வங்கி இணைப்பு விவகாரம்

அய்யய்யோ கோஷ்டிக்கு இப்பொழுது வங்கி இணைப்பு விவகாரம் கிடைத்துவிட்டது, இதோ இந்தியாவின் வங்கி எல்லாம் மூடிவிட்டார் நிர்மலா இது சங்கிகள் வங்கிகளை மூடும் காலம், அவ்வளவுதான் வங்கிகள் , வங்கி போச்சி பணமும் இனி போகும் என ஒப்பாரியினை தொடங்கிவிட்டார்கள்

வங்கி இணைப்பு இந்தியாவுக்கு புதிதா என்ன? வங்கிகள் வரலாறு உலகில் , இந்தியாவில் என்னென்ன இணைப்புகளை எல்லாம் கொடுத்திருக்கின்றது

தேசத்தின் உருவங்கள் மாறும்பொழுதெல்லாம் வங்கிகளின் இணைப்பும் உருவமும் தொடர்ந்துகொண்டேதான் வருகின்றன‌

இங்கு வங்கிமுறை வெள்ளையன் வருவதற்கு முன்பே இருந்தது, ஆனால் வங்கி என்ற பெயரில் அல்லாமல் நிதி நிர்வாகம் என்றபெயரில் இருந்தது, பர்மாவில் மிக சிறந்த வங்கி அமைப்பை அது அன்றே கொண்டிருந்தது, வங்கிகள் தேசத்தை ஆளும் என சொன்னவர்கள் செட்டியார்கள்

மேற்கே யூத இனமும் கிழக்கே செட்டி இனமும் அதை செய்துகொண்டிருந்தன‌

ஹிட்லரின் யூத வெறுப்புக்கு முதல் காரணமே யூதரின் வங்கி முறையும் ஜெர்மானியர் அதற்கு கட்டிய அநியாயமான வட்டியுமாகும்

பர்மாவில் செட்டியார்கள் அடிவாங்கவும் அதுதான் காரணம்

வெள்ளையன் பின்னாளில்தான் இந்த கோதாவில் குதித்தான்

இந்தியாவில் முறையான வங்கிகள் வெள்ளையன் காலத்தில் வந்தது தன் வியாபார ஸ்தலங்களான சென்னை, மும்பை, கல்கத்தாவில் அவன் பேங்க் ஆ மெட்ராஸ், பேங்க் ஆப் பாம்பே, பேங்க் ஆப் கல்கத்தா என தொடங்கினான்

எப்பொழுதுமே வெள்ளையன் ஒன்றை தொடங்கினால் இந்திய இந்து அமைப்புக்களும் சுதேசிகளும் போட்டிக்கு ஒன்றை தொடங்குவார்கள், அது கல்வி நிலையம் முதல் கப்பல் வரை இருந்தது

அப்படி ஏகபட்ட வங்கிகள் முளைக்க தொடங்கின, பஞ்சாப் மன்னர் பரோடா மன்னர் தமிழக செட்டிகள் எல்லாம் வங்கி தொடங்க ஆரம்பித்தனர்

நிலமையினை கவனித்த வெள்ளையன் வங்கிகளை இணைக்க தொடங்கினான், மூன்று வங்கிகளை இணைத்து இம்பீரியல் வங்கி உருவாக்கினான், வரலாற்றில் முதல் வங்கி இணைப்பு இங்கு அதுதான், பின்னாளில் இந்திய ஸ்டேட் பேங்க் ஆனது

இந்த வரலாறு நீண்டது , எழுதினால் பெரும் புத்தகமே எழுதலாம் என்றாலும் மகா சுருக்கமாக பார்க்கலாம்

அதாவது பல வங்கிகள் இருந்தன, சம்பாதித்தன அமெரிக்க உள்நாட்டு போரின்பொழுது அதாவது 1800களில் இங்கு நிலமை சிக்கலான பொழுது பல வங்கிகள் இணைக்கபட்டன, பல வீழ்ந்தன‌

எனினும் கொல்கத்தா வணிகர்கள், மெட்ராஸ் வணிகர்கள்,மும்பை வணிகர்கள் எல்லாம் அவ்வப்போது வங்கி தொடங்குவதும் இணைப்பதுமாக காலம் கடந்தது

கூட்டுறவு வங்கிகள் ரஷ்ய புரட்சிக்கு பின் அறிமுகமானது

முதல் உலகப்போர் வங்கிகளை இங்கு ஆட்டம் காண செய்தது எனினும் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பொரேஷன் வங்கி, இந்தியன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை தனித்து நின்றன‌

இன்றும் நிற்கின்றன‌

இரண்டாம் உலகப்போரிலும் பல வங்கிகள் தாக்குபிடித்த அன்றைய இந்தியாவின் லாகூரின் பஞ்சாப் நேஷணல் பாங்க் அசராமல் நின்றது

தெற்கே கனரா எனும் கன்னட பகுதியில் தெட்சன கனரா வங்கி தொடங்கபட்டு கனரா வங்கி ஆனது

( தமிழக வங்கிகள் பெரும்பாலும் செட்டியாரிடம் இருப்பதை கண்ட நாடார் சமூகம் மெர்கண்டைல் வங்கி தொடங்கி அது சிவசங்கரனால் அமுக்கபட்டு பின் மீட்கபட்ட கதையினை நீங்கள் அறிவீர்கள்

அதாவது வியாபரத்திற்கு முக்கியமானது வங்கி எனப்துதான் விஷயம்

திராவிட வங்கி என ஏதுவுமில்லை, திராவிட கழகம் என்பது முதலில் திராவிடருக்கான வங்கியாக இருந்தது பின்பு முரசொலி அறகட்டளை அந்த இடத்தை பிடித்தது

அவர்கள் சமூக நீதி காத்து வங்கி நீதியும் காத்தது இப்படித்தான் )

இதுவரை வெள்ளையன் கட்டுபாடு காலம், சுதந்திர போர் ஒருபக்கம், திராவிட இம்சைகளின் சமூக நீதி புரட்சி ஒருபக்கம் , நேதாஜி மறுபக்கம் என நாட்டில் என்னவெல்லாமோ நடந்தாலும் வங்கியினை ஒழுங்காக நடத்தினான் வெள்ளையன்

இன்றைய ஈராக்கில் தினம் 10 குண்டு வெடித்தாலும் எண்ணெய் தடையின்றி எடுப்பார்கள் அல்லவா அப்படி

சுதந்திரம் பெற்றபின் இந்திய வங்கிகளை கட்டுபடுத்த ரிசர்வ் வங்கி உருவாக்கபட்டது அதில் அம்பேத்கரின் பங்கு அதிகம்

பாகிஸ்தானுக்கு சென்றுவிட்ட சில வங்கிகளை இந்தியா இழந்தது இந்திய வங்கிகளை ரிசர்வ் பேங்க் மேலாண்மை செய்தது

சுதந்திர இந்தியாவில் வங்கிகள் வளர்ந்தன இன்னும் சில சர்ச்சைகளும் வந்தது

நேரு இன்சூரன்ஸ் பக்கம் சுற்றிகொண்டிருந்தார், தனியார் இன்சூரன்ஸ்களை ஒழிக்க எல்.ஐ.சி போன்றவற்றை கொண்டுவந்தார்

கூட்டுறவு வங்கிகளுக்கு அஸ்திவாரமிட்டார் நேரு

இந்திரா அடித்து ஆடினார், சுதந்திர இந்தியாவில் மன்னர்களுக்கு ஓய்வூதியமும் வங்கிகளில் கனத்த பங்கும் இருந்தது அதை குறிவைத்தார் இந்திரா

மன்னர் மானியத்தை நிறுத்திவிட்டு வங்கிகளை நாட்டுடமை என அறிவித்தார், சில வங்கிகள் இணைக்கபட்டன‌

ஆம் அவர்தான் இன்றைய காட்சிகளுக்கு முன்னோடி, வங்கிகளை
நாட்டுடமை ஆக்கியது சாதரண விஷயம் அல்ல‌

அதன் பின் காங்கிரஸ் 1990களுக்கு பின் மன்மோகன் ப.சி காலத்தில் பல தாராளமயமாக்கலை வங்கிகளில் செய்தது, கடன் பெறும் வசதிகள் எளிதாயின, பணம் அள்ளி எறியபட்டது

இதில்தான் பெரும் மாபியாக்கள் எல்லாம் உருவானார்கள், விஜய் மல்லையா, நீரவ் மோடி இன்னபிற வகையறா எல்லாம் இந்த பொற்காலத்தை பயன்படுத்தியவர்கள்

வாங்கிகொண்டே இருப்பார்கள், திருப்பி கட்டமாட்டார்கள், வங்கிகளும் ஏதும் கேட்காது, காரணம் சட்டங்கள் அம்மாதிரி தாராளமயமாக இருந்தது

பாஜக அரசு வந்ததில் இருந்து வாராகடன்களை குறிவைத்தது , சட்டங்கல் இறுகின விஜய் மல்லையா போன்ற கோஷ்டி தப்பி ஓடியது

இப்பொழுது இந்திரா எடுத்த நடவடிக்கை போல வங்கி இணைப்பினை நிர்மலா சீத்தாராமன் எடுத்துள்ளார்

இது ஒன்றும் புதிதல்ல, இந்தியாவில் 10 வருடம் முன்பே வரவேண்டிய திட்டம் தாமதமாகி இப்பொழுது வந்திருக்கின்றது

உலகளாவில் எல்லா வங்கிகளுமே இணைகின்றன, சிங்கப்பூர் கடந்த 6 , 7 வருடமாக இதை செய்துகொண்டிருக்கின்றது

இன்சூரன்ஸ் நிறுவணங்களும் அதையே செய்கின்றன, உலகலாவிய நிலையில் ஹாங்காங், ஜப்பான் நாடுகளின் இன்சூரன்ஸ் நிறுவணங்கள் இப்படி நிறைய இணந்துவிட்டன‌

எமக்கு தெரிந்து ஒரு ஜப்பானியர் 2011லே சொன்ன விஷயம் இது

போட்டிகள் அதிகமாகிவிட்ட உலகம் இது, அது வங்கி முதல் இன்சூரன்ஸ் வரை வருகின்றது

அரேபிய வங்கிகள், ஐரொப்பிய பராகசுர வங்கிகள் எல்லாம் ஒருவிதமான கருப்பு சந்தை பணம் போல் அடித்து விளையாடுகின்றன‌

வங்கிகள் என்பது சாதாரணம் அல்ல, நாட்டின் பணவரவின் முகம் என்பதால் அரசுகள் கடும் விழிப்பாய் கண்காணிக்கும்

வங்கிகளும் பல சிக்கல்களில் இருக்கின்றன, போட்டிகள், ஏடிஎம் மிஷின் பராமரிப்பு போன்ற செலவுகள், அதற்கு பின் இருக்கும் சிக்கல்களுக்கான பெரும் பணம் என அவற்றிற்கும் செலவு அதிகம்

இந்த செலவினை எப்படி ஈடுகட்டுவது? இரு கம்பெனிகள் சேர்ந்து ஆட்குறைப்பினை செய்துதான் ஈடுகட்ட முடியும்

அதாவது இரு வங்கியிலும் தலா 1000 பேர் இருந்தால் இரு கம்பெனிகள் இணையும்பொழுது 2000 பேர் ஆகிவிடுவார்கள் அல்லவா?

ஆனால் இரு வங்கி இணைந்தாலும் வேலை ஓன்றுதானே, இதனால் ஆட்குறைப்பு உள்ளிட்டவை செய்யலாம் இன்னும் பல புரிந்துணர்வுபடி போட்டிகளை சமாளித்து மார்கெட்டில் தாக்கு பிடிக்கலாம்

இது வங்கி மட்டுமல்ல விமான போக்குவரத்து, தயாரிப்பு உட்பட பெரும் பணம் விளையாடும் எல்லா இடங்களிலும் நடகின்றது

உலகெல்லாம் இந்த மாற்றம் 2010களிலே வந்தாயிற்று, ஏகபட்ட இணைப்புகள் நடந்தேறின‌

குறிப்பாக 2008 நெருக்கடிக்கு பின் அதிகம் நடந்தது, இது இந்தியாவிலும் அன்றே நடந்திருக்க வேண்டும்

வங்கிகள் இணைப்பு என்பதும் புரிந்துணர்வு என்பதும் கால காலமாக வெள்ளையன் காலத்தில் இருந்து இன்றுவரை உலகெல்லாம் நடக்கும் நடைமுறை, சில சீர்திருத்தங்களை செய்யும்பொழுது செய்வார்கள்

நிச்சயமாக இதை காங்கிரஸ் அரசுதான் செய்திருக்க வேண்டும் அவர்கள் செய்யவில்லை அதை பாஜக அரசு செய்திருக்கின்றது

முன்பு இந்திரா வங்கிகளை நாட்டுடமை ஆக்கியபொழுது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது, ஆனால் இந்திரா கண்டுகொள்ளவில்லை முறைபடி பத்திரிகையாளரிடம் பேசவும் இல்லை

அதுதான் சர்வாதிகாரம்

ஆனால் நிர்மலா பத்திரிகையாளரை சந்தித்தார் முறைப்படி விஷயங்களை சொன்னார், அரசின் நிலைப்பாட்டினை விளக்கினார்

இதுதான் ஜனநாயகம்….

ஆக அய்யய்யோ கோஷ்டி வழக்கம் போல அய்யய்யோ வங்கிகளுக்கு இந்த நிலையா? அகத்தியன் காலத்திலிருந்து பழனிச்சாமி காலம் வரை இப்படி நடந்ததே இல்லையே என ஒப்பாரி வைக்கும்

அதை எல்லாம் புறந்தள்ள வேண்டும்

காலத்துக்கு ஏற்ப இங்கு வங்கிகளும் அதன் முகங்களும் இணைப்புகளும் மாறி வந்து கொண்டேதான் இருக்கின்றன, அது இப்பொழுது தொடர்ந்திருக்கின்றது அவ்வளவுதான் விஷயம்

2010ல் காங்கிரஸ் அரசு செய்ய தவறியதை நிர்மலா செய்திருக்கின்றார் என்பதை தவிர சொல்ல ஒன்றுமில்லை

மலேசிய சுதந்திர தினம்

மலேசிய சுதந்திர தினம்,வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடபட்டு கொண்டிருக்கின்றது

திரும்பும் இடமெல்லாம் தேசிய கொடி பறக்கின்றது, எல்லோர் குரலும் உற்சாகமாக மெர்டேக்கா அதாவது சுதந்திரம் என சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

அக்காலத்தில் இருந்தே எல்லா கிழக்காசிய நாடுபோல இங்கும் தமிழர் தொடர்பு இருந்திருக்கது, மலைநாடு என்ற பெயர் மலேயா ஆனது என்பார்கள்.

ஆனால் பின்னாளில் பர்மா போல மிக நெருக்கமான தொடர்பு இல்லை. காரணம் பர்மீய நிலம் நெல்லுக்கு உகந்தது, ஆறுகள் அதற்கு பெரும் உதவி. அதனால் செட்டியார்கள் கவனம் அங்கேதான் குவிந்தது.

இந்தியா போலவே மலேயாவிற்கு போர்த்துகீசியர் முதலில் வந்தனர், தொடர்ந்து டச்சுக்காரன் அதன் பின் பிரிட்டிசார் வந்து ஆட்சியினை பிடித்தனர். வெள்ளையன் எதனையும் வியாபார கண்ணோட்டத்தோட பார்ப்பவன், அதுவும் மக்கள் ஒத்துழைத்துவிட்டால் அத்தேசத்தையே மாற்றிவிடுவான்

மலேசியா மலை+மழை வளம் மிகுந்த நாடு,அரிசி, கரும்பு, பருத்தி சரிவராது, இம்மாதிரி இடங்களில் தேயிலைதான் உகந்தது. ஆனால அதற்கு அதிகாலை பனிவேண்டும். அதற்காக பனியினை இறக்குமதி செய்யவோ உருவாக்கவோ முடியாது. அம்மண்ணிற்கு ஏற்ற பொருத்தமான பணபயிர் ரப்பர் மரம்.

அதனை ஆரம்பித்தான் குறைவான மக்கள் தொகை கொண்ட மலேய மக்களை கொண்டு பெரும் ரப்பர் தோட்டத்தை பராமரிக்கமுடியவில்லை, தமிழகத்திலிருந்து தொழிலாளர்களை கப்பல் கப்பலாக ஏற்றிவந்தான்.

மலேசியாவின் இன்னொரு வளம் தாதுமணல் போன்றது, சீனத்திலிருந்து ஏராளமான சீனர்கள் வந்து குவிந்தனர், அப்படியாக வளர்ந்த மலேயா ஜப்பானியரிடம் சில காலம் சிக்கி இருந்தனர், பின் மறுபடியும் பிரிட்டன் பிடித்துகொண்டது.

ஆசிய காலணிகள் எல்லாம் விடுதலைபெற்றபோது அவர்களும் பெற்றார்கள், அதாவது இரண்டாம் உலகப்போர் முடிந்து இந்தியா போன்ற யானைகளை அவிழ்த்துவிட்ட வெள்ளையன் , மலேசியா போன்ற கன்றுகுட்டிகளையும் சுதந்திரமாக விட்டான்

மலேசியா வெள்ளையன் காலத்தில் தன்னை உருமாற்றிகொண்ட நாடு, வளர்ந்துகொண்டே இருந்தார்கள், இந்தியா அளவு பெரும் சுதந்திர போராட்டம் நடந்ததாக சொல்லமுடியாது, ஆனால் மலேசிய நலன்களை பெற அவர்கள் தவறியதே இல்லை, அதற்காக கட்சிகளும் சங்கங்களும் இருந்தன.

இந்தியா அவ்வகையில் சுதந்திரத்திற்கு பெரும் போராட்டம் நடத்தியது, ஆனால் ஆனந்த சுதந்திரம் கிடைத்ததும் நாம் தூங்கிவிட்டோம், இன்னும் எழவில்லை.

அதாவது சுதந்திரம் மட்டும் போராட்டமல்ல, கிடைத்த சுதந்திரத்தில் நாட்டை நாடாக வைத்திருக்க தினமும் போராட்டம் தேவை, விழிப்பு தேவை

மலேசியர்கள் அப்படி சுதந்திரத்திற்கு பின்பே கடுமையாக போராடி அந்நாட்டின் நற்பெயரினை நிலைக்க செய்துகொண்டிருக்கின்றார்கள். வெள்ளையன் காலத்தில் உச்சத்தில் இருந்து இன்று தரித்திர தேசமாக மாறிவிட்ட எத்தனையோ நாடுகள் உண்டு.

ஆனால் மலேசியா அவ்வகையில் தொடர்ந்து தன் நிலையினை தக்க வைத்தே வருகின்றது.

இந்நாடு எதிர்கொண்ட சவால்கள் கொஞ்சமல்ல, ஆனால் மக்கள் ஒற்றுமையாக தேசம் எதிர்கொண்ட சவாலை எல்லாம் முறியடித்தார்கள்.

சுதந்திர தொடக்கத்தில் கம்யூனிச போராளிகள் பெரும் சவால், தைரியமாக எதிர்கொண்டார்கள், அதில் முழுவெற்றி பெற்றார்கள். சிங்கப்பூருடன் சர்ச்சைகள் வந்தபொழுது தனியாக பிரித்துகொடுத்து அமைதி காத்தார்கள்.

விட்டுகொடுத்தார்கள், இதோ இருவருமே வாழ்கின்றார்கள். இலங்கை போல யுத்தம் நடத்தி பின் தங்கவில்லை அல்லது இந்தியா பாகிஸ்தான் போல பெரும் ராணுவம் திரட்டி வன்மம் வளர்க்கவில்லை, அமைதி அவர்களை வாழவைக்கின்றது

அதன் பின் செயற்கை ரப்பர் வந்து அவர்கள் பொருளாதரமான ரப்பரை அடித்தது, அதனை பாமாயிலுக்கு மாறி தாக்கு பிடித்தார்கள்.

தாதுமணல் சுரங்கங்களால் சுற்றுசூழல் பிரச்சினை வந்தபொழுது அதனை மூடிவிட்டு தொழில்துறையால் ஈடுகட்டினார்கள். எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொண்டு, போராடிவென்று நிற்கின்றார்கள் என்றால் அதன் முதல்காரணம் மக்களும், அவர்களை காத்து நிற்கும் அரசாங்கமும்.

அரசும் மக்கள் மேல் வைத்திருக்கும் அக்கறை கொஞ்சமல்ல, மக்களின் வாழ்க்கையினையும் அவர்கள் பாதுகாப்பினையும் அரசாங்கம் உறுதிசெய்துகொண்டே இருக்கும், எல்லா வகைகளிலும்.

உதாரணம் ஒருவனுக்கு டெங்கு என வந்து அது மருத்துவமனையில் உறுதிசெய்யபட்டால் சுகாதாரதுறைக்கு தெரிவிக்கபடும், அவர்கள் வீட்டிற்கே வந்து அதன் சுத்தம், நீர் வடிகால் என எல்லாம் சோதிப்பார்கள், அப்படி அவ்வீடு நோய்களின் கூடாரம் என்றால் வீட்டுக்காரருக்கு கடும் அபராதம்.

ரெஸ்டாரண்டுகளின் சமையல் கூடம் கூட அடிக்கடி சோதனைகு உட்படுத்தபடும்.

இதுபோன்ற ஏராளமான விஷயங்களை சொல்லலாம், இரவில் மட்டும் செய்யபடும் சாலை பராமரிப்பு, மின் தடங்கல் என்றால் ஜெனரேட்டர் கொடுத்து மக்கள் வாழ்க்கை பாதிக்கபடாத வசதி கொடுப்பது, குடிநீர் பாதுகாப்பு என விழுந்து விழுந்து பராமரிக்கின்றது அரசு.

அதனால்தான் எல்லாம் முறையாக இயங்குகின்றன, முடுக்கு தகறாறு, வரப்பு தகறாறு , வம்புகளுக்கு எல்லாம் மக்களுக்கு வாய்பில்லை

மக்களும் அரசினை கண்காணித்துகொண்டே இருக்கின்றார்கள், எல்லோர் வீட்டிலும் காலை 5.30 மணிக்கெல்லாம் செய்திதாள் விழுகிறது. எல்லோரும் அரசினை பற்றிய விழிப்புடனே இருக்கின்றார்கள். அரசும் ஒரு சலசலப்பு ஏற்பட்டாலும் மக்கள் குரலுக்கு செவிசாய்க்க தயங்குவதில்லை.

மூவினங்களுக்கும் எல்லா பிரதிநிதித்துவமும் கிடைப்பதில் கவனமாக இருப்பார்கள், அரசு முதல் எல்லா இடங்களிலும் எல்லா சர்விகிதமும் சரியாக இருக்குமாறு பார்த்துகொள்வார்கள், மத கொண்டாட்டமும் அப்படியே

உலகிலே தைபூசத்திற்கு விடுமுறை அளித்திருக்கும் நாடு இது ஒன்றே, அந்த அளவு மன உணர்வுகளை மதிக்கின்றார்கள்.

எல்லா மக்களும் கல்வி பெறவும், எல்லா மக்களுக்கும் வேலை கொடுப்பதிலும் அரசு கருத்தாக இருக்கின்றது, காலியிடங்களை வெளிநாட்டு பணியாளர்களை கொண்டு நிரப்புவதிலும் அது உதவுகின்றது.

நாம் பாகிஸ்தானை பார்த்து ஒப்பீட்டுகொள்வது போல அல்ல இவர்கள், மக்களுக்கு மேல்நாட்டு அரசுகள் எப்படி வசதி செய்துகொடுக்கின்றன என்பதில் கருத்தாக இருப்பார்கள். அது நவீன ரயிலோ, பேருந்தோ இன்ன பிற வசதிகளோ

அங்கு அறிமுகமான கொஞ்ச்நாளில் இங்குள்ள மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுவார்கள், எது எப்படி போனாலும் நாடு நவீன மயத்தில் தன்னை மேம்படுத்தி கொள்ளவேண்டும், மேல்நாட்டு மக்களுக்கு தங்கள் மக்கள் பின் தங்கிவிட கூடாது எனும் அசாத்திய கவனம், அக்கறை.

ஒரு ஐரோப்பிய வெளிநாட்டவன் வந்தால் அவன் சொந்த நாட்டிற்கும் இந்த ஊருக்கும் எந்த வித்தியாசமும் கண்டுவிட கூடாது என கவனமாக அமைக்கபட்டிருக்கும் நகரம் இது.

நான் பார்த்து சிலாகிப்பது ஒரே ஒரு விஷயம், மக்கள் மகா சுதந்திரமான வாழ்வு வாழ்கின்றனர். தனிபட்ட சுதந்திரத்தினை கொண்டாடி தீர்க்கின்றனர், ஆனால் எது அதன் எல்லை என்பது தெரிகின்றது. சமூக அமைதி என்பதை பெரிதும் விரும்புகின்றனர். அது பொதுஇடங்கள் முதல் எல்லா இடங்களிலும் தெரிகின்றது. நெரிசலில் ஒரு ஹாரன் சத்தம் கூட கேட்காது.

அழகான நாடு, அழகான சாலைகள். போக்குவரத்து நெரிசலில் கூட அழகு தெரிவது அங்கேதான். நூல் பிடித்தது போல அழகான நேர்த்தியான வரிசையில் வாகனம் நிற்கும்.

மக்களுக்கு தங்கள் பொறுப்பு தெரிகின்றது. எந்த இனமானாலும் புன்னகை பூத்த முகத்துடன் தாங்கள் மலேசியர் என்றே பெருமை கொள்கின்றனர். புன்னகை பூத்த மக்கள், காவலர்கள் கூட புன்னகைத்தபடியேதான் பணிபுரிவர், ஆனால் குற்றவாளிகளை வேறாகவும், பொதுமக்களை வேறாகவும் அவர்கள் கையாள்கின்றனர். பொது இடங்களில் முகவரி தெரியாதவர்களை மிக கனிவாக உதவுவார்கள்.

வஞ்சமிலா புன்னகை மலேசிய மக்களின் பெரும் அடையாளம், பெரும் பேராசை பொதுவான மக்களிடம் இல்லை. ஒரு வீடு ஒரு வாகனம் ஓரளவு வருமானம் போதும், குழந்தைகளை வளர்க்கலாம் பெரியவர்களானதும் அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில், அவர்களும் அரசு கடனோ சொந்த உழைப்பிலோ படிப்பார்கள், வரதட்சனை இல்லை, பேராசை இல்லை பின் என்ன?

பணம் இருக்கின்றதா உலகம் சுற்றுவார்கள், ஜப்பான் முதல் கனடா வரை சுற்றி கொண்டாடுவார்கள், கடைசி காலத்தில் அமைதியாக கண்மூடுவார்கள்

எனக்கு தெரிந்த ஒரு வடைசுடும் பாட்டி உலகெல்லாம் சுற்றி இருக்கின்றார், கிழக்காசிய நாடு எல்லாம் சுற்றியாகிவிட்டதாம், சமீபத்தில் ஐரோப்பா பார்த்துவிட்டாராம், இனி கனடா செல்லவேண்டுமாம். அவரது பணியாள் ஒரு இந்தோணேஷிய பெண். அவரையும் கூட்டிகொண்டே செல்வாராம்.

அவருக்கு மாவாட்டிகொடுத்திருந்தால் கூட நானும் உலகம் சுற்றி இருக்கலாம், என்னசெய்ய அதற்கும் விதிவேண்டும்.

நாட்டு பொறுப்பு நிறைந்த மக்களும், மக்கள் பொறுப்பு கொண்ட நிர்வாகமும் அமையும் பட்சத்தில் ஒரு நாடு எப்படி உயரமுடியும் என்பதற்கு இந்நாடே சாட்சி. அதுவும் பல இன மக்கள், பல சமய மக்கள் எப்படி மகா ஒற்றுமையாக வாழமுடியும் என்பதற்கும் இந்நாடே சாட்சி.

இங்கு எல்லா நாட்டு மனிதர்களும் உண்டு, எல்லா நாட்டு உணவுகளும் உண்டு. ரசித்து பார்க்க அவ்வளவு விஷயங்கள் உண்டு.

எல்லாவற்றையும் புன்னகையால் கடந்து செல்லும் மலேசிய மக்கள் மனதிற்கு மழை அப்படி கொட்டுகின்றது.

அலுவலகம் தோறும், இல்லங்கள் தோறும் அவர்களின் தேசியகொடி கம்பீரமாக பறக்கின்றது, வானொலி பத்திரிகை எல்லாம் அவர்கள் கடந்துவந்த பாதைகளை, மக்கள் பொறுப்பினை சொல்லிகொண்டே இருக்கின்றார்கள், அப்படி ஆவணபடுத்தி இருக்கின்றார்கள்.

நிச்சயமாக சொல்லலாம் பல இனம் கலந்து வாழும் நாடு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அவர்களே சாட்சிகள், வாழும் உதாரணங்கள்.

இரண்டாம் உலகபோரின்பொழுது மலேயா கடுமையாக பாதிக்கபட்டது, அதன் பின் எழும்பியது. பொதுவாக பிரிட்டிசார் அடிப்படை அமைப்புக்களை அழகாக அமைப்பார்கள், மலேசியா அதனை தொடர்ந்து புதுப்பித்துகொண்டது, இந்தியா அதனை செய்ய தவறிவிட்டது, இங்கு ஆயிரம் சிக்கல்கள், வேறுமாதிரியான பிரச்சினைகள்,

சமூக அமைதியும் விட்டுகொடுத்தலும் மகா அவசியம், சிங்கப்பூர் மலேயா அப்படித்தான் அமைதியாக் வாழ்கின்றன, இரண்டும் பகை நாடுகள் அல்ல, இருவரும் ராணுவத்திற்கு செலவழிப்பவர்கள் அல்ல‌

ஆனால் பாகிஸ்தானும் இந்தியாவும் அதில்தான் தங்கள் பணத்தினை செலவளிக்கின்றன, அதுவும் 10 வருடம் முன்பு வாங்கிய ஆயுதம் இன்று பழையதாகிவிடும், வாங்கிகொண்டே இருக்கவேண்டும், பின் எப்படி தேசம் வளரும்.

ஆயுதம் விற்கும் தேசம்தான் வளரும்.

பிரிட்டிசார் எங்கும் பிரிவினை வைத்தே ஆண்டனர், இந்தியாவில் இந்து முஸ்லீம், இலங்கையில் தமிழர் சிங்களர், பர்மாவில் தமிழர் பர்மீயர் என அவர்கள் அரசியல் அப்படி இருந்தது, பின்னாளில் மலேசியாவும் அப்படியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தது

பர்மா சீரழிந்துவிட்டது, இலங்கை விவகாரம் உலகறிந்தது, இந்தியா பாகிஸ்தான் மகா பிரசித்தம்.

ஆனால் அசால்ட்டாக தாண்டி இன்று பலநாட்டு மக்களை விட‌ முண்ணணியில் தன் மக்களை வாழ்வாங்கு வாழ வைக்கின்றது மலேயாவும் சிங்கப்பூரும்

வன்மத்தாலும் விரோதத்தாலும் வீழ்ந்தவர்கள் அவர்கள். அன்பாலும் சகோதரத்துவத்தாலும் வாழ்வாங்கு வாழ்பவர்கள் இவர்கள், அன்பும், நம்பிக்கையும், சகோதரத்துவமே அமைதியாக வாழ வழி என சொல்லிசாதித்திருப்பவர்கள் இவர்கள்.

அதனைத்தான் நினைத்தாலே இனிக்கும் படத்தில் பாடலாக வைத்தார் கவியரசர்,” நண்பர் உண்டு , பகைவர் இல்லை. நன்மை உண்டு தீமை இல்லை” என அந்நாடுகளை அழகாக பாடலில் வைத்தார்

சுதந்திர தினத்தினை கொண்டாடும் அவர்கள் பெருமிதத்தோடு கொண்டாடுகின்றார்கள், இன்னும் போராடி அவர்கள் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் காத்துகொண்டிருக்கும் பெருமையான அவர்கள் கொடி எல்லா இடங்களிலும் பறக்கின்றது.

பல இனங்கள் வாழும் நாடு எப்படி இருக்க வேண்டும், நாட்டு மக்கள் எப்படி பொறுப்பாக இருக்க வெண்டும் என்பதற்கு மிக சிறந்த நாடு மலேசியா

மிகசிறந்த ஆட்சியாளரான மகாதீர் முகமது மறுபடியும் நாட்டின் சுக்கானை பிடித்து வழிநடத்துவதால் அவர்களுக்கு கூடுதல் உற்சாகம்

அவர்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

தெய்வீக கவிஞர் கண்ணதாசனின் “யாதும் ஊரே யாவரும் கேளிர், அன்பே எங்கள் உலக தத்துவம்” பாடல் மனதோரம் ஒலிக்கின்றது, அவ்வளவு அர்த்தமுள்ளதாக அவர் எழுதியிருப்பார்

மலேய மக்களின் மனமும் நாட்டின் செழுமையும் அப்படி சொல்லியிருப்பார் அவர்.

அந்த பாடல் எல்லா காலமும் பொருந்திவருகின்றது என்பதுதான் மகிழ்ச்சிகுரியது, அவர்கள் நாட்டிற்காக அவர் எழுதிய அற்புதமான பாடல்.

எமது ஊருக்கும் மலேசியாவுக்குமான தொடர்பு அக்காலத்தில் இருந்தே அதிகம், விவசாயம் பொய்த்த 18ம் நூற்றாண்டின் கடைசியிலே ஏற்பட்ட தொடர்பு அது

எங்கள் ஊரை ஒரு காலத்தில் இந்நாடுதான் வாழவைத்தது, அங்கு உருவாகியிருக்கும் வயல்கள் முதல் ஆலயம் வரை எல்லாம் இந்நாடு கொடுத்தது

அந்த நன்றிக்ககத்தான் நாமும் இங்கு வந்தொம், எமக்கும் கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் சோறுபோட்டு இன்னும் என்னவெல்லாமோ போட்டு பாதுகாக்கின்றது

பாரதி சொல்வான் காசி எனும் நகரில்தான் நான் உருவானேன், எட்டையாபுரத்தில் இருந்தால் சாதாரண வியாபாரியாக வாழ்ந்து மரித்திருப்பேன், காசி என்னை வளர்த்தது என மனமார சொன்னான் பாரதி

பர்மா தமிழர் வரலாறுகளில் கலைஞருக்கு ஒரு மயக்கம் இருந்தது, அவரது எழுத்துக்களில் அது மின்னும், “ரங்கூன் என்னை வளர்த்தது , உயர்ந்தவனாக்கியது” என்ற பராசக்தி வசனம் அதுதான்

அப்படி எம்மால் மிக உறுதியாக சொல்லமுடியும், இந்நாடு என்னை வளர்த்தது எவ்வளவோ அனுபவங்களை எமக்கு கொடுத்தது

அதில்தான் இந்த உலகையும் உலக இனங்களையும் அருமை இந்தியாவினையும் உற்றுபார்க்க முடிகின்றது

இந்நாட்டுகு எந்நாளும் நன்றியுள்ள மனதை இறைவன் எமக்கு அருளட்டும், இந்நாடு எமக்கு கொடுத்த நல்ல விஷயங்கள் அப்படி ஏராளம்

அந்த தேசம் வாழ்வாங்கு வாழட்டும், மலேசியர் மனம்போல் மிக உயர்ந்து நிலைத்து வாழட்டும்

அவர்களின் கொடி இன்று போல் என்றும் உயர பறக்கட்டும்…

கொட்டும் மழை போல் எல்லா ஆசீகளும் அந்நாட்டுக்கு கொட்டிகொண்டே இருக்கட்டும்

இந்தியாவுக்கே கோபம் வந்துவிட்டது

ரஷ்யா தன் ஆயுத விளையாட்டை இம்முறை வேறுமாதிரி ஆட இந்தியாவுக்கே கோபம் வந்துவிட்டது, சரிதான் போய்யா என பாதியில் கிளம்பிவிட்டது இந்திய குழு

அதாவது இந்திய ரஷ்ய கூட்டுதயாரிப்பான பிரம்மோஸ் போல இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து 5ம் தலைமுறை போர்விமானமான ஸெடெல்த் நுட்பத்துடன் கூடிய சு 57 ரக விமானங்களை தயாரிக்க முடிவு செய்தன‌

ஆனால் ரஷ்யா தொழிநுட்பத்தை தரமுடியாது, தகரமும் பெயின்டும் நீங்கள் கொண்டுவாருங்கள் இன்சினும் தொழில்நுட்பமும் நாங்கள் மாட்டுகின்றோம் ஆனால் விலையில் பாதியினை நீங்கள் கொடுக்க வேண்டும் என்றது

ஆகா பெயிண்டும் தகரமும் இன்னும் சிலவும் கொடுத்து பெரும் பணமும் கொடுத்து இவ்வளவு விலையில் விமானம் வாங்கவா? நாம் என்ன கேணையர்களா? தொழில் நுட்பம் தராமல் எப்படி என இந்தியா எதிர்த்தது

ரஷ்யாவோ நீ முறுக்கு கொண்டுவா நான் கல் கொண்டு வருவேன் இருவரும் சேர்ந்து இடித்து உண்ணலாம் என தன் வழக்கமான பிடிவாதத்தில் இருந்தது

அவர்கள் கேட்கும் பணத்திற்கு பத்து ரிசர்வ் வங்கியும் அதன் உபரி நிதியும் மொத்த நிதியும் இன்னும் கலாநிதி தயாநிதி உதயநிதியின் மொத்த சொத்தையும் கொடுத்தாலும் போதாது

அவ்வளவு விலை

இதனால் ஆட்டத்துக்கு நாங்கள் வரவில்லை என துண்டை உதறி தோளில் போட்டுவிட்டு கிளம்பியது இந்தியா

நீ வரலண்ணா போ, அதோ அவர் வருவார்ல என சீனாவினை இழுக்கின்றது ரஷ்யா

ஆம் சு 57 எனும் நவீன விமானத்தை சீனாவுடன் சேர்ந்து தயாரிப்போம் என்பது போல் பாவனை காட்டுகின்றது

அதாவது இப்படி சொன்னால் அய்யன்மீர் எவ்வளவு செலவானாலும் நாங்கள் தருகின்றோம் என இந்தியா ஓடிவரும் என்பது அவர்கள் கணக்கு

ஆனால் அவர்கள் சீனாவிடமே செல்லட்டும் நிச்சயம் இந்த விலைக்கு சீனா ஒத்துவராது, நம்மிடமே வருவார்கள் அப்பொழுது வைத்துகொள்ளலாம் என திட்டமிடுகின்றது இந்தியா

ஆக விவகாரம் பருத்திவீரன் பட பாணியில் செல்கின்றது

ஆட்டத்தின் பாதியில் இவனுக இன்னும் எத்தனை குடிய கெடுக்க போறானுகளோ என தலையில் அடித்தபடி வந்துவிட்டது இந்தியா

ரஷ்யாவோ “அண்ணே சீனா அண்ணே, கயிரோடு கிளம்பிட்ட‌ போறியாண்ணே, உலகத்த கட்டி இழுக்க போறியாண்ணே.. உனக்கென்ன ஒருநாளு உலக வல்லரசாயிருவ..” என்றபடி ஆட்டத்துக்கு சீனாவினை அழைக்கின்றது

சீனாவும் “ஐரோப்பாவுல தான் நீங்க கிங்கு, ஆசியாவுல நாங்கதான். உடனே பிளைட் செஞ்சி டிரம்ப் மூஞ்சில குத்தணும்..” என சொன்னபடியே செல்கின்றது

இருந்து பாருங்கள், அதே கயிரோடு சீனா கொஞ்ச நாளில் கயிரோடு அழுது கொண்டுவரும், யாராவது “என்னண்ணே உலகை கயிறு கட்டி இழுக்க போகின்றீர்களா” என கேட்டால் “ம்ம்ம் நாண்டுகிட்டு சாக, இவனுக இன்னும் எத்தனை குடிய கெடுப்பானுகளோ.. ” என தலையில் அடிக்கும் பதில் வரும்