மக்களவையில் அமித்ஷா ஆவேசம்

காஷ்மீரை மீட்க உயிரை கொடுக்கவும் தயார் – மக்களவையில் அமித்ஷா ஆவேசம்

கச்சதீவின் உரிமையினை மீட்க உயிர் எல்லாம் கொடுக்க வேண்டாம், வெட்டி போட்ட நகம் போதும் பிளீஸ்…

பா.ரஞ்சித் என்பவரை தேடி கொண்டிருப்பதாக சில தகவல்கள்

காஷ்மீரிய முன்னாள் மன்னரின் வாரிசுகள் பா.ரஞ்சித் என்பவரை தேடி கொண்டிருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன‌

எங்கள் நிலத்தை எல்லாம் இந்தியா பிடுங்கிகொண்டது என கதறி அழ அவர் ஒருவர்தான் தகுதியான நபர் என நேற்றுத்தான் உணர்ந்தார்களாம்

அவர்கள் வலி பா.ரஞ்சித் என்பவருக்குத்தான் பெரும் நிலத்தை ராஜராஜ சோழனிடம் இழந்தவர் என்ற முறையில் புரியுமாம்

விழிப்புள்ள குடிமக்களா எங்க சார் இருகாங்க?

ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்தை முடக்கிட்டு ஒரு மாநிலத்தை பிரிக்கறதா பில் கொண்டு வர்றீங்களே வெட்கமா இல்லையா? இதுபோல கேரளாவிலோ தமிழ்நாட்டிலோ செஞ்சிட முடியாது.. ஏன்னா விழிப்புள்ள குடிமக்கள் இங்க இருக்கறவங்க : டி.ஆர் பாலு

என்னது விழிப்புள்ள குடிமக்களா எங்க சார் இருகாங்க?

இந்தியாவிலே இரு அணுவுலை இங்கேதான் இருக்கு, ஹட்ரோ கார்பன் உட்பட ஏக சிக்கல்

ஈழ பிரச்சினை, காவேரி சிக்கல் உட்பட எவ்வளவோ உள்ள மாநிலத்தில் ஒரு சிக்கல் தீர்ந்திருக்கின்றதா?

ஒரு ஆற்றில் நீர் ஓடுகின்றதா?

மாநிலம் டாஸ்மாக்கில் இயங்குகின்றது , மலையினையும் காணோம் ஆற்று மணலையும் காணோம்

தமிழன் பாரிலும், தியேட்டரிலும் இன்னும் எதில் எல்லாமோ மூழ்கி கிடக்கின்றான்

அவனின் உரிமை கச்சதீவு வரை முடங்கி கிடக்கின்றது

இந்தியாவிலே மானமும் அறிவு கெட்ட குடிமகன் இங்கேதான் இருக்கின்றான்

அவன் ராமசந்திரன் ஜெயா என வாக்களித்தான் இப்பொழுது அஜித் விஜய் என புரண்டுகொண்டிருக்கின்றான்

அட அவ்வளவு ஏன்?

கலைஞர் கருணாநிதியினை மிக அடக்குமுறையுடன் கைது செய்த, ஏன் இதே டிஆர் பாலுவினை தூக்கி எறிந்துவிட்டு நள்ளிரவில் கலைஞரை கைது செய்தார் ஜெயா

என்னாயிற்று? மறுபடி ஜெயாதான் வென்றார்

எதில் இவர்கள் கிழித்தார்கள்?

கிட்டதட்ட 3 முறை டிஸ்மிஸ் செய்யபட்ட அரசு திமுக அரசு. என்ன கிழித்தெறிந்தார்கள்? கண்ணீரை துடைத்துவிட்டு தேர்தலுக்கு வந்தார்கள் அவ்வளவுதான்

சும்மா உதார் விடுவது ஒன்றும் திமுகவுக்கு புதிதல்ல, ஒரு அவசரத்தில் தமிழகத்தை முடக்கினால் கூட திமுக ஒரு புல்லையும் புடுங்காது

பழனிச்சாமி ஆட்சியினை விடவா தமிழ்நாட்டுக்கு பெரும் ஆபத்து வந்துவிட போகின்றது?

அதிலே ஒரு புல்லை கூட புடுங்கமுடியா திமுக என்ன கிழித்துவிட போகின்றதோ தெரியவில்லை

உனக்கு ஏன்யா எரியுது?

யோவ் அவனுக நாடு அவனுக காஷ்மீர், ஏதோ சலுகைய ரத்து பண்ணிட்டானுக, உனக்கு ஏன்யா எரியுது?

அவனுக அதோட விடமாட்டான், இனி ஆக்கிரமிப்பு காஷ்மீர்னு இங்க வந்து நோண்டுவான், எங்க பகுதியினை விட்டு வெளியே போன்னு கத்துவான் சண்டைக்கு வருவான். அதுக்குத்தான் முந்திட்டு ஒப்பாரி வைக்கிறேன்.

பதவிக்கு வந்தோமா ராமர் கோவிலை தோண்டுனோமா இல்லாம ஏன் இப்படி பண்றானுக??

திருச்சி எம்பி பற்றி தகவலே இல்லை

இந்த திருச்சி எம்பி பாராளுமன்றத்துக்குள் சென்றது பற்றியோ, அங்கு அமர்ந்த்திருப்பது பற்றியோ தகவலே இல்லை

ஏதும் பேசியதாகவும் தெரியவில்லை, இனி சிபிஐ வைத்துத்தான் மனிதரை தேடவேண்டும் போலிருகின்றது

காரணம் டெல்லிபக்கம் அனாதை பிணம் கிடந்தாலே பலருக்கு பலத்த சந்தேகம் வருகின்றது

தலைவி குஷ்பு திருச்சியில் இருந்து பாராளுமன்றம் சென்றிருந்தால் நிச்சயம் ஏதாவது உருப்படியாக பேசியிருப்பார்

காங்கிரஸ் திருச்சி மக்களுக்கு செய்த பெரும் துரோகம் தலைவி குஷ்புவுக்கு பதிலாக இந்த மொகரகட்டையினை நிறுத்தியது

இனவாதமும் குறுகிய அரசியல் வெறியும் அமெரிக்காவில் பற்றி எரியும் நேரமிது

அமெரிக்காவில் இதுவரை நடந்த துப்பாக்கிசூட்டுக்கும் இப்பொழுது நடந்திருக்கும் துப்பாக்கி சூட்டுக்கும் ஏற்பட்டிருக்கும் வித்தியாசம் பலத்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது

இவ்வளவு நாளும் அரை போதை,முழு போதை, காதலியுடன் தகறாது, காதலி இன்னொருவனுடன் ஓடி போன ஏமாற்றம் , அப்பன் ஆத்தா தகறாறு, மன அழுத்தம் என சுட்டுகொண்டிருந்தார்கள்

இந்த சூடு அப்படி அல்ல, அடுத்தநாட்டு மக்கள் மேல் குறிவைத்து நடத்தபட்டிருப்பது

டிரம்பின் வம்பான வசனங்களான அமெரிக்கா அமெரிக்கருக்கே மெக்ஸிக்கோவினரை விரட்டுவோம், ஆசியரை அடக்குவோம் எனும் ஸ்லோகம்படி நடந்தது

ஆம் சமீபத்தில் சுட்டதில் செத்த 31 பேரில் அதிகபடியானோர் மெக்ஸிகோ மக்கள்

இது பலரை அலறவைத்திருக்கின்றது , டிரம்பின் இனவாத தீ தேர்தல் வரவிருக்கும் நிலையில் பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிட்டதாக அமெர்க்கா பதறுகின்றது

ஓபாமா நேரடியாகவே விமர்சித்துவிட்டார் இன்னும் பலர் மறைமுகமாக விமர்சிக்கின்றனர்

இனவாதமும் குறுகிய அரசியல் வெறியும் அமெரிக்காவில் பற்றி எரியும் நேரமிது

மிகபெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய சம்பவம் அது

இதே நாளில் 2002ல் ஏர்வாடி மனநல காப்பகத்தில் தீவிபத்து ஏற்பட்டு அங்கு கட்டி வைக்கபட்டிருந்த 22 மனநோயாளிகள் இறந்தனர்

மிகபெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய சம்பவம் அது, அதன் பின் மனநோயாளிகளை சங்கிலியால் கட்ட கூடாது உட்பட பல விதிகள் நடைமுறைக்கு வந்தன‌

மனநோயாளிகளையும் ஓரளவு அனுசரிக்கும் பல விஷயங்கள் சட்ட பூர்வமாயின‌

அவர்கள் மேல் ஒரு அனுதாபமே பெரும்பாலோருக்கு வந்து அவர்களை சுற்றி திரிய அனுமதித்தனர்

அதன் விளைவுதான் பின்னாளில் “நாம் தமிழர்” என்றொரு கட்சி உருவாக காரணமாயிற்று

ஏர்வாடியில் கட்டிவைக்க வேண்டியதெல்லாம் “இனமீட்பு”, “இனவிடுதலை” என சொல்லி இப்பொழுது அதையும் மறந்து பனை மீட்பு, லேகியம் மீட்பு என சுற்றி திரிவது அதனால்தான்

நாம் தமிழர் கட்சி உருவாக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அந்த 22 பேருக்கும் அவர்கள் அஞ்சலி செலுத்தவே மாட்டார்கள்

அதற்கென்ன நாம் அஞ்சலி செலுத்தலாம்