மாபெரும் உதாரணம் கலைஞர்

இந்த ஜாதாகத்தோடு இணைபவர் மாபெரும் உயரங்களை அடைவர் என்பது உன்மையாக இருந்தாலும், அது தானாக அமைய ஒரு விதி வேண்டும்

மாபெரும் உதாரணம் கலைஞர்

ராசாத்தி அம்மாளை திருமணம் செய்தபின்புதான் மிகபெரும் பதவிகளும் நிரந்தர சிம்மாசனமும் அவரை தேடி வந்தன‌

தலைவிதி நன்றாய் இருந்தால் எல்லாம் தானாய் தேடிவரும் என்பது அதுதான்

தலைவர் வாழ்வுதான் எவ்வளவு விசித்திரமானது?

நாத்திகத்திக்கும் பகுத்தறிவுக்கும் அவர்தான் எடுத்துகாட்டு,

ஆச்சரியமாக ஜாதகத்துக்கும் தலைவிதிக்கும் அவரேதான் உதாரணம்

கூடன்குளம் அணுவுலை மட்டும் நெல்லைக்கு மிஞ்சும் போலிருக்கின்றது

இனி குற்றாலம் நெல்லை மாவட்டத்துக்கு இல்லை, முன்பு வஉசியும் கட்டபொம்மனும் தூத்துகுடி மாவட்டத்துக்கு சென்றது போல் வாஞ்சிநாதனும் , பூலித்தேவனும் இனி தென்காசிக்குசென்று விடுவார்கள்.

கூடன்குளம் அணுவுலை மட்டும் நெல்லைக்கு மிஞ்சும் போலிருக்கின்றது

திராவிட ஜோதிட சிகாமணி பாலாஜி ஹாசன்

பாரிசாலனுக்கு பின் திடீரென வைரலாகி எல்லோரிடமும் கும்மாங்குத்து வாங்கிகொண்டிருப்பவர் திராவிட ஜோதிட சிகாமணி பாலாஜி ஹாசன்.

இளம்வயது பயமறியாது பக்குவமும் அறியாது என்பார்கள் இவர் விஷயத்தில் அது சரி.

ஜோதிடம் என்பது கணக்குத்தான், கட்டங்களை எண்ணி இன்னும் பலவற்றை கணக்கிட்டு சொல்லும் வழிதான்

ஆனால் அதன் அடிநாதம் கணக்கு அல்ல, பக்தி. முழு பக்தி, கடவுளுக்கு தான் ஒருஅடிமை எனும் சித்தனின் மனநிலை

அந்நிலை பணத்தை தேடாது, புகழை தேடாது. தன்னை நாடிவருபவருக்கு மட்டுமே சில பதில்களை கடவுள் பெயரில் நல்ல ஜோசியன் சொல்வான்

சாஸ்திரங்களையும் , வேதங்களையும் , கடவுளை பிரதிபலிக்கும் சில உன்னத கலைகளையும் எல்லோரும் படித்துவிட முடியாது

ஜோதிடம் என்பது சாஸ்திரம் மட்டுமல்ல, அது ஒரு வழிபாடு. மிக மிக மனசிக்கலில் அல்லது பெரும் உதவி தேவைபடுபவனுக்கு அவனின் பிறப்பின் நோக்கத்தை, எத்திசையில் அவன் செல்ல வேண்டும் என்பதை சொல்லும் அற்புதமான ஏற்பாடு

பண்டைய ஞானிகள் அதை ஏற்படுத்தி அரசனுக்கு காவலாய் இருந்து நாட்டை வழிநடத்தியிருக்கின்றார்கள்.

எல்லா நாட்டு அரசுகளிலும் அப்படி ஒருவன் அரண்மனை ஜோதிடன், ராஜகுரு என இருந்திருக்கின்றான். அரசனை வழிநடத்தியிருக்கின்றான்

நல்ல சாஸ்திர ஞானி என்பவன் காசுக்கு ஆசைபட கூடாது, ஒருவனின் ஜாதகத்தின் பாதகாமான அம்சங்களை சொல்லி பயமுறுத்தல் கூடாது. எதிரி எனினும் அவனுக்கு உதவிடல் வேண்டும்

சுயநலம் என்பது சிறிதும் இருக்க கூடாது. மகா முக்கியமாக அனுதினமும் பூஜையில் அமர்ந்து கடவுளுடன் கலந்திருக்க வேண்டும்

எங்காவது காசுக்கோ அல்லது சுயநலனுக்காகவோ சறுக்கினால் அந்த வித்தை பலிக்காது

இது முழுக்க முழுக்க கடவுளின் உத்தரவுபடி அடுத்தவருக்காக வாழும் ஒருவகை வேள்வி

அதை முழுக்க பின்பற்றுவது மகா கடினமும் சிரமுமானது.

இதனால்தான் போலிகள் பெருகி நல்ல ஜோசியர்கள் சுருங்கிவிட்டார்கள், ஆங்காங்கு இருந்தாலும் வெளிவருவதில்லை

உண்மையான ஜோதிடன் மீடியா முன் வரமாட்டான், வலிந்து அரசியல்வாதிகள் முன் தோன்றவுமாட்டான்

வீண் விளம்பரத்தில் சிக்கவும் மாட்டான்

எவனாவது ஒரு பகுத்தறிவு கட்சியின் மேலிடத்துக்கு ஜாதகம் பார்த்துவிட்டு அதை வீதியில் சொல்வானா? இதனால் அந்த குடும்பத்துக்கு நெருக்கடி வரும் என்பது அவனுக்கு தெரியாதா?

தெரியும், ஆனாலும் பக்குவற்ற தன்மை அதை மறைத்துவிடுகின்றது. தன்னை நம்பி பேசிய துர்கா ஸ்டாலினையே சிக்கலில் இழுத்துவிட்டிருகின்றார் அன்னார்.

அந்த அம்மணியும் பெரும் வித்தகர்கள் எல்லாம் இருக்கும் நாட்டில் இவரிடம் என்ன ஆலோசனை கேட்டது என்பதுதான் தெரியவில்லை

இந்த பாலாஜி ஹாசன் மாபெரும் போலி ஜோதிடர் என்பது மட்டும் தெரிகின்றது, இன்னும் என்னென்ன காமெடிகள் எல்லாம் செய்வாரோ தெரியாது

ஆனால் ஒரு நாள் திமுக மேலிடத்திடம் செமத்தையாக வாங்கபோவது மட்டும் உறுதி, அது விரைவில் நடக்கலாம்

ராஜகோபால் அண்ணாச்சி காலமாகிவிட்டார்

மிக சுவையான உணவுக்கும், மிக கடுமையான உழைப்புக்கும் பெயர் பெற்ற ராஜகோபால் அண்ணாச்சி காலமாகிவிட்டார்.

அவர் அதிகம் படிக்காதவர் ஆனால் கடும் உழைப்பாளி, பின் தங்கிய நாடார் சாதி

12 வயதில் இருந்தே அவர் உழைத்த உழைப்பு அவரை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தியது, ஒரு நாடார் சைவ உணவகத்தை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்தியதெல்லாம் பெரும் விஷயங்கள்

முதன் முதல் உணவகத்தில் சீருடை இன்னபிற அடையாளம் என மிக நாகரீகமான சுத்தமான உணவகமாக அவரின் சரவண பவன் விளங்கியது

தொழிலில் வேகமாக வளர்ந்தார் அவர், எங்கெல்லாம் தமிழர் உண்டோ அங்கெல்லாம் உலகில் ஏராளமான கடைகள் திறக்கபட்டன‌

அண்ணாச்சி உழைப்பினை எவ்வளவு நம்பினாரோ அப்படியே கடவுளை நம்பினார்

வனதிருப்பதி உட்பட பல ஆலயங்களுக்கு கோடி கோடியாய் அள்ளிகொடுத்தவர் அவர்

அவர் கடவுளை நம்பியது தவறல்ல அப்படியே கடவுளுக்கு மேல் ஜோசியங்களை நம்பியதுதான் தவறு

ஒரு சில நம்பிக்கைகள் அதை செய்ய சொல்கின்றன‌

இந்திரா அப்படி செய்துதான் அதாவது சில யாகங்களை செய்துதான் பெரும் ஆபத்தில் சிக்கினார் என்பார்கள், இரு மகன்களும் கொடூரமாக செத்தது அப்படியே என்பார் சிலர்

ஜெயலலிதா தன்னை ஜோசியர்கள் பிரதமராக்குவார்கள் என நம்பியே அக்கனவு நிறைவேறாமலே செத்தார்

கலைஞருக்கும் ஜாதகத்தில் நம்பிக்கை உண்டென்பார்கள், அவர் முக ஸ்டாலினின் ஜாதகத்தை கணித்தோ என்னமோ கடைசி வரை அவரை தலைவராகவிடவில்லை என்பதெல்லாம் யூகங்கள்

இந்த அண்ணாச்சிக்கு ஜீவஜோதி ஜாதக அமைப்பும் உங்கள் ஜாதக அமைப்பும் பிரமாதமாக இருகின்றது என சொல்லி ஜோசியர்கள் தவறான வழிகாட்டினார் என்றன அக்கால செய்திகள்

அண்ணாச்சி சங்கரமடம் முதல் பல இடங்களில் காணபட்டவர் என்பதால் அதில் உண்மையும் இருக்கலாம்

சில ஜாதகங்கள் அப்படிபட்டவை, உதாரணம் அந்த ஜோசப்பின் விதவைதான் முதல் கணவன் அல்பாயுசுதான்

ஆனால் அவளை அடைந்தபின் நெப்போலியன் பெரும் உயரம் தொட்டான் , உலகையே அலற வைத்தான்

அவளை பிரிந்தபின் அவன் சரிந்தான் அவன் வாழ்வு முடிந்தது

இப்படி வரலாற்றில் பல உதாரணங்கள் உண்டு

அப்படித்தான் அண்ணாச்சியினையும் நம்ப வைத்திருக்க்கின்றது ஒரு கூட்டம், அப்பெண்ணை அடைய பல செய்ய கூடாத வழிகள் செய்த அண்ணாச்சி சிக்கலில் சிக்கினார்.

என்னதான் ஜோசியர் சொன்னாலும் அண்ணாச்சிக்கு அறிவு என்னாயிற்று?

தொழிலில் உச்சத்தில் இருந்தார் அண்ணாச்சி, அதற்கு மேல் அத்தொழிலில் உயர என்ன இருக்கின்றது என இந்த பாதைக்கு வந்தார் என்பதுதான் தெரியவில்லை

கழுகு போல அவரின் ஆசை இறக்கை கட்டி பறந்திருக்கின்றது

ஆனானபட்ட சாலமோன் அரசரின் சாம்ராஜ்யமும் ஜூலியஸ் சீசரின் சாம்ராஜ்யமும் பெண்களால் சரிந்தபொழுது அண்ணாச்சி என்ன செய்வார்?

உழைப்பால் உயர்ந்த ஒரு மனிதர் பெண்ணால் சரிந்திருகின்றார்.

ஜீவஜோதி எனும் பெண்ணின் கண்களில் அவரின் விதி இருந்திருக்கின்றது

அண்ணாச்சியின் உழைப்பும் உயர்வும் பெரும் சாதனை, அதன் பின் அவர் அடைந்ததெல்லாம் வேதனை

இன்று அண்ணாச்சி மரித்துவிட்டார். உழைப்பால் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய அண்ணாச்சியின் காலம் இன்றோடு முடிந்துவிட்டது

அவரை நினைக்கும்பொழுதெல்லாம் ஒரு விஷயம் உறுத்தும்

அவருக்கு ஆண்டவன் கோடி கோடியாக கொட்டி கொடுத்திருந்தான், அள்ள அள்ள வந்து கொண்டே இருந்தது பணம்

உண்மையிலே அவர் அந்த ஜீவஜோதியினை நேசித்திருந்தால் அவளை வாழ்வாங்கு வாழவைத்திருக்கலாம், பெரும் மகாராணியாக உயரத்தில் வைத்து கொண்டாடியிருக்கலாம்.

அவள் யாரை திருமணம் செய்தால் என்ன? எங்கு வாழ்ந்தால் என்ன? அவளின் மகிழ்வுக்காக அண்ணாச்சி பெரும் சொர்கத்தையே படைத்து காட்டியிருக்கலாம்.

அவள் விரலை கூட தீண்டாமல் அவள் விதியினை மாற்றியிருக்கலாம்.

அவளுக்கு சகலமுமாய் காவல் இருந்திருக்கலாம், அவளின் மகிழ்ச்சி ஒன்றே பிரதானம் என அவளை பொன் போல பாதுகாத்திருக்கலாம்

உண்மையான காதல் என்றால் அதை அண்ணாச்சி செய்திருக்கலாம்.

மாறாக அவருக்கு வந்தது காதல் அல்ல, அவள் அருகிருந்தால் இன்னும் வசதி கூடும் எனும் பேராசை

எல்லாவற்றையும் வியாபார கணக்கோடே பார்த்த அவரின் கண்கள் அவளையும் வியாபார கணக்கிலே நோக்கின‌

அவளுக்கொரு மனம் இருக்கும் என்பதையும், அவளுக்கும் தனிபட்ட விருப்பு வெறுப்பு இருக்கும் என்பதையும் அவர் யோசிக்கும் மனநிலையிலே இல்லை

எதை எல்லாமோ ஆய்ந்து அருமையான சமையலை செய்த அண்ணாச்சிக்கு, எந்த உணவின் சுவை எல்லாம் புரிந்த அண்ணாச்சிக்கு அந்த‌ பெண்ணின் மனம் புரியவில்லை என்பதுதான் கொடும் விதி.

அவளை அவள் விருப்பபடி வாழ்வாங்கு வாழவிட்டிருந்தால் அவள் கணவனும் வாழ்ந்திருப்பான், அவளும் கண்ணீரின்றி வாழ்ந்திருப்பாள்

அண்ணாச்சியும் இன்னும் பல்லாண்டு வாழ்ந்திருப்பார்

அவள் நன்றாக வாழட்டும் எங்கு வாழ்ந்தால் என்ன? நன்றாக வாழட்டும் என்ற மனம் அவரிடம் இல்லை, அவள் மகிழ்ச்சியாக வாழ ஏதாவது செய்யவேண்டும் என்ற மனமும் இல்லை

நிச்சயம் அவளை வாழவைக்கும் சக்தி அவருக்கு நிரம்ப இருந்தது, ஆனால் வியாபார மனம்தான் இல்லை

அண்ணாச்சி பக்திமான், இந்து நெறியர் ஆனால் அடுத்தவன் மனைவிக்கு ஆசைபட்ட எவனும் வாழ்ந்ததில்லை என இந்துமதம் தன் புராணங்களில் அழுத்தி அழுத்தி சொன்னதை அவர் ஏன் உணரவில்லை என்பதுதான் புரியவில்லை

விதி என்பது அதுதான்

மாவீரன் வாலி, மாமன்னன் ராவணன், தேவர்களுக்கு அரசனான இந்திரன், மாபெரும் அழகான சந்திரன் எல்லோரும் பெண்களால் வீழ்ந்த கதையினை அவர் அறியவில்லை

ஜாதகத்தில் இடமிருக்கின்றது என்பதற்காக ஒரு சுமங்கலியினை கதற கதற இழுத்துவந்தால் தெய்வம் விட்டுவிடுமா என்ன?

இன்று என்னாயிற்று?

எந்த பெண்ணால் தன் வாழ்வு இன்னும் உயரும் என நினைத்தாரோ அந்த பெண்ணுக்கு கணவனும் இல்லை

அண்ணாச்சியும் இல்லை

வியாபாரியின் வியாபார கணக்கு ஒரு பெண்ணின் வாழ்வினையே சிதைத்துவிட்டது

செய்த பாவத்துக்கு கூலியாக பெயர் கெட்டு புகழ்கெட்டு அண்ணாச்சியும் சென்றாயிற்று

நளனாக வாழ்ந்த அண்ணாச்சி ராவண‌னாக மரித்தும் விட்டார்

விதி தன் கணக்கினை சரியாக செய்துவிட்டது.

எவ்வளவு பெரும் கொம்பனாக இருப்பினும் குற்றமில்லா ரத்தமும், உத்தம‌ சுமங்கலியின் கண்ணீரும் அவனை பழிவாங்காமல் விடாது எனும் தர்மம் நிலைநாட்டபட்டு காட்சிகள் முடிகின்றன

உழைப்பால் உயர்ந்து தன் வியாபார சிந்தனையிலே ஒரு பெண்ணை ஜடமாக நினைத்து அவளை வாங்க நினைத்து அவளின் கனவுகளை சிதைத்து தானும் சிதைந்துவிட்ட அந்த அண்ணாச்சிக்கு அஞ்சலிகள்

ஒருவேளை அவளுக்காக அவளின் நல்வாழ்வுக்காக , அவளின் மகிழ்வுக்காக அவளிடம் எதுவும் எதிர்பாராது அவளுக்காக அவர் கொட்டி கொடுத்து அவளை வாழ்வாங்கு வாழ‌வைத்திருந்தால் எல்லா கிரகங்களும் கடவுள்களும் அவருக்கு கொட்டி கொடுத்திருக்கலாம்

சுத்தமான உள்ளன்பு இருந்தால் அவர் அதை செய்திருக்கலாம்.

உண்மையான அந்த அன்புக்கு நிச்சயம் தெய்வங்களும் கிரகங்களும் ஓடிவந்து வரங்களை வழங்கியிருக்கும்

திமுக வளர்த்த தமிழ்

அந்த தமிழும் அதன் பிழையும் ஆச்சரியமில்லை, திமுக வளர்த்த தமிழ் இந்த அளவாவது இருப்பது கலைஞரின் தொல்காப்பிய பூங்கா கொடுத்த விளைவு இல்லாவிட்டால் நிலமை இன்னும் மோசமாயிருக்கும்

ஆனால் ஒரு ஜோசியக்காரனுக்கு திமுகவின் உச்ச மேலிடத்தை நேரில் திருமணத்துக்கு அழைக்கும் அளவு செல்வாக்கு இருக்கின்றது என்பதைத்தான் படம் காட்டுகின்றது

ஆக திமுகவுக்கு ஜாதகம் ஜோசியம் எல்லாம் சிக்கலே அல்ல, மாறாக பிராமணரிடம் அது சிக்கியிருப்பதுதான் சிக்கல்

பிராமணரை தவிர யார் ஜோசியம் ஜாதகம் என சொன்னால் அது பகுத்தறிவில் சேருமே தவிர மூடநம்பிக்கை ஆகாது என்பது திராவிட தத்துவம்

இன்றைய உலகின் எதிர்பார்ப்பு

மாவோவின் கைக்கு ஆட்சி வரும்பொழுது மிகவும் பிந்தங்கிய விவசாய நாடு சீனா, கொரிய யுத்தம் போன்றவற்றாலும் இன்னும் பல காரணங்களாலும் சோவியத் யூனியன் ஆதரவு சீனாவுக்கு தொடக்கத்தில் கிடைத்தது

அதில் அணுகுண்டுவரை செய்தது சீனா, ஆனால் பொருளாதாரம் இன்றைய வடகொரியா போலத்தான் இருந்தது

மாவோ நமது தமிழக‌ நாம் தமிழர் போல விவசாயத்தில் தேசத்தை மாற்றுகின்றேன் என கிளம்பினான், அவன் செய்த மாணவர் புரட்சி எனும் அழிச்சாட்டியம் இன்றுவரை சீனாவின் கருப்பு பக்கம்

என்ன செய்தது மாவோ படை?

நகரங்களில் சும்மா நடந்து செல்பவனை பிடித்து விசாரிக்கும் அதாவது அவனின் பூர்வீகம், விவசாய பூமி உண்டா இல்லையா? என்றேல்லாம் ஏகபட்ட கேள்விகள்

அவனுக்கு கிராமத்தில் சொந்தமாக விவசாய நிலம் இருந்தால் அவ்வளவுதான், மாட்டுகறிக்கு பொங்கும் சில சங்கிகள் போல ஆக்ரஷமாக எழுந்து அப்படியே தூக்கி கொண்டு கிராமத்தில் கொண்டு போட்டு விவசாயம் பார்க்க மண்வெட்டி கொடுத்துவிடுவார்கள்

நகரங்களில் வேலை இன்றியோ அல்லது நிரந்தர வருமானமோ இல்லா எல்லோருக்கும் விவசாய வேலை வழங்கபட்டது.

நான்சிங், பிஜீங் , ஷாங்காய் உட்பட அந்த சைனாவின் பெரிய நகரங்களில் எல்லாம் இந்த அட்டகாசம் நடந்தது எல்லோரும் சொந்த ஊருக்கு விரட்டபட்டனர்

விவசாயம் தெரியாதவருக்கு சிக்கலே இல்லை, பொதுவுடமை அரசு என்பதால் எல்லோருக்கும் உழைக்க நிலம் வழங்க முடிந்தது, “விவசாயம் தெரியவில்லையா பன்றி வளர்த்துகொள் அது ஒன்றும் சிரமம் அல்ல உண்வு போட்டால் அதுவாக வளரும், நீ செய்ய வேண்டியது அதன் கழிவினை அள்ளுவது மட்டுமே , நாட்டுக்காக இதை செய்யமாட்டாயா?” என போதிக்கபட்டது

ஓரளவு படித்துவிட்டு மேற்படிப்புக்கு நகருக்கு வந்தவர்களும் விரட்டபட்டனர், இனி படித்து என்ன கிழிக்க போகின்றாய் போ விவசாயத்தை இல்லை பன்றி வாத்து வளர்த்து நாட்டை முன்னேற்று என விரட்டபட்டனர்

வாத்து பண்ணை, மீன் பண்ணை இன்னும் என்னவெல்லாமோ வந்தது, பால் பண்ணை மட்டும் வராது காரணம் சீனர்களுக்கு மாட்டுபால் போன்றவை பரிட்சயமில்லை

விவசாயத்தின் மூலம் நாட்டை தூக்கி நிறுத்த பெரும் கனவு கண்டார் மாவோ, கிட்டதட்ட ரஷ்யாவின் கூட்டுபண்ணை திட்ட சாயல் அது

சீனாவின் பெரும் கலாச்சாரம் விவசாயம், விவசாயத்தை மீட்டெடுக்கும் இந்த புரட்சி கலாச்சார புரட்சி என அவனால் கொண்டாடபட்டது

இதெல்லாம் 1966க்கும் 1976க்கும் இடையிலான காலங்கள்

ஆனால் சீனாவில் அது மாபெரும் குழப்பத்தை கொடுத்தது, விவசாயம் ஓரளவு வளர்ந்தாலும், பொருளாதாரம் முடங்கியது முக்கிய நகரங்கள் வெறிச்சோடின‌

அங்கிள் சைமனுக்கு அதிகாரம் கிடைத்தால் என்னாகுமோ அந்த கேலி கூத்துக்கள் எல்லாம் அங்கு நிஜமாக‌ அன்றே நடந்தன‌

எளிய தமிழ்பிள்ளைகள் போல அறிவுகெட்ட செம்படையினர் மாவோ சொல்வதை எல்லாம் செய்துகொண்டிருந்தனர், அது நாட்டுபற்று எனவும் சொல்லி பெருமைபட்டுகொண்டனர்

நாடு பெரும் குழப்பத்தில் சிக்கியது

மாவோவுக்கும் டெங் ஜியோ பிங்கிற்கும் ஒத்துவரவில்லை, கருத்து மோதல்கள் வெடித்தன. நாடு நாசமாகிகொன்டிருந்தது, எங்கும் குழப்பம் மாவோவுக்கு எதிரான மனநிலை வளரதொடங்கியது

மாவோ கலைஞர் கருணாநிதியினை விட தந்திரசாலி, எப்பொழுதெல்லாம் அவன் மேல் அதிருப்தி வருமோ அப்பொழுதெல்லாம் தேசமே ஒன்றாக அவனை தேடும்படி ஏதாவது செய்து விவகாரத்தை திசை திருப்பிவிடுவதில் கில்லாடி

அப்படித்தான் முதல்முறை அதிருப்தி வந்தபொழுது திபெத்தை பிடித்து இந்தியாவுடன் யுத்தம் புரிந்து நிலமையினை சீராக்கினான்

1962ல் இந்தியாவுடன் அப்படி செய்துதான் தன்னை காத்துகொண்டான் மாவோ

1966ல் இந்த கலாச்சார புரட்சியினை தொடக்கினான் 1973களுக்குள் நாடு நாசமாயிற்று

அப்பொழுது எழுந்த அதிருப்தியினை திசை திருப்ப சோவியத் ரஷ்யாவுடன் உரசினான், ஆனால் பலமிக்க சோவியத் சைனாவினை அடக்கி வைத்தது

இனி சண்டையும் இடமுடியாது, உள்ளூரிலும் அதிருப்தி எனும் நிலையில் உலகமே அதிரும்படியான காரியத்தை செய்தான் மாவோ

ஆம் அமெரிக்காவுடன் கைகோர்த்து இனி தொழில்துறையில் சீனா இறங்கும் என அறிவித்தான். ஒரு பொதுவுடமை நாடு அமெரிக்காவுடன் கைகோர்த்தது அன்று மகா ஆச்சரியம்

ரஷ்யாவினை தனிமைபடுத்துதல், வியட்நாம் போர் தோல்வி என பல திட்டங்களை வைத்திருந்த அமெரிக்காவும் அவனை அணைத்து கொண்டது

அன்று தொடங்கியது அமெரிக்க சீன உறவு ஆனாலும் அமெரிக்கா அள்ளிகொடுக்கவில்லை கிள்ளி கொடுத்தது

அத்தோடு மாவோ காலமாகி டென் ஜியோ பிங் காலம் வந்தது

அவனே அமெரிக்காவிற்கு சீனாவினை திறந்துவிட்டான், 1989ல் மாணவர்கள் பல்லலாயிரம் பேர் திரண்டு ஜனநாயகம் கேட்டபொழுது சில ஆயிரம் பேரை கொன்றுவிட்டு நாடே முக்கியம் என இரும்பாக இருந்தானே அந்த டெங்

இன்று காணும் சீனாவின் அரசு வளர்ச்சி டெங் கொடுத்தது அடுத்த 35 ஆண்டு காலத்தில் அது மாபெரும் வளர்ச்சி பெற்றது

நிச்சயம் சீனாவின் வளர்ச்சியில் அமெரிக்காவுக்கும் பங்கு உண்டு

என்னதான் இருந்தாலும் பெரும் மக்கள் சக்தி முதல் பல சக்திகளை கொண்ட நாடு, என்றோ ஒருநாள் முக்கிய எதிரியினை அழிக்க இந்த தற்காலிக எதிரியினை நண்பனாக்கினோம், இனி இவன் முழுக்க வளர்ந்துவிட்டால் நம் கதி என்னாகும் என்ற கவலை அமெரிக்காவுக்கு வந்தது

அதுவும் டிரம்ப் காலத்தில் உச்சம் தொட்டது, முறுகல்கள் வந்தன‌

வரம் கொடுத்த அமெரிக்காவே சீனாவின் பேட்டரியினை உருவிற்று

இப்பொழுது வேகமாக சரிகின்றது சைனா, கடந்த 3 மாதத்தில் மட்டும் அதன் சரிவு 6.7 சதவீதமாக எகிறியிருக்கின்றது

இது கடந்த 30 வருடத்திற்கு முந்தைய நிலை

ஆக எந்த அமெரிக்கா அவர்களை உயர்த்திவிட்டதோ அது இனி சீனா வளர கூடாது என முடிவெடுத்து தன் கரங்களை விலக்கிவிட்டது

அதில் வேகமாக சரிகின்றது சீன பொருளாதாரம்

இதிலிருந்து சைனா எப்படி மீண்டு வரபோகின்றது என்பதை உலகம் மிக உன்னிப்பாக பார்த்துகொண்டிருக்கின்றது.

மாவோ, டெங் வரிசையில் அமர்ந்திருக்கும் ஜிபெங்கின் வழிகாட்டல் எப்படி இருக்குமோ என்பதுதான் இன்றைய உலகின் எதிர்பார்ப்பு

எப்படி திட்டமிட்டன? இப்படித்தான்

ரஷ்யாவிடம் இந்தியா எஸ் 400 வாங்கினாலோ இல்லை வேறு நவீன சிஸ்டம் வாங்கினாலோ பொருளாதார தடை வீசபடும் என மிரட்டிகொன்டிருந்தது அமெரிக்கா

அவர்களின் அலாவுதீன் பூதமான மைக் பாம்பியோ கூட இந்தியா வந்து அதுபற்றி மிரட்டிவிட்டுத்தான் சென்றார் என்கின்றன செய்திகள்

இப்படியான நிலையில் டிரம்பின் வலது கன்னத்தில் இந்தியாவும் இடது கன்னத்தில் புட்டீனும் மாறி மாறி அடித்துவிட்டார்கள்

எப்படி திட்டமிட்டன? இப்படித்தான்.

“பொருளாதார தடை என்பது என்ன? சில நுட்பங்களை அல்லது பொருளாதார நடவடிக்கைகளை ஒரு நாட்டுக்கு கிடைக்காமல் செய்வது

சரி சிறு நஷ்டம்தான் நிச்சயமாக, ஆனால் இந்த நஷ்டத்தை செய்த அமெரிக்காவினை திருப்பி அடிக்க வேண்டாமா?

எப்படி அடிக்கலாம்? போர் முடியாது அவர்கள் மேல் பொருளாதார தடை முடியாது ,நிறைய முடியாது அவர்கள் சக்தி அப்படி

ஆனால் அவர்கள் என்ன வேற்று கிரகத்திலா இருகின்றார்கள்? அவர்களுக்கான வருமானம் இந்த பூமியின் இதர நாடுகளிலிருந்துதான் வருகின்றது, குறிப்பாக அமெரிக்க டாலர்

சர்வதேச வணிகபடி இரு நாடுகள் வியாபாரத்தை செய்யும்பொழுது டாலரில்தான் பெரும்பாலும் செய்யும்

ஒரு டாலர் பரிமாற்றபடும்பொழுதே குறிப்பிட்ட வருமானம் அமெரிக்காவுக்கு செல்லும், பல மில்லியன் பில்லியன் டாலர் எனும்பொழுது எவ்வளவு செல்லும்?

ஆக நாம் (இந்தியாவும் ரஷ்யாவும்) பல்லாயிரம் கோடி அமெரிக்க டாலரில் பரிவர்த்தனை செய்யும் பொழுது ஏன் டாலரில் செய்து அமெரிக்காவுக்கு வருமானம் கொடுக்க வேண்டும்?

நிச்சயம் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஆயுதம் வாங்க போவது உறுதி, அதை தொடர்ந்து அவர்கள் பொருளாதார தடை வீசலாம்

நம்மை ஒருவன் அடிக்கும் பொழுது , அவனின் டாலர் மட்டும் நமக்கு எதற்கு?

வேண்டவே வேண்டாம், ஏ இந்தியாவே நீ எஸ் 400க்கு பணத்தை ரூபாயாக கொடு, நான் எனக்கு தேவையானதை வாங்கும்பொழுது ரூபிளாக தருகின்றேன்

உன் நாட்டிலும் என் நாட்டிலும் அதனால் வருமானம் வரும், அவர்களுக்கு எதற்கு வீணாக கொடுக்க வேண்டும்?”

இப்படி திட்டமிட்டு விட்டு அதை உறக்க சொல்லியும் விட்டார்கள்.

இப்படி இதற்கு முன் இந்தியா தைரியமாக சொன்னதா என்றால் ராஜிவ் காலத்தில் சொன்னது

ராஜிவுக்கு முன்பே 1978ல் இப்படி ஒரு ஒப்பந்தம் உண்டு ஆனால் அது பரணில் இருந்தது, ராஜிவ் அதை சீர்படுத்தி செயல்படுத்த முனைந்தார்

ராஜிவ் காந்தியும் கோர்ப்பசேவும் இதுபற்றி பேசதொடங்கிய பொழுதுதான் சோவியத் உடைந்தது, பின் ராஜிவும் கொல்லபட்டார்

இன்று அங்கு வலுவான புட்டீனும், இங்கு இரும்பு மனிதனாக தனிபெரும் தலைவனாக மோடியும் வந்துவிட்டார்

வலுவான தலைவர்கள் அமையும் பொழுது என்ன நடக்குமோ அந்த தைரியமான விஷயங்கள் மறுபடி நடக்கின்றன‌

இந்திய நிதியமைச்சும் இதற்கு பெரும் வலுசேர்த்தது என்கின்றார்கள்

உலக அரங்கில் மோடி சிங்கமென நிற்கின்றார், அமெரிக்கா ஒரு மாதிரி முறைத்தாலும் அவர் கண்டுகொள்ளவில்லை நாட்டுக்க்கு தேவையானதை செய்கின்றார், வாழ்த்துக்கள்

நாட்டு நலனுக்காக மாபெரும் நல்ல முடிவுகளை தைரியமாக எடுக்கும் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் வாழ்த்துக்கள்