அந்தM.Aரூபன் எனும் விளையாட்டு வீரன் இன்று காலமாகிவிட்டார்

அந்த மனிதர் அப்பழுக்கற்ற காங்கிரஸ்காரர், அதை தவிர ஏதும் அறியாதவர்

மிக சிறந்த விளையாட்டு வீரரும் கூட 1970களில் மிகபெரும் விளையாட்டு முகமாக அவர் அறியபட்டார். கபடியிலும் அவ கொடி உயர பறந்தது

அவர் நெல்லை கிழக்கு கடற்கரையின் மீணவ குடும்பம், போக்குவரத்து பெருகிய காலங்களில் வள்ளியூருக்கு பெயர்ந்த குடும்பத்தின் வாரிசு அவர்

இன்று பெருநகரமாக வெடித்து பெருகிவிட்ட வள்ளியூர் அன்று சிறு கிராமம் போலத்தான் இருந்தது, எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருந்தது

அக்காலங்களில் அவர் எல்லோருக்கும் அறிமுகமான நபராக இருந்தார், குறிப்பாக விளையாட்டு. ஓட்டபந்தயமும் அவரின் இதர விளையாட்டுக்களும் தனிபுகழை அவருக்கு பெற்று தந்தன‌

நல்ல பயிற்சியாளன் கண்களில் பட்டிருந்தால் மிகபெரும் உயரத்தை அவர் எட்டியிருக்க கூடும், ஆனால் விதி அதுவல்ல‌

எங்கள் எளிய கிராமத்துக்கும் அவருக்கும் தொடர்பு நிறைய உண்டு, வள்ளியூர் பஜாரில் அவருக்கு சொந்தமான நிலங்கள் இன்று பலகோடிக்கு உண்டு சிலவற்றை இழந்தார் சிலவற்றை தக்க வைத்தார்

ஸ்டார் ஹோட்டல் என ஒரு உணவகம் கூட நடத்தியதாக நினைவு

1980களில் எங்கள் கிராமத்தில் கபடி போட்டி நடந்தது, முடிவில் அந்த பகுதி ஜாம்பவனான கண்ணநல்லூர் அணிக்கும் திருமலாபுரம் அணிக்கும் முட்டிகொண்டது

அதில் நியாயம் திருமலாபுரம் அணி பக்கம் இருந்தது, அட்டகாசம் கண்ணநல்லூர் அணிபக்கம் இருந்தது, கிட்டதட்ட பாகிஸ்தான் போல அவர்களாக ஒரு நியாயம் பேசிகொண்டிருந்தார்கள்

விஷயம் கலவரமானது , ஆனால் போட்டி நடத்திய கிராமம் எனும் வகையில் எம் நிலை சிக்கலானது

அங்குதான் அந்த மனிதர் எங்கள் சார்பாக களமிறங்கினார், மாவட்ட நீதிபதி எஸ்பி முதல் யாரை எல்லாமோ அழைத்து வர உதவினார்

களத்தில் அவரே இறங்கி விளையாடிய காட்சிகளும் உண்டு, மிக அட்டகாசமான கபடி வீரர்

எப்படியோ நீதிபதி எஸ்பி தலமையில் அந்த போட்டி நடக்க உதவினார்,

அந்த காட்சிகள் எல்லாம் கண்ணில் நிழலாடுகின்றன.

எமது தலைமுறைக்கு முந்தைய விளையாட்டு வீரர் அவர், ஒரு முறை பள்ளியில் அவர் ஜோதி ஏந்தி ஓடி வந்த அந்த காட்சி மறக்க முடியாதது

அந்தM.Aரூபன் எனும் விளையாட்டு வீரன் இன்று காலமாகிவிட்டார்

காங்கிரஸின் மிகபெரும் அபிமானி அவர், சில பதவிகளை கூட வகித்தார்

வள்ளியூர் பகுதி மிகசிறந்த விளையாட்டு வீரனை இழந்துவிட்டது , காங்கிரஸ் தன் மிகசிறந்த தொண்டனை இழந்துவிட்டது

அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், வள்ளியூரில் அவர் புகழும் அடையாளமும் ஒரு காலமும் அழியபோவதில்லை

அந்த வள்ளியூர் பாத்திமா மாதா அவர் ஆன்மாவுக்கு நித்திய இளைப்பாற்றியினை அருளட்டும்.

சரவணபவன் ராஜகோபாலை மறக்க முடியல அண்ணாச்சி

ஒரு மாதிரி சோகமாக வந்தான் அறை நண்பன், முக ஸ்டாலின் தலைவர் பதவியினை விட்டு ஓடிவிட்டது போலவோ இல்லை உதயநிதி ஸ்டாலின் தலைமறைவானது போலவோ அவன் முகத்தில் அவ்வளவு சோகம்

மனிதன் முதலில் பேசவில்லை, மெதுவாக பேசினான்

அண்ணாச்சி, என்ன இருந்தாலும் அந்த சரவணபவன் ராஜகோபாலை மறக்க முடியல அண்ணாச்சி

ஏண்டா?

உமக்கென்ன நீரு என்ன தின்னுட்டு போனாலும் வேளாங்கண்ணி மாதா வருத்தபடாது, எங்களுக்கு அப்படியா சபரிமலை, உள்ளூர் கோவில்னு எவ்வளவு விரதம் தெரியுமா?

அதுக்கென்னடா?

அண்ணாச்சி, மலேசியா பத்தி உமக்கு தெரியும். அசைவத்துக்கு இது சொர்க்கம் ஆனால் சைவத்துக்கு நரகம். நல்ல சைவ சாப்பாட்டுக்கு ஊரெல்லாம் சுத்தினாலும் கிடைக்காது, மலாய் சீன மக்கள் நல்லவங்க ஆனா அவங்க கலாச்சாரத்துல சைவ உணவு கிடையாது

ஆமாடா

அங்கதாண்ணே அண்ணாச்சி கைகொடுத்தார், விரதம் இருக்கும் பொழுதெல்லாம் அவர் கடைதாண்ணே அடைக்கலம் , சுத்தமான சைவம்ணே. கடல்கடந்து அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சது ஆண்டவன் கருணை அண்ணாச்சி

விரதம்ணா விளையாட்டு இல்ல அண்ணாச்சி, 15 மணிநேரம் பசியோட வேலை, கருப்பு சட்டை கருப்பு வேட்டியோட சைவ உணவுக்கு அலையணும், கோலாலம்பூர்ல யார் அண்ணாச்சி 100% சைவம் கொடுப்பா?

ஆமாடா?

அவர் கொடுத்தார் அண்ணாச்சி, வகை வகையா கொடுத்தார். காசும் அதிகம் இல்ல அண்ணாச்ச்சி, அஞ்சப்பர வச்சி பார்த்தா சரவணபவன் அதிகமே இல்ல, அதிலும் மாலை போட்டு போனா பில்லு கனுசமா குறையும் அண்ணாச்சி

அப்படியா?

என்ன மாதிரி உலகம் பூரா எவ்வளவு பக்தர்கள் இருப்பாங்க அண்ணாச்சி? அவரு உழைப்பின் பலன் கொஞ்சம் இல்ல.

அண்ணாச்சி ஊர் உலகம் அவர பத்தி என்னமும் சொல்லட்டும், எங்கள பொறுத்த வரைக்கும் ஐயப்பன் தன் பக்தர்களுக்காக குறிப்பாக அயல்நாட்டு பக்தர்களுக்காக தேர்ந்தெடுத்து அனுப்பிய ஆள் அண்ணாச்சி, எல்லா மனுஷணும் தொழில் செய்வான், ஆனா பக்தர்களுக்காக நல்ல உணவு கொடுத்த மகராசன் அண்ணாச்சி அவரு.

அண்ணாச்சி மனுஷன் இந்துக்களுக்காக சோறு மட்டுமா போட்டாரு, வனதிருப்பதில கட்டி வச்சிருக்காரு பாருங்க கோவில், எந்த மனுஷணுக்கு அப்படி தோணும்? மனுஷன் அப்படி நல்ல மனுசனா இருந்திருக்காரு.

ஜீவஜோதி விவகாரம் அவரு சொந்த விஷயம், ஆனால் அவருக்கு போட்டியா செலவழிக்கிற அளவுக்கு 20 வருஷமா பணமும் உதவியும் எங்கிருந்து வந்து அண்ணாச்சி? இதெல்லாம் கேட்க முடியாது அண்ணாச்சி

ஆனா உண்மை ஒருநாள் வெளிவரும் அண்ணாச்சி

அண்ணாச்சி ஏன் வெற்றிபெற்றார் என்றால் அவரின் தொழிலில் ஆன்மீக நோக்கமும் இருந்திருக்கின்றது.

இந்த புதுக்கோட்டை அய்யப்ப்பன் வேலு என்பவன் ஐயப்ப பக்தன் அண்ணாச்சி, அவரு போட்ட சுத்தமான சோறுக்காக ஒரு ஐயப்ப பக்தனாக என்னைக்கும் அவருக்காக பிரார்த்திப்பான் அண்ணாச்சி, எனக்கு நன்றி இருக்கு அண்ணாச்சி

அந்த ஐயப்பன் அவர் குடும்பத்துக்கு ஒரு குறையும் வைக்க மாட்டான் அண்ணாச்சி..

சரவணபவன் மாதிரியே அந்த வனதிருப்பதி கோவிலும் கண்ணும் கருத்துமா பார்த்துகணும் அண்ணாச்சி, அதுதான் ரொம்ப முக்கியம், எப்படி கோவிலா கட்டியிருக்காரு தெரியுமா அண்ணாச்சி?

சொல்லும்பொழுதே அவன் கண்களில் கண்ணீர் வந்தது, மனிதன் உள்ளத்தின் ஆழ‌த்திலிருந்து பேசியிருந்தான். அவன் சொல்லியதில் மிகை ஏதும் இருப்பதாக தெரியவில்லை

இவ்வளவு இளகிய மனம் கொண்ட நல்லவன் ஏன் திமுகவில் இருக்கின்றான் என்பத்துதான் தெரியவே இல்லை, கேட்டால் சரவணபவன் அண்ணாச்சியிடம் நம்மை அனுப்பிவிடுவான் என்பது வேறுவிஷயம்..

அச்சமூட்டும் நிகழ்வுகள் நடக்க தொடங்கியிருக்கின்றன

வளைகுடா நிலமைகள் அவ்வளவு நன்றாக இல்லை, லைபீரியா கப்பலை ஈரான் விடுவித்தாலும் பிரிட்டன் கப்பலை விடுவதாக இல்லை

பிரிட்டன் தன் 3ம் போர்கப்பலை அனுப்பியிருக்கின்றது, அது பெரும் விமானம்தாங்கி கப்பல் அல்ல, நாசகாரி கப்பல்

பெரும் கப்பல்கள் வந்தால் பிரிட்டன் படைகுவிப்பு என்ற பெயர் வந்துவிடு என்பதால் பிரிட்டன் மிக எச்சரிக்கையாக இது ஈரானுக்கு எதிராக அல்ல என திரும்ப திரும்ப சொல்கின்றது

பின்பு ஏன் 3ம் கப்பல் வருகின்றது? பேரீட்சம் பழம் சுமக்கவா என கேட்டால் பிரிட்டனிடமிருந்து பதில் இல்லை

இந்நிலையில் இன்று பிரிட்டன் அறிவித்துள்ள அறிவிப்பு பலத்த சலசலப்பினை ஏற்படுத்தியிருகின்றது

மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவுக்கான தன் விமான சேவையினை 1 வாரத்துக்கு “பிரிட்டிஷ் ஏர்வேஸ்” ரத்து செய்திருக்கின்றது.

மிக வலுவான உளவு தகவல் கிடைக்காமல் இது சாத்தியமில்லை

ஆக ஈரனால் பிரிட்டன் விமானங்களுக்கு ஆபத்து என்பது பட்டவர்த்தனமாக தெரிகின்றது

ஈரான் 1980களில் அதிரடி காட்டிய நாடு, அமெரிக்க தூதரக அதிகாரிகளை பிடித்ததாகட்டு, அமெரிக்க ஹெலிகாப்டர்களை சிறைபிடித்ததாகட்டும்

ஏன் லெபனானிய ஷியா தீவிரவாதிகளை கையில் எடுத்து அமெரிக்க விமானங்களை கடத்தி ரீகனை அலறவிட்டதாகட்டும்

அவர்களின் வரலாறு ஒரு மாதிரியானது

பழைய தரவுகளின் படியும், கிடைக்கும் உளவுதகவலின் படியும் ஈரான் பெரும் நடவடிக்கைக்கும் பதிலடிக்கும் தயாராகின்றது என்பதை உணர்ந்த பிரிட்டன் பம்முகின்றது

எங்களை வாழவிடவில்லை என்றால் யாரையும் வாழவிடமாட்டோம் என ஈரான் உலகை மிரட்ட தொடங்கியிருக்கின்றது

அச்சமூட்டும் நிகழ்வுகள் நடக்க தொடங்கியிருக்கின்றன

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

திராவிடத்தை காக்க வந்தவரும், இந்தியா என ஒன்று இல்லை என ஒருகாலத்தில் சொன்னவரும், இந்து மதம் ஒழிக்கபடவேண்டியது என சொன்னவருமான அண்ணா எழுதிய நாடகம் “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்”

அதனை காண சென்றது இந்தியாவில் திராவிடன் இணையமுடியாது என சொன்ன பெரியார், இந்து மதத்தின் விரோதியான பெரியார்

அந்த கணேசனின் நடிப்பில் சிவாஜியினை கண்டதாக அவனுக்கு சிவாஜி என்றே பெயரிட்டாராம் அந்த பெரியார்.

திராவிட நாடு மதமற்றது, இந்துக்களுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்றவர்களும் அந்த நாடகம் பார்த்துகொண்டிருந்தனர்

சிவாஜியின் இந்து ராஜியம் தஞ்சைவரை பரவியிருந்தது என்பதற்கும் கைதட்டிகொண்டனர். அதாவது தமிழத்தின் முக்கிய பகுதி வட இந்திய‌ இந்து அரசனின் கீழ் இருந்தது எனும் காட்சிக்கு விசில் அடித்தார்கள்.

தமிழனின் தலைமகன் என தன்னை சொன்ன அண்ணா ராஜராஜ சோழன் கதையினை எழுதவில்லை, ஆரியபடை கடந்த நெடுஞ்செழியன் கதையினை எழுதவில்லை மாறாக சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்று , இந்து மதத்தினை காத்த அந்த மாவீரனை பற்றி எழுதியிருக்கின்றார்

“இந்து மதமே ஒழிக்கபடணுமுனும்ணு சொல்றேங்க, ஆனா இந்த அண்ணாத்துரை அந்த இந்துக்களுக்காக பாடுபட்ட சிவாஜி கதையினை எழுதியிருக்காருங்க‌

அத என்னையே பாக்க சொல்றாருங்க, இதுல கணேசன்னு ஒரு பய மானமில்லாம நடிச்சிருக்காங்க‌

எழுதுவனுக்கு மானமில்லங்க, நடிச்சவனுக்கும் மானமில்லங்க” என பெரியார் சொல்லியிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்

ஆனால் சொல்லவில்லை

திராவிடமும், பகுத்தறிவும் வீரசிவாஜியினையும் அவன் கண்ட இந்து ராஜ்யத்தையும் ரகசியமாக ரசித்திருக்கின்றது

அதில் ஒரு கலைஞனுக்கு சிவாஜி என பெயரிட்டே தமிழகத்திற்கு தந்திருக்கின்றது.

இன்னும் ஏராளமான விஷயங்கள் அந்த திராவிட கோஷத்தில் உண்டு

திருவாரூர் தியாகராஜன் தன்னை முரசொலிமாறன் ஆக்கினார், இன்னும் பலர் அன்பழகன், நெடுஞ்செழியன் என தன்மான, சுயமரியாதை மிக்க பெயர்களை சூட்டிகொண்டனர்

ஆனால் ராமசந்திரன் மட்டும் ராமசந்திரனாகவே நீடித்தார்.

“நீ திராவிடன், இது பகுத்தறிவு இயக்கம், நாத்திக இயக்கம் ஆக கடவுள் பெயரை வைக்க கூடாது, மாறாக காத்தவராயன் என்றோ, காவுந்தியடிகள் என்றோ கோவலன் என்றோ மாற்றிக்கொள்..” என யாரும் சொல்லவே இல்லை

மாறாக ராமசந்திரன் ஆங்கிலத்தில் எம்ஜிஆர் என தன்னை சொன்னபொழுதும் கைதட்டிகொண்டிருந்தார்கள்

அன்றே ஒரு மாதிரி இயக்கமாகத்தான் இருந்திருக்கின்றது, கவனிக்கத்தான் யாருமில்லாமல் இருந்திருக்கின்றார்கள்

நகத்தை கூட நடிக்க வைத்த உன்னத நடிகன்

முகத்தை காட்டி நடிக்க தெரியாத நடிகர்கள் மத்தியில் தன் நகத்தை கூட நடிக்க வைத்த உன்னத நடிகன்

நாடகத்தமிழுக்கு சர்வதேச புகழ்பெற்றுகொடுத்த பெரும் கலைஞன் அவர்.

நவரசம் மட்டுமல்ல ஆய கலைகள் 64க்கும் உருவம் கொடுத்து கண்ணில் நிறுத்திய நடிகன் அவர். 64 கலைகளையும் முகத்திலே காட்டினார்.

அவரின் காந்த பார்வையும், புன்னகைத்த வசீகர முகமும் எத்தனை எத்தனை மனிதர்களை உணர்வோடு காட்டிற்று,

தெய்வத்தின் கருணையினையும் அம்முகமே அப்பழுக்கற்று காட்டியது.

எந்த மன்னனும் கொடுக்காத கம்பீரத்தையும் அவன் கொடுத்தான், எந்த மத துறவியும் கொடுக்காத சாந்தமான பாத்திரத்திலும் அவன் ஜொலித்தான், எல்லா மத துறவியாக அப்படியே பொருந்தினான்

கொடும் தீவிரவாதி முதல் கடமை தவறா காவல்துறை அதிகாரி வேடம் என அசத்தினான். வழக்கறிஞர் பாத்திரத்திற்கு இன்றுவரை பாரிஸ்டர் ரஜினிகாந்த் ஒரு கனவு

அந்த குட்டியானை நடையழகும், சிங்கத்தின் கர்ஜனையுமாய், புலியின் கம்பீரமுமாய் அவர் வலம் வந்த காலங்கள் தமிழ்சினிமாவின் பொற்காலங்கள்

அவராலே தான் சிவபெருமான், கர்ணன்,கட்டபொம்மன் முதல் , முதல் மரியாதை கிராமத்து வெகுளி மனிதர் வரை கண்முன் நிறுத்தபட்டது.

மகாகவி காளிதாஸில் அவன் ஆடுமேய்த்த அழகு, ஒரு கோனார் செய்யமுடியாதது, மக்களை பெற்ற மகராசியில் செய்யும் உழவு விவசாயி செய்யமுடியாதது, பிராமண வேடத்தில் அவர் சந்தியா வந்தனம் செய்யும் அழகில் அந்தணர்கள் அவுட். இவை எல்லாம் சிறுதுளிதான்.

பாகபிரிவினை படம் வந்தபின் ஒருவிழாவில் பார்த்துவிட்டு வெள்ளையன் சொன்னான், கதைக்கேற்ப ஒரு மாற்றுதிறணாளியினை டைரக்டர் நடிக்க வைத்திருக்கின்றார், அரங்கம் கை தட்டலில் அதிர்ந்தது.

இந்திய விடுதலை போராட்ட தலைவர்களாக வஉசி பாத்திரத்தினை காணும்பொழுது நாட்டுபற்று மேலோங்கும், அந்த வரலாறு கண்முன் வரும்.

சிந்துநதியின் மிசை நிலவினிலே என அந்த பாரதிபாடலில் வரும் சிவாஜிகணேசனில் மொத்த இந்தியாவையும் காணலாம், இன்றும் பாகிஸ்தானின் சிந்துநதியினை காணும்பொழுதெல்லாம் பாரதியும் கூடவே சிவாஜியும் நினைவுக்கு வராதவன் இந்திய தமிழனாக இருக்க முடியாது.

கொஞ்சம் தன் இமேஜினை காப்பாற்றிகொள்ளும் நடிகனாக, தந்திர நடிகனாக இருந்திருந்தால் இன்று ஆட்சிகட்டில் அவனுக்கு கீழேதான் இருந்திருக்கும்.

ஆனால் நடிப்பிற்கு துரோகம் செய்ய அவன் விரும்பவில்லை, குடிகாரன் முதல் சிகரெட் வரை கையிலேந்தி நடித்தான், பெண் பித்தனாக , கோமாளியாக , இரக்கமில்லாதவானக நடிக்க அவனுக்கு தயக்கமே இல்லை.

காரணம் அது அவன் வணங்கிய தொழில்.
அதுதான் அவனின் திரை பலம் மற்றும் ஒரே அரசியல் பலவீனம்.

திரையினை நிஜமென நம்பிய தமிழகத்தின் சாபக்கேடுதான் அந்த வளர்ப்புமகன் திருமணத்தில் ஓரமாக அவர் நின்றதும் அப்படியே இறந்தும் போனதும், இது தமிழக சிக்கல் விடுங்கள்.

ஆசிய ஆப்ரிக்க படவிழாவில் அவன் கொண்டாடபட்டான், அமெரிக்காவில் ஒருநாள் மேயராக அமரவைக்கபட்டான், சோவியத் யூனியன் அவனை உலகின் மிகசிறந்த கலைஞரில் ஒருவன் என்றது.

அன்றைய உலகின் நடிப்பு சக்கரவர்த்தி மார்லன் பிராண்டோ வாய்விட்டு சொன்னான் “என்னை போல அவன் எளிதாக நடித்துவிடுவானே அன்றி, அவனை போல நடிக்க என்னால் ஒருபோதும் நடிகக்க முடியாது”

அப்படிபட்ட கலைஞனுக்கு மத்திய அரசு பெரும் விருதுகள் ஒன்றையும் அளிக்கவில்லை, ரிக்ஷாகாரன் படத்தில் எம்ஜிஆரின் சிறப்புமிக்க நடிப்பிற்காக ஒரு விருது வழங்கியது, அந்த படத்தினை எத்தனை முறை பார்த்தாலும் ஏன் கொடுத்தார்கள் என இன்றுவரை விளங்காது

உதட்டை சரித்து கொண்டு ஆஆஆ.. என இறுதிவரை முகத்தை காட்டினார் எம்ஜிஆர், மஞ்சுளா வரும் காட்சியில் மட்டும் முகம் மாறிற்று, மற்றபடி அது ஆஆஆ.. அந்த விருது வழங்கிய அதிகாரிகள் ரசனை அப்படி இருந்திருக்கின்றது

சிவாஜிகணேசனுக்கு அப்படியான விருதுகள் எல்லாம் இல்லை, பின்னாளில் பால்கே விருது வழங்கினார்கள், அது எப்பொழுது பிரான்ஸ் அரசு செவாலியே விருது வழங்கிய பின் பிரான்ஸ் தூதரகம் சிரிக்கும் முன் வழங்கினார்கள்,

இது அரசியல், விட்டுவிடுங்கள்

பராசக்தி முதல் முதல்மரியாதை வரை அவர் நடித்த படங்கள் காலத்தால் அழியாதவை. எத்தனை எத்தனை வேடங்கள் எத்தனை அற்புதமான நடிப்பு

ஸ்டைல் எனப்பதும் ஒருவித தனித்துவத்திலும் அவர்தான் முன்னோடி, கவனித்துபார்த்தால் ரஜினி எல்லாம் பிச்சை எடுக்கவேண்டும். ஆலயமணி, திருவிளையாடல், மகாகவி காளிதாஸ் போன்ற படங்களில் நடையிலே பல நடை காட்டியவன்

அட நடை என்ன நடை சிகரெட் குடிப்பதிலே பல ஸ்டைல் காட்டினான், அதுதான் கிளாசிக். அந்த பலவகை வசன உச்சரிப்பிற்கும் அவர்தான் இலக்கணம்.

மிகசிறந்த வில்லன் நடிகரும் கூட, அந்நநாள் எனும் படத்தினை விடுங்கள், பாசமலரிலும், ஆலயமணியிலும் வந்துபோகும் சிலநொடி வில்லத்தனமான முகம் நம்பியார் அப்பட்டமாக தோற்குமிடம்.

இன்று என்னமோ நடிகர் நடிகைகளுக்குள் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் பயாலஜி என என்னவெல்லாமோ சொல்கின்றார்கள், ஆனால் மிக்சிறந்த கெமிஸ்ட்ரி இருந்தது என்றால் அது சிவாஜிக்கும் பத்மினிக்குமான கெமிஸ்ட்ரி. ஹிஸ்டாரிக்கல் கெமிஸ்ட்ரி

இந்த இருவருமே இன்று இல்லை.

மகா திறமையான நடிகன். ஆனால் ஒரு வட்டத்திற்குள் அடைத்துகொண்டது தமிழ் திரையுலகம். அதுதான் இங்குள்ள பெரும் சிக்கல். ரஜினி தவிப்பதும், கமல் கை பிசைவதும் அப்படித்தான். அதாவது உனக்கு இதுதான் பாதை, இப்படித்தான் நீ நடிக்கவேண்டும் இல்லாவிட்டால் அவ்வளவுதான் எனும் மாதிரியான நிலை

அப்படித்தான் உருக்கமான பாத்திரங்களில் நடித்த சிவாஜி பின்னாளில் சிக்கிகொண்டார். இதனை கேரள இயக்குநர் ஒருவன் சொன்னான்

“சிவாஜி எனும் யானையினை பட்டினி போட்டு கொன்ற பாவம் ஒருநாளும் தமிழக திரையுலகினை விடாது”

இதனைத்தான் அவன் இறந்த அன்று உலகமே சொல்லிற்று

ஆயிரம் கவிஞர்கள் தமிழில் இருந்தாலும் கம்பனின் இடம் என்றுமே நம்பர் 1. அவனின் வர்ணனைகள் அப்படியானவை, தமிழுக்கோர் அடையாளம் அது, அழகு அது.

அதனால்தான் இன்றுள்ள மூளை கிறுக்குள்ள முன்,பின்,இடை,கடை நவீனத்துவ‌ கவிஞர்களை எல்லாம் நம்மால் கவிஞர்கள் என சொல்லவே முடிவதில்லை, மார்டர் ஆர்ட் எனப்படும் பயித்தியகார ஓவியங்களுக்கும் ரவிவர்மனின், மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியங்களுக்கும் வித்தியாசமில்லையா?

கம்பனின் இடம் அப்படியானது

அவர் இறந்த அன்று , இறுதி ஊர்வலத்தில் மரத்தில் இருந்து ஒருவன் கத்தினான், “ஒரே ஒரு நடிகன் இருந்தான் அவனும் செத்துவிட்டானே…” என ஒரு திசைபார்க்க கத்திகொண்டிருந்தான்

அவன் கத்திய திசையில் இன்றைய இம்சைகள் எல்லாம் நடந்துகொண்டிருந்தன.

தமிழ் உள்ள காலம் வரை கம்பன் நிற்பது போல, தமிழ்திரை உள்ள காலம் வரை சிவாஜி கணேசன் நிலைத்து நிற்பார் தலைமுறைகளை தாண்டி.

அவரின் கடைசி முத்திரையான தேவர் மகனில் கமலஹாசனின் சட்டையினை இழுத்து கேட்பார் “என் மகன என்கூடவே வச்சிபாக்கணும்கிற ஆச என்க்கு மட்டும் இருக்காதா??…”

அந்த உருக்கத்தில் தந்தை பாசம் அப்படி வழியும்.

அக்காட்சியினை காணும் எவனும் தந்தையினை நினைத்து அழாமல் இருக்கமுடியாது.

அந்த கம்பீர குரலுக்கும், தெய்வாம்சமான முகத்துக்கும், எல்லா பாத்திரத்துக்கும் பொருந்தும் அந்த உடலசைவுக்கும், குறிப்பாக பாதி நடிப்பினை காட்டிவிடும் அந்த கண்களுக்கும் கண்ணீர் நினைவாஞ்சலி.