அதற்கு அழிவே இல்லை

கடல் கடந்து கிடப்பவர்களுக்கு ஒரிஜினல் சாம்பாரை கொடுத்தவர் அண்ணாச்சி ராஜகோபால். அந்த சரவணபவன் இல்லை என்றால் வெளிநாட்டுவாசிகள் பலருக்கு சாம்பார் என்பதே காணல் நீராக போயிருக்கும்

அசைவ உணவினை கொடுக்க ஆயிரம் உணவங்கங்கள் உண்டு , ஆனால் பாரம்பரிய சுவையில் சைவ உணவினை கொடுக்க அவர்களை தவிர யாருமில்லை

ராஜகோபால் என்பவரின் அருமை கடல் கடந்து நல்ல உணவுக்கு ஏங்கினால் தவிர புரியாது

ருசிமிக்க சைவ உணவு வேண்டுமென்றால் அவர்களை தவிர‌யாருமில்லை. அந்த சாம்பாரும் இதர வகைகளும் அப்படி ஒரு சுவை, நாவில் வைத்தாலே ஊருக்கு இழுத்து செல்லும் ஆற்றல் கொண்டவை

என்ன இருந்தாலும் 10 வருடத்திற்கும் மேல் அவர்கடையில் அவ்வப்போது கை நனைத்திருக்கின்றோம், நாவு செத்துவிட்ட நேரங்களில் எல்லாம் அவரால்தான் அது உயிர்பெற்றது, கொஞ்சமாவது நன்றி இருக்கவேண்டும் அல்லவா?

அவருக்கு அஞ்சலி செலுத்த என்ன செய்யலாம்?

அந்த சரவணபவனில் ஏதாவது உண்பதே அவருக்கான அஞ்சலி

அப்படி ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தாயிற்று, கடை மேனேஜரிடம் அவருக்கு அஞ்சலி செலுத்தவில்லையா? ஒரு படம் கூட காணவில்லையே என கேட்டோம்

கடையில் அஞ்சலி செலுத்தினால் ஏதும் சட்ட சிக்கல் வரும் என அஞ்சி அறையிலே அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டதாக சொன்னார், சொல்லும் பொழுது அவரின் கண்கள் லேசாக கலங்கின‌

ஆர்டர் செய்த உணவு வந்ததும், அந்த சாம்பாரின் மணமும் சுவையும் அண்ணாச்சியினை நினைவுபடுத்தி சென்றன‌

தனக்கு பின் நிலைத்த அடையாளத்தை விட்டு செல்பவர்களுக்கு மரணமில்லை, சுவையான உணவினை சரவணபவன் வழங்குமளவும் அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார்

எனினும் அண்ணாச்சியின் வாழ்வினை பார்க்கும் பொழுது ஒரு விஷயம் உறுத்துகின்றது

அண்ணாச்சி மேல் தவறா இல்லையா என்பது விஷயமல்ல, சுப்ரீம் கோர்ட்டே அண்ணாச்சி குற்றவாளி என சொன்னபின் சந்தேகிக்க ஒன்றுமில்லை

ஆனால் ஒரு சாமான்ய ஜீவஜோதி, அதுவும் சரவண பவன் ஊழியரின் மகளான ஜீவஜோதி கணவனை இழந்த நிலையிலும் சுப்ரீம் கோர்ட் வரை சென்று செலவழித்து போராட முடிகின்றதா?

நல்லவரோ கெட்டவரோ அண்ணாச்சியின் செல்வாக்கு பெரிது, உலகெங்கும் அவரின் உணவகங்கள் டாலரிலும் யூரோவிலும் ரியாலிலும் ரிங்கிட்டிலும் கொட்டி கொடுக்கின்றன‌

ஆனால் சாமான்ய ஜீவஜோதி 20 வருடமாக போராடும் அளவுக்கு அவருக்கு பின்புலம் என்ன?

நிச்சயம் ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது, இதன் பின்னால் வெளிசொல்ல முடியாத கதையும் இருக்கலாம்

அண்ணாச்சி இனி இல்லை, ஜீவஜோதி வாய்திறந்து சொல்ல போவதுமில்லை

அந்த ரகசியம் அண்ணாச்சியோடே மறைந்தும் விட்டது

இட்லியோ தோசையோ, சாம்பார் கலந்த உணவினை கடைசியில் உறிஞ்சி உண்ணும் சுவையே தனி

அப்படி கடைசியாக எடுத்து உறிஞ்சினால் அதில் அவரின் குரல் கேட்கத்தான் செய்தது, அவரின் ஆன்மா அந்த சுவையில்தான் கலந்திருக்கின்றது, அதற்கு அழிவே இல்லை

மானிட நலனுக்கானது அல்ல

ஒரு விஷயத்தை எம்மால் உணரமுடிகின்றது, அது இந்தியாவின் மொபைல் போன் கோபுரங்களுக்கானது

இங்கே 8 மணிநேரம் சார்ஜ் நிற்கும் அதே போன் இந்தியாவில் 3 மணிநேரம் கூட தாக்குபிடிப்பதில்லை. இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் மின் கட்டமைப்பு வசதிகள் ஒன்றே, அமெரிக்கா போன்ற சில நாடுகள் வித்தியாசம்

இந்தியாவில் இணைய வசதியினை தடுத்துவிட்டால் சார்ஜ் அதன் போக்கில் நிற்கின்றது, இணையத்தை இழுத்தால் சட்டென குறைகின்றது

விஷயம் சொல்வது ஒன்றுதான்

சக்திவாய்ந்த அலைகள் இந்தியாவில் பயன்படுத்தபடுகின்றன, அது செல்பேசியின் சக்தியினை சட்டென உறிஞ்சுகின்றன‌

மற்ற நாடுகளை விட அங்கு ஏதோ அனுமதிக்கபட்ட அளவினைவிட அதிகமாகத்தான் இருப்பது புரிகின்றது.

இது நிச்சயம் மானிட நலனுக்கானது அல்ல, சுற்று சூழலுக்கும் எதிரானது

நமக்கு தொழில்நுட்பம் அதிகமாக புரியாது என்றாலும் இதெல்லாம் உணர்ந்துகொள்ளும் வகையிலான ஆபத்துக்கள்

அனுமதிகபட்ட அளவினை விட சக்திவாய்ந்த அளவு மின்காந்த அலைகளை இந்தியாவின் தனியார் தொலைதொடர்பு கோபுரங்கள் இயக்குவது ஓரளவு உண்மைதான் போல..

சமையலும் சுவையாண உணவும் – யூ டியூப் சேனல்

சங்கத்திற்கு முதலில் பிடித்த விஷயம் குஷ்பு படம், அதன் பின்பு வாசிப்பும் உலக விஷயங்களை தேடி பிடித்தலும்.

வாசிப்பு அவ்வளவு சுகமான விஷயம், எவ்வளவும் வாசிக்கலாம். எழுத்து என்பது அந்த அளவு சுவாரஸ்யம் அல்ல‌

இதற்கு அடுத்து சங்கம் விரும்பும் விஷயம் சமையலும் சுவையாண உணவும்

மானிட பிறவியில் அது கூட இல்லை என்றால் எப்படி? மனிதனுக்கும் விலங்குக்கும் என்ன வித்தியாசம், அட தெய்வங்களுக்கும் மனிதனுக்கும்தான் என்ன வித்தியாசம்?

நல்ல புத்தகம் போல, சுகமான சிந்தனை போல, குஷ்பு படம் போல சமையலும் ரசனையான விஷயம், அதை ரசித்து உண்பது அதை விட ஏகாந்தமானது

மானிடபிறவிக்கு மட்டுமே வாய்த்த அற்புத வாய்ப்பு அது

சங்கம் சமையலை செய்து உங்களை இம்சைபடுத்துவதை விட உலகின் சுவையான உணவுகளை உங்களுக்கு அறிமுகபடுத்த விரும்புகின்றது

இது தொடர்பாக யூ டியூப் சேனல் தொடங்க இருக்கின்றது சங்கம், முதலில் உணவுக்கு பெயர்பெற்ற மலேசியாவின் பிராதன உணவுகளை அதன் பிரசித்திபெற்ற உணவங்களில் இருந்தும் அது சம்பந்தமான தரவுகளையும் உங்களுக்கு தர இருக்கின்றது

விரைவில் கிழக்காசியாவின் வகை வகையான உணவுகளை நீங்கள் காணலாம்

கிழக்காசியா பக்கம் வந்தால் நீங்கள் தேடிபிடித்து உண்ண உதவுகின்றொமே அன்றி வேறொன்றுமல்ல..

அடித்து ஆட ஆர்மபித்துவிட்டது ஈரான்

அடித்து ஆட ஆர்மபித்துவிட்டது ஈரான், உண்மையில் அவர்கள் அதிரடிக்காரர்கள்

ஈரானின் கப்பல் ஒன்றை பிரிட்டன் பிடித்துவைத்திருப்பது உலகறிந்தது, பனாமாவில் பதிவு செய்யபட்ட ஈரானிய கப்பல் அது. அதை பிடித்து வைத்து ஈரானை மிரட்டிகொண்டிருந்தது பிரிட்டன்

பேசிபார்த்தது ஈரான், சமாதானத்துக்கு முழங்காலிடு என்றது ஈரான்

சமாதானமா? உங்களுடனா? என முறைத்துவிட்டு சென்ற ஈரான் மிக துணிச்சலாக பிரிட்டனின் கப்பலை பிடித்து சென்றாயிற்று

அமீரகத்திலிருந்து சவுதி கிளம்பிய பிரிட்டன் கப்பலை குறிவைத்து தூக்கிய ஈரான் நேற்று உலகை அதிர வைத்தது

அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் பிரிட்டனின் பினாமியான லைபீரிய கப்பலை பிடித்துவிட்டது

இப்பொழுது பிரிட்டனின் இரு கப்பல்கள் ஈரானின் கையில் உள்ளன‌

அதிர்ந்து நிற்கின்றது உலகம், இப்படி ஒரு துணிச்சலான நடவடிக்கையினை யாரும் அதனிடம் எதிர்பார்க்கவில்லை

அதுவும் பிரிட்டனின் லைபீரிய கப்பலை கண்டறிந்து தூக்கியிருப்பது ஈரானை இயக்குவது சாதாரண சக்தி அல்ல என்பதை பிரிட்டனின் செவிட்டில் அறிந்து சொல்லியிருக்கின்றது

பிரிட்டனின் வல்லரசுபட்டத்தை முதலில் கிழித்தெறிந்தவர் எகிப்தின் கர்ணல் நாசர், அந்த சூயஸ் கால்வாய் விவகாரத்தில் இப்படித்தான் பிரிட்டனை ஓட ஓட அடித்திருந்தார்

பின்னர் கொஞநாள் சதாம்

இப்பொழுது அந்த வீரவரலாற்றின் தொடர்ச்சியாக ஈரான் அடித்துவிரட்டுகின்றது

நிச்சயம் இது சாதாரண சிக்கல் அல்ல, இரு பிரிட்டானிய கப்பலை தன் ஹோர்ம்ஸ் பகுதியில் ஈரான் சொல்லி வைத்து தூக்கியிருப்பது பெரும் போரில் முடியுமா அல்லது தொடர்ந்து கப்பல் கடத்துவார்களா என்பது இனிதான் தெரியும்

நேற்றில் தொடங்கிய அரேபிய பரபரப்பு இப்பொழுது கடும் பதற்றத்தை எட்டியிருக்கின்றது..

எப்பொழுதும் எதுவும் நடக்கலாம் போல..

பொய் ஒன்றே மூலதனம்

திமுகவினருக்கு அன்றிலிருந்தே பொய் ஒன்றே மூலதனம், ஆனால் அக்கால திமுகவினர் பொய்யினை பொருந்த சொல்வார்கள் அவர்கள் திறமை அப்படி இருந்தது

இந்நாளைய திமுகவின் தலமையே உளறுகின்றது என்றால் அடிபொடிகள் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்

கொஞ்சமும் வெட்கமின்றி ஒரு தரவும் உருப்படியின்றி அளந்துவிடுகின்றோமே, சிலர் மறித்துசொன்னால் என்னாகும் என்ற மான உணர்வெல்லாம் கொஞ்சமும் இல்லை

இனமானம், அறிவு இன்னும் என்னவெல்லாம் சொல்வார்களோ அதை எல்லாம் கழற்றி வைத்துவிட்டுத்தான் பதிவிட வருவார்கள் போல, அல்லது நாம் என்ன சொன்னாலும் தமிழர் தலையாட்டுவர் என அவர்களாக நம்புவார்கள் போல‌

இதுவரை நிலவில் கால்வைத்தவர்கள் என 12 பேரை அமெரிக்கா அறிவித்திருக்கின்றது ஆம்ஸ்ட்ராங் முதல் ஹாரிசன் என்பவர் வரை உள்ள பட்டியல் அது

கவனியுஙள் 12 பேரும் அமெரிக்கர்கள், 1969 முதல் 1972 வரை இந்த பயணம் நடந்தது. 1972க்கு பின் அமெரிக்க்கா நிலவு பயணத்தை நிறுத்தியது

அமெரிக்காவின் போட்டியாளரான ரஷ்யா இன்றுவரை அமெரிக்காவின் நிலவு பயணத்தை மறுக்கின்றது, அப்படி ஒரு பயணம் சாத்தியமே இல்லை என சொல்லிவிட்டு தன் கலத்தை மட்டும் நிலாவில் இறக்கியது

சீனாவும் கலனை இறக்கியது, இந்தியா இறக்கியது

பிரிட்டன் பிரான்ஸ் போன்ற நாடுகளின் கூட்டு கலன்கள் சிலவற்றை செய்தன, இஸ்ரேலின் முயற்சி தோல்வியில் முடிந்தது

ஆக அமெரிக்கர் 12 பேர் சென்றனர் என்பதே முழுக்க உறுதிபடுத்த‌படாத தகவல்

இதில் இந்தியாவின் ராகேஷ் சர்மா நிலாவுக்கு சென்றாராம், எப்படி இருகின்றது இந்த புரட்டு?

ராகேஷ் சர்மா ரஷ்ய ராக்கெட்டில் விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர், விண்வெளியினை ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்துவிட்டார்

நிலாவுக்கு எல்லாம் அவர் செல்லவில்லை, ரஷ்யரே செல்லாதபொழுது இவரை அழைத்து செல்வார்களா?

ராக்கேஷ் சர்மா இன்று ஊட்டியில்தான் ஓய்வெடுகின்றார் தகவல் வேண்டுமானால் உறுதிபடுத்துங்கள்

ஆக இந்த திமுக பகுத்தறிவு இம்சைகள் சொல்வதெல்லாம் புரட்டும் பொய்யுமே, ஒரு விண்வெளிக்கும் நிலாவுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களெல்லாம் என்னவெல்லாமோ பேசுகின்றார்கள், தமிழக கொடுமை இது

அதுவும் பாருங்கள், நிலாவில் பலர் தங்கி இருந்தார்களாம். ஆம்ஸ்ட்ராங் இருந்தது 1.5 மணி நேரம், ஹாரிசான் தாங்கி இருந்தது 8 மணி நேரம்

மற்றபடி நிலவில் தாக்குபிடிக்க முடியாது.

அமெரிக்கா நிலவுபயணம் என‌ சொல்வது மிகபெரும் பொய் என்கின்றது ரஷ்ய முகாம்

ஏதோ சிம்லாவுக்கு டூர் போனது போல நிலாவுக்கு அவர் போனார் இவர் போனார் என ஏக கதைகள்

நல்ல வேளையாக பெரியாரும் அண்ணாவும் நிலவில் சென்று கல்லில் பகுத்தறிவினை செதுக்கினர் என அன்னார் சொல்லவில்லை, அப்பல்லோ மிஷனின் 75ம் ஆண்டு விழாவில் அன்னார் இப்படி சொன்னாலும் சொல்வார்

ஏம்மா Devi Somasundaram உங்க நொண்ணன் ஏன் இப்படி ஆகிவிட்டார்?, ஏதும் குளிர்ஜூரமா இல்லை ஆடிமாதம் அம்மன் வந்து கண்ணை குத்திவிட்டதின் குளிர்காய்ச்சலா?

நிலாவில் இதே ஜூலை 20ல் கால் வைத்தார்கள்

அதுவரை மானிட குலம் விண்வெளிக்கு பறந்ததில்லை, மனிதன் பறக்க ஆரம்பித்து 60 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் வளிமண்டலத்தை கூட அவனால் எட்டமுடியவில்லை

ஹிட்லரின் உத்தரவுபடி ஏவுகனைகளுக்கான‌ இன்சினை வார்ன் பிரவுண் தயாரித்து அதனை சோதித்து கொண்டிருக்குந்த பொழுதே ஹிட்லரின் காலம் முடிந்தது

ஹிட்லரின் விஞ்ஞானிகளை பங்குபோட்டு கொண்டனர் அமெரிக்காவும் ரஷ்யாவும், அதாவது பொது எதிரியினை ஒழித்தபின் அமெரிக்காவும் ரஷ்யாவும் எதிரியாயிருந்தன‌

இந்த விஞ்ஞானிகள் எல்லாம் போர்குற்றவாளிகள், சதாமின் கெமிக்கல் அலி தூக்கில் தொங்கியதை போல தொங்கியிருக்கவேண்டியவர்கள், ஆனால் வல்லரசுகள் விடுமா?

ஹிட்லர் செய்த ஆராய்ச்சியினை கேட்டு மலைத்துபோய் நின்றன, கொஞ்சம் பிந்தியிருந்தாலும் ஹிட்லர் பெரும் ஆற்றலை பெற்றிருப்பார், முந்திகொண்டோம். இனி அவர் பெற விரும்பிய ஆற்றலை நாம் பெற்று வல்லரசாவோம்

அப்படித்தான் ஏவுகனை ஆராய்ச்சிகள் தொடங்கின, ஹிட்லர் தொடங்கியிருந்த இன்னொரு ஆராய்ச்சி வட்டவடிவ விமானம்

அவன் அப்படி ஒரு விமானத்தை தயாரித்திருந்தான், அதனால் நெடுந்தூரம் மின்னல் வேகத்தில் பறக்க முடிந்தது என அன்றொரு நம்பிக்கை இருந்தது, அவனே அதில் தப்பித்தான் என்றெல்லாம் கதைகள் உண்டு

அந்த உண்மைகளோ என்னமோ தெரியாது , ஆனால் ஹிட்லர் காலத்திற்கு பின்புதான் பறக்கும் தட்டுக்கள் பற்றிய கதை வந்ததும் மறுக்க‌ முடியாது.

அலெக்ஸாண்டர் காலத்தில் குதிரைபடை பலம் வாய்ந்தது , நெப்போலியன் காலத்தில் பீரங்கிபடையும் , துப்பாக்கி பிரிவும் பலம் வாய்ந்தது, பிரிட்டன் காலத்தில் கப்பல்படை வெற்றியினை சொன்னது

ஹிட்லர்தான் விண்வெளியுத்தம் பற்றி முதலில் சொன்னான், அடுத்த தலைமுறையில் விண்வெளி பலமே வெற்றியினை நிர்ணயிக்கும்

அப்படி அவன் தொடங்கியிருந்த ஆராய்ச்சிதான் அமெரிக்காவிலும்,ரஷ்யாவிலும் தொடர்ந்தன‌

முதல் வெற்றி என்னமோ ரஷ்யாவிற்குத்தான். ஸ்புட்னிக் என்றும் லூனார் என்றும் விண்வெளியில் கலங்களை செலுத்தி அசத்தியது, அமெரிக்காவிற்கு அதிர்ச்சி

அந்த அதிர்ச்சி தீருமுன் லைக்கா எனும் நாயினை அனுப்பியது, பின் தவறுகளை சரி செய்து யூரி ககாரின் எனும் முதல் விண்வெளி மனிதனை அனுப்பியது

அமெரிக்கா அதிர்ச்சியில் இருந்தபொழுதே தெரஸ்கோவா எனும் பெண்ணை அனுப்பியது.

விண்வெளியின் ஆதாம், ஏவாள் இவர்கள்தான்.

விண்வெளி அறிவில் ரஷ்யா முன்னேறுவது அமெரிக்காவிற்கு பெரும் அச்சத்தை கொடுத்தது, இந்த அனுபவம் ரஷ்ய ராணுவம் பக்கம் திரும்புமானால் அமெரிக்கா அவ்வளவுதான்

அப்பொழுது அங்கு கென்னடி அதிபராக இருந்தார், துணிச்சல் மிக்கவர் அல்லவா? சவால் விட்டார் இன்னும் கொஞ்சநாளில் ஒரு அமெரிக்கர் நிலாவில் கால்பதிப்பார்

யாரும் நம்பவில்லை, அமெரிக்கர்கள் கடுமையாக உழைத்த்தார்கள், நிறைய தோல்விகள் கொஞ்சம் உயிரிழப்பும் உண்டு

ஆனாலும் அஞ்சாமல் போராடி நிலாவில் இதே ஜூலை 20ல் கால் வைத்தார்கள், ஆனால் பார்க்க கென்னடி இல்லை அவர் அதற்கு முன்பே கொல்லபட்டிருந்தார்

மானிட வரலாற்றில் அது பெரும் நிகழ்வு, 1945 வரை அப்படி யாரும் சிந்தித்தது கூட இல்லை , ஆனால் அடுத்த 22 ஆண்டுகளில் அது சாத்தியம்

முதல் காரணம் ஹிட்லர், இரண்டாம் காரணம் அமெரிக்க ரஷ்ய பனிப்போர்

அமெரிக்கா கொண்டாட, ரஷ்யாவோ இது சாத்தியமில்லை என்றது காரணம் அன்றைய தொழில்நுட்பத்துபடி 10% கூட அப்பயணம் சாத்தியமில்லை, எங்கோ செட் போட்டு படம் எடுத்துவிட்டு அமெரிக்கா ஏமாற்றுகின்றது என்றது. அது ரஷ்யர்களின் இயலாமையில் உருவாக்கபட்ட கட்டுகதை என சொன்னது அமெரிக்கா

அந்த சர்ச்சை இக்காலம் வரை உண்டு

ஆனாலும் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்தார் என்றே வரலாற்று குறிப்புகள் உண்டு, அமெரிக்காவின் பிற்கால சாதனைகளும் அதனை வலுப்படுத்துகின்றன‌

தங்களில் யார் பெரியவன் என காட்ட அப்பயணத்தை அமெரிக்கா செய்தாலும் அதன் மூலம் விண்வெளி கனவு சாத்தியபட்டது, ஏகபட்ட மாறுதல்கள் உலகில் வந்தன‌

இன்றோடு 50 வருடம் ஆகின்றது, ஆம்ஸ்டாராங்கும் இன்று இல்லை

ஆனால் அவர் சொன்ன வார்த்தை உண்மையானது

“நிலவில் நான் வைத்தது சிறிய அடிதான், ஆனால் மானிட குலத்தின் பாய்ச்சல் மிக நீளமானது”