எதையும் முன்பே சொல்லிவிடுவது நம் வழக்கம்

முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும் சிங்களராகவே வாழ்ந்து வருகிறார். விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை ஈழத்தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்” என்று கூறியுள்ளது.

இதெல்லாம் ஓசியில் படம்பார்க்கும் வித்தையன்றி வேறல்ல என்பதை நமது அரசியல் 360 சேணலில் அன்றே சொல்லியிருந்தோம்.

எதையும் முன்பே சொல்லிவிடுவது நம் வழக்கம்

கவலைபடுவார் யாருமில்லை

கோவையில் சர்வதேச விமானநிலையம் வெண்டும் : ஆ.ராசா

மதுரையினை சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும் : வெங்கடேசன்

தூத்துகுடி விமானநிலையம் தரம் உயர்த்தபட வேண்டும் தமிழிசை

கன்னியாகுமரியில் விமான நிலையம் வேண்டும் : வசந்தகுமார்

ஆக தமிழ்நாடு முழுக்க விமான நிலையங்களாக இருக்கும் போல, நகரங்களின் சாலை இருக்கும் லட்சணத்தில் விமானமே பரவாயில்லை என முடிவு செய்துவிட்டார்களோ என்னமோ?

இவ்வளவு விமான நிலையம் வேண்டுமாம், ஆனால் சென்னை விமான நிலையம் அடிக்கடி இடிந்துவிழுந்துகொண்டே இருக்கின்றது அதுபற்றி கவலைபடுவார் யாருமில்லை

Zomato

Zomato காவிகலரில் தானே சீருடை கொடுத்திருக்கின்றது?

பின்பும் ஏன் சங்கிகள் கதறிகொண்டிருக்கின்றனர்..

ஆக Zomato எல்லா வகை சேவைகளையும் சேவக‌ர்கள் வழியாக வழங்கும் போல் தெரிகின்றது

இதை பார்த்துவிட்டு சிலருக்கு விவகாரமான பிசினஸ் ஐடியாக்கள் தோன்றாதவரை நல்லது

ஆட்டோ சங்கர் போல Zomato சங்கர்கள் வந்துவிட்டால் தமிழகம் தாங்காது

மன்சூர் அலிகான் மேல் வழக்கு

மோடி, அமித்ஷாவினை அவதூறாக பேசியதாக மன்சூர் அலிகான் மேல் வழக்கு

மிஸ்டர் மன்சூர், பாஜகவின் செல்லபிள்ளையான சைமன் எதுவும் பேசலாம் வழக்கு பாயாது

அதற்காக சைமன் வீட்டு வளர்ப்புநாயெல்லாம் குரைத்தால் மேலிடம் சும்மா இருக்காது புரியுதா

நாடு மிக ஆபத்தான நிலைக்கு சென்றுவிட்டது போல் தெரிகின்றது

நாடு மிக ஆபத்தான நிலைக்கு சென்றுவிட்டது போல் தெரிகின்றது

ஆர்.எஸ்.எஸ் ராணுவபள்ளி தொடங்கபோவதாக சில தகவல்கள் வருகின்றன, உபியில் தொடங்குவார்களாம்

இதில் ராணுவத்தினர் பயிற்சி கொடுப்பார்களாம், பின் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் ராணுவத்தில் சேர்வார்களாம்

ராணுவம் என்பது ஜாதி மதம் இனத்திற்கு அப்பாற்பட்டதாக இருத்தல் வேண்டும், சொந்த இனம் என்றால் சுடு என்றால் சுடும் அமைப்பாக இருக்க வேண்டும்

ராணுவத்தில் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகள் ஊடுருவுமானால் அது மிகபெரிய குழப்பத்தை ஏற்படுத்தி தேசத்தை வலுவிழக்க செய்யும்

இதெல்லாம் மகா கவலையளிக்கும் விஷயங்கள், மனம் மிக கடுமையாக அஞ்சுகின்றது

இதை உடனே கைவிட்டால் நல்லது, எங்கள் நாடு எங்கள் அரசு எனும் மனதையில் திரிவார்களானால் மாபெரும் குழப்பத்தை இந்தியா சந்திக்கும்

அதை கண்ணீரோடு எச்சரிக்கின்றோம்

அன்றொரு நாள் இன்றைய பலுசிஸ்தானில் இருந்து கான் அப்துல் கபார்கான் என்றொரு இந்தியன் பிரிவினையின் பொழுது கதறிகொண்டிருந்தான்

நாங்கள் இந்தியர்கள் மதத்தின் பெயரால் எங்களை பிரிக்காதீர்கள், நாங்கள் தொடர்ந்து இந்தியனாக வாழ ஆசைபடுகின்றோம் என கதறி கதறி கேட்டுகொண்டிருந்தான்

அதை கொஞ்சமும் காதில் வாங்காமல் நீ பாகிஸ்தானி என விரட்டினார்கள்

இனி நம்மையும் அப்படி விரட்டுவார்கள் போலிருக்கின்றது

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்பது இதுதான்

ஆனால் இதையும் தாங்க ஏது இதயம்?

பெரும் நம்பிக்கைகள் எல்லாம் பொய்த்து மனம் வெறுத்துவிட்ட நேரமிது

மீண்டும் திமுக-வில் இணைகிறாா் குஷ்பு

காங்கிரஸிலிருந்து விலகி மீண்டும் திமுக-வில் இணைகிறாா் குஷ்பு – செய்தி

சீதை இருக்குமிடமே அனுமனுக்கு அசோகவனம் அல்லது அயோத்தி

தலைவி ஆணையிட்டால் ஐ.எஸ் இயக்கத்தினையே ஆதரிக்கும் சங்கம், திமுக என்றால் ஆதரிக்காதா?

இனி எம் தலைவர் உதயநிதி, எம் கொள்கை தலைவி ஏற்றுகொள்ள போகும் திராவிட கொள்கை , எம் கோவில் அறிவாலயம்.

கலைஞரின் வளர்ப்பு மகளே வருக, காரிருள் நீக்கி தமிழ்நாட்டில் ஒள்விளக்கு ஏற்றுக

உங்களுக்கு தெரியுமா

நீங்கள் கலைஞருக்கு முதலாமாண்டு அஞ்சலியினை திராவிடம்,பகுத்தறிவு, பிராமண எதிர்ப்பு என முழங்கிகொண்டிருங்கள்

அன்று துர்கா ஸ்டாலினும் , ராசாத்தியும் அய்யர் மந்திரம் சொல்ல சொல்ல பிண்டத்தை கரைத்து கொண்டிருப்பார்கள்..

சம்பவம் சொல்லபோகும் நீதி என்றால் கலைஞரைபற்றி குடும்பத்தாருக்கு தெரியாததெலாம் உங்களுக்கு தெரியுமா என்பதுதான்..