அறிவு சாதுர்யம் என்பது அதுதான்

இந்த திமுகவினரை நினைத்தால் பரிதாபகமாகத்தான் இருக்கின்றது

பராசக்தி கலைஞரின் சொந்த கதையாம், பகுத்தறிவுக்காக பராசக்தி என வேண்டுமென்றே பெயரிட்டாராம், இப்படி எல்லாம் கத்தி திரிகின்றன அந்த கூட்டம்

உண்மையில் இது பெரும் திரிபு கடுமையான வரலாற்று புரட்டல்

தமிழ்சினிமாவினை எல்லிஸ் ஆர் டங்கன் தொடங்கிவைத்தபின் புராண படங்களே வந்தன, அதன் பின் தியாராஜ பாககதர் போன்றோர் பாடிகொண்டிருந்தனர்

புது கதைகள் தேவைபட்டபொழுது சினிமா முதலாளிகள் நாடகங்களை தேடி ஓடினர், நாடக கம்பெனிகள் அப்பொழுது அற்புதமான கதைகளை கொண்டிருந்தன‌

ரத்த கண்ணீர், தூக்குமேடை, பராசக்தி எல்லாம் அவ்வகையே

தேவி நாடககம்பெனியின் நாடகம் பராசக்தி, அதை எழுதியவர் பாலசுந்தரம். அந்த நாடகம் பல இடங்களில் வசூலை கொட்டியது

அந்த பராசக்தியினை படமாக்க முடிவுசெய்தார் மெய்யப்ப செட்டி, கிருஷ்ணன் பஞ்சு இயக்கினார்கள், நடிப்பதற்கு வேலூர் நாடக சபாவில் இருந்த விழுப்புரம் கணேசனை இழுத்துவந்தார்கள்

வசனம் எழுத முத்துவேலர் கருணாநிதியினை அமர்த்தினார்கள்

அவர் அதற்கு முன்பே 5 ஆண்டுகளாக எழுதிகொண்டிருந்தார், மந்திரி குமாரியும் மருதநாட்டு இளவரசியும் மணமகளும் அவருக்கு தனி இடம் கொடுத்திருந்தன‌

சும்மா சொல்ல கூடாது, அந்த வசனங்கள் சினிமா உலகுக்கே ஒரு ஈர்ப்பு, திருப்பம், கவனம், ஆச்சரியம் என எல்லாம் கொடுத்தது, முதலாளிகள் கொட்டி கொடுத்தார்கள்

அந்நிலையில்தான் பராசக்திக்கும் எழுதினார், படம் டூப்பர் சூப்பர்ஹிட்

ஆக பராசக்தி கதையோ, தலைப்போ பணமோ அவருடையது அல்ல, கதை வசனம் மட்டும் அவருடையது

விட்டால் இவர்கள் ஏவிம் செட்டியார், மார்டன் தியேட்டர் சுந்தரம் போன்றவர்களை சினிமாவுக்கு அழைத்ததே கலைஞர் என கிளம்பிவிடுவார்கள்

அவரிடம் ஒரு அற்புதமான திறமை உண்டு

எந்த சூழலுக்கும் ஏற்ற அருமையான வசனத்தை அந்த உணர்ச்சிக்கேற்க அவரால் எழுதமுடியும்

கோபமேற்ற, உணர்ச்சியூட்ட, காதலிக்க, வெறுக்க, அழவைக்க , சாகவைக்க, கொஞ்ச, கெஞ்ச என எல்லா உணர்ச்சிகளை வசனத்திலே அவரால் கொண்டுவரமுடியும்

அந்த அற்புதமான ஆற்றலை அரசியலுக்கும் வசனம் எழுதி வசபடுத்தினார், அட்டகாசமான வசனங்களை சினிமாவில் இருந்து அரசியலுக்கு மாற்றினார்

கடைசிவரை அதை அற்புதமாக எழுதிகொண்டு எல்லோரையும் ரசிக்க வைத்து அவரும் போய் சேர்ந்துவிட்டார்

எங்கெல்லாம் தனக்கான கதவுகள் அடைக்கபடுமோ அங்கெல்லாம் தமிழ், தமிழன், திராவிடன், பெரியார் தொண்டன் , இந்தியன், சூத்திரன் என எதையாவது இழுத்து அந்த கதவினை உடைக்கும் திறமை அவருக்கு இருந்தது

நிச்சயம் திருவாரூர் தங்கராசு , கொத்தமங்கலம் சுப்பு, சக்தி கிருஷ்ணசாமி போன்ற வசனகர்த்தா வரிசையில் வரவேண்டியவர்தான்

ஆனால் இவர் இடம் பார்த்து அரசியலுக்கு எழுதியதால் பெரும் இடம்பெற்று வரலாறாகிவிட்டார், அறிவு சாதுர்யம் என்பது அதுதான்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s