தொல்காப்பியன்

தொல்காப்பியன் என்பவர் காந்தியோடு தென்னாப்ரிக்க சிறையில் இருந்தவர் என்பதும் பின்பு சுதந்திர போராட்டத்தில் காமராஜரோடு 11 வருடம் சிறையில் இருந்தவர் என்பதும் இவ்வளவு நாளும் தெரியாமலே மறைக்கபட்டிருக்கின்றது.

கக்கன் போலவே காமராஜருக்கு வலது கரத்தின் வலதுகரமாக அவர் உழைத்ததும் மறைக்கபட்டிருகின்றது

இம்மானுவேல் சேகரன் கொலையும் முதுகுளத்தூர் கலவரமும் காமராஜருக்கு சிக்கலை ஏற்படுத்திய காலங்களில் , இந்த தொல்காப்பியனே தனி மனிதனாக சென்று எல்லா கலவரங்களையும் அடக்கியிருக்கின்றார்

அந்த மாமனிதனின் புகழ் அவர் ஒரு தலித் என்பதால் மறைக்கபட்டிருக்கின்றது, வரலாற்றில் இருந்து அகற்றபட்டிருக்கின்றது

இப்பொழுது மோடியின் செங்கோல் ஆட்சியில் எடப்பாடியின் வன் கோல் ஆட்சியில் அந்த மாபெரும் தியாகியின் புகழ் வெளிவருகின்றது.

காந்தியின் சீடரான காமராஜர் அவர் பிறந்தநாளில் இறந்தது போல, காமராஜரின் ஒப்பற்ற சீடரான தொல்காப்பியன் அவர் பிறந்தநாளிலே இறந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல…

காமராஜருக்கு சரிநிகரான தியாகியினை இவ்வளவு நாள் மறாந்த தமிழகம் எப்படி உருப்படும்? எப்படி மழை பெய்யும்?

வின்ஸ்டன் சர்ச்சிலையும், மவுண்பேட்டனையுமே அலறவிட்ட தியாகி தொல்காப்பியன் வாழ்க…

(மற்ற கட்சி எல்லாம் மகன் பேரனை தலைவராக்கினால், இந்த கட்சி மட்டும் ரிவர்ஸில் சென்று தகப்பன் தாத்தாவினை எல்லாம் தியாகி ஆக்கிவிடும் போல..)

தேசவிரோத சக்திகள் நாகை வழியாக ஊடுருவுகின்றன‌

கோவைக்கு அடுத்தபடியாக நாகை தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிகொண்டிருப்பது சோகம்

இந்திய பாதுகாப்பு அமைப்புகள் நாகையில் நடத்தும் கைதுகளும், அதை தொடர்ந்து வரும் செய்திகள் சரியானவை அல்ல‌

முன்பு இதே கிழக்கு கடற்கரைக்கும் புலிகளுக்குமான கடத்தல் போக்குவரத்தில்தான் இந்நாட்டு பிரதமரையே இழந்தோம்

இப்பொழுது வேறுவடிவில் தேசவிரோத சக்திகள் நாகை வழியாக ஊடுருவுகின்றன‌

மிகபெரும் நடவடிக்கை எடுத்து இந்த களைகளை முளையிலே பிடுங்காவிட்டால் பின்னொரு நாளில் மாபெரும் விலையினை கொடுக்க நேரிடும்..

கலைஞர் மனம் வெறுத்திருந்தார்

கடைசி காலங்களில் ராமதாஸ் போன்றோருடன் எல்லாம் அரசியல் செய்த கலைஞர் மனம் வெறுத்திருந்தார்

அந்த மைனாரிட்டி திமுக அரசு எனும் வார்த்தை அவரை ஈட்டியாக குத்தியெடுத்த நேரமது , காங்கிரஸின் தயவில் அவரின் ஆட்சி ஓடிகொண்டிருந்தது

“நேரு, இந்திரா என பெரும் ஜாம்பவான்களோடு அரசியல் செய்த நான் இந்த ராமதாஸ் , விஜயகாந்த் போன்றோரோடு அரசியல் செய்ய வேண்டுமா?” என தன்னை மீறி கட்சியில் நெருக்கமானவர்களோடு மனம் விட்டு பேசியதாக செய்திகள் வந்தன‌

அந்த காலகட்டத்தில் கலைஞர் வார்த்தைகள் எழுத்தாக இப்படித்தான் வந்தன‌

“காமராஜர் போன்றவர்களை எதிர்த்து அரசியல் செய்ததற்காக வருந்துகின்றேன், வேதனைபடுகின்றேன்”

ஆம் உங்கள் தலைவனே வாக்குமூலம் கொடுத்துவிட்டுத்தான் சென்றிருக்கின்றார்.

அதனால் இந்த முட்டு கொடுப்பது கம்பு சுத்துவது எல்லாம் தனியே பொட்டல்காட்டில் சுற்றிகொள்ளவும்

இதிலென்ன ஆச்சரியம்?

கோப்பையினை வென்ற இங்கிலாந்து அணியில் பலர் வெளிநாட்டு வீரர்கள் : செய்தி

இதிலென்ன ஆச்சரியம்?

வெறும் 200 பேரோடு இந்தியா வந்த கிளைவ் இங்கேதான் கூலிக்கு ஆள்பிடித்து போர் நடத்தி இந்தியாவினை அடிமைபடுத்தினான்

1930களில் 1 லட்சம் பேரே இருந்த பிரிட்டன் படை உள்ளூர் இந்தியர்களை வளைத்து போட்டு 30 கோடி மக்களை இந்தியாவில் ஆண்டது

அவர்கள் வரலாறே அப்படித்தான், இதில் அவர்களின் கிரிக்கெட் அணிமட்டும் விதிவிலக்கா?

நில உச்சவரம்பு சட்டம்

நில உச்சவரம்பு சட்டத்தில் மூப்பனார் செய்த காரியம் தெரியுமா?, உக்கடை தேவர் செய்த சாதுர்யம் தெரியுமா? விஸ்வநாத தேவர் செய்த அட்டகாசம் தெரியுமா?

இதெல்லாம் 1960களிலே சட்டமன்றத்தில் கேள்வியாக எழுப்பியவர் கலைஞர்

நில சுவாந்தார்களின் பினாமியான டிரஸ்டுகளையும் இன்னபிற அறகட்டளைகளையின் உண்மை முகத்தையும் சட்டசபையில் கிழித்தெறிந்தவர் கலைஞர் என உபிக்கள் கடும் அழிச்சாட்டியம் செய்துகொண்டிருக்கின்றன‌

இதே காலகட்டத்தில் பசும்பொன் தேவரும் தனக்கு சொந்தமான நிலங்களை பலவாறு பிரித்து கொடுத்து நில சீர்திருத்த காலங்களில் சிக்கல் வராதவாறு காத்துகொண்டார்

அது பற்றி கலைஞரோ திமுகவோ ஒரு வார்த்தை பேசியிருக்குமா?

ம்ம்..ஹூம், பேசியதாக வரலாறே இல்லை , பேசினால் என்னாகும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கும்

சரி மூப்பனார் தவறே செய்திருந்தாலும், அவர் நிலங்களை ஏழைகளுக்கு கொடுக்காமல் அரசை ஏமாற்றியே இருந்தாலும் அப்படி ஒரு வாதத்துக்கு வைத்திருந்தாலும் பின்னாளில் என்னாயிற்று?

1996ல் அதே மூப்பனாருடன் இணைந்து ஆட்சியினை பிடித்தார் கலைஞர், மத்தியிலும் பதவி

அப்பொழுதெல்லாம் அந்த கலைஞர் ஏன் அமைதி காத்தார்?

ஆக தனக்கு சாதகம் என்றால் ஒருவரை அணைப்பதும் தனக்கு எதிரான கட்சி என்றால் அவரை இழுத்து போட்டு சாத்துவதுமா கலைஞரின் அரசியல்?

இந்த உடன் பிறப்புகள் இருக்கின்றதே, எதையாவது ஆர்வகோளாறில் சொல்லிவிடுமே அன்றி அது கலைஞருக்கு எப்படி எல்லாம் சிக்கலை கொண்டுவரும் என்பதை பற்றி யோசிப்பதே இல்லை

கேளுங்கள், 1960களில் மூப்பனாரை விமர்சித்தவர் அடுத்த 33 ஆண்டுகளில் அவரோடு ஏன் குலாவினார், ஒரு சென்ட் நிலத்தை மீட்டாரா? என்றால் சத்தமே வராது

கலைஞர் டிரஸ்டுகளை சாடினாராம்

முரசொலி அறக்கட்டளைக்கும், வீரமணியின் பெரியார் அறகட்டளைக்குமான சொத்துமதிப்பு பற்றி என்றாவது யாராவது பேசுவார்களா?

ஏம்மா Devi Somasundaram மூப்பனாருடன் கலைஞர் பின்னாளில் கூட்டாளியாக பவனிவந்ததையும் , அப்பொழுது அரை சென்ட் நிலம் கூட ஏழை மக்களுக்கு அவரிடம் இருந்து கலைஞர் பறித்துகொடுக்க விரும்பவில்லை என்பது உனக்குமா தெரியாது?

அடக்கி வாசிக்கின்றது அமெரிக்கா.

அமெரிக்க தூதரகம் என்றாலே எப்பொழுதும் வலுகவனமாக இருக்கும் ஈரான் இப்பொழுது ஈராக்கில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்துவிட்டது.

அமெரிக்க தூதரகம் எப்பொழுதும் உளவு தகவல்களை திரட்டும் சி.ஐ.ஏவின் மையம் என்பது அவர்களின் கருத்து, அதில் உண்மையும் இல்லாமல் இல்லை

இப்பொழுது ஒருபடி மேலே போய் பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் இஸ்ரேலிய மொசாத் ஏஜென்டுகள் அமர்ந்து பல விஷம காரியங்களை செய்கின்றார்கள் என சொல்கின்றது ஈராக்

கவனியுங்கள் ஈரான் அல்ல, சொல்வது ஈராக்

ஐ.எஸ் அமைப்பின் ஆட்டத்துக்கு பின் ஈராக்கும் ஈரானும் நெருங்கிவிட்டன, இதனால் ஈராக் அரசின் குரல் ஈரானின் குரலாகவே கருதபடுகின்றது

இதில் உள்ள ராஜதந்திரம் புரிகின்றதா? வெறும் அமெரிக்கா என்றால் அரபுலகில் சலசலப்பு வராது, இஸ்ரேலை இழுத்து போட்டால் அது பல சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதால் அட்டகாசமாக அதில் அரசியல் செய்கின்றது ஈரான்

பாக்தாத் அமெரிக்க தூதரகம் உளவாளிகளின் சொர்க்கமாக இருப்பது நிஜம், அதை ஈரான் தகர்க்க நினைத்ததும் நிஜம், அது முடியாமல் போக ஈராக்கிய அரசு மூலம் மிரட்டுவதும் நிஜம்

ராஜதந்திர உரசல் இப்படி இருக்க, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பேச பிரான்ஸும் ஜெர்மனும் தயாராகின்றது

ஈரான் எண்ணெய் எடுக்கும் முறை பழையது, அது நவீன தொழில்நுட்பத்துக்கு மாறியாக வேண்டும், அப்படி மாறும்பொழுது பெரும் கனரக எந்திர நுட்பங்களின் சந்தை தனக்கு கிடைக்கும் என கணக்கிடுகின்றது ஜெர்மனி, அதனால் அது பேச வருகின்றது

ஆக இஸ்ரேல் தலமையில் ஒரு அணி ஈரானை நொறுக்க வேண்டும் என கங்கணம் கட்டி திரிய, ஜெர்மன் தலமையில் ஒரு அணி போரை தவிர்க்க நினைக்கின்றது

அமெரிக்காவோ என்னிடம் எப் 35 உண்டு, நவீன ஏவுகனை உண்டு, கப்பல் உண்டு, செயற்கைகோள் உண்டு இன்னும் என்னவெல்லாமோ உண்டு என ஈரானை மிரட்டுகின்றது

ஈரானோ “உன்னிடம் எதுவும் இருக்கட்டும், என் அருகே ஐக்கிய அமீரகம் உண்டு, குவைத் உண்டு, சவுதி உண்டு , பஹ்ரைன் உண்டு, இஸ்ரேல் உண்டு அங்கு இருப்பதெல்லாம் மவனே உன் சொத்துக்கள், என்னை தொட்டால் அதில் ஒன்று கூட உனக்கு மிஞ்ஞ்சாது” என எச்சரிக்கின்றது

அந்த எச்சரிக்கையில் அடக்கி வாசிக்கின்றது அமெரிக்கா..

புள்ளியே இல்லாத அழகிய தமிழ்பெயர்

புள்ளியே இல்லாத அழகிய தமிழ்பெயர் இம்சையினை தொடக்கிவைத்தது யாரென தெரியவில்லை.

ஆனால் இக்கால திமுகவினருக்கு கொஞ்சமும் புத்தியே இல்லாததால் வழக்கம் போல அமைதி

இதே பழைய திமுகவினர் என்றால் இதோ புள்ளி இல்லா அழகான பெயர்கள் என “ஈ.வெ ராமசாமி,கல்லகுடி, திமுக‌,கருணாநிதி, தயாளு, திருகுவளை, முரசொலி, உதயநிதி, அறிவுநிதி, தயாநிதி, கலாநிதி ,தமிழரசு, அழகிரி, கனிமொழி..” என வரிசையாக அடுக்கிகொண்டே சென்றிருப்பார்கள்

இப்போதுள்ள திமுகவினரிடம் அதெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்பதுதான் சோகம்..

நம் பங்குக்கு நாமும் சொல்லலாம், புள்ளியில்லா அழகிய தமிழ்பெயர் எது தெரியுமா?

“தமிழிசை…” அவர் அடிக்கடி உச்சரிக்கும் “தாமரை”க்கு கூட புள்ளி கிடையாது