படம் இங்கு வரவிடவில்லை

சிவாஜி கணேசன், ராமசந்திரன் ஏன் ரஜினி கமல் அட அவர்கள் என்ன விஜய் அஜித் காலங்கள் வரை மலேசியாவில் படபிடிப்பு நடக்கும்

அந்த படங்களும் மலேசியாவில் வரவேற்பினை பெறும்

அப்படிபட்ட நல்ல உறவினை இப்பொழுதுள்ள அழிச்சாட்டிய இயக்குநர்கள் கெடுத்துவிட்டார்கள்

மலேசியாவில் விரும்பதகாத சம்பவம் பல நடப்பது 
போலவும் இன்னும் பல சம்பவங்கள் நடப்பது போலவும் அதன் நற்தோற்றத்துக்கு அவமதிப்பு வரும் வகையில் படங்கள் வந்தன‌

முதலில் நிதானமாக கையாண்டது அந்நாடு, போக போக குருவி போன்றவை வந்தன, கொஞ்சம் அதிர்ந்தார்கள்

இந்த அஜித்தின் பில்லா போன்றவை முணுமுணுக்க வைத்தன‌

கபாலி படத்தை கையில் கிடைத்த இடத்தில் எல்லாம் வெட்டினார்கள், ரஜினி கோர்ட் போடும் காட்சி தவிர எல்லாம் சகட்டு மேனிக்கு வெட்டு

இருமுகன் வந்தபொழுது சர்ச்சை உள்ளூர புகைந்தது

இனி எச்சரிக்கை , பிலிமில் வெட்டு குத்து எல்லாம் இல்லை என சொல்லி அதிரடியாக முடக்கிவிட்டார்கள்

இந்த “கடாரம் கொண்டான்” படத்தை மொத்தமாக விரட்டி விட்டார்கள், படம் இங்கு வரவிடவில்லை

தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் இனியாவது எச்சரிக்கையாக இருப்பது நல்லது

தமிழ் படங்கள் அளவுக்கு அதிகமான வன்முறை, குடி மற்றும் சமூக சீரழிவுகளை காட்டுவதாக ஏற்கனவே ஒரு களங்கம் கொஞ்ச நாளாக இருந்தது

தமிழ் கலாச்சாரத்துக்கு அது சரி என்றால் மற்ற நாடுகளுக்கு அவை எல்லாம் முகம் சுழிக்க வைக்கும் விஷயங்கள்

ஒவ்வொரு நாடும் சட்டங்களை கண்போல் காக்கின்றன, அதை மீறுவதாகவோ ஹீரோயிசமாகவோ காட்சிகள் அமைக்கபட்டால் அது மக்களிடம் தவறான உணர்வினை ஏற்படுத்தும் என அஞ்சுகின்றன‌

இதனால் சில விஷயங்களில் அவர்கள் சமரசம் செய்துகொள்வதே இல்லை..

கடாரம் புடுங்கினான், கடல் கடந்தான், வீர தமிழன், 7 தமிழன் , பல போலிசாரை மிதித்து போட்டுவிட்டு ஓடும் தமிழன் என படம் இருந்தால் உள்ளூரில் கைதட்டுவார்கள்

வெளிநாட்டில் படபெட்டியினை கடலில் எறிந்துவிடுவார்கள்

இயக்குநருக்கு ஒன்றுமிலை அவன் தமிழன்டோவ் என கத்திவிட்டு சம்பளத்தை சரியாக வாங்கிவிட்டு ஓடிவிடுவான்

தயாரிப்பாளர் எனும் சாதிதான் மிக கவனமாக இருக்க வேண்டும்

இனியாவது தயாரிப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்கட்டும், மலேசியா தொடங்கி வைத்துவிட்டது இனி பல உலகநாடுகள் அதை தொடரலாம்

“டமிலன் டோவ்..” என்பதெல்லாம் உள்ளூருக்குள் கேட்க வேண்டிய குரல், கடல் கடந்து கத்தினால் போட்டு சாத்திவிடுவார்கள், அதில் தயாரிப்பாளர் வேட்டிதான் பறிபோகும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s