இன்றைய துளிகள் 25/06/2019(1)

நடிகர் சங்க தேர்தலில் மோடி தலையீடு இருக்கலாம், வாக்குபெட்டியில் முறைகேடு செய்ய ஏற்பாடு என‌மன்சூர் அலிகான் சந்தேகம்

சந்தேகம் எங்கெல்லாம் செல்கின்றது பார்த்தீர்களா?

சும்மாவே கள் குடித்த குரங்குக்கு கஞ்சா கொடுத்தால் என்னாகும்?

ஏற்கனவே அரைகிறுக்கனான மன்சூர் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தபின் இப்படி உளறாவிட்டால்தான் ஆச்சரியம்..

அதிமுக அரசை ஊழல் அரசு என விமர்சித்த தயாநிதி மாறன்: கண்டனம் தெரிவித்த பாஜக எம்.பி

அதிமுகவினரை விமர்சித்தால் பாஜக எம்பிக்கள் ஏன் கொதிக்கின்றார்கள்?

அங்கு அடித்தால் இங்கு ஏன் வலிக்கின்றது?

ஆனால் பாஜக அரசை விமர்சித்தால் தற்போதைய அதிமுகவினரிடமிருந்து ஒரு எதிர்ப்பும் வராது, வரவே வராது.

சிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக மு.க.ஸ்டாலின் பெங்களூர் சென்று தண்ணீர் கேட்டிருக்கலாம்- தமிழிசை

அக்கோவ், ஏன் எல்லாம் அவர்தான் கேட்க வேண்டுமா?

பழனிச்சாமியும் மோடியும் மிக்சர் சாப்பிடுவதற்கா பதவியில் இருக்கின்றார்கள்?

உங்களுக்கெல்லாம் டெப்பாசிட் மிஞ்சியதே அதிகம் அக்கோவ்..

தினதந்தியினை படிக்காதீர்கள் பெரும் மடையர்களாக அது உங்களை மாற்றிவிடும், அது தமிழக சாபம் என தலையில் அடித்து கெஞ்சுகின்றோம் என்றால் இதற்காகத்தான்

உலக இந்துக்கள் எல்லாம் நன்றியோடு பாராட்டவேண்டியது யாரை என்றால்

உலக இந்துக்கள் எல்லாம் நன்றியோடு பாராட்டவேண்டியது யாரை என்றால் நாசாவினையும் அதற்கு படியளக்கும் அமெரிக்க அரசையும்

ஆம் மாபெரும் பொருட்செலவில் பிரபஞ்ச ரகசியங்களை அறிய அமைக்கபட்ட அந்த அமைப்பு அதை எல்லாம் விடுத்து என்ன காரியம் செய்கின்றது தெரியுமா?

திருநள்ளாறு ஆலயம், சிதம்பரம் ஆலயம், மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தை எல்லாம் தன் செயற்கை கோள்கள் மூலம் கடும் ஆய்வினை செய்து வருகின்றது

அட கொடிமரம், தெப்பகுளம் என எதனையும் அது விடுவதில்லை

அந்த ஆய்வுமுடிவினை போகிற போக்கில் பிரின்ட் அவுட் எடுத்து வானத்தில் இருந்தே பொத்தென்று கீழே வீசிவிடுகின்றது

அதை எடுக்கும் இந்து அபிமானிகள் அப்படியே கலங்கி அழுதுவிட்டு அதை முகநூல் உட்பட சமூக ஊடகமெல்லாம் பரப்புகின்றனர்

ஆனால் ஒருவருக்கும் நாசாவுக்கும் அமெரிக்க அரசுக்கும் நன்றி சொல்ல மனமில்லை

ரஷ்யாவின் சோயுஸ் கலம், சீனாவின் கலம், சர்வதேச விண்வெளி நிலையம் என எதுவும் செய்யாத விஷயங்களை நாசாவின் கலம் மட்டும்தான் செய்கின்றது பாவம்..

இனியாவது டிரம்புக்கும், நசா இயக்குநருக்கும் நன்றி சொல்லி தொலையுங்கள்..

இல்லையேல் நாசபாவம் (பாபநாசம் அல்ல) சும்மா விடாது

ஏன் என்றால் இங்கு அப்படித்தான்.

கனிமொழி சிறையில் அடைக்கபட்டால், இல்லை அவர்மேல் குற்றசாட்டு வந்தவுடனே ஆளாளுக்கு குதித்தார்கள்

இந்தோனேஷிய தீவினை கலைஞர் வாங்கிவிட்டார், ஊட்டி எஸ்டேட் முழுக்க வாங்கிவிட்டார் அய்யகோ போயஸ் கார்டனை தவிர எல்லா சொத்தையும் திமுக வாங்கி குவித்தது என ஒரே சத்தம்

கனிமொழி சிறையில் இருக்கும் போது 1 லட்சத்து 85 ஆயிரம் கோடி டோவ், அதை 1 ரூபாயாக மாற்றி அடுக்கினால் நிலாவுக்கு எட்டும் டோவ் என கடும் சத்தம்

எவ்வளவு செய்திகள்? எவ்வளவு கட்டுரைகள்? எவ்வளவு விவாதங்கள்?

இதோ சோமஸ் கந்தர் சிலை ஊழலில் ஒரு பூஸாரி கைது செய்யபட்டிருக்கின்றார்

இது பற்றி கேட்டால் அதெல்லாம் விசாரணை நடந்து தீர்ப்பு வரும்வரை அதுபற்றி பேசுவது சரியல்ல என சொல்லிவிட்டு கனத்த மவுனம் காக்கின்றார்கள்

ஏன் என்றால் இங்கு அப்படித்தான்..

வி.பி சிங்கின் சாதனைகளை மறக்க முடியாது

மிக குறுகிய காலம் இருந்தாலும் வி.பி சிங்கின் சாதனைகளை மறக்க முடியாது

பெரும் சர்ச்சையினை மேல்சாதி கட்சிகள் கொண்டுவந்த போதும், மண்டல் கமிஷன் அறிக்கையினை அமுல்படுத்தியது அவர் ஆட்சியில்தான்,

நீண்டகால கோரிக்கையான அம்பேத்கருக்கு “பாரத் ரத்னா” வழங்கபட்டதும் அவர் ஆட்சியில்தான்

இன்னும் ஏராளம் உண்டு

தாழ்த்தபட்ட மக்களுக்காக ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற அவரின் செயல்பாடுகள் பாராட்டதக்கவை

அதன் விளைவே அவர் அரசு கவிழ்க்கபட்டு சந்திரசேகர் பிரதமர் ஆனார்

இன்று பிரபாகரன் என குதிப்போர் ஒரு விஷயத்தை மறக்கின்றார்கள், ஆம் கலைஞர் வற்புறுத்தியதில் அமைதிபடையினை இலங்கையில் இருந்து திரும்ப பெற்றார் வி.பி சிங்

அப்பொழுது மணலாற்று பகுதியில் பிரபாகரனின் முகமான ஏ1 முகாமினை இந்தியபடை வளைத்திருந்தது, ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் சனியனை தூக்கி வந்து விடுவோம் என இந்திய ராணுவம் வைத்த கோரிக்கையினை ஏற்காமல் அதனை திரும்ப பெற்றார்

விபி சிங் மட்டும் கொஞ்சம் இறுக்கமாக இருந்திருந்தால் அன்றே பிரபாகரன் கதை முடிந்திருக்கும், அவனை காப்பாற்றியதில் விபி சிங்கின் பங்கு முக்கியமானது

இதனை எல்லாம் யாரும் பேசமாட்டார்கள், காரணம் இதனை சொன்னால் கலைஞர் உதவினார் என சொல்லவேண்டி இருக்கும் அல்லவா? அந்த அரசியல் மோசடி

விபி சிங் அரசு நீடித்திருந்தால் கலைஞர் அரசு கவிழ்க்கபட்டிருக்காது, ஜெயா அரசியலில் உச்சம் பெற்றிருக்க மாட்டார், தினகரன் இம்சை எல்லாம் வந்திருக்காது

நிச்சயம் அந்த அரசு கலைந்திருக்க கூடாது, பின்னர் அதற்கான விலையினை கலைத்த ராஜிவ் கொடுத்தார்

கலைஞருக்கு மிக பிடிதமானவர் அந்த விபி சிங். காரணம் சில நியாயமான காரியங்களை செய்த ஒரே பிரதமர் அவர்

காவேரியில் கூட நடுவர் மன்றம் கலைஞர் வற்புறுத்தலில் அவர் ஆட்சியில்தான் அமைக்கபட்டது.

புறக்கணிக்கபட்ட பலரின் வலியினை உணரும் மனம் அவரிடம் இருந்தது, கூட்டாட்சி தத்துவத்தை ஏற்றுகொண்ட மிக சில வடநாட்டு அரசியல்வாதிகளில் விபிசிங் முதன்மையானவர்

அம்பானிகளை அவர் அலறவிட்ட அளவு இன்னொருவர் செய்யவில்லை, தன் ஆட்சிகாலம் முழுக்க அம்பானிகளின் சிம்ம சொப்பணமாகவே இருந்தார்

அரசியலில் அவர் வீழ்த்தபட்டதில் அம்பானிகள் பங்கும் இருந்தது.

இந்திய பிரதமர்களில் மிக மிக நல்ல பிரதமர்கள் எனும் வரிசையில் லால்பகதூர் சாஸ்திரி முதலில் வருவார். நேருவிடம் கூட சில சமரசம் இருந்தது

சாஸ்திரி சமரசத்திற்கு அப்பாற்பட்டவர், அவரை அடுத்து மிக சிறந்த பிரதமர் விபி சிங்.

ஆனால் இருவரும் கொஞ்சகாலம் தான் இந்தியாவினை ஆண்டார்கள் என்பதுதான் மகா சோகம். இந்திய விதி அப்படி

பாபர் மசூதி பிரச்சினையில் அவர் காட்டிய உறுதி வாழ்த்ததக்கது.

இன்று அவரின் பிறந்த நாள், பிரபாகரனின் உயிரை காத்தவரின் பிறந்த நாள், ஆனால் யாருக்கும் நினைவில் இல்லை

அந்த நல்ல மனிதரான விபி சிங்கிற்கு அஞ்சலிகள்…

அதுவும் அம்பேத்கருக்கு பாரத ரத்னா கொடுத்து அவர் படத்தை நாடாளுமன்றத்தில் திறந்த ஒரே பிரதமர் என்ற வகையில் விபி சிங் மிக உயர்ந்து நிற்கின்றார்.

அம்பேத்கரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்றது விபி சிங் என்ற ஒரு விஷயத்தில் அடங்கி இருக்கின்றது டெல்லியின் மகா சர்ச்சைகுரிய சாதி அரசியல்

மறக்க முடியா மகத்தான மனிதருக்கு நினைவஞ்சலிகள்

அமைதிபடையினை திரும்ப பெற்றார் என்ற மாபெரும் குற்றசாட்டை தவிர அவர்மேல் ஒரு பழியும் சொல்லமுடியாது

அவர் அதை திரும்பபெற்றிருக்க கூடாது, அதனால் இங்கும் அங்கும் நடந்த அழிவுகளும் இந்தியா இழந்ததும் ஏராளம்

அதெல்லாம் ஆண்டவன் கொடுக்கும் வரம்

இசை என்பது பிராமணரின் அடையாளம் என்பது கச்சேரி மேடை தாண்டி சினிமா வரை இருந்தது

அது எங்கள் குல சொத்து என கொண்டாடியதை முதலில் உடைத்து போட்டவர் இளையராஜா

அவரையும் முதலில் விட்டார்களா?

இது இசையே இல்லை, சாவுக்குத்து மேளம் என்றெல்லாம் விரட்டினார்கள். ஆனால் நின்று சாதித்தார் இளையராஜா

(ஆனால் உண்மையான காட்டு அடியினை கொடுக்கும் அனிருத் என்பவர் மேல் சர்ச்சை வராது, காரணம் அவாள் எல்லாம் வேறு வகை)

இளையராஜாவின் வரவுக்கு பின்பு பிராமணர் அல்லா பாடகர் பாடகிகளும் நிறைய வந்தனர்

அதன் பின் ரகுமான் அந்த இடத்தை பிடித்தார் என்பது வேறுவிஷயம்.

நாம் சொல்ல வரும் விஷயம் இதுதான்

இசை எம் குல சொத்து என அந்த இனம் சொல்லிகொண்டுதான் இருக்கும், எல்லாம் எதுவரை என்றால் இன்னொருவன் எமக்கும் இசை வரும் என நிரூபித்து காட்டும் வரை…

மற்றையவன் தன்னை நிரூபித்துவிட்டால் கம்மென்று அமர்ந்து பின் காலிலும் விழுவார்கள்

அப்படி சுதா ரகுநாதனின் பேரபிள்ளைகளுக்கும் ஒரு காலம் வரும்

கெஞ்சினால் மிஞ்சுவதும் மிஞ்சினால் கெஞ்சுவதும் அவர்கள் குணம்

இசை என்பது கடவுளின் வரம், அவரால் அவர் விரும்பியவருக்கு நிரம்ப கொடுக்கபடும்

ரகுமான் முதல் மைக்கேல் ஜாக்சன் வரை அந்த திருவையாறு மும்மூர்த்திகளை வணங்கிவிட்டா சாதித்தார்கள்?

அதெல்லாம் ஆண்டவன் கொடுக்கும் வரம்

ஒரு சாதிக்குள் அடைப்பது என்பது முட்டாள் தனம், மும்மூர்த்திகள் கிழித்தார்கள் என்பது அதைவிட மடத்தனம்

நினைத்து பார்க்கவே நடுக்கம் வரும் காட்சிகள் அவை

சுதந்திரம் வாங்கி மக்களாட்சி வந்து கிட்டதட்ட 73 ஆண்டுகள் ஆகின்றது

இன்றைக்கு கூட, அதுவும் வெளிநாட்டில் பணியாற்றும் பிராமண பெண் இன்னொரு இனத்துக்காரனை திருமணம் செய்யும் நிலையில் அவள் தாய்க்கு எவ்வளவு மிரட்டல்?

இன்றே அதாவது மாறிவிட்ட காலங்களிலே இவ்வளவு மிரட்டல் என்றால் பாரதியார் எவ்வளவு அவமானபடுத்தபட்டிருப்பார்?

பாரதிக்கு முந்தின காலங்கள் எப்படி இருந்திருக்கும்?

நினைத்து பார்க்கவே நடுக்கம் வரும் காட்சிகள் அவை

பட்டமரத்திற்கே இந்தபாடு என்றால் பச்சை மரம் என்னபாடு பட்டிருக்கும்?

என் அருமை பாரதியே, சீனிவாச ராமானுஜமே உங்களின் வலி இப்பொழுதுதான் புரிகின்றது

உங்களுக்கே அந்நிலை என்றால் மற்ற இனங்களின் கதி எப்படி இருந்திருக்கும்?

வெள்ளையன் இங்குள்ள அரசர்களை அழிக்கும்பொழுது பிராமணனுக்கு கவலை இல்லை

அவன் இந்நாட்டின் செல்வங்களை கொள்ளையிட்டபொழுது பிராமணனுக்கு கவலை இல்லை

அவன் எல்லா சாதிக்கும் கல்வி கொடுத்து, மத அடையாளம் கொடுத்து இந்துமதத்தின் அடிமடியில் கைவைத்தபொழுதுதான் இங்கு பிராமணர் ஏற்றிவைத்த சுதந்திர போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்தது என எங்கோ படித்த வரி நினைவுக்கு வருகின்றது

பிராமணரின் அடிப்படை கட்டுமான‌ ஆதாரத்தில் மட்டும் அவன் கை வைக்கவில்லை என்றால் இங்கு சுதந்திர போராட்டமே நடந்திருக்காது என்பது உண்மையோ என்னமோ?

அவர் பேசுவதும் நாம் சாடுவதும் உள்வீட்டு சண்டை

ரஞ்சித் ராஜராஜ சோழனை பற்றி சொன்னது தமிழக பிரச்சினை

இதற்காக இலங்கை தமிழன் எல்லாம் பொங்குவதை ஏற்க முடியாது

இதெல்லாம் நாம் தமிழர், தொப்புள்கொடி, 7 தமிழர் என எங்கோ திசை திருப்பும் முயற்சி

ரஞ்சித் தமிழக தமிழர், அவர் பேசுவதும் நாம் சாடுவதும் உள்வீட்டு சண்டை

இதை கேள்வி கேட்க கடல் கடந்த எந்த பயலுக்கும் உரிமை இல்லை, அதை தரவும் முடியாது.

ராஜ ராஜ சோழன் தமிழக தமிழ் மன்னன், அவனை சீண்டியதும் தமிழன்

இது எம் உள்வீட்டு தகறாறு, வீணாக இதில் தலையிட வேண்டாம்

உங்களுக்கு இதில் என்ன பாதிப்பு? ஏன் நீவீர் பொங்கி கண்டதையும் பேச வேண்டும்?

சோழனுக்கும் உங்களுக்கும் என்ன? ஈழத்தை அடித்து அடிமைபடுத்தியவன் எம் சோழன், அவ்வளவுதான் அவனுக்கும் உங்களுக்குமான தொடர்பு

உங்கள் கண்டி நாயக்கன், யாழ்பாண பண்டார வன்னியன் பற்றி நாம் பேசுவதில்லை

அப்படியே நீவிரும் பொத்திகொண்டிருப்பது நல்லது.

அரசியல் ஞானம் என்பது அதுதான்

தங்க தமிழ்செல்வனுக்கும் டிடிவி தினகரனுக்குமான மோதல் பட்டவர்த்தனமாக தெரிந்தாயிற்று

இனி என்னாகும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

எல்லா பலங்களும் விழ்ந்து நின்ற துரியோதணன் நிலையில் தனியாக நிற்கின்றார் டிடிவி தினகரன்.

ஒரு 5 வருடத்திற்கு முன்னால் கூட தங்களுக்கு இப்படி ஒரு நிலை வரும் என சசிகலாவோ, தினகரனோ எதிர்பார்த்திருக்க முடியாது

நன்றி என்பதும், விசுவாசம் என்பதும் கொஞ்சமும் எதிர்பார்க்கமுடியாத இடம் அரசியல்

யார் எப்பொழுது முதுகில் குத்துவார்கள் என்பது தெரியாது, அன்றிலிருந்து அதாவது ஜூலியஸ் சீசர் காலத்தில் இருந்தே அப்படித்தான்

கூட்டி கழித்து பாருங்கள் கலைஞர் அக்கட்சிக்கு மிக சரியான வழியினை காட்டிவிட்டு சென்றிருப்பது புரியும்

அரசியல் ஞானம் என்பது அதுதான்

எது “பொட்டைதனமான அரசியல்”?

எது “பொட்டைதனமான அரசியல்”?

தாய்குலங்களின் வாக்குக்காக அம்மா அம்மா என அன்றொருவர் அலறிகொண்டிருந்த அந்த அரசியல்..

இரு பெண்களை முன்னிறுத்தி பின்னிருந்து நடராசன் என்பவர் 25 ஆண்டுகளாக செய்த அந்த அரசியல்

எல்லா சர்ச்சையிலும் மகா ரகசியமாக திமுகவினை முன்னிறுத்திவிட்டு பின்னால் பதுங்கிகொண்டு ஒன்றுமே தெரியா கன்னிபோல வலம் வந்த அந்த அரசியல்..

ஒரு கொள்கையுமில்லா கட்சியாக, திட்டமே இல்லா ஆட்சியாக வலம் வந்த அந்த அரசியல்..

“பொட்டதனமான அரசியல்” என்பது அவர்களுக்கு புதிதே அல்ல..

இதில் என்ன புதிய பொட்டைதனம் கண்டார்களோ தெரியாது, அது அவர்களின் வழக்கமான கலாச்சாரமன்றி வேறல்ல..

போர் ஆமாம் போர்..

நாம் தமிழர் தும்பிகள், திராவிட இம்சைகளை அடுத்து அடுத்த சுற்று சண்டை சங்கிகளோடு தொடங்கிவிட்டது..

போர் ஆமாம் போர்..

ஒரு மனிதனுக்குத்தான் எவ்வளவு சோதனை?

எங்கிருந்துதான் இந்த வயலில் மட்டும் இவ்வளவு களைகள் முளைக்கின்றன என தெரியவில்லை, இங்கு மட்டும் களைகளாக பெருகிகொண்டே இருக்கின்றன‌

என்ன செய்வது? களைகள் பலவகை ஒவ்வொன்றும் ஒருவகை.

திருவையாறும் அந்த “கரை நாடக” இசையும் பிராமணருக்கு மட்டுமானது அல்ல, அல்லவே அல்ல.

அதற்கு முன்பே அந்த இசை இருந்தது, நாயக்க மன்னர்களின் காலத்தில் தெலுங்கு கீர்த்தனைகள் அங்கு புகுத்தபட்டு அந்த மும்மூர்த்திகள் புனிதராக்கபட்டனரே தவிர வேறொன்றும் அல்ல‌

காவேரி கரை நாடும் , கரை நாட்டு இசையும் தமிழன் அடையாளம் அவன் சொத்து. அதை பிராமண இனத்தின் அடையாளம் என்றால் ஏற்க முடியாது.

தீவிரவாதத்துக்கு எதிரான போர் தொடங்கிவிட்டது என சங்கம் கைசாத்து இட்டுவிட்டது