ஏய் சமுத்திரகனி , எங்கய்யா வந்து விடுற டூப்பு…

பெரியார் இங்கு பிறந்ததால் யாரும் பெயருக்கு பின் ஜாதி சேர்ப்பதில்லை : சமுத்திரகனி வசனம்

கருப்பையா என்ற பெயரே தெரியாமல் இன்றுவரை மூப்பனார் என அறியபடுகின்றார் ஒருவர்.

வையாபுரி பிள்ளை, சேதுபிள்ளை என அறியபட்வர்கள் ஏராளம் உண்டு.

தமிழ் ஓலைசுவடிகளை அச்சாக்கியவர் சாமிநாத அய்யர்.

கல்வி கண் திறந்த அழப்பரும், அண்ணாமலையும் இன்றும் செட்டியார் என்றே அழைக்கபடுகின்றனர்

பட அதிபர் சின்னப்பா தேவர், மெய்யப்ப செட்டியார் என பலர் இருந்தார்கள், நாகிரெட்டி என்றொருவர் கூட இருந்தார்

ராமசந்திர உடையார் போன்றவர்கள் அமைத்த சாம்ராஜ்யமே உண்டு

அவர் பெயர் கூட சிவநாடார்

இன்னும் ஏராளமான சான்றுகளை காட்ட முடியும்

பெரியாருக்கு நெருக்கமானவர் ஜி.டி நாயுடு. இன்று வரை அவரின் அடையாளம் நாயுடு.

திராவிட நீதி கட்சியின் முதல் முதல்வர் பெயர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் , அந்த பெயர் வரலாற்று பட்டியலில் உண்டு

தமிழகத்து முதல் பெண் மருத்துவர் புரட்சிபெண் முத்துலெட்சுமி ரெட்டி

அவ்வளவு ஏன்?

எங்கே? பசும்பொன் பக்கம் சென்று அவர் வெறும் முத்துராமலிங்கம் என சொல்லட்டும் பார்க்கலாம்..

அட சிதம்பரம் பக்கம் சென்று வாண்டையார் என்பதை நீக்கிவிட்டு அவர்களை பெயர் சொல்லி அழைத்துவிட்டு சமுத்திரகனி திரும்பிவிடட்டும் பார்க்கலாம்..

சாதி பெயர் சொல்லாத ஒரே இடம் கூத்தாடி திரையுலகம், காரணம் அன்று அவர்களின் சாதி வெளியில் சொல்லமுடியா அளவு தாழ்ந்த சாதி என அன்றைய சமூகத்தில் இருந்தது

அந்த சாதியினை சொன்னால் நாடகத்துக்கோ சினிமாவுக்கோ ஆள்வராது என அஞ்சினார்கள் அதுதான் அன்றைய நிலை

அதை தமிழக பொது தத்துவமாக காட்ட முனைந்தால் மவனே விடவே மாட்டோம்..

ஏய் சமுத்திரகனி , எங்கய்யா வந்து விடுற டூப்பு…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s