அவர் அப்படித்தான்

தமிழ் திரைப்படங்களில் மகா வித்தியாசமான அதேநேரம் கிளாசிக் எனப்படும் ரகத்தின் படம் “அவள் அப்படித்தான்”

அதில் ருத்தையாவின் வசனங்களை ரஜினி இப்படி பேசுவார் , ரஜினி அப்பொழுது வில்லன் நடிகர்

“டேய் மச்சான், பெண்கள் மேல வெறுப்பு வந்த அன்னைக்கே நான் செத்துருவேன், அதுக்கப்புறம் என்னடா வாழ்க்கை?

பெண்ணை அனுபவி ஆராயாதே..பெண்ணை தேடு அவள் இதயத்தை தேடாதே

அவா உன்னை தொடரட்டும், நீ அவளை தேடாதே

பெண்ணிடம் ஏமாறாதே.. பெண்ணுக்காகவும் ஏமாறாதே,

பொண்ணுங்க இல்லாம வாழவே கூடாது, அதே நேரம் பொண்ணுக்காகவும் வாழகூடாது

நதிமாதிரி நாம ஓடிகிட்டே இருக்கணும், நீ இல்லண்ணா வாழமுடியாதுன்னு மீன் மாதிரி அவளுகளா நம்மகிட்ட நீந்தணும், நாமளாக தேடி போகவே கூடாது”

இந்த வரிகளுக்கு அகில உலக‌ சாட்சியாக வாழும் ஒரே மகான் நித்தி சாமி

எத்தனை அத்திவரதர் வந்தாலும் நித்திவரதரின் ஆட்சியும் ஆசியுமே தனி..

“அவர் அப்படித்தான்..”

உலகெல்லாம் இஸ்லாமிய பெண்களுக்கு நற்செய்தி

உலகெல்லாம் இஸ்லாமிய பெண்களுக்கு நற்செய்தி கிடைத்து கொண்டிருக்கும் நேரமிது

இந்தியா முத்தலாக் விவகாரத்திற்கு கடிவாளம் போட்டது, இதற்கு உலகளாவிய இஸ்லாமிய பெண்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது தமிழக இஸ்லாமிய பெண்கள் தவிர‌

காரணம் நல்ல சட்டம் கொண்டுவந்தாலும் திமுகவும் காங்கிரசும் கொண்டுவர வேண்டும் பாஜக எது கொண்டுவந்தாலும் ஏறேடுத்தும் பாரோம் என்பது அவர்களின் 6ம் கடமைகளில் ஒன்று

அது இருக்கட்டும்

இப்பொழுது சவுதி அரேபியா இதுகாலம் இருந்த பெண்கள் மேலான கட்டுபாடு ஒன்றை தளத்துகின்றது, இதுவரை சவுதி பெண்கள் ஆண் துணை அல்லது அனுமதியின்றி வெளிநாடு செல்ல கூடாது

இனி அப்படி அல்ல அவர்களை பட்டாம் பூச்சியாக பறக்கவிடுகின்றோம், 21 வயது நிரம்பிய எந்த சவுதி பெண்ணும் கிளம்பலாம் யாரின் அனுமதியும் தேவையில்லை என்கின்றது சவுதி

சவுதி பெண்களுக்கு இது உற்சாகம் அளிக்கும் செய்தியாயிற்று , இந்த அரசர் அவர்களுக்கு பல உரிமைகளை கொடுத்து கொண்டிருக்கின்றார்

நல்ல வேளையாக சவுதி தூதரகம் தமிழகத்தில் இல்லை, இருந்திருந்தால் இந்நேரம் சவுதி அரசருக்கு “பெரியார் விருது” என ஒரு கோஷ்டி சவுதி தூதரகம் நோக்கி கிளம்பியிருக்கும்

அக்கா என்னாயிற்று?

போக்சோ சட்டத்தில் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல்

அக்கா என்னாயிற்று?

திமுகவினர் யாரும் சிக்கிகொள்வார்கள் என பயமா?

திலகர் பிறவி போராளி

அதுவரை காங்கிரஸ் இயக்கம் பிரிட்டிஷாரை விரட்ட முடியாது என்றே நம்பிகொண்டிருந்தது, உலக யதார்த்தபடி அதற்கு வழி இல்லாமலும் இருந்தது

பிரிட்டிஷாரை எஜமானர்கள் என நம்பி உரிமை கேட்ட காங்கிரசில் முதன் முதலில் அவர்கள் அந்நியர்கள் என சொல்லி ஒரு குரல் ஒலித்தது அது பெரும் கலகத்தையும் ஏற்படுத்தியது

மிக தைரியமாக அக்குரலை எழுப்பி பெரும் எழுச்சிக்கு வித்திட்டவர் பால கங்காதிர திலகர், அவரின் எழுச்சியே தேசத்தில் ஒரு அணலை எழுப்பியது, அது காந்தி காலத்தில் விடுதலையாக விடிந்தது

திலகர் பிறவி போராளி, இயல்பிலே புத்திசாலியான அவருக்கு கணிதமே விருப்பபாடம், அது இயல்பாயும் வந்தது, மிக பெரும் பொறியாளராகும் வாய்ப்பு அவருக்கு இருந்தது

ஆனால் பொறியாளர் படிப்பு பொதுநலனுக்கு உதவாது, சட்டபடிப்பே இங்கு மக்கள் நலனுக்கு உகந்தது என சொல்லி சட்டம் படித்தவர் திலகர், அந்த படிப்பே அவரை பின்னாளில் வெள்ளையனுடன் அவரை விவாதிக்க வைத்தது

தனக்காக அல்லாமல் நாட்டுக்காக சட்டம் படித்த மாபெரும் தலைவன் திலகர், இதனால்தான் லோகமான்யா என அழைக்கபட்டார்

திலகர் மேல் சில குற்றசாட்டுக்கள் உண்டு, அவர் இந்துமத அபிமானி பின்னாளைய மத துவேஷங்களுக்கு அவரே வித்திட்டவர் என சொல்வாரும் உண்டு

உண்மை ஆழ நோக்க வேண்டியது

விவேகானந்தருடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு இந்துமத எழுச்சியே இத்தேசத்தின் விடிவு என்பதை ஆத்மார்தமாக நம்ப வைத்தது.

மொழி, இனம் என பிரிந்து கிடந்த இந்தியாவினை இணைக்கும் ஒரே விஷயம் இந்துமதம், அது ஒன்றால் மட்டுமே இத்தேசம் பிணைக்கபட்டது

நாடு முழுக்க மொழியாலும், இனத்தாலும் விடுதலை உணர்ச்சியினை எழுப்ப சிரமமான நிலையில் மதத்தால் அது எளிது என்பது திலகருக்கு புரிந்தது, மதத்தை விடுதலைக்கான ஆயுதமாக பயன்படுத்தினார்

அரசியல் கட்சிக்கு தடை, அரசியல் பேச தடை என்றிருந்த காலங்களில் மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்க பிரிட்டிசார் யோசித்தபொழுது அதுவரை சாதாரண நிகழ்வாக இருந்த பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தை இந்திய எழுச்சி ஊர்வலமாக சாதுர்யமாக நடத்தினார் திலகர்

இந்திய சுதந்திரத்திற்காக இந்து மதம் எனும் சக்தியினை கையில் எடுத்தாரே தவிர, ஒருகாலமும் மற்ற மதங்களை அவர் பழித்தாரில்லை, வரலாறு அதை சொல்கின்றது

வங்கத்து குதிராம் போஸ் வங்க பிரிவினையினை எதிர்த்து குண்டு வீசிய நேரம் அதை ஆதரித்து தன் இதழில் மிக தைரியமாக எழுதினார் திலகர்

யாருக்கும் இல்லாத தைரியம் அவருக்கு இருந்தது, இதனால் திலகருக்கு ஆதரவு பெருகிற்று

இதனை கண்டு அஞ்சிய பிரிட்டிஷ் அரசு அவரை சிறையில் அடைக்க, உலகமே பிரிட்டனை கண்டித்தது. குறிப்பாக ஜெர்மனியின் மார்க்ஸ் முல்லர் அதை உலக அளவில் கண்டிக்க திலகருக்கு விடுதலை கிட்டியது

திலகரின் வழியில் லாலா லஜபதிராய், வ.உ சிதம்பரனார் என மாபெரும் தியாகிகள் எல்லாம் உருவானார்கள், ஏராளமான தியாக தீபங்களை ஏற்றியவர் திலகர்

உண்மையில் திலகரின் வழியில் வந்தவர்களே இத்தேசத்தின் மாபெரும் தியாகிகள் வரிசையில் நிற்கின்றனர் என்பதுதான் வரலாறு, அவரின் தியாகத்தால் எழுந்த எழுச்சி அப்படி இருந்திருக்கின்றது

காந்தியின் வருகைக்கு பின் திலகர் தீவிரவாதி என முத்திரைகுத்தபட்டாலும் திலகருக்கான அபிமானம் இத்தேசத்தில் குறையவில்லை

கிராமம் கிராமமாக சென்று மக்களை திரட்டினார், வெள்ளையனை இந்திய மக்கள் தூக்கி எறியமுடியும் என்ற நம்பிக்கையினை விதைத்தார்

இந்தியர் மேல் அபிமானம் கொண்டிருந்த , இந்தியரின் நியாயத்தை ஓரளவு பேசிய லேபர் கட்சியுடன் தொடர்பில் இருந்தார், அவர்களை சந்திக்க அவர் லண்டன் சென்ற வேளையில்தான் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தது

அதை தொடர்ந்து இந்தியா திரும்பினார், அதன் பின் உடல்நலம் பாதிக்கபட நோயுற்று இறந்தார்

பின்னாளில் லேபர் கட்சியின் அட்லி இங்கிலாந்தில் பிரதமரான போழுதே இந்திய சுதந்திரம் கிடைத்தது, திலகர் இறந்து 27 வருடமான பின்பு அது நடந்தாலும் லேபர் கட்சி எனும் தொழிலாளர் கட்சியே இந்திய விடுதலையினை கொடுக்கும் என்ற திலகரின் தீர்க்க தரிசனம் தப்பவில்லை

இந்நாட்டில் மாபெரும் சுதந்திர எழுச்சியினை ஏற்படுத்தியவர் என்ற முறையிலும், “சுதந்திரம் எமது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவோம்” என முழங்கி நின்ற சுதந்திர போராளி என்ற வகையிலும் திலகர் இந்நாட்டின் தலைமகன்

அந்த தலைமகனுக்கு இன்று நினைவு நாள், தேசம் அந்த மாபெரும் தலைவனுக்கு அஞ்சலி செலுத்துகின்றது

ஹலால் உணவா, சைவ உணவா

ஹலால் உணவா, சைவ உணவா என மறுபடியும் சலங்கை கட்டி ஆட தொடங்கிவிட்டனர்

எந்த உணவாய் இருந்தால் என்ன? யாருக்கு எது பிடிக்குமோ அதை மணக்க மணக்க சமைத்து உண்ணுங்கள்

இந்த உலகில் எல்லாமே நிலையற்றது, எதுவும் நிரந்தரமில்லை, அர்த்தமுமில்லை

உண்பதும், உறங்குவதுமே பரிபூரண சுகம், ஏக சுகம். அதை அணு அணுவாக அனுபவிக்க வேண்டும்

கடவுளுக்கு தெரியாதா? ஒட்டகம் போல பல நாட்களுக்கு தாகம் எடுக்காதவாறோ இல்லை மலைபாம்பு போல தின்றால் 3 வாரம் மல்லாக்க கிடப்பது போல ஏன் அவர் மனிதனை படைக்கவில்லை?

அவருக்கு மனிதன் மேல் தனிகருணை இருந்தது, அவனுக்கு நொடிப்பொழுதும் பசிக்க வேண்டும் அவன் தேடி தேடி உண்ண வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இருந்தது

பசியினை படைத்த அவனே பல்லாயிரம் வகை உணவுக்கான மூலத்தையும் இங்கே வைத்து அதை சமைத்து உண்ண ஞானத்தையும் மனிதனுக்குள் வைத்தான்

பசியும் உணவுதேடலும் இல்லை என்றால் இங்குஒரு மாற்றமும் வந்திருக்காது

அதனால் எது பிடிக்குமோ அதை நன்றாக உண்ணுங்கள்

விலங்குகளை கொல்வது பாவமென்றால் விட்டுவிடுங்கள் இன்னொருவன் விட்டுவிடவா போகின்றான், நீங்கள் கொல்லவில்லை என்றால் இன்னொருவன் விழுங்க போகின்றான்

விலங்குக்கு வலிக்கும் என்றால் மயக்க ஊசி போட்டு வெட்டி எடுங்கள், ஹலால் எல்லாம் விஞ்ஞானம் வளரா காலத்து விஷயம்

இந்த சர்ச்சை பற்றி நேற்றிரவு கனவில் வந்த அவ்வையார் சொன்னார்

“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்
சைவம் ஒருபுறம் வல்சைவம் மறுபுறம்
பட்டாங்கில் உள்ள படி”

இந்த இரண்டுமேதான் உலகின் சாதி என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

யூதருக்கு அந்நாளில் ஏகபட்ட உணவு கட்டுப்பாடு உண்டு, செதில் இல்லா கடல் உயிரினம் உண்ணாதே, குளம்பு இல்லா மிருகத்தை உண்ணாதே, பன்றியினை உண்ணாதே என ஏககட்டுப்பாடு

கைகால் கழுவாமல் உண்ணவும் கூடாது

ஒருநாள் யாரோ ஒரு யூதன் உண்ண கூடாததை உண்டபொழுது இயேசுவிடம் புகார் வாசித்தார்கள், அவர் சொன்னார்

“வெளியிலிருந்து உள்ளே செல்வது எதுவும் மனிதனை தீட்டுபடுத்தாது, ஆனால் உள்ளே இருந்து வரும் எண்ணங்களே மனிதனை தீட்டுபடுத்தும்”

அட்டகாசமான பதில் அது

அந்த இந்து யாரென தெரியவில்லை, இஸ்லாமியனை கொண்டு வந்த உணவினை அவன் மறுத்தது தவறு

ஆனால் அதே நேரம் கிறிஸ்தவ, இஸ்லாமியர் தரும் உணவினை சந்தோஷமாக வாங்கி உண்ணும் இந்துக்கள் நிரம்ப உண்டு

அதே நேரம் நீவீர் சிலைகளுக்கு படைத்திருப்பீர் என சொல்லி இந்து அன்பர்கள் கொடுக்கும் உணவினை ஏற்கா சில இஸ்லாமியரும், கொடும் கிறிஸ்தவரும் இங்கேதான் உண்டு

அன்பாக‌ கொடுக்கும் உணவினை மறுப்பது நாகரீகம் அன்று, எந்த தெய்வமும் அதை மறுப்பதில்லை

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்

உலகில் நல்லுறவை ஏற்படுத்த உணவினை போல அருமையான விஷயம் இல்லை

எவ்வளவும் நட்பு பாராட்டுங்கள், பேசுங்கள் , பழகுங்கள் ஆனால் உணவினை பகிராமல் வரும் நட்பு நிலைக்காது, வளராது

உணவின் பெரும் சக்தி அது

ஒரு குடும்பம் ஒருநேரமாவது சேர்ந்து உண்ண வேண்டும் என்பார்கள், காரணம் குடும்ப ஒற்றுமை தொடங்கும் புள்ளி அதுதான் என்கின்றது உளவியல்

விருந்துகள் நடத்தபடுவதும், எல்லா மதங்களும் விருந்து பண்டிகைகளையும் பந்திகளையும் நடத்தி பகிர்ந்துண்ண சொல்வது அதனாலே

இந்துமதம் அதை கடவுளுக்கு படைக்க சொல்லி வலியுறுத்தியது, எதற்காக கடவுளுக்கு பசிக்கும் என்றா?

இல்லை, கடவுளுக்கு படைத்ததை பக்தியுடன் மனிதன் பகிர்ந்து உண்பான் அங்கு உறவு வளரும் என்பதற்காக‌

இயேசு தன் பக்தர்களுக்கெல்லாம் உணவளித்தாரே ஏன்? அங்கு ஒரு பிணைப்பு வரும் என்பதற்காக, சாகும் முன்பும் பந்தி கொடுத்துவிட்டுத்தான் சாக சென்றார்

இஸ்லாம் கேட்கவே வேண்டாம், அவர்களை போல பகிர்ந்து உண்ண யாராலும் முடியாது.

கட்சிகளின் வெற்றி தோல்வியினையே பிரியாணிதான் நிர்ணயிகின்றது என்பது தமிழக விதி

மனிதன் எங்கெல்லாம் கூடுகின்றானோ அங்கு உணவு மட்டுமே அவனை இணைக்கும் சக்தியுள்ள விஷயம்

சமய விழா முதல் குடும்ப விழா வரை உணவின்றி அமையாதது இதனால்தான்

உணவினை போல அன்பும் சகோதரத்துவமும் செழிக்க நல்வழி வேறு இல்லை

அதனால் உணவினை பகிர்ந்து உறவை வளருங்கள், வீணாக சர்ச்சை செய்யாதீர்கள்

உணவே கடவுள், அதை கூடி உண்ணுங்கள் அங்கு தெய்வம் வந்து மகிழும்

எதையும் பொறுக்கும் தெய்வம் உணவினை கொண்டு சர்ச்சை செய்தால் ஏற்கவே ஏற்காது

கொடூர வில்லன் உபி பாஜகவில் இருந்திருக்கின்றான்

தமிழ்படத்தினை உபி, மபி ஏரியாக்களை பார்த்து எடுப்பார்களா? இல்லை உபி மபி ரவுடிகள் தமிழ் சினிமா பார்த்து ரவுடியிசம் பழகுவார்களா என்பது பட்டிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது

தமிழ் சினிமா அளவு கொடூர வில்லன் உபி பாஜகவில் இருந்திருக்கின்றான் அவன் பெயர் குல்தீப்சிங் சென்கார், இயக்குநர் ஹரி படங்களில் வருவது போலவும் பழைய வில்லன் சத்தியாஜ் போலவும் பெரும் வில்லனாக இருந்திருகின்றார்

பெண்ணை கற்பழித்தது அவள் நியாயம் கேட்டதும் கொலை முயற்சி, குடும்பத்த்தை மிரட்டியது என ஏகபட்ட கொடூரங்களை அவர் செய்திருக்கின்றார்

ஆனால் தமிழ்படத்தில் வருவது போல விஜய், அஜித் , விஜயகாந்த், அர்ஜூன், சத்யராஜ்,விஷால் போன்ற ஹீரோக்கள் அங்கு காக்க வரவில்லை

பெரும் அச்சுறுத்துலக்குள்ளான பெண் டெல்லி உயர்நீதிமன்றத்திற்கே கடிதம் எழுதிவிட்டாள்

அதிர்ந்த உச்ச நீதிமன்றம் இன்னும் இங்கு நீதி சாகவில்லை என சொல்லி வழக்கினை டெல்லிக்கு மாற்றியிருக்கின்றது

விஷயம் சொல்வது இதுதான்

பாகிஸ்தானின் வர்சிஸ்தான் பலுசிஸ்தான் போல ஒருவித காட்டுமிராண்டி பகுதியாக எதற்கும் கட்டுபடாத பிரதேசமாக உபி ஏரியா விளங்குகின்றது

அங்கு ஆளும் அந்த மொட்டை சாமி யோகி என்பவர் பாஜகவினரின் அடாவடிகளை கண்டிக்க தயங்குகின்றார் அல்லது முடியவில்லை

வாக்கு ஒன்றிற்காக பாஜகவின் அதிகார பீடமான மோடி அமித்ஷா போன்றோர் நடவடிக்கைக்கு பதில் கனத்த மவுனம் காக்கின்றனர்

அந்த கோஷ்டிகள் எப்படி அடாவடி செய்தாலும் இந்நாட்டில் நீதி கிடைக்காமல் போகாது என்பதும் நோக்க வேண்டிய விஷயம்

இதில் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும்

பாஜக அமுக்கமுயன்ற சிக்கலை காங்கிரஸும் திமுகவும் பாராளுமன்றத்தில் கொதித்தெழுந்து அணலை கக்கியது

அந்த அதிர்வும் உச்சநீதிமன்றத்தின் அவசர நடவடிக்கைக்கு ஒரு காரணம்

தமிழகத்தை தாண்டி வடக்கே எந்த பெண்மணிக்கு என்றாலும் அது திராவிட பெண்மணி தமிழச்சியாக இல்லை என்றாலும் திமுக காக்க தயங்காது என்பது தெரிகின்றது

இதுபற்றி உதயநிதி என்பவரிடம் அகில இந்திய பெண்களை காக்க கிளம்பிவிட்ட பின் திராவிட அடையாளம் கட்சிக்கு ஏன்? அதை உடனடியாக மாற்றி “அகில இந்திய முன்னேற்ற கழகம்” என பெயரிட்டால் என்ன என கேட்டுவிடலாமோ?

அது இருக்கட்டும்

சில நாடுகள் தமிழ்படங்களை தடை செய்துவிட்டன, அதில் கட்டுகடங்கா வன்முறையும் கொடூர வில்லத்தனமும் காட்டபடுகின்றதாம் அது சில நாட்டு இளைய தலைமுறையினை பாதிக்கின்றதாம்

குற்ற செயல்களை விசாரிக்கும் அந்நாட்டு காவல்துறை, தமிழ்படங்களை பார்த்து இக்குற்றத்தை புரிய தூண்டபட்டாதாக குற்றவாளிகள் சொன்னதை கேட்டு அதிர்ந்து அரசுக்கு கொடுத்த அறிக்கையின் வெளிப்பாடு அவை

இனி உபி அரசும் அப்படிசொல்லுமோ? சொல்லிவிட்டால் தமிழகம் தாங்குமா?

தமிழ் படத்தால் உபியில் வன்முறை அதிகரிப்பு என யொகி சொல்லிவிட்டால் எப்படி இருக்கும்? சொல்லமாட்டார் என நம்புவோம்

எது எப்படியோ? நாம் சொல்லிவிட்டோம் அல்லவா? சும்மாவே தமிழ் நடிகர்கள் மேல் கடுப்பாய் இருக்கும் பாஜகவினர் குறிப்பாக தமிழிசை அக்கா இனி ஒரு படத்தை விடுவாரா?

நல்ல வேளையாக சூர்யாவின் அயன் படம் முன்பே வந்தது, இனி வந்தால் கடத்தலை சொல்லிகொடுக்கும் படம் என சூரியாவினை வறுத்து உள்ளே அடைத்தாலும் அடைத்திருப்பார்கள்

நெஞ்சினிலே, போக்கிரி போன்ற படங்கள் வந்தால் விஜய் நிலை அவ்வளவுதான் , ஏன் கமலஹாசனே இன்னொரு நாயகனை நினைத்துபார்க்க முடியாது. வன்முறை வளர்ப்பு படம் என பொசுக்கிவிடுவார்கள்

இனி ஒரு சூர்யா , விஜய் படம் வன்முறை, கடத்தல் என வரட்டும், தமிழக பாஜக விட்டுவிடுவதை பார்த்துவிடலாம்..

யதார்த்தமும் அதுதான்

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று திமுக கொண்டு வந்த தீர்மானம் 106 எம்பிக்களின் எதிர்ப்பு ஓட்டால் தோல்வியடைந்தது.

யதார்த்தமும் அதுதான் , தமிழ்நாட்டுக்கு மட்டும் என எதிலும் விதிவிலக்கு கொடுக்கமுடியாது, கொடுக்கவும் மாட்டார்கள்

திமுக தன் உச்சகட்ட பலத்தில் அமர்ந்திருக்கும் பொழுது தன்னால் முடிந்த அதிகபட்ச முயற்சியினை செய்துவிட்டது அது தோல்வியில் முடிந்துவிட்டது.

ஆனால் தங்களால் முடிந்ததை முயற்சித்தார்கள். வாய்ப்பே இல்லை என்றாலும் முயற்சித்துபார்த்துவிட்டு வந்துவிட்டார்கள்

இனி என்ன செய்வார்கள்?

கதிர் ஆனந்த் இருந்திருந்தால் இந்நிலை வந்திருக்காது ஆக அவருக்கு வாக்களியுங்கள் என வேலூரின் சந்து பொந்துகளில் சுற்றி சுற்றி வருவார்கள்.

ஹம்சாபின்லேடன்

கடன், பகை, நெருப்பு இந்த மூன்றிலும் கொஞ்சமும் விட்டு வைக்காதே, முடிக்கும் பொழுது மொத்தமாக முடித்துவிடு என்பது சாணக்கிய நீதி

அந்நாளைய மன்னர்கள் பகைவரை குடும்பத்தோடேதான் முடிப்பார்கள், அவ்வளவு ஏன் இலங்கை ராணுவமும் பிரபாகரனுக்கு அதைத்தான் செய்தது

அப்படியாக பின்லேடனின் வம்சத்தை குறிவைத்தது அமெரிக்கா, தந்தைக்கு வழிவாங்க யாராவது அலைகின்றார்களா என அது தேடிகொண்டே இருந்தது

ஒசாமா பின்லேடனுக்கு மனைவியர் அதிகம், வாரிசுகளும் அதிகம்

அதில் ஒருவர் ஹம்சாபின்லேடன் தந்தைவழியில் தீவிரமாக இருந்தார்

31 வயதாகும் ஹம்சா லேடன் அல்மான் அல்ஜவஹரியுடன் இணைந்து அல்கய்தாவினை நடத்தியதாக சொல்லபட்டது

ஹம்சா அமெரிக்காவுக்கு ஏன் ஆபத்தானவர் என்றால் பின்லேடனின் முதலீடுகள் உட்பட அல்கய்தாவுக்கான வருமான மூலம் அறிந்தவர் என்பதால் மிக பெரும் பலத்தை அவரால் கொடுக்கமுடியும் என அஞ்சியது குறிவைத்து தேடியது

இப்பொழுது அவர் கொல்லபட்டுவிட்டார் என அறிவிக்கின்றது

ஆனால் எங்கு எப்படி கொன்றார்கள் என சொல்லவில்லை, உடலையும் காட்டவில்லை

செய்தியினை அல் கய்தா இன்னும் மறுக்கவில்லை என்பதால் எங்கேயோ ஏதோ நடந்திருக்க வாய்ப்பு உண்டு

உலகெல்லாம் இது வாரிசுகளுக்கு சோதனையான காலம்

ராகுல், குமாரசாமி, முக ஸ்டாலினை போலவே எல்லா துறை வாரிசுகளும் படாதபாடுபடுகின்றன

சமூக நீதிக்கான நூல்

நாம் ஒன்றும் தவறாக சொல்லவில்லை

மார்க்ஸ் எழுதிய மூலதனம் போன்றவையும், உலக பொதுவுடமைவாதிகள் எழுதியதையும் சமூக நீதிக்கான நூல் என்பதை எந்த கொம்பனும் அந்த ஆண்டவனுமே மறுக்க முடியாது

மத நூல்கள் ஒருவித குறுகியநோக்கமும் மேலாதிக்கத்தையும் நிலைநிறுத்தும் தத்துவம் கொண்டவை

அவை ஒருநாளும் சமூக நீதிக்கான நூல் ஆகா..

கம்போடியாவிலும் ஏதும் நடக்கலாம்

இலங்கை திரிகோணமலை துறைமுகம் எவ்வளவு ராணுவ ரீதியாக முக்கியமானதோ அப்படி கிழக்காசியாவின் மகா முக்கியமான துறைமுகம் கம்போடியவின் ரீம் துறைமுகம்

இரண்டாம் உலகபோரின் பொழுது பிரிட்டன் அதை உணர்ந்தது, ஜப்பான் உணர்ந்தது வியட்நாம் போரின் பொழுது அமெரிக்கா உணர்ந்தது

இப்பொழுது தென் சீனகடல் விவகாரத்தால் அமெரிக்காவுக்கு அதை கையில் எடுக்க கடும் விருப்பம்

ஆனால் விடுமா சீனா? அது முந்திகொண்டது. இப்பொழுது கம்போடியா சீனாவின் பிடியில் சிக்கிவிட்டது

ஆனாலும் சில ஆசைகாட்டி பார்த்தது அமெரிக்கா, அது பலிக்கவில்லை என்றதும் சீண்ட ஆரம்பித்தது

கம்போடிய ஆளும் கட்சி தில்லுமுல்லு செய்துதான் ஜெயித்தது, அதை குறிவைத்து சீண்டியது அமெரிக்கா

கம்போடியா வியட்நாம் அருகில் இருப்பதால் என்னமோ சட்டென அமெரிக்காவின் முகத்தில் குத்தியது போல் சொல்லிவிட்டது இப்படி

“எங்கள் நாட்டைபற்றி பேசிவிட்டு அமெரிக்க தூதரகம் ஏன் இங்கு இருக்க வேண்டும்? நாம் அழைத்தோமா? பிடிக்காவிட்டால் கிளம்புங்கள்” என சொல்லிவிட்டது

உலகின் ஒவ்வொரு நாடும் “வாராய் நீ வாராய்” என சர்வசக்தி படைத்த அமெரிக்காவினை அழைக்க தம்மாதுண்டு கம்பொடியா வலுவாக அடித்திருக்கின்றது.

அமெரிக்காவின் பதிலடி வலுவாக இருக்குமா? இல்லை காரியம் சாதிக்க காலில் விழுவார்களா என்பது இனிதான் தெரியும் எனினும் கம்போடியா அமெரிக்காவின் கொள்ளி கண்ணில் வலிய சிக்கிவிட்டது

கம்போடிய தேர்தலில் குழப்பம் நடந்தது ஒன்றும் ரகசியமல்ல‌

அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்தது என்பது செய்தி

ரஷ்ய தெர்தலில் தில்லுமுல்லு செய்துதான் புட்டீன் தொடர்ந்து பதவியில் இருக்கின்றார்

இஸ்ரேலிய தேர்தலின் தில்லுமுல்லு குழப்பத்தில் கிடக்கின்றது, ஓயா போர் போல ஓயாத தேர்தல்

இந்திய தேர்தல் பற்றி இந்தியர்கள் முடிவுக்கே விட்டுவிடலாம்

இதில் கம்போடியா தேர்தலை அமெரிக்கா சீண்டி வசமாக வாங்கி கட்டி அமர்ந்திருக்கின்றது, எங்களை பிடிக்கவில்லை என்றால் வெளியேறுங்கள் என கம்போடியா சொன்னபின்பும் நாஞ்சில் சம்பத் படத்து விளம்பரத்தினினை போல காரி துப்பினால் என்ன செய்ய வேண்டும்? “துடைச்சிக்கணும்” என சொன்னபடி அமர்ந்திருக்கின்றது

ஆனால் அமெரிக்காவின் ரகசிய கரங்கள் கம்போடியாவினை விட்டுவிடுமா என்ன?

இலங்கை திரிகோணமலைக்காக அத்தேசமே எரிந்தது போல் இனி கம்போடியாவிலும் ஏதும் நடக்கலாம்