வேறுபாதைக்கு இழுத்து செல்கின்றது

நெல்லை திமுக பிரமுகர் உமா மகேஸ்வரியின் கொலை திடீரென வேறுபாதைக்கு இழுத்து செல்கின்றது

நகைக்கான ஆதாய கொலை என்ற நிலை மாறி தேர்தலில் யாருக்கோ சீட் வாங்கி தருவதாக ஏமாற்றினாரா என்ற யூ டர்ன் விசாரணை அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது

எமக்கு தெரிந்து இப்படி Devi Somasundaram என்பவர் திமுகவில் சீட் வாங்கி தருவார் என பலர் கண்டெய்னர் மற்றும் பிளாங் செக் சகிதம் சுற்றினார்களாம்

அம்மணி கவனமாக இருத்தல் நலம்

Devi Somasundaram என்பவரிடம் சொல்லி திமுகவில் சீட் வாங்கி தருகின்றேன் என நாம் வசூலித்த தொகை என ஏதுமில்லை என்பதை சங்கம் இந்த இடத்தில் குறிப்பிட்டு சொல்லிகொள்ள விரும்புகின்றது..

ஒருகாலமும் இந்த ஏமாற்று ஒப்பாரி தீரபோவதில்லை

அந்த பிராமணர்கள் மக்கள் தொகையிலும் அதிகம் அல்ல வெறும் 3 முதல் 5 சதவீதம்

நிச்சயம் வாக்கு அரசியலை அவர்கள் நிர்மானிக்க முடியாது, வென்று வருபவர்களில் பிராமணர் என்பது வெகு சொற்பமே மீதி எல்லாம் மற்ற வகையினர்.

பிராமணர் எண்ணிக்கைக்கு அவர்கள் பெருவாரியாக வெல்வதெல்லாம் சாத்தியமே இல்லை. அவர்களுக்கு அரசியல் பலம் இல்லை

அவர்கள் பணக்காரர்களுமல்ல அன்றைய அரசர்களோ பின்னாளைய டாட்டாவோ இந்நாளைய அம்பானியும் அல்ல‌

அவர்களிடம் மக்கள் தொகையுமில்லை, பணமுமில்லை பெரும் பின்னணியுமில்லை

உண்மையில் அது ஒன்றுமே இல்லா சமூகம், சீக்கிய சமூகம் போல அல்லாமல் அடித்தால் திருப்பி அடிக்க கூட வலுவில்லா சமூகம்

ஆனால் 72 வருட இந்தியாவில் அவர்களையேதான் சுற்றி சுற்றி அழுது இங்கு அரசியல் நடக்கின்றது

72 வருடமாக ஒரு மிகசிறு சிறுபான்மை இனத்தை நோக்கி ஒப்பாரிவைத்து அரசியல் செய்யபடுவது உலகிலே இங்கு மட்டும்தான்

இந்த ஒப்பாரி அரசியல் இந்தியா இருக்குமட்டும் இன்னும் பல்லாயிரமாண்டு நடக்கும் போலிருக்கின்றது.

இவ்வளவுக்கும் இவர்கள் விரும்பிய ஆட்சி, இவர்களே ஆண்ட சமத்துவ ஆட்சி எவ்வளவு காலமாகவோ நடந்தாயிற்று

என்ன கிழித்து சமத்துவத்தை நிலைநாட்டினார்கள் என்றால் சொல்ல தெரியாது.

ஆளும்பொழுது கம்மென்று இருப்பதும் ஆட்சி இல்லா காலத்தில் பார்ப்பானிய அட்டகாசம் என கொதிப்பதும் முழுக்க அரசியல்

ஒருகாலமும் இந்த ஏமாற்று ஒப்பாரி தீரபோவதில்லை காரணம் அதைவிடுத்தால் அரசியல் செய்ய இவர்களிடம் ஏதும் இல்லை

புத்திரபாசம் ஒருவகை பலவீனம்

ஒன்றின் தொடக்கமல்ல அதன் முடிவே கவனிக்கதக்கது என்பது யூத பழமொழி

தமிழகத்தில் எல்லோரும் வரும்பொழுது நல்ல தலைவர்களாக கொள்கையாளர்களாகத்தான் வருகின்றார்கள்

ஆனால் கொள்கைக்காக வாழ்ந்து கொள்கையாளர்களாக சாதித்து நிலைத்து முடிந்தவர்கள் யாருமே இல்லை

தமிழக சாபம் அது

அந்த சாபத்துக்கு டாக்டர் ராமதாஸும் தப்பவில்லை

அவரின் தொடக்கம் அருமையாக இருந்தது, முடிவு மகா குழப்பமும் சர்ச்சையுமானது

எனினும் தமிழக அரசியலில் திமுக அதிமுகவுக்கு ஒரு காலத்தில் சவால்விட்ட அரசியல்வாதி அவர், சில ஆச்சரியங்களையும் கொடுத்தவர்

அரசியல் எந்த உத்தமனையும் திசைதிருப்பிவிடும் என்பதற்கும், நல்லவர்கள் அரசியலுக்கு வருவதில்லை வந்தாலும் நல்லவர்களாக இருப்பதில்லை என்பதற்கும் எடுத்துகாட்டாய் விளங்கும் ராமதாஸுக்கு இன்று பிறந்தநாள்

அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இந்த தசரதன், துரோணர், ராவணன் இந்த மூவருக்கும் புத்திரபாசம் அதிகம் அதனால் தடம்மாறி சென்றார்கள் என்கின்றது புராணம்

புத்திரபாசம் ஒருவகை பலவீனம் என்பார்கள்

அந்த சாபம் கலைஞருக்கு தேவகவுடாவுக்கு இன்னும் பலருக்கு தொடர்ந்தது, ராமதாஸும் அதில் சிக்கிவிட்டது மகா சோகம்

இந்தியர்களுக்கு இலவச விசா

இந்தியர்களுக்கு இலவச விசா, இலங்கை அறிவிப்பு

விசா கெடுபிடி நிறைந்த காலத்திலே சிங்களன் கண்ணில் மண்ணை தூவிவிட்டு பிரபாகரனை சந்தித்து ஆமைகறி உண்டு, ஏகே74ல் சுட்டு பழகியவர் அங்கிள் சைமன்

இனி இலவச விசாவாம்..

அங்கிளும் தும்பிகளும் இந்த வாய்ப்பினை விடுவார்களா?

அய்ய்யயோ இலங்கை இனி என்னபாடுபட போகின்றதோ தெரியவில்லையே…

அப்படி வறுத்தெடுக்க திமுகவில் இப்பொழுது யாராவது உண்டா

கட்சியில் இருந்து கொண்டு யாராவது கட்சி கொள்கைக்கு விரோதமாக கோவில் வழிபாடு இன்னபிற காரியங்களில் இறங்கிவிட்டால் கலைஞர் தனக்கே உரித்தான சில வார்த்தைகளை வைத்து காய்ச்சி எடுப்பார்.

கோடாரி காம்பு, விபீஷ்ணன் மற்றும் பிரகலாதன் போன்ற தேர்ந்த வார்த்தைகள் அவை

அண்ணா காலத்தில் இருந்து இறுதிகாலம் வரை அப்படித்தான் இருந்தார்.

சுக்ரீவன், விபீஷ்ணன், பிரகலாதன் எல்லாம் அவருக்கு பிடித்தமான வார்த்தைகள். அந்த புராணங்களை நம்பமாட்டாரே தவிர அந்த பாத்திரங்களின் குணாதிசயத்தை மனமார ரசிப்பார், விடவே மாட்டார்.

ஆனால் துர்கா ஸ்டாலினையும், ராசாத்தி அம்மாளையும் அப்படி வறுத்தெடுக்க திமுகவில் இப்பொழுது யாராவது உண்டா என்றால் இல்லை

பொது இயக்கத்துக்கும் தனியார் கம்பெனிக்கும் உள்ள வித்தியாசம் அதுதான்.

எப்படிபட்ட கல்லூரி பச்சையப்பா?

எப்படிபட்ட கல்லூரி பச்சையப்பா?

அங்கு கணிதமேதை சீனிவாச ராமானுஜம் உலாவியிருக்கின்றார், விஞ்ஞானி சந்திரசேகரும் சர் சிவி ராமனும் பாடம் நடத்தியிருக்கின்றார்கள்

அண்ணா , சம்பத் முதல் பெரும் பிம்பங்கள் எல்லாம் அங்கு உருவாயிருக்கின்றன‌

வைரமுத்துவும் முத்துகுமாரும் அக்கல்லூரியின் உருவாக்கங்கள்

இன்னும் எத்தனையோ பெரும் பிம்பங்கள் எல்லாம் உண்டு

கணிதம், இயற்பியல், தமிழ்,
ஆங்கிலம், விளையாட்டு , அரசியல் என பல துறைகளில் பெரும் மேதைகளையும் அழியா சிந்தனையாளர்களையும் கொடுத்த வளாகம் அது..

அப்படிபட்ட கல்லூரியின் இன்றைய மாணவர்களை கண்டீர்களா?

திராவிடத்தால் வளர்ந்தோம் உறவே….

புகழ்பெற்ற ஐஐடி போன்றவற்றையும் இப்படி கலவரகூடமாகவும் கத்தி சண்டை பழகும் இடமாகவும் மாற்றிவிட ஒரு கூட்டம் துடித்துகொண்டிருக்கின்றது

“சீப்” பப்ளிசிட்டி

யார் மனதையும் புண்படுத்தவில்லை, பிராமண பெண்ணும் லோக்கல் பையனுக்கும் நடக்கும் முரணான விஷயங்களை சொன்னால் நகைச்சுவையாக இருக்கும் என்பதால் படமாக்கினோம் இதில் தவறேதும் இல்லை. காவல்துறையில் புகார் அளித்தவர்கள் “சீப்” பப்ளிசிட்டி தேடுகின்றனர் : நடிகர். சந்தானம்.

எங்கே தேவர் வீட்டு பையனுக்கும் நாடார் வீட்டு அல்லது தாழ்த்தபட்ட சாதி பொண்ணுக்கும் நடக்கும் முரணான விஷயங்களை சொல்லுங்கள் பார்க்கலாம்

இல்லை இந்து பையனுக்கும் இஸ்லாமிய பெண்ணுக்கும் நடக்கும் முரண்பாடுகளை நகைசுவையாக சொல்லுங்கள் பார்க்கலாம்