அவனுகளும் அவனுக துக்கமும்..

ஆகஸ்ட் 15 துக்க தினம்

சரி அவர்களுக்கு மகிழ்வான நாள் அது?

காந்தி கொலை, கலவரத்தில் நெல்லை எரிந்தது சீனப்போரில் தோற்ற நாள், பாபர் மசூதி கலவர நாள், இந்திரா மற்றும் ராஜிவ் கொலை செய்யபட்ட நாள்

காமராஜர் தோற்றதும் செத்ததும் மட்டற்ற மகிழ்ச்சியான நாள்.

கூடுதலாக மும்பை , கோவை, புல்வாமா போன்ற இடங்களில் நடந்த கொடூர குண்டுவெடிப்புகள்

அவனுகளும் அவனுக துக்கமும்..

ராக்கெட் ஏவுதளத்தையும் அடித்து விரட்டியிருக்கின்றார்கள்

1967ல் விக்ரம் சாராபாய் , சதீஷ் தவான் போன்ற ஜாம்பவான்கள் இருந்த காலத்தில் ராக்கெட் ஏவுதளம் தமிழகத்தில் அமைய இருந்ததையும் அதை அண்ணாவும் அவர் அமைச்சரவையும் விரட்டி அடித்த கதையும் தற்போது வெளிவருகின்றன‌

விஷயத்தை கிளறியிருப்பது நம்பி நாராயணன் எனும் மூத்த விஞ்ஞானி எனும் வகையில் அது உண்மையாக இருக்கவே வாய்ப்பு அதிகம்

1967 காலத்தையும் கவனித்துபார்க்க வேண்டும்

அப்பொழுது இந்தியாவினை மகா வெறுப்புடன் பார்த்த நாடு அமெரிக்கா, 1965 பாகிஸ்தானிய போரில் இந்தியா வென்றதும் சோவியத் தலையீடும் அதற்கு பிடிக்கவில்லை

அந்த அமெரிக்காவின் ஆதரவு திமுக எனும் பிரிவினைவாத கட்சிக்கு உண்டு என்பது என்றுமே தியரி

ஆக ராக்கெட் ஏவுதளம் அமைக்க தோதான தமிழ்நாட்டில் இருந்து அந்நிய சக்திகளின் கைகூலியாக அதை விரட்டி அடித்திருக்கின்றது திமுக‌

பின்பு இதே அண்ணாதுரைக்கு அமெரிக்க சிகிச்சை புற்றுநோய்க்காக உடனே கிடைத்தது

எல்லாம் கூட்டி கழித்து பாருங்கள் நாம் முன்பே சொன்னதுதான்

திராவிட, திமுக போன்ற பிரிவினைவாத அழிச்சாட்டிய கட்சிகளின் வேர் இந்தியா அல்ல, அல்லவே அல்ல‌

எங்கிருந்தோ வரும் கட்டளைக்கு இங்கு குதியோ குதி என குதிப்பார்கள் அன்று ஈழத்தை சுடுகாட்டாக்கியது போல, இன்று காஷ்மீருக்கு கிளம்பியிருப்பது போல
அன்று ராக்கெட் ஏவுதளத்தையும் அடித்து விரட்டியிருக்கின்றார்கள்

கவனிக்கதக்க விருது

சுதந்திர தின விழாவில் அபினந்தனுக்கு விருது கொடுத்தது வரவேற்கதக்க விஷயம், இன்னொரு கவனிக்கதக்க விருது ஒன்று உண்டு

அது சாதுர்யமான செயல்பாட்டுக்கு கொடுக்கபடும் யுத் சேவா விருது, பெற்றிருப்பவர் மிந்தி அகர்வால் எனும் பெண் அதிகாரி

அம்மணி என்ன செய்தார்?

கடந்த பிப்ரவரி 27ல் அவர்தான் பாகிஸ்தான் இந்தியாமேல் தாக்குதல் நடத்த வருவதை அவதானித்திருக்கின்றார்,

அதாவது அன்று காலை பாகிஸ்தான் வான்பகுதி மூடல் எனும் அறிவிப்பு அவருக்குள் பொறியினை தட்டியிருக்கின்றது

சட்டென்று பயணிகள் விமானம் இயக்க தடை என பாகிஸ்தான் சொன்னபின் உஷாரன அந்த அதிகாரி இந்திய விமானபடையினை எச்சரித்துவிட்டு ரேடார் முன் அமர்ந்தார்

அதில்தான் பாகிஸ்தான் எப் 16 உட்பட 24 விமானங்கள் வருவது தெரிந்தது, அம்மணி விடுவாரா?

அம்மணி அந்த பதற்றத்திலும் சரியாக கவனித்திருக்கின்றார், காரணம் அந்த விமானங்கள் மிக வேகமாக வந்துவிடும்

வேறு முகாம்களில் இருந்து இந்திய‌ விமானம் கிளம்புமுன் பாகிஸ்தான் விமானம் தாக்கிவிட்டு திரும்பிவிடும்

இதனால்தான் எல்லைக்கு அருகில் இருந்த அந்த முகாமுக்கு கட்டளை அனுப்பியிருக்கின்றார் அந்த பெண் அதிகாரி, அட்டகாசமான விஷயம் அது

அதில்தான் இந்த மிக் ரக விமானங்கள் கிளம்பி சென்று அவர்களை அடித்துவிரட்டி வீழ்த்தியது, அந்த 6மிக் விமானங்கள் ஒன்றில்தான் அபினந்தன் இருந்தார்

பாகிஸ்தானும் குழம்பியிருக்கின்றது, நம் எப்16ஐ எதிர்க்க சுகோய் ரகமும் மிராஜும் வரும் என எதிர்பார்த்து சென்ற பாகிஸ்தான் திடீரென மிக் ரகம் வந்ததும் குழம்பிற்று

எதிர்ப்பு இருக்காது, தாக்கிவிட்டு ஓடிவிடலாம் என வந்த பாகிஸ்தான் விமானங்கள் இந்த மிக் விமானங்களை கண்ட பின் திரும்பி சென்றது,

அதில் ஒன்றை விரட்டி சுட்டுத்தான் பிடிபட்டார் அபிநந்தன்

நிச்சயம் இந்த அதிகாரி செய்தது மகா நுட்பமான சாதுர்யமான நகர்வு இது, இந்திரா காந்தி வாழ்ந்த பூமி அல்லவா?

அம்மணி பிளையிங்க் கண்ட்ரோலர் பதவியில் இருக்கின்றார் என்கின்றார்கள்

பார்த்தீர்களா?

அன்றைய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலாவும் ஒரு பெண், அவர் ஆட்சியில் சாதித்திருக்கும் அதிகாரியும் ஒரு பெண்

இதைவிட பெண்களுக்கு பாஜக அரசு எப்படி சாதிக்க வாய்ப்பு கொடுக்க முடியும்

நமக்கெல்லாம் அது வேணாம்..

யோவ், ஆப்கானிஸ்தானெல்லாம் கட்டி அழ முடியாதென அமெரிக்காவும் ரஷ்யாவுமே தலைதெறிக்க ஓடிவிட்டன, நமக்கெல்லாம் அது வேணாம்..

தாய்லாந்து எனும் உல்லாசபுரியினை நீக்கிவிட்ட உன்னை வன்மையாக கண்டிக்கின்றோம்

தாய்லாந்தை இணைப்போம், தடையற்ற இன்பம் காண்போம்

உலக காற்று இந்தியாவுக்கே சாதகமாக வீசுகின்றது

இங்கு என்னதான் காஷ்மீர.. என சிலர் ஒப்பாரி வைத்தாலும் உலக காற்று இந்தியாவுக்கே சாதகமாக வீசுகின்றது

ஆம் பாகிஸ்தான் விரக்தியின் உச்சத்துக்கு போய்விட்டது, நேற்று அவர்களின் சுதந்திரதிருநாள் வாழ்த்து மொகாரி ராகம் ஆகிவிட்டது

சீனா ஏதாவது உருப்படியாக செய்யும் என அது மிக எதிர்பார்த்த நிலையில் இந்திய அமைச்சர் ஜெய்சங்கரின் பயணத்துக்கு பின் சீனா காட்டும் அமைதி பாகிஸ்தானுக்கு பலத்த அதிர்ச்சி

வழக்கமாக சுதந்திரநாள் என்றால் இந்தியாவினை பிளப்போம், காஷ்மீரை மீட்போம், இஸ்லாமியரை காப்போம் என்றெல்லாம் கோஷமிடும் பாகிஸ்தானிய உயர்பீடம் நேற்று மூக்கை சீந்தி அழுதுகொண்டிருந்தது

பாகிஸ்தானின் வெளியுறவுதுறை அமைச்சர் தன் மக்களிடம் உடைந்த குரலில் சொன்ன வார்த்தைகள் இவை

“நாம் என்னதான் இஸ்லாமுக்காக வாழ்ந்தாலும் இஸ்லாமிய சகோதரர்களை வாழ வைக்க நினைத்தாலும் நமது சகோதர நாடுகள் நம்மோடு இல்லை

அரபு நாடுகள் அவர்கள் பக்கமே இருக்கின்றார்கள், இன்னும் பல இஸ்லாமிய நாடுகளும் அந்த பக்கமே சரிகின்றார்கள்

உலக வல்லரசுகள் நமக்கும் நம் நியாயத்துக்கும் துரோகம் செய்கின்றன, பெருமை மிகு பாகிஸ்தானின் நியாயத்தை சொல்ல யாருமில்லை

நாம் ஆகஸ்ட் 6ம் தேதி ஐநாவினை கூட்ட சொல்லி கொடுத்த அவசர கடிதத்தை திறந்து கூட அச்சபை பார்க்கவில்லை எனில் நம் நிலையினை பாகிஸ்தான் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்”

ஆக பாகிஸ்தான் மக்களிடமே அந்நாட்டு மேலிடம் இப்படி அழுதால் என்ன அர்த்தம்?

இனி காஷ்மீரை மறந்துவிட்டு வேறு வேலையினை பார்க்கலாம் மக்களே என கதறுகின்றார்கள் என பொருள்

உலக அரங்கில் இந்தியா பெரும் ஆதரவோடு இந்திய‌ காஷ்மீர் விவகாரத்தை முடித்து பெரும் வெற்றிபெற்றாகிவிட்டது, ஆக்கிரமிப்பு காஷ்மீர் கதை என்னாகும் என்பது இனிதான் தெரியும்

பாகிஸ்தான் அமைச்சருக்கு நாம் சொல்வது ஒன்றுதான்

ஏ சல்மான் குரோஷி எனும் பாகிஸ்தான் அமைச்சரே, உங்கள் பக்கம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா அரபு நாடுகள் இன்னும் ஐரோப்பிய நாடுகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஒரு வழி இருக்கின்றது

காதை அருகில் கொண்டுவாருங்கள் சொல்கின்றேன்

எங்கள் ஊரில் திமுக, மதிமுக, விசிக இன்னும் ஏகபட்ட கோஷ்டிகள் காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசை எதிர்த்து மல்லுகட்டுகின்றன, நீங்கள் ஏன் அவர்களை அணுக கூடாது

மு.க ஸ்டாலின் வைகோ திருமாவளவன் எல்லாம் யார் தெரியுமா?

ரஷ்ய புரட்சி, கியூப புரட்சி , சீன புரட்சிகளை நடத்தி கொடுத்துவிட்டு மாறுவேடத்தில் இங்கு பதுங்கியிருப்பவர்கள் அது யாருக்கும் தெரியாது

நீவிர் அவர்களை மட்டும் அரவணையுங்கள், காஷ்மீர் என்ன? மொத்த இந்தியாவினையும் உங்களுக்கு மீட்டு தந்து அகண்ட பாகிஸ்தான் அமைப்பார்கள்

இப்போதைக்கு உங்களுக்கும் அவர்களை விட்டால் யாருமில்லை, அவர்களுக்கும் உங்களை விட்டால் வழியுமில்லை

சொல்வதை சொல்லிவிட்டோம், இனி உங்கள் பாடு”

அட இவனுக ஒருமாதிரி ஆசாமிகள் போல.

உலகமே புலிகளை தடை செய்து மொத்தமாக சேர்ந்து அவர்களை மண்டையில் போட்ட காலத்தில் தமிழகத்தில் சிலதுகள் ஒப்பாரி வைத்துகொண்டிருந்தன‌

உலகம் அந்த கோஷ்டிகளை ஒருமாதிரி பார்த்தது, “என்னடா இது? உலகுக்கே ஒரு இயக்கம் பிடிக்கவில்லை என்றால் இவர்களுக்கு மட்டும் எப்படி பிடிக்கின்றது?” என விசித்திரமாக பார்த்து கடந்தது

இப்பொழுது காஷ்மீர் விவகாரத்தில் உலகமே இந்தியா பக்கம் நிற்கும் பொழுது தமிழகத்தில் சில குரல்கள் கேட்க “அட இவனுக ஒருமாதிரி ஆசாமிகள் போல..” என மறுபடியும் பார்த்து அசட்டு சிரிப்புடன் கடந்து செல்கின்றது உலகம்

திருப்பத்தூரில் நடந்திருக்கின்றது அந்த வினோதம்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடந்திருக்கின்றது அந்த வினோதம்

அந்த குடும்பத்தில் ஒரு நாய் வளர்த்திருக்கின்றார்கள், குறிப்பாக அந்த குடும்பத்து தலைவி அந்த நாயினை பாசமாக வளர்த்திருக்கின்றார்.

தொழில் நஷ்டம் காரணமாக ஏற்பட்ட கடனில் குடும்பத்தை தவிக்கவிட்டு ஓடிவிட்டான் அந்த குடும்ப தலைவன்.

மிகுந்த கடனும் அவமானமும் சூழ ஒருகட்டத்தில் தற்கொலை செய்கின்றாள் அந்த பெண். வீழ்ந்து கிடக்கும் அவள் அருகில் காவல் இருக்கின்றது அவள் வளர்த்த நாய்

அவள் சடலத்தின் அருகே யார் சென்றாலும் குரைகின்றது, கடிக்க வருகின்றது , அவர்களை விரட்டிவிட்டு அவள் காலடியில் படுத்துகொள்கின்றது

காவலர்கூட நெருங்கமுடியா அளவு ஆக்ரோஷத்தை அது காட்டுகின்றது, பின் அவளின் மகளை வைத்து மிகுந்த சிரமத்துக்கு பின் அதை கட்டிவிட்டு சடலத்தை எடுக்கின்றார்கள்

சடலம் எடுக்கபட்ட பின் கொஞ்சமும் சலனமின்றி வெறித்து படுத்திருக்கின்றது அந்த நாய்

கவனியுங்கள், 6 அறிவு கொண்ட அவளின் கணவன் , அவளின் முழு வாழ்வுக்கும் பொறுப்பான கணவன் அவளை விட்டு ஓடிவிட்டான்

சோறுவைத்த நன்றிக்காக‌ அவளின் சடலத்துக்கு கூட காவல் இருந்திருக்கின்றது அந்த நாய்

நிச்சயம் அந்த கணவன் இந்த நாயினை விட உயர்ந்தவன் அல்ல.

பாசமும் நன்றியும் மனிதனை விட விலங்குகளுக்கு அதிகம், அவை அப்படியே இருக்கட்டும் என்பதால்தான் கடவுள் அவைகளை பணம் சம்பாதிக்கும்படி அனுமதிக்கவில்லை

சுதந்திரத்தை எப்படி உலகிற்கு அறிவிக்க போகின்றீர்கள்?

சுதந்திரத்தை எப்படி உலகிற்கு அறிவிக்க போகின்றீர்கள்? உங்கள் நாட்டின் சம்பிரதாயம் என்ன என நேருவிடம் கேட்டார் மவுண்ட்பேட்டன்

அதாவது சம்பிரதாய சடங்குகள் ஏதும் உண்டா என்பது மவுண்ட்பேட்டனின் கேள்வி, நேருவிடம் அதற்கு பதில் இல்லை அவர் ஆத்திகர்

ஆத்திகராயினும் பெரும்பான்மை மக்களின் மனம் புண்படாவண்ணம் ஏதும் செய்தாக வேண்டும், காந்தி வேறு ஒரு மாதிரி என எண்ணிய நேரு ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டார்

ராஜாஜி தேர்ந்த சாஸ்திர ஞானி என்பதால் சட்டென சொன்னார், தமிழக வழக்கபடி ஆட்சிமாற்றத்தின் பொழுது ராஜகுரு செங்கோலை புதிய அரசனிடம் கொடுப்பது வழக்கம் அப்படி செய்துவிடலாம் என்றார்

ஆனால் ராஜகுருவுக்கு யாரை பிடிப்பது என்ற கேள்விக்கு அன்று ஆதீனங்களில் மிக பெரும் ஆதீனமான திருவாடுதுறை சன்னிதானத்தை தொடர்பு கொண்டார் ராஜாஜி

அந்த ஆதீனமும் செங்கோல் தயாரித்து இளையசன்னிதானம் பண்டாரசுவாமிகளும் இன்னும் ஓதுவார் மூவரோடும் டெல்லிக்கு அனுப்பியது

அந்த வைபவத்தில் மவுண்ட்பேட்டனிடம் இருந்து செங்கோலை பெற்றார் தமிழத்து திருவாடுதுறை ஆதீனத்தின் இளைய சன்னிதானம் பண்டாரசுவாமிகள்

பின் அதற்கு தீர்த்தம் தெளித்தார், பின்பு அந்த திருச்சிறம்பல பாடல் பாடபட்டது

“வேயுறு தோளிபங்கன்…” என தொடங்கி 11 பாடல் பாடபட்டு “ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே” என முடியும் அந்த திருச்சிறம்பல பாடல் பாடபட்டது.

அந்த “அரசாள்வர் ஆணை நமதே” என்ற வரி முடிந்ததும் செங்கோல் ஆதீனத்தால் நேருவிடம் ஒப்படைக்கபட்டது

சுதந்திர போராட்டத்தில் மட்டுமல்ல, சுதந்திரம் பெறும்பொழுதும் தமிழகத்தாரின் பங்கே பிரதானமாக இருந்தது

இந்த இடத்தில் ராஜாஜி பார்ப்பான்,நேரு பார்ப்பான் என கிளம்பினால் அவர்களுக்கு சொல்லி கொள்வது ஒன்றுதான்

திருவாடுதுறை ஆதீனம் பார்ப்பன மடமும் கிடையாது, அந்த பண்டாரசுவாமிகள் பார்ப்பணனும் இல்லை

மதநெறியில் மூத்தவர்கள் என்ற முறையிலும், அனுதினமும் வழிபாடு செய்து வாழும் தவமுனிவர்கள் என்ற வகையிலே அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டார்கள்

இன்னொன்றை கவனியுங்கள்

நாத்திகராயினும் இந்நாட்டு அரசியல் மாற்றம் இந்து நெறியில் நிகழ நேரு விரும்பியிருக்கின்றார்

ஆக நேரு எது செய்தாலும் சரி, இதுவே பாஜக கோஷ்டி செய்திருந்தால் அய்யகோ மதவாதம் பார்ப்பானியம் என கிளம்பியிருப்பார்கள்

அதை விடுங்கள்

இந்திய வரலாற்றின் மகா முக்கியமான தருணத்தில் மிக முக்கிய நிகழ்வினை ஆற்றியது தமிழகத்தார் என்பதும் இந்த மாபெரும் நாட்டின் ஆட்சிமாற்றத்தை செங்கோல் பிடித்து நடத்தி கொடுத்தது தமிழக திருவாடுதுறை ஆதீனம் என்பதும் ஒவ்வொரு தமிழனும் பெருமைபட வேண்டிய விஷயங்கள்…

(செங்கோலை சுவாமி நேருவிடம் கொடுத்தது இன்றும் படமாக ஆதீனத்தில் உண்டு

தொப்பி இல்லாத நேருவினை பார்த்து அய்யய்யோ இது ராஜாஜி என கத்தினால் அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது)

உங்கள் அன்பிற்கும் தேடலுக்கும் நன்றி…

அந்த ஐடி தற்காலிகமாக முடக்கபட்டாலும் இந்த ஐடிக்கு வந்துவிட்டோம் என்றவுடன் ஏராளமான அன்பர்கள் ஓடிவந்து சேருகின்றார்கள்

அனுதினமும் இவ்வளவுபேர் நம்மை நோக்கிகொண்டுதான் இருந்திருக்கின்றார்கள் என்பதும், நம்மை தேடிக்கொண்டிருந்திருக்கின்றார்கள் என்பதும் இப்பொழுதுதான் புரிகின்றது

“அந்த ஐடியினை முடக்கிய சண்டாளனே, நீ வாழ்க…”, உன்னால்தான் பல விஷயங்கள் தெரிகின்றன‌

நிச்சயம் வெட்டியாக எழுதவில்லை, ஏராளமானோரின் அபிமானத்தை பெற்றிருக்கின்றோம், நம்மை நம்பி பின் தொடர்கின்றார்கள் என்பதே மிக்க மகிழ்ச்சியான நெகிழ்ச்சியான விஷயம்

உங்கள் அன்பிற்கும் தேடலுக்கும் நன்றி…

வாழ்க தலைவி குஷ்பு.. வளர்க அவரின் புகழ்..

உம்மை பெற்றதில் பெருமை கொள்கின்றது நாடு

என்ன சொல்லுங்கள், அன்று தேர்தலுக்கு ஆதரவு எனும்பொழுதும் மூப்பனார் எனும் தேசியவாதியினைத்தான் அவர் ஆதரித்தார்

எந்த குறுகிய மாநில கட்சியினையும் மகா குறுகிய பிரிவினை சித்தாந்த கட்சிபக்கம் அவர் தலை வைத்தும் படுக்கவில்லை

இன்றும் இந்தியனாக தன் கருத்தை சொன்னார், சர்ச்சைகள் வந்தபொழுதும் நல்ல இந்தியனாக அதில் தொடர்ந்து நிற்கின்றார்

தேசாபிமானியும் மிக சிறந்த உறுதியினை நாட்டுபற்றில் காட்டும் ரஜினிகாந்த் என்பவரை வாழ்த்துகின்றோம்

உம்மை பெற்றதில் பெருமை கொள்கின்றது நாடு..