகாரம் வேறு எங்கோ இருக்கின்றது

இரு நாட்களுக்கு முன்பு ஈரான் மேல் போர் என உத்தரவிட்டிருக்கின்றார் டிரம்ப்

முன்பே குறித்துவைக்கபட்ட இலக்குகள் மேல் முதல்கட்ட தாக்குதலை நடத்தி ஈரானை அதிரவைக்க உத்தரவிட்டிருக்கின்றார்

ஆனால் ஏதோ பெரும் காரணத்துக்காக ராணுவம் தாக்க மறுத்துவிட்டது

ஈரானை அடித்தால் எங்கோ உதைக்கும் என்பதும், அதன் விளைவுகள் சாதாரணமாய் இராது என்பதும் அமெரிக்க ராணுவ தலமைக்கு தெரிகின்றது

இது ஈரானை தாக்க தகுந்த நேரம் அல்ல என கருதுகின்றார்கள், அப்படியே வேறு ஏதோ ஒரு முடிவுக்காக அல்லது தகவலுக்காக காத்திருக்கின்றார்கள்

இதனால் டிரம்பின் உத்தரவுக்கு மதிப்பில்லை

விடுவாரா டிரம்ப்?

“ஹிஹிஹி விஷயம் ஒன்றுமல்ல நாம் தாக்கினால் ஈரானில் எவ்வளவு பேர் சாவார்கள் என கேட்டேன் பதிலுக்கு பல ஆயிரம் பேர் என்றார்கள்.

ம்ம் மக்கள் அதிகமில்லா அரசு இலக்குகளை தாக்குங்கள், அதுவும் நள்ளிரவில் தாக்குங்கள் என சொன்னேன்

(மோடியிடம் பேசியிருப்பாரோ?..)

அப்பொழுதும் குறைந்தபட்சம் 150 பேர் சாவார்கள் என சொன்னார்கள்,. அந்த 150 பேருக்காக தாக்காமல் விட்டுவிட்டோம்” என சொல்லி முகத்தில் இருக்கும் மண்ணை தட்டுகின்றார் டிரம்ப்

150 பேரை பலிகொடுக்க அஞ்சும் தேசமா அமெரிக்கா?

இல்லை விவகாரம் வேறு எங்கோ இருக்கின்றது, முழுக்க ஈரானை சுற்றியபின்பும் கை வைக்க அவர்கள் தயங்குவது அதனால்தான்

பெரியவர் Manickavasagam Muthuswamy

அந்த பெரியவர் Manickavasagam Muthuswamy பெருந்தன்மையானவர் என்பதாலும், நிச்சயம் தவறாக கருதமாட்டார் என்பதாலும் எழுதுகின்றோம்

அவர் வள்ளியூரின் முதல் மருத்துவர், 1950களிலே மருத்துவரானவர், ஆனால் சாதியால் பிற்படுத்தபட்டவர்

அக்காலங்கள் கடுமையானவை என்பார்கள், அந்த அக்ரஹாரத்தில் மற்ற சாதியினர் நடமாட முடியாது என்பதும், தெரியாமல் அந்த வீதியில் நுழைந்துவிட்டால் செருப்பை கையில் எடுத்து குனிந்தபடி மற்றவர் நடக்க வேண்டும் என்பதெல்லாம் அக்கால விதியாம்

அந்த காலத்திலே அக்ரஹாரத்து பிராமண பெண்ணுக்கு இவர்மேல் காதல் வந்திருகின்றது

“நம்பியவரை கைவிடல் மானிட தர்மமாகாது..” என மனமார நம்பிய மருத்துவரும் அவரை கைத்தலம் பற்றினார்

அந்த பகுதியின் முதல் கலப்பு திருமணமும் புரட்சி திருமணமும் அதுதான்.

இன்று சென்னையின் மிக சிறந்த சிறுவர் நல மருத்துவர் அவர், பேரபிள்ளையும் எடுத்து வாழ்வாங்கு வாழ்கின்றார்

“யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே…”

அவர்கள் இருவர் நெஞ்சமும் கலந்தன, வாழ்வாங்கு வாழ்கின்றார்கள்

விரும்பிய இரு மனங்கள் இணையும் பொழுது சாதிய பெருமை பேசுவதும் இன்னும் என்னவெல்லாம் பேசுவதும் சரியல்ல‌

எனக்கு நன்றாய் நினைவிருக்கின்றது

மலேசியாவில் ஒரு பெரியவரை சந்திக்கும் பொழுது சொன்னார், “இது இன்னாருடைய பேரன்

அவர் என்னவெல்லாம் பேசுவார் தெரியுமா? சாதி குடும்ப பாரம்பரியம் என ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினார்

ஆனால் அவரின் பேரன் ஜப்பானியரை திருமணம் செய்திருக்கின்றான் அவளுக்கு சாதியும் கிடையாது மதமும் கிடையாது.

குழந்தைகளுக்கு தமிழே தெரியாது அதில் இனி சாதி எங்கிருந்து தெரியும்?

இனி அவரின் சாதி தொடராது எல்லாம் மாறிவிட்டது, அவரும் இப்பொழுது இல்லை

சாதி பேசி என்ன கிழித்துவிட்டார்? என்ன காத்துவிட்டார் ஒன்றுமில்லை..”

மாறும் உலகில் எல்லாமும் மாறும், அடுத்த தலைமுறை என்னாகும் என தெரியாதவர்கள் எல்லாம் சாதி,மதம், சம்பிரதாயம் ஆடிகொண்டிருகின்றனர் என்பதுதான் பரிதாபம்

மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன்

தமிழக இசைதுறையின் பெரும் பாரம்பரியம் அவர், நிச்சயம் கால‌ வரலாறு, மெல்லிசைகளை பூக்களை போல் அள்ளிவீசிய அந்த தென்றல் அவர்.

தமிழக‌ இசைவரலாறு அவரை அப்படித்தான் குறித்துகொண்டது

மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் சுருக்கமாக எம்.எஸ் விஸ்வநாதன். பாலக்காட்டில் பிறந்து, 7 வயதிலே திருவனந்தபுரம் தெருக்களில் போராடி, ஏகபட்ட அவமானங்களை சந்தித்து, நாடக கம்பெனி ஆபீஸ் பையனாக வாழ்க்கை தொடங்கி, இசைகற்று பின் சக்கரவர்த்தியாக முடிந்துவிட்ட வரலாறு அவர்.

சுப்புராமன் குழுவில் தொடங்கி, பின் தன் ஆர்மோனியத்தை ராமமூர்த்தியின் வயலிகோடு கலந்து இசைதென்றலாக வீசி, பின்னாளில் தனியாக மெல்லிசை கொடுத்து, இசைதுறையில் சிகரமாகி அதில் சிம்மாசமிட்டு அமர்ந்தவர்.

கவியரசர் கண்ணதாசனுக்கும், இவருக்கும் இருந்த நட்பு உலகறிந்தது. அவர் வானம் என்றால் இவர் மேகம். அவர் கடல் என்றால் இவர் வெண்மணல் கரை. அவர் தென்றல் என்றால் இவர் மெல்லிய குளிர்

இருவருக்கும் வயது வித்தியாசமென்றாலும் புரிந்துணர்வு மிக அதிகம், அந்த ஆத்மநெருக்கம் தான், அழியா பாடல்களை கொடுத்தது.

கண்ணதாசன் தன் அழியா காவியங்களான வனவாசம்,மனவாசம்,அர்த்தமுள்ள இந்துமத புத்தகங்களில் எல்லாம் கண்ணனுக்கு அடுத்து உச்சரித்த பெயர் விஸ்வநாதன். எம் எஸ் விஸ்வநாதன் பேட்டிகளில் எல்லாம் தவறாது இடம்பெறும் பெயர் கண்ணதாசன். நட்பு அப்படி.

கண்ணதாசன் வரிகளில் சொல்வதென்றால் “ரஷ்யா சென்றோம், வழியில் ஆப்கனில் இதுதான் காபூல் என்றேன்? அப்படிண்ணா? என்ன என்றான், கஜினி தெரியுமா என்றேன்? யாரது நான் பார்த்ததில்லை” என்றான். சரித்திரம் தெரியவில்லை, பூகோளம் தெரியவில்லை, சோவியத் தெரியவில்லை அப்பாவியாய் இருந்தான்.

ஆனால் ரஷ்ய அருங்காட்சியகத்தில் அவர்களின் புகழ்பெற்ற கலைஞர் டிராவேஸ்கியின் நோட்ஸ்களை கொண்டு அவன் பியாணோ வாசிக்க, மொத்த கூட்டமும் சிலையாய் நின்றது. வாசித்துமுடித்தவுடன் ஆரதழுவி கைதட்டி கொண்டாடியது, அப்பொழுதுதான் எனக்கு தெரிந்தது இசைதான் அவனுக்கு உலகம்.

உலக நாடுகளை தெரியாதே தவிர “பட்டத்துராணி” பாடலில் எகிப்திய இசை, தென்றல் வீசதோ என “பாண்டிநாட்டு இசை”, இன்னும் பல பாடல்களில் மேற்கத்திய இசை, அரேபியன் இசை, கிழக்கத்திய இசை, மெக்ஸிகன் இசை என எல்லா நாட்டு இசையையும் தமிழுக்கு கொண்டு வந்தவன் அவன்” என சொல்லியிருந்தார்.

பின்னாளில் “பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா” என ஒரு தொடக்கவரியையும் அவரை நினைத்தே எழுதியதையும் சொன்னார், “ராகங்கள் பதினாறு உருவான வரலாறு” என்பதும் அவரிடம் பெற்றதே என்றார்.

இருவரும் இணைந்து கொடுத்த “கிருஷ்ணகானங்கள்” கேட்காத செவிகளில்லை, கேட்டுவிட்டு உருகாத மனமும் இல்லை. தமிழக பக்தி உலகிற்கு பெரும் கொடைகள் அந்த பாடல்

ஜாம்பவன்களான கே.பாலசந்தரும், ஸீரிதரும் சொலவது போல இருவரும் இணைந்து பணியாற்றுவதை பார்க்கவே சுவராஸ்யமாக இருக்கும்.

விஸ்வநாதனை பற்றி பேசினால் பல ஆயிரம் பக்கங்கள் எழுதினாலும் தீராது, கவியரசரின் கவி காற்றினை, அருமையான இசையாக மாற்றிய புல்லாங்குழல் விஸ்வநாதன்.

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே என்பதை விட, அந்த புருஷோத்தமன் கை புல்லாங்குழலே என அவரினை சொல்வதில் மிகைபடுத்தல் ஏதுமில்லை.

சர்ச்சைகளில் சிக்கிகொள்ளாத இசையமப்பாளர்களில் அவரும் ஒருவர். நன்றி எனும் சொல்லுக்கு இறுதிவரை இலக்கணமாக இருந்தார். எளிமையும், நெற்றிநிறைய விபூதியுமாக, வெள்ளையுடையில் வெள்ளை மனமாகவே வாழ்ந்தவர்.

கவிஞர்களில் பாபநாசம் சிவன் முதல் விக்டர்தாஸ் வரை பழகியவர், இசைகலைஞர்களில் சுப்பையாநாயுடு முதல் அனிருத் வரை கண்டவர். சொந்த குரலில் அடுத்த அடுத்த தலைமுறைகளான இளையராஜா,ரகுமான்,ஜிவி பிரகாஷ் இசைவரை பாடியவர்.

இசைக்காகவே இசை கலைஞராஜவே இறுதிவரை வாழ்ந்தவர், யாரையும் புண்படுத்தியவர் அல்ல அல்லது எல்லோரையும் நண்பராகவே இறுதிவரை கொண்டு சென்ற வெண்மனதுக்காரர்.

சிகாகோ மருத்துவமனையில் தனது இறுதிநிமிடத்தில், தன்வாழ்வு முடியபோவதை புரிந்துகொண்டு கவியரசர் புலம்பிய தருணங்கள் மறக்கமுடியாதவை, நினைவு தப்பியும் தப்பாத அந்த நிலையிலும் அவர் சொன்னது

“விஸ்வநாதா மெட்டு போடு….”

தமிழகம் அந்த வார்த்தையினைத்தான் நினைத்து நினைத்து பார்க்கின்றது

இனி அந்த மெல்லிசை மெட்டினை யார் எமக்கு தருவார்?

கண்ணன் கையில் புல்லாங்குழல் உண்டு, கண்ணதாசன் கையில் புல்லாங்குழலாக இருந்தவர் விஸ்வநாதன்

அது கொடுத்த இசையும் பாடலும் ஏராளம்

இன்று அவரின் பிறந்த நாள், கண்ணதாசனுக்கும் அவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் என்பது ஆச்சரியம்

ஒருவேளை மதுவிலும் மாதுவிலும் விழாமல் இருந்தால் விஸ்வநாதன் போல நீண்ட ஆயுளும் கவிஞருக்கு கிடைத்திருக்கலாம்

ஆனால் விதி அதுவல்ல என்றாலும் அதனால் தமிழக இசைக்கு ஏதும் குறைவுமல்ல, இருவருமே நிரம்ப கொடுத்துவிட்டார்கள்..

சிக்கல் தீர்ந்துவிடும்

அவன் கருப்பனாக இருக்கட்டும், ஆப்ரிக்க வம்சமாக இருக்கட்டும்

ஆனால் மனிதன், எல்லோரையும் போன்ற மனிதன். அவன் சுதா ரகுநாதனின் மகளை திருமணம் செய்வதில் யாருக்கு என்ன சிக்கல் என்றுதான் தெரியவில்லை

சுதா ரகுநாதன் பத்ம விருது வாங்கியவராம், இந்த மும்மூர்த்திகள் எனப்படும் திருவையாறு கோஷ்டியில் தலமை பாடகியாம்

மகளின் திருமணத்தை அங்கீகரித்தார் என்பதற்காக அவர் பத்ம விருதை திருப்பி கொடுக்க வேண்டுமாம், திருவையாறு சந்நிதியில் பாட கூடாதாம்.

நவீன தீண்டாமை என்பது இதுதான். அவன் இந்துமதம் தழுவுகின்றான் என சொல்லியும் நம்மோடு அவனை சேர்க்கமுடியாது என சிலர் விரட்டியடிப்பதும் நவீன தீண்டாமை மற்றும் காட்டுமிராண்டித்தனம்

இது நிச்சயம் சரியல்ல‌

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என வாழ்பவர் தமிழர், அதில் ஏதோ அந்த திருவையாறு சமாதி தனிபட்ட இனத்துக்கு சொந்தம் என குதிப்பது சரியல்ல‌

அது தமிழர் இசை, அங்கு ஒன்றையும் அந்த மும்மூர்த்திகள் புதிதாக கிழிக்கவில்லை

இங்கு அவர்கள் காலத்துக்கு முன்பே சங்க பாடல்களும் குறளும் கம்பராமாயணமும் அந்த ஸ்வரங்கள் ராகங்களுக்குள் அடங்குமாறே அமைக்கபட்டிருந்தது

இந்த மும்மூர்த்தி இம்சைகள் தெலுங்கில் பாடியதை தவிர் ஒரு புல்லும் புடுங்கவில்லை

சக மனிதனை தன்னில் ஒருவராக இணைப்பதே மானிட தர்மம், அதை மீறிய எந்த தர்மமும் மனித தன்மை அல்ல‌

இந்த சுதா ரங்கநாதனை விரட்டும் கோஷ்டிகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்துதர்மம் என்பது எல்லோரையும் அரவணைப்பது, இவர்கள் செய்வது நவீன தீண்டாமை மற்றும் அப்டேட்டட் பார்ப்பனியம்

முதலில் இந்த திருவையாறு இம்சையினை அரசு கட்டுபாட்டில் எடுத்து அது பொதுவான இசைகூடம், குறிப்பிட்ட சாதிக்கானது அல்ல‌ என அறிவித்தாலே பாதி சிக்கல் தீர்ந்துவிடும்

கலைஞர் செய்த மிக முக்கியமான நல்ல விஷயம்

கலைஞர் செய்த மிக முக்கியமான நல்ல விஷயம் பல உண்டென்றாலும் அவரின் மிக சிறந்த நடவடிக்கை என்பது மாவட்டங்களின் பெயர்களிலிருந்தும், போக்குவரத்து கழகங்கள் பெயரிலும் இருந்த தலைவர்கள் பெயரை நீக்கியது

முதலில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது, சிக்கல் 1990க்கு பின் சாதிய சங்கங்களும் கட்சிகளும் அழிச்சாட்டியம் செய்ய ஆரம்பித்தபின் வந்தது

பெரும் தலைவர்கள் சாதிய அடையாளமாக பார்க்கபட்டு, சாதி தலைவர்கள் பெயரில் மாவட்டம் வேண்டும், போக்குவரத்து கழகம் வேண்டும் என கோரிக்கை வலுத்தது

அது போராட்டமுமானது

யோசித்த கலைஞர் அந்த அதிரடி முடிவினை அறிவித்தார், குமரி நேசமணி முதல் காஞ்சி அண்ணா மாவட்டம் வரை தலைவர்கள் பெயர் நீக்கபட்டது

நேசமணி போக்குவரத்து கழகத்தில் இருந்து திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் வரை பெயர் நீக்கபட்டது

ஜெயலலிதா பெயரிலும் அரசுபோக்குவரத்து கழகம் இருந்தது அதுவும் போனது

கலைஞர் பெரிதும் மதித்த வள்ளுவன், அண்ணா, மூவேந்தர், பல்லவர், கட்டபொம்மன் என பலர் பெயர் நீக்கபட்டது அவருக்கு வருத்தமே

ஆனால் வேறுவழியில்லை, தமிழகத்து அமைதி முக்கியம் என அந்த கடின முடிவினை எடுத்தார்

இதனால் பெரும் நிம்மதி இங்கு கைகூடிற்று, அதில் கலைஞர் வாழ்த்துகுரியவர்

இன்று தலைவர்கள் பெயரில் மாவட்டமும் போக்குவரத்து கழகமும் அமைக்கும் சம்பிரதாயம் தொடர்ந்திருந்தால் காடுவெட்டி வெட்டி குரு மாவட்டம், குரு போக்குவரத்து கழகம் என கிளம்பியிருக்கலாமோ என ராமதாஸ் யோசித்திருக்கலாம்

அவரின் சமீபத்திய எரிச்சலுக்கு அதுவும் காரணமாக இருக்கலாம்

மகா அச்சமூட்டும் விஷயம்

கன்னியாகுமரியில் அந்த கொடுமை நிகழ்ந்திருக்கின்றது

அவள் 11ம் வகுப்பு மாணவி, வகுப்பறையில் கணித ஆசிரியர் திட்டியிருக்கின்றார், பின் அமர சொல்லியிருக்கின்றார்

அமர்ந்த மாணவி அப்படியே இறந்திருக்கின்றாள், ஆனால் அது தெரியாமல் வகுப்பு ஓடியிருக்கின்றது

1மணி நேரம் கழித்தே வகுப்பு கலையும் பொழுது அவள் இறந்த நிலையில் இருந்திருப்பது தெரிகின்றது

இதெல்லாம் மகா அச்சமூட்டும் விஷயம்

மாரடைப்பால் அவள் இறந்திருக்கலாம் அதுதான் வாய்ப்பு

கல்வி சுமையும், அது கொடுக்கும் அழுத்தமும் வெறும் 16 வயது மாணவிக்கே மாரடைப்பு கொடுக்கும் நிலைக்கு சமூகம் இருக்கின்றது

மாணவர்கள் தேர்வுக்காக சாகின்றார்கள், தேர்வு முடிவுகளில் சாகின்றார்கள்

இப்பொழுதெல்லாம் வகுப்பறையிலே சாக தொடங்கிவிட்டார்கள்

பெரும் அழுத்தத்தை அவர்கள் மேல் கொடுத்து அவர்களின் இளமையினையும் அழகிய காலங்களையும் கொல்லும் சமூகம் இப்பொழுது உயிரையும் எடுக்க தொடங்கியாயிற்று

அந்த மாணவிக்கு ஆழ்ந்த‌ அஞ்சலிகள்

கல்விதான் வாழ்க்கை என நம்பும் சமூகம் இனியாவது திருந்தட்டும், வாழ்வில் கல்வியினை தாண்டி ஏராளமான விஷயங்கள் உண்டு

இன்றைய துளிகள் 24/06/2019

பத்திரமாக பாகிஸ்தானில் போய் இறங்க ஒருவழியினை நேற்று செய்துவிட்டது பாகிஸ்தான் அணி

இந்திய அணியும் இப்பொழுது அதே சிக்கலில்தான் இருக்கின்றது என்பது கோலி அணிக்கான எச்சரிக்கை..

எப்படி?

திமுகவினர் “தமிழ் வாழ்க” என்றதும் தமிழன்னை தன் சேலையினை தேடி ஓடினாளே அப்படியா?

ராசா…

கொப்பன் சொத்துக்களோடு உன்னையும் ஏலத்தில் விடுவார்களா?

உன்னை ஏலம் எடுத்து செய்ய வேண்டியதை செய்ய தமிழகம் காத்திருக்கின்றது.

தமிழகத்துக்கு ஒரு “பெரியம்மா ” ரெடி

விஜய் டிவியின் பிக் பாஸில் இந்த பாத்திமா பாபு என்பவரை முதல் போட்டியாளராக இறக்கிவிட்டு இருப்பது ஏதோ உள்குத்து சமாச்சாரம்

அடுத்து என்ன நடக்கும் ?

அனேகமாக விரைவில் கலைஞர் டிவியில் அல்லது சன் டிவியில் வாணி கணபதி சரிகா கௌதமி உள்ளிட்டோர் பங்குபெறும் “ஸ்மால் பாஸ் “போட்டி நடை பெறலாம்

ஒருவேளை பாத்திமா பாபு வென்றுவிட்டால் என்னாகும், தமிழகத்துக்கு ஒரு “பெரியம்மா ” ரெடி.

நாளை மிகபெரும் பொருளாதார தடைகளை ஈரான் மேல் விதிக்க போவதாக அமெரிக்கா மிரட்டியுள்ளது

நீ புடுங்குறது பூராவே தேவையில்லாத ஆணிதான் என அசால்ட்டாக சொல்லிவிட்டு தன் போக்கில் இருக்கின்றது ஈரான்

கொஞ்சமும் அசரவில்லை, ஆம் பொருளாதார தடைகள் ரஷ்யாவினையும் ஈரானையும் பெரிதும் பாதிப்பதில்லை என்பதால் ஈரானியர்கள் அவர்கள் போக்கில் இருக்கின்றார்கள்

முன்பு அடிக்கடி காடு வெட்டி குரு நான் பெற்றெடுக்காத மகன் என்பார் ராமதாஸ்

ஏன் அப்படி சொன்னார் என்பது இப்பொழுது நன்றாக விளங்குகின்றது

குரு நல்லவராகத்தான் இருந்திருக்கின்றார் போல‌, வளர்ப்பு தந்தைதான் சரியில்லை

ஆக குரு என்பவர் ராமதாஸால் தாறுமாறாக வளர்க்கபட்டு பழியும் ஏற்றிருக்கின்றார் பாவம்

அந்த வளர்ப்பு தந்தயின் சுயரூபம் இப்பொழுதுதான் தெரிகின்றது.

மு.க ஸ்டாலினிடம் மட்டும் பம்முகின்றார்கள்

பிரேமலதாவிடம் வம்பிழுக்கின்றார்கள், ராமதாஸிடம் கிடுக்குபிடி கேள்வி கேட்கின்றார்கள்

தமிழிசை எப்பொழுதும் நிருபர்களுக்கு அல்வா மாதிரி, விடமாட்டார்கள்

தமிழக மீடியாக்களும் நிருபர்களும் எல்லா அரசியல்வாதிகளிடமும் கிடுக்குபிடி கேள்விகளை கேட்டு அவர்களை கோபபடுத்துவதி பார்ப்பதில் கில்லாடிகள்

ஆனால் மு.க ஸ்டாலினிடம் மட்டும் பம்முகின்றார்கள்.

நிச்சயம் அவர் கலைஞர் போல அல்ல, 3 கேள்விகள் வசமாக கேட்டாலே மடங்கிவிடுவார்

சில கேள்விகளை எழுப்பினால் பிரேமலதா, ராமதாஸை விட மிக கடுமையாக சிக்கிகொள்வார்

ஆனால் அவரிடம் கடினமான கேள்விகள் ஏதும் எழுப்பபடவில்லை

ஏன் என்றுதான் தெரியவில்லை

எங்கோ ஏதோ ஒப்பந்தம் நடந்திருக்கலாம், அது காப்பாற்றாபட்டு கொண்டிருக்கலாம்..