இல்லாவிட்டால் அது இந்தியாவின் ஆப்கன் பகுதியாக மாறும்

வடக்கே நடந்திருப்பது மாபெரும் கொடுமை, சந்தேகமில்லை

ஆனால் இதெல்லாம் அங்கு புதிதா என்றால் இல்லை, அன்றிலிருந்தே அந்த பகுதி அப்படித்தான் இருந்திருகின்றது

புத்தரும், மகாவீரரும் அதை திருத்தபார்த்து தனிவழிகண்டு தோற்றுபோய்விட்டார்கள்

பின்னாளில் அப்பகுதியினை ஓரளவு மீட்டவர் குருநாணக், ஆம் சீக்கியம் அந்த பஞ்சாப் பகுதியினை காத்தது. குருநாணக் வராவிட்டால் பஞ்சாபும் அரியானாவும் இன்று உபி மபி பீகார் போலத்தான் இருந்திருக்கும்

வெள்ளையனுக்கும் அந்த பகுதி சவாலே, கல்கத்தா சென்னை மும்பை என ஆளுநர் என நேரடி ஆட்சி செய்த அவனுக்கு வடக்கே முடியவில்லை

இந்த காட்டுமிராண்டி கூட்டத்தை நீயே ஆண்டுகொண்டு எமக்கு கப்பம் கட்டு என சுல்தான்களையும் மஹாராஜாக்களையும் விட்டு வைத்தான்

அந்த சுல்தான்களும் மஹாராஜாக்களும் கல்வி வளர்க்காமல், நாகரீகம் வளர்க்காமல் அம்மக்களை அப்படியே வைத்தும் விட்டனர்

சுதந்திர இந்தியாவுக்கு அந்த பகுதி பெரும் சவால், நேருவும் இந்திராவும் திணறினர், சஞ்சய் காந்தி துப்பாக்கி சூடு , கட்டாய கருதடை என எல்லை மீறி ஆடினார்

அந்த பகுதியில் மதவாதத்தை தூவுவது எளிதான விஷயம் என்பதால் அதனால் திரட்டபட்ட கூட்டம் பாபர் மசூதியினையும் இடித்தது வேறுவிஷயம்

தாஜ்மகாலையே மிரட்டும் கூட்டம் எப்படிபட்டதாக இருக்க முடியும்

ஆக அங்கு நடக்கும் கொடூரங்கள், கொலைகள் எல்லாம் வழக்கமாக நடப்பது, நிச்சயம் பாஜக ஆட்சி வந்துவிட்டதால் என சொல்லமுடியாது

அது வெள்ளையன் ஆட்சி முதல் மன்மோகன் சிங் ஆட்சி வரை அடிக்கடி நடந்தது, இப்பொழுதும் நடக்கின்றது

இங்கு ஏதோ புதிதாய் நடப்பது போல சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

தரமான கல்வி, கடும் கட்டுபாடுகளுடன் கூடிய சட்டம் , நிலங்கள் ஒரே நபரிடம் குவிந்து கிடக்கும் முதலாளித்துவம் என பல விஷயங்களை செய்தால் அடுத்து வரும் தலைமுறையாவது அங்கு வாழும்

இல்லாவிட்டால் அது இந்தியாவின் ஆப்கன் பகுதியாக மாறும்

கல்வியும் சிந்தனையும் தகுந்த வேலைவாய்ப்புமே அவர்களை உயர்த்தும்

மற்றபடி காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாடி, பகுஜன் ஜமாஜ் என யார் வந்தாலும் எதுவும் மாறபோவதில்லை

மற்றபடி இக்கொடுமைகள் பாஜக ஆட்சியால் மட்டும் வந்ததல்ல அந்த பக்கம் எல்லா ஆட்சியிலும் அப்படித்தான் இருந்தார்கள், இன்னமும் இருப்பார்கள்

இது நிரந்தர தீர்வு அல்ல‌

சென்னை மட்டுமல்ல எல்லா ஊரின் நீர்நிலைகளும் அப்படித்தான் அழிந்து கிடக்கின்றன‌

சென்னையின் மக்கள் நெருக்கம் உட்பட பல சிக்கல்களால் சென்னை சிக்கல் வெளிவருகின்றது, மற்ற ஊர்களில் மறைந்து கிடக்கின்றது

சென்னை சந்திக்கும் சிக்கலை தமிழகத்தின் ஒவ்வொரு ஊரும் சந்தித்து கொண்டுதான் இருக்கின்றது ஆனால் நிலத்தடி நீரும் இன்னும் சில காரணமும் தாக்குபிடிக்கின்றன‌

இது நிரந்தர தீர்வு அல்ல‌

குளங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட் மாபியாக்களாலும் அவர்களின் எச்சி காசுக்கு ஆசைபடும் அதிகாரிகளாலும் வளைக்கபட்டாயிற்று

வயல்கள் எல்லாம் வீடுகளாயிற்று, கால்வாய்கள் எங்கிருக்கின்றது என்பதே தெரியவில்லை

எல்லாமும் அழிந்து கிடக்கின்றன, ஆக்கிரமிப்பின் உச்சத்தில் இருக்கின்றது தமிழ்நாடு

சென்னை சந்திக்கும் பெரும் நீர் சிக்கலை தமிழகத்தின் ஒவ்வொரு ஊரும் சந்திக்கும் காலம் வேகமாக நெருங்கிகொண்டிருக்கின்றது

என்ன செய்து நீர்வளம் பெருக்கினீர்கள்?

அண்ணன் M.m. Abdulla என்பவர் திமுகவின் இணைய பொறுப்பாளர். அவர் குரலே சமூக ஊடகங்களில் திமுகவுக்கான அதிகார பூர்வகுரல்

திமுகவினை தற்காக்கவே அவர் முகநூலில் இயங்குகின்றார்

நல்லது, மபொசியின் பதிவு தொடர்பாக சில கருத்துக்களை சொன்னார். அதாவது மபொசி குடகு பகுதியினை கோரவில்லை, இடுக்கியினை கேட்கவில்லை, இந்தியாவின் கைகூலி, அந்நிய மாநிலங்களை அண்டிபிழைக்க வைத்தவர் என பல கேள்விகள்

நாமும் சில வாதங்களை வைக்கலாம்

குடகு எனப்படும் பகுதி கூர்க் மக்கள் பகுதி, அவர்கள் தனி இனம் என்றும் தனி மாநிலம் வேண்டுமென்றும் தெலுங்கானா போல கேட்டுகொண்டிருந்தவர்கள், அந்த குடகு தனி மாநிலமானாலும் தமிழகத்தோடு இணையுமா?

இல்லை கூர்க் மக்களே தமிழகத்தோடு இணைய அன்று தயாராக இல்லை எனும்பொழுது எப்படி இணைப்பார்கள்?

அதுவும் கிருஷ்ணராஜசாகர் எல்லாம் கட்டபட்ட நிலையில் குடகினை மீட்டிருந்தால் காவேரி சிக்கல் வந்திருக்காது என்பதெல்லாம் அப்பட்டமான பொய்

சரி கபினி ஹேமாவதியில் கன்னடன் அணைகட்டியது போல பவானி அமராவதியில் தமிழகம் கட்டியிருக்கின்றது, தஞ்சை பகுதிக்கு அதில் உரிமை உண்டு

ஆனால் கொடுக்கமுடியுமா? தமிழகமே இங்கு நீர் கொடுக்காது அய்யா

அதென்ன இடுக்கி, வண்டிபெரியர் சிக்கல்?

அன்று தமிழகத்தோடு இணைய இரு பகுதிகளில் ஒன்றைத்தான் கேரளா வாய்ப்பு கொடுத்தது

ஒன்று தேவிகுளம் பீர்மேடு பகுதி இன்னொன்று கன்னியாகுமரி பகுதியும் செங்கோட்டை தாலுகாவும்

இதில் எது தமிழகத்துக்கு அனுகூலம் என்றால் நெல் முப்போகம் விளையும் கன்னியாகுமரி முதல் வாய்ப்பாக இருந்தது

விட்டுகொடுக்காமல் அரசியல் இல்லை, தமிழக அரசின் செயலிலும் அரசியல் இருந்தது. கன்னியாகுமரியினை செங்கோட்டையினை பெற்று தேவிகுளம் பீர்மேட்டை விட்டு கொடுத்தோம்

இன்னொன்று குமரியில் பெரும் கலவரம் வெடித்தது ஆனால் தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு எல்லாம் அமைதி

மக்கள் விரும்பாத போராட்டம் நடக்கா பகுதியினை எப்படி இணைப்பீர்கள்?

சென்னையிலும் போராட்டம் வெடித்ததால் அது தப்பியது திருத்தணியும் அப்படியே

சரி ஒன்றே ஒன்று கேட்கின்றோம்

மபொசி யாரின் கைகூலியாகவும் இருக்கட்டும், இந்த மொழிவாரி பிரிவினையின் பொழுது தமிழக பகுதிகளை மீட்க திமுக என்ன போராடிற்று?

சென்னை மீட்க?

கன்னியாகுமரி மீட்க?

திருத்தணி மீட்க? இல்லை சத்தியமாக இல்லை

சரி இன்று இவ்வளவு பேசும் திமுக குடகு இணைக்க அல்லது வயநாட்டை இணைக்க என்ன போராட்டம் நடத்திற்று?

மபொசி தன்னால் முடிந்ததை செய்தார் ஆனால் திமுக என்ன செய்தது?

இந்தி எதிர்ப்புக்கு 100 பேரை பலிகொள்ளும் அளவுபொங்கிய திமுக, எல்லை மீட்புக்கு என்னய்யா செய்தது?

சிறிய பூசனிசெடி பெரும் காய்களை காய்ப்பது போல மபொசி போராடினார், ஆனால் மாபெரும் ஆலமரமான திமுக என்ன செய்தது?

சொல்வீர்களா? ஒரு ஆதாரம் காட்ட முடியுமா?

தமிழகம் அண்டை மாநிலங்களை நம்பி நீருக்கு இருக்குமளவு இந்தியா சதி செய்தது என்கின்றீர்கள், இந்த பூகோள அமைப்பில் வேறு என்ன செய்யமுடியும் சொல்லுங்கள்?

சரி திமுக ஆட்சியில் சென்னையில் எவ்வளவு குடிநீர் ஆதாரம் அதாவது புழல், பூண்டி போல உருவாக்கபட்டது? எவ்வளவு ஆறுகள் சுத்தபடுத்தபட்டன‌

காவேரி ஒன்றுதான் சிக்கல் அதுவும் துணையாறுகளான பவானி, அமராவதி, நொய்யல் எல்லாம் இங்குதான் ஓடுகின்றன , தஞ்சைக்கு திறந்துவிட்டீர்களா?

என்ன செய்து நீர்வளம் பெருக்கினீர்கள்?

சரி விஷயத்துக்கு வருவோம்

மபொசி தேவை இல்லாத ஏரியாவுக்கு போராடினார் என்றால், சென்னையும் உங்களுக்கு தேவை இல்லாததாக இருக்கட்டும்

ஆனால் தேவை உள்ள இடங்களுக்கு திமுக ஏன் போராடவில்லை?

பாமரன் மபொசியே பெரும் ஆர்ப்பாட்டம் செய்து சில இடங்களை மீட்க முடிந்தது என்றால் பெரும் கட்சியான திமுக ஏன் துறுதுரும்பும் கிள்ளவில்லை?

ஏனய்யா ஏன்?

மபொசி முடிந்த அளவு போராடினார், சரி இந்த பாலாறு சித்தூர் வயநாடு இடுக்கி குடகு எல்லாம் திமுக ஏன் மீட்கவில்லை?

தமிழக தலைவர்களில் மறக்க முடியாத மாமனிதர் மபொசி

தமிழுக்காக, தமிழருக்காக வாழ்ந்த மிக சிலர் உண்டு அவர்கள் சைவ சிந்தாந்த கழகத்தில் இருந்தார்கள், இந்து மத அபிமானிளாக இருந்தார்கள், இந்திய தேசியத‌தை தமிழுணர்வோடு ஏற்றுகொள்ளமுடியும் என்ற உயர்ந்த மனநிலையில் இருந்தார்கள்

அதில் ஒருவர்தான் ம.பொ.சிவஞானம் எனும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்

அவர் தமிழுணர்வாளர். அவர் அளவு தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவுடையோர் மிக குறைவு ஆனால் இந்தியனாக இருப்பதில் அவருக்கு சிக்கலே இல்லை

கம்பராமாயணத்திலும், சிலப்பதிகாரத்திலும் அவ்வளவு ஆழ்ந்த அறிவு அவருக்கு இருந்தது. சிலப்பதிகாரத்தை அவர் சொல்லிய அளவிற்கு யாரும் சொல்லவில்லை இதனால்தான் “சிலம்பு செல்வர்” என அழைக்கபட்டார், ரா.பி சேதுப்பிள்ளை எனும் தமிழறிஞர் அவருக்கு அப்படி பட்டம் வழங்கினார்

திமு கழகத்தின் சிலர் டமாரங்கள், ஆரவாரமாக தமிழ் ஒலி, இலக்கிய ஒலி எழுப்புவார்கள், எல்லாம் வெற்று கூச்சல்கள்

ஆனால் மபொசி போன்றோர் ஆலய மணி போன்றவர்கள். ஆனால் தமிழகம் டமார கூட்டம் பின்னால்தான் சென்றது

மபொ சிவஞானம் முதலில் காங்கிரசில்தான் இருந்தார், நாட்டுக்காக சிறை எல்லாம் அனுபவித்தார். பின்னாளில் காங்கிரஸ் எதிர்ப்பும், பிராமண எதிர்ப்பும் பேஷன் ஆகிவிட்ட காலம் அவரையும் இழுத்தது

அவரின் தமிழறிவும் தமிழுணர்வும் அப்படி இருந்தது, “தமிழரசு கழகம்” என இயக்கத்தை நடத்தினார்.

இவ்விஷயத்தில் கிட்டதட்ட குமரி அனந்தனின் சாயல் இருந்தது. குமரி அனந்தன் மிகபெரும் தமிழறிஞர், மொழியின் தமிழ் மொழியின் அழகினை தன் பேச்சிலே கொண்டு வந்தவர் ஆனால் தேசியவாதி

சென்னையினை தமிழகத்துடன் இணைத்த தீரமிகு போராட்டத்தின் காரணமே அந்த மபொசிதான், அவரின் போராட்டத்தின் விளைவே திருத்தணியும் தமிழகத்தோடு இணைந்தது

திருப்பதி முதல் திருவனந்தபுரம் வரை தமிழருக்கே என முழங்கிய முதல் மற்றும் ஒரே தமிழ் உணர்வாளர் அவர்தான். முழங்குதல் என்றால் கத்துதல் அல்ல‌

ஆதாரத்தோடும் வாதத்தோடும் பேசுவது.

அன்று காங்கிரஸ் அரசு அவருக்கு எதிர்ப்பாய் இருந்தது, திராவிட கட்சிகள் எல்லாம் திராவிடமே என மல்லாக்க கிடந்தன‌

பெரியாரோ சென்னை எங்கே இருந்தால் என்ன திராவிடநாட்டில்தானே இருக்கின்றது என சொல்லிவிட்டு நகர, திமுகவும் அதே நிலைப்பாட்டில் இருந்தது

அன்றைய திமுக அங்கிள் சைமன் கட்சி போலத்தான் இருந்தது, அதுவும் சென்னை சிக்கல் பற்றி கவலைபடவில்லை

ஆனால் சென்னைக்கு தெலுங்கர்கள் மல்லுகட்டியபொழுது “தலை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்..” என உறுமிய ம.பொ.சி தனித்து கவனம் பெற்றார்

அவருக்கு மட்டும் பெரும் ஆதரவு கிட்டியிருக்குமாயின் திருப்பதி முதல் திருவனந்தபுரம் வரை தமிழகத்தோடு இணைந்திருக்கும்.

திருப்பதி முதல் திருவனந்தபுரம் வரை தமிழருக்கே என வாதாடி நின்றார் மபொசி, ஆனால் பெருத்த ஆதரவில்லை

எனினும் கன்னியாகுமரியும், செங்கோட்டையும் தமிழகத்தோடு இணைந்தது என்றால் அந்த தீயினை தொடங்கி வைத்தது நிச்சயம் ம.பொ.சி

தமிழக கிராம பாடல்களை மிகுந்த நுணுக்கத்தோடு ஆராய்ந்தார், அப்படி அவர் வெளிகொண்டுவந்ததுதான் கட்டபொம்மன் வரலாறு

அதுவரை கட்டபொம்மனை பற்றி யாருக்கும் தெரியவில்லை, அவன் பிரபலமில்லை. அப்படி ஒருவன் இருந்தான் போராடி செத்தான் என வெளிகொண்டுவந்தது ம.பொ.சி ஒருவர்தான்

இன்னும் ஏராளமான காரியங்கள் உண்டு

பாரதியாரை பற்றி பல நூல்கள் எழுதினார், பாரதி புகழ் இன்றுவரை நிலைத்து நிற்க அவரின் நூல்களும் காரணம்

இந்திய சுதந்திர தியாகிகளில் மிக உன்னதமான வ உ சிதம்பரனார் பற்றி பல நூல்களை எழுதி அவர் புகழை உயர பறக்க வைத்தவர் மபொசி.

வஉசிக்கு சிலை வைக்க அன்றைய காங்கிரசாரே தயங்கியதில் கடை கடையாக பிச்சையெடுத்து வ உசிக்கு சிலை வைத்த உத்தமன் மபொசி.

சிவாஜி நடித்த கப்பலோட்டிய தமிழன் திரைபடத்தை அவரே இயக்கினார்

வள்ளுவனை பற்றி, இராமலிங்க அடிகளாரை பற்றி அவர் எழுதிய அளவு யாரும் தமிழகத்தில் எழுதவில்லை

தமிழகத்தில் முதல் முதலாக சிலப்பதிகார விழாவினை நடத்திகாட்டியவர் மபொசி. இதற்கு பதிலாக அரசியல் காரணத்துடன் தொடங்கபட்டதுதான் உலக தமிழ்சங்க மாநாடுகள்

ஆக உலக தமிழ்சங்க மாநாடு நடக்க அடியெடுத்து கொடுத்தவரே மபொசிதான்

ஈழவிவகாரத்தில் மலையக தமிழரை இணைக்காமல் தீர்வு கொடுக்க கூடாது என வாதாடி நின்றது அவர்தான். அந்த மக்களை நேரில் சென்று பார்த்து கண்ணீர் விட்டவரும் அவர்தான்

புலிகள் யாழ்பாணம், வன்னி, கிழக்கு மாகாணம் மட்டும் ஈழநாடு என சொன்னபொழுது, பத்மநாபா மலையக தமிழரும் அதில் சேர்க்க வேண்டும் என சொன்னார்

புலிகள் பத்மநாபா மோதல் இதில்தான் தொடங்கியது, இதில் பத்மநாபாவினை ஆதரித்தார் மபொசி

சென்னையில் பத்மநாபா கொல்லபட்டபொழுது கண்ணீர் சிந்தி, புலிகள் ஒரு காலத்தில் கேட்க ஆளின்றி அனாதைகளாக அழிவார்கள் என சொன்னவரும் அவர்தான்.

பெரும் ஆற்றலும், நுட்பமான தமிழுணர்வும் பெற்ற மபொசி ஏன் மற்ற திராவிட தலைவர்கள் போல பெரும் அடையாளம் பெறவில்லையென்றால் அவர் பகுத்தறிவு பேசவில்லை,பெரியார் வாழ்க ,அண்ணா வாழ்க, கலைஞர் வாழ்க என சொல்லவில்லை

அறிஞன் ராமசந்திரனை இதயகனியாக ஏற்கவில்லை, அரசியலுக்கே உரிய பல கோமாளிதனங்களை அவர் செய்யவில்லை.

முக்கியமாக “ஏ இந்திய அடக்குமுறை இந்தி ஏகாதிபத்தியமே “, “, ஆரிய பார்ப்பன அதிகார கூட்டமே ..” என அவர் முழங்கவில்லை,

இப்படிபட்ட படுபயங்கர பாவங்களை செய்ததால் அவர் புறக்கணிக்கபட்டார்

ஆனால் கலைஞருக்கு அவர் மீது உள்ளூர பாசம் இருந்தது. மபொசி கனவுகளான பூம்புகார் நிர்மானிப்பு, வள்ளுவர் கோட்டம், பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை எல்லாம் கலைஞர் கட்டினார்

ம.பொ.சிக்கு இயற்றமிழ் அறிஞர் என்ற பட்டமும் கொடுத்து அவருக்கு சிலையும் வைத்தவர் கலைஞர். தன் மனம் எப்படிபட்டது என்பதை சில இடங்களில் கலைஞர் இப்படித்தன் காட்டினார்.

அது ஆழமாக நோக்கினால் புரிய கூடியது.

தமிழக தலைவர்களில் மறக்க முடியாத மாமனிதர் மபொசி

இன்று அவரின் பிறந்த‌ நாள்

நரகாசுரன் முப்பாட்டன், இன்னும் யாரெல்லாமோ பாட்டன், நாங்கள் தமிழர்கள், நாங்கள் மட்டும்தான் தமிழர்கள் என குதிப்பவர்கள் யாரும் அவரை நினைக்க மாட்டார்கள்.

அவருக்கு அஞ்சலி செலுத்த கூட ஒரு பயலும் நினைப்பதில்லை

ஆனால் தமிழராக, தமிழ் இலக்கியவாதியாக, சொல்லும் செயலும் தமிழராக, எல்லை காத்த தமிழராக அவர் வாழ்ந்தார்

எல்லை காத்தவர் நிச்சயம் அவர்தான், சென்னையும் குமரியும் அவரால் இணைந்தன‌

ஆனால் சீமான் கோஷ்டியிடம் கேளுங்கள், எல்லை காத்தது வீரப்பன், மொழி காத்தது பிரபாகரன்

அந்த மூடர் கோஷ்டி அறிந்தது அவ்வளவுதான்.

தமிழரின் எல்லை காத்த தமிழன் நிச்சயம் மபொசி, தமிழர்கள் ஒருவனை தமிழுக்காகவும் , போராட்ட குணத்திற்காகவும் நினைக்கவேண்டுமென்றால் அதில் மபொசியும் இருப்பார்

அவர் இல்லையென்றால் சென்னை இன்று ஜெகன்மோகன் ரெட்டியின் கீழ் இயங்கிகொண்டிருக்கும்

அங்கிள் சைமன் போன்றோர் இது தமிழர் மண் என பேசிகொண்டிருக்க முடியாது.

பிரபாகரனுக்கும், வீரப்பனுக்கும் அஞ்சலி செலுத்தும் தமிழகத்தில் எல்லை காத்த மபொசியினை நினைத்து பார்க்க யாருமில்லை,

அந்த அளவு குறுக்கு புத்தியுள்ள பைத்தியக்காரன் எல்லாம் தமிழுணர்வு, உணர்வாளன் என கிளம்பியிருக்கின்றான்.

நாம் நல்ல‌ தமிழர், நன்றி மிக்கோர். நல்ல இந்தியனாய். தமிழனாய் வாழ்ந்த அந்த மபொசிக்கு ஆழ்ந்த அஞ்சலி செலுத்துவோம்

சென்னையில் இருப்பவர்கள் கூடுதல் அஞ்சலி செலுத்தலாம்

அ ஆ ….

அதன் அஸ்திவாரமும் கொள்கையும் இயக்கமும் அப்படி

எங்கள் தலைவனுக்கு பாரத ரத்னா வேண்டும், நோபல் வேண்டும் என்ற அழிச்சாட்டியம் இல்லை

எங்கள் தலைவி இருக்கும் திசை நோக்கி வணங்குகின்றேன் என்ற கும்பிடு இல்லை, வெற்று கோஷம் இல்லை, பாடல்கள் இல்லை

எது தமிழகத்துக்கு அத்தியவாசியமோ? எதனை சரியாக பேசி அதிரவைக்க வேண்டுமோ? அதை மிக சரியாக பாராளுமன்றத்தில் பேசுகின்றார்கள் திமுக உறுப்பினர்கள்

நாம் அடிக்கடி சொல்வோம், தமிழகத்தில் ஓரளவு நல்ல திட்டங்களை செய்யகூடிய சிந்தனையும் ஆற்றலும் மிக்க கட்சி திமுக ஒன்றுதான், வேறு எந்த கட்சியும் இப்போதைக்கு இல்லை , அப்படி ஒன்று உருவாகும் வழியும் தெரியவில்லை

தேர்தலில் திமுகவுக்கு மக்கள் கொடுத்த வாக்குகளுக்கு மிக பொறுப்பாக பாரளுமன்றத்தில் பணியாற்றுகின்றது திமுக‌

அது இன்னும் தொடரட்டும், தமிழகம் செழிக்கட்டும்

திமுக வித்தியாசமான கட்சி, மத்தியில் ஆட்சி அசுர பலம் பெறும்பொழுதெல்லாம் அதுவும் அதற்கு ஈடு கொடுத்து போராடும்

மத்தியில் ஆட்சி பலமில்லை என்றால் அதுவும் தன் போராட்ட வீரியத்தை குறைத்துகொள்ளும் ஆனால் ஓயாது

இப்பொழுது அதே பழைய வீரியத்துடன் ஆயிரம் மடங்கு உற்சாகமாய் களத்தில் நிற்கின்றது.

கவனித்து பாருங்கள் புரியும், அந்த கட்சி அப்படித்தான். அதன் அஸ்திவாரமும் கொள்கையும் இயக்கமும் அப்படி

மாபெரும் தலைகுனிவு இது

ராமயணத்தில் ஒரு காட்சி உண்டு

ஓய்வில் மரத்தடியில் அமர்கின்றான் ராமன், வீரனின் அம்பு சாய்த்து வைக்கபட கூடாது என்பது அரச தர்மம்

அந்த அம்பினை ஓங்கி மண்ணில் குத்திவைத்துவிட்டு உறங்கிவிடுகின்றான், எழும்பும் பொழுது அம்பை உருவினால் அதில் ஒரு தேரை குத்தபட்டிருந்தது

பதறிய ராமன், “ஏ தேரையே குத்தபட்டவுடன் ஏன் கத்தவில்லை, உன்னை அப்பொழுதே காப்பாற்றியிருப்பேனே..” என கேட்கின்றான்

தேரை சொன்னது

“எல்லோரும் எங்களை அடித்தால் ஸ்ரீராமா… என உன்னை அழைப்போம், நீயே குத்தினால் நாங்கள் யாரை அழைப்போம்?..”

தலைகுனிந்து நின்றான் ராமன்

அப்படியாக ஏதும் பெரும் துன்பம் என்றால் அவன் பெயர் சொல்லி அழைக்கலாம், ஆனால் அவன் பெயராலே ஒருவனை சாகும் வரை அடித்தால் யாரை அழைப்பது?

இந்து தர்மம் என்பது இது அல்ல, மாபெரும் தலைகுனிவு இது

தங்களை பூரண இந்துக்களாக கருதும் யாரும் இதை செய்யமாட்டார்கள், செய்தவர்கள் நல்ல இந்துக்களாக இருக்க முடியாது.

மிக கடும் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டித்துவிட்டு மேற்கொண்டு இது போன்ற கொடுமை நடக்காமல் காக்கும் கடப்பாடு அரசுக்கு உண்டு

இல்லாவிட்டால் நாடு நாடாய் இராது, வாலியின் ஆட்சியில் நடந்த காட்டுமிராண்டி ஆட்சியாகவே இருக்கும்

இந்த கொடுமையெல்லாம் அந்த ஸ்ரீராமன்விரும்பமாட்டான், அப்படிபட்டவர்களை பக்தர்கள் என அவன் ஏற்றுகொள்ளவு மாட்டான்..

அந்த புனிதமானவன் பெயரால் இவர்கள் செய்யும் கொடுமைக்கு அவன் தண்டனை கொடுத்தே தீருவான்