தென்னக‌ கல்வி கொள்கையில் மாற்றம் அவசியமே இல்லை

புதிய கல்வி கொள்கை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்

முதலில் ஆரம்ப கல்வியே இல்லா வட இந்தியாவில் தொடக்க கல்வியினை கொடுக்கட்டும், அவர்கள் ஓரளவு கற்றபின் அதாவது அவர்களும் கற்று சிந்திக்க ஆரம்பித்த பின் கல்வி கொள்கைகளை மாற்றலாம்

அவர்கள் அடிப்படை கல்வி பெறும் வரை இங்கு தென்னக‌ கல்வி கொள்கையில் மாற்றம் அவசியமே இல்லை

இந்தி தேவையே இல்லாத ஆணி

இந்திய விஞ்ஞானிகளின் வரலாற்றை ஆழ கவனித்து பார்த்தால் ஒன்று தெரியும்

அது விக்ரம் சாராபாய் முதல் இன்றைய இஸ்ரோ சிவன் வரையிலான பட்டியல்

ஏன் சர்சிவி ராமன் காலத்தில் இருந்து கூட பார்க்கலாம், அதில் தவான், கலாம், டெசி தாமஸ் என ஏகபட்ட பேர் வருவார்கள்

யு.ஆர் ராவ் போன்ற வேதியலாளர்கள், அணுசக்தி துறை சிதம்பரம் போல ஏகபட்டோர் உண்டு

இவர்கள் யாரும் இந்தியில் படிக்கவில்லை, இந்தியில் படித்தோர் யாரும் பிரபல விஞ்ஞானிகளாக வரவுமில்லை

இன்றைய இந்தியாவின் புகழை காக்கும் விஞ்ஞானிகள் பலரும் தென்னகத்தவர்கள் அதுவும் இந்தியினை அறியாதவர்கள்

ஆக இந்தி படிக்காவிட்டாலும் மாபெரும் விஞ்ஞானிகள் உருவாகி தங்களை நிலைநிறுத்தி நாட்டின் கவுரவத்தையும் காக்கின்றார்கள்
என்பது தெரிகின்றது

இந்தி தேவையே இல்லாத ஆணி என்பதும் புரிகின்றது, அது மட்டும் படித்த வடநாட்டார் யாரும் உருப்படவில்லை என்பதும் நன்றாகவே புரிகின்றது

பலத்த என்டெர்டெயின்ட் கிடைக்கும்

பிரிட்டனின் பிரதமராக போரிஸ் ஜாண்சன் என்பவர் நியமிக்கபட்டிருக்கின்றார்

மனிதன் ஐரோப்பாவின் டிரம்ப் என்ற நிலையில் பெயர் எடுத்தவர், அதுவும் பிரிட்டனின் பிரதமரானவுடன் அழிச்சாட்டியங்களை ஆரம்பித்துவிட்டார்.

ஈரானுடன் முறுகல் இருக்கும் நிலையில் சில போர்கப்பல்களை அனுப்பியிருக்கின்றார், பிரிட்டனின் பாதுகாப்பு கவுன்சிலிங் எதிர்ப்பு தெரிவித்ததையும் மீறி அந்த முடிவினை எடுத்திருக்கின்றார் ஜாண்சன்.

அட நம்மை மாதிரி ஒருவர் இருக்கின்றாரே, சரி இவரை இழுத்து போட்டு ஈரானை அடிக்கலாம் என நமுட்டு சிரிப்போடு டிரம்ப் இவரை அழைத்தாலும் அதெல்லாம் முடியாது என் வழி தனி வழி என சொல்லிவிட்டு அவர் போக்கில் இருக்கின்றார் ஜாண்சன்

ஏற்கனவே டிரம்ப் அழிச்சாட்டியம் தாளவில்லை நேரத்திற்கு ஒன்றை சொல்லிகொண்டு இருக்கின்றார், இன்னொரு டிரம்பினை உலகம் தாளாது என தலையினை அடித்துகொண்டிருக்கின்றது உலகம்

பல அதிரடி காமெடிகளை இருவரும் செய்வார்கள் பலத்த என்டெர்டெயின்ட் கிடைக்கும் என உலகம் காத்திருக்கின்றது

மோடி அரசு அதில் சறுக்குகின்றது

நம் எல்லோருக்கும் நாடுதான் முக்கியம், நிச்சயம் அதுதான் முக்கியம்

ஆனால் இந்த அரசு செய்யும் பல விஷயங்கள் சரியாக படவில்லை, ஒருமாதிரி செல்கின்றார்கள்.

ஆட்சி அவர்கள் கையில் கிடைத்துவிட்டால் இந்நாட்டை என்னவும் செய்யலாம் என நினைத்துவிட்டார்கள் போல..

சமஸ்கிருதம் என்பதை மிக உன்னத மொழி போல கொண்டாட தொட்ங்கியிருப்தெல்லாம் சரியானதல்ல‌

சமஸ்கிருதம் என்பதெல்லாம் மூத்த மொழி அல்ல, ஏதோ அரசு காரியங்களுக்கான ரகசிய மொழியாக பாவிக்கபட்டு பின் கடவுள் மொழியாக மாறி என்னவோ ஆகிவிட்டது

ஒரு காலத்தில் இலத்தீன் மொழி இன்று வழக்கொழிந்துவிட்டது அதை மீட்டு மறுபடி ஆதிக்கம் செலுத்த பொகின்றோம் என்பதெல்லாம் அபத்தம்

அப்படி சமஸ்கிருதத்தை பழைய நிலைக்கு கொண்டு வரப்போகின்றொம் என்பதெல்லாம் நடைமுறைக்கு ஆகாது

சமஸ்கிருதத்தை தமிழின் மூத்தமொழி என்பதை எல்லாம் ஏற்றுகொள்வது என்பதெல்லாம் ஏற்றுகொள்ளமுடியா விஷயம்

இந்த புதிய கல்வி கொள்கை என்பது கூட சரியல்ல, மாநில கல்வி உரிமையினை அது பறிக்கின்றது. உயர்கல்வியில் வைக்க வேண்டிய விஷயங்களை ஆரம்ப கல்வியிலே வைப்பது சரியல்ல‌

இது மாநில கல்வியினை அழிகின்றது, கலாச்சாரமாக தொடர்ந்துவரும் விஷயங்களை அழிக்கின்றது இன்னும் எல்லாவற்றையும் அழிக்கின்றது

இது ஏற்புடையதல்ல‌

இந்நாடு என்பது நமக்கு முக்கியமானது, ஆனால் தமிழ் கலாச்சாரத்தையும் கல்வியினையும் அழிப்பது என்பதை ஏற்க முடியாது

அந்த கல்வி கொள்கைபடி நாம் கற்ற திருகுறளையும் இன்னும் பல பண்டைய அடையாளங்களையும் வரும் தலைமுறை கற்க முடியாது

அது அறிவுகெட்ட தலைமுறையாகிவிடும் ராஜராஜ சோழனின் தஞ்சாவூர் பற்றியும் அந்த ஆலயமும் பற்றியும் கூட தெரியாத பிராய்லர் கோழி ஆகிவிடும்

வரவர இந்த மோடி அரசின் அழிச்சாட்டியம் தாளமுடியவில்லை

சமஸ்கிருதத்தை கொண்டாடுவதும் , மாநில கல்வி உரிமைகளில் கைவைப்பதும் சரியானதல்ல‌

உயர்கல்வியில் எதையும் செய்யட்டும் ஆனால் பிஞ்சு கல்வியில் சில விஷயங்களில் கை வைப்பதை ஏற்க முடியாயாது

இப்படியே இவர்கள் செய்துகொண்டிருந்தால் வேறு என்ன செய்ய முடியும்?

அறிவாலயம் நோக்கி நடக்க வேன்டியதுதான்..

மிசாவுக்கு பின்னரான இந்திரா காந்தி திருந்தியிருந்தார்

ஒவ்வொரு திட்டத்தின் பொழுதும் மாநில மக்களின் உணர்வு எப்படி இருக்கும் என்பதில் கண்ணும் கருத்துமாயிருந்தார்

அதுதான் அவரின் வெற்றி

மோடி அரசு அதில் சறுக்குகின்றது, மாநில கலாச்சாரத்துக்கும் நலமுக்கும் எதிரான விஷயங்களில் அது இறங்கினால் அது தீரா குழப்பத்தில் இட்டு செல்லும்

மகா கேவலமானது உலக அரசியல்

இந்திய அரசிலை விட , தமிழக அரசியலை விட மகா கேவலமானது உலக அரசியல்

அமெரிக்காவுக்கு பிச்சைக்காரன் கோலத்தில் சென்றார் இம்ரான் கான், அங்கு பாவ அறிக்கையும் வெளியிட்டார்

நிச்சயம் பாகிஸ்தானை இயக்கியது அமெரிக்கா, இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் எதிராக பாகிஸ்தானில் அமெரிக்க உருவாக்கிய இயக்கங்களே பின்னாளில் அமெரிக்கா மேல் பாய்ந்தன‌

ஆனால் முழு பாவத்தையும் இம்ராகானே ஏற்றுகொண்டார்

அமெரிக்கா ஒரு நல்ல நாடென்றால் என்ன செய்திருக்க வேண்டும்? அயோக்கியனே வெளியே போ, உன் நாட்டில் இருக்கும் தீவிரவாதிகளை எல்லாம் கொன்றுவிட்டு வா என்றல்லலா அனுப்பியிருக்க வேண்டும்

ஆனால் எப் 16 போர் விமானங்களையும் இன்னும் பல நிதிகளையும் கொடுத்து துரியோதனன் கர்ணனுக்கு வெறியேற்றி விட்டது போல் அனுப்பியிருக்கின்றது

அதே நேரம் இந்தியாவுக்கும் சில போக்குவரத்து விமான சலுககைகளை அனுமதித்திருக்கின்றது

என்ன ஆனாலும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை வளர்த்துவிடும் கடபாட்டில் இருந்து அந்நாடு மாறவே இல்லை

பாகிஸ்தானின் துரோகங்களை விட இந்தியாவுக்கு சரி நிகர் எதிரி இருந்தாக வேண்டும் என்பதையே அமெரிக்கா விரும்புகின்றது

இதெல்லாம் சரியான விஷயம் அல்ல‌

எத்தனையோ சாம்ராஜ்யங்கள் எழும்பி சரிந்த உலகிது , கிட்டதட்ட 70 ஆண்டுகளாக அமெரிக்க கொடி உச்சத்தில் இப்பொழுது பறக்கின்றது

பறக்கட்டும்

ஆன்டவன் எல்லாவற்றுக்குமே ஒரு கணக்கு வைத்திருகின்றான்

ரம் ஊற்றிய தோசை ?

தோசைமாவு அரைப்பது எப்படி என பாடம் கேட்டான் ஒருவன், நாமும் அகத்திய முனிவன் தொல்காப்பியனுக்கு போதித்தது போல போதித்தோம்

அரியியினை உளுந்தை இவ்வளவு அளவு ஊற வை, கொஞ்சம் வெந்தயம் சேர்த்துகொள் என சொல்லிவிட்டு சென்றால் அரிசி உளுந்து, வெந்தயம் அவன் தேடி கண்டுபிடித்த நுட்பமான ஜவ்வரிசி எல்லாம் கலந்து ஒன்றாக ஊற வைத்திருகின்றான்

யார் அய்யா நீ என நோக்கினால், அண்ணாச்சி இனி என்ன செய்ய வேண்டும் என மிக கவனமாக கேட்டான்

ஒரு வோட்காவோ,ரம்மோ வாங்கி கொண்டு வா அரைக்கும் பொழுது ஊற்றி அரைக்கலாம் அப்படி வரும் தோசை என சொல்லியாயிற்று

மிக மகிழ்ச்சியுடன் ஓடி சென்றிருக்கின்றான்

கேக் தான் ஒயின் ஊற்றி தயாரிக்க வேண்டுமா? ரம் ஊற்றிய தோசை எப்படி வருகின்றது என நாளை பார்த்துவிட வேண்டியதுதான்

உன் நிழலில் இருந்து ஆயிரம் கலாம்கள் இங்கு வருவார்கள்

எழுதிகொண்டே சாக வேண்டும் என ஆசைபடுவான் எழுத்தாளன், நடித்துகொண்டே சாக வேண்டும் என்பான் நல்ல நடிகன்

உழும்பொழுதே சாக வேண்டும் என்பான் விவசாயி , நான் செத்தாலும் தொழிற்சாலை இயங்க வேண்டும் என்பான் முதலாளி

பாடம் நடத்திகொண்டே சாக வேண்டும் என்பான் ஆசிரியன்

ஆம், அந்த மனிதன் விஞ்ஞானியாயிருந்தான் கொஞ்சம் கண் அசைத்திருந்தால் அமெரிக்காவின் தனியார் நிறுவணங்களோ நாசாவோ தங்க தொட்டிலில் டாலராய் கொட்டி தாலாட்டியிருக்கும்

ஆனால் நாட்டுக்காக வாழ்ந்த், மாணவர்களிடம் பேசி கொண்டே செத்தான் அல்லவா

அவனே தலைவன், அவனே இந்திய அடையாளம்

சிறிய பூசனிகொடி பெரும் காய்களை காய்ப்பது போல தன்னை மிஞ்சிய காரியங்களை இந்நாட்டுக்கு அவன் செய்தான்

அவனாலே இன்று ஏவுகனை பலம் பெற்றது தேசம், ஆசியாவின் எந்த இலக்கையும் நம்மால் தாக்க முடியும்

இந்து சந்திராயன் ஏவபட்டதிலும் அவன் கட்டிய அஸ்திவாரம் உண்டு

தென்னவனே எம் மன்னவனே அறிவு கண்ணனே

உமக்காக கண்ணீர் வடிக்கின்றது தேசம், அந்த ஒவ்வொரு சொட்டு கண்ணீரில் இருந்தும் ஆயிரம் கலாம் உருவாகி வருவார்கள்

எம் தேசத்தை காப்பார்கள்

சந்திராயனை அனுப்பிவிட்டு ஆர்பரித்த அந்த விஞ்ஞான தேவர்களை நாமும் கவனித்தோம்

அவர்கள் கண் அசைத்தால் ரஷ்யாவோ அமெரிக்காவோ சைனாவோ டால்ர்களை கொட்டி கொடுத்து அழைத்திருக்கும்

பில்கேட்ஸ் கூட கொடுக்கா சம்பளத்தை அந்நாட்டு அரசுகள் கொடுத்திருக்கும்

ஆனால் மிக எளிமையாக இந்நாட்டுக்கு என அரசு சம்பளத்தில் சாதரணமாக வாழ்ந்து அந்த தெய்வங்கள் சாதிதது நிச்சயம் உம் கனவு

ஆம் அந்த விஞ்ஞானிகள் உருவில் எம் மன்னவனே நீர் வாழ்ந்து கொண்டே இருப்பாய்

ஒரு நாளும் உனக்கு அழிவே இல்லை, உன் நிழலில் இருந்து ஆயிரம் கலாம்கள் இங்கு வருவார்கள்