மிக கடுமையான NIA சட்டம் வந்திருப்பது ஆறுதல்

இந்த NIA சட்டதிருத்தம் பற்றி ஆளாளுக்கு பொங்குகின்றார்கள், இது அப்படி செய்துவிடும் இப்படி செய்துவிடும் பலரை பழிவாங்கிவிடும் என ஏகபட்ட சீற்றங்கள்

அப்படி அஞ்சவேண்டிய சட்டதிருத்தமா இது, ஆம் இந்நாட்டினை தன் நாடாக கருதாமல் , இந்த மண்ணை சொந்தமண்ணாக கருதாமல் ஏதோ நினைத்துகொண்டிருக்கும் பதர்கள் நிச்சயம் அஞ்சியே தீரவேண்டும்

நாட்டின் நலம் விரும்பிகளும், தேசாபிமானிகளும் இந்நாட்டில் குற்றமற்ற வாழ்க்கை வாழ்பவர்கள் ஏன் அஞ்ச வேண்டும்?

இந்த அமைப்பு 2008ல் தோற்றுவிக்கபட்டாலும் அதற்கு பெரும் அதிகாரங்கள் இல்லை

இந்திய வரலாற்றை ஆழ கவனித்தால் ஒன்று புரியும், சுதந்திர இந்தியாவுக்கு ஏகபட்ட கடும் சட்டங்கள் அவசியமாயிருந்தன ஆனால் பெருந்தன்மைக்க நேரு பல விஷயங்களில் மிக பெருந்தன்மையாய் இருந்தார்.

அன்றே கடும் சட்டங்கள் இருந்தால் காந்தி கொல்லபட்டிருக்கமாட்டார், மதவாத அமைப்புகள் வளர்ந்திருக்காது, ஏன் அன்றைய பிரிவினைவாத‌ திமுகவே உருவாகி வந்திருக்காது

அதன் பின்னும் காட்சிகள் மாறவில்லை, கடும் சட்டங்கள் இல்லாததால் இந்திராவினை இழந்தோம், அருமை ராஜிவினை இழந்தோம்

இன்னும் எல்லை தாண்டிவந்த பயங்கரவாதத்திலும் அதற்கு துணை போன உள்ளூர் கைகூலிகளாலும் இந்த நாடு இழந்தது ஏராளம்

இச்சட்டாம் காவி தீவிரவாதிகளை விட்டுவிடும் அப்பாவி இஸ்லாமிய மக்களை கொன்றுவிடும் என ஒரு கூட்டம் கிளம்பியிருகின்றது

காவி தீவிரவாதம் என்பது என்று வெடிகுண்டுகளுடன் எல்லை தாண்டியது? என்று அண்டை நாட்டில் ஊடுருவி பெரும் குண்டுப்வெடிப்புகளை நடத்தியது?

ஒருவேளை காவிகள் அழிச்சாட்டியம் செய்தாலும் இதே சட்டம் அவர்கள் மேலும் பாயத்தான் செய்யும்.

இது இந்தியர் மேலான சட்டமே அன்றி மதரீதியான சட்டமா? அப்படி ஏற்றுகொள்ளத்தான் முடியுமா?

இங்கு பெரும் குண்டுவெடிப்புகளை இதுவரை நிகழ்த்தியது எவ்வகை தீவிரவாதம்?

இந்நாடு காஷ்மீரிய தீவிரவாதம், நக்ஸலைட்,உல்பா, காலிஸ்தான், ஈழபுலிகள், மாவோயிஸ்டுகள் என எகபட்ட தீவிரவாத மிரட்டல்களை கொண்ட நாடு

ஒவ்வொரு அமைப்புக்கும் பின்னால் ஒரு நாடு உள்ளது, அந்தநாட்டின் கைகூலிகள் இங்கு உள்ளனர்

இந்த சட்டதிருத்தம் என்றவுடன் அலறுவது யாரென்றால் சாட்சாத் அவர்கள்தான், முதல் கதறல் அவர்களிடமிருந்தே வருகின்றது

கதறுவது யாரென குறித்துவைத்தாலே ஏகபட்ட மர்ம கேள்விகளுக்கு விடை கிடைத்துவிடும்

எந்த நாடு சட்டத்தை திருத்தவில்லை?

கென்னடி கொலைக்கு பின் அமெரிக்காவில் இன்னொரு அரசியல் கொலை இல்லை காரணம் சட்டம் அப்படி இறுக்கபட்டது, ரீகன் சுடபட்டது எல்லாம் டிராமா

அந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின் இன்னொரு தாக்குதல் அமெரிக்காவில் இல்லை காரணம் மிக கடுமையான சட்டங்கள்

சீனா போன்ற நாடுகளில் இருக்கும் கடுமையான பாதுகாப்பு சட்டங்களை நினைத்தாலே பகீர் ரகம்

அருமை இந்தியா இப்பொழுதுதான் மிக தேவையான பாதுகாப்பு விஷயத்தை செய்திருக்கின்றது

ஒரு விஷயம் எம்மால் உறுதியாக சொல்லமுடியும்

1990களிலே இப்படி ஒரு சட்டம் இருந்தால் ராஜிவ் கொலையினை தொடர்ந்து வைகோ, கொளத்தூர் மணி, இன்னும் ஏகபட்ட திராவிட சிங்கங்கள் எல்லாம் இப்பொழுதும் சிறையில் கிடக்கும்.

இந்த தியாகு போன்ற குபீர் போராளிகள் எல்லாம் சிறையினை விட்டு வந்திருக்க மாட்டார்கள்

ஏன் கலைஞர் கருணாநிதி நிலையே சிக்கலாகியிருக்கும், ஜெயின் கமிஷன் முடிவு அதைத்தான் சொல்கின்றது

சொந்த நாட்டு ராணுவத்தை அந்நியநாட்டு தீவிரவாதகுழு எதிர்த்து கொன்றுகுவித்தபின்னும் அவர்களை அரவணைத்தால் பார்த்து கொண்டிருக்க முடியுமா?

ஆம் கடுமையான சட்டங்கள் இல்லாததாலே இந்த திராவிட அழிச்சாட்டிய கும்பலெல்லாம் மாபெரும் பாதகத்துக்கு துணைபோன பின்னும் வெளியே ஏதோ தியாகிகள் போல சுற்றிகொண்டிருக்கின்றன‌

இப்பொழுதாவது மிக கடுமையான NIA சட்டம் வந்திருப்பது ஆறுதல்

நல்ல இந்தியனுக்கும், நாட்டுபற்று மிக்கவனுக்கும் தேசத்தின் அமைதியினை கெடுக்க துணைபோகாதவனுக்கும் இதனால் சிக்கலே இல்லை

மாறாக யாரெல்லாம் கதறுகின்றானோ அவனை எல்லாம் இப்பொழுதே குறித்துவைத்து கொள்வது பாதுகாப்பு அமைச்சுக்கு நலம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s