லசித் மலிங்கா நாளையுடன் ஓய்வு பெறுகின்றார்

லசித் மலிங்கா நாளையுடன் ஓய்வு பெறுகின்றார்

இலங்கையில் எத்தனை பந்துவீச்சாளர் வந்தாலும் அந்த அற்புதமான பவுலரை மறக்க முடியாது

அவர் சமிந்தா வாஸ்

மிக துல்லியமான பந்துவீச்சினை அவரிடம்தான் காணமுடியும். ஒரு மில்லிமீட்டர் கூட பிசகாத பந்துவீச்சு அது

அவர் கால்ராசிகாரரும் கூட, அவர் களமிறங்கிய பின்பே இலங்கை அணிக்கு யாரெல்லாமோ வந்தார்கள், அந்த அணி உலகின் மிகசிறந்த அணியாக இருந்தது

ஆட்டத்தின் தொடக்க ஓவரை வாஸ்தான் வீசுவார், அவர் அதிக உயரமுமல்ல ஆஜானபாகுவான தோற்றமும் அல்ல‌

ஆனால் பந்து சொன்னபடி செல்லும், வாசிம் அக்ரம் கூட அந்தமாதிரி வீசமுடியாது

லாராவோ டெண்டுல்கரோ அவரை மகா எச்சரிக்கையாகவே அணுகுவார்கள்

அவர் ஆடிய காலம் இலங்கை அணியின் பொற்காலம்

அவர் இடத்தை மலிங்கா முழுக்க இல்லாவிட்டாலும் ஓரளவு நிரப்பினார் இனி மலிங்காவுமில்லை

இன்னொரு சமிந்தா வாஸ் திரும்ப வராமல் இலங்கை அணி அதன் பொற்காலத்தை மீட்டெடுக்க முடியாது

கலைஞர் செத்தாலும் விடுவதாக இல்லை

அந்த கலைஞர் செத்தாலும் விடுவதாக இல்லை

நெல்லையில் அன்று நடந்த போலீஸ் தடியடிக்கும் 17 பேர் சாவுக்கும் கலைஞரே காரணம் என கிளம்பிவிட்டார்கள்.

அதில் நடந்தது என்ன?

1995களில் கலைஞரை எதிர்த்து ஏகபட்ட சாதி சங்கங்கள் உருவாயின அல்லது உருவாக்கபட்டன‌

அப்படி உருவாக்கபட்டவர்தான் கிருஷ்ணசாமி, ஆரம்பத்தில் சில தேர்தல் முடிவுகளை கூட அவர் நிர்மானிக்கும் சக்தியாய் இருந்தார், மறுக்க முடியாது.

அப்படிபட்ட கிருஷ்ணசாமி என்பவர் திடீரென தான் தலித் மக்களை காக்க வந்தவன் என்றார், மாஞ்சோலை மக்களுக்கு நானே விடிவெள்ளி என்றார்

அந்த மக்களுக்கு கூலியினை உயர்த்தி கொடுக்க போராட்டம் என அறிவித்தார், அந்த தொழிலாளர்களை நெல்லைக்கு அழைத்து வந்தது அவர்தான்

அந்த போராட்டத்துக்கு கலைஞர் அரசு அனுமதியும் வழங்கிற்று

சிக்கல் எங்கு வந்தது என்றால் போராட்ட கோஷ்டி ஒரு கட்டத்தில் எல்லை மீறி காவல்துறையினை மீறி செல்லும் அளவு இருந்தது

சில பெண்காவலர்கள் மேல் விரும்பபதாத சம்பவங்கள் நடக்க தொடங்கின‌

அங்குதான் காவல்துறை விழித்து கொண்டது, அது அவர்கள் கடமையும் கூட‌

காவல்துறை தாக்க தொடங்க கூட்டம் சிதறி ஓடியது, துரதிருஷ்டம் அங்கு ஆறு ஓடிகொண்டிருந்தது

அதுதான் சிக்கலுக்கு காரணம், ஆற்றை கடந்து ஓட துணிந்தவர்கள் சுழலிலும் நீரிலும் சிக்கி இறந்தனர்

இதுதான் நடந்தது

மற்றபடி காவல்துறை வேண்டுமென்று கொல்லவில்லை அவர்களுக்கு அது அவசியமில்லை.

ஆக தற்செயலாக நடந்த விஷயம் என்றாலும் அந்த சம்பவத்துக்கு முழு காரணம் கிருஷ்ண்சாமி

மாறாக கலைஞர் அன்று முதல்வராக இருந்தார் என்பதற்காக அவர்தான் கொலைகாரன் என்பதெல்லாம் அபத்தம்

அந்த கலைஞர்தான் எவ்வளவு பாவம்?

இலங்கையில் செத்தாலும் அவர்தான் பொறுப்பு, தாமிரபரணியில் செத்தாலும் அவர்தான் பொறுப்பு

தாமிரபரணியில் செத்தாலும் அவர்தான் பொறுப்பு

இவ்வளவுக்கும் அவர் ஒரு இடத்தில் கூட என்கவுண்டர் உத்தரவு கொடுக்கவே இல்லை

ஆனால் மெரினாவில் மண்டைகாட்டில் இன்னும் பல இடங்களில் சுட உத்தரவு கொடுத்த ராமசந்திரன் வள்ளல்

ஏகபட்ட என்கவுண்டர்களை செய்ய சொன்ன ஜெயலலிதா குறித்து சத்தமே இருக்காது

ஏன் தூத்துகுடி விவகாரம் கூட அமுக்கபட்டுவிட்டது

ஆனால் கிருஷ்ணசாமியால் நடந்த அந்த சாவுகளுக்கு காரணம் கலைஞர்

இதெல்லாம் தமிழக நியாங்களாம்

நமக்கு திமுகவின் பல கொள்கைகள் மேல் உடன்பாடு இல்லை என்றாலும் பொதுவான நியாயங்களை சொல்லாமல் இருக்க முடியாது

தாமிரபரணி சாவுகளில் கலைஞரை இழுப்பது வடிகட்டிய அயோக்கியதனமன்றி வேறல்ல..

அந்த போராட்டத்தை தொடக்கி வைத்து சாகவும் கொடுத்து இன்றளவும் அவர்களுக்கு நியாயமோ ஊதிய உயர்வோ பெற்றுகொடுக்காத கிருஷ்ணசாமி பற்றி யாருமே வாய்திறக்கமாட்டார்கள் என்பது இன்னொரு பக்கத்து உண்மை

அவர் எழுப்பியிருக்கும் குரல் நியாயமானது

பாராளுமன்றத்தில் அர்த்தமுள்ள விவாதங்களை சொன்னவர் அண்ணா, அவரின் கேள்விகள் அன்றெல்லாம் பலத்த அதிர்வுகளை கொடுத்தன‌

அவர் கேட்ட கேள்விகள் இப்படித்தான் இருந்தன‌

மாநிலத்தின் குறைவான வருமானங்களை தரகூடிய மிக சிறிய துறைகள்தான் மாநில நிதிக்கு ஆதாரம். துறைமுகம், சுரங்கம், விமான நிலையம், போக்குவரத்து உட்பட 14 மகா முக்கிய நிர்வாகம் மத்திய அரசிடமே உள்ளது

இதில் இருந்து மாநிலங்களுக்குரிய நிதியினை சரியாக தருவதுமில்லை, இது திருத்தபட வேண்டும்

அந்நாளில் மாபெரும் அதிர்வுகளை அந்த வாதம் ஏற்படுத்தியது

அண்ணா சொன்னதில் உண்மையும் இல்லாமல் இல்லை

1970களில் கலைஞர் அதைத்தான் சொன்னார், அதை பலர் மறந்தும் விடுவர்

“ஆம், தமிழகத்துக்கான நிதி அதன் உரிமையான அளவில் கொடுக்கபட்டால் மதுகடைகளை திறக்கும் அவசியம் ஏன் வருகின்றது?”

அது உண்மையும் கூட, மத்திய அரசு முரண்டு பிடிப்பது சில சிக்கல்களுக்கு காரணம்

பின்னாளில் அதுபற்றி யாரும் மத்திய அமைச்சரவையில் பேசவில்லை

முதன் முதலாக அண்ணாவுக்கு பின் கனிமொழி அதுபற்றி பேசியிருக்கின்றார்

நல்ல வாதங்களை வைக்கும்பொழுது வாழ்த்தியாக வேண்டும்

நியாயமிக்க தமிழக குரலாக அண்ணாவுக்கு பின் கனிமொழி எழுப்பியிருப்பது தேசத்தை உற்றுபார்க்க வைத்திருக்கின்றது

அவர் நமக்கு தோழர், தோழி எல்லாம் அல்ல‌

ஆனால் நல்ல தமிழச்சியாக அவர் எழுப்பியிருக்கும் குரல் நியாயமானது, வாழ்த்துக்கள்

தூத்துகுடி காற்றுபட்டால் அப்படித்தான் , போராட்ட குணம் தானாக வந்துவிடும்..

பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கடா போக்கற்ற பசங்களா

இப்படி இரு கதை சுற்றிகொண்டிருக்கின்றது, ஈழ சிக்கலை அறிந்தவருக்கு தெரியும் இதெல்லாம் மாபெரும் பொய்

இலங்கையில் ஆயுதபோராட்டம் 1975க்கு பின்புதான் வந்தது, அதுவும் குட்டிமணி எல்லாம் போராட வந்தது 1977களில்

அப்பொழுது அவர்கள் அவ்வளவு பிரபலமில்லை, 1982ல் பிடிபட்ட குட்டிமணி கோஷ்டி வெலிக்கடை சிறையிலே கொல்லபட்டது

கலைஞர் அரசு 1975லே டிஸ்மிஸ் செய்யபட்டது, அதன் பின் அவர் முதல்வரானது 1987ல் அப்பொழுது அமைதிபடை காலம் வந்தது, அவர்தான் அதை திரும்பபெற்றார் விபிசிங் மூலமாக‌

ஆக 1975ல் பதவியினை இழந்த கலைஞர் 1980களில் குட்டிமணியினை எப்படி கைது செய்தார்?

அதற்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம்?

ஈழசிக்கல் இங்கு வெடிக்கும் பொழுது ராமசந்திரனே ஆண்டார், எல்லா துறைகளும் அவர் வசமே இருந்தன உளவுதுறை உட்பட‌

இதில் கலைஞர் எங்கிருந்து காட்சிக்குள் வந்தார்?

இதெல்லாம் அபத்தமான பொய்களும் வீண் கற்பனை அவதூறுகளுமாகும்..

முக ஸ்டாலின் சொல்லும் பழமொழிதான்

“பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கடா போக்கற்ற பசங்களா”

ஜீயர் தன் வார்த்தைகளை திருத்திகொள்ள வேண்டும்

இஸ்லாமியர் ஆட்சியில் அவர்களுக்கு பயந்து அத்திவரதர் சிலை நீருக்குள் மூழ்கவைக்கபட்டது என விவகாரத்தை தொடங்கிவிட்டார் ஜீயர்

விஷயம் வில்லங்கமாகின்றது, இஸ்லாமியர் என்ன கொள்ளைக்காரர்களா என ஒரு கூட்டம் பொங்குகின்றது

இஸ்லாமியர் என்றாலே கொடூரமானவர்கள் என்றும் கொள்ளை அடிப்பவர்கள் என்றும் ஆலயங்களை நொறுக்கி தீக்கிரையாக்குவார்கள் என்றும் ஏகபட்ட பேர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

உண்மை அது அல்ல, அக்காலத்தில் மதகுருக்களின் மறைமுக ஆட்சியில் ஆலயமே செல்வங்களின் பொக்கிஷங்களின் கஜானாவாக இருந்தது

ஆலயங்களை உடைத்து புதையலை தேடுவது அக்கால வழக்கம், சாலமோன் அரசனின் ஆலயத்தை நெபுகாத்நேச்சர் எனும் பாக்தாத் மன்னன் அப்படித்தான் உடைத்தான்

அனுராதாபுர புத்த விகாரையினை ராஜராஜ சோழன் அப்படித்தான் கொள்ளையடித்து வந்தான்

அலெக்ஸ்டாண்டரும், நெப்போலியனும் எகிப்தின் கல்லறைகளையும் ஆலயங்களையும் விடாமல் நொறுக்க்கி தேடினார்கள்

உலக வழக்கம் இது

ஆப்கனின் கஜினி எனும் ஊரில் இருந்த முகமது எனும் அரசனும் அதை செய்யவே இந்தியா வந்தான்

கிட்டத 17 முறை அவன் படையெடுத்தான் , சிலமுறை தோல்வி சிலமுறை சிறிய வெற்றி

அவன் ஒன்றும் மாவீரன் அல்ல, அப்படி இருந்திருந்தால் இங்கே தன் சாம்ராஜ்யத்தை அமைத்திருப்பான், அவனோ சிறிய குழுவோடு வந்து கொள்ளையிட்டு ஓடிபோகும் கொள்ளையனாய் இருந்தான்

மாலிக்காபூர் மதுரை ஆலயத்தை உடைத்ததும் அவ்வகையே

உமர் அலி எகிப்தை தாக்கியதும் அப்படியே

இந்த நாதிர்ஷா மற்றும் தைமூர் எல்லாம் அப்படித்தான் இந்தியா மேல் பாய்ந்தார்கள்

அது அக்கால வழக்கம், 1400 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் இல்லை , அப்பொழுதும் ஆலய கொள்ளைகளும் இன்னும் பலவும் நடந்தன‌

செங்கிஸ்கான் செய்திருக்கும் கொடூரம் ஏராளம் அவன் என்ன இஸ்லாமியனா?

இல்லை

போர் என நாகரீகமாக சொன்னாலும் அதன் பெயர் கொள்ளை முயற்சியே

அதை பின்னால் வந்த அரேபிய மன்னர் செய்தார்கள் அவ்வ்வளவுதான் விஷயம்

ஐரோப்பாவில் நடக்கா போரா? இரு உலகபோரே அவர்கள்தான் நடத்தினார்கள் அது பற்றி எல்லாம் யாரும் பேசமாட்டார்கள்

இதெல்லாம் மானிட விதி, வலுத்தவன் வெல்லும் காட்சி

ஆனால் இக்கால இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்களுக்கு முதல் காரணம் கச்சா எண்ணெய் மற்றும் உலக அரசியல்

ஆம் இங்கு எதுவும் மதத்துக்காக நடப்பது அல்ல‌

எண்ணெயால் கொழுத்துவிட்ட அரபுலகம் இஸ்லாமிய நிதி என அள்ளிகொடுக்கின்றது, அதை வைத்து சிலர் சில காரியங்களை செய்யும் பொழுது பல பன்னாட்டு சக்திகள் தவறான வழிகாட்டுகின்றன‌

மார்க்க நெறியிலிருந்து அவர்களை சாத்தானின் வழிக்கு இழுத்து செல்கின்றன‌

இவர்களும் அந்த தவறான உபதேசத்தில் மயங்கி இந்த படுபாதக செயல்களை செய்கின்றார்கள்

அரபு உலகின் கடைசி சொட்டு எண்ணெய் தீரும் வரை அல்லது எண்ணெய்க்கு மாற்று பொருள் கண்டுபிடிக்கும் வரை இச்சிக்கலுக்கு தீர்வு இல்லை

இஸ்லாமிய பெருமக்களே ஒப்புகொள்ளும் விஷயம் எமது போதகர்களிலே கடும்போக்கான போதகர்கள் யாராலோ உருவாக்கபட்டு எப்படியோ வழிநடத்தபட்டு எம் மக்களில் சிலரை சைத்தானிய வழிக்கு இழுத்து செல்கின்றார்கள் என்பது

ஆம் இவர்கள் யார்? யாரால் உருவாக்கபடுகின்றனர்? இவர்களுக்கான வெடிபொருள் முதல் இலக்கு வரை யாரால் நிர்ணயிக்க படுகின்றன?

இவற்றை எல்லாம் கவனமாக பாருங்கள் அது அரபு அரசியல் மற்றும் எண்ணெய் பணம் என்றுதான் முடியும்

அதுதான் சமீபகால குழப்பங்களுக்கு காரணம்

மற்றபடி இஸ்லாமியர் என்றாலே அவர்கள் வன்முறையாளர் என சொல்வது சரியல்ல‌

ராஜராஜ சோழனுக்கு ஈழத்தில் என்னவேலை? அலெக்ஸாண்டருக்கு ஆசியாவில் என்ன சோலி

செங்கிஸ்கானுக்கு ரஷ்யாவில் என்ன ஆட்சி?

ஆக அந்த வரிசையில் இஸ்லாமிய மன்னர்கள் ஆண்டால் மட்டும் அது மத வன்முறையா ? அல்ல‌

இதில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும்

இந்து மன்னர்கள் ஏன் இப்படி பெரும் அடையாளமில்லை என கேட்டால் விஷயம் சிக்கலானது

பண்டைய இந்துக்களில் அப்படி மன்னர் இருந்தனர் ஆனால் பிற்காலத்தில் இந்த புத்த மதமும் சமணமும் இந்தியாவினை ஆட்கொண்டது

அதன் தாக்கத்தில் நாடு பிடித்தல் பெரும் போர் நடத்துதல் என இந்தியா செல்லவில்லை

ஆதிசங்கரர் எழுச்சிக்கு பின் இந்துமதம் தழைத்து ஓங்கினாலும் வளமான கங்கா, சிந்து கோதாவரி காவேரி என சுகமான ஆட்சி செய்த மன்னர்களுக்கு அடுத்த நாட்டை பிடிக்கும் அவசியம் இல்லை

ஆம் எல்லா கொள்ளை அரசுகளும் ஒன்றுமில்லா பாலை நிலம் அல்லது கடும்குளிர் தேசத்தில் இருந்துதான் உருவாகும்

இந்தியா செழிப்பான நாடு என்பதால் அடுத்தவனை கொள்ளையிட அவசியமில்லை

ராஜ ராஜ சோழன் போன்ற ஒரு சிலரே பிற்காலத்தில் மதத்துக்காக அதிலும் வியாபாரத்திற்காக யுத்தம் நடத்தியிருக்கின்றார்கள்

மற்றபடி இந்தியாவில் அன்று எல்லாம் இருந்ததால் அண்டை நாட்டில் கொள்ளையிடும் அவசியம் இல்லை

ஆப்கன் போன்ற ஈரான் போன்ற மன்னர்கள் இங்கு படையெடுத்து வந்து கொள்ளை அடித்தனர், அது அக்கால வழக்கங்களில் ஒன்று

அப்படித்தான் கஜினி சோமநாதபுரிக்கு வந்தான், மாலிக்காபூர் மதுரைக்கு வந்தான்

கஜினியாவது தானே திட்டமிட்டு வந்தான், மாலிக்காபூர் பாண்டியன் வாரிசுகளால் ஆட்சி சண்டையில் இழுத்துவரபட்டான்

வந்தவன் ஆட்டம் போட்டுவிட்டு சென்றான்

ஆக அக்கால அரசுகளின் செயல்பாட்டை சொல்லவேண்டுமே தவிர, பொதுவாக இஸ்லாமியர் இந்து ஆலயங்களை உடைத்தனர் என ஜீயர் சொல்வது ஒருகாலமும் சரி அல்ல‌

ஜீயர் தன் வார்த்தைகளை திருத்திகொள்ள வேண்டும்

கப்பல் படலம் முடிந்து , பணய கைதிகள் படலம் தொடர்கின்றது

இப்போதைக்கு சுவாரஸ்யமான விஷயம் ஆளாளுக்கு கப்பலை பிடித்து வைத்து கொண்டு பிரிட்டனும் ஈரானும் ஆடும் ஆட்டம்தான்

ஆட்டம் கிட்டதட்ட முதல் சுற்று முடிந்து இருவரும் களைத்து மல்லாக்க கிடக்கின்றார்கள்

என்ன நடந்தது முதல் சுற்றில்?

பிரிட்டனுக்கு இது பெரும் அவமானம் சந்தேகமில்லை, ஆனால் அமெரிக்காவும் வரிந்துகட்டி வரவில்லை, அதிரடியாக கப்பலை விடுவிக்க நடந்த லண்டன் கூட்டம் முடிவு அறிவிக்கபடாமல் முடிந்தது, ஈரானும் அசைவதாக தெரியவில்லை

ஏன் பிரிட்டன் நடவடிக்கை எடுக்கவில்லை?

அங்குதான் இருக்கின்றது பிரிட்டனின் வியாபார கணக்கு, பிரிட்டானிய கப்பல் வெற்று கப்பலாக எண்ணெய் ஏற்ற சென்றபோது ஈரானிடம் சிக்கியது

ஆனால் ஈரானிய கப்பல் நிரம்ப நிரம்ப எண்ணெயுடன் பிரிட்டனிடம் சிக்கியது

ஆக வெற்றுகப்பலை விட்டுவிட்டு நிறைந்த எண்ணெயுடன் கப்பலை வாங்கிவிட்டோம் என்ற வியாபார கணக்கோடு பிரிட்டன் முடித்துகொண்டது

கிட்டதட்ட வடிவேலு ஸ்டைலில் பேக்கரி டீலிங் கதைதான், “அந்த கப்பலை நீ வச்சிக்க இந்த கப்பலை நான் வச்சிக்கிறேன்” என டீலீங் செய்து முடித்துவிட்டார்கள்

விஷயம் வெறும் கப்பலும் எண்ணெயும் என்றால் விஷயம் முடிந்திருக்கலாம், ஆனால் பிரிட்டன் கப்பலில் 23 பேர் இருந்தார்கள் அவர்கள்தான் விவகாரம்

பிரிட்டன் அவர்களை பற்றி கிஞ்சித்தும் கவலைபடவில்லை, வெள்ளை மேலாதிக்க மனப்பான்மை அதுதான், அப்படித்தான் இருப்பார்கள்.

கிறிஸ்தவர்கள் என்றாலும் இரக்கம் இருக்காது, கொஞ்சமும் மனிதாபிமானமும் இருக்காது எல்லாம் அகம்பாவம்

ஆம், அந்த 23 பேரும் பிரிட்டானியர் அல்ல, 17 பேர் இந்தியர்கள் மீதி ரஷ்யர்கள்

இதனால் எந்த நாட்டுக்காரன் எப்படி போனால் என்ன? இந்தியாவும் ரஷ்யாவும் ஈரானின் கூட்டாளிகள்தானே, அவர்கள் விடுவிக்கட்டும் என அவர்கள் போக்கில் இருக்கின்றார்கள்

ஈரானோ அவர்கள் பிரிட்டனுக்காக வேலை செய்தவர்கள் என்பதால் பிரிட்டனே கோரிக்கை வைக்கட்டும் என சொல்கின்றது

இந்தியாவும் ரஷ்யாவும் அவர்களை மீட்க கோரிக்கை வைத்தாலும் ஈரான் பிரிட்டனை கைகாட்டுகின்றது

பிரிட்டனோ மகா அமைதி, அவர்களின் அகம்பாவம் அப்படித்தான்

இப்பொழுது கப்பல் படலம் முடிந்து , பணய கைதிகள் படலம் தொடர்கின்றது

ஆனாலும் கப்பலுக்கு கப்பல் சரி, எண்ணெய்க்கு என்ன பதில் என கொலைவெறியில் திரிகின்றது ஈரான், பிரிட்டானிய விமான சேவை மேற்காசியா எகிப்து பக்கம் ரத்து என அறிவித்திருப்பதன் பின்னால் என்ன விஷயம் உள்ளது என்பதை இப்பொழுது உணர்ந்திருப்பீர்கள்

கள்ளகாதலனே எங்காவது ஓடி உயிரை காப்பாற்றிகொள்..

சென்னையில் கள்ளகாதலன் மனைவியுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் கைது

வழக்கமாக கள்ளகாதலுடன் சேர்ந்துதான் கணவனை கொல்வார்கள், பெரும் புரட்சியின் முதல்படியாக கள்ளகாதலன் மனைவியே கொலைக்கு துணை சென்றிருகின்றாள்

அந்த பெண்களுக்குள்எவ்வளவு அழகான புரிந்துணர்வு?

இவன் போன பிறவியில் கோவலனாக இருந்திருப்பானோ என்னவோ?

இரு பெண்கள் வெற்றிகரமாக ராக்கெட் செலுத்தியிருக்கும் நாட்டில், இரு பெண்கள் சேர்ந்து ஒருவனை கொலைசெய்திருக்கின்றார்கள்

ஆண்கள் எல்லாம் இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

வழக்கமாக அடுத்த ஆண்களிடம் பேசாதே என மிரட்டுவதை போல இனி அடுத்த பெண்களிடம் பேசாதே என்றுதான் இனி மிரட்ட வேண்டும்

ஆண்குலம் அந்த பெரும் ஆபத்தில் இருக்கின்றது, ஆண்களுக்கு இஙகு பாதுகாப்பே இல்லை

எனினும் இந்த கள்ளகாதலன் என்பவன் கவனமாக இருப்பது நல்லது, அந்த இரு பெண்களும் மூன்றாவதாக ஒருத்தியினை சேர்த்து இவனை கொல்ல எவ்வளவு நேரமாகும்?

ஏ …காதலை ஒழுங்காக செய்ய தெரியாத‌ கள்ளகாதலனே எங்காவது ஓடி உயிரை காப்பாற்றிகொள்..