அங்கு உள்ளே விடுவார்களா?

அவர் என்ன ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கா காஷ்மீர் பற்றி பேச‌ போகின்றார்,?

அங்கு உள்ளே விடுவார்களா?

இல்லை போர்குற்ற விசாரணை என சென்று ராஜபக்சேவினை உள்ளே தள்ள போகின்றாரா?

அது உருப்படியான அவை ஒன்றுமில்லை, காசு கொடுத்தால் பேசிவிட்டு வரும் கிளப் அது

இந்த ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா பரதநாட்டியம் ஆடினார் அல்லவா?

அதை தொடர்ந்து அருமையான காட்சி நமக்கு அரங்கேற இருகின்றது

நாட்டின் உபரிபணம்

ரிசர்வ் வங்கியின் உபரி நிதி 1 லட்சத்து 75 ஆயிரம் கோடியினை, ஆம் அதே அந்த தொகைதான் மத்திய அரசு பெற்றிருப்பது விவாதமாகின்றது

ரிசர்வ் வங்கியின் உபரிநிதி என்பது அவசர தேவைக்காக கையிருப்பில் வைக்கும் தொகை

போர்காலம் இன்னும் பேரிடர் காலத்தில் அதை பயன்படுத்துவார்கள்

காங்கிரஸ் அரசு கூட சிலமுறை கோரியது

எனினும் இது பெரும் தொகை என்பதால் ஆளாளுக்கு ஆலோசனை எச்சரிக்கை என கிளம்பிவிட்டார்கள்

அந்த பணத்தை மோடியோ நிர்மலாவோ எடுத்து கொண்டு ஓடபோவதில்லை, நாட்டுபணம் நாட்டின் நலனுக்கே உள்ளெடுக்கபடுகின்றது

நிலமை சரியானபின் அந்த பணம் தானாக ரிசர்வ் வங்கிக்கு உபரிநிதியாக திரும்பும்

இவ்வளவு பேசுகின்றார்களே, நாட்டின் பெரும்பான்மை வருமானம் அரசு ஊழியர் சம்பளமாகவே செல்கின்றது

எவனாவது அரசு ஊழியர் சம்பளம் குறைக்க வேண்டும் என சொல்லட்டும் பார்க்கலாம், மாட்டார்கள்

அதெல்லாம் பற்றி, அவர்களுக்கு அள்ளி இறைக்கபடும் தண்ட சம்பளம் பற்றி எல்லாம் நாம் பேசகூடாது

எம்பி எம்.எல்.ஏ சலுகைகள் குறைக்கபட வேண்டும் என யாராவது சொல்கின்றார்களா இல்லை

வெட்டி செலவுகள் ஏராளம் நடக்கும் தேசமிது, அதெல்லாம் யாரும் கவலைபட்டதாய் தெரியவில்லை.

அவசரத்துக்கு வைக்கபடும் நிதி, பொருளாதாரத்தை தாங்க பயன்படுவதில் என்ன தவறு?

அது பயன்பாட்டில் உள்ள பணம் அல்ல, லாக்கரில் இருக்கும் பணம் போல தனி கணக்கு.

நாட்டின் உபரிபணம் நாட்டுக்காய் செலவழிக்கபடுவதில் தவறேதுமில்லை

இந்திய வங்கியின் பணத்தை இந்திய அரசு எடுக்காமல் அமெரிக்க, ரஷ்ய,சீன அரசா எடுக்கும்?

சேர்ந்து கைகோர்த்து நாட்டை மீட்பதே சரி

அது 1970களின் காலம், இந்திரா ஆண்டுகொண்டிருந்தார்

இந்தியாவினை குறிவைத்து அடித்தது அமெரிக்கா. கடும் பொருளாதார நெருக்கடியினை கொடுத்தது

இந்திரா அமெரிக்க நெருக்கடிக்கு பணிந்தார், டாலருக்கு நிகரான மதிப்பை குறைத்தார்

சட்டென உயரதொடங்கியது விலைவாசி, அன்றைய நிலையில் அவருக்கு வேறு தெரிவு இல்லை

ராஜிவ் காலத்திலும் இதே சிக்கலை கொடுத்தார்கள், ராஜிவ் அன்றைய சோவியத்துடன் ஏதோ செய்ய முயன்றார், சோவியத்தின் அந்திமகாலத்தில் அதுவும் உடைந்து முயற்சி தோல்வியில் முடிந்தது

இங்கு ஒரு துருவ தலமை வரும்பொழுதெல்லாம் காட்சிகள் இப்படி வரும், மோடிக்கும் அதே சிக்கல்

மோடி முன்னால் உள்ள தெரிவு இரண்டு

ஒன்று உபரிநிதியினை எடுத்தல் அல்லது டாலருக்கு நிகரான பணத்தை இன்னும் குறைத்தல், பிந்தையது ஆபத்தானது

ஏன் ஆயிற்று இந்நிலை?

விஷயம் ஏராளம், முதலில் உலகாளவிய தாக்கம். பாகிஸ்தான் பொருளாதாரம் சரியும் பொழுது நாம் சிரித்தோம், ஆம் முதலில் ஆசியாவில் சரிந்தது அதுதான்

அடுத்து சைனா, மிக பெரும் சரிவினை அவர்கள் கண்டிருக்கின்றார்கள்

ஜப்பானும் தென்கொரியாவும் தேக்க நிலையினை கண்டிருக்கின்றது

அரபு நாடுகளிலும் ஒருவித மந்த நிலை உலாவுவதை உணர முடியும்

உலகளாவிய மந்தத்தில் அரசு என்ன செய்யமுடியும்? இங்கு நாடு இயங்க வேண்டும்

உலகளாவிய சிக்கல் என்றால் இவர்களுக்கு புரியாது, சம்பளத்தில் காலணா விட்டுகொடுக்க ஒரு பயலும் தயாராக இல்லை

அரசுக்கு பொறுப்பு இருக்கின்றது, ஏதாவது செய்து நாட்டை இயங்க வைக்கும் கடப்பாடு உண்டு

டாலருக்கு மாற்றாக இந்திய பணத்தில் ஈரானிலும் ரஷ்யாவிலும் கொடுக்கும் பொழுது சந்தோஷபட்டோம் ஆனால் டாலரை பயன்படுத்தும் அமெரிக்கா விடுமா?

இப்படித்தான் சில மறைமுக நெருக்கடிகள் வரும்

தேசம் சிக்கலில் இருக்கும் பொழுது அரசியல்பேசுவது சரியல்ல‌

இது உலகளாவிய மந்தமும், அரசின் கரங்களுக்கு அப்பாற்பட்ட விஷயமுமாகும்

சேர்ந்து கைகோர்த்து நாட்டை மீட்பதே சரி

அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் தமிழ்நாடு ஸ்தம்பித்திருக்கின்றது

அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் தமிழ்நாடு ஸ்தம்பித்திருக்கின்றது

அதுபற்றி பேசுவார் யாருமில்லை

ஜல்லிகட்டுதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்பவர்தான் இங்கு மருத்துவ துறைக்கும் அமைச்சர் என்பது கூடுதல் செய்தி

அவர் ஜல்லிகட்டுக்குத்தான் முதலிடம் கொடுப்பார், புதுகோட்டை பக்கம் எங்கு ஜல்லிகட்டு நடந்தாலும் அவரையும் அவர் மாட்டையும் காணலாம்

கடந்தவருடம் அவரின் மாடு போட்டியில் இறந்துவிட, சில வாரங்களுக்குமுன்புதான் அதற்கு சிலை திறந்தார்

குட்கா ஊழலில் தனக்கு சம்பந்தமில்லைஎன அந்த மாட்டின் மேல் சத்தியம் செய்திருந்தாரோ என்னவோ?

அப்படிபட்ட காளைமாட்டு துறை அமைச்சரிடம் மருத்துவ துறையினை கூடுதலாக கவனிக்க சொன்னால் எப்படி?

மருத்துவர்கள் போராட்டத்தை அவர் சீரியசாக எடுத்ததாக தெரியவில்லை

மக்கள்படும் துயரத்தை கண்டால் பரிதாபமாக இருக்கின்றது, கண்டுகொள்வார் யாருமில்லை

முதல்வர் சென்னைக்குள் பஸ் விட்டு விளையாடுகின்றார், துணைமுதல்வர் மகனை அடுத்து துணை ஜனாதிபதியாக்கும் முடிவில் இருக்கின்றார்

ஆக மருத்துவர்கள் சிக்கலை அவர்கள்தான் தீர்க்க வேண்டும், அதற்கு அமைச்சர் பேசவர வேண்டும் ஆனால் வரமாட்டார்

என்ன செய்யலாம்

அரசு மருத்துவர்களுக்கு நாம் ஒரு யோசனை சொல்கின்றோம்

போராட்டம் என கிளம்பினால் இங்கு ஒன்றும் நடக்காது அமைச்சரும் வரமாட்டார்

மாறாக ஜல்லிகட்டு போட்டிகளை ஏற்பாடுசெய்யுங்கள், அமைச்சர் மாட்டுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தால் போதும்

அவரை கூட அழைக்க வேண்டாம்

ஜல்லிகட்டு தினத்தில் முதல் ஆளாக வந்து அமர்வார் , அப்பொழுது லபகென்று அவரை அமுக்குங்கள்

இல்லாவிடில் அவர் காளை வெற்றிகாளை என அறிவித்து பரிசுகொடுங்கள், மனிதர் உடனே மனம் மகிழ்ந்து உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்

ம்ம் தொடங்கட்ட்டும் ஜல்லிகட்டு.. வாழ்க அமைச்சரின் காளை மாடு

வீரபெண்மணி அந்த சாகசத்தை செய்திருக்கின்றார்

குமரிமாவட்டத்தில் அந்த வீரபெண்மணி அந்த சாகசத்தை செய்திருக்கின்றார்

அம்மணியினை ஒருவன் சீண்டிகொண்டே இருந்திருகின்றான் அம்மணி கண்டுகொள்ளாமல் சென்றிருக்கின்றது

மகா பொறுமையாக அவனை கண்டுகொள்ளாமல் அந்த பெண் விலகிசெல்ல அவனோ அத்து மீறதொடங்கிவிட்டான்

அப்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது, அதன் பின் அவனின் பித்தம் தலைக்கேறி மிரட்ட ஆரம்பித்திருக்கின்றான்

இந்த 16 வயதினிலே ரஜினி போல, ஹாஹஹ நா நினைச்சா உன் கல்யாணத்தையே நிறுத்திருவேன் என மிரட்டியிருக்கின்றான்

ஒரு கட்டத்தில் அம்மணியும் அஞ்சி ஒடுங்கி நீ சொன்னதை எல்லாம் செய்கின்றேன் என கதறியிருக்கின்றது

ஆனால் நான் சொன்ன இடத்துக்குத்தான் வரவேண்டும் என சொல்லியிருக்கின்றது, அதில் இருக்கும் சூது தெரியாமல் அவனும் சரியென்று சொல்லியிருகின்றான்

வடைக்கு ஆசைபட்ட பெருச்சாளி போல அவனை மிக சரியான இடத்துக்கு அழைத்து சென்றிருக்கின்றது அம்மணி

அங்கு அம்மணி முதலில் திமுகவினர் கையில் சிக்கிய மாரிதாஸை போல அவனைஅடி பின்னியிருக்கின்றது, சிறிது நேரத்தில் உற்றார் உறவினர் பந்து மித்திரரென எல்லோரும் போட்டு அடித்ததில் அவன் மயங்கியே விட்டான்

பாட்சா படத்தில் ஆனந்தராஜ் போல அவன் மருத்துவமனையில் கிடக்கின்றான், பரிசோதித்த டாக்டர்கள் எல்லாம் அதிர்ந்து நிற்கின்றார்கள்

தனக்கு எதிரான சீண்டலை துணிச்சலுடன் எதிர்கொண்ட அந்த குமரி மாவட்டத்து வீரமங்கைக்கு மாநில அரசின் வீர தீர விருதை கொடுக்கலாம்

அம்மணி யாரென தெரியவில்லை ஆனால்
Devi Somasundaram என்பவரிடம் அது ஆலோசனை கேட்டிருப்பது மட்டும் நமக்கு புரிகின்றது

மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

டாக்டர்கள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் – மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இதை யார் சொல்ல வேண்டும்?

முதல்வர் பழனிச்சாமியும் அவர் கோஷ்டியும் இப்படி கதற வேண்டும் , எதிர்கட்சி தலைவர் மருத்துவர் பக்கம் இருக்க வேண்டும்

அதுதான் அரசியல்

மனிதர் பழனிச்சாமிக்கு ஆதரவாக இப்படி எல்லாம் வந்துவிட்டபின் எதற்கு தனி கட்சி?

திமுகவினை அதிமுகவோடு இணைத்தே விடலாமே..

அந்த அவைக்கு யாரும் செல்லலாம்

அந்த அவைக்கு யாரும் செல்லலாம், செல்பவர்கள் தங்களின் செலவினை தாங்களே ஏற்க வேண்டும்

யாரோ மு.க.ஸ்டாலின் எனும் மாவீரன் வருவதாக பதிவு செய்துவிட்டார்கள், அந்த கிளப் வகையறா சபையும் கடிதம் அனுப்பியிருக்கின்றது

அந்த கடிதத்தில் இது இன்விடேஷன் அல்ல மாறாக‌, உங்கள் ரெஜிஸ்ட்ரேஷனுக்கான கன்பர்மேஷன் என் தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள் என்கின்றன செய்திகள்

பொதுவாக திராவிடம், நீதிகட்சி, பெரியார், கலைஞர், திமுக என எதற்குமே வித்தியாசம் தெரியாத உபிக்களுக்கு வழக்கம் போல கன்பர்மேஷன், ரெஜிஸ்ட்ரேஷன் மற்றும் இன்விட்டேஷனுக்கும் வித்தியாசம் தெரியவில்லை

குதியோ குதி என குதித்துவிட்டார்கள்

இப்பொழுதும் பாருங்கள், யாரோ ஸ்டாலினை உள்ளே தள்ள்விடுகின்றார்கள் அவரும் இனி சபைக்கு செல்வார்

அங்கு “தேங்க் யூ..” என ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லிவிட்டு வந்துவிடுவார், அது ஒன்றுதான் அவர்பேசும் பொருள்

உடனே ஒரே வார்த்தையில் சபையினை அதிர செய்த இரண்டாம் பெர்னாட்ஷா எங்கள் தளபதி என உபிக்கள் கிளம்பிவிடுவார்கள்