வாய் சவுடாலும், சினிமாவுமே அதன் பலம்..

தொடக்கத்தில் இருந்தே திமுக என்பது சலம்பல் கட்சி, காலத்திற்கும் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் சுத்தமாக பொருந்தாத வாதங்களை வைத்து வெட்டி அரசியல் செய்தது

வாய் சவுடாலும், சினிமாவுமே அதன் பலம்.. அதை வைத்து போராட்டங்களை தூண்டி ஏதோ செய்துகொண்டிருந்தது

அந்த அரசியலுக்கு பெரியாரிசம் திராவிடம் என சொல்லிகொண்டும் இருந்தது

பெரியார் இருந்தபொழுதே அவரை பிரிந்து அரசியல் நடத்திய திமுக பின்பற்றியது பெரியார் கொள்கை ஆம் சத்தியமாக அதுதான், ஏதாவது புரிகின்றதா? புரியாது.

ஒரு பிரச்சினைக்கும் அது முடிவு சொன்ன கட்சியும் அல்ல, தீர்த்து வைத்த கட்சியும் அல்ல‌

கிடைக்கும் சிக்கலில் எல்லாம் ஒப்பாரி வைத்தே வளர்ந்த கட்சி, சரி ஆட்சியில் அந்த சிக்கலை தீர்த்தார்களா என்றால் ஒருகாலமும் இல்லை

இவர்களின் வளர்ச்சியும் நிலைத்தன்மைக்கும் நேரு காட்டிய பெருந்தன்மையும் தமிழகத்தில் குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜர் காட்டிய பெருந்தன்மையுமே காரணம்

அன்றே இவர்களை ஒடுக்கி அடக்கி இருக்க முடியும் ஆனால் பெருந்தன்மை மிக்க நேருவும், காமராஜரரும் அதை செய்யவில்லை

இவர்களை மொத்தமாக முடக்க பார்த்த இந்திரா, ஏக சிக்கல்களில் சிக்கினார் அதற்கு காரணம் சஞ்சய் காந்தி

இன்னொன்று அவர்களுக்கு ராம்சந்தர் எனும் சரியான தலைவலியினை உருவாக்கிவிட்டு ஓரமாக இருந்து ரசித்தார் இந்திரா..

ஆக நேருவின் பெருந்தன்மையாலும், சஞ்சய் இந்திராவுக்கு கொடுத்த தலைவலியாலும் இங்கு ஏதோ மோவோ, லெனின் இயக்கம் போல திரிந்ததது திமுக‌

பலவீனமான காங்கிரஸின் காலங்களிலும், அந்த பலவீனத்தில் மாநில கட்சிகள் ஆட்டம் போட்ட காலத்திலும் மந்தையின் கிடா போல கம்பீரமாக அது சுற்றி திரிந்தது

சவால் என அதற்கு எதுவுமில்லை

வரலாற்றிலே முதல் தடவையாக அது இறுக்கமும் பலமும் வாய்ந்த பாஜகவினை சந்திக்கின்றது

பழைய ஜாம்பவான்களும் இல்லா நிலையில் ஸ்டாலின், கனிமொழி ,சமீபத்தில் வாங்கிகட்டிய சரவணன் போன்றோரோடு அல்லாடுகின்றது

பழைய வழக்கு ஒன்றை தட்டினாலே காலத்துக்கும் சிறையில் அடைபடும் நிலையில் இருக்கும் வைகோவினை எல்லாம் திமுக களமிறக்கியிருப்பது சரியல்ல‌

(ஒருவேளை வைகோவினை இதைவிட பழிவாங்கமுடியாத திட்டமாக கூட இருக்கலாம்…)

முதல் முறையாக கடும் இறுக்கமான எதிரியினை சந்திக்கும் திமுக ஒரு மாதிரி ஆடுகின்றது, அதை பார்க்க பரிதாபமாகத்தான் இருக்கின்றது

நிச்சயம் பாஜகவின் இரும்பு பலம் முன்னாலும் அவர்கள் ஒருவித இறுக்கத்தோடு நகரும் நகர்வு முன்னாலும் திமுக தாக்குபிடிப்பது சிரமம்

மொரார்ஜி தேசாய் இந்திராவினை எதிர்க்க மாநில அளவில் வலுவான கட்சிகள் இருந்தன, அன்றைய திமுகவுக்கு அது அனுகூலமானது

இன்றைய திமுகவுக்கு அப்படி யாருமில்லை, கம்யூனிஸ்டுகளும் காலி

இஸ்லாமிய வோட்டு நமக்கு எக்காலமும் இல்லை என்றே காஷ்மீரில் ஆடிதீர்த்திருக்கின்றது பாஜக, ஒரு வகையில் அவர்களின் பலம் அது

அதே பாய்ச்சலை தமிழகத்திலும் அவர்கள் காட்டகூடும், இங்கும் பாஜகவுக்கு ஒரு மண்ணுமில்லை

இங்கு சில விஷயங்களை ஏவினால் பாஜக இழக்க ஒன்றுமில்லை ஆனால் எதிரிகளை எவ்வளவும் அடிக்கலாம் என்பது பாஜகவின் பெரும் பலம்

இதுவரை காணாத சவாலை சந்திக்கும் திமுக மனதிற்குள் ஒரு காலத்தில் எந்த நேரு, இந்திரா, காமராஜரை எதிர்த்தார்களோ அவர்களுக்கு மனமார நன்றி சொல்லிவிட்டு அடுத்தகட்டத்துக்கு நகர்கின்றது

என்ன கட்டம்?

அந்த இம்சை அரசன் வடிவேலு, வல்லவராயனோடு மோதிய காட்சிதான்

வெள்ளைகொடி ஏந்தி “வல்லவராயே நாங்கள் வாழவேண்டுமய்யா…….” என்ற அந்த காட்சிதான்

பயப்படாத கோவாலு

பயப்படாத கோவாலு,

அப்படி ஒரு ஆட்சி வந்தாலும் விபச்சார தடுப்பு இலாக்கா உங்களுக்குத்தான் என்கின்றார்கள்.

நாட்டின் மொத்த விபச்சார் கும்பல் தகவலும் அவற்றின் இயக்கமும் உங்கள் ஒருவருக்குத்தான் தெரியுமாம்,

அதனால் தேச நலனுக்காக உங்களை விபச்சார தடுப்பு பிரிவில் பயன்படுத்தும் திட்டமும் உண்டாம்..

இலுமினாட்டி இம்சைகள்

இலுமினாட்டி இம்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை, உலகமே அதனை கடந்து வந்து 100 வருடம் ஆயிற்று , தமிழத்தில் இப்பொழுதுதான் சலசலப்பு , அவ்வளவு முன்னேற்றமான தமிழகம் இது.

இந்த இலுமினாட்டி என்றால் என்ன?

அன்றைய ஐரோப்பா மக்களை சிந்திக்கவோ, யோசிக்கவோ விடவில்லை. பிரபுக்கள் ஒரு பக்கமும், அதற்கு மேல் கிறிஸ்துவ மதவாதமும் மக்களை அடக்கி வைத்தன, அவர்களை சிந்திக்கவே விடவில்லை.

இந்நிலையில்தான் அவர்களுக்கு அறிவு ஒளி கொடுக்க சிலர் ரகசியமாக இயங்கினார்கள், லத்தீன் மொழியில் இலுமினாட்டி (Illuminate) என்றால் ஒளிகொடுத்தல் என்று பொருள், ஆங்கிலத்தில் அது (Enlighten) என வரும்

புரட்சி என்பதே அர்த்தமில்லாமல் கோமாளிகளுக்கு எல்லாம் புரட்சி தலைவன் என பட்டமழிக்கும் தமிழகத்தில் , அறிவு இயக்கம் என சொல்லபடும் இலுமினாட்டி , மிக மர்மமான கும்பலானதில் என்ன ஆச்சரியம்?

உண்மையில் இலுமினாட்டி என்றால் பகுத்தறிவு இயக்கம் என பொருள், அப்படியானால் இன்றைய திமுகதான் உண்மையான இலுமினாட்டி,

இதனை சொன்னால் ஒப்புகொள்வார்களா? மாட்டார்கள், விடுங்கள் போகட்டும். இலுமினாட்டி வரலாறு இப்படி வருகின்றது

அன்றைய ஐரோப்பா இன்றைய அதிமுக போல் திருத்தமுடியாத, அறிவில்லா மக்களால் நிரம்பியிருந்தது, அவர்களுக்கு அறிவு போதித்தவர்கள் அன்றைய இலுமினாட்டிகள்

இவர்கள் பகிரங்கமாக இயங்க முடியாட்து, மிக ரகசியமாக இயங்கினார்கள், இவர்களால் மக்கள் அறிவுபெறுவது கண்டு இந்த இயக்கத்தவர்ர் மொத்தமாக ஒழிக்கபட்டதாக பிரான்ஸ் அறிவித்தது

ஆனால் அதற்கு பின்னால்தான் பிரெஞ்ச் புரட்சி ஏற்பட்டு, மதகுருமார்களும், அரசர்களும் ஒழிக்கபட்டனர். இது கண்டு அண்டை நாடுகள் எல்லாம் இலுமினாட்டிகளை அபாயகரமானவர்கள், ரகசியமானவர்கள் என தேடி பிடித்து அழித்தன‌

பிரென்ஞ் புரட்சியும் நெப்போலியன் கையில் முடியாட்சியாகி இலக்கினை தவற விட்டது, ஆனால் பின்னாளைய ரஷ்ய புரட்சிக்கு அதுதான் முன்னோடி

ரஷ்ய கதை இருக்கட்டும், பிரெஞ்ச் புரட்சிக்கு பின்னர், மக்களுக்கு சிந்திக்க சொல்லும், அரசுக்கு எதிரான கருத்தை சொல்லும் எல்லோரும் இலுமினாட்டிகள் ஆனார்கள்,

ஐரோப்பிய அரசுகளுக்கு எதிரானவர்கள் எல்லாம் இலுமினாட்டிகள், அமெரிக்காவில் மக்களாட்சி மலர்ந்தபின் அது ஐரோப்பிய முடியரசுகளுக்கு ஆபத்தாக அமைந்தது, அதனால் அரசர்களுக்கு எதிராக கருத்துக்களை சொல்லும் எல்லோரும் இலுமினாட்டி என முத்திரை குத்தபட்டார்கள்

இது ஐரோப்பாவில் பேஷன் ஆகிபோனது..

பின் அந்த கதை அப்படியே தொடர்ந்து, மர்ம நடவடிக்கைகள் எல்லாம் இலுமினாட்டி பெயரில் போடபட்டது

பின் யூதர்களை இலுமினாட்டி என்றார்கள் , அதனை தொடங்கி வைத்தது ஜெர்மனியின் நாசிக்கள், ரஷ்ய புரட்சி கூட யூத சதி என சொல்லிகொண்டிருந்த கூட்டம் அது. உண்மையில் யூதர்கள் அன்று அமெரிக்காவினை வளைத்து கொண்டிருந்தார்கள்

ஆனால் ரஷ்ய கம்யூனிஸ்டுகள் யூத உருவாக்கம், அவர்களை அழிக்கவேண்டும் என நாசிக்கள் இல்லாத கட்டு கதை எல்லாம் கட்டி, ரஷ்யா மீது படையெடுத்து அழிந்தும் போனார்கள்

நாசிக்கள் கட்டிவிட்ட கதை இன்னும் ஓயவில்லை..

இன்று உண்மையில் யூத இனம் பொருளாதார பலம் உள்ளது என்றாலும், தன் நாட்டுக்கு எதிரான சக்திகளில்தான் தலையிடும், ஜெருசலேமை காப்பாற்றுதல், இஸ்ரேலை பாதுகாத்தல் என அதன் பயணமே வேறு

இம்மாதிரி உலகம் அறிவு பெற வேண்டும் என்றோ, உலகம் குழம்ப வேண்டும் என்றோ, உலகை ஆள வேண்டும் என்றோ அது நினைக்காது, என் இஸ்ரேல் என் உரிமை என்பது அதன் நிலைப்பாடு, அதில் யாரும் குறுக்கே வந்தால் ஒழிய அதன் கண்கள் சிவக்காது

இன்றைய உலகில் இலுமினாட்டி என்றால் யார்? ஒருவரும் இல்லை, அதிகாரமும் பணமும் மக்களை மயக்கும் வித்தை தெரிந்தவன் எல்லாம் இலுமினாட்டி

உதாரணம் இப்படி சொல்லலாம்

கட்சியின் தீவிர வெறியன் அல்லது தொண்டன், கடும் உழைப்பாளி அல்லது தலைவர் மீது பக்திமான், ஆனால் கையில் ஒரு பைசா இல்லை, கட்சியின் மாவட்ட செயலாளர் பதவிக்கு வரமுடியுமா? ஒரு சக்தி தடுக்குமல்லவா? அதுதான் இலுமினாட்டி.

மணல் கடத்தல், சுரங்க மோசடி, தாதுமணல், குட்கா செய்தி எல்லாம் தமிழகத்தில் என்னாயிற்று? தடுக்கும் சக்தி எது? அதுதான் இனுமினாட்டி.

ஒரு தாழ்த்தபட்ட சாதிக்காரன் திருவிழா கூட நடத்தமுடியாமல் காதலிக்க கூட உரிமையில்லாமல் சாகின்றான் அல்லவா? அந்த சாகடிக்கும் சக்தி எது? அது இலுமினாட்டி.

சர்வ சக்தி படைத்த ஜெயலலிதா யார் கண்ணுக்கும் தெரியாமலே செத்தார் அல்லவா? அவரை ஒரு சக்தி மறைத்தது அல்லவா? அதுதான் இலுமினாட்டி

எவ்வளவோ திறமை இருந்தும், கோடம்பாக்கத்தில் வாய்ப்பு இல்லாமல் சுற்றும் கூட்டம் உண்டு, அவர்களை அப்படி அலையவிட்ட சக்தி எது?

அவ்வளவு ஏன் இத்தனை ஆயிரம் கிரிக்கெட் வீரர்கள் உள்ள இந்தியா, பாகிஸ்தானிடம் பந்துவீச ஒரு பவுலர் இல்லாமல் தடுமாறியது அல்லவா? அந்த சொத்தை அணியினை தேசிய அணியாக அறிவித்த சக்தி இலுமினாட்டி.

கருப்பு பணத்தை மீட்க முடியாமல் மோடியினை தடுக்கும் சக்தி எது? அது இலுமினாட்டி.

திமுகவில் சாமான்ய தொண்டன் பதவிக்கு வரமுடியாமல் தடுக்கும் சக்தி எது?

அது இலுமினாட்டி

சுருக்கமாக சொன்னால் பணமும், அதிகாரமும் கொண்ட கூட்டம் இலுமினாட்டி, இது உள்ளூரில் செய்தால் சமார்த்திய சாலி, தந்திரக்காரன், கெட்டிக்காரன், திறமைசாலி.

கண்ணுக்கு தெரியாதவன் செய்தால் அது இலுமினாட்டி. இதுதான் இலுமினாட்டியின் எளிய தத்துவம்.

இதனை சொன்னால் புரியாது, உனக்கு உலகம் புரியாது என்பார்கள். இருந்துவிட்டு போகட்டும், பெரியார் பாணியில் சொன்னால் இலுமினாட்டி “வெங்காயம்”

ஆனால் ஈழத்தில் தமிழன் நாடு அமைந்தால் அது இஸ்ரேலை அமெரிக்காவினை விட பெரும் வல்லராகிவிடும் என்பதால் அதனை இலுமினாட்டிகள் அழித்தார்கள் என சிலர் சொன்னான் அல்லவா?

அவன் தலைதான் காலி சட்டி. அந்த இலுமினாட்டி கதையினை நம்புவன் மண்டை காலி அலுமினிய சட்டி

உண்மையில் இலுமினாட்டி என ஒன்றுமே இல்லை, எல்லாம் புரிந்தும் புரியாமலும் ஏகாதிபத்திய வியாபாரங்களுக்கு சூட்டபட்ட மர்ம பெயர், அவ்வளவுதான்

மாய்ன்களின் ஒற்றை கண் என்பது வேறு, அது அவர்கள் மத கலாச்சாரம், அமெரிக்க கண்டத்து மத கலாச்சாரம், பின் அமெரிக்கர்கள் கரன்சி அடிக்கும் பொழுது இது இந்த மண்ணின் அடையாளம் என்பது போல செய்துவிட்டார்கள், அவ்வளவுதான்.

மாயன்கள் கலாச்சாரத்தில் அவர்கள் கடவுள் ஒற்றைகண்ணோடு வருவது உண்டு, அது ஒன்றுமல்ல மாயன்கள் இந்துகலாச்சாரத்தோடு தொடர்புடையவர்கள், சிவனுக்கும் நெற்றியில் ஒரு கண் உண்டு

மதுரையில் நக்கீரனின்டம் அதை காட்டித்தான் அவர் மிரட்டினார்

மாயன்களின் ஒற்றை கண் கிட்டதட்ட சிவபெருமானின் நெற்றிகண் சாயல், இலுமினாட்டி என இவர்கள் காட்டும் அந்த கண், சிவனின் நெற்றிகண்ணே என்பதில் சந்தேகமில்லை

மாயன்கள் இந்துக்கள், சிவ அடையாளத்தை பின்பற்றினர், பின் வந்த அமெரிக்க வெள்ளையர்கள் அந்த அடையாளத்தை பிரபலமாக்கினர்

இதற்கும் இவர்கள் அள்ளிவிடும் ஒற்றைகண் இலுமினாட்டிக்கும் ஒரு மண்ணாங்கட்டி தொடர்புமில்லை, எல்லாம் கட்டுக்கதை

ஆக இலுமினாட்டி என்று அஞ்சி குழம்ப‌ ஒன்றுமே இல்லை, இது இலுமினாட்டி அது அலுமினாட்டி என எவனாவது பூச்சாண்டி காட்டுவான் என்றால் “போடா கம்முனாட்டி” என சொல்லிவிட்டு நகர்ந்துவிட வேண்டியதுதான்.

முன்பு ஒற்றைகண் அடையாளம் இலுமினாட்டி என்றார்கள், பின் பாபா முத்திரை உள்ளவர் எல்லோரும் இலுமினாட்டி என கிளம்பிவிட்டார், அதெல்லாம் கணக்கில் வராது என்பதால் வழக்கம் போல் அவரை புறந்தள்ளலாம்.

ஒற்றைகண்ணர் எல்லோரும் இலுமினாட்டி ஆக முடியுமா?

கலைஞருக்கும் ஒரு கண் சரியாக தெரியாது, அவரையும் இலுமினாட்டி ஆக்கலாமா?

கண்டால் சொல்லவும்

காவேரியில் தண்ணீர் வரவில்லை என போராட்டம் செய்து ஒருவனை எரித்தே கொன்றது சீமான் கோஷ்டி

இன்னொரு கோஷ்டி ஐபில் ஆட்டத்தின் அரங்கில் போலீஸ்காரரை அடித்தது

அய்யாகண்ணு கோஷ்டி டெல்லியிலே அம்மணமாக நின்று சன்பாத் எடுத்தது.

இந்த சீமான், பாரதிராஜா, அமீர், அந்த அய்யாகண்ணு கோஷ்டி எல்லாம் கோவணத்துடன் இப்பொழுது கல்லணை அருகே வயலில் உழுதுகொண்டிருப்பதை யாராவது கண்டீர்களா?

கண்டால் சொல்லவும்

இல்லாவிட்டால் அவர்களை அடித்து இழுத்து வந்து வரப்பு வெட்ட வைக்க வேண்டும்

ஆரம்பிச்சுடானுக….

ஆரம்பிச்சுடானுக….

சரி ஊர்வலம் போய்விட்டு ஒழுங்காக அந்த சிலைகளை கடலில் கரைக்க வேண்டும், கரையாவிட்டால் உடைக்க வேண்டும்

பெரியார் மட்டுமல்ல அவரின் சீட கோடிகளான அண்ணா, கலைஞர் சிலையினையும் இப்படி சுமந்து சென்றுவிட்டு இறுதியில் உடைத்து போட தயரா?

சிலை ஊர்வலத்தினை கண்டித்து சிலை சுமந்து செல்லுதல் பகுத்தறிவு எனப்படுமாம்

இப்படிபட்ட பைத்தியகாரதனமான பகுத்தறிவினை எங்காவது கேள்விபட்டதுண்டா யுவர் ஆணர்?

பிராமணரின் தமிழ் சரியில்லை

பிராமணரின் தமிழ் சரியில்லை அதனால் அவர்கள் தமிழரே இல்லை : திமுக தும்பிகள்

முக ஸ்டாலினை விட அவர்கள் நன்றாகத்தான் தமிழ் பேசுகின்றார்கள் போங்கடா டேய்..

திமுகவினரின் தமிழை விட அவர்கள் தமிழ் நன்றாகத்தான் இருக்கின்றது

கடும் பாதுகாப்புகள் விதிக்கபட்டிருக்கின்றன‌

காஷ்மீர் விவகாரத்திற்காக தீவிரவாதிகள் இந்தியா மேல் பெரும் தாக்குதல் அல்லது விமான கடத்தல் போன்றவற்றை மேற்கொள்ள திட்டமிட்ட செய்தி வந்த நிலையில் மேற்கு இந்தியாவில் ஆடும் இந்திய அணி வீரர்களை கடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கசிகின்றன‌

கடும் பாதுகாப்புகள் விதிக்கபட்டிருக்கின்றன‌

தொடர் தோல்விகளால் பாதிக்கபட்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ்காரர்களே இந்திய வீரர்களை கடத்திவிடவும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது

சீக்கிரம் சண்டை போட்டு ஒரு முடிவோடு வாங்கடா டேய்..

அட அட அட‌

நிர்மலா சீத்தாராமன் பிராமணர் என்பதால் தமிழர் இல்லையாம்

பாரதியார் உ.வே சாமிநாதய்யர் செய்யாத தமிழ்தொண்டையா மற்ற தமிழர்கள் செய்தார்கள்?

இந்த நாம் தமிழர் தும்பிகள்தான் யார் தமிழர் என ஆய்வு செய்யும், அதை இந்த திமுக இம்சைகளும் ஆரம்பித்துவிட்டன‌

ஆக திமுக இம்சைகள் முன்னாள் தும்பிகள் போலிருக்கின்றது

இந்நாள் தும்பிகளான நாம் தமிழர் இந்த திமுகவில் பல வந்தேறிகள் உண்டு ஒரு பயலும் தமிழரில்லை என லேப் ரிசல்ட் கொடுத்து கொண்டிருக்கின்றன‌

ஆனால் திமுக இம்சைகள் நிர்மலா பிராமணத்தி, தமிழர் இல்லை என சர்ட்டிபிக்கேட் கொடுக்கின்றன‌

கனிமொழி வழக்குக்கு வாதாடிய பிரபல வக்கீல்களும், திமுகவின் ரகசிய ஆடிட்டர்களும் பிராமணர்கள் என்பது வேறு விஷயம்

சரி இப்போதைக்கு யார்தான் தமிழர் என்பதை முன்னாள் தும்பிகளான திமுகவும் இந்நாள் தும்பிகளான நாம் தமிழரும் பெரும் ஆதாரங்களோடு நிரூபிப்பார்கள் என நம்புவோம்

இவனுகளும் இவனுக ஆராய்ச்சியும்…

சீக்கிரம் சண்டை போட்டு ஒரு முடிவோடு வாங்கடா டேய்..

நிச்சயம் அந்த சசிகலா மாபெரும் திறமைசாலி

எத்தனை பேர் பிறந்த நாளைத்தான் பார்ப்பது, சரி அவருக்கும் பார்த்துவிடலாம்

நிச்சயம் அந்த சசிகலா மாபெரும் திறமைசாலி, படிப்பு இல்லை எனினும் இயற்கையான அறிவு அவருக்கு இருந்தது

இன்றளவும் மிக ஆச்சரியமானதும் புரிந்துகொள்ள முடியாதுமான உறவு சசிகலாவுக்கும் ஜெயாவுக்குமானது

ஜெயாவின் வாழ்க்கை தரம் வேறு , பிராமண குடும்பம் நுனிநாக்கு ஆங்கிலம், வாழ்க்கை முறை, சமூகம் எல்லாமே வேறு

சசிகலாவுக்கு எல்லாமே தலைகீழ்

ஆனாலும் பிடிவாதகாரியும் கடும் போக்கு கொண்ட இறுக்கமானவர் என ஆனானபட்ட ராமசந்திரனே சமாளிக்க முடியாத ஜெயாவினை எப்படி சசிகலா இவ்வளவு காலமும் நட்பாக கொண்டு சென்றார் என்பது ஆச்சரியமே

எம்ஜி ராமசந்திரனையே அடக்கி , கலைஞர் கருணாநிதி எனும் சாணக்கியனையே பல இடங்களில் ஓடவிட்ட ஜெயா சசிகலா எனும் அங்குசத்தின் முன்னால் அடங்கிகிடந்தெல்லாம் மாபெரும் ஆச்சரியம்

அது பயமுறுத்தலில் வந்திருக்கமுடியாது, அதை விட பெரும் அச்சுறுத்தல்களை எல்லாம் கடந்து வந்தவர் ஜெயா

மாறாக சசிகலா அவரின் ஏதோ ஒரு நம்பிக்கையினை பெற்றிருகின்றார் அதுதான் உண்மை

இன்று தமிழகத்தில் யாருக்குமில்லா ஜாதகம் சசிகலாவிடம் உண்டு

1987முதல் 2016 வரை நடந்த அனைத்து அரசியல் ஆட்டங்களின் மொத்த தரவும் அவரிடமே இருகின்றது

அதில் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி என எல்லா தரவுகளும் அடக்கம்

எவ்வளவோ தொழிலதிபர்களும் அவர்களின் ஜாதகங்களும் அடக்கம்

பெரும் ரகசியங்களை மறைத்துவைத்து அலையாடும் கடல் போல அவர் சிறையில் நடமாடிகொண்டிருக்கின்றார்

ஒரு நாள் அவரால் பெரும் அதிர்வுகளை கொடுக்க முடியும், ஏன் இப்பொழுதே முடியும்

ஆனால் தேர்ந்த முதிர்ச்சி கொண்ட சசிகலா நேரம் பார்த்து காத்துகொண்டிருக்கின்றார் என்பதுதான் உண்மை

சசிகலா ஏன் அரசியலில் தவிர்க்கமுடியா வரலாறு என்றால் ஜெயா என்பவர் ராஜாஜிக்கு பின் பிராமணருக்கு வராது வந்த மாமணியாக கொண்டாடபட்டார்

ஆனால் அந்த முரட்டு குதிரையினை அலெக்ஸாண்டர் அடக்கியது போல் அடக்கி திருப்பி திராவிட அரசியல் செய்ய வைத்தார் சசிகலா

அதன்முன் சோ ராமசாமி எனும் ஜாம்பவானே தோற்று ஓடினார்

ஆழ கவனித்தால் சசிகலா மாபெரும் திறமைசாலி என்பதும் ராஜதந்திரத்தில் கைதேர்ந்தவர் என்பதும் உங்களுக்கே விளங்கும்

அவருக்கு இன்னும் காலமிருக்கின்றது

இனிதான் காலமே இருக்கின்றது என்கின்றது ஒருகோஷ்டி

எனினும் ஒரு புயல் இங்கு காத்திருக்கின்றது, ஒரு எரிமலை உறங்கிகொண்டிருக்கின்றது

அதற்கான காலம் வரும்பொழுது இங்கு பிரளயம் வெடிக்கலாம், வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது

அலெக்ஸாண்டரின் புக்கிலேஸ் குதிரை இல்லா நிலையிலும் உலகம் அவன் கையில் இருந்தது

ஜெயா இல்லா நிலையிலும் சசிகலா பெரும் தாக்கத்தை உருவாக்க வாய்ப்பு இருக்கின்றது

இந்த பன்னீர், பழனிச்சாமி , ஜெயக்குமார் எல்லாம் நம்பகூடிய கோஷ்டி என கருதுகின்றீர்கள்?

ஆட்சி இல்லை என்றால் உடனே சசிகலாவோடு ஓடி சென்று ஒட்டிகொண்டு முதுகினை மிதிக்க கொடுப்பார்கள்

அதனால் சசிகலாவுக்கு எதிர்காலத்தில் பெரும் வாழ்வு இருக்கலாம்

அந்த சாதுர்யமான‌ சசிகலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…

ஒருநாள் இப்பெண் நிச்சயம் பிரதமராவார்

முத்துலட்சுமி ரெட்டி, ஜெயலலிதா போன்ற வெகுசில தமிழக பெண் அடையாளங்களின் தொடர்ச்சி அவர்

மரகதம் சந்திரசேகர், ஜெயந்தி நடராஜன் போன்ற பலருக்கு வாய்ப்புகள் இருந்தும் காங்கிரஸின் கோஷ்டி பூசல் அவர்களை ஓரத்தில் உட்கார வைத்தது

ஆனால் பாஜக அந்த பெண்மணியினை, தமிழ் பெண்மணியினை உயர வைத்திருக்கின்றது

நிர்மலா சீத்தாராமன், இன்று உலகம் உற்று கவனிக்கும் தமிழ் பெண்மணி

சாதாரண தமிழக‌ குடும்பத்து பெண்மணி இந்தியாவின் உச்சபதவியில் அமர்ந்திருக்கும் பெருமையினை பெண் விடுதலை சொன்ன பெரியாரிய திராவிட கட்சிகள் கொடுக்கவில்லை

பெண் தலமையினை கொண்ட காங்கிரசும் கொடுக்கவில்லை

மாறாக பாஜக கொடுத்திருக்கின்றது, மதவாத கட்சி பிற்போக்கான கட்சி என சொல்லபடும் பாஜகவே அந்த பெருமையினை தமிழ் பெண்மணிக்கு கொடுத்திருக்கின்றது

பிராமணன் என்பதால் கொடுத்தார்கள், தமிழிசைக்கு கொடுத்தார்களா என கேள்விகள் வரும், அப்துல் கலாமினை சாதி பார்த்தா ஜனாதிபதி ஆக்கியது பாஜக?

தமிழிசையினை அமைச்சராக்கினால் பொன்னார் விடுவாரா? வானதிதான் சும்மா விடுவாரா?

அட அந்த பதவியில் வைத்தால் தமிழிசைதான் சும்மா இருப்பாரா?

தகுதியும் திறமையும் கொண்ட நிர்மலா உயர்பதவியினை தன் ஆளுமையால் அடைந்தார், பாஜக மிக சரியான பெண்ணை அடையாளம் கண்டது

கடந்த அரசில் மனோஜ் பாரிகருக்கு பின் அந்த இடத்தை நிரப்ப போவது யார்? என பெரும் கவலை எழுந்த நேரம் நிர்மலா கொண்டுவரபட்டார்

சும்மா சொல்ல கூடாது, சிக்கலான ராஜதந்திரங்கள் நிறைந்த எஸ் 400 சிஸ்டம் எனும் வான் பாதுகாப்பு சாதனத்தை ரஷ்யாவிடம் அவர் பேச்சுநடத்தி கைசாத்திட்ட பொழுது உலகமே உற்று பார்த்தது

அது வெற்றிகரமாக நடந்தபொழுது உலகம் நிர்மலாவினை நோக்கி புன்முறுவல் பூத்தது

தொடர்ந்து அமெரிக்காவுடன் எப் 21 பேச்சு, இன்னும் பல நாடுகளுடன் ராணுவ தேவை ஒப்பந்தம் என அசத்தினார் நிர்மலா

ரபேல் ஊழல் என எதிர்கட்சிகள் கிளப்பிய பெரும் சர்ச்சையினை தனிஆளாக பாராளுமன்றத்தில் மிக உண்மையுடனும் துணிவுடனும் எதிர்கொண்ட நிர்மலா பாஜகவின் தனி தூணாக தெரிந்தார்

ராகுலால் அவரின் வாதத்து முன் நிற்கமுடியவில்லை

முத்தாய்ப்பாக புல்வாமா தாக்குதலும் அதை தொடர்ந்த பாகிஸ்தான் மேலான தாக்குதலிலும் நிர்மலாவின் உறுதியும் புகழும் மேலே மேலே சென்றது

மிக சிறப்பாக தன் பாதுகாப்புதுறை அமைச்சர் பணியினை நிறைவு செய்தார் நிர்மலா

அந்த பெருமையிலும் மகிழ்விலும் அவருக்கு இம்முறை மிக முக்கியமான நிதிதுறை வழங்கபட்டது

இதிலும் அவர் சிக்கலை சந்திக்கின்றார், உலகளாவிய அமெரிக்க சீன மோதல், இன்னபிற சிக்கலில் உலக நாடுகள் பாதிக்கபட்டது போல இந்தியாவும் சிக்கியிருக்கின்றது

அந்த சவாலிலும் நிர்மலா எதிர்கொண்டு வெல்வார் என தேசம் வாழ்த்துகின்றது

பாஜகவின் வருங்கால பிரதமர் முகம் என அறியபடுகின்றார் நிர்மலா, அது சாத்தியமும் கூட‌

வருங்காலத்தில் முதல் தமிழ் பிரதமர் அதுவும் பெண் பிரதமர் எனும் பெரும் அடையாளத்தை அவர்பெற கூடும்

எம்மை பொறுத்தவரை அவரை இரண்டாம் இந்திரா காந்தியாகவே பார்கின்றோம்

நேருவிடம் இந்திரா எப்படி வளர்ந்தாரோ அப்படியே மோடியிடம் வளர்கின்றார் நிர்மலா

மிக துணிவான ஆளுமை, எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லும் லாவகம், முகத்தில் எப்பொழுதும் ஒரு உறுதி

கொஞ்சமும் தயக்கமும் தடுமாற்றமுமில்லா பதிலகள், அதே நேரம் தீர்க்கமான உண்மையான பதில்கள் என வலம் வருகின்றார் நிர்மலா

பாதுகாப்புதுறை உட்பட பெரும் பதவியில் இருந்தாலும் கொடிய எதிரியும் அவர்மேல் ஒரு ஊழலோ இல்லை குற்றசாட்டோ கூறமுடியாது

அந்த அளவு நேர்மையினையும் உண்மையினையும் கடைபிடிக்கின்றார்

கொஞ்சமும் படோபகரமான தன்மையோ இல்லை பெரும் அந்தஸ்து கொண்ட உடையோ , பெரும் தலைகணமோ பந்தாவோ அவரிடம் இல்லை

மிக எளிய நூல் சேலையும் ஆடையுமாக சராசரி இந்திய கிராமத்து பெண் போன்ற தோற்றத்தை வழக்கமாக்கியிருக்கின்றார்

அந்த எளிய தோற்றமும் கலைந்த முடியும் அவரின் எளிமைக்கு மிக பெரும் அடையாளம்

ஒரு சில பெண் எம்.எல்.ஏ எம்பிக்களின் அழிச்சாட்டிய ஒப்பனையினை பார்த்து காண சகிக்காத கோலங்களில் நிர்மலாவின் எளிமை வணங்க கூடியது

இந்திராவிடம் இருந்த அதே வசீகரமான எளிமை அது

பாரத பெண்களின் உறுதிக்கும் திறனுக்கும் மாபெரும் அறிவுக்கும் அடையாளமாக பாராளுமன்றத்தில் பெண் சிங்கமாக நிற்கின்றார் நிர்மலா

அவருக்கு இன்று பிறந்தநாள்

கவனியுங்கள், ஒரு தமிழச்சி சுத்தமான தமிழச்சி மாபெரும் உயரம் பெற்றும் இங்கு கவனிக்கமாட்டார்கள், காரணம் பெரியார் வாழ்க என சொல்லாத பெண் இங்கு பெண்ணே அல்ல‌

நிர்மலாவுக்கு தகப்பன் கைதூக்கிவிட்டானா? இல்லை அண்ணனும் தம்பியும் உயர்த்திவிட்டார்களா?

இல்லை, அவரின் கல்வியும் திறமையும் நாட்டுபற்றும் மாபெரும் இடத்தை கொடுத்திருக்கின்றது

பாஜக எனும் கட்சியே அந்த தமிழச்சிக்கு பெரும் கவுரவத்தை கொடுத்திருக்கின்றது

திமுக என்பது கலைஞர் குடும்பத்துக்கும் அவர் குடும்பத்துக்கு வால் பிடிக்கும் குடும்பத்துக்குமே வாய்ப்பு வழங்கும் கட்சி

அதிமுகவில் இனி பெண்கள் எதிர்காலம் சாத்தியமே இல்லை, கதவுகள் மூடபட்டாயிற்று

காங்கிரஸ் எங்கிருக்கின்றது என்றே தெரியவில்லை

பெண்ணுரிமையினை இங்கு ஒழுங்காக காக்கும் கட்சி பாஜக ஒன்றுதான், கட்சியில் மிக சரியாக 33% ஒதுக்கீட்டை அவர்கள்தான் கடைபிடிக்கின்றார்கள்

சாதாரண தமிழச்சியினை அப்படித்தான் கைதூக்கி உயர்பீடத்தில் அமர வைத்திருக்கின்றார்கள், இன்னொரு கட்சியில் இது சாத்தியமா என்றால் சத்தியமாக இல்லை

புறநானூற்று பாடலை சொல்லி பட்ஜெட் வாசித்த அந்த நிர்மலா தமிழரின் வரலாற்றிலும் நின்றுவிட்டார்

எமக்கு முன்பொரு நம்பிக்கை இருந்தது, தமிழரான ப.சிதம்பரம் பிரதமராவார் என்ற நம்பிக்கை இருந்தது, காங்கிரஸின் வீழ்ச்சியில் இனி அதற்கு வாய்ப்பில்லை என ஆயிற்று

தமிழரான ப.சி விட்ட இடத்தை அகில இந்திய அளவில் தமிழச்சியான நிர்மலா மிக உறுதியாக பிடித்துவிட்டதில் அந்த நம்பிக்கை மேலெழுகின்றது

ஒருநாள் இப்பெண் நிச்சயம் பிரதமராவார்

தமிழ்குலத்து பெண் சிங்கத்தை, திருவரங்கத்து திருமகளை, அவ்வையாரும் இந்திராகாந்தியும் கலந்த பெருமகளை அவரின் பிறந்தநாளில் வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்

தாயே, இன்னும் பெரும் உயரங்களை நீர் அடைவீராக‌

உம்மால் தமிழகம் பெருமைபடட்டும், தேசம் உயரட்டும்

தேசத்தின் திருமகளாக அகில உலகில் அறியபடும் தங்க மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஆயிரம் பிறை கண்டு சாதனை பல படைக்க நெஞ்சம் நிறைந்த உருக்கமான வாழ்த்துக்கள்

ஒரு இந்திராவினைத்தான் தேசம் இழந்தது, இன்னொரு இந்திரா இதோ வந்தாயிற்று. அவர் விட்டுசென்ற பணிகளை எல்லாம் இனி இவர்தான் தொடர்வார்

இது சத்தியமான வார்த்தைகள், இருந்து பாருங்கள் பொய்க்கவே பொய்க்காது