சாவர்கர் கும்பலுக்கு மாவீரனாய் நின்ற‌ திப்புவினை பற்றி எப்படி புரியும்?

திப்பு ஜெயந்தி விழா ரத்து : எடியூரப்பா

வீரசிவாஜிக்கு வானுயர் சிலை, ஆனால் திப்புவிற்கு விழா கூட கிடையாதா?

திப்பு என்ன அமெரிக்க விடுதலைக்கா பாடுபட்டார்? நிச்சயம் வீரசிவாஜி விட திப்பு பல படி மேல்

நாட்டுபற்று கட்சி என்றால் திப்புவினை கொண்டாடுவார்கள், மதவெறி கட்சி என்றால் இப்படித்தான்

வெள்ளையனிடம் மன்னிப்பு கேட்ட சாவர்கர் கும்பலுக்கு மாவீரனாய் நின்ற‌ திப்புவினை பற்றி எப்படி புரியும்?

ஆச்சரியபட என்ன இருக்கின்றது?

திப்பு சுல்தானின் புகழை ஒழித்துகட்ட இந்த கோஷ்டி கிளம்பியிருப்பது சரியல்ல, அது கண்டிக்கதக்கது

வீர சிவாஜிபோலவே மாவீரன் திப்பு

திப்புவின் திறமையும் அவனின் ஆற்றலும் போரும் மத சகிப்புதன்மையும் அளப்பறியது

அவனின் மைசூர் சமஸ்தானம் அன்று இன்றைக்கு ஜெர்மனிக்கு நிகரான பொருளாதர பலம் கொண்டிருந்தது

முதன் முதலில் ஏவுகனை தயாரித்தது அவனே, அது இன்றும் அமெரிக்காவில் உண்டு

நெப்போலியன் மதித்து போற்றிய மாவீரன் திப்புசுல்தான், உலகில் எந்த வீரனுக்கும் அந்த பெருமை இல்லை

மத சகிப்புதன்மைக்கும் திப்பு எடுத்துகாட்டு, அந்த திருரங்கபட்டினம் ஆலயத்துக்கும் , ஆதீனங்களுக்கும் அவன் அள்ளி கொடுத்தது ஏராளம்

திப்புவின் மீது சில சர்ச்சைகளை சொல்வார்கள், அதாவது தஞ்சாவூர் பக்கம் மடைகளை உடைத்தான், கொடூரன் என ஏராளம் உண்டு, அந்த கதை வித்தியாசமானது

அதாவது அன்றைய தஞ்சாவூர் அரசர்களிடம் ஒரு பழக்கம் இருந்தது, ஆடிமாதம் காவேரி பொங்கிவந்து டெல்டா பயிர்களை அழித்தால் அதற்கு மைசூர் சமஸ்தானம் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும், இந்த கொடுமையினை வெள்ளையர் தூண்டிவிட்டனர்

பெரும் நஷ்ட ஈடுகேட்டு மைசூர் திப்புவினை படாத பாடுபடுத்தியதால் திப்புவின் படைகள் சில இடங்களில் கோபம் காட்டியதே தவிர, மதவெறியில் அல்ல‌

அப்படி காவேரி நீருக்கு நஷ்டம் கேட்ட கதை தொடர்ந்துதான் விஸ்வேரய்யா கிருஷ்ண்டராஜ சாகர் அணையினையே கட்டினார், அன்று நஷ்ட ஈடு கேட்டுவிட்டு காவேரி காய்ந்துவிட்டது என நாமே அழுகின்றோம்.

சிவாஜி, சந்திரசேகர ஆசாத், மங்கள் பாண்டே, சாவர்க்கர் என பழம் போராளிகளில் இந்துக்கள் என்றால் புகழ்வதும்
திப்பு என்றா எரிவதும் சரியல்ல‌

சுதந்திர போராட்ட வீரர்களை மத அடிப்படையில் புறக்கணிப்பதினை எப்படி ஏற்க முடியும்?

திப்பு இந்த தேசத்தின் மாபெரும் அடையாளம், அவனின் புகழுக்கு எடியூரப்பா இடையூறு செய்தால் அந்த பாவத்தை அவர்களே சுமக்கட்டும்

திப்பு இந்தியாவின் உப்பு

கிட்டதட்ட 200 இந்து ஆலயங்களுக்கு அவர் நன்கொடை அளித்ததும் வரலாறு. ஒரு மிக சமத்துவமான ஆட்சியினை செய்துகொண்டிருந்ததுதான் அவர் பலம், அவரது படையில் சரிக்குசரி இந்துக்களும் இருந்தனர்.

இங்குதான் வெள்ளையர் சிந்தித்து இந்து முஸ்லீம் வேற்றுமையினை வளர்த்தனர், பல வழிகளில் அவர் இந்துவிரோதி என சித்தரிக்கபட்டு, இறுதி போரில் தான் மிக நம்பிய தனது திவானால் வஞ்சகமாக வீழ்த்தபட்டார்.

சுருக்கமாக சொல்வதென்றால் திப்பு வீழ்ந்தபின் வெள்ளையன் வாய்விட்டு சொன்னான்” இனிமேல்தான் இந்தியா நமக்கானது”

ஆனால் இந்த வெற்றியில் வெள்ளையன் ஒரு பாடம் படித்திருந்தான். இந்தியாவினை துப்பாக்கி முனையில் ஆள்வது கடினம், ஆனால் இந்து முஸ்லீம் பிரிவினையில் ஆள்வது மகா சுலபம்.

அந்த சிரிரங்கபட்டிண களத்தில் வெள்ளையன் படித்தபாடம்தான் பின்னாளில் 150 வருடம் அவன் இங்கு ஆளவும், இந்த தேசம் இன்று 3 ஆக உடையவும், இன்று பெரும் கலவரங்களில் வந்து நிற்கவும் காரணம்

திப்புவின் வரலாற்றை படிக்காமல் அவனை நேசிக்காமல் இங்கு அமைதி வராது

இந்தியாவில் அமைதி வந்துவிட கூடாது என்பதுதானே அந்த கும்பல்களின் நோக்கம், எடியூரப்பா அதைத்தானே செய்வார்

அதில் ஆச்சரியபட என்ன இருக்கின்றது?

கடந்து செல்ல வேண்டிய விஷயங்கள்

முத்தலாக் சட்டம் உடனே நிறைவேற்றபடுவதும், அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் எனும் வரைவு கிடப்பில் போடபட்டிருப்பதும் புன்னகைத்து கடந்து செல்ல வேண்டிய விஷயங்கள்

உடனே வெளியேறுவது நல்லது

திப்பு கொலைகாரன் கொள்ளைக்காரன் என வரிந்துகட்டும் சங்கிகள் உடனே வெளியேறுவது நல்லது.

திப்பு மைசூர் சமஸ்தானத்தை காக்க போராடினான் என முடக்கினால், வீர சிவாஜி யாரை காக்க போராடினான்? அவனுக்கு ஏன் அவ்வளவு பெரும் சிலை?

பா.ரஞ்சித்தும் நீவீரும் எமக்கு ஒரே வரிசையே

House Keeping தொடங்கியாயிற்று

கவனியாது விட்ட வீடு கரையானும் பாம்புகளாலும் நிறைவது போல ஏகபட்ட சங்கிகள் இங்கு புகுந்திருக்கின்றன‌

ஏதோ பெருந்தன்மையானவர்கள், நாட்டுபற்றாளர்கள் என நினைத்தால் பூராவும் மதவெறி, அப்பட்டமான மதவெறி

அப்படிபட்ட கொடூர சங்கிகளுக்கு, எபோலா நோயினை விட மோசமான கிருமிகளுக்கு இங்கு இடமில்லை

House Keeping எனப்படும் பராமரிப்பு வேலையினை தொடங்கியாயிற்று

தீர்த்தகிரி

அவர் பெயர் தீர்த்தகிரி, எல்லா பயிற்சிகளையும் முடித்து பெரும் வீரரானார், முதலில் வேட்டைக்காரர்தான் ஆனால் நல்ல மனதும் இருந்தது

சில ஏழைகளுக்கு உதவ அவரிடம் பணம் இல்லை, அப்பொழுது மைசூர் சாம்ராஜ்யம் திண்டுக்கல் வரை பரவியிருந்தது, அந்த வரிப்பணம் செல்லும் பாதையில் வந்து வீரர்களிடம் பணம் பறித்து, சிவன் மலைக்கும் சென்னிமலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்தான் என சொல் என பொடரியில் அடித்து விரட்டு அந்த ஏழைகளுக்கு உதவினார்.

பின் வரியினை வெள்ளையன் பறிக்கவந்தபொழுதும் பெரும் படைதிரட்டி அவனை அச்சுறுத்தினார், அப்பக்கம் வெள்ளையன் காலூன்ற முடியவில்லை

பின் காலங்கள் மாறி திப்பு ஆங்கிலேயருக்கு எதிராக பெரும் யுத்தம் தொடங்கியபொழுது அவனுக்கு பக்கபலமாய் இருந்தார், திப்புவின் வெற்றிகளில் சின்னமலைக்கும் பங்கு உண்டு

திப்பு சுல்தானுக்கும் பிரெஞ்ச் மாவீரன் நெப்போலியனுக்கும் நல்ல தொடர்பு இருந்தது, திப்புவின் பெருமையும் மதிநுட்பமும் அவனின் ஏவுகனைகளும் நெப்போலியனை வியப்பில் ஆழ்த்தின, நான் பிரான்ஸ் திப்பு சுல்தான், திப்பு இந்தியாவின் நெப்போலியன் என சொல்லிகொண்டான்.

திப்புவிற்கு பல உதவிகளை செய்ய அவன் முன்வந்தான், அப்படி திப்புவின் பிரதிநிதிகள் மாவீரன் நெப்போலியனை காணசென்றபொழுது சின்னமலையினையும் அழைத்தார்கள் அவரோ தன் தளபதி கருப்பசேர்வை என்பவரை அனுப்பினார்

திப்புவுடன் சேர்ந்தும், திப்புவிற்கு பின்னரும் பெரும் யுத்தம் நடத்தினார் சின்னமலை, ஆங்கிலேயர் அவருக்கு அஞ்சினர்

திப்புவினை முதலி வீழ்த்திவிட்டு சின்னமலையினை குறிவைத்தனர், முந்திகொள்ள நினைத்த சின்னமலை போராளிகளை எல்லாம் திரட்டி, திப்புவின் எஞ்சிய படையினை திரட்டி கோவை முகாமினை தாக்க திட்டமிட்டார்

அதுமட்டும் வெற்றிகரமாக முடிந்திருந்தால் ஆங்கிலேயபடைகளுக்கு அடியாக இருந்திருக்கும், ஆனால் சில தகவல் தொடர்பு சரியில்லா காரணத்தால் சிலர் முந்திகொள்ள அந்த முயற்சி தோற்றது

ஆயினும் அஞ்சவில்லை சின்னமலை, அவரின் கவனெம்ல்லாம் எப்படியாவது நெப்போலியன் உதவிபெற்று ஆங்கிலேயரை ஓட அடிப்பதில் இருந்தது, வெள்ளையர் அதனை முறியடிக்க தீவிரமாய் இறங்கினர்

வீரத்தில் வெல்லமுடியா சின்னமலையினை சமையல்காரனுக்கு லஞ்சம் கொடுத்து சாதித்தனர், மிக நுட்பமாக பிடிக்கபட்டார் சின்னமலை

கொஞ்சம் தாமதித்திருந்தால் அவருக்கு பிரெஞ்ச் படை உதவியிருக்கும், வரலாறு மாறியிருக்கும் ஆனால் விதி அதுவல்ல‌

இதே நாளில் அந்த மாவீரனை தூக்கிலிட்டார்கள். வெள்ளையனுக்கு கோவை பகுதியில் சிம்ம சொப்பணமாக விளாங்கிய அந்த மாவீரன் இந்த நாளில்தான் இறந்தான்

அவன் இறந்தாலும் அவரின் வீரமும், அவர் பெற்ற பல வெற்றியும், கொஞ்சமல்ல, மாவீரன் நெப்போலியனிடம் கவனம் பெற்ற வீர இந்தியர்களில் சின்னமலைக்கு நிச்சயம் இடம் உண்டு

வீரம் வீரத்தை விரும்பும் என்பது அதுதான்

நாட்டிற்காய் போராடிய அம்மாவீரன் இன்று ஒரு சாதி அடையாளமாக சுருங்கிவிட்டதுதான் பெரும் கொடுமை.

அந்த மாவீரனுக்கு சாதி வோட்டுக்காக பல அரசியல் தலைவர்களும் அவனுக்கு அஞ்சலி செலுத்த வருவார்கள், அதில் மாநில முதல்வரும் இருப்பார் என்பதுதான் கொடுமை

அவன் வேறுசாதி, அவன் தளபதி இன்னொரு சாதி, அவனின் படைகளில் நாயக்கன், மராட்டியன், கன்னடன் என எல்லா மக்களும் இருந்தார்கள் , அவன் படை எல்லா சாதிகளையும் கொண்டிருந்தது

அந்த மாவீரனைத்தான் இன்று சாதி அடையாளத்தில் வைத்திருக்கின்றார்கள், பெரும் கொடுமை

அந்த ஓடாநிலை கோட்டை, சங்ககிரி கோட்டை அவனின் மாவீரத்தை சுமந்தபடி இன்றும் நிலைபெற்று நிற்கின்றது

அந்த மாவீரனுக்கு வீர வணக்கமும், அஞ்சலிகளும்.

பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு

இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக பல சர்ச்சைகள் வெடித்திருகின்றன‌

வறுமையும் திண்டாட்டமும் எல்லா சாதியிலும் உண்டு

சாதி ரீதியான இட ஒதுக்கீடு என்பது சாதியத்தினை சாதி அரசியலை ஊக்குவிக்கும், அதனால் சாதி ஒழியாது சர்ச்சை ஓயாது

பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடே வறுமைபட்டவர்கள் வாழ வழி, சாதி என்பது ஒழிந்து போகவும் அதுவே சரி