சீனபயணி யுவான் சுவாங், பாஹியான் மார்க்கோ போலோ என அக்கால பயணிகளின் குறிப்புகளில் இந்தியா பணக்கார தேசமாகவே காட்டபடுகின்றது, பிச்சைக்காரர் ஒடுக்கபட்டோர் தலித் திராவிட அடிமைதனம் எதையும் அவர்கள் எழுதி வைக்கவில்லை
கிழக்கிந்திய கம்பெனி வியாபார அனுமதிக்காக ஜஹாங்கீர் அரண்மனையில் நின்றபொழுது அது பூலோக சொர்க்கம் என்றே குறிப்பு எழுதி வைக்கபட்டிருக்கின்றது
இந்தியாவில் வறுமையும் கொடுமையும் ராபர்ட்கிளைவ் வந்து ஆடி கொள்ளையடித்த காலத்தில் நடந்திருகின்றது
அவனும் அவனின் அடிபொடிகளும் தங்கவேட்டையே இங்கு நடத்தி வங்கத்தை சுரண்டியிருக்கின்றார்கள்
வங்கம் பெரும் சிக்கலில் முதல் பஞ்சத்தை சந்தித்து பல லட்சம் பேர் இறந்திருக்கின்றார்கள், அந்த பாவமெல்லாம் தன்னை சார்ந்தது என கிளைவும் தற்கொலை செய்து கொள்கின்றான்
வெள்ளையன் ஆட்சி வந்தபின்பே இங்கு பெரும் பிரிவினையும் பஞ்சமும் வந்திருகின்றது, அப்படி ஒரு சமூகம் உருவாக உருவாக அவர்களை ஆப்ரிக்காவுக்கும் பிஜூ தீவுக்கும் கயானாவுக்கும் மலேசியாவுக்கும் இலங்கைக்கும் அவனால் கொண்டு செல்ல முடிந்திருகின்றது
வரலாற்றை ஆழமாக படிக்கின்றோம், அவன் வருமுன் ஒரு நபர் பாரத கண்டத்தில் இருந்து கடல்தாண்டி பிழைக்க செல்லவில்லை,
வியாபார சமூகம் வேறு
கும்பல் கும்பலாக கப்பல் ஏறியது பிழைப்புக்காக வெள்ளையன் காலத்திலே
அவனே வீழ்த்தினான் அவனே ஏழையாக்கினான் அவனே அடிமையாக்கி வெளிநாடுகளுக்கு இழுத்தும் சென்றிருக்கின்றான்
தன்னிறைவு பெற்ற கிராமங்கள் அவன் காலத்தில் திட்டமிட்டு நொறுக்கபட்டிருக்கின்றன, அது விவசாயம் வரை அன்றே தோற்றிருகின்றது
1800களிலே லாபமில்லா தொழிலாக விவசாயம் மாறியிருக்கின்றது, ஒருவித குழப்ப நிலை அன்றே தொடங்கியிருக்கின்றது
கலாச்சாரங்களும் பாரத பெருமைகளும் மகா இழிவாக அவனால் போதிக்கபட்டு மதமாற்றமும் இன்னும் பலவும் நடந்திருக்கின்றன
பிச்சைக்காரர் இல்லா சமூகத்தை சுரண்டி அதை பிச்சைக்கார சமூகமாக மாற்றி அவர்களுக்கு அவனே மருந்தும் ஆறுதலுமாகி வரலாறு எங்கெல்லாமோ விஷயங்களை இழுத்து செல்கின்றது
எந்த கல்கத்தா ஒருகாலத்தில் பணக்கார தேசமாயிருந்ததோ அது ராபர்ட் கிளைவினால் சீரழிக்கபட்டது, தெரசே வந்தது பாவபரிகாரம் அன்றி வேறல்ல
இங்கு வறுமை அவனின் சுரண்டலால் வந்தது, அதனாலே நாடுவிட்டு நாடு செல்லும் அவலநிலை இந்தியருக்கு வந்தது அது இன்னும் தொடர்கின்றது
பிரிட்டனின் சுரண்டலை முறையாக உணர்ந்த பிரிட்டிஷ் குடிகளான அமெரிக்கர்களே அவர்களை விரட்டி அடித்து சுதந்திர நாடாகி முன்னேறினர் என்றால் பிரிட்டனின் கொடுமை எந்த அளவுக்கு இருந்திருக்கும்??
அவர்களுக்கு விழிப்பு இருந்திருகின்றது, இந்தியர் பாவம் சுரண்டலில் சிக்கி சீரழிந்துவிட்டார்கள்
இத்தேசம் வெள்ளையன் வராவிட்டால் கல்வி பெற்றிருக்காது, முன்னேறியிருக்காது என்பதெல்லாம் அபத்தம்
இதுபற்றி புத்தகம் எழுதினாலும் தகும், அவ்வளவு விஷயம் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவினை சீரழித்த விவகாரத்தில் ஒளிந்திருக்கின்றது