கத்தோலிக்கம் அப்படி மாறிற்று

முதலில் எல்லாம் சரியாகத்தான் இருந்தது

தோமா வழியில் மலபாரில் கிறிஸ்தவம் பரவும்பொழுதும் சரி, பிரான்ஸிஸ் சேவியர் வழியில் தமிழகத்தில் பரவும்பொழுதும் சரி , கிறிஸ்தவம் அதன் சாயலில் ஒழுங்காக இருந்தது

வீரமாமுனிவர் கூட இம்மாதிரி விஷயங்களில் இறங்கவில்லை

சிக்கல் ராபர்ட் தே நோபிலி என்பவர் காலத்தில் தொடங்கியது, இவர்தான் இந்த கூத்துகளுக்கு முதல் காரணம்

என்ன செய்தார் இந்த அரைகிறுக்கர்?

அன்று பிராமணருக்கு இந்துமதத்தில் தனிமரியாதை இருப்பதை கண்டார், அவரின் குறுக்கு புத்தி விபரீதமாக யோசித்தது

தானும் மேல்நாட்டு பிராமணன் என்றார், அசைவம் சாப்பிடுவதில்லை என்றார், பூனூல் அணிந்தார்,முழு பிராமணனாக மாறினார்

காஞ்சி காமகோட்டி பீடம் போல உடை எல்லாம் அணிந்து, இந்துக்கள் வழியில் கிறிஸ்துவத்தை பரப்பினார்

பிராமணர் என்றால் அதுவும் அக்கால பிராமணர் என்றால் தீண்டாமை உண்டல்லவா? அதையும் செய்தார் பின் போப்பாண்டவரிடம் வாங்கி கட்டினார்

எனினும் கடைசி வரை திருந்தவில்லை

இந்து மதமுறைப்படியே இங்கு கிறிஸ்துவத்தை பரப்ப முடியும்ம் என மகா உறுதியாக இருந்தார்

இந்துக்களின் முறைபடி கிறிஸ்துவத்தை கொண்டாடலாம் வழிபடலாம், கொடிமரம் வைக்கலாம், தேர் இழுக்கலாம் திருப்பலி என்பதை பூசை என சொல்லலாம் என எல்லாம் இவர் தொடங்கி வைத்தது

அதன் பின் கத்தோலிக்கம் அப்படி மாறிற்று

அதற்கு தமிழ்நாட்டில் கிடைத்த வரவேற்பை எண்ணி வாடிகனும் மவுனமாகி ஒருகட்டத்தில் லத்தீனுக்கு பதில் தமிழிலிலே திருப்பலி நடத்தலாம் என சொல்லிவிட்டது

ஆனால் வழிபாடுகள் இந்துமுறைப்படி இருந்ததே தவிர,கிறிஸ்தவ தெய்வங்களின் சாயல் மாறவில்லை

இப்பொழுது என்னாயிற்று?

அந்த ராபர்ட் தே நோபிலி தொடங்கி வைத்த இம்சை எல்லை மீறி செல்கின்றது

இதை எல்லாம் போப்பிடம் சொல்லித்தான் இனிமாற்ற வேண்டும்

ஆனால் நடக்குமா?

இயேசுவினையே இந்துவாக மாற்றியாயிற்று இனி திருப்பலிக்கு பதில் நமஹ எனும் பூசையும் நற்கருணைக்கு பதில் வெண்பொங்கலும் கொடுப்பார்கள் போல‌

தெப்ப குளமும் தெப்ப திருவிழாவுமே பாக்கி, வேறெல்லாம் நடந்தாயிற்று

இதில் போப்பாண்டவர் வந்தால் விடுவார்களா?

அவரை விரதமிருக்க சொல்லி காவி கட்டிபால் குடம் எடுக்க விட்டுவிடுவார்கள், அதனால் போப் இந்த பக்கம் வராமல் இருப்பது நல்லது

இனி அலகு குத்துதல்,காவெடி எடுத்தல், தீ மிதித்தல் போன்ற பல விஷயங்கள் நடக்கலாம்

நள்ளிரவில் இயேசு சுடுகாட்டுக்கு ஓடும் மயான வேட்டை கூட நடந்தாலும் ஆச்சரியமில்லை

பிள்ளையாரை பிடிக்க குரங்காய் போனதல்ல இந்த‌ விஷயம், இந்து மதத்தை பின்பற்றி அதை அப்படியே பிடிக்க எண்ணினால் இந்து மதமாகவே மாறிவிட்டது கிறிஸ்தவம்

அந்த ராபர்ட் தே நோபிலி இப்பொழுது எங்கிருப்பார் என தெரியவில்லை, ஆனால் செய்திருக்கும் காரியத்துக்கு இயேசுவின் எதிரியான சாத்தான் அவரை கொண்டாடிகொண்டிருக்கும்

அதன் காலடியில் அமர்ந்து மலங்க மலங்க விழித்துகொண்டிருப்பார் நோபிலி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s