உலகம் சொல்லும் உண்மைகளை நாம் சொல்லிவிட வேண்டும்

நாம் மோடி ஆதரவாளர் அல்ல, சங்கியும் அல்ல ஆயினும் சில உண்மைகளை அதாவது உலகம் சொல்லும் உண்மைகளை நாம் சொல்லிவிட வேண்டும்

தமிழக பத்திரிகைகளும் டிவிக்களும் சொல்ல தயங்கும் அல்லது மறைக்கும் விஷயத்தை உங்களிடம் சொல்கின்றோம், விசாரித்து பாருங்கள் தெளிவு கிடைக்கும்

விஷயம் காஷ்மீர் சம்பந்தமானது

இந்த 70 வருட இந்திய வரலாற்றில் மராட்டிய அதிகாரி, தமிழக அதிகாரி, பீகாரிய அதிகாரி ஆளுநர் இப்படி எங்காவது கேள்விபட்டதுண்டா

இன்னும் விளக்குகின்றோம் பஞ்சாபியரும், பீகாரியும், மராட்டியரும், தமிழகத்தில் கலெக்டர் சூப்பிரிட்டென்ட்டட் என பதவியில் இருப்பார்கள், தமிழர் வட மாநிலங்களில் இருப்பார்கள்

ஆனால் காஷ்மீரிகளை நீவீர் அப்படி கண்டதுண்டா, ராணுவத்தில் கூட அவர்கள் இல்லை

ஆம் 70 வருடமாக அவர்களை பொத்தி பொத்தி வைத்து தனிமைபடுத்திவிட்டோம் இந்தியர் என்ற உணர்வு இந்த திமுக இம்சைகளை போல அவர்களுக்கும் இல்லை

இந்த அரசு அதை உடைக்க நினைக்க்கின்றது, என்ன ஆனாலும் அவர்களை தேசிய நீரோட்டத்தில் கலக்க செய்யவேண்டும் என முடிவெடுத்துவிட்டது

முதற்கட்டமாக காவல்துறை, துணை ராணுவம் உள்ளிட்ட அமைப்புக்களில் நீ இந்தியன் இந்தியாவுக்கு பணியாற்றவா என அழைத்து கலக்க செய்கின்றது

அவர்களின் பள்ளி கல்லூரிகளில் அரச பணியிடங்களுக்கான தேர்வு பயிற்சிகள் அதிகரிக்கபடுகின்றன‌

நீ காஷ்மீரிதான் சந்தேகமில்லை ஆனால் இந்திய காஷ்மீரி இங்கு நாடெல்லாம் உனக்கு சகோதரர்கள் உண்டு, நாங்கெளெல்லாம் உனக்கு துணை நிற்கின்றோம் என தேசம் அவர்களை வரவேற்கின்றது

இது காஷ்மீருக்கு புதுசு, லடாக்கிற்கு புதிய அணுகுமுறை

இப்படி ஒரு காலத்தை அவர்கள் எதிர்பார்த்து இருந்தார்களோ என்னமோ ஆனந்ததுடன் ஓடிவருகின்றார்கள்

இப்பொழுதுதான் பெரும் சுவர் தகர்ந்தது போல் உணர்ந்து இந்திய நீரோட்டத்தில் கலக்கின்றார்கள்

70 வருடகாலமாக பழைய அரசுகள் ஏன் இதை செய்யவில்லை என்றால் அதுதான் தெரியவில்லை

இந்த அரசு மிக சரியாக அதை உடைகின்றது, காஷ்மீரிகள் இந்தியாவோடு இணைய எதை எல்லாம் செய்யவேண்டுமோ எதை எல்லாம் உடைக்க வேண்டுமோ அதை எல்லாம் உடைக்கின்றது

அந்த மகா 370 எனும் சுவர் இல்லை

பெரும் கோட்டைக்குள் தனித்து இயங்கிய மக்களை எம்மோடு கலந்து இந்தியராய் வாழுங்கள் என அழைத்து வருகின்றது இந்த அரசு

இது ஒவ்வொரு இந்தியனும் கைதட்டி வரவேற்க வேண்டிய அணுகுமுறை

மதமோ, இனமோ, மொழியோ எமக்கு சிக்கல் இல்லை, நீ ஒரு இந்தியனாய் எம்மில் கலந்துவிடு என உறவோடு கைநீட்டி அவர்களை அணைக்கின்றது இத்தேசம்

இதை தமிழக மீடியா சொல்லாது, கட்சிகளும் பேசாது

ஏன் என்றால் இவர்கள் பிழைப்பு ஓடாது

ஈழம் எரியும் பொழுது இங்கே எவ்வளவு ஆட்டம் ஆடினார்கள் இப்பொழுது எல்லாம் மகா அமைதி ஏன்?

ஆம் ஈழத்தில் இனி சண்டைக்கு வாய்ப்பில்லை குறுகிய மனப்பான்மையில் இருந்து வாருங்கள் நாமெல்லாம் இலங்கையர் என இலங்கை அரசின் வரவேற்புக்கு அங்கு பதில் கிடைத்தது

ஈழதமிழர் சிங்களரோடு இணைந்து நாம் இலங்கையர் என வாழ ஆரம்பித்தாயிற்று அமைதி திரும்பிற்று

ஈழமக்கள் அமைதியாக வாழ்வது இங்குள்ளோருக்கு சோகம், மகா சோகம்

ஒரு இனம் அழியும்பொழுது ஆடுவதும் அது வாழும் பொழுது சோகத்தில் மயான அமைதிகாப்பதும் தமிழக அரசியல் மற்றும் ஊடகத்தின் அயோக்கிய முகம்

அதே முகத்தை காஷ்மீர் விஷயத்திலும் தமிழக மீடியாக்களும் கட்சிகளும் காட்டுகின்றன‌

ஈழத்தை போல காஷ்மீரிலும் அமைதி திரும்பிற்று

வாருங்கள் நாம் இந்தியராய் வாழ்வோம் என்ற மிக அன்பான உறவுக்கு தேசமும் அரசும் கைகொடுக்கும்பொழுது அவர்களும் வருகின்றார்கள்

பலர் ஓடிவந்து தேச சேவைகளில் பங்கெடுக்கின்றார்கள்

அந்த ஒவ்வொரு இந்தியகாஷ்மீரிய சகோதரனையும் தேசிய நதியில் இணையவரும் அந்த ஒவ்வொருவரையும் கைகொடுத்து வாழ்த்தி நம்மில் ஒருவராக கலக்க செய்வது நம் கடமையும் தேசத்துக்கான சேவையுமாகும்

75 ஆண்டுகளாக அழுத அவர்களின் கண்ணீர் துடைக்கபடும் நேரமிது

அதில் நம் கரங்களும் இருக்கட்டும், அவர்கள் கண்ணீரை துடைத்து புன்னகைக்கும் முகங்களோடு அவர்களை அரவணைப்போம்

வாருங்கள் காஷ்மீரிகளே, இனி நாமெல்லாம் இந்தியர்கள். எங்கள் கரங்களை பற்றிகொண்டு உள்ளே வாருங்கள்

புதிய இந்தியாவினையும் புதிய காஷ்மீரையும் படைப்போம்

மனுஷ் அல்ல மாரிதாஸ் சென்றாலும் அவர்கள் வரவேற்று பேசுவார்கள்

பியுஷ் மனுஷ் திமுக அலுவலகம் போய் இருந்தா உயிரோட வந்து இருப்பாரா என பல கேள்விகள்

திமுக பற்றி நன்கு அறிந்ததால் சொல்கின்றோம், மனுஷ் அல்ல மாரிதாஸ் சென்றாலும் அவர்கள் வரவேற்று பேசுவார்கள்

பழைய தலமை என்றால் அவரை சந்தித்த கொஞ்ச நேரத்தில் மாரிதாஸ் அறிவாலத்து கழக கண்மணிகளில் ஒருவராகியிருப்பார்

ஆம் கலைஞரை சந்தித்தால் கண்ணீரோடு கதறி இனி நான் திமுக உடன்பிறப்பு என உருகியிருப்பார் மாரிதாஸ், அப்படி ஆக்கிவிடுவார் கருணாநிதி

தன்னை மிக கடுமையாக எதிர்த்த சோ ராமசாமி முதல் ஜெயகாந்தன் வரை தயக்கமின்றி சந்தித்த அறிவாலயம் அது

அந்த அளவுக்கு பேசியே உருக்கி வார்த்து வடித்துவிடுவார்கள்

இப்போதுள்ள தலமை அவர் அளவுக்கு உருக்காது எனினும் சந்திக்க தயங்காது

முறையாக அனுமதி கேட்டால் அறிவாலயம் இப்பொழுதும் கொடுக்கத்தான் செய்யும் , மனுஷ் போகலாம் சந்திக்கலாம் வரலாம்

ஆனால் திடீரென புகுந்து நான் சமூக ஆர்வலர் என அழிச்சாட்டியம் செய்தால் அறிவாலயம் அல்ல, அன்ன சத்திரத்திலும் அடிக்கத்தான் செய்வார்கள்

ரஷ்யாவும் ஆதரித்துவிட்டது

காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவினை ஆதரித்துவிட்ட நிலையில் ரஷ்யாவும் ஆதரித்துவிட்டது

மோடி விரைவில் ரஷ்யா செல்ல உள்ள நிலையில் ரஷ்யாவின் சில அறிவிப்புகள் இந்தியாவுக்கு சாதமாக உள்ளது

உலக அரங்கில் யுத்தம் என்றால் அமெரிக்கா பதுங்கும் ஆனால் ரஷ்யா நேருக்கு நேர் வரும்

ஆனால் உலக அரங்கு ராஜதந்திரம் என்றால் அமெரிக்கா நேரடியாக வரும் ரஷ்யா பின்னால் இருந்து ஆடும்

இதனால் காஷ்மீர் விவகாரத்தில் ரஷ்யாவின் நிலை கணிக்கமுடியாதபடி இருந்தது, இப்பொழுது அவர்களும் சிம்லா, லாகூர் ஒப்பந்தபடி அமைதியாக செல்லுங்கள் என சொல்லிவிட்டார்கள்

ஆம் மிக முக்கியமான ஒன்றை தவிர்த்தார்கள் அது இந்தியாவுக்கு அனுகூலம் பாகிஸ்தானுக்கு பெரும் ஏமாற்றம்

ஆம் 1965ல் இந்தியாவின் சாஸ்திரியும் பாகிஸ்தானின் முகமது அய்யூப்கானும் செய்த ஒப்பந்தம் அல்லது அன்றைய சோவியத் யூனியன் முடித்திருந்த பஞ்சாயத்து

அதாவது அன்று காஷ்மீரை முழுக்க கைபற்றும் போரை தொடங்கினார் சாஸ்திரி, இந்தியா வெல்ல வாய்ப்பும் இருந்தது ஆனால் அமெரிக்க தலையீடு மெதுவாக வந்தது இதை தொடர்ந்து ரஷ்யா முந்தியது

ஒருவரையும் இன்றைய உஸ்பெக்கிஸ்தானும் அன்றைய சோவியத் யூனியனின் நகருமான தாஷ்கண்ட் நகருக்கு அழைத்து பேசினார்கள்

அதில் சமாதனமாக செல்லவேண்டும் என்ரார்கள் இன்னும் என்னவெல்லாமோ சொல்லி குழப்பி முடித்தார்கள், காஷ்மீர் பற்றி ஒரு முடிவுக்கு வரமாமே முடித்தார்கள்

முடித்தார்கள் என்பதை விட அமெரிக்க படை அங்கு காலூன்றுவதை ரஷ்யா தடுத்தது, எனினும் முழு காஷ்மீரையும் மீட்கும் முடிவில் இருந்த சாஸ்திரி அங்கேயே மர்மமாக செத்தார்

தாஷ்கண்ட் ஒப்பந்தபடி காஷ்மீர் விவகாரம் இந்தியாவுக்கு அனுகூலமில்லை

ஆனால் இன்றைய ரஷ்யா அது காலாவதியான ஒப்பந்தம் என்பது போல அதை மறந்து இந்தியா பக்கம் வருகின்றது, இது இந்தியாவின் ராஜதந்திர வெற்றி

மாபெரும் வெற்றி

நிச்சயம் ரஷ்யா நினைத்திருந்தால் 1965ல் என்ன பேசினோம் என குழப்பி அடித்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை

மோடி ரஷ்யா செல்லும் நிலையில் எஸ் 400 சிஸ்டம் விரைவில் ஒப்படைக்கபடும் என சொல்லிவிட்டது ரஷ்யா

ஆனால் இன்னொரு விஷயம் இந்தியாவுக்கு அனுகூலமானது அல்ல, நிச்சயம் அல்ல ஆனால் கிடுக்கிபிடி போட்டு நம் தலையில் கட்டுகின்றார்கள்

ஆம் மிக் 29 ரக விமானங்களை மேம்படுத்தி தருகின்றார்களாம், இது அவசியமே இல்லாதது, பெரும் ஏமாற்று வேலை

ஏற்கனவே மிக் ரக விமானங்கள் விபத்துகுள்ளாகின்றன, இதில் இன்னும் ஏன்?

அவை பழைய விமானங்கள் அவற்றை மேம்படுத்தி தருவார்களாம் எச்.,ஏ.எல் எனப்படும் நம் நிறுவணம் பழைய இயந்திரங்களை பொறுத்துமாம்

இதெல்லாம் சரிவராது

ஆயினும் எஸ்400 வாங்கும் பொழுது இந்த இம்சைகளையும் வாங்கு என கட்டாயபடுத்துகின்றது ரஷ்யா

தன் பழைய காயலான் கடை சரக்கையும் காசாக்க தெரிந்த நாடு அது..

எஸ் 400 விலை அதிகமாயிற்று என நினைத்து கொள்வோம் என தலையில் அடித்துகொண்டு இளம் யானையோடு சாகிடக்கும் அந்த பழைய சிங்கங்களையும் இழுத்துகொண்டு வருகின்றது இந்தியா

ஆயுத விவகாரம் இப்படித்தான்

நம் விமானம் தாங்கி கப்பல் அவர்கள் பழுது பார்க்கின்றார்கள், எஸ் 400 தருகின்றார்கள் எனும் பொழுது இந்த நாசமாய் போன மிக் ரகத்தையும் வாங்கி தொலைக்க வேண்டி இருக்க்கின்றது

எனினும் இன்னும் இருவாரங்களில் ரபேல் வந்துவிடும், விமானபடை பலம்பெறும்

இந்த மிக் 29 வைத்து என்ன செய்யலாம்?

அபிநந்தன் போல ஏதாவது சாகசவிமானி ஆச்சரியங்களை கொடுக்கலாம், வீரனின் பலம் ஆயுதத்தில் மட்டுமல்ல‌

மற்றபடி இவை தானக‌ விழுந்து சிலரை கொல்லாமல் இருந்தால் நல்லது.

தேசம் பல திறமையான விமான பொறியாளர்களை உருவாக்கி பெரும் நிறுவணங்களை ஆய்வுகூடங்களை செய்து நாமே சொந்தவிமானம் செய்யும் வரை இந்த கொடுமைக்கு முடிவில்லை

மோடி இனி ரஷ்யா செல்வார், பாரீசில் தனக்கு ஆங்கிலம் தெரியாது என்றும், படமெடுக்கும் பொழுது தன்னை ஓரத்தில் நிறுத்திய டிரம்பையும் எப்படி பழிவாங்குவார் தெரியுமா?

அதை இனி வரபோகும் படங்களில் பாருங்கள், அதை பார்த்துவிட்டு வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் வரும் பிரகாஷ்ராஜ் போல் டென்ஷ‌னாகி சிரிப்பார் டிரம்ப்

நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன்

கலைகளுக்கும் தமிழுக்கும் பெயர் பெற்ற தென்னகத்தில் அதற்கு அடையாளமாய் பலர் உண்டு

அங்கிருந்து பலர் வந்தாலும் தனித்து அடையாளிமிட்டவர் என்.எஸ். கிருஷ்ணன்.

நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன்.

வடசேரி பக்கம் மளிகை கடைகளில் பணியாற்றிவர், டென்னிஸ் கோர்ட்டில் எடுபிடி, பின் வில்லுபாட்டு கலைஞன் அதன் பின்புதான் நாடக கம்பெனி நடிகன்

தமிழ் திரையுலகம் பேசா படங்களிலிருந்து, பேசும் படங்கள் வந்த காலத்தில் அவர் நாடக கம்பெனியில் இருந்து சினிமாவிற்கு வந்தார். அக்காலத்தில் எம்ஜிஆர், கலைஞர் அறிமுகமான காலமது, அப்பொழுதுதான் அவரும் வந்தார். எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதிதான் என்.எஸ்.கேவிற்கும் முதல்படம்.

அதுவரை தமிழ்சினிமா சீரியஸ் பாடலாக செல்லும், சிரிப்பு என்று பெரிதாக இருக்காது, அந்த சிரிப்பு காட்சிகளை சிந்திக்கும் விதத்தில் சொல்லும் நுட்பத்தை முதன் முதலில் தொடங்கியவர்தான் என்.எஸ் கிருஷ்ணன்

இன்று காமெடிகள் என்பது குடிப்பது, இரட்டை அர்த்தம் , மகன் தாயினை மிரட்டுவது, புனிதமான ஆசிரியர்களை கேவலபடுத்துவது, கடவுளை கலாய்ப்பது என தலைகீழாக திரும்பிவிட்ட காலம், அப்படி ஆகியிருக்கும் காலத்தில் கலைவாணரின் சிந்தனைகள் சுகமான நினைவுகளை கிளறுகின்றன‌

அவரது காமெடி சிந்திக்க வைத்தது, யார் மனதினையும் புண்படுத்தாமல் அது சிரிக்க வைத்தது. எது மூடபழக்கம், எது சிந்தனைக்குரியது என்பதை மிக அழகாக எதார்த்த காட்சிகளில் கொண்டுவந்தவர் அவர்.

அவரது புன்னகைகான முகமும், துடுக்கான பேச்சும், கலகலப்ப்பான சுபாவமும் அவருக்கு தனி இடத்தை பெற்று கொடுத்தது, குறுகிய காலத்தில் ஏராளமான படங்களில் நடித்தார்.

இரண்டாம் மனைவியாக கட்டிகொண்ட மதுரம் வந்தபின் இன்னும் அவரது படங்களுக்கு தனி மவுசு இருந்தது, அவரது பாடல்களும், அவரின் குரலும் தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியா அடையாளமாயிற்று, புகழின் உச்சிக்கு சென்றார்.

அது தகுதியானதும் கூட, பலமுறை பார்த்தாலும் இன்றும் பொருந்தகூடிய அட்டகாசமான நடிப்பு நுட்பம் அது, கலகலப்பான முகத்துடன் அனாசயாமக கடந்தார் அவர்.
சில படங்களை இயக்கவும் செய்தார், ஏராளமான பாடல்களை சொந்தமாகவும் எழுதினார். அக்காலத்திலே சம்பாதித்து குவித்தவர் அவர். ஆனால் அள்ளிகொடுப்பதில் நிறைய அவருக்கு நிகர் அவரே.

அன்றைய காலத்தில் அவரிடம் உதவிபெறாதவர்கள் குறைவு, அள்ளி அள்ளி கொடுத்திருக்கின்றார். அது ஒரு கட்டத்தில் அவரை திவாலாக்கும் நிலைக்கும் சென்றபின்னும் அவர் மாறவில்லை, பின் சம்பாதித்துகொண்டார்.

திருட வந்தவனுக்கு சோறுபோட்டு அவர் வேலை கொடுத்த கதைதான் பின்னாளில் ஆனந்தம் படத்தில் வந்தது, அவர் வாழ்வில் நடந்த சம்பவம் அது.

அவர் தருமம் எனும் பெயரில் வருமான வரியினை மறைக்கின்றார் என சந்தேகபட்ட அதிகாரி, மாறுவேடத்தில் பொய் மகள் திருமணம் என கைஏந்தி நின்றதும், அப்போது அள்ளிகொடுத்த என்.எஸ்.கேவிடம் கண்கலங்கி, நீர் கர்ணன் அய்யா என கண்ணீர்விட்டு, இனியாவது ஒரு கணக்கு வையுங்கள் என சொன்னதும் அவரின் இளகிய மனதிற்கு எடுத்துகாட்டுகள், நடந்த உண்மை இது

இறுதிகாலத்தில் தன்னிடம் மருந்துவமனையில் பணகட்டுடன் சந்தித்த எம்ஜிஆரிடம் சில்லரையாக கொடு ராமச்சந்திரா, நிறைய பேருக்கு கொடுக்கலாம் என சொன்ன மனம் அவருடையது.

இப்படி ஏராளமான விஷயங்கள் அவரிடம் உண்டு, மதுரம் அவரிடம் மயங்கியதே அறிமுகம் இல்லா மதுரத்திற்கு அவர் அவசரத்தில் உதவியதால்தான், அந்த நன்றி காதலாயிற்று.

சீர்திருத்த கருத்துக்களை சொன்னாலும் காந்தி மீது அவருக்கு பெரும் மரியாதை இருந்தது, நாகர்கோவிலில் அன்றே காந்தி நினைவுதூண் நிறுவியது அவரே

ஒரு மனிதனுக்கு வாழ்வு வரும்பொழுது கூடவே சோதனைகளையும் அனுப்புவது இறைவனுக்கு பிடித்தமான ஒன்று, அதுவும் கலைஞர்கள் ஜாதகம் அப்படியானது.
அவருக்கு விதி லட்சுமிகாந்தன் உருவில் வந்தது, ல்ட்சுமி காந்தன் சினிமா பத்திரிகை நடத்தினார், அதாவது இன்றைய கிசுகிசு கசமுசா பத்திரிகை செய்திக்கெல்லாம் அவர்தான் முப்பாட்டன்.

பத்திரிகை செய்தி எனும்பெயரில் பலரை மிரட்டிகொண்டிருந்தார், பணம் வசூலித்துகொண்டிருந்தார் என அவர் மீது ஒரு சலசலப்பு இருந்தது
அக்காலத்தில் உள்ளவர்கள் கிசுகிசுவிற்கு அஞ்சியிருக்கின்றனர், சில சர்ச்சைகள் வெடித்திருக்கின்றன, அவருக்கு பல எதிரிகள் இருந்தார்கள்.

சர்ச்சை நடக்குபொழுது அந்த லட்சுமிகாந்தன் கொல்லபட்டார், பழி தியாகராஜ பாகவதர் மீதும் திட்டத்திற்கு உதவியதாக என்.எஸ் கே மீதும் விழுந்தது, அது பிரிட்டிசார் ஆண்ட காலம், யாரும் தப்பமுடியாது.

இன்று இருப்பது போல நடிகன் கார் ஏற்றி கொன்றுவிட்டு அசால்ட்டாக வெளிவருவது, பணத்தினை கொடுத்து காரியம் முடிப்பது எல்லாம் பிரிட்டிசார் காலத்தில் இல்லை.
வழக்கு நடக்கும்பொழுது சிறைவைக்கபட்டார் கிட்டதட்ட 3 ஆண்டு கால சிறைவாசம்,

திறமையான அக்காலத்து ராம்ஜெத்மலானியான வழக்கறிஞர் எத்திராஜின் வாதத்தில் குற்றமற்றவர் என விடுதலையானார் என்.எஸ் கிருஷ்ணன்
அந்த இடைவெளிக்கு பின் தியாகராஜபாகவதர் சரிந்தார்,

ஆனால் என் எஸ்கே பழைய இடத்தினை பிடித்தார், கலைவாணர் பட்டமும் அதன் பின்புதான் வழங்கபட்டது,நல்ல தம்பி போன்ற படங்களை அதன் பின்புதான் கொடுத்தார்.

திடீரென நோயில் விழுந்தார், அது கன்னத்து புற்றுநோயாக இருக்கலாம் என்கிறார்கள், பல் பிடுங்கிய இடத்தில் நிற்காமல் வந்த ரத்தம் அவர் உயிரை பிடுங்கிற்று
சாகும் பொழுது அவருக்கு வயது 49.

தமிழ் சினிமா உலகம் கோஷ்டி சண்டைக்கு பெயர்பெற்றது, அவ்வுலகத்தில் எல்லோருக்கும் பிடித்தமான, எல்லோரும் பழககூடிய ஒரு நடிகன் இருந்திருக்கின்றான் என்றால் அது நிச்சயம் என்.எஸ்.கே ஒருவர்தான்

சென்னையில் அவருக்கு சிலையும் உண்டு, அவர் பெயரில் அரங்கமும் உண்டு

மதுரத்துடன் அவர் செய்த காமெடிகள் காலத்தை கடந்தவை, அவரின் பாடல்கள் இன்றளவும் நினைவுக்கு வருபவை காரணம் எதார்த்த வாழ்வின் பாடல் அது

“எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்”
“ஒண்ணில இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்” போன்ற பாடல்கள் மாத சம்பளம் வாங்குவோரின் நிரந்தர கானம்.

எத்தனையோ விஷயங்களை ரசிக்கதக்க விஷயத்தில் சொன்னவர், சிரிப்பாக சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தவர்.
இயல்பாக வரும் பிறவி ஞானம் என ஒன்று உண்டு,

அது அவருக்கு, எம் ஆர் ராதா, பாலையா , நாகேஷ் போன்ற நடிகர்களுக்கு வாய்த்திருந்தது, அதுதான் அவர்களை உயர்த்தி காட்டியது.

தமிழ் சினிமாவில் சிரிப்பு காட்சிகள் இருக்கும் வரை, சிந்தனை கருத்துக்கள் வரும்வரை என்.எஸ் கிருஷ்ணனும் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

நாகர்கோவில் செல்லும்பொழுதெல்லாம் அந்த தெரு, அந்த டென்னிஸ் கோர்ட், அந்த வடசேரி சந்தை என அந்த இடங்களை பார்க்கும்பொழுதெல்லாம் அவர் நினைவே வரும்.

வடசேரி சந்தையில் அக்கால மாட்டுவண்டி வியாபாரிகளிடம் துண்டு கருப்பெட்டி வாங்க வந்து சிரிக்க வைப்பார் என்பது அக்காலத்தவர்கள் சொல்ல கேட்டது, அப்பொழுதே அவருக்கு ரசிகர்கள் இருந்திருக்கின்றார்கள்.

மறக்கமுடியா நினைவுகள் உண்டு
அண்ணாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார் என்.எஸ்.கே, எதிர் வேட்பாளர் ஒரு காங்கிரஸ்காரர் மருத்துவர். பிரச்சாரத்தில் கடுமையாக டாக்டரை புகழ்கின்றார், அவர் படிப்பென்ன, அவர் கைராசி என்ன? அவர் காப்பாற்றிய உயிர்கள் எத்தனை என பெரும் பாராட்டு

சொல்லிவிட்டு கேட்கின்றார், “சொல்லுங்க டாக்டர் எப்படி?” எல்லோரும் சொல்கின்றார்கள், “சொக்க தங்கம், எங்களுக்கு கிடைத்த வரம்”

“புரிகிறதல்லவா, அவரை சட்டசபைக்கு அனுப்பாமல் இங்கேயே வைத்து கொள்ளுங்கள், உங்களை நன்றாக கவனித்து கொள்வார். அண்ணாவிற்கு மருத்துவம் தெரியாது அவரை சட்டசபைக்கு அனுப்பி விடுங்கள்..”
இதுதான் என்.எஸ.கே,

யார் மனதனையும் புண்படுத்தாமல், புன்னகை பூத்த முகமாய் வாழ்வினை கடந்து சென்ற, எல்லோரையும் சிரிக்க வைத்த பெரும் கலைஞன்,

கலைவாணரின் வாழ்வு சொல்வது ஒன்றுதான்

தமிழகம் மகா வித்தியாசமானது, இங்கு மக்கள் அபிமானம் பெற்றோர்கள் சீர்திருத்த கருத்து பேசினால் எப்படியாவது தொலைத்துவிடுவார்கள், வசமாக வழக்கில் சிக்க வைத்து முடித்துவிடுவார்கள்

அதுவும் சூத்திரன் பேசிவிட்டால் தொலைத்தே விடுவார்கள்

அப்படி வஞ்சக வழக்கில் சிக்கவைக்கபட்ட முதல் நடிகன் என்.எஸ் கிருஷ்ணன் அடுத்து எம்.ஆர் ராதா

இருவரையும் இப்படித்தான் சரித்தார்கள்

இறுதிவரை அக்கும்பலால் தொடமுடியாமல் போனவர்கள் பெரியாரும் , கலைஞருமே. இருவரையும் அவர்களால் நெருங்க கூட முடியவில்லை

உண்மையில் தான் பேசிய மூட நம்பிக்கை ஒழிப்பிற்காகவும், புராணங்களை கிழ்த்து கிண்டல் செய்ததற்காகவுமே வழக்கில் சிக்கவைக்கபட்டு ஒழிக்கபட்டார் கலைவாணர்

இன்று அவருக்கு நினைவுநாள்

மறக்கமுடியாத கலைஞன். அந்த தமிழகத்து சார்லி சாப்ளின். அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

நாகர்கோவில் சுடலை முத்து கிருஷ்ணனை போல இன்னொரு கலைஞன் வரமுடியாது

கலைவாணரை பற்றி நிறைய எழுதியாகிவிட்டது ஆனாலும் அவரின் சுபாவம் மறுபடி மறுபடி நினைவுக்கு வருகின்றது

அவர் கார் விபத்துகுள்ளாகி சரிகின்றது, சாவகாசமாக எழும்புகிறார் கலைவாணர், சுற்றி பார்க்கின்றார். காரிலிருந்து விழுந்த ஆரஞ்சு பழம் சிதறிகிடக்கின்றது, டிரைவரை எழுப்பி அவருக்கு 2 சுளை கொடுத்துவிட்டு சாலையோரமாக அமர்ந்து பழம் சாப்பிடுகின்றார்

பின்னால் வந்த வாகனம் ஒன்று நிற்கின்றது, அலறி அடித்து ஓடி உதவ வந்தவர் என்ன ஆயிற்று என கேட்கின்றனர், பதற்றமே இன்றி சொல்கிறார் கலைவாணர்

“அது ஒண்ணுமில்லீங்க..காரை நடுரோட்டில் நிறுத்தி பழம் சாப்பிட்டால் போக்குவரத்திற்கு சிக்கல் அல்லவா?. அதனால் காரினை சரித்துபோட்டுவிட்டு யாருக்கும் இடையூறின்றி பழம் சாப்பிடுகின்றேன், நீங்களும் சாப்பிடுங்கள்”

இதுதான் கலைவாணர், எல்லா சூழ்நிலையினையும் மிக சாதரணமாக எடுத்துகொண்டு, சிரித்துகொண்டே வாழ்க்கையினை நடத்தியவர்

கோடி கோடியாக சம்பளம் வாங்கும்போது இருந்த அதே சிரிப்புதான் வீடு ஏலத்திற்கு வரும்பொழுதும் இருந்தது, திவால் அறிவிப்பு கொண்டுவந்த நீதிமன்ற ஊழியனிடம், “அட்டாட்ச்மென்ட் கொண்டு வந்திருக்க, நமக்குள்ள நல்ல அட்டாச்மென்ட் இருக்கு..” என சிரித்துகொண்டே கேட்டவர்

பெரும் வள்ளல், கேட்காமல் உதவியவர். அந்நாளில் பெரும் மதிப்பு அவருக்கு இருந்திருக்கின்றது, குழந்தை முதல் ஜி.டி நாயுடு வரை அவரின் ரசிகர்கள்.

எவனோ ஒரு தயாரிபாளன் மிக‌ சிரமபட்டு எடுத்தபடம் தோல்வியாக, பின் தானே சில காட்சிகளை நடித்து பின் அதே படத்தில் இணைத்து அதனை வெற்றியாக்கி தயாரிப்பாளன் கண்ணீரை துடைத்தவன்

இத்தனைக்கும் அந்த தயாரிப்பாளன் யாரென்றே அவருக்கு தெரியாது, அவரின் துயரம் கேள்விபட்டிருக்கின்றார், உதவி விட்டு அவர் போக்கில் சென்றுவிட்டார், ஒரு காசு வாங்கவில்லை

“சினிமா எடுக்க வருகிறவன், நஷ்டத்தோடு போக கூடாது” என்ற ஒற்றை வார்த்தையில் பதிலளித்தவர்,

எல்லாவற்றிற்கும் மேல் மனிதர் மகா கைராசிக்காரர், எப்படி?

சேலம் மார்டன் தியேட்டரில் ஒரு இளைஞனை அவர் முன் நிறுத்துகின்றார்கள், நன்றாக எழுதுவான் அய்யா என்கின்றார்கள், ஆனால் அவன் ஒல்லியாக தேகம், குள்ள உருவம்

எல்லோரும் அவனை ஏளனமாக பார்க்க, கண்டிக்கின்றார் கலைவாணர், உருவத்தை வைத்து எடைபோடாதீர்கள், இவன் இன்னொரு அகத்தியனாக இருக்கலாம் என்கிறார்.

தம்பி உனக்கோர் வாய்ப்பு தருகின்றேன், நீருபிப்பாயா என கேட்டு ,தன் பணம் படத்தின் கதையினை சொல்ல தொடங்கினார்

பணம் என்ற வார்த்தையினை சொன்னவுடன் அந்த இளைஞரிடம் இருந்து வார்த்தைகள் சீறுகின்றன‌

“பணம்..முட்டாள்களிடம் சிக்கும், கல்மனத்தோருடன் கொஞ்சும், நல்லவர்களை கெஞ்ச வைக்கும்..” என சீறி வருகின்றது வசனம்

படம் பெரும் வெற்றி, மகிழ்ந்த கலைவாணர் அவரை வாழ்த்தி ஒரு காரும் பரிசளித்து ஆசீர்வதிக்கின்றார்.

ராம்சந்தர் என்ற பெயருடன் தெருதெருவாய் அலைந்த எம்ஜி ராமசந்திரனின் கஷ்ட காலங்களில், சிவாஜி கணேசன் எனும் மகா நடிகன் மெலிந்த தேகத்தோடு வாய்ப்பு தேடிய காலங்களிலே பெரும் தொகை சம்பளம் வாங்கி காரும் வாங்கினார் அந்த இளைஞர்.

சும்மா சொல்ல கூடாது, இளைஞர் அன்றே சம்பாதித்தியத்தில் உச்சம்.

அந்த இளைஞந்தான் நமது கலைஞர், தமிழக வரலாற்றை புரட்டி அதன் மீது அமர்ந்துவிட்ட இரண்டாம் அகத்தியர்

கலைவாணரின் வாழ்த்தும் கணிப்பும் அப்படி பலித்திருக்கின்றது

அரசியலுக்கு வந்து வீடும் காரும் வாங்கும் காலத்தில் , அன்றே வீடும் காரும் வாங்கிவிட்டுத்தான் அரசியலுக்கு வந்தார் கலைஞர்

கலைஞரை கைதூக்கிவிட்டதில் என்.எஸ் கிருஷ்ணனை மறக்க முடியாது, அந்த நன்றியும் கலைஞருக்கு காலமெல்லாம் இருந்தது

காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்கின்றார் கலைவாணார் அண்ணாவுக்கு ஆதரவான பிரச்சாரம்

அண்ணாவினை எதிர்த்து நின்றவர் பிரபல டாக்டர், கைராசிகார மருத்துவர்

அந்த டாக்டர் நிறைய படிச்சவர், நல்ல மனுஷன் கைராசிக்காரர்னு சொல்றாங்க‌

கூட்டம் ஆமா என்றது

நல்ல மனுஷனோ என்கின்றார்

தங்கமான மனுஷன் என்கின்றது கூட்டம்

அந்த மகராசன் உங்களை விட்டு சட்டசபைக்கு போயிட்டா உங்களுக்கு மருத்துவம் பாக்குறது யாரு? அண்ணாவுக்கு மருத்துவம் தெரியாது அரசியல்தெரியும்

“மருத்துவம் தெரிஞ்ச டாக்டர நீங்களே வச்சிட்டு அரசியல் தெரிஞ்ச அண்ணாதுரைய அங்க அனுப்புங்க அதான உங்களுக்கும் நல்லது, இப்படிபட்ட நல்ல தங்கமான டாக்டர யாராவது வெளிய விடுவாங்களா?”

தமிழக சினிமா வரலாற்றில் மறக்கமுடியா மனிதர் கலைவாணர்

நாகர்கோவில் ஓழுகினசேரி தெருக்களிலும், வடசேரி சந்தையிலும் அவர் நினைவு வந்து வந்து செல்லும், அம்மனிதன் உருவாகிய இடங்கள் அவை

அங்குதான் தன் வேடிக்கை பேச்சினை அவர் தொடங்கினார் என்பார்கள்

சென்னை எத்திராஜ் கல்லூரியினை கடக்கும் பொழுதும் அவர் நினைவு வரும், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் என்.எஸ்,கே சிக்கியபோது அவருக்கு வாதாட வந்தவர் பிரபல வழக்கறிஞர் எத்திராஜ், வித்தையில் ராம்ஜெத்மலானிக்கும் தாத்தா மாதிரியானவர்

அவரின் வாதத்தில்தான் என்.எஸ்.கே விடுதலையானர், ஆனால் சொத்துக்கள் கரைந்தன,

பின்னாளில் எத்திராஜ் காலேஜ் கட்டினார்

நிச்சயமாக அந்த கல்லூரி கட்டிடத்து கல்லில் என் எஸ் கிருஷணன் பணத்தின் செங்கல் நிச்சயம் ஒளிந்திருக்கும்

வாழ்ந்த காலமெல்லாம் அள்ளிகொடுத்த வள்ளலான கிருஷ்ணன், மறைமுகமாக அள்ளிகொடுத்த காரியங்களில் சில உண்டு, அதில் எத்திராஜ் கல்லூரி சுவரும் இருக்கலாம்,

விதி லட்சுமிகாந்தன் வழியில் விளையாடி இருகின்றது.

அந்த கொடும் வழக்கு தாண்டி தியாகராஜ பாகவதரால் திரையில் வெல்லமுடியாமல் போனது, ஆனால் கிருஷ்ணன் வெற்றி பெற்றார்,

ஆனால் விதி முந்திகொண்டது.

எல்லா சூழ்நிலையினையிலும் சிரித்து கொண்டே வாழ்வினை கழித்த நாகர்கோவில் சுடலை முத்து கிருஷ்ணனை போல இன்னொரு கலைஞன் வரமுடியாது.

ஆம்பிளைங்கதான் பொறுமைசாலிக, கோபமே வராது

அந்த படம் நினைவில்லை ஆனால் காட்சி நினைவிருக்கின்றது

கலைவாணர் தன் காதலியிடம் பேசுவார், காதலியும் பதில் சொல்லும்

இந்த பாரு, ஆம்பிளைக்குதான் பொறுமை அதிகம், பொம்பிளைங்க எல்லாம் கோவக்காரிங்க‌

எவன் சொன்னான்? பெண்கள்தான் பொறுமைக்காரங்க கோபமே வராது

இல்லடி ஆம்பிளைங்கதான் பொறுமைசாலிக, கோபமே வராது

போய்யா சும்மா சொல்லிட்டு,

பொம்பிளைங்கதான் பொறுமைசாலிகண்ணு உலகத்துக்கே தெரியுமே”

அப்படியா என சொல்லிவிட்டு காதலியினை முத்தமிட செல்வார் என்ன்.எஸ.கே

அந்தம்மா “என்னாய்யா யாருண்ணு நினைச்சே, கிட்ட வந்தே கொன்னுபுடுவேன். எவ்வளவு நாளா இந்த கிறுக்கு புத்தியோட அலைஞ்சே , இனி பேசாதே” என சீறும்

தன் வழக்கமான சிரிப்பினை சிரித்தபடி சொல்வார் என்.எஸ்.கே

“பார்த்தியா, உனக்கு கோபம் வந்துட்டு, இப்போ நீ வந்து எனக்கு முத்தமா கொடு , எனக்கு கோபமே வராது

ஆம்பிளைங்க அப்படித்தான் பொறுமைசாலிக, கோபமே படமாட்டாங்க..”

அக்காவிடம் ஏதோ மாறுதல்

என்னது அடுத்த கட்சியா?

இப்படி வார்த்தைகளை கோர்த்தால் எங்கிருந்து இங்கு தாமரை மலரும்?

அதெல்லாம் சரி அக்காவிடம் ஏதோ மாறுதல் தெரிகின்றதே என்ன?

அக்கா எண்ணெய் வைத்து தலைவாரியிருக்கின்றது, நன்றாகத்தான் இருக்கின்றது

பதஞ்சலி எண்ணெயாக இருக்கலாம் அப்படித்தானே அக்கா?.

பிறப்பில் எல்லோரும் சமம் அல்லவா?

முன்பொருமுறை காஞ்சி மகா பெரியவரிடம் பகுத்தறிவில் மூழ்கி முத்தெடுத்த ஒருவர் கேட்டார்

“பிறப்பில் எல்லோரும் சமம் அல்லவா? அறிவும் திறமையுமே ஒருவனை முன்னேற்றும். இந்த விதி, பூர்வ ஜென்ம புண்ணியம், கர்மா என ஏன் வீணாக சொல்கின்றார்கள?”

பெரியவர் அவரை ஒரு மருத்துவமனைக்கு சென்று பார்க்க சொன்னார்

அங்கே ஏழைக்கு பிறந்த குழந்தை பாயில் வெறுமையாக கிடந்தது, பணக்காரனுக்கு பிறந்த குழந்தை நகையூட்டி பட்டு தொட்டிலில் உறங்கிகொண்டிருந்தது

அவனிடம் பெரியவர் சொன்னார், “பிறப்பால் எல்லோரும் சமம் என்றால் இந்த குழந்தைகளுக்குள் பேதம் ஏன்? பூர்வ ஜென்மம், விதி, கர்மா என்பதெல்லாம் இதுதான்”

அந்த பகுத்தறிவு அதன் பின் பேசவில்லை

இந்த படமும் அதைத்தான் சொல்கின்றது, சேலத்து சாதாரண விவசாயி இந்த இடத்துக்கு வர அவரின் கர்மா அல்லது விதி எப்படி எல்லாம் ஒத்துழைத்திருக்கின்றது?

பெரியார் கொடிபிடித்து கலைஞரும் அண்ணாவும் கட்சி தொடங்கி,அதை ராமசந்திரன் உடைத்து அதை ஜெயா கைபற்றி

அவரும் ஊழலில் சிக்கி சிறை செல்ல பன்னீரை வைத்து, அந்த பன்னீரையும் ஜெயா மறைந்தபின் தூக்கி எறிந்து இவரை வைத்துவிட்டு சிறை சென்றார் சசிகலா

இவரை காக்க மறுபடியும் வென்று அமர்ந்திருக்கின்றார் மோடி

ஒரு மனிதனின் தலைவிதி நன்றாய் இருந்தால் சூழல் அவனுக்கு ஏற்றவாறு அமையும் என ஞானி சாணக்கியன் சொன்னது இதுதான்

விதி, கர்மா, பூர்வஜென்ம புண்ணியம் இவற்றை நம்பாதவர்களுக்கு கண்ணெதிரே சாட்சியாக வந்து சவால் விடுகின்றார் பழனிச்சாமி

சில விஷயங்களை நம்பத்தான் வேண்டி இருக்கின்றது

அய்யய்யோ

அய்யய்யோ பாஜக வந்தாயிற்று இனி மதகலவரம் வரும் என்றார்கள், ஒரு கலவரமும் வரவில்லை நாடு அமைதியாய் இருக்கின்றது

அய்யய்யோ இனி ராமர் கோவிலை கட்டிவிட்டு மதுரா மசூதி இடிப்பார்கள் இந்தியா எரியும் என்றார்கள் ஒன்றும் ஆகவில்லை

அய்யய்யோ இனி கிறிஸ்தவன் பைபிள் வாசிக்கமுடியாது பாஜக ஒழித்துவிடும் என்றார்கள், வேளாங்கண்ணி திருவிழா வழக்கம் போல் நடக்கின்றது, தினகரனின் பேத்தி கூட போதிக்கின்றார்

எந்த ஆலயத்துக்கும், மசூதிக்கும் அவர்கள் வழிபாட்டுக்கும் துளி அளவேனும் சிக்கல் இந்த ஆட்சியால் வந்ததாக தெரியவில்லை, இல்லவே இல்லை

அய்யய்யோ இனி இந்தியாவில் யாரும் வாழமுடியாது எல்லாம் பார்ப்பன அதிகாரம் அழிச்சாட்டியம், எல்லோரும் அகதியாய் கிளம்பவேண்டும் என்றார்கள்

ஒரு பயலும் கிளம்ப காணோம், இதனால் மறுபடியும் அமைதியானார்கள்

அய்யய்யோ கருப்புபண ஒழிப்பா? போச்சா இவர்கள் இப்படித்தான் நாட்டை கெடுத்துவிட்டார்கள், நள்ளிரவில் பணமதிப்பு இல்லாமல் செய்து தேசத்தை சரித்துவிட்டார்கள், எல்லார் பணமும் போச்சி, பொருளாதாரம் போச்சி என ஒப்பாரி வைத்தார்கள்

அய்யய்யோ இனி தொழிலதிபர் மட்டும் வாழ்வான், அம்பானி வாழ்வான் அவன் வாழ்வான் சூத்திரன் வாழமுடியாது என்றார்கள்

ஒன்றும் நடக்கவில்லை தேசம் அதன் போக்கில் இருந்தது, ஆனால் அதன் பின்புதான் பெரும் தொழிலதிப முதலைகள் எல்லாம் கண்ணியில் சிக்கின‌

இவர்களோ ஒன்றுமே அறியாதவர்கள் போல அடுத்த காரணம் தேடினர்

சூத்திரன் குடியரசு தலைவனானான் ,
அனில் அம்பானி மஞ்சள் கடிதம் கொடுக்கும் நிலைக்கு வந்தான்

இவர்கள் அந்த சத்தத்தை விட்டுவிட்டார்கள்

இனி யாரும் மருத்துவராக முடியாது, நாமெல்லாம் மருத்துவம் பார்க்க பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் செல்லவேண்டும் என்றார்கள், அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்றதும் மாணவ சமூகம் நீட் தேர்வுக்கு ஒத்துழைப்பதையும் அறிந்து அமைதியானார்கள்

அய்யகோ இனி தமிழ் ஒழியும் இந்தி வாழும் சமஸ்கிருதம் வரும் என்றார்கள், தமிழ் அதன் போக்கில் இருக்கின்றது, விரும்பியவர் எல்லா மொழியும் கற்கின்றார்கள் என்றபின் சோகத்துடன் மறுபடியும் அமைதி

இவர்கள் மிரட்டிய எதுவும் நடக்கவில்லை என்றபின் நிரம்ப யோசித்தார்கள்

ரபேலில் ஊழல் ஊழல் என்றார்கள், ஆளாளுக்கு நூலகம் நிரம்பும் அளவுக்கு புத்தகமே எழுதினார்கள்

ஆனால் ஊழலின் துளி ஆதாரத்தையும் இவர்களால் சமர்பிக்கமுடியவில்லை, தேசம் இவர்களை பிடறியில் தள்ளி மறுபடியும் அவரிடமே ஆட்சியினை கொடுத்தது

அய்யய்யோ கும்பலுக்கு கொஞ்சநாள் ஒரு காரணமும் இல்லை பின் காஷ்மீரை பிடித்துகொண்டார்கள்

முதலில் அய்யய்யோ புல்வாமாவா? அய்யய்யோ பால்கோட் தாக்குதலா? போச்சா பாகிஸ்தான் விடுமா? வீணான யுத்த நாடகம் என்றார்கள்

பின் அமைதியானர்கள் அதன் பின் காஷ்மீர் கிடைத்தது

அய்யய்யோ காஷ்மீரா , தாங்குமா? இனி பாகிஸ்தான் பொங்கும் உலகம் திரளும் உலகபோரே உருவாகும் இந்தியா நாசமாகும், லஷ்கரும் ஹிஸ்புல்லும் சும்மா விடாது என்றெல்லாம் மிரட்டினார்கள்

ஒன்றும் நடக்கவில்லை

விஜய் மல்லையா நீரவ்மோடி தப்பினால் எப்படி தப்பலாம் என்பார்கள், தப்பும் முன்பே சிதம்பரத்தை பிடித்தால் எப்படி பிடிக்கலாம் என்பார்கள், வித்தியாசனமானவர்கள் அய்யய்யோ கோஷ்டிகள்

இப்பொழுது அய்யய்யோ கும்பல் ரிசர்வ் வங்கி முன்னால் சென்றுவிட்டது

அய்யய்யோ ரிசர்வ் வங்கி பணமெல்லாம் போச்சி இனி தேசம் நாசமாகும் என அதே ஒப்பாரி

இந்த தேசம் நாசமாக வேண்டும் என எதிர்ப்பார்ப்பதில்தான் அவர்களுக்கு எவ்வளவு ஆசை? அது நடக்கவில்லை எனும் பொழுது அடுத்த காரணத்தை தேடி பிடிப்பதில்தான் எவ்வளவு ஆனந்தம்?

இவர்கள் ஆசை எல்லாம் நிராசையானது போல இந்த ஆசையும் நடக்காது

இந்த அய்யய்யோ கோஷ்டிகள் அடுத்த காரணத்தை தேடட்டும்

இனி அவர்கள் தொடங்கும் முன் நாம் தொடங்கிவிடலாம்

“அய்யய்யோ..” இந்த கோஷ்டிகளா…….

அண்ணா நாமம் வாழ்க..

“பாருங்க..நம்ம நடிப்பு கம்பெனில நல்ல நடிகர்களாகத்தான் உருவாக்கிட்டு வந்திருக்கேன், என்ன நம்பி கொடுத்த நாடக கம்பெனிய நான் வீணாக்கல‌

ஆமா அம்மு, நம்மள மாதிரியே நல்ல வேஷம் கட்டுறாங்க, உலகம் சுற்றும் வாலிபன்ல என்னை பார்த்த மாதிரியே இருக்கு, கெட்டிக்காரி நீ.

ஆமாங்க அந்த அண்ணா உங்களுக்கு சொல்லிகொடுத்தாரு, அந்த வித்தைய நீங்க எனக்கு சொல்லி கொடுத்தீங்க, நான் இவங்களுக்கு சொல்லிகொடுத்தேன், பாவம் சசிகலாதான் பெர்பார்ம் பண்ணமுடியாம போயிட்டாங்க‌

நல்ல நடிகர்கள உருவாக்க காரணமா இருந்த அந்த அண்ணாவ நாம மறக்கவே கூடாது

அண்ணா நாமம் வாழ்க..”