மிகசிறந்த நடிப்புக்கு நியாயமான விருது

நடிகையர் திலகம் படத்தினை பார்த்தவர்களுக்கு தெரியும் அந்த நடிப்புக்காக கீர்த்தி சுரேஷ் என்பவருக்கு விருது கொடுக்காவிட்டால்தான் ஆச்சரியம்

அந்த சாவித்திரியினை அப்படியே கண்முன் நிறுத்தியிருந்தார் கீர்த்தி

வெகுளித்தனம் , பிடிவாதம், வெற்றி, தோல்வி , துரோகத்தின் வலி என எல்லா உணர்ச்சிகளையும் கொட்டி கொடுத்திருந்தார் அவர்

குறிப்பாக அந்த துரோகத்தின் உச்சத்தில் அவர் கத்தும்பொழுடு கன்னமும் உதடும் அப்படி துடித்தல்லவா? அந்த காட்சிக்கு எத்தனை விருது கொடுத்தாலும் தகும்..

சர்க்கரை வியாதி என சொன்னபின்பும் தட்டு நிறைய லட்டை வைத்துகொண்டு நளினமாக ஒரு அலட்சிய உடல்மொழியோடு விழுங்கும் அந்த ஒற்றை காட்சி போதும் ஆஸ்காரே கொடுக்கலாம்

மிகசிறந்த நடிப்புக்கு நியாயமான விருது, வாழ்த்துக்கள்

நல்ல வேளையாக ரஜினியின் பேட்டை அஜித்தின் விசுவாசம் இந்த விஜய் சூர்யாவின் இம்சை படங்களுக்கு விருது ஏதுமில்லை என்ற வகையில் விருதுக்கான கவுரவம் காக்கபட்டிருக்கின்றது.

இத்திருநாடு தன்போக்கில் கம்பீரமாக நடை போடுகின்றது

பாகிஸ்தான் மிக கடுமையான எதிர்ப்புக்களையும் அதற்கான காரியங்களையும் மிக தீவிரமாக செய்கின்றது.

தூதரக விஷயங்களை நிறுத்தியது , ஏற்றுமதிகளை நிறுத்தியது என பல அழிச்சாட்டியங்களை செயதது

ஏற்றுமதி என்பது வேறொன்றுமல்ல பாகிஸ்தான் சிறிய நாடென்பதாலும் சிந்து பஞ்சாபில் அபரிமிதமான பருத்தி, கரும்பு விளைச்சல் உண்டென்பதாலும் சில ஏற்றுமதிகள் உண்டு , பாசுமதியும் உண்டு அவை முதல்தரமானவை

அந்த ஏற்றுமதியினை உலகு அறிய செய்துவிட்டு உலகம் அறியாமல் தீவிரவாதிகளையும் ஏற்பாடு செய்வார்கள் அதையும் நிறுத்தினால் நல்லது

இப்பொழுது இன்னொரு காரியத்தை செய்திருக்கின்றார்கள் அது கொஞ்சம் சிக்கலானது

பிரிவினையின் பொழுது பஞ்சாபிய ராஜஸ்தானிய குஜராத்திய எல்லையில் ஏராளமான குடும்ப உறவுகளை எல்லைகோடு பிரித்தது

உறவுகள் இருபக்கமும் நின்று இன்றளவும் வாகா, சியால்கோட் எல்லையில் கதறிகொண்டிருக்கும்

இந்தியாவில் யாருக்கும் வாய்காத சோகம் அவர்களுக்கு உண்டு

உறவினர் திருமணமோ சாவோ இல்லை விஷேசமோ எல்லாவற்றுக்கும் விசா, பாதுகாப்பு சோதனை என எல்லாம் கடக்கும் கொடிய வாழ்வு அவர்களுடையது

இந்த சபிக்கபட்ட சமூகம் பாகிஸ்தானில் சிறுபான்மை, இந்தியாவில் பெரும்பான்மை

குறிப்பாக லாகூரில் இந்த தொடர்புகள் மிக அதிகம்

இவர்களின் சிக்கலை புரிந்து கொண்ட இருநாட்டு அரசுகளும் போக்குவரத்துக்கு உதவி செய்தன, வாஜ்பாய் பஸ் விட்டது கூட அப்படித்தான்

சிக்கலான காலங்களில் இந்த போக்குவரத்தை நிறுத்தும் பாகிஸ்த்தான் இப்பொழுதும் செய்திருக்கின்றது, நிச்சயம் இது அநியாயம்

அவர்கள் திட்டம் என்னவென்றால் பாகிஸ்தானில் உறவுகளை கொண்ட இந்திய சமூகத்தார் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது

ஆனால் எக்காலமும் இந்தியாவின் பக்கம் இருக்கும் அந்த உறவுகள் இப்பொழுதும் தேசத்தின் பக்கமே நிற்கின்றன‌

பாகிஸ்தானின் நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாகும், ஆகட்டும். அவர்கள் இன்னும் படுபயங்கர எதிர்ப்பில் இறங்க கூடும்

ஆம், தங்களின் மிக முக்கிய துருப்பு சீட்டான காஷ்மீரில் இந்தியா அடித்து ஆடும்பொழுது அப்படித்தான் செய்வார்கள்
ஆச்சரியமில்லை

ஆனால் இந்தியாவின் நியாயத்தை புரிந்துகொண்ட உலகநாடுகள் தர்மபடி இந்தியாபக்கம் நிற்கின்றன, அமெரிக்கா ஒதுங்கிற்று

சீனா பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் பீஜிங் சென்றும் கூட வரவேற்கவில்லை அவர்களும் ஒதுங்குகின்றார்கள்

மிக எதிர்பார்க்கபட்ட நாடு இலங்கை, நிச்சயம் ஈழ சிக்கலுக்காக அவர்கள் பாகிஸ்தான் பக்கம் சரிவார்கள் என எதிர்பார்க்கபட்டது அவர்களும் அமைதி

தன் பக்கம் யாரும் இல்லாததை உணர்ந்துகொண்ட பாகிஸ்தான் ஒருவித விரக்தியில் திரிகின்றது, திரியட்டும்

தர்மங்களும் நியாங்களும் தார்மீகமும் இந்தியாவிடம் இருப்பதால் இத்திருநாடு தன்போக்கில் கம்பீரமாக நடை போடுகின்றது

வேரற்ற மரமாக வீழ்ந்து கிடக்கின்றான் அறை நண்பன்

வேரற்ற மரமாக வீழ்ந்து கிடக்கின்றான் அறை நண்பன், 8 ஆயிரம் வோட்டு வித்தியாசமெல்லாம் தோல்விக்கு சமமாம், 3 லட்சம் வோட்டு வித்தியாசத்தில் வென்றிருக்க வேண்டுமாம்

அவனின் தனி திமுக மூளை என்ன சொல்கின்றது என்றால், இந்தியாவே திரும்பிபார்க்கும் அளவும் 7 லட்சம் வோட்டு வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வென்றிருப்பாராம்

ஆனால் அப்படி உலகளவில் அந்த வெற்றி கவனிக்கபடுமானால் மோடி அரசுக்கான அதிருப்தி என உலகம் கருதுமாம்

இதனால் அஞ்சிய மோடி அமித்ஷா கோஷ்டி காஷ்மீரில் சவால் எடுத்து சில காரியங்களை செய்து இஸ்லாமியரை திமுகவிடமிருந்து பிரித்து இப்படி வாக்கு வித்தியாசம் குறைந்துவிட்டதாம்

ஏதோ தளபதியும் அவரின் சீமந்த புத்திரனின் தீர சாகசத்தால் இந்த வெற்றி கிடைத்ததாம்

இப்படி சொல்லிவிட்டு “கலைஞரய்யா நீர் இருந்தால் இப்படி நடக்குமாய்யா” என கண்க்களை துடைதது கொண்டிருக்கின்றான்

அவர் இருக்கும்பொழுது இதைவிட மோசமாக நிறைய நடந்திருக்கின்றது என சொல்ல ஆசைதான், ஆனால் சொல்ல இது நேரமில்லை

சொன்னால் இருவரில் ஏதாவது ஒரு உயிர் போவது நிச்சயம்

திமுகவுக்கான பெரும் எச்சரிக்கை

இந்த கதிர் ஆனந்த் என்பவரின் தோல்விகரமான வெற்றிக்கு என்ன காரணம் என ஆளாளுக்கு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன‌

விஷயம் ஒன்றுமில்லை , எப்படியும் வெல்ல போகின்றோம் வென்றாலும் அமைச்சரவையில் இடமில்லை மந்திரி பதவியில்லை என்ற ஒருவித விரக்தியில் தேர்தலை வெறும் ஈகோ பிரச்சினை ஒன்றில் மட்டுமே அணுகியிருக்கின்றது திமுக தரப்பு

பெரும் பணம் இறக்கவுமில்லை, கனிமொழி முதலான பெரும் நட்சத்திரங்களை இறக்கவுமில்லை

துரைமுருகனும் எளிதாக வென்றுவிடலாம் எனும் ஒருவித அநீத தன்னபிக்கையில் மல்லாக்க கிடந்ததாக சொல்கின்றது வேலூர் செய்திகள்

எது எப்படி ஆயினும் திமுகவின் இரண்டாம் கட்ட தலமை இப்படி தடுமாறியிருப்பது திமுகவுக்கான பெரும் எச்சரிக்கை

பருவமழை போற்றுதும் , பருவமழை போற்றுதும்

திராவிட பெரியார் , அம்பேத்கர் இன்னபிற புரட்சியாளார்கள் வழியில் பலர் போராடமலே வான்மழை பொத்துகொண்டு பெய்வது மகா ஆச்சரியம்

மிக கடுமையான மழை பெய்திருக்கின்றது தென்னகம் முழுக்க நல்ல நீர்வரத்து இருக்கின்றது, நிச்சயம் இது மகிழ்சியான விஷயம்

கோவை நீலகிரி பகுதியும் அதை அடுத்த வயநாடு பகுதியும் மிக கடுமையாக பாதிக்கபட்டிருக்கின்றன , சேத விவரங்கள் இன்னும் வரவில்லை

கேரளமும் கடும் பாதிப்பில் இருக்கின்றது, அவர்கள் மீண்டு வர வேண்டுவோம்

வயநாடு ராகுலின் தொகுதி என்பதால் இம்முறை தென்னக சோகம் மிக எளிதாக டெல்லியினை எட்டுகின்றது என்பது ஆறுதலான செய்தி, ராகுல் தொடர்ந்து தென்னகத்திலே இருக்கட்டும்

உலகே வெள்ளத்தில் அழியும் பொழுதுதான்ராதாபுரம் பக்கம் நியாயமான மழை பொழியும் என்பது பொது விதி

அப்படி அந்த வறண்ட பக்கமும் நல்ல மழை பெய்திருகின்றது , ஒரு வறண்ட நிலத்தின் விவசாயி எனும் வகையில் அது பெரும் ஆறுதல்

பருவமழை போற்றுதும் , பருவமழை போற்றுதும்

சத்தியமான வார்தைகள்

திமுகவும் தேசகபக்தியும் ஒருநாளும் ஒன்று சேராது : சுப்பிரமணிய சுவாமி

சாமி என்றைக்காவது ஒருநாள்தான் சரியாக பேசும், அந்த திருநாள் இன்று

சுவாமி சொல்லியிருப்பது சத்தியமான வார்தைகள்

அவர்களை அசைத்து பார்ப்பார் யாருமில்லை

அடேய் நிச்சயம் பழனிச்சாமி அரசு சரியில்லை என்றாலும் அவர்களால் ஆட்சியினை தக்க வைக்க முடிகின்றது , எந்த சவாலையும் அவர்களால் கடந்து செல்ல முடிகின்றது. அவர்களை அசைத்து பார்ப்பார் யாருமில்லை

உங்கள் பாஷையில் பழனிச்சாமி எல்லாம் ஒரு ஆளா என்பீர்களாயின், அந்த பழனிச்சாமியினையே காலிசெய்ய முடியாத திமுக தலமை எவ்வளவு பலகீனமானது என்பதை மட்டும் கவனியுங்கள்

அண்ணாவுக்கு பின்பு நெடுஞ்செழியன் அன்பழகன் என பெரும் வரிசை இருந்தது

கொல்லைபுறம் வழியாக தலமைக்கு வரமாட்டேன் என சொல்லிகொண்டிருந்தால் கலைஞர் இன்று திருகுவளை பக்கம் சாதாரண வசனகர்த்தாவாக துயில் கொண்டிருப்பார்

அரசியல் அறத்திற்கு அப்பாற்பட்டது, இதை புரிந்துகொள்ளுதல் உங்களுக்கு நலம்