தென்னக எல்லையிலும் அந்த உரிமையை மீட்டு எடுங்கள்

அமித்ஷாவிடம் தமிழர்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான் அந்த கச்சத்தீவை மீட்க வேண்டாம் சர்வதேச அரசியல் படி அது முடியவும் முடியாது

ஆனால் அந்த ஒப்பந்தப்படி தமிழக மீனவர்கள் அங்கு தங்கி ஓய்வு எடுக்கவும் வலை காய வைக்கவும் அதன் அருகே மீன் பிடிக்கவும் உரிமை உண்டு இந்திராகாந்தியும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் செய்து கொண்ட ஒப்பந்தம் அதை தெளிவாக சொல்லுகிறது

பின்னாளில் இலங்கை அதை மீறி துப்பாக்கிச் சூடுகளை நடத்தி அந்த உரிமையை இல்லாமல் செய்துவிட்டது பல காரணங்களுக்காக காங்கிரஸ் அரசு அதை மீட்கவில்லை இல்லை நிச்சயம் அது இந்தியாவிற்கு உள்ள உரிமை

எங்களை தமிழர் என்று ஒதுக்காமல் இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவில் உள்ள உரிமையை மீட்டுத்தாருங்கள் என தமிழர்கள் வேண்டுகின்றோம்

வட எல்லையில் இந்திய உரிமையை நிலைநாட்டிய நீங்கள் தென்னக எல்லையிலும் அந்த உரிமையை மீட்டு எடுங்கள்

உங்களை விட்டால் அதை செய்வதற்கு யார் இருக்கிறார்கள்

அமித்ஷா ஷா அவர்களே கச்சத்தீவில் உள்ள உரிமையை மீட்டு இந்தியரான தமிழனுக்குக் கொடுங்கள் தமிழகம் உங்களைக் கைகூப்பி வணங்கும் காலத்திற்கும் நீங்கள் அவர் மனதில் இருப்பீர்கள்

நிச்சயம் தமிழக கட்சிகள் அதனைச் செய்ய முடியாது காங்கிரசும் செய்யாது உங்களுக்கு மட்டுமே காலம் அந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறது

அந்த நல்வாய்ப்பினை தமிழர் உரிமையை மீட்க பயன்படுத்தி வரலாற்றில் இடம் பெறுங்கள்

அவமானத்துக்குரியது

என் பதிவினை பகிருங்கள் அதை யாரும் மறுக்க முடியாது ஆனால் அதை எடுத்து உங்கள் பெயரில் நீங்களே எழுதுவது போல் எழுதுவது எப்படி என்பது உங்கள் மனசாட்சிக்கு தெரியும்

அதனால் எம் பெயரை சேர்க்காமல் என் பதிவுகளை திருடி சொந்த பெயரில் பதிவிட்டு கொண்டிருக்கும் நண்பர்களிடம் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்

இந்த நிலை தொடருமானால் நீங்கள் யாராக இருந்தாலும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள்

அவனவன் நம் பதிவுகளை திருடி அரசியல் கட்சி தொடங்கும் அளவுக்கு நம்மை நம்பி பத்திரிகை தொடங்கும் அளவுக்கு சென்று விட்ட பின்பு தான் நிலைமையின் வீரியம் புரிகின்றது

இரவெல்லாம் கண்விழித்து படியுங்கள் நிறைய செய்திகளை சேகரியுங்கள் ஒன்றோடு ஒன்று முடிச்சு போட்டு பாருங்கள் உங்களுக்கு எழுத வரும்

அது முடியவில்லை என்றால் தயவுசெய்து பொத்திக் கொண்டு இருங்கள்

நாம் பைத்தியக்காரன் தான் ஆனால் நீங்கள் நினைக்கும் அளவுக்கு முழு பைத்தியக்காரன் அல்ல

அவனவனுக்கு என்ன வருமோ அதை செய்யுங்கள்

எமக்கும் குஷ்புவுடன் டூயட் பாட ஆசை தான் ஆனால் என் நிறத்துக்கும் உருவத்துக்கும் அது சரி வராது

எனக்கு என்ன வருமோ அதை நான் செய்து கொண்டிருக்கிறேன் உங்களுக்கு என்ன வருமோ அதை செய்யுங்கள்

வீணாக இம்மாதிரி திருட்டு ஈடுபடாதீர்கள் அது அவமானத்துக்குரியது

கச்சதீவு

மிஸ்டர் அமித்ஷா

அப்படியே கச்சதீவு ஒப்பந்தத்தையும் கிழித்து போட்டு அதை மீட்டெடுங்கள் பார்க்கலாம்

அதை மட்டும் செய்யுங்கள், கச்சதீவு புனித அந்தோணியார் ஆலயம் அருகே உங்களுக்கும் ஒரு ஆலயம் அமைக்க பக்தாள்ஸ் ரெடி

கச்சதீவினை மீட்ட கச்சநாதன், கச்சத்தை மீட்ட கச்சதலைவன், கட்டழகன் என ஏக டைட்டிலும் ரெடி

தாமரை ராமேஸ்வரம் பக்கமாவது மலரும்.

குபீர் பெரியாரிஸ்டுகள்

பெரியார் காஷ்மீரில் இருந்து இந்தியாவினையும் பாகிஸ்தானையும் வெளியேற சொல்லி அம்மக்களே அவர்களுக்கான முடிவினை தேடசொன்னார் : 
குபீர் பெரியாரிஸ்டுகள்

அப்படிபட்ட பெரியார் பாகிஸ்தான் காஷ்மீர் மேல் படையெடுக்கும் பொழுது தன் திராவிட படையான அண்ணா கலைஞர் நெடுஞ்செழியன் அன்பழகன் போன்றவர்களை அழைத்து ஏன் தடுக்கவில்லை

தளபதி அண்ணா இருக்க என்ன கவலை?

அவரும் அவர் கவலையும்..

ஆனால் அந்த பெரியார் கடைசி வரை பிரிட்டிஷ்காரனை இந்தியாவினை விட்டு போ என சொல்லவே இல்லை

அவன் சென்ற அன்றும் துக்கதினம் என அழுதுகொண்டிருந்தார்

ஆக இந்தியாவுக்கு ஒரு நீதி,காஷ்மீருக்கு தனி நீதி என தனி நீதிபதியாக தீர்ப்பு எழுதியிருக்கின்றார் வெண்தாடி டாடி

இன்னொரு வகையில் நோக்குங்கள்

அந்த 370ம் சட்டபிரிவினை இன்னொரு வகையில் நோக்குங்கள்

ஆம் காஷ்மீர் பாதுகாக்கபட்ட பிரதேசம், அந்நியர் யாரும் உட்புக முடியாது, தொழில் தொடங்கமுடியாது ஏகபட்ட கட்டுபாடுகள் என அந்த பிரிவு நேற்றுவரை சொல்லிற்று

இவை எதில் முடிந்தன?

தலைநகரில் இருந்து தொட்டுவிடும் தூரத்திலிருந்தும், பஞ்சாபின் லூதியானா போன்ற தொழில் நகரங்கள் அருகிலிருந்தும் காஷ்மீர் வளரவில்லை

வெளிமாநிலத்தவனும் அங்கு செல்லமுடியாது, காஷ்மீரியும் யார் கையினையும் பிடித்துமேல் வரமுடியாது

பாகிஸ்தானால் தூண்டபடும் தீவிரவாதமும் அது கொடுத்த வறுமையும் மற்ற மாநில மக்கள் அவர்களை தொடர்புகொள்ளமுடியா அளவு இருந்த சிக்கலும் காஷ்மீரை பின் இழுத்துகொண்டே சென்றது

வறுமையும் வேலை இல்லா திண்டாட்டமும் இளைஞர்களை எளிதில் தீவிரவாத பக்கம் திருப்பிவிடும், அங்குஅதுதான் நடந்தது

அங்கு தொழில்தொடங்குவார் யாருமில்லை அதற்கு சட்டமோ சூழலோ சரியில்லை எனும்பொழுது இந்திய ராணுவத்தின் மேல் தாக்குதல் நடத்தும் தொழில் வாய்பினை பாகிஸ்தான் வழங்கியது

ஆம் அதை தவிர ஒரு வளர்ச்சியுமில்லை

ஒரு காஷ்மீரிய விஞ்ஞானி என்றோ இல்லை காஷ்மீரிய தொழிலதிபர் என ஒருவரையாவது இங்கு சுதந்திர இந்தியாவில் காட்டமுடியுமா?

ஒருகாலமும் முடியாது, சுதந்திர இந்தியா அதற்கு வாய்பளிக்கவில்லை அந்த சட்டம் அவர்களை இந்தியாவிலிருந்து தனிமைபடுத்தி இருந்தது

மன்னர்கால சட்டம் காஷ்மீரின் தனிதன்மையினை ஒழித்துவிடும் என கருதிய சலுகைகளே அவர்களை பின்னோக்கி இழுத்து சென்றது

இனி காஷ்மீர் பொருளாதார வளர்ச்சிக்கு திறந்துவிடபடும்

சிலர் சொல்வது போல தனிநாடு ஆனாலும் அது ஒன்று பாகிஸ்தானால் விழுங்கபடும் அல்லது நேபாளம், பூடான் போல பின் தங்கிய நாடாகவே திகழும்,காரணம் கடல் இல்லை , எல்லை முழுக்க அடுத்த நாடுகள் எனும்பொழுது ஒரு நாடு வளர ஏக தடைகள்

இந்தியா ஒருவகையில் அவர்களை தன்னோடு இழுத்து இனி வளருங்கள் புதிய உலகில் காலடி எடுத்து வையுங்கள் என இன்று அழைத்து வந்திருக்கின்றது

சீனாவின் ஹாங்காங்கும் இந்தியாவின் காஷ்மீருக்கும் தலைகீழ் தொடர்பு உண்டு

ஹாங்காங் வளர்ந்த பிரதேசம் அதை சீனா இன்றும் தன்னாட்சி பகுதியாக நடத்தி வந்தாலும் ஹாங்காங் அடிக்கடி திமிறுகின்றது

ஆனால் நாமோ பிந்தங்கிய மாநிலத்தை இதுகாலம் சிறப்பு பகுதியாக நடத்தி அவர்களை பின்னடைய செய்திருந்தோம்

அந்த இரும்பு கதவும், தடுப்பு சங்கிலியும் இனி உடைகபடும்

தொழில் வளர்ந்து பணபுழக்கம் அதிகமானால் கல்வியும் தொழிலும் வளர்ந்தால் அங்கு தீவிரவாதம் எனும் சொல்லே வராது

ஆம் வளர்ந்துவிட்ட சமூகத்தில் தீவிரவாதத்தை ஒருகாலமும் புகுத்தமுடியாது அது அங்கு வளராது. பாலில் மீன் வாழமுடியாது என்பது போல செத்துபோகும்

காஷ்மீர் சுற்றுலாமுதல் ஏகபட்ட விஷயங்களுக்கு புகழ்பெற்ற பூமி, ஆசீர்வதிக்கபட்ட மலைநாடு

இனி சர்வதேச முதலீடுகள் அங்கு கொட்டபடும் இன்னும் சில ஆண்டுகளில் அது மாபெரும் வளர்ச்சியினை எட்டும்

அன்று இச்சட்டம் நீக்கபட்டதனை காஷ்மீரிகளும் உணருவார்கள் உலகமும் உணரும்

அதுவரை கத்துபவன் கத்திகொண்டே இருக்கட்டும்

இந்தியா நல்லதைத்தான் அவர்களுக்கு செய்திருக்கின்றது

அவர் இருந்தால் முதல் ஆளாக இதை வரவேற்றிருப்பார்

காஷ்மீர் விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள் எல்லாம் அப்செட்

ஆப்பசைத்து வாலை மாட்டிகொண்ட குரங்குபோல, இல்லை வேறு எதுவோ மாட்டிகொண்ட ஆண்குரங்கு போல எல்லாம் அமைதி மயம்

ஒரு குரலும் அதை எதிர்க்கவுமில்லை ஆதரிக்கவுமில்லை

இப்பொழுது அந்த பெண் சிங்கத்தை நினைத்து பார்க்கின்றேன், அவர் இருந்தால் முதல் ஆளாக இதை வரவேற்றிருப்பார்

ஆம் ஜெயலலிதா இருந்திருந்தால் இன்று பெரும் வரவேற்பை கொடுத்து தமிழக தேசநலனை காட்டியிருப்பார்

ஆயிரம் சர்ச்சைகள் அவர்மேல் இருக்கட்டும், தேசாபிமானமிக்க தமிழக அரசியல்வாதியாக அவர் ஒருவர்தான் நம் தலைமுறையில் இருந்தார்

என்னதான் சொல்ல வர்றீயள் சைமன்?

“இப்போம் நீங்க என்னதான் சொல்ல வர்றீயள் சைமன்?

அண்ணே கவுரவமா 2009ல உங்கட நாட்டுல செத்து கிடந்தியள், இப்போ மட்டும் நீங்க உயிரோடு இருந்தால் இந்தியா உள்ளே புகுந்து தூக்கி கொண்டு டெல்லியில் தொங்கவிட்டுருக்கும் தெரியுமோ? எவ்வளவு அவமானமா போயிருக்கும்?

ஓம்

அதுக்காக நாம இனி காங்கிரஸ் திமுகவுக்கு நன்றி சொல்லோணும், கலைஞரும் சோனியாவும் உங்கட‌ மானத்தை காத்திருக்கிறவர்

ஒம் புரியுது.. அதை தமிழ்நாடு முழுக்க சொல்லுங்கோவன்”