86 வயது ஸ்பெயின் மிஷனரி ஒருவரை இந்தியா விசா நீட்டிப்பு இன்றி வெளியேற்றிவிட்டது

ஒரு செய்தி பரவுகின்றது, 86 வயது ஸ்பெயின் மிஷனரி ஒருவரை இந்தியா விசா நீட்டிப்பு இன்றி வெளியேற்றிவிட்டது, இது கிறிஸ்தவருக்கு எதிரான அநீதி மோடி தூய இந்து இந்தியாவினை அமைக்க ஆரம்பித்துவிட்டார் என பல குரல்கள்

குறிப்பாக கிறிஸ்தவ குரல்கள், அதற்கு தோதாக இஸ்லாமிய சத்தங்கள்

உண்மையில் கடந்த இரு ஆண்டுக்கு முன்பே இங்கு குடியுரிமை சட்டத்திலும் விசா கொடுப்பதிலும் கடும் கட்டுபாடுகள் விதிக்கபட்டன‌

நம்புகின்றீர்களோ இல்லையோ இம்மாதிரி சட்டங்கள் வந்தபின் பல திடீர் குண்டுவெடிப்பு, கலவரம் இன்னும் பல விஷயங்கள் கட்டுபடுத்தபட்டன‌

ஆக அரசிடமும் ஏதோ கணக்கு சரியாக இருந்திருக்கின்றது

முன்பெல்லாம் இந்தியா வம்சாவளி என்றாலே 15 வருட விசா, தொண்டு நிறுவணம் கல்வி வழி வரவு என்றால் ஆயுளுக்கும் விசா என ஏக தளர்வுகள் இருந்தன‌

இது பெரும் சிக்கலை கொண்டுவந்தது

வெளிநாட்டு உளவு பிரிவுகளும் இன்னும் பலரும் பலவழிகளில் இங்கு ஊடுருவி பெரும் குழப்பத்தை விளைவித்தனர்

எல்லா மிஷினரிகளையும் அப்படி சொல்லமுடியாது, எல்லா குடியேறிகளையும் அப்படி சொல்லமுடியாது எனினும் ஒரு துளி விஷம் ஒரு குடம் பாலை கெடுத்துவிடும்

பணத்தின் மூலம் வெளிநாடாய் இருக்கும் பொழுது அவர்களுக்கு இங்கு என்னவேலை என்பதில் ஆயிரம் சந்தேகங்கள் முளைத்தன‌

எல்லா தொண்டு நிறுவணங்களையும் நம்ப முடியாது, ஆனான பட்ட பின்லேடனை அமெரிக்காவில் அடையாளம் கண்டு போட்டு கொடுத்ததே தொண்டு நிறுவணம்தான்

ஆம் எங்கெல்லாம் வாய்ப்பு உண்டோ அங்கெல்லாம் உளவு சக்திகள் நுழையும்

இந்தியா இதற்காக கடந்த வருடமே சட்டத்தை இறுக்கியது.

எம் நேரடி அனுபவத்தை சொல்கின்றோம், இந்திய பெண்ணை மணந்து, இந்தியாவிலே தங்கிவிட்ட 90 வயது முதியவருக்கே விசா இல்லை என்றார்கள்

மனிதாபிமான அடிப்படையில் கேட்டாலும் காவல்துறை, ராணுவம், இன்னும் சில துறைகளில் இருந்த வெளிநாட்டவருக்கு இங்கு விசா நீட்டிப்பு இல்லை என கையினை விரித்துவிட்டார்கள்

இவ்வளவுக்கும் அவர்களின் பிள்ளைகள் இந்திய குடியுரிமை பெற்றவர்கள், எவ்வளவோ மோதிபார்த்தும் பலன் இல்லை

இது அரசின் முடிவு

அது எல்லா வெளிநாட்டினருக்கும் சமம்

எவனாவது அய்யகோ கிறிஸ்தவனை குறிவைத்து அடிக்கின்றான் என புரளியினை கிளப்பினால் நம்பாதீர்கள்

இதில் மிஷனரி, மதம், இனம் என எந்த வேறுபாடுமில்லை. அரசு விதித்திருக்கும் சட்டத்திற்கு பொருந்தாத யாரும் வெளியேற வேண்டியதுதான்

மனமார நம்புகின்றது பாகிஸ்தான்

திமுக தமிழர்களை காக்குமா இல்லை ஈழதமிழர்களை காக்குமா என்பது தெரியாது ஆனால் பாகிஸ்தானியரை நிச்சயம் காக்கும் என மனமார நம்புகின்றது பாகிஸ்தான்

டெல்லியில் காஷ்மீருக்கு 370ம் சட்டபிரிவினை நீக்கியதை கண்டித்து இந்தியாவில் திமுக குரல் எழுப்புவதையும் உச்சமாக டெல்லியில் அது போராட வருவதை கண்டு துள்ளி எழுந்தது பாகிஸ்தான்

அட நாமும் 370ம் பிரிவினை நீக்க கூடாது என்கின்றோம், திமுகவும் அதையே சொல்லி நண்பனாகிவிட்டது என குஷியான பாகிஸ்தான் யார் ஸ்டாலின்? கலைஞர் யார்? அண்ணா யார்? முத்துவேலர் யார்? அஞ்சுகம்மாள் யார்? கோபாலபுரம் எங்கிருக்கின்றது என விசாரிக்க ஆரம்பித்துவிட்டன‌

விரைவில் லாகூரில் அறிவாலயம் திறந்தாலும் திறக்கலாம் , திமுகவினரை ஐ.நா சபை , லண்டன், நியூ யார்க், பிஜீங் என பல இடங்களில் பேசவைக்கும் திட்டம் கூட அவர்களுக்கு வந்திருக்கும் போல..

இன்று திமுக ஆர்ப்பாட்டம் தொடங்கியது இதோ இந்தியாவில் நமக்காக போராடும் நம் சகோதரர்களை பாரீர் என்ற அளவில் பாகிஸ்தானின் கொண்டாட்டம் இருந்தது

வழக்கமாக “ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே நாங்கள் நினைத்தால் அமெரிக்கா இருக்காது, ஏ ரஷ்ய ஏகாதிபத்தியமே நாங்கள் தும்மினால் மாஸ்கோ நொறுங்கும்..” என சவுடால் விட்டே வளர்ந்த கட்சி திமுக என்பதால் அது முதலில் கண்டுகொள்ளவில்லை

ஆனால் இந்திய தரப்புக்கு இதெல்லாம் சரியாக படவில்லை என்றதும் பாகிஸ்தான் கொடுத்த அதீத கவனமும் திமுகவுக்கு சிக்கலை கொடுத்திருகின்றன‌

“அய்யய்யோ சங்கத்தை உடனே கலைங்கடா..” என வடிவேலு ஸ்டைலில் போராட்டத்தை முடித்த திமுக, பங்கேற்ற அனைவருக்கும் நன்றி நன்றி என சொல்லிவிட்டு ஓடுகின்றது

எனினும் சட்டசிக்கலை தவிர்க்க, நாம் 370 பிரிவினை நீக்கியதை கண்டிக்கவில்லை மாறாக வீட்டுகாவலில் வைக்கபட்டிருக்கும் தலைவர்களுக்கு ஆதரவாக மட்டுமே ஆர்பாட்டம் நடத்தினோம் என சொல்லிகொண்டிருக்கின்றது

370ம் பிரிவு நீக்கம் ஜனநாயக படுகொலை என சொன்ன கட்சி திமுக என்பதும், அதன் தொடர்ச்சியாக போராட்டம் என அறிவித்ததும் எல்லாம் ஆவணமாக உள்ள நிலையில் திமுக எப்படி தப்புமோ தெரியாது

பிள்ளையாரை பிடிக்க போய்.. இல்லை அவர்கள் பகுத்தறிவாளர்கள்

அண்ணாவினை பிடிக்க போய் நெடுஞ்செழியனாய் முடிந்த கதையாக திடீர் திருப்பத்தை எதிர்பாராமல் ஓடி திகைக்கின்றது திமுக‌

ஆனால் பாகிஸ்தானோ எம் திமுக சகோதரர்கள் என்ற வகையில் மகா மகிழ்ச்சியாக உறுதியாக இருக்கின்றது

திமுகவுக்கு ஒருவேளை சிக்கல் வந்தால் யார் காப்பாற்றுவார்?

அவர்களுக்கா ஆளில்லை, தமிழக முதல்வரே அவர்களின் அனுசரணையில்தானே ஆட்சியில் இருக்கின்றார்

தன் ஆட்சி நீட்டிக்க முழு ஒத்துழைப்பையும் வழங்கும் திமுகவுக்கு அவர் இந்த உதவி கூட செய்யமாட்டாரா என்ன?

“அமித்ஷாஜி, ஸ்டாலின் நம்ம ஆளு , சும்மா காமெடி பண்ணுனாரு வேற ஒண்ணுமில்ல..” என பழனிச்சாமி சொல்லிவிட்டால் அமித்ஷா தட்டிவிடுவாரா என்ன?

அரசியல் அலசல்

உங்களுக்கு அரசியல் அலசல் இருந்தால் இப்பொழுது ஒரு விஷயத்தை சிந்தித்து பாருங்கள்

அப்படி நடந்திருந்தால் இப்பொழுது எப்படி இருக்கும்?

அதாவது ஒருவேளை ஈழம் அமைக்கபட்டு பிரபாகரன் அதன் அதிபராக ஆண்டு கொண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

இந்நேரம் தனிநாடு காண‌ காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு என பிரபாகரன் அறிக்கை வாசிப்பார், இந்திய படையின் அட்டகாசத்தை கண்டவர் என்றமுறையில் நான் சொல்கின்றேன் அவர்கள் வெளியேற வேண்டும் என்பார்

இங்கே தமிழ் சிங்கங்கள் சும்மா இருக்குமா?

பெரும் குழப்பமும் சொல்லணா இம்சைகளும் உருவாகும், தமிழகம் இப்படி இராது

பெரும் களபேரமும் ஊர்வலமும் ஆர்பாட்டமும் சொல்லணா குண்டுவெடிப்பும் இன்னும் எதுவெல்லாமோ நிகழும்

வைகோ போன்ற இம்சைகள் சுதந்திர தமிழீழத்தில் அமர்ந்து கொண்டு என்னவெல்லாமோ பேசும்

காஷ்மீரின் அமைதியினை பாகிஸ்தான் கெடுப்பது போல தமிழகத்து அமைதி ஈழத்தால் கெட்டுகொண்டிருக்கும்

இதை எல்லாம் உணர்ந்துதான் அன்றே தனி ஈழத்துக்கு ஆதரவில்லை என துல்லியமாக சொல்லி ராஜிவினை இழந்தாலும் அதில் கருத்தாக இருந்து காத்து நின்றது இந்தியா

சில விஷயங்கள் நிதானமாக காலம் கடந்து யோசித்தால் சில உண்மைகளை சொல்லும்

பல விவகாரங்களை கணித்து ஈழ சிக்கலை நோக்குங்கள், இந்தியா எடுத்தது மிக சரியான நிலைப்பாடு எனபது விளங்கும்

ஈழத்தை கெடுத்தது நிச்சயம் இந்தியா அல்ல, இந்த திமுக திக இன்னும் பல அழிச்சாட்டிய இம்சைகளுக்கு அஞ்சியே இந்தியா தனி ஈழம் எனும் பக்கமே செல்லவில்லை

ஈழத்தை கெடுத்தது சாட்சாத் இவர்களும் இவர்கள் அழிச்சாட்டிய இம்சை அரசியலுமன்றி வேறல்ல‌

அதனால்தான் வங்கதேசத்தை பிரித்த இந்தியா, இலங்கையில் கனத்த மவுனத்தை காத்தது

இந்த தேர்வு நிச்சயம் அநியாயம்

எங்கு பார்த்தாலும் பள்ளிகள், பத்து பெண்களில் 7 பேர் ஆசிரியர் என இருக்கும் தமிழகம் இது

அதில் ஆசிரியருக்கான தேர்வு நடந்திருக்கின்றது, தேர்வானோர் சதவீதம் வெறும் 1%

இது பலத்த அதிர்ச்சியினை கொடுத்திருக்கின்றது.

உண்மையில் இது வடிகட்டலுக்கான தேர்வு சந்தேகமே இல்லை. முறையான படிப்பு இருந்தால் ஆசிரியராகிவிடலாம்,

இந்த தேர்வு நிச்சயம் அநியாயம்

ஒன்று இந்த தேர்வினை வைத்துவிட்டு அதன் பின் ஆசிரியருக்கான பயிற்சிக்கு அனுப்பவேண்டும், இல்லாவிட்டால் படித்து முடித்தவுடன் வேலை கொடுக்க வேண்டும்

ஆனால் இரண்டும் இல்லாமல் செய்யபடும் இத்தேர்வு உண்மையில் அநீதி

ஏன் இந்நிலை வந்தது?

இந்த அருமை தமிழகத்தில் பிச்சைகாரனும் கல்லூரி திறக்கலாம், கள்ளசாராய கோஷ்டியும் கல்விசாலை பி.எட் கல்லூரி திறக்கலாம் எனும் அவல நிலை உருவாக்கபட்டது

அதாவது திராவிட கட்சிகளின் பினாமியாக ஊருக்கு ஒன்று, தெருவுக்கு ஒன்று திறக்கபட்டது

அங்கே ஆசிரியருக்கு சம்பளம் அள்ளி இறைக்கபட்டது, இன்றும் வெளிநாட்டு ஆசிரியருக்கு கூட இல்லா சம்பளம் உள்நாட்டு ஆசிரியருக்கு கொட்டபடுகின்றது

திராவிட கட்சிகளின் சாதனை இது

இதனால் புற்றீசல், கரையான் , தேனி போல கூட்டம் கூட்டமாக ஆசிரியர் பட்டாளம் பெருகிற்று

திராவிட கட்சிகளுக்கு சிக்கலை தொடங்கி கல்லாகட்ட தெரியுமே தவிர சிக்கலை முடிக்க தெரியாது

விளைவு பெருகிவிட்ட ஆசிரியர்களை வடிகட்ட தேர்வுமுறை எனும் அநீதியினை கொண்டுவந்தார்கள்

அப்படியானால் 7 வருடம் படித்து வந்தவர்கள் தகுதி இல்லாதவர்களா? அவர்கள் செலவழித்த பணமெல்லாம் வீணா? என்ற எண்ணம் கொஞ்சமுமில்லை

குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் கல்லூரிகளை அனுமதித்திருந்தால் கணக்கு சரியாக இருந்திருக்கும், இந்த தேர்வுக்கு அவசியமே இருந்திருக்காது

பெருகிவிட்ட ஆசிரியர் ஒருபுறம், மூடபட்ட அரசுபள்ளிகள் மறுபுறம் என சிக்கிய அரசு தேர்வு என்ற முறையில் செய்ய வேண்டியதை செய்துவிட்டது

ஆம் சிரமபட்டு படித்து வந்த ஆசிரிய பெருமக்களை நீங்கள் தகுதி இல்லாதவர் என செவிட்டில் அடித்து அனுப்பிவிட்டது அரசு

அவர்கள் பட்டம் பெற்று, பட்டயமும் பெற்றது அரசு அனுமதியுடனே, அதே அரசு ஒரு தேர்வில் அவர்கள் தகுதியில்லை எனவும் சொல்லிற்று

இதெல்லாம் என்ன நியாயம்?

சரி இனி ஆசிரியர்கள் எதிர்காலம் என்ன?

அவர்கள் தனியார் பள்ளிகளில் குப்பை கொட்ட வேண்டும் அதுவும் 12 மணிநேரம் குப்பை கொட்ட வேண்டும் ஆனால் சம்பளம் அரசுபள்ளி பியூணை விட குறைவு

நிச்சயம் அரசு பள்ளிகள் மூடவும் தனியார்பள்ளிகள் பெருகவும் அரசு அள்ளிவிட்ட சலுகையே காரணம்

ஆசிரிய பயிற்சிபள்ளிகள் பெருகவும் கல்லூரிகள் பெருகவும் அரசுதான் காரணம்

ஆக இந்த ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்க முடியாமல் டெட் என வடிகட்டும் அரசு, அக்கொடுமைக்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்றால் தனியார் பள்ளிகளில் குறைந்த சம்பளத்தை நிர்ணயம் செய்யட்டும்

அது அரசு நிர்ணயித்த சம்பள அளவில் இருக்கட்டும், அதை கொடுக்கமுடியா பட்சத்தில் அந்த பள்ளிகளை அரசே எடுத்து நடத்தட்டும்

அப்படி கிடுக்கிபிடி போடும் பட்சத்தில் ஆசிரியர் வாழ்வு செழிக்கும், அரசு கையகபடுத்தும் திட்டத்தினால் பெரும் ஆசிரிய தேவை ஏற்படும் பொழுது டெட் போன்ற வடிகட்டுதல் இல்லாமல் காத்திருக்கு ஆசியர்களுக்கு வேலை கொடுக்க முடியும்

இதை எல்ல்லாம் அரசு சிந்தித்தால் நலம், ஆசிரியரும் நலம் , கல்வியும் நலம் எல்லாம் சுபம்

1980க்கு பின்னரான அழிச்சாட்டிய அரசியலில் எவ்வளவு சீரழிவு பள்ளி கல்விதுறையில் நடந்திருக்கின்றது என ஆழ கவனித்தால் சில கண்ணீர் துளிகளே மிஞ்சும்

தமிழ்நாட்டில் பரிதாபத்திற்குரிய இனங்களில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் உண்டு

கரும்பு சக்கையும், செக்கு மாடும் அவர்களை விட கொடுத்து வைத்தவை

முதலில் நீக்க வேண்டிய தேர்வு இந்த டெட் தேர்வு

ஆம் மிகபெரும் சமூக அநீதி இது , 50 வயதாகியும் வேலை கிடைக்கா ஆசிரியர்கள் இருக்கும் சமூகத்தில் 21 வயதில் டெட் பாஸ் செய்துவிட்டார் என ஒருவருக்கு பணி கொடுப்பதெல்லாம் பெரும் அநீதி

ஆனால் டெட் பற்றி மாநில கட்சிகள் வாய்திறக்காது, மாறாக அய்யகோ நீட் என ஒப்பாரிவைப்பார்கள்

டெட் தேர்வினை மாநில அரசுதான் நீக்க வேண்டும்

இந்த மாபெரும் கொடுமையினை முதலில் மாநிலத்தில் களையட்டும், நீட் எல்லாம் பின்னர் பார்க்கலாம்

ஏன் டெட் பற்றி மாநில கட்சி பேசாது, அக்கொடுமை தெரிந்தும் அமைதி?

ஆம் அதில் அரசியல் செய்யமுடியாது, தமிழர் விரோதம் அது இது என டெல்லியினை சாட முடியாது

தமிழக கல்வி நிலையங்களை பகைக்க எந்த அரசியல் தலைவனும் விரும்பமாட்டான் அதுவும் தன் பினாமி பள்ளிகள், சக்தி வாய்ந்த சிறுபான்மை கிறிஸ்தவ பள்ளிகள் விவகாரத்தில் கைவைக்க ஒரு தமிழின தலைவனுக்கும் இங்கு தைரியமில்லை

அந்த அக்கிரமத்தில் ஆசிரியர் கல்வி படித்தோரில் கண்ணீர் பெருகி ஓடிகொண்டே இருக்கின்றது

இப்படித்தான் ஊரெல்லாம் கல்லூரி திறந்து எங்கள் வாழ்வினையும் கெடுத்தார்கள் என பொறியல் பட்டதாரிகளும் அழுகின்றார்கள்

இந்த அழுகைக்கும் கண்ணீருக்கும் பெயர் என்ன தெரியுமா?

திராவிட கல்வி புரட்சி…

அட பரிதாபமே

தமிழகத்திற்கு தலைகுனிவை ப. சிதம்பரம் ஏற்படுத்தி உள்ளார்- அமைச்சர் சி.வி.சண்முகம்

அட பரிதாபமே

ஜெயலலிதாவும் சசிகலாவும் என்ன உலக புகழையா தமிழகத்துக்கு பெற்று தந்தார்கள்?

என்ன வரலாற்று திரிபு இது?

என்னது பெரியாரும் அண்ணாவும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையினை கட்டவில்லையா?

வெள்ளையன் கட்டினானா?

சென்னையின் முதல் சாலையினை கலைஞர் அமைக்கவில்லையா? முதல் வங்கி கல்லூரி பள்ளி எல்லாம் அண்ணாவும் கலைஞரும் 400 ஆண்டுக்கு முன்பே திறக்கவில்லையா?

என்ன வரலாற்று திரிபு இது?

சென்னைக்கு கோட்டைகட்டி வெள்ளையனை அழைத்து வந்து அதை உருவாக்கி பின்பு சென்னை மாகாணம் என பெரும் திராவிட நாடு அமையபாடுபட்டவர் பெரியார்

கிளைவ் டூப்ளே யுத்தத்தை நிறுத்தி சென்னையினை வளர செய்வதவர் அண்ணா

அதன் பின் இரண்டாம் உலகபோர் காலத்தில் ஜெர்மானிய நீர்மூழ்கி கப்பலை விரட்டிவிட்டு கோட்டையில் கொடியேற்றும் உரிமை பெற்றார் கலைஞர்

இந்த பாசிச மோடி அரசு திராவிட வரலாற்றை, இனமான தமிழன் வரலாற்றை மாற்றி வெள்ளையன் கோட்டை கட்டினான் சென்னையினை உருவாக்கினான் என மோசடி செய்கின்றது

சென்னையில் முதல் கப்பல் விட்டது அண்ணாவும் அன்பழகனும் நெடுஞ்செழியனும், திராவிட கப்பல் அது

சென்னை ரயில் நிலையம் நீதிகட்சியின் பிரமுகர்களாலும் விமான நிலையம் திராவிட கழகத்தாலும் அமைக்கபட்டது

இப்படி திராவிட நாட்டு சாகச‌ வரலாறு ஏகபட்டது இருக்க அதை அடிமை பழனிச்சாமி அரசுடன் மறைக்க நினைக்கும் பார்ப்பானிய இந்துத்வ ஆரிய கொடுமை அரசான மோடி அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்

இதிலிருந்து என்ன தெரியுது?

“அண்ணே கலைஞர் ஸ்டாலினை மகன் மாதிரி நடத்தவே இல்லை, கட்சியில ஒரு தொண்டனாகத்தான் வச்சிருந்தாரு , கடைசி வர அவரு அவர அப்பான்னு சொல்லவே இல்லை, அவர் இறந்த அன்னைக்குத்தான் உங்கள அப்பான்னு ஒருமுறை கூப்பிடட்டுமான்னு அவர் அழுதாரு

ம்ம்ம்ம்

இதிலிருந்து என்ன தெரியுது?

என்ன அப்பான்னு கூப்பிடவே கூப்பிடாத, கொஞ்சமும் என்ன மாதிரி அறிவே உனக்கு இல்ல, நீ மகனே இல்லை, அப்பான்னு கூப்பிடாத வேணும்னா , என்ன தலைவர்னு கூப்பிடுற முட்டாள் கூட்டத்துல ஒருத்தனா இருன்னு அவர் இவர ஒதுக்கி வச்சிருந்தார்ணு தெரியுது

முழு சங்கியாயிட்டீங்கல்ல, இருங்க இந்த ஐடி என்ன ஆகுதுன்னு பாருங்க..”