கொஞ்சமும் பக்தியே இல்லை

பைபிளில் கடவுள் மோசே மூலம் கொடுத்த மகத்தான கட்டளையினை பாதிரிகள் நிறைவேற்றிய காட்சி

இதில் ஈஈஈ என இளிப்பு வேறு ,கொஞ்சமும் பக்தியே இல்லை

கத்தோலிக்கம் அப்படி மாறிற்று

முதலில் எல்லாம் சரியாகத்தான் இருந்தது

தோமா வழியில் மலபாரில் கிறிஸ்தவம் பரவும்பொழுதும் சரி, பிரான்ஸிஸ் சேவியர் வழியில் தமிழகத்தில் பரவும்பொழுதும் சரி , கிறிஸ்தவம் அதன் சாயலில் ஒழுங்காக இருந்தது

வீரமாமுனிவர் கூட இம்மாதிரி விஷயங்களில் இறங்கவில்லை

சிக்கல் ராபர்ட் தே நோபிலி என்பவர் காலத்தில் தொடங்கியது, இவர்தான் இந்த கூத்துகளுக்கு முதல் காரணம்

என்ன செய்தார் இந்த அரைகிறுக்கர்?

அன்று பிராமணருக்கு இந்துமதத்தில் தனிமரியாதை இருப்பதை கண்டார், அவரின் குறுக்கு புத்தி விபரீதமாக யோசித்தது

தானும் மேல்நாட்டு பிராமணன் என்றார், அசைவம் சாப்பிடுவதில்லை என்றார், பூனூல் அணிந்தார்,முழு பிராமணனாக மாறினார்

காஞ்சி காமகோட்டி பீடம் போல உடை எல்லாம் அணிந்து, இந்துக்கள் வழியில் கிறிஸ்துவத்தை பரப்பினார்

பிராமணர் என்றால் அதுவும் அக்கால பிராமணர் என்றால் தீண்டாமை உண்டல்லவா? அதையும் செய்தார் பின் போப்பாண்டவரிடம் வாங்கி கட்டினார்

எனினும் கடைசி வரை திருந்தவில்லை

இந்து மதமுறைப்படியே இங்கு கிறிஸ்துவத்தை பரப்ப முடியும்ம் என மகா உறுதியாக இருந்தார்

இந்துக்களின் முறைபடி கிறிஸ்துவத்தை கொண்டாடலாம் வழிபடலாம், கொடிமரம் வைக்கலாம், தேர் இழுக்கலாம் திருப்பலி என்பதை பூசை என சொல்லலாம் என எல்லாம் இவர் தொடங்கி வைத்தது

அதன் பின் கத்தோலிக்கம் அப்படி மாறிற்று

அதற்கு தமிழ்நாட்டில் கிடைத்த வரவேற்பை எண்ணி வாடிகனும் மவுனமாகி ஒருகட்டத்தில் லத்தீனுக்கு பதில் தமிழிலிலே திருப்பலி நடத்தலாம் என சொல்லிவிட்டது

ஆனால் வழிபாடுகள் இந்துமுறைப்படி இருந்ததே தவிர,கிறிஸ்தவ தெய்வங்களின் சாயல் மாறவில்லை

இப்பொழுது என்னாயிற்று?

அந்த ராபர்ட் தே நோபிலி தொடங்கி வைத்த இம்சை எல்லை மீறி செல்கின்றது

இதை எல்லாம் போப்பிடம் சொல்லித்தான் இனிமாற்ற வேண்டும்

ஆனால் நடக்குமா?

இயேசுவினையே இந்துவாக மாற்றியாயிற்று இனி திருப்பலிக்கு பதில் நமஹ எனும் பூசையும் நற்கருணைக்கு பதில் வெண்பொங்கலும் கொடுப்பார்கள் போல‌

தெப்ப குளமும் தெப்ப திருவிழாவுமே பாக்கி, வேறெல்லாம் நடந்தாயிற்று

இதில் போப்பாண்டவர் வந்தால் விடுவார்களா?

அவரை விரதமிருக்க சொல்லி காவி கட்டிபால் குடம் எடுக்க விட்டுவிடுவார்கள், அதனால் போப் இந்த பக்கம் வராமல் இருப்பது நல்லது

இனி அலகு குத்துதல்,காவெடி எடுத்தல், தீ மிதித்தல் போன்ற பல விஷயங்கள் நடக்கலாம்

நள்ளிரவில் இயேசு சுடுகாட்டுக்கு ஓடும் மயான வேட்டை கூட நடந்தாலும் ஆச்சரியமில்லை

பிள்ளையாரை பிடிக்க குரங்காய் போனதல்ல இந்த‌ விஷயம், இந்து மதத்தை பின்பற்றி அதை அப்படியே பிடிக்க எண்ணினால் இந்து மதமாகவே மாறிவிட்டது கிறிஸ்தவம்

அந்த ராபர்ட் தே நோபிலி இப்பொழுது எங்கிருப்பார் என தெரியவில்லை, ஆனால் செய்திருக்கும் காரியத்துக்கு இயேசுவின் எதிரியான சாத்தான் அவரை கொண்டாடிகொண்டிருக்கும்

அதன் காலடியில் அமர்ந்து மலங்க மலங்க விழித்துகொண்டிருப்பார் நோபிலி

மாமன்னனாக திப்பு கண்ணில் தெரிவான்

திப்பு மதவெறியனாக இருந்திருந்தால் சிந்து பஞ்சாப் மாகாணங்களை போல மைசூர் இஸ்லாமிய பகுதியாக மாறியிருக்கும்

குறைந்தபட்சம் ஐதரபாத் போல இஸ்லாமிய அடையாளமாக மாறியிருக்கும்

அவன் கட்டாயமதமாற்றம் எதுவும் செய்யவில்லை, அப்படி செய்தால் தன் ஆட்சி நிலைக்காது என அஞ்சினான், ஐதர் அலி சொல்லிகொடுத்த பாடம் அது

மைசூரின் வழி வழி மன்னர் அல்ல அவர்கள், உடையார்களின் ஆட்சி சீரழியும்பொழுது வேலைக்காரனான ஐதர் அதை தாங்கினான்

மாபெரும் உயரத்துக்கு அதை எழுப்பினான், திப்புவும் அப்படியே உருவானான்

கடைசிவரை இந்துமதத்து மேலான அவனின் மதிப்பும் மரியாதையும் அப்படி இருந்தது

கட்டாய மதமாற்றம், இந்து எதிர்ப்பு, இஸ்லாமிய வெறி எல்லாம் அவனிடம் இருந்தால் இன்று கன்னடம் முழு இஸ்லாமிய மாநிலமாக குறைந்தபட்சம் மலபார் போல இஸ்லாமிய அடையாளமாக மாறியிருக்கும்

அதுவா நடந்தது?

வரலாற்றை புரட்டி சொந்த மூளை இருந்தால் எல்லாம் சீர் தூக்கி பாருங்கள், மாமன்னனாக திப்பு கண்ணில் தெரிவான்

முத்தலாக்

பெரியாரிய கொள்கைகளுக்காக பாராளுமன்றம் சென்ற தமிழக சிங்கம் எதுவும் முத்தலாக் விஷயத்தில் பெரும் வரவேற்பினை செய்ததாக தெரியவில்லை

திடீரென மனைவியினை நோக்கி தலாக் என சொல்லி விரட்டினால் அவள் என்ன செய்வாள்? எப்படி வாழ்வாள்?

ஒரே நொடியில் பெண்களின் வாழ்க்கையினை நிர்கதி ஆக்கிவிடும் விவகாரமது

முத்தலாக் என்பது இந்துக்களின் பொட்டுகட்டி விடும் சடங்கினை போல மகா கொடுமையானது

அந்த சம்பிரதாயத்தை வேறறுத்தது திராவிட சித்தாந்தம் என முழங்கியவர்கள் முத்தலாக் பற்றி முணுமுணுப்பதோடு சரி

அவர்களை விடுங்கள் , பெண் விடுதலை காக்க வந்த தலித்திய திருமா கோஷ்டியும் மகா அமைதி

ஏன்?

அந்த காயிதே மில்லத் போன்றவர்கள் கலைஞர் கையினை பற்றி “தமிழக இஸ்லாமியருக்கு ஒரே அடைக்கலமும் நம்பிக்கையும் நீங்கள்” என உருகியதாக இருக்கலாம்

நேற்று பாராளுமன்றத்தில் முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம் இயற்றபட்டபொழுது திராவிட போர்வாள் வைகோ என்பவர் வாயில் பிளாஸ்திரி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன‌

அன்னார் கத்தார், துபாய்,குவைத் எல்லாம் சென்று திராவிட கூட்டங்களை நடத்தியவர் என்பது கூடுதல் தகவல்

ஆடி அமாவாசை

இறந்தவரை நினைவு கூறல் என்பது உலகெங்குமுள்ள‌ எல்லா மதங்களிலும் இனங்களிலும் உள்ள உலக வழக்கம்

அது செவ்விந்தியர், மாயன் தொடங்கி ஜப்பானிய இனம் வரை உண்டு, அது யூத இனத்தில் உண்டு அது கிறிஸ்துவத்தில் கலந்து ஐரோப்பாவில் நவம்பர் 2 என குறிக்கபட்டது

சீனர் போன்ற கிழக்காசிய இனம் 6 மாதத்துக்கு ஒருமுறை அனுசரிக்கும், அன்று முன்னோருக்கு படையல் மட்டுமல்ல சில ஸ்பெஷல் காகிதங்களை எரித்து அந்த புகையினை மேல் அனுப்பி முன்னோருக்கு பணம் அனுப்பும் முறை எல்லாம் உண்டு

இந்த நீத்தார் வழிபாடு உலகெல்லாம் இருந்தாலும் தென்புலத்தார் எனும் தமிழரிடம் அதிகம் இருந்தது, வாழ்வின் மிகபெரும் கடமையாக அதை கருதினர்

அது தமிழர்வாழ்வில் கலந்திருந்ததை புறனாற்று பாடலான “ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்” என்பது தெளிவாக சொல்கின்ன்றது

வள்ளுவனும் அதை தெளிவாக சொல்கின்றான் இப்படியாக‌

“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை..”

இன்னும் ஏகபட்ட பண்டைய இலக்கியம் மற்றும் நீதி நூல்களில் அதன் அடையாளங்களை காணமுடியும்

அது தமிழரின் அடையாளமாக இருந்தாலும் இந்துக்களின் கலாச்சாராமாக மட்டும் சுருங்கிவிட்டதுதான் சோகம், எனினும் இந்துக்களால் அந்த கலாச்சாரம் தொடர்கின்றது

இன்றைய நாளில் அந்த வழக்கபடி முன்னோர்களை வணங்கி நினைவுகூறுவார்கள், அதை கூர்ந்து கவனித்தால் பல அற்புதமான விஷயம் இருப்பதை காணமுடியும்

அதிகாலை எழுந்து விரதம் இருப்பார்கள், முதலில் காக்கைகு சோறு வார்ப்பார்கள், தங்கள் முன்னோர்களே காக்கை உருவில் வந்ததாக நினைத்து கொள்வார்கள்

காகம் பித்ருக்களின் வடிவம் என்பது அவர்கள் நம்பிக்கை, மனிதனை அண்டிவாழும் பறவை என்பதாலும் கூடி உண்ணும் அப்பறவையில் பல தத்துவங்கள் இருக்கலாம் என்பதாலும் அச்சம்பிரதாயம் ஏற்பட்டிருக்கலாம்

தன் இனத்தை எல்லாம் கூடிஉண்ண செய்யும் அப்பறவையில் தன் இனத்துக்காக உழைத்து சோறிட்ட முன்னோர்களை அவர்கள் கண்டிருக்கலாம்

அதன் பின் முன்னோர்களுக்கு பிடித்த ஆடையினை எடுத்து வைத்து அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்துவைத்து மறக்காமல் விளக்கேற்றுவார்கள்

எவ்வளவு அருமையான ஏற்பாடு?

முன்னோர்கள் நமக்கு உடை தந்தவர்கள், சுவையான உணவினை பாசமாய் தந்தவர்கள் என நினைவுகூறும் அற்புதமான நன்றிகடன் அது

அதை பார்த்து பார்த்து அதில் மூழ்க செய்யும் நுட்பம் அது, மனமார அதில் கலந்துவிடும் ஏற்பாடு அது

இன்னும் சிலர் முன்னோர்கள் கட்டி வைத்த கட்டங்கள் வீடுகள் அவர்கள் வளர்த்த செடிகொடிகளை எல்லாம் தொட்டு வணங்குவார்களாம், சிலருக்கு அச்சம்பிரதாயம் உண்டென்பார்கள்

ஆம் முன்னோர்கள் விட்டு சென்ற சுவர்களை தொட்டாலே ஒருவித ஏகாந்தமும் நினைவும் வரும்.

அதன் பின் மறக்காமல் நீர் நிலைகளுக்கு செல்வார்கள்

அது ஏரி,குளம், ஆற்றங்கரை அல்லது கடற்கரை என செல்வார்கள்

அங்கு பிண்டம் வைத்து வணங்குவது அவர்கள் நம்பிக்கை எனினும் அதிலுள்ள தத்துவம் அந்த இடத்தில் அவர்கள் முன்னோடு நடமாடி இருப்பார்கள், குளித்திருப்பார்கள்

அந்த குளகரையில் ஒன்றாக உண்டிருப்பார்கள்

அந்த நீர்நிலையில் அவர்கள் கலந்து தங்களோடு இருப்பதாக கருதி அவர்களுக்கும் உணவளிப்பதாக அந்த பிண்டத்தை கரைப்பார்கள்

ஏரியோ குளமோ அவர்கள் முன்னோர் கட்டியதாக இருக்கும், அவர்கள் உழைத்ததாக இருக்கும். ஆறு அவர்கள் வம்சத்துக்கு வாழ்வளித்த இடமாக‌ இருக்கும்

அங்கு செல்வது சால சிறந்தது, நினைவாலயம் அவைகள்

சிலர் கடலுக்கு செல்வார்கள், கடல் எல்லாவற்றையும் ஏற்றுகொள்ளும் கடவுளுக்கு சமம், கடவுளில் கலந்துவிட்ட முன்னோரை கடற்கரையில் நின்று நினைத்தால் மனம் ஒருவித நிறைவடையும்

அந்த ஆடி அமாவாசையின் ஒவ்வொரு ஏற்பாடும் மகா உன்னதமானது, அர்த்தம் மிகுந்தது.

ஏன் அமாவாசையினை தேர்ந்தெடுத்தார்கள் எல்லா விஷயமும் இல்லாத ஒன்றில் இருந்தே தொடங்கும். நாங்கள் சூனியம் நீங்கள் ஒளிதர வாருங்கள் என அழைக்க அந்த இருட்டு நாளை தேர்ந்த்டுத்தார்கள்

இன்னொரு கோணமும் உண்டு அது சாத்தியமான உண்மை.

நிலா காலண்டர் உள்ள அக்காலத்தில் அதுவே மாத தொடக்கம், அதுவும் ஆடி அமாவாசை என்பது விவசாய பணிகளுக்கான தொடக்க நாள்

அன்று தங்களுக்கு நிலமும் வயலும் குளமும் கால்வாயும் உருவாக்கி தந்த முன்னோரை மனமார வணங்கினார்கள்.

நன்றியினை பெரிதாக கொண்ட தென்புல சமூகம் தன் முன்னோர்களை எண்ணி செய்த பெரும் ஏற்பாடு இது , உலகின் மற்ற இனங்களை விட இந்த இனம் நீத்தார் கடனில் தனித்து நின்றது

அந்த மாபெரும் நன்றிவிழாவின் தொடர்ச்சியே இந்த ஆடி அமாவாசை

அந்நாளில் வழிபட்டால் பித்ருக்கள் ஆசி கிடைக்கும் என நம்பாதவன் கூட அப்படி செய்தால் ஏற்படும் மன‌ நிறைவினை மறுக்க முடியாது

முன்னோர்களின் சொத்து எப்படி வழிவழி வருகின்றதோ அப்படியே அவர்கள் செய்யும் நல்ல காரியங்களின் ஆசியும் அவர்கள் செய்த பாவத்தின் தொடர்ச்சி சாபமாக வருகின்றது என்பதும் இந்துக்களின் நம்பிக்கை

இதில் பகுத்தறிவாளர் ஒரு கேள்வி எழுப்புவர் நல்லதோ கெட்டதோ செய்தவனையன்றி அவன் வம்சத்தை தொடர்வானேன்? எல்லாம் கட்டுகதை என்பார்கள்

அவர்கள் அப்படித்தான்

ஒருவனுக்கு முன்னோர் சொத்து வழிவழியாக வந்தால் அதைகொண்டு அவர்கள் பெயரில் நற்காரியம் செய்தல் வேண்டும்

முன்னோர் செய்த பாவம் ஒருவனை தொடர்வதாக கருதினால் அதற்கு நிவாரணமாக தாழ கிடப்பவருக்கு சில உதவிகளை செய்து வாழவைக்க வேண்டும்

யாரையோ அழித்து முன்னோர் செய்த பாவம் அவன் வம்சாவழி யாரையோ வாழவைக்கும் பொழுது சரியாகின்றது

ஆண்டவனின் கணக்கு மிக துல்லியமாகின்றது

இன்று அயோக்கியர்கள் கையில் சேரும் சொத்து பல ஆயிரம் கோடிகளுக்கான சொத்து எதற்கு சேருகிறதென்று நமக்கு தெரியாது

ஆனால் அவன் சந்ததியில் ஒருவன் அந்த செல்வத்தால் 4 பேரை வாழவைப்பான் என்பது ஆண்டவனுக்கே தெரியும்

இன்றுநடக்கும் அநியாயங்களின் கொடுமை கடவுளில்லைஎன தலையாட்ட சொல்லலாம் , ஆனால் நாளை அந்த அநியாயக்காரரின் வாரிசுகள் பின்னாளில் பலகாரியங்களை செய்யும்பொழுது ஆண்டவன் கணக்கு சரியாகும் என்பது தெரியும்

இதெல்லாம் நம் அறிவுக்கு எட்டா விஷயங்கள், புரிந்து கொள்ள முடியா சூட்சுமங்கள்

ஒவ்வொருவனின் முன்னோரும் தன் வம்சத்துக்கு ஒருவித காரியங்களை கடவுள் விருப்படிசெய்ய இங்கு வருகின்றான்

அதை செய்துமுடித்துவிட்டு காலம் முடிந்து கிளம்புகின்றான்

அதன் காரிய காரணங்களை அவனும் அறியமாட்டான், அதை தெரிந்துகொள்ளும் அறிவும் அவனுக்கு இல்லை

ஆனால் அவன் வந்து சென்றதின் பலன் என்ன என்பது இப்பொழுது வாழும் தலைமுறைக்கே தெரியும்

அதனால் குறிப்பிட்ட நாளில் தன் குலம் உதித்த காரணமும் அது செய்த நற்காரியங்களையும் தான் இந்த உலகுக்கும் உறவுக்கும் சமூகத்துக்கும் செய்யவேண்டிய காரியம் சாப நிவர்த்தி போன்றவற்றை செய்ய சிந்திது பார்க்க செய்யும் நாளே ஆடி அமாவாசை

இந்த நாள் சொல்லும் தத்துவம் அதுவே

எல்லா மதங்களிலும் நீத்தார் வழிபாடு உண்டெனினும் மதங்களுக்கு தாயான இந்துமதம் அதை மிக தெளிவாக தனக்கே உரித்தான எளிமையுடன் அழுத்தமான தத்துவத்துடன் சொல்கின்றது

தென்புலத்தானாக அதில் பெருமை அடையலாம்

அவரவர் முன்னோரை இந்நாளில் கூர்ந்து கவனித்து நினையுங்கள், அவர்கள் நினைவுகளில் மூழ்குங்கள்

அது வாழ்வினை திரும்பி பார்க்க வைக்கும், முன்னோர்களின் நினைவுகள் நமக்கு ஏகபட்ட பாடங்களை சொல்லும்

இன்று அவர்களை வழிபட்டால் அவர்களின் ஆசி கிடைக்கும் என நம்பினால் அது கிடைக்கும், இல்லை குறைந்த பட்சம் மனநிம்மதியும் நாம் ஆற்றவேண்டிய கடமைகளின் பட்டியலும் மனதில் அப்படியே வந்து அமரும்

மிக அர்த்தம் பொதிந்த முன்னோர் நினைவுநாளை ஏற்படுத்திய இந்து தர்மத்தையும், அதை அடியொற்றி நடக்கும் இந்துக்களையும் தூர இருந்து பார்க்கும்பொழுது மனம் மகிழ்த்தான் செய்கின்றது

அவர்களின் முன்னோர்கள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும், முன்னோர்களின் கனவு இவர்கள் மூலம் நிறைவேறட்டும், உலகம் செழிக்கட்டும்

தர்மம் நிலைக்கட்டும்

பலன்பெற்ற பயிர்கள் எல்லாம் வாடுகின்றன..

காபி டே எனப்படும் செயின் ஷாப் கடைகளை நிறுவிய‌ சித்தார்த் என்பவர் தற்கொலை செய்துகொண்டார் என்கின்றன செய்திகள்

வழக்கம் போல மோடி ஆட்சியில் தொழில் நசிந்துவிட்டது, கடன் வாங்கி செத்தோர் அதிகமாகிவிட்டனர் என்ற குரல் கேட்க ஆரம்பித்தாயிற்று

இந்தியாவில் திடீர் பணபுழக்கம் வந்தது 1990களுக்கு பின்பு, அது அசுரவேகம் எடுத்தது மன்மோகன் சிங் ஆட்சியில்

இது தொழில் முதலீட்டில் குவிந்த பணமா? இல்லை அரசு மறைமுகமாக அனுமதித்து வெளிநாட்டினர் கொட்டிய முறையற்ற பணமா எனும் சர்ச்சை அன்றே இருந்தது

காரணம் 2016க்கு முற்பட்ட 20 ஆண்டு காலங்களில் வங்கிகளில் பலநூறு கடன்களும் இன்னபிற சலுகைகளும் எளிதாக கிடைத்தன‌

எங்கிருந்து வருகின்றது? யார் கொடுக்கின்றார்கள்? இந்த பணத்தின் மூலம் என்ன என்பதெல்லாம் யாரும் கவனிக்கவில்லை

இதனால் விலைவாசி எகிறியது, பணமதிப்பு மறைமுகமாக வீழ்ந்தது

அதாவது ஊதி பெருத்த ஊளை சதை போல ஆகிவிட்டது தேசத்தின் நிலை , வளர்ச்சி அல்ல ஒருவகை வீக்கம்

2016க்கு பின் சில நடவடிக்கைகள் எடுக்கபட்டன அதில் ஊதிபெருக்கபட்ட பலூன் வெடித்தது, ஊளை சதை குறைக்கபட்டது

விளைவு நாடு நலிவுற்றது போலவும், தொழில் நசிந்துவிட்டது போலவும் தெரிகின்றது

கவனித்து பாருங்கள்

இந்த நசிவு 1990க்குமுன்பே தொழிலை நிலை நிறுத்தியவர்களை பாதிக்கவில்லை

டாட்டா, டிவிஎஸ் இன்னபிற சாம்ராஜ்யங்களை அசைக்கவில்லை

அசைந்து விழுவதெல்லாம் 1990க்கு பின் எளிதில் கடன்பெற்று திடீர் சாம்ராஜ்யம் அமைத்த கோஷ்டியே

அவை புஸ்வானம் போல எழுந்த வேகத்தில் சரிகின்றது, அவை எல்லாம் யாரோ கொடுத்த கடனிலும் பணத்திலும் எழுந்தவை அரசின் நடவடிக்கைக்கு பின் விழுந்தன‌

நிலமில்லா விவசாயியும், முதல் இல்லா வியாபாரியும் பலத்த நஷ்டத்தை சந்திப்பான் என்பது முதுமொழி

இங்கு 1990க்கு பின் முளைத்த புற்றீசல் தொழிலதிபர்கள் எல்லாம் பாதிக்கபடுகின்றனர் என்பதுதான் நிஜமே அன்றி விஷயம் வேறல்ல‌

ஆக மன்மோகனின் காலங்களில் எதுவோ திறந்துவிடபட்டிருகின்றது, இப்பொழுது அது அடைபட்டிருக்கின்றது

அதில் பலன்பெற்ற பயிர்கள் எல்லாம் வாடுகின்றன..

“தேசம் போச்சி.. தேசம் போச்சி”

தேசம் காந்திகொலை, பாபர் மசூதி இடிப்பு போன்ற கொடுங்காலங்களுக்கு திரும்பியது போன்றே தெரிகின்றது

ராமனின் பெயரை சொல்ல சொல்லி ஒரு சிறுவனை அடித்து கொன்றிருக்கின்றார்கள், அருகே சோகமாக அமர்ந்திருக்கின்றார் தந்தை

தசரதனுக்காவது மகன் திரும்ப வந்தான், இவருக்கு அவன் மகன் வருவானா?

ராமனின் பெயரை சொல்லி தசரதனின் சோகத்தினை அடுத்தவருக்கு கொடுக்கும் கும்பலை அனுமதிக்கமுடியாது.

இந்த சிறுவன் இந்தியனாய் பிறந்தது சரி ஆனால் இந்துவாய் பிறக்கவில்லை அதனால் வாழ தகுதியற்றவன் என்ற தீர்ப்பினை எழுதும் அதிகாரம் யார் கொடுத்தது?

எல்லாம் ஆள்வது நம்கட்சி எனும் நம்பிக்கை கொடுத்தது

மிசா காலத்தில் காமராஜர் சொன்ன அந்த வார்த்தைகள்தான் காதோரம் ஒலிக்கின்றது

“தேசம் போச்சி.. தேசம் போச்சி”

சாவர்கர் கும்பலுக்கு மாவீரனாய் நின்ற‌ திப்புவினை பற்றி எப்படி புரியும்?

திப்பு ஜெயந்தி விழா ரத்து : எடியூரப்பா

வீரசிவாஜிக்கு வானுயர் சிலை, ஆனால் திப்புவிற்கு விழா கூட கிடையாதா?

திப்பு என்ன அமெரிக்க விடுதலைக்கா பாடுபட்டார்? நிச்சயம் வீரசிவாஜி விட திப்பு பல படி மேல்

நாட்டுபற்று கட்சி என்றால் திப்புவினை கொண்டாடுவார்கள், மதவெறி கட்சி என்றால் இப்படித்தான்

வெள்ளையனிடம் மன்னிப்பு கேட்ட சாவர்கர் கும்பலுக்கு மாவீரனாய் நின்ற‌ திப்புவினை பற்றி எப்படி புரியும்?

ஆச்சரியபட என்ன இருக்கின்றது?

திப்பு சுல்தானின் புகழை ஒழித்துகட்ட இந்த கோஷ்டி கிளம்பியிருப்பது சரியல்ல, அது கண்டிக்கதக்கது

வீர சிவாஜிபோலவே மாவீரன் திப்பு

திப்புவின் திறமையும் அவனின் ஆற்றலும் போரும் மத சகிப்புதன்மையும் அளப்பறியது

அவனின் மைசூர் சமஸ்தானம் அன்று இன்றைக்கு ஜெர்மனிக்கு நிகரான பொருளாதர பலம் கொண்டிருந்தது

முதன் முதலில் ஏவுகனை தயாரித்தது அவனே, அது இன்றும் அமெரிக்காவில் உண்டு

நெப்போலியன் மதித்து போற்றிய மாவீரன் திப்புசுல்தான், உலகில் எந்த வீரனுக்கும் அந்த பெருமை இல்லை

மத சகிப்புதன்மைக்கும் திப்பு எடுத்துகாட்டு, அந்த திருரங்கபட்டினம் ஆலயத்துக்கும் , ஆதீனங்களுக்கும் அவன் அள்ளி கொடுத்தது ஏராளம்

திப்புவின் மீது சில சர்ச்சைகளை சொல்வார்கள், அதாவது தஞ்சாவூர் பக்கம் மடைகளை உடைத்தான், கொடூரன் என ஏராளம் உண்டு, அந்த கதை வித்தியாசமானது

அதாவது அன்றைய தஞ்சாவூர் அரசர்களிடம் ஒரு பழக்கம் இருந்தது, ஆடிமாதம் காவேரி பொங்கிவந்து டெல்டா பயிர்களை அழித்தால் அதற்கு மைசூர் சமஸ்தானம் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும், இந்த கொடுமையினை வெள்ளையர் தூண்டிவிட்டனர்

பெரும் நஷ்ட ஈடுகேட்டு மைசூர் திப்புவினை படாத பாடுபடுத்தியதால் திப்புவின் படைகள் சில இடங்களில் கோபம் காட்டியதே தவிர, மதவெறியில் அல்ல‌

அப்படி காவேரி நீருக்கு நஷ்டம் கேட்ட கதை தொடர்ந்துதான் விஸ்வேரய்யா கிருஷ்ண்டராஜ சாகர் அணையினையே கட்டினார், அன்று நஷ்ட ஈடு கேட்டுவிட்டு காவேரி காய்ந்துவிட்டது என நாமே அழுகின்றோம்.

சிவாஜி, சந்திரசேகர ஆசாத், மங்கள் பாண்டே, சாவர்க்கர் என பழம் போராளிகளில் இந்துக்கள் என்றால் புகழ்வதும்
திப்பு என்றா எரிவதும் சரியல்ல‌

சுதந்திர போராட்ட வீரர்களை மத அடிப்படையில் புறக்கணிப்பதினை எப்படி ஏற்க முடியும்?

திப்பு இந்த தேசத்தின் மாபெரும் அடையாளம், அவனின் புகழுக்கு எடியூரப்பா இடையூறு செய்தால் அந்த பாவத்தை அவர்களே சுமக்கட்டும்

திப்பு இந்தியாவின் உப்பு

கிட்டதட்ட 200 இந்து ஆலயங்களுக்கு அவர் நன்கொடை அளித்ததும் வரலாறு. ஒரு மிக சமத்துவமான ஆட்சியினை செய்துகொண்டிருந்ததுதான் அவர் பலம், அவரது படையில் சரிக்குசரி இந்துக்களும் இருந்தனர்.

இங்குதான் வெள்ளையர் சிந்தித்து இந்து முஸ்லீம் வேற்றுமையினை வளர்த்தனர், பல வழிகளில் அவர் இந்துவிரோதி என சித்தரிக்கபட்டு, இறுதி போரில் தான் மிக நம்பிய தனது திவானால் வஞ்சகமாக வீழ்த்தபட்டார்.

சுருக்கமாக சொல்வதென்றால் திப்பு வீழ்ந்தபின் வெள்ளையன் வாய்விட்டு சொன்னான்” இனிமேல்தான் இந்தியா நமக்கானது”

ஆனால் இந்த வெற்றியில் வெள்ளையன் ஒரு பாடம் படித்திருந்தான். இந்தியாவினை துப்பாக்கி முனையில் ஆள்வது கடினம், ஆனால் இந்து முஸ்லீம் பிரிவினையில் ஆள்வது மகா சுலபம்.

அந்த சிரிரங்கபட்டிண களத்தில் வெள்ளையன் படித்தபாடம்தான் பின்னாளில் 150 வருடம் அவன் இங்கு ஆளவும், இந்த தேசம் இன்று 3 ஆக உடையவும், இன்று பெரும் கலவரங்களில் வந்து நிற்கவும் காரணம்

திப்புவின் வரலாற்றை படிக்காமல் அவனை நேசிக்காமல் இங்கு அமைதி வராது

இந்தியாவில் அமைதி வந்துவிட கூடாது என்பதுதானே அந்த கும்பல்களின் நோக்கம், எடியூரப்பா அதைத்தானே செய்வார்

அதில் ஆச்சரியபட என்ன இருக்கின்றது?

கடந்து செல்ல வேண்டிய விஷயங்கள்

முத்தலாக் சட்டம் உடனே நிறைவேற்றபடுவதும், அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் எனும் வரைவு கிடப்பில் போடபட்டிருப்பதும் புன்னகைத்து கடந்து செல்ல வேண்டிய விஷயங்கள்