Today’s News 17/07/2019

சப்ரீசன் என்பவருக்கு வேறு பிறந்தநாளாம்

ராவணனோடு இருந்ததால் பெரும் வீரர்கள் எல்லாம் அழிந்தனர்

ராமனோடு இருந்ததால் குரங்குக்கும் கோவில் தோன்றிற்று

எல்லோரும் இருக்கும் இடத்தில் இருக்கவேண்டும், பாம்பெனினும் ஈசனின் கழுத்தில் சுற்றியதால் கருடனும் அதை வணங்க வேண்டும் என்பார்கள்.

நமக்கு இன்று ஏனோ இதெல்லாம் நினைவுக்கு வருக்கின்றது, இந்த சப்ரீசன் என்பவருக்கு வேறு பிறந்தநாளாம்

நீட் தேர்வு சரியான விஷயம் அல்ல, அது நீக்கபட வேண்டும் : சூர்யா

என்ன செய்வது சார், சினிமாவுக்கு என்ன தேர்வு உண்டு?

மருத்து கல்வியும் சினிமா தொழில் போல ஆகவேண்டும் என்பதுதான் உம் ஆசையா?

மும்மொழி கொள்கை ஏற்புடையதல்ல : நடிகர் சூர்யா

சார், நம்ம படம் மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு ஏகபட்ட மொழியில் டப் செய்யபட்டு ஓடுமே?

ஆமாம்

நீங்கள் கூட மலையாளம், தெலுங்கு கதைகளின் தமிழ்டப்பிங்கில் நடிப்பீரே?

கண்டிப்பாக‌

அதில் மற்ற மொழி இயக்குநர்கள், மற்ற மாநில நடிகைகள் எல்லோரும் இருப்பார்களே

அவங்க இல்லாம எப்படி?

மவனே, உம் முதுகை அந்த பேரழகன் படத்தில் வருவது போல் ஆக்காமல் விடவே கூடாது…

கவுண்டர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கவுண்டர் சூர்யாவினை வைத்தே குடைச்சல் கொடுப்பதுதான் தளபதி முக ஸ்டாலினின் ராஜதந்திரம் : சில திமுக அடிமைகள்

அடேய் உங்களுக்கு தும்பிகள் எவ்வளவோ பரவாயில்லை, தயவு செய்து கலைஞருக்கு மண்டபம் கட்டும்பொழுது அஸ்திபாரம் தோண்டியவுடன் உள்ளே சென்று படுத்துகொள்ளுங்கள்.

உடனே சூர்யாவினையும் ஜோதிகாவினையும் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்க்க வேண்டும்

இருவரையும் அரசு ஆசிரியர்களாக்கி உடனே பணிக்கு அனுப்ப வேண்டும்

நடிப்பினை விட்டுவிட்டு ஆசிரியபணிக்கு முதலில் சூர்யா திரும்பட்டும், முடிந்தால் தந்தை சிவகுமார் மற்றும் சகோதரன் கார்த்தியினையும் அழைத்து வந்து ஆசிரிய பணியில் அமரட்டும்.

மற்ற விஷயங்களை அதன்பின் பேசலாம்

அப்படித்தானே தமிழிசை அக்கா?

தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் மிகுந்த சிரமத்தில் இருக்கின்றார்கள் : அங்கிள் சைமன் வேதனை

சமீபத்திய ஈழ அகதி “லொசில்யா” மிகுந்த சவுகர்யத்துடன் பிக்பாஸ் வீட்டில் இருப்பது அன்னாருக்கு தெரியவில்லை போல..

முன்பொரு காலத்தில் இங்கு “நாம் தமிழர்” என்றொரு குரங்குக்கு முந்தைய இனம் வாழ்ந்ததை பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் உறுதிபடுத்தினர்.

ஒரு காலத்தில் பெரும் சத்தத்துடன் தாவி தாவி குதித்த இனம் திடீரென மொத்தமாக அழிந்தது எப்படி என்ற விவாதம் நடந்துகொண்டிருகின்றது..

நீங்கள் நம்மை பின் தொடர்பவராக இருந்தால் ஒன்றை உங்களால் யூகிக்க முடியும்

லைக்கா புரக்சன் எனும் ஈழதமிழரின் நிறுவணம், அந்த ஈழதமிழர் சுபாஷ்கரன், லைக்கா ஐங்கரான் போன்றவற்றில் இருக்கு ஈழதமிழருடன் தொடர்பில் இருக்க்கும் வைகோ அவரிடம் ஆசி வாங்கும் சூர்யா

விஷயம் புரிகின்றதா?

சூர்யா எங்கோ சிக்கிவிட்டார், அவரின் சமீபத்திய கருத்துக்களும் அது உண்டாக்கும் சர்ச்சைகளும் இந்திய மேலிடத்துக்கும் தமிழக மேலிடத்துக்கும் சிக்கலை ஏற்படுத்துகின்றதல்லவா?

வைகோ கோஷ்டியுடன் ஒருவர் சேர்ந்துவிட்டார் என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?

ஆக சூர்யா இனி போராளியாகி அப்படியே இன்னும் என்னவெல்லாமோ ஆகி உருப்படாமல் போக போகின்றார் என்பது மட்டும் புரிகின்றது

இது என்ன நீதி?

நாங்கள் இந்தியினை எதிர்க்கவில்லை இந்தி திணிப்பினை எதிர்க்கின்றோம், விரும்பியவர்கள் வாய்ப்பு கிடைத்தால் இந்தி கற்பதில் எங்களுக்கு எதிர்ப்பு இல்லை

வாய்ப்பு எங்கே கிடைக்கும்?

எங்கே யார் சொல்லி கொடுப்பார்களோ அங்கே அவர்கள் படித்து கொள்ளட்டும்

அதைத்தானே, அரசு பள்ளிகளில் இந்தி என வாய்ப்பு கொடுக்கின்றோம்

முடியாது முடியாது அது இந்தி திணிப்பு, ஆனால் விரும்பியவர்கள் படிக்கட்டும்

எங்கே சென்று படிப்பார்கள்?

எங்காவது படிக்கட்டும்

அதை பள்ளியில் இலவசமாக படித்தால் என்ன?

முடியாது முடியாது

நீட் தேர்வினை ஏன் எதிர்க்கின்றீர்கள்?

அது எல்லா மாணவர்களுக்கும் சமமானது அல்ல, அரசு பள்ளிகளில் சிற்ப்பு நீட் தயாரிப்பு வகுப்புகள் வரும் வரை நீட் கூடாது

ஆக அரசுபள்ளிகளில் இலவச நீட் தேர்வு பயிற்சி வேண்டும்

ஆம் அதேதான், அதுதான் சமூக நீதி

அதே அரசு பள்ளியில் இலவச இந்தி கூடாது, எங்காவது காசு கொடுத்துத்தான் படிக்க வேண்டும்

ஆமாம் கூடவே கூடாது, அவர்களாக எங்காவது செலவழித்து படிக்கட்டும்

இது என்ன நீதி?

நாங்கள் சொல்லும் திராவிட நீதி”

எதற்கும் துர்கா ஸ்டாலின் கனிமொழியின் ஜாதகத்தையும் அலசிவிடுவது நல்லது..

ஏதும் சொன்னால் அண்ணாவின் பகுத்தறிவு, பெரியார் சொன்ன பெண்விடுதலை என பக்கம் பக்கமாக வரிந்து கட்டி வருவார்கள்.

விரைவில் திமுகவில் ஜோதிடர் அணி என ஒரு அணி உருவானாலும் ஆச்சரியபட ஒன்றுமில்லை

எனினும் நம் பங்குக்கு ஒன்றை சொல்லிவிடுவோம்

கலைஞர் 45 வயதில் முதல்வரானார், மிக இளம் வயதில் முதல்வரானவர்க‌ள் என்ற வரிசையில் கலைஞரும் உண்டு

கனிமொழி பிறந்த ராசிதான் அவரை முதல்வராக்கியது என்ற ஜாதக சென்டிமென்ட் அப்பொழுதே திமுகவினரிடம் இருந்தது

எதற்கும் துர்கா ஸ்டாலின் கனிமொழியின் ஜாதகத்தையும் அலசிவிடுவது நல்லது..

ஆண்டவன் பிரம்படியில் சத்தம் கேட்காது

ஆண்டவன் முன் மாபெரும் ஞானியும், ஓளி பொருந்திய நல்லவனும், கொடும் பாவியும் ஒன்றே

ஆலயத்தில் நுழைய நல்லவன் கெட்டவன் என்பதெல்லாம் தகுதி அல்ல, தெய்வத்தை தேடி யார் வேண்டுமானாலும் செல்லலாம் ஆனால் அந்த தெய்வத்தின் கருணை கிடைக்கின்றதா என்பதுதான் முக்கியம்.

வால்மிகி ஒரு காலத்தில் கொடிய வேடனாய் இருந்திருக்கின்றான், பாவியான துரியோதனுடன் பழக மிக தூயவனான கண்ணனுக்கு தயக்கமே இல்லை

இயேசுநாதர் தன் வாழ்நாளெல்லாம் முரடர்கள், பாவிகள் என்பவர்களோடேத்தான் பழகியிருக்கின்றார், ஏன் சாகும் பொழுதும் பரபாஸ் எனும் கொலைகாரனுக்கு பதிலாகவே செத்திருக்கின்றார்

மதங்கள் எல்லாம் பாவிகளை திருத்த வழி சொல்பவை தவிர, எந்த கொடும் பாவியினையும் விலக்கி வைப்பதல்ல‌

குற்றம் புரிந்தவனை விலக்கி வைத்தால் அது நல்ல மதமாக இருக்கவே முடியாது

மனிதனின் சட்டதிட்டமும் நியாய தர்ம தண்டனையும் வேறு அது சமூகத்திற்கானது

ஆண்டவனின் சட்டதிட்டமும் அவனின் தீர்ப்பும் வேறு அது மானிட கண்களால் பார்க்க முடியாதது, சம்பந்தபட்டவன் மனதால் உணரும் விஷயம் அது

ஆண்டவன் பிரம்படியில் சத்தம் கேட்காது என்பார்கள்

வரிச்சியூர் செல்வம் எனும் பிரபல ரவுடி அத்திவரதரை பூஜிக்க வந்ததிலும் அவனை அனுமதித்ததிலும் தவறேதுமில்லை

ஒருவேளை அவனை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியிருந்தால் அதுதான் தவறு..

என்னது? கிறிஸ்தவ மதமா?

என்னது? கிறிஸ்தவ மதமா?

சரி கிறிஸ்தவ மதம் என வைத்துகொண்டாலும் நாஸ்டர்டாமஸ் எப்பொழுது பிறந்தார் என்பது கூடவா தெரியாது

மெதுவாக இந்த தும்பிகளிடம் காதோரம் சென்று நாஸ்டர்டாமஸ் யார்? எங்கே பிறந்தார்? எப்படி இருந்தார் என கேளுங்கள், ரகசியமாக இப்படி சொல்வார்கள்

“அவர் யாழ்பாணம் அருகே வல்வெட்டிதுறை பக்கம் பிறந்தாராம், கட்டையாக குண்டாக இருந்தாராம், சூரியன் எப்பொழுது உதிக்கும் அலை எப்பொழுது வீசும் என்பதை அன்றே சொன்னவர் அவர்தானாம்

அவர்தான் இப்படி சைமனை பற்றி சொன்னார், அவர் சொன்னால் கண்டிப்பாக நடக்கும்”

சரி, முக்கடல் என்பது எங்கெல்லாம் தீபகற்பம் உண்டோ அங்கெல்லாம் சங்கமிக்கும். அது தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, சிங்கப்பூர் பக்கம், ஜப்பான் கொரியா, சைனா பக்கம் எல்லாம் சங்கமிக்கும்

ஆக ஏகபட்ட சைமன்கள் வருவார்களோ? என கேட்டால் தும்பிகள் ஓடிவிடும்

தமிழிசை கோஷ்டிக்கு எல்லாம் பதில் சொல்லணுமா …

இந்த செல்போனை உடைக்கிறது, ஏதாவது பேசி சிக்கிறது எல்லாம் இப்போதான், இந்த 77 வயசுலத்தான்

ஆனா 17 வயசுல பழனிச்சாமி கவுண்டரா படம் வரைய சென்னைக்கு கிளம்புறப்போ அப்படி இல்ல, ரொம்ப பவ்யம், பணிவு, ஒரு வார்த்தை கூட யாரையும் காயபடுத்தமாட்டேன்

அந்த குணம்தான் என்ன நடிகனாக்கிச்சி, எனக்குண்ணு ஒரு ஒரு கவுரவத்தை கொடுத்திச்சு

ராமசந்திரன், கலைஞர், ஜெயலலிதான்னு எல்லோரும் என்ன மதிச்சாங்க. இப்போ வரைக்கும் ஜெயாவும் கலைஞரும் கலந்துகிட்ட ஒரே கல்யாணம் என் வீட்டு கல்யாணம்தான்

எம்ஜி ராமசந்திரனும் என்னை மதிச்சி நேசிச்சார், எம்.ஆர் ராதாவும் என்ன அவ்வளவு கொண்டாடுனார்.

ராமசந்திரன், கலைஞர், ஜெயா, எம்.ஆர் ராதா, என்னை பாசமா கவுண்ட பயலேன்னு அழைக்கும் சிவாஜிகணேசன்னு எல்லோருக்கும் பிடிச்சவனா இருந்த ஒரே நடிகன் நான் ஒருத்தன் தான், தமிழ் திரையுலக வரலாற்றிலே நான் ஒருத்தன் தான்..

ஏன்?

எல்லோருக்கும் நல்ல பிள்ளையா இருந்தேன்,எல்லா பெரியவங்களும் என்னை தன் வீட்டு பிள்ளையாகத்தான் பார்த்தாங்க‌

எதையும் பார்த்துட்டு புரட்சி, போராளித்துவம்னு கிளம்பல, அதெல்லாம் சும்மாண்ணு எனக்கே தெரியும்

நான் கட்சியில சிக்கல, அரசியல்ல சிக்கல, ஒரு வார்த்தையும் பேசி எங்கேயும் மாட்டால், சொல்லபோனா ரஜினிக்கே நான் தான் வழிகாட்டி.

என் கூட நடிச்சவங்க எல்லாம் அரசியல், அவமானம், குடி அது இதுன்னு பாதை மாறி போனப்போ நான் மட்டும் தனிச்சி நின்னேன் எப்படி?

அவ்வளவு கவுரவம் சேர்த்து வச்சிருந்தேன், இன்னைக்கும் தமிழ்திரையுலகமும் சரி, தமிழ்நாடு சரி எனக்குண்ணு ஒரு மரியாதை வச்சிருக்கு

ஆனா இந்த சூர்யா பய எல்லாத்தையும் சல்லி சல்லியா நொறுக்கிட்டானே, சல்லி சல்லியா நொறுக்கிட்டான்

அந்த வடக்கச்சி பொண்டாட்டி படம் ஓடணும்னு பப்ளிசிட்டிக்காக ஏதோ பேச போய் என்னமோ ஆயிட்டு

இனி சும்மா விடமாட்டாங்க போல‌

எவ்வளவு முதலமைச்சர் என்ன கவுரவமா பார்த்தாங்க, இனி பங்காளி எடப்பாடி அய்யா கூப்பிட்டுவிட்டா நான் குற்றவாளியா போய் நிற்கணுமா…..

பங்காளிய விடுங்க, இந்த தமிழிசை கோஷ்டிக்கு எல்லாம் பதில் சொல்லணுமா … கடவுளேளே ஏஏஏஏஏஏஏஏஏஏஏ”

தாய்லாந்தில் இனி மக்களாட்சி மலரபோகின்றதாம்

தாய்லாந்தில் இனி மக்களாட்சி மலரபோகின்றதாம், மலரட்டும்

கிழக்காசியாவின் விவசாய நாடு தாய்லாந்து, நிச்சயம் வளமான பூமி ஆனால் விவசாயம் மட்டுமா வாழவைக்கும்?

இன்னபிற தொழில்கள் இல்லாததால் போதையின் பாதைக்கு அது கொலம்பியா போல திரும்பும் ஆபத்து இருந்தது ஆனால் வியட்நாம் யுத்தமும் இன்னும் சில நிகழ்வுகளும் அதனை மாற்றின‌

சில பல காரியங்களை சேர்த்து சுற்றுலா நாடு என அது அறிவிக்கபட்டபின் அதன் முகம் மாறியது

இன்று உலகில் சுற்றுலா மூலம் சம்பாதிக்கும் நாடுகளில் அதுவும் ஒன்று, அழகிய காட்சிகள், சுவையான உணவுகள் அதை தொடர்ந்து இன்னும் என்னவெல்லாமோ கிடைக்கும் நாடு அது

மன்னரே பிரதானம் என்றாலும் அவர் மக்களின் மதிப்பை பெறுவதோடு சரி மீதி விஷயங்களை முடிவு செய்வதெல்லாம் ராணுவமே

அந்த ராணுவம் இப்பொழுது தாய்லாந்து மக்களாட்சிக்கு திரும்பும் நேரம் நெருங்கிவிட்டதாக அறிவிகின்றது

ஆக ராணுவ ஆட்சியிலே உல்லாசபுரியான தாய்லாந்து இனி மக்களாட்சியில் இன்னும் மகா உல்லாசபுரியாக மாறிவிடலாம்