காஷ்மீரை தொடர்ந்து அசாமில் கவனம் குவிகின்றது

காஷ்மீரை தொடர்ந்து அசாமில் கவனம் குவிகின்றது, காஷ்மீரில் முழு அமைதியினை நிலைநாட்டு நெருப்பாற்றை தாண்டிவிட்ட பாஜக அரசு அசாமில் மிக கடுமையான சவாலை சந்திக்கின்றது

அதாவது அசாமில் ஏகபட்ட வங்கதேச மக்கள் உண்டு அவர்கள் இஸ்லாமியர் என்பது கூடுதல் விஷயம்

அவர்கள் 1971க்கு முன்பு அதாவது வங்கபோருக்கு முன்பு முறைபடி இங்கு வந்திருந்தால் சிக்கல் இல்லை, வம்சம் வம்சமாக வாழ்ந்திருந்தால் சிக்கல் இல்லை ஆனால் 1971க்கு பின்பு வந்தவர்கள் அவர்களுக்கு பிறந்தவர்கள் முறையான ஆவணம் இல்லாதவர் எல்லோரும் நாடற்றவர்கள் என அறிவிக்கபடுவார்கள் என சொல்கின்றது மத்திய அரசு

மத்திய அரசுக்கு அவர்கள்மேல் என்ன வெறுப்பு?

வெறுப்பு ஒன்றுமில்லை அவர்கள் வங்கதேசமக்கள் , அவர்களுக்க்கு அந்நாடுதான் பொறுப்பு இங்கே இந்தியருக்கு வழங்கபடும் நலதிட்டங்களை அவர்கள் பெற்று அசாமியருக்கு தடையாக இருகின்றார்கள் என்கின்றது இந்திய அரசு

மெக்ஸிகோ மக்கள் மேல் டிரம்ப் காட்டும் கோபம் போன்றது இது

ஆனால் அவர்களோ நாங்கள் அகதிகளாய் வந்தவர்கள் இங்குதான் இருப்போம், இந்தியாதானே போர் நடத்தி எங்களை இப்படி ஆக்கிவிட்டது ஆக இந்தியாதான் பொறுப்பு என்கின்றார்கள்

இல்லை 1971ல் உங்களுக்கு தனிநாடு உருவாக்கி தந்துவிட்டோம் நீங்கள் செல்லாமல் இங்கே இருந்தது இந்திய சட்டபடி தவறு என்கின்றது இந்தியா

பொதுவாக எந்த நாடும் இன்னொரு நாட்டு மக்கள் அதிகமாவதை ஏற்காது அது பல சிக்கலுக்கு வழிவகுக்கும் என அஞ்சும்

மலையக தமிழர்களும் பர்மா தமிழர்களும் திருப்பி அனுப்பபட்டது அப்படித்தான்

எனினும் இங்கு திபெத் அகதிகள் ஈழ அகதிகள் இருக்கும் பொழுது வங்க அகதிகள் ஏன் இருக்க கூடாது என எதிர்குரல்கள் எழ ஆரம்பித்துவிட்டன‌

ஆனால் அந்த எண்ணிக்கையினை ஒப்பிடும் பொழுது அசாமில் வங்கமக்கள் எண்ணிக்கை பல லட்சம் அதிகம் என்கின்றார்கள்

மிக முக்கியமான சிக்கலான இவ்விஷயத்தில் இன்னும் சில நாட்களில் அரசு இவர்கள்தான் இந்திய மக்கள், இதில் இடம்பெறாதோர் அகதிகள், நாடற்றவர்கள் என அறிவிக்க இருகின்றது

நிச்சயம் பெரும் கலவரம் ஏற்படும் என்பதால் பாதுகாப்புகள் பலபடுத்தபட்டிருக்கின்றன‌

அந்த மக்கள் இஸ்லாமியராய் இருப்பதால் இது பாஜகவின் திட்டமிட்ட சதி என வழக்கமான ஒப்பாரிகள் தொடங்கிவிட்டன‌

அறிக்கை வெளிவரட்டும் அதன் பின் தெரியும் செய்தி

ஒருவேளை பெரும் எண்ணிக்கை மக்களை வெளியேற்ற வேண்டும் என்றால் எங்கு வெளியேற்றுவார்கள்? வங்க தேசம் வெறு வாயே திறக்கவில்லை

பெரும் சிக்கலான பிரச்சினை இது , எனினும் முடிவு எடுத்தே தீரவேண்டும்

எம்மிடம் கேட்டால் அவர்களை இந்தியராக குடியுரிமை கொடுத்து வைக்கலாம்தான், அவர்கள் இங்கே பிறந்து வளர்ந்தவர்கள் வேறு எங்கே செல்வார்கள்?

வங்கதேசம் ஒன்றும் இன்னொரு தேசமல்ல ஒரு காலத்தில் நம் பங்காளிகள், இன்றும் நமக்கு பாதுகாப்பான தேசம்

நாம்தான் அவர்களுக்கு சுதந்திரமும் வாங்கி கொடுத்தோம், அவர்களை சுதந்திரமாக வாழவைத்தோம்

இப்பொழுது அந்த அபலைகளுக்கு இங்கே குடியுரிமை கொடுத்து வாழவைப்பதுதான் சரி

கிட்டதட்ட பல லட்சம் மக்களை விரட்டினால் அக்குடும்பங்கள் எங்கு செல்லும்? எங்கு வாழும்? புதிய நாட்டில் எப்படி வாழ்க்கையினை தொடங்குவார்கள்

ஆக அம்மக்களை இங்கே வாழவிடுவதுதான் சரி

இந்தியாவும் அதைத்தான் செய்யமுடியும் என்கின்றார்கள் , பல லட்சம் மக்களை அடித்து விரட்டினால் பெரும் சிக்கலை சர்வதேச அரங்கில் இந்தியா எதிர்கொள்ளும்

அதனால் வெறும் கணக்கெடுப்பாக இதை நடத்தி ஆவணமின்றி நெடுங்காலம் இருப்போருக்கு ஆவணம் கொடுத்து இங்கே அமர்த்துவதுதான் மனிதாபிமானமும் அறமும் உள்ள செயலாகும்

சரி சர்ச்சையானால் என்ன நடக்கும்?

திமுக போராட்டம் அறிவிக்கும், முக ஸ்டாலின் தீர்மானம் எல்லாம் போடுவார்

வங்கதேச ரேடியோ இந்தியாவின் மூன்றாம் கட்சி எங்களை ஆதரிகின்றது என கிளம்பும்

உடனே மாரிதாஸ் டாக்கா டூ கோபாலபுரம் என்றொரு வீடியோவினை வெளியிடுவார், உடனே ஆர்,எஸ் பாரதி கமிஷணர் அலுவலகம் செல்வார்

அதன்பின் திமுக அந்த மக்களை விரட்டியது தவறென சொல்லவிலை மாறாக கையில் சில ஆயிரம் கொடுத்து அனுப்ப வேண்டும் என்றுதான் சொன்னோம் என பல்டியடிக்கும்

இப்படி தமிழக காமெடி காட்சிகளும் அரங்கேறும்

எனினும் பல லட்சம் குடும்பங்கள் குழந்தைகள் நெடுங்கால வாழ்வு என இங்கே நிலைத்துவிட்ட அம்மக்களை வேரோடு பிடுங்கி எறிவது சரியல்ல‌

எவ்வளவோ இனங்கள் இங்கு இணைந்து வாழ்கின்றோம், அவர்களும் நம்மில் ஒருவராக இணைந்து வாழ்ந்துவிட்டு போவதில் என்ன குறைந்துவிடும்?

சட்டத்தில் கொஞ்சம் தர்மத்தையும் கலந்து அரசு சிந்திக்கட்டும்

அரசு நல்லமுடிவாக எடுக்கட்டும், அம்மக்களுக்கு நல்ல பொழுதாக விடியட்டும்

விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

இந்து சமயத்தில் முப்பது முக்கோடி தேவர்கள் உண்டு என்பது நம்பிக்கை, அந்த முப்பது முக்கோடிகளில் 30 பேருக்கு மேல்தான் வெகு பிரசித்தம் அந்த 30 பேரில் முதல் 5 இடங்களுக்குள் வருபவர்களில் ஒருவர்தான் வடமொழியில் விநாயகர் அல்லது கணேசன்.

நமது தமிழில் பிள்ளையார் என அழைக்கபடுகிறார் அந்த கணபதி ஐந்து கரங்களை கொண்டவர் என்பதால் ஐங்கரன் எனவும் அழைக்கபடுகிறார்.

இந்தியா மட்டுமல்ல ஒருகாலத்தில் ஆசியா முழுக்க (அரேபியா,மங்கோலியா,இந்தோனிசியா வரை) பரவியிருந்த இந்து மதத்தின் பிரதான கடவுளவர், .

இன்றும் இந்தோனேஷியாவில் பிள்ளையார் கோவில் உண்டு , அவர்கள் கரன்சியிலும் பிள்ளையார் உண்டு, அப்படி பல நாடுகளில் பிள்ளையார் இன்றும் உண்டு.

ஒரு காலத்தில் பிள்ளையாரை தனிகடவுளாக கொண்ட கானாதிபத்தியம் என்ற சமயமே இருந்திருக்கின்றது

பின்னாளில் அது அக்கால மோதல்களான சைவ,வைணவத்தோடு இணைந்தது.

கணங்கள் எனப்படும் இயக்கும் சக்திகளுக்கு., அதாவது ஒவ்வொரு கணமும் இயக்கும் சக்திக்கு அதிபதி அவர்தான். அதனால் அவர் கணங்களின் அதிபதி கணபதி ஆனார்,

பெரும் சக்திகொண்டவர், காக்கும் கடவுள் என புகழபடும் திருமாலை கூட இவரே காத்தவர் என பெரும் புகழ்கொண்டவர், மிக பெரும் சக்தியின் வடிவம்.
யாரும் எப்பொழுதும் வழிபடலாம்.

இது தீட்டு என்றோ அல்லது கட்டுபாடுகளோ அவருக்கு இல்லை, இதுதான் பிள்ளையாரின் பெரும் சிறப்பு, சனிக்கே சனிபிடிக்க வைத்தவர்.

மிக மிக எளிமையான தெய்வம், பணம் கொட்டும் பெரும் ஆலயங்களிலும் இருப்பார் , தெருமுனை ஆலயத்திலும் இருப்பார், பக்தர்களின் வேண்டுதல் என்றால் பசுஞ்சாணத்தில் கூட காட்சியளிக்கும் தெய்வம் அவர், வழிபடுவதற்கும் மிக மிக எளிமையானவர்,

சாதாரண வெள்ளெருக்கும், அரும்புல்லும் கூட போதும். கூடுதலாக தமிழர்கள் தேங்காயும் சேர்த்து கொண்டனர்.

16 வகை ஆசீர்வாதத்திற்கும் அவரே அதிபதி என்பதும் நம்பிக்கை, அவரை தொழுதுதான் செயலை தொடங்குவார்கள், வட இந்தியா முழுக்க பிள்ளையாருக்கு செல்வாக்கு அதிகம், முருகனை தெய்வமாக கொண்டாடும் தமிழர்கூட பிள்ளையாருக்கு தனி இடம் கொடுத்திருக்கின்றார்கள்.

முருகனை உருகி உருகி பாடிய அவ்வையும் (கே.பி சுந்தரம்பாள் வடிவில் நாமும் பார்த்திருப்போம் ) முருகனை பழனிக்கு அனுப்பிய விநாயகருக்கு, விநாயகர் அகவல் என ஒரு காவியம் பாட தவறவில்லை என்பதில்தான் விநாயகரின் கனமான இடம் தெரிகிறது.

அக்காலத்தில் வட இந்தியரின் (இந்துக்களின் அடித்தள பூர்வீகமான இமயமலை பகுதிகள்) ஆண்டுகணக்கு ஆவணிமாதத்திலே தொடக்கம், வருட தொடக்கத்திலே பிள்ளையாரை வணங்க அவர்கள் கொண்டு வந்த கொண்டாட்டமே விநாயகர் சதுர்த்தி.

முன்பெல்லாம் பாம்பு புற்றிலிருந்து மண் எடுத்து பிள்ளையார் உருவம் செய்து அவருக்கு பிடித்தமான படையலிட்டு, விரத காலம் முடிந்து அதனை கிணறு மற்றும் ஆறுகள் போன்ற நீர் நிலைகளில் கரைப்பார்கள்.

வளமான களிமண்ணை மண்ணை கரைப்பதன் மூலம் அந்நீர் வயலுக்கு பாயும் பொழுது நிலம் இன்னமும் செழிப்படையும், இந்த பெரிய வேளான்மை தத்துவமும் அதில் அடங்கியிருந்தது, சாணப்பிள்ளையார் தத்துவமும் இதுவே,சிறிதும் ரசாயாண கலப்பற்ற அந்த நீர் நிச்சயம் வளம் கொடுக்கும், விளைச்சல் பெருகும்.

நவராத்திரி கொலு போன்றோ அல்லது கிருஷ்ண ஜெயந்தி போன்றோ மிக அமைதியாக நடந்து கொண்டிருந்த விழாதான் விநாயகர் சதுர்த்தி, அமைதியான தெய்வம் அமைதியான விழா.

ஆனால் இன்று நடைபெறும் பெரும் ஊர்வலங்களுக்கும், காவல்துறையினரின் தூக்கத்தினை கெடுக்கும் அளவிற்கு சில சர்ச்சைகளுக்கு இடமான முறையில் நடைபெறும் அளவிற்கு இதனை மாற்றிய பெருமை பால கங்காதார திலகரையே சேரும்.

மிகபெரும் சுதந்திர போராட்ட வீரர் திலகர், காந்திக்கு முன்பே “சுதந்திரம் எமது பிறப்புரிமை” என முழங்கியவர், ஆனால் அரசுக்கு எதிரான ஊர்வலங்களுக்கு பிரிட்டிஷ் அரசு தடைவிதித்த பொழுது, மிக சாதுர்யமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை நடத்தி “இது மத நம்பிக்கை” என வெளியே சொல்லி, விநாயகர் ஊர்வலத்திலே சுதந்திர வேட்கை ஊட்டியவர்.

மிசா காலகட்டத்தில் அண்ணா சமாதி கூட்டத்திலே அரசியல் நடத்திய கலைஞரை போல )

வெள்ளையரால் தடுக்கவும் முடியவில்லை காரணம் மத சுதந்திரம் அளித்திருந்தது சட்டம், விளைவு இந்தியர்களுக்க் மிக பிடித்த பிள்ளையார் பெரும் இந்திய அடையளாமாக மாறினார்.

சதுர்த்தி ஊர்வலத்தில் சுதந்திர முழக்கங்களும் சேர்ந்தன,

ஆனால் பிள்ளையாரை பிடிக்க குரங்காய் முடிந்தது போல, சுதந்திரம் பெற்ற பின்னும் தொடர்ந்தது, குறிப்பாக மும்பை போன்ற நகரங்களில் அதன் கொண்டாட்டமே தனி, மக்கள் ஆதரவினை பெறவேண்டும் என்பதற்காக வரதராஜ முதலியார் (நாயகன் படத்தின் மூலகாப்பி) போன்றோர் பெரும் செலவுகள் செய்தனர், நாடெங்கும் அது மேலும் பரவியது. இன்று ஏராளமான ரசாயாண பிள்ளையார்கள் வருட வருடம் டன் கணக்கில் நீர் நிலைகளில் கரைக்கபடுகின்றன.

இது மத நம்பிக்கை, ஆனால் பொது அமைதிக்கும் யாருடைய மனதிற்கும் எள்நுனி அளவும் காயபடுத்தாத வகையில் கொண்டாடபடும் பண்டிகைகளே அதன் உண்மை பொருளை உணர்த்தும், மிக சில இடங்களில் இது சர்ச்சைகுள்ளாகும் பொழுது அமைதியின், எளிமையின் சின்னமான பிள்ளையாரை கலங்கிய கண்களோடுதான் பார்க்க தோன்றுகின்றது.

எல்லா இனத்தாருக்கும் இந்தியாவில் பிள்ளையாரை பிடிக்கும், தமிழர்கள் கூட பிள்ளையார் சுழி போட்டுத்தான் தொடங்குவார்கள், அவரை முன்னிறுத்துகின்றார்கள். அவரை தொடங்கி நினைத்த காரியங்கள் பெரும்பாலும் காலத்தை வென்று நிற்பவை.

உதாரணம் மகாபாரத கதையை வியாசர் சொல்ல சொல்ல பிள்ளையார் எழுதினார் என்பார்கள், அவர் ஒரு பக்க தந்தத்தினை உடைத்து எழுத்தாணியாக எழுதினார் என்பது மரபு நம்பிக்கை.

அவர் தந்தத்தை உடைத்தாரா அரச மரத்து கிளையினை உடைத்தாரா என்பது பிரச்சினை அல்ல

அவர் தொடங்கிவைத்திருக்கின்றார் அல்லது அவரை முன்னிறுத்தி தொடங்கியிருக்கின்றார்கள், பாரத கதை காலங்களையும் தாண்டி நிலைத்திருக்கின்றது.

தாயை போல பெண்ணை தேடுகிறேன் என சொல்லி மனிதர்களுக்கு பெரும் தத்துவம் தந்தவர், தாயினை போல குணநலன்களோடு ஒரு மனைவி அமையும் பட்சத்தில் வாழ்வு இனிமையாகும் என்ற அரிய தத்துவத்தை சொன்னவர்

அரசமரம் மனிதருக்கு நல்ல அமைதியை கொடுக்கும் என அமர்ந்து, புத்தருக்கே வழிகாட்டியவர்.

இன்னும் ஏராளமான ஆண்மீக,அறிவியல் தத்துவங்களின் மொத்த வடிவம் பிள்ளையார், அவருக்கு பிடித்த அருகம்புல்லும், இன்றும் மருத்துவ உலகம் ஒத்துகொள்ளும் அருகம்புல் பெருமையும் போல ஏராளமான தத்துவங்களை தனது பெருவயிற்றில் ஒளித்து வைத்திருப்பவர்.

பிள்ளையார் என்பவர் மாபெரும் தத்துவ வடிவம்.

இந்தியாவில் எல்லா மக்களுக்கும் அவரை பிடிக்கும் என்றாலும், தமிழக செட்டியார்களின் இஷ்ட தெய்வம் அவர், பிள்ளையார் பட்டியில் அவரை கொண்டாடும் நாட்டுகோட்டை செட்டியார்களின் பெரும் நம்பிக்கை அவரே.

விநாயர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் உள்ள பெரும் ஆண்மீக தத்துவம் என்னவென்றால், மண்ணில் செய்யபடும் விநாயகர் சிலை குறிப்பிட்டகாலம் முடிந்து நீர் நிலைகளில் கரைந்து விடுகின்றது, அதாவது நிலையானது அல்ல இன்னும் ஆழமாக சொன்னால் மண்ணில் உண்டானது எல்லாம் மண்ணிற்கே திரும்பும்.

அதே தான், யூத மதமும்,இஸ்லாமும், கிறிஸ்தவமும் இன்னும் எல்லா மதங்களும் வலியுறுத்தும் தத்துவம்தான் “மண்ணில் உண்டான மனிதன் மண்ணிற்கே செல்லவேண்டும்”

இந்த உண்மையைதான் சொல்லாமல் சொல்கிறார்கள் விநாயர் சதுர்த்தியன்று இந்தியா முழுக்க வீற்றிருக்கும் கோடிக்கணக்கான பிள்ளையார்கள், இதனை உணர்ந்து கொள்பவர்கள் மிக அமைதியாக சாத்வீக பூஜைகளில் மனதினை செலுத்தி அமைதியை உணர்வார்கள்,அதனை மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள்.

அங்கே வீண் ஆரவாரமும், முழக்கங்களும், வெற்று கூச்சல்களும் இருக்காது, ஓங்கார பிரவண தத்து பிள்ளையார் போல பெரும் அமைதி மட்டுமே இருக்கும்.

காவல்துறையும் அமைதியாக ஆங்காங்கு இருக்கும் பிள்ளையாரை கையெடுத்து வணங்கிகொண்டிருக்கும்.

இந்த விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் எல்லோருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிக்கும் வேளையில் இருவரை நினைத்தால் சாணி பிள்ளையாரை எடுத்து அடிக்கவேண்டும் என தோன்றுகிறது

ஒன்று ஆயிரம் வழிகள் இருந்தும் மசூதி இருக்கும் தெரு வழியேதான் ஊர்வலத்தை நடத்துவேன் என அடம்பிடிப்பவன்

இன்னொன்று பெரும் தத்துவ பிம்பான பிள்ளையாரை “அழுக்கு மூட்டை” என பேசிவிட்டு, இன்று தமிழருக்கு சதுர்த்தி வாழ்த்து என பேனரில் கையினை தூக்கிகொண்டிருக்கும் பகுத்தறிவு இம்சைகள்

இருவருமே ஒரு வகை மனக்கோளாறு பிடித்தவர்கள் என்பதால் பொறுப்பினை பிள்ளையாரிடமே ஒப்படைத்துவிடலாம், சனியினையே விரட்டியவர், இந்த தமிழக சனியன்களை விடுவாரா?

இந்த தமிழக சனிகளை அவர் விரட்டட்டும்..

எப்படியோ வினை தீர்ப்பான் விநாகயன் என்பார்கள், அவன் எல்லோர் வாழ்விலும் வினை தீர்க்கட்டும், அருள் பொழியட்டும்.

எல்லோருக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

ஈரான் எப்படியாவது ஒரு செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்ப படாதபாடு படுகின்றது

ஈரான் எப்படியாவது ஒரு செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்ப படாதபாடு படுகின்றது, அப்படி நிறுத்திவிட்டால் தன் ராணுவ பாவனைக்கு பாவிகலாம் என்பது அதன் திட்டம்

ஆனால் செயற்கை கோளை அந்நாடு விண்வெளியில் நிறுத்தினாலும் அதை செயல்படாமல் முடக்கி போட அமெரிக்கா முயற்சிக்கும் என்பது எல்லொருக்கும் தெரிந்த விஷயம் ஈரான் உட்பட‌

எனினும் அது செயற்கைகோளை ஏவ முயன்று நேற்று 3ம் முறையாக தோற்றிருக்கின்றது

கிளம்பும் முன்பே ராக்கெட் வெடித்து சிதறியிருக்கின்றது

அது வெடித்து சிதறிய காட்சியினை டிரம்ப் தன் வழக்கமான கிண்டலுக்காக வெளியிட்டுவிட்டார்

ஆம் அது அமெரிக்க செயற்கைகோள் அல்லது உளவு விமானம் மூலம் எடுக்கபட்ட படம், ஆக எம்மை உளவு பார்க்கின்றீர்கள் அப்படித்தனே, இதோ அமெரிக்கா எம்மின் தலைவரை வந்துவிட்டது என அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டது ஈரான்

அமெரிக்க உளவு மற்றும் பாதுகாப்புதுறை தலையில் கைவைத்தபடி அமர்ந்திருக்கின்றது

அதாவது அவர்கள் உளவு பார்த்து படமெடுத்து அதிபர் என்றமுறையில் டிரம்பிடம் படத்தை கொடுத்து கடமையினை செவ்வனே செய்துவிட்டார்கள்

ஆனால் டிரம்ப் கொஞ்சமும் பக்குவமின்றி வெளியிட்டுவிட்டார், அது நிச்சயம் சரி அல்ல‌

ஆனால் டிரம்பானவர் வம்பானவர் அல்லவா? ஒரு அதிபருக்கு ஒரு படத்தை கூட வெளியிட உரிமை இல்லையா? என வசனம் பேசிவிட்டு கிளம்பிவிட்டார்

அமெரிக்க உளவு அமைப்ப்பு இனி அவரிடம் படமே கொடுக்க கூடாது என முடிவு செய்திருக்கும்

துரதிருஷ்டவசமாக 2011ல் டிரம்ப் இல்லை, இருந்திருந்தால் நிச்சயம் பின்லேடன் கொல்லபட்ட படத்தை வெளியிட்டிருப்பார்

ஒபாமா அதை கடைசிவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது

என்ன செய்வது உலகம் கொடுத்து வைத்தது அன்று அவ்வளவுதான்

அமேசான் காடுகள் எரிவது என்பது பெரும் பிரச்சினையாகிவிட்டது

அமேசான் காடுகள் எரிவது என்பது பெரும் பிரச்சினையாகிவிட்டது

அமேசான் காடுகள் என்பது அது பாயும் பல நாடுகளை உள்ளடக்கியது, பிரெஞ் கயானா, வெனிசுலா, பெரு , ஈக்குவெடார் என எல்லா நாட்டிலும் அமேசான் காடுகள் உண்டெனினும் பெரும்பகுதி பிரேசிலுடையது

இப்பொழுது எல்லா நாடுகளும் இணைந்து விமானம் இன்னபிற விஷயங்களுடன் கடும் போராட்டத்தி ஈடுபட்டுள்ளன, விரைவில் நிலமை கட்டுக்குள் வரும் என நம்புகின்றார்கள்

எவ்வளவு கொடுத்தாலும் தீராமல் ஏற்றுகொண்டே இருப்பது நெருப்பு என்பது அமேசான் காட்டுதீயில் தெரிகின்றது, பெரும் காடுகளை விழுங்கினாலும் அதன் ஆசை தீரவில்லை

ஒருவர் பாக்கியில்லாமல் பேதமில்லாமல் தமிழிசையினை வாழ்த்திகொண்டிருக்கின்றார்கள்

ஒருவர் பாக்கியில்லாமல் பேதமில்லாமல் தமிழிசையினை வாழ்த்திகொண்டிருக்கின்றார்கள்

முக ஸ்டாலின் வாழ்த்தியிருக்கின்றார், வீரமணி கூட வாழ்த்திவிட்டார் என்பது நல்ல விஷயம்

பெரும் சாதனையினை நிகழ்த்திவிட்ட தமிழிசைக்கு பெரியார் விருது கொடுக்கபடுமா என்பதை மதிமாறன் என்பவர் விளக்க வேண்டும்

எனினும் மொத்த தமிழகமும் பெருமைபடும் படி எல்லோருடைய வாழ்த்துடனும் பதவியேற்க செல்கின்றார் அக்கா தமிழிசை

ஆனால் நாமும் கவனிக்கின்றோம் எல்லா ஆண் தலைவர்களும் வாழ்த்துகின்றார்களே அன்றி ஒரு பெண் தலைவரும் பிரபலஙகளும் வாழ்த்தியதாக தெரியவில்லை

தலைவி குஷ்பு மட்டும் டிவிட்டரில் வாழ்த்தியிருக்கின்றார்

கனிமொழியோ இல்லை வேறு பெண் பிரபலங்களோ தமிழிசை என்றோருவர் இருப்பதாக கண்டுகொள்ளவே இல்லை

பெண்ணுக்கு பெண்களே எதிரி என்பது இதுதான்

அதெல்லாம் இருக்கட்டும், குடும்ப பின்புலமன்றி வசீகரமான தோற்றமும் இன்றி, பெரும்தொண்டர் படையுமின்றி பெரும் போராட்டத்துக்கு பின் அதாவது கிட்டதட்ட 30 வருட போராட்டத்திற்கு பின் அங்கீகாரம் பெற்றிருக்கின்றார் அக்கா

தகப்பன் அண்ணன் இன்னும் உற்றார் யாருமின்றி, ஒரு ஆண்டி பண்டார கட்சியில் சேர்ந்து அவர் போராடி பெற்றிருக்கும் உயரம் பெரிது

இனி தமிழக பெண்களின் தன்னம்பிக்கையின் அடையாளமாக அக்கா உதாரணம் காட்டபடுவார்

எனினும் இந்நேரம் சங்கம் அந்த சிட்டிசன் படத்து அஜித் போல வயிறு எரிந்து சொல்கின்றது

“எலேய் காங்கிரசு.. வயிறு எரியுதுல‌

அந்த குஷ்பு புள்ள இப்படி ஆளுநர் ஆயிருக்க வேண்டிய புள்ளலே.. அதோட அரசியல் வாழ்க்கைய கெடுத்துபுட்டியலே

இந்த சாபம் சும்மா விடாதுலே, ஒழுங்கா அந்த பச்சை மண்ண காங்கிரஸ் தலைவராக்கிருங்கல‌

இல்லண்ணா காங்கிரஸ் தனுஷ்கோடி மாதிரி மண்ணா போயிரும்ல, வயிறு எரிஞ்சு சொல்றோம்லே… சங்கத்து சாபம் உங்கள சும்மா விடாதுல”

நிச்சயம் தமிழிசையின் இடம் தலைவி குஷ்புவின் இடம், அன்றே பாஜகவில் சேர்ந்தால் அவர் இந்நேரம் பெரும் உயரம் தொட்டிருப்பார்

கலைஞர் பேச்சை கேட்டு நாசமாக போய்விட்டார்

கலைஞர் பேச்சை கேட்ட முக முத்து உருப்படவில்லை, அழகிரியினை காணவில்லை, ஸ்டாலின் திகைகின்றார், தயாளு அம்மாள் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி தப்பினார்

ஆக கலைஞர் பேச்சை கேட்ட யாருமே உருப்பவிடவில்லை, குஷ்புவும் அந்த சாபத்தில் சிக்கிவிட்டார்

ஆயினும் தலைவியினை சும்மா விடமுடியுமா?

கலங்காதே ராசாத்தி காலம் இருக்கு, உங்களையும் மகராஷ்டிர கவர்ணராக ஒரு காலத்தில் காலம் அமர்த்தும்

அதற்கு இந்த காங்கிரஸ் மற்றும் திமுக பேச்சை கேட்காதீர்கள், அதை தூக்கி எறியுங்கள்

அப்படி அந்த இம்சைகளை தூர எறிந்தால் கவர்ணர் பதவி என்ன குடியரசு தலைவர் பதவியே உங்கள் காலடிக்கு வரும்

(பாருங்கள். தலைவி காதில் தாமரை மலர்ந்திருக்கின்றது ஆனால் தலைகீழாக மலர்ந்துவிட்டது அவ்வளவுதான்)

இது.. வசந்த & கோ காலம்…

பாஜக தமிழக பெண் ஒருவரை ஆளுநர் ஆக்கி புரட்சி செய்திருகின்றது

தமிழகத்தில் இருந்து முதல் மத்திய நிதியமைச்சர், மத்திய பாதுகாப்பு அமைச்சர் என பல புரட்சிகளை செய்த கட்சியான பாஜக தமிழக பெண் ஒருவரை ஆளுநர் ஆக்கி புரட்சி செய்திருகின்றது

ஆக தமிழக பெண்ணுரிமையினை காத்த கட்சி பாஜக, தாழ்த்தபட்ட சூத்திர பெண்ணை ஆளுநராக்கி சமூக நீதி காத்து வரலாற்றில் இடம்பிடித்த கட்சியும் பாஜக‌

இதிலிருந்து என்ன தெரிகின்றதென்றால் ஏ தமிழக மக்களே, இங்கு பெண்ணுரிமையினை பெண் விடுதலையினை கொடுத்த முதல் கட்சி பாஜக

திராவிட, திமுக பெரியார் கட்சிகள் செய்யாத சாதனையினை செய்த கட்சி பாஜக என்பதை வரலாறு குறித்து கொண்டது