தமிழக பெண் தங்க பதக்கம் வாங்கியிருக்கின்றார்

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக பெண் தங்க பதக்கம் வாங்கியிருக்கின்றார்

கடலூரை சேர்ந்த அந்த தமிழச்சி உலக துப்பாக்கி சுடுதலில் முதல் தங்கம் வாங்கிய தமிழ்பெண்ணாக அறியபடுகின்றார்

இதற்கு முன்பு இரு பெண்கள் வாங்கியிருந்தார்கள்

தமிழ்பெண் சாதித்துவிட்டால் வாழ்த்த வேண்டாமா, தமிழிசை அக்கா முந்தி கொண்டார்

இனி திராவிட கோஷ்டி “பெரியார் விருது” சுமந்து கடலூருக்கு காவடி எடுக்கும் என்றாலும் அக்கா ரேசில் முந்தி கொண்டது குறிப்பிடதக்கது

எனினும் “வீரமங்கை வேலுநாச்சியார்” விருது அப்பெண்ணுக்கு பாஜக சார்பில் கொடுக்கபடுமா என்பது பற்றி அக்கா ஏதும் சொல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது

கோவையில் இன்று அதிகாலை அதிரடி சோதனை

கோவையில் இன்று அதிகாலை தன் அதிரடி சோதனையினை தொடங்கியிருக்கின்றது

தீவிரவாதிகள் ஊடுருவலை தொடர்ந்து தன் கடமையினை செய்து தேசம் காக்கும் பெரும் காரியத்தை அது செய்கின்றது

அது ஆபத்தான பணி, தீவிரவாதிகள் தாக்கி கொல்லும் அபாயமும் உண்டு, மெதுவிஷம் பாய்ச்சும் ஆபத்தும் உண்டு

நமது உயிர்காக்க, மாநில அமைதிகாக்க அரும்பாடு பட்டு உலகெல்லாம் தகவல்திரட்டி உண்ணாது உறங்காது ஓடி வந்து அமுக்குகின்றார்கள்

அவர்களின் உழைப்பும் விழிப்பும் வணங்கதக்கது

ஆனால் தமிழகத்தில் திராவிட சிங்கங்களுக்கு அது பொருளாதார பின்னடைவினை மறைக்கும் தந்திரமாம்

இன்னும் சில நீண்ட அங்கி கோஷ்டிகளுக்கு மதவாதமாம்

நாம் உறுதியாக சொல்கின்றோம்

மத்திய அரசின் பாதுகாப்பு அமைப்புகள் மதம் இனம் மொழி எல்லாம் பார்ப்பதில்லை

நாட்டுக்கு யார் ஆபத்தோ அவர்களை மட்டும் குறிவைத்து தூக்குகின்றார்கள்

இந்த மாபெரும் தடுப்பு நடவடிக்கையினை மத இன சாயம் பூசி கொச்சைபடுத்துபவன் யாராயினும் அவனையும் உள்ளே தள்ளுவதுதான் நாட்டு பாதுகாப்புக்கு உகந்த வழி

இதே கோவையில் 280 பேர் சாகும்பொழுது பொத்திகொண்டிருந்தவனெல்லாம் இன்று முன்னெச்செரிக்கை நடவடிக்கையினை கொச்சைபடுத்துகின்றான்

அப்பொழுதும் 1998ல் கோவையில் மாபெரும் குண்டுவெடிப்புக்கு தன் அலட்சியத்தால் வழிவிட்ட திமுக பற்றி மூச்சே இல்லை

திமுக செய்த தவறை இந்த அரசு செய்யவில்லை என்பதுதான் இவர்களின் கோபத்துக்கு காரணம்..

இந்த திராவிட சிங்கி கோஷ்டியான அங்கி கோஷ்டிகளை முதலில் உள்ளே பிடித்து போட்டு தேசம் காக்க வேண்டும்

பியூஸ் மனுஷ் தாக்கபட்டார்

அய்யகோ பியூஸ் மனுஷ் தாக்கபட்டார், மாபெரும் சமூக செயல்பாட்டாளர் தாக்கபட்டார், என்ன ஆட்சி இது? என்ன கருத்துரிமை படுகொலை இது என கிளம்பிவிட்டார்கள்

இந்த பியூஸ் மனுஷ் அப்படி சமூகத்துக்கு என்ன சிந்தித்து என்ன போராடினார் என்பதுதான் தெரியவில்லை

சரி அவருக்கு விவரங்கள் வேண்டுமென்றால் நிதி அமைச்சை அணுகலாம், நீதிமன்றத்தை அனுகலாம் , தொழில் துறையினை கண்காணிக்கும் அரச அமைப்புகளை அணுகலாம்

எதற்கு பாஜக அலுவலகம் சென்றார்? அங்கே அப்படி திறமையானவர்கள் யார் இருக்கின்றார்கள்?

ஆக வம்பு செய்ய திட்டமிட்டு சென்றிருக்கின்றார், அவர்களும் திட்டமிட்டு சாத்தியிருக்கின்றார்கள்

தமிழகத்துக்கு இது புதிதா?

ஏன் 1950களில் தன்னையே கொல்லமுயன்றதாக கலைஞர் அடிக்கடி சொல்வார்

ராமசந்திரன் சுடபட்டார்

இந்திரா தாக்கபட்டார், ராஜிவ் கொல்லபட்டார்

அத்வாணி மயிரிழையில் உயிர்தப்பினார்

இந்த ப,சிதம்பரமும் மூப்பனாரும் கூட தாக்கபட்டிருகின்றார்கள்

ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா மேல் அமிலமே வீசபட்டது

ஒன்றா இரண்டா தமிழ்நாட்டு பெருமைகள்?

இதில் பியூஸ் மனுஷை புதிதாக‌ அடித்துவிட்டார்களாம்…

தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறந்திருகின்றது

இனி தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறந்திருகின்றது

நாட்டின் சகல சிக்கலுக்கும் தீர்வுக்கும் விவரங்களுக்கும் நீதிமன்றத்தையோ அரசு ஸ்தாபனங்களையோ நாடவேண்டியதில்லை

அருகிருக்கும் ஆளும்கட்சி அலுவலங்களை நாடினால் போதும், அங்கே நீதி கிடைக்காவிட்டால் எதிர்கட்சி வாங்கித்தரும்

எல்லாவற்றையும் இனி கட்சி அலுவலகமே பார்த்துகொள்ளுமாம்

இந்த ரபேல் விமானத்தின் இயங்குதிறன், புதிதாக வரும் பெரும் எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கும் ஐ.என்.எஸ் விஷால் கப்பல், பரீசிலனையில் இருக்கும் எப் 21 விமானத்தின் உத்திகள் இவற்றை எல்லாம் குறித்து நெல்லை பாஜக அலுவலகம் விளக்க வேண்டும்

அப்படியே கச்சதீவினை ஏன் மீட்கவில்லை 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் ஏன் திமுக மீட்கவில்லை என்பதை அறிவாலயம் விளக்க வேண்டும்

இனி நீதிமன்றம், காவல் நிலையம், வருமானவரி துறை இன்னபிற துறைகள் எதுவும் தேவைஇல்லை

எது வேண்டுமென்றாலும் கட்சி அலுவலதுக்குள் புகுந்து காலரை பிடித்து எங்கேடா டீடெய்ல்ஸ் என கேட்க வேண்டும், அவர்கள் கொடுத்துவிடுவார்கள்

கொடுக்காவிட்டால் ஜனநாயக படுகொலை என கத்தலாம் எதிர்கட்சி எல்லாம் நமக்கு துணை வரும்..

ராணுவ ரகசியம், இந்தியாவின் கடன் அது கட்டும் வட்டி, பெரும் முதலாளிகள் கட்டும் வரி முதல் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கின்றது என்பது வரை இனி நெல்லை மாவட்ட பாஜக எனக்கு விளக்க வேண்டும்

இல்லையேல் மாபெரும் போராட்டம் வெடிக்கும்

அத்தோடு விடமாட்டேன் திடீரென அதிமுக அலுலவகத்தில் புகுந்து பல்கேரியா கப்பல், ரே கமிஷன் அந்த திருசெந்தூர் வைரவேல் என்ன ஆனது என கேட்டால் பதில் சொல்ல வேண்டும்

அம்மா வைத்திருந்த கொடநாட்டை இப்பொழுது யார் வைத்திருக்கின்றார்கள் என்றால் உடனே பதில் வேண்டும்

கலைஞர் டிவி ஒரே ஆண்டில் 200 கோடி சம்பாதித்தது எப்படி என்றால் பதில் வேண்டும், உதயநிதி 2 மாத குழந்தையாக இருந்தபொழுது எப்படி எல்லாம் சமூக நீதிக்கு போராடினார் என்பதற்கான பதில் வெண்டும்

அழகிரி உரத்துறை அமைச்சராக இருந்தபொழுது என்ன செய்தார் என்பதற்கான பதில் வேண்டும்

இனி எல்லா கட்சி அலுவலகங்களும் எங்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்

தலைவி குஷ்பு புறக்கணிக்கபட்ட வகையில் காங்கிரசுக்கு மட்டும் லட்சோப லட்சம் கேள்விகள் இருக்கின்றன.

நான் கேட்கும் பொழுதெல்லாம் கட்சி அலுவலகங்கள் எனக்கு பதில் சொல்லி ஆகவேண்டும்

டிரைவில் லைசென்ஸ் முதல் ஏற்றுமதி இறக்குமதி லைசன்ஸ் வரை கட்சி அலுவலகமே தீர்க்க வேண்டும்

ஏன் டிரம்போ புட்டீனோ சைனாவோ வாலாட்டினால் நாங்கள் விளக்கத்தை மாவட்ட பாஜக அலுவலக்த்தில்தான் கேட்போம் அவர்கள் உடனே விளக்க வேண்டும்

இல்லையேல் மாபெரும் போராட்டம் வெடிக்கும்

சமூக சிந்தனையாளர் என்ற முறையில் நான் கட்சி அலுவலகங்களை எச்சரிக்கின்றேன் ஜாக்கிரதை

விதை நெல் எதற்கு?

திருமாவோடு சேர்ந்தால் அறிவு ஒருவனுக்கு எவ்வளவு கெட்டு போகும் என்றால் இப்படித்தான்

லேய் அய்யா…

விதை நெல் எதற்கு? விதைப்பதற்கு

இதோ விதை விதைக்கபட்டிருக்கின்றது, அது பெரும் விளைச்சலை பல ஆயிரம் மடங்காக திருப்பி தரும், பின் அதிலிருந்து விதை நெல்லை சேமிக்கலாம் …

ஆளும் இவனும் அவன் தத்துவமும்

விதை நெல்லை விதைக்கத்தான் செய்திருக்கின்றார்கள்.சோறாக்கவில்லை

அதெல்லாம் சரி, லண்டனில் திருமா விதைநெல் கேட்டு ஈழதமிழரிடம் அடிவாங்கி வந்தாராமே அப்படியா

டீட்டெய்ல் பிளீஸ்..

Oh Innocent Pretty Girl …..

Oh Innocent Pretty Girl …..

அதே லண்டன் மியூசியததில் உலக பிரபங்களின் மெழுகு சிலை வரிசையில் உங்களுக்கும் ஒரு சிலை சங்கம் வைக்க போகின்றதே அது தெரியாதா?

லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் மகாராணி விக்டோரியா வரிசையில் உங்களுக்கும் சிலை வைக்க போகின்றார்களே அது தெரியாதா?

இதெல்லாம் தெரியாமல் ஏதோ ஒரு பொருளில் ரஜினி படத்தை கிறுக்கி வைத்திருக்கின்றார்கள் என சொல்லிகொண்டிருப்பது சரியா..

யானையின் பலம் அதற்கு தெரியாது என்பார்கள், தெரிந்தால் அது பாகனுக்கு அடங்காது

தன் இறக்கையின் பலமறியா கழுகு , கோழியினை பார்த்து வியந்தால் அது சரியா?

அப்படி தலைவியின் பலம் அவருக்கே தெரியவில்லை, பாவம்..

இளவரசி டயானாவுக்கு அடுத்த அழகி

பிரிட்டன் சுற்றுபயணம் சென்றிருக்கின்றார் தலைவி

அங்கு இளவரசி டயானாவுக்கு அடுத்த அழகி இவர்தான் என பெரும் மகிழ்வு கொண்ட மக்கள் தலைவியினை கொண்டாடுகின்றார்கள்

பிரிட்டனே விழாக்கோலம் பூண்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன‌

கிட்டதட்ட அத்திவரதரை கண்ட காஞ்சிபுரம் போல கொண்டாட தொடங்கிவிட்டது லண்டன்

இதனை அரச பிரதிநிதிகளும் கொண்டாடும் விதமாக அக்டோபர் 14ம் தேதிவரை பிரிட்டன் பாராளுமன்றம் இயங்காது என பிரிட்டன் ராணி எலிசபெத் அறிவித்தும் விட்டார்

தலைவிக்கு ஐரோப்பா முழுக்க பெரும் ஆதரவு பெருகியிருக்கின்றது, மோனலிசா ஓவியத்தை பார்க்க வரும் கூட்டம் போல அலை அலையாக வந்து செல்கின்றார்கள்

கடும் கட்டுபாடுகளை பிரிட்டன் அரசு விதித்திருப்பதால் அவரை கண்டபின் டிவிட்டர் மற்றும் இதர சமூக ஊடகங்களில் அவரை கண்ட மகிழ்ச்சியினை பிரிட்டன்வாசிகள் பகிர்கின்றார்கள்

தன்னை சந்தித்த பிரிட்டன்வாசிகள் உடனே சமூக ஊடகங்களில் தன்னுடனான சந்திப்பை பகிர்வதை இந்த படம் மூலம் உலகிற்கு சொல்கின்றார் தலைவி

தலைவியினை பற்றி கேள்விபட்டு அவரை தள்ளி இருந்து பார்த்த பிரிட்டானிய ராஜகுடும்பம், இந்த நடமாடும் கோஹீனூர் இருக்கும் நிலையிலா நாம் வெறும் கோஹினூர் வைரத்தை கிரீடத்தில் வைத்திருக்கின்றோம் என அவமானபட்டு விரக்தியாகி அதை அகற்றலாமா என யோசித்து கொண்டிருப்பதாக அரண்மனை செய்திகள் தெரிவிகின்றன‌

இந்திய அரசு அதை உடனே மீட்டு கொண்டுவர வெண்டும்

இல்லையேல் பிரிட்டன் அரசகுடும்பம் மனம் வெறுத்து அழுதபடி தூர எறியும் அந்த வைரத்தை மீட்டு கொண்டுவந்து தலைவின் செருப்பில் சங்கம் பதிக்கும்

ஆம் தலைவியின் தலைக்கு செல்ல அந்த வைரத்துக்கு தகுதி கொஞ்சமுமில்லை