அடக்கி வாசிக்கின்றது அமெரிக்கா.

அமெரிக்க தூதரகம் என்றாலே எப்பொழுதும் வலுகவனமாக இருக்கும் ஈரான் இப்பொழுது ஈராக்கில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்துவிட்டது.

அமெரிக்க தூதரகம் எப்பொழுதும் உளவு தகவல்களை திரட்டும் சி.ஐ.ஏவின் மையம் என்பது அவர்களின் கருத்து, அதில் உண்மையும் இல்லாமல் இல்லை

இப்பொழுது ஒருபடி மேலே போய் பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் இஸ்ரேலிய மொசாத் ஏஜென்டுகள் அமர்ந்து பல விஷம காரியங்களை செய்கின்றார்கள் என சொல்கின்றது ஈராக்

கவனியுங்கள் ஈரான் அல்ல, சொல்வது ஈராக்

ஐ.எஸ் அமைப்பின் ஆட்டத்துக்கு பின் ஈராக்கும் ஈரானும் நெருங்கிவிட்டன, இதனால் ஈராக் அரசின் குரல் ஈரானின் குரலாகவே கருதபடுகின்றது

இதில் உள்ள ராஜதந்திரம் புரிகின்றதா? வெறும் அமெரிக்கா என்றால் அரபுலகில் சலசலப்பு வராது, இஸ்ரேலை இழுத்து போட்டால் அது பல சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதால் அட்டகாசமாக அதில் அரசியல் செய்கின்றது ஈரான்

பாக்தாத் அமெரிக்க தூதரகம் உளவாளிகளின் சொர்க்கமாக இருப்பது நிஜம், அதை ஈரான் தகர்க்க நினைத்ததும் நிஜம், அது முடியாமல் போக ஈராக்கிய அரசு மூலம் மிரட்டுவதும் நிஜம்

ராஜதந்திர உரசல் இப்படி இருக்க, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பேச பிரான்ஸும் ஜெர்மனும் தயாராகின்றது

ஈரான் எண்ணெய் எடுக்கும் முறை பழையது, அது நவீன தொழில்நுட்பத்துக்கு மாறியாக வேண்டும், அப்படி மாறும்பொழுது பெரும் கனரக எந்திர நுட்பங்களின் சந்தை தனக்கு கிடைக்கும் என கணக்கிடுகின்றது ஜெர்மனி, அதனால் அது பேச வருகின்றது

ஆக இஸ்ரேல் தலமையில் ஒரு அணி ஈரானை நொறுக்க வேண்டும் என கங்கணம் கட்டி திரிய, ஜெர்மன் தலமையில் ஒரு அணி போரை தவிர்க்க நினைக்கின்றது

அமெரிக்காவோ என்னிடம் எப் 35 உண்டு, நவீன ஏவுகனை உண்டு, கப்பல் உண்டு, செயற்கைகோள் உண்டு இன்னும் என்னவெல்லாமோ உண்டு என ஈரானை மிரட்டுகின்றது

ஈரானோ “உன்னிடம் எதுவும் இருக்கட்டும், என் அருகே ஐக்கிய அமீரகம் உண்டு, குவைத் உண்டு, சவுதி உண்டு , பஹ்ரைன் உண்டு, இஸ்ரேல் உண்டு அங்கு இருப்பதெல்லாம் மவனே உன் சொத்துக்கள், என்னை தொட்டால் அதில் ஒன்று கூட உனக்கு மிஞ்ஞ்சாது” என எச்சரிக்கின்றது

அந்த எச்சரிக்கையில் அடக்கி வாசிக்கின்றது அமெரிக்கா..

பின்னூட்டமொன்றை இடுக