அகில உலக காமெடி

பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சரின் அடாவடி பேச்சுத்தான் இப்போதைய அகில உலக காமெடி

ஆனால் அதையும் மிஞ்சி விடுகின்றது திமுகவில் மாற்றுகட்சியினர் சேரும்பொழுது சொல்லும் அந்த வசனம்

“முக ஸ்டாலினின் அறிவு, ஆற்றல்மற்றும் அயரா சமூகபணியில் ஈர்க்கபட்டு திமுகவில் இணைந்தேன்”

நிச்சயம் இரவெல்லாம் சொல்லி சொல்லி தனக்கு தானே சிரித்து மனதை ரணமாக்கி கடும் பயிற்சியுடன் வந்தாலொழிய இதை கேமரா முன் சிரிக்காமல் சொல்வது முடியாத விஷயம்

ஆனால் அதை கேட்டு சிரிக்காமல் குறிப்பெடுக்கும் நிருபர்களின் பயிற்சி அதைவிட கடுமையானதாக இருக்கும் போலிருக்கின்றது

நிருபர்களாய் இருப்பதும் மிக கடினமான வேலை போல..

வாழ்க்கைதான் வான்வெளி அறிவியல்…

ஓவ்வொரு விஷயமும் அடுத்த கட்டத்தை தாண்டியவுடன் பிரிய வேண்டும் என்பது இயற்கையின் விதி

மானிட வாழ்வில் அது வழமை, ஒரு கட்டத்தில் தாய் தந்தையினை பிரிவது, பிள்ளைகளை பிரிவது என்பது வாழ்க்கை நிலைப்பாட்டின் மைல் கல்

அல்லது பிள்ளைகளை சுமந்து வளர்த்து பிரிந்தபின் பெற்றோரின் கடமை முடிகின்றது, பிள்ளைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வளர்த்து ஒரு கட்டத்தில் நிறுத்தியபின் முடிகின்றது

ஏன் பறவை கூட பறக்க கற்றுகொடுத்தபின் பிரிகின்றது, மிருகங்களும் மீன்களும் கூட அப்படியே

விஞ்ஞானத்திலும் இத்தத்துவம் உண்டு.

செயற்கை கோளை சுமந்து செல்லும் ராக்கெட்டில் அது பறக்க பறக்க ஒவ்வொரு பூஸ்டராக கழன்று விழும், எரிபொருள் தீர்ந்தபின் அது தேவையில்லை

பின் ராக்கெட்டில் இருந்து செயற்கை கோள் பிரியும்

அப்படி இந்த சந்திராயனை நிலாவுக்கு கொண்டு சென்ற ராக்க்கெட்டில் இருந்து தனியாக சந்திராயன் கலம் பிரிந்திருக்கின்றது

இனி சந்திராயன் கலம் பத்திரமாக தரையிரங்க வேண்டும், அதிலிருந்து முட்டையிலிருந்து வரும் குஞ்சு போல சந்திராயன் வெளிவந்து ஆய்வினை தொடங்கும்

வாழ்க்கைதான் வான்வெளி அறிவியல்…

எல்லா உறவுகளும் ஒரு கட்டத்தில் பிரியும் அதை தவிர்க்கவே முடியாது என்பது முக்கால தத்துவம் விஞ்ஞானத்தில் கூட..

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம்

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம் தன் பொன்விழாவினை நெருங்குகின்றது

மத சர்ச்சைகள், கலவர சூழல் தமிழகத்தில் எழும்பொழுதெல்லாம் அக்கால காட்சிகள் சில கண்ணுக்குள் வந்து போகும்

அது 1963ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த காலம், சீனப்போரில் ஆர்.எஸ்.எஸ் உருப்படியாக பணியாற்ற நேருவுக்கும் அவர்களுக்கும் ஒரு புரிந்துணர்வு வந்த நேரம்

விவேகானந்தரின் நூற்றாண்டுவிழா அப்பொழுது தொடங்குகின்றது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை கொண்டாட தொடங்கினார்கள். அப்பொழுது அவர்கள் மனதில் உதித்த திட்டம்தான் கன்னியாகுமரி பாறையில் விவேகானந்தர் தவம் செய்த இடத்தில் மண்டபம் கட்டுவது

உண்மையில் சிகோகோ சொற்பொழிவுக்கு பின் கொழும்பு வழியாக அவர் வந்து இறங்கிய மண்டபம் கடற்கரையில்தான் கட்டியிருக்க வேண்டும், ஆனால் கன்னியாகுமரி இந்திய எல்லை என்பதால் அந்த பாறை தேர்வானது

அது அதுவரை ஸ்ரீபாத மலை. அதாவது உமாதேவியின் பாதம் பதிந்த பாறை என்றுதான் அழைக்கபட்டது

எல்லாம் நன்றாக தொடங்கியபொழுது சிக்கல் குமரி கிறிஸ்தவர் வடிவில் வந்தது. திடீரென சிலுவை நட்டு இது பிரான்சிஸ் சேவியர் பாறை என்றார்கள். பிரான்ஸிஸ் சேவியர் மணப்பாட்டில் வாழ்ந்தவர், கோட்டாரில் போதித்தவர்

இந்த பாறைக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை

ஆனால் கிறிஸ்தவர் கொடிபிடித்தனர், ஆச்சரியமாக அவர்களை விரட்டிவிட்ட கேரளத்தவரும் கொடிபிடித்தனர் பெரும் கலவர சூழல் ஆயிற்று

திடீரென ஒரு சிலுவை அந்த பாறையில் முளைத்தது

முதல்வர் பக்தவச்சலம் விவேகானந்தர் மண்டபமும் வேண்டாம், சேவியர் சிலுவையும் வேண்டாம் அமைதி முக்கியம் என அறிவித்துவிட்டார்.

இந்து கிறிஸ்தவ மோதலை தடுக்க அவருக்கும் வேறுவழி தெரியவில்லை

ஆர்.எஸ்.எஸ் மராட்டியத்திலிருந்து ஏக்நாத் ரானடே என்பவரை அனுப்பியது, அவர் கடப்பாரையோடு வந்து சேவியர் பாறையில் நிற்கவில்லை, கரசேவை எல்லாம் செய்யவில்லை

நிலமையினை புரிந்து கொண்டு பக்தவத்சலத்தை சந்தித்தார், முதலில் கடுமையாக இருந்த பக்தவத்சலத்தை நேருவினை சந்தித்து பேசசெய்தார், எல்லா மக்களும் ஒத்துழைத்து அமைதியாக ஒப்புகொண்டால் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை என்றார் பக்தவச்சலம்

அடுத்த சிக்கல் மத்திய அமைச்சர் ஹிமாயுன் உருவில் வந்தது, சுற்றுசூழல் கெடும் விவேகானந்தர் மண்டபத்தை அனுமதிக்கமுடியாது என்றார்.

அந்த அமைச்சரின் சொந்த தொகுதி வங்காளம்

ராணடே அங்கு சென்றார், வங்கத்தின் தங்கமகனுக்கு குமரியில் சிலைவைக்க ஹிமாயுன் மறுக்கின்றார் இது நியாயமா? என கேட்டார், வங்கம் பொங்க பல்டிஅடித்து எனக்கு பிரச்சினையே இல்லை என்றார் அமைச்சர்

ராண்டே அதன்பின்னும் சாதுர்யம் செய்தார், விவேகானந்தர் இல்லம் அமைக்கும் குழுவில் இந்துக்கள், ஆர்.எஸ்.எஸ் தவிர எல்லா மத மக்களையும் சேர்த்தார்.

குறிப்பாக திமுகவின் அண்ணாதுரையினை அவர் சேர்த்தது மாபெரும் சாதனை

திமுக எப்பொழுதும் இந்துக்களின் மூடபழக்கத்தை, சாதியினை சாடும். விவேகானந்தர் போன்ற துறவிகளை அது மறுக்காது, நல்ல இந்து விவேகானந்தர் போன்று இருக்கவேண்டும் என்பது கலைஞரே சொன்னது

அப்படி எல்லா தரப்பும் விவேகானந்தர் இல்லகுழுவில் வந்தபின், நாடு முழுக்க கையெழுத்து திரட்டினார். பல கோடிபேர் கையெழுத்திட்டனர். நாட்டு அம்மக்களின் அபிமானம் இது என அவர் அரசிடம் சொன்னபின் அரசுகளுக்கு தயக்கமில்லை

அதன் பின் மகா அட்டகாசமான திட்டத்தை செயல்படுத்தினா ராண்டே, ஆம் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என எல்லோரிடமும் நிதி திரட்டினார். “பணம் சிக்கல் இல்லை, 50 பைசா கொடுத்தாலும் அவர்கள் பங்களிப்பு உண்டல்லவா? அதுதான் நமக்கு வேண்டும்” என்றார்

உண்மையில் கிறிஸ்தவர்களும் அள்ளி கொடுத்தனர், விவேகானந்தரை தேசிய அடையாளமாக கருதினர். கிறிஸ்தவர்கள் நன்கொடையினை பல இடங்களில் ராணடே பெற்றபின் குமரிமாவட்ட கிறிஸ்தவ கொந்தளிப்பு அடங்க தொடங்கியது

எல்லா மதத்தாரும், இந்தியாவின் எல்லா மாநிலத்தாரும் இணைந்து அல்லது ராணடேவால் ஒற்றுமையாக கொண்டுவரபட்டபின்பே குமரியில் அம்மண்டபம் எழுந்தது

அம்மண்டபத்தை பார்க்கும்பொழுதெல்லாம் அந்த ராணடே எனும் மாமனிதன் நினைவுக்கு வருவார். இந்து விவேகானந்தர் எனும் அடையாளத்தை இந்த பாரதத்தின் பெருமகன் என்ற அடையாளமாய் மாற்றி அச்சாதனையினை செய்தார் ராணடே

பெரும் கலவர சூழலை தடுத்து, ஒரு துளி ரத்தமின்றி, வன்முறையின்றி மிக சாதுர்யமாக எல்லா மக்களையும் அணைத்து சென்று அந்த மண்டபத்தை அமைத்த அந்த ராணடே நிச்சயம் வரலாற்றில் நிற்கின்றார், மண்டபம் இருக்கும் அளவும் அவர் பெயரும் இருக்கும்.

அவர் மட்டும் கொஞ்சம் சறுக்கி இருந்தால் குமரி, கேரளம், மிசோரம், நாகலாந்து என கிறிஸ்தவர் வாழும் பகுதி எல்லாம் ரணகளம் ஆகியிருக்கும், மாபெரும் ரத்த ஆறு மதத்தின் பெயரால் ஓடியிருக்கும்

அதனை காத்து, அப்பாறை ஸ்ரீபாத பாறையே அதில் கிறிஸ்தவருக்கு உரிமை இல்லை என்பதை நிறுவி, அதிலும் மொத்த இந்திய மக்களின் அபிமானத்தோடும், அவர்களின் நன்கொடையோடும் அம்மண்டபத்தை அமைதியாக கட்டி காரணமான அந்த ராணடே போன்ற நல்ல மனிதர்கள் அன்று இருந்திருக்கின்றார்கள்

ஒருவேளை கிறிஸ்தவர்களுக்கு உரிமை இருந்து அதில் ஆலயம் இருந்தால் சிக்கலே வந்திருக்காது, சிக்கல் விவேகானந்தர் மண்டபம் அமையும் பொழுது கிறிஸ்தவர் சர்ச்சை செய்ததால் வந்தது

ராணடே மிக திறமையாக அதை சமாளித்தார்

இந்து அமைப்புகளில் அப்படிபட்ட மாமணிகளும் இருந்திருக்கின்றன‌

இந்து அமைப்புகள் இதனை எல்லாம் மனதில் கொண்டால் நல்லது

விவேகானந்தர் பாறையினை நினைக்கும் பொழுது இக்காட்சிகள் எல்லாம் நினைவுக்கு வரும்

விவேகானாந்தர் பாறைக்கான படகு போக்குவரத்தை பூம்புகார் நிறுவணம் மேற்கொள்ளும் தமிழக அரசு நிறுவணம்

ஒரு காலத்தில் அந்த பூம்புகார் நிறுவணம் கப்பலும் படகும் வாங்குவதில் ஊழல் செய்தது என வந்த செய்தியெல்லாம் நம் நினைவுக்கு வரவே கூடாது

அட்டகாசமான அரசியல் இது..

நாமெல்லாம் தெலுங்கானா கவர்ணராகிவிட்ட தமிழிசையினை நோக்கி கொண்டிந்தோம், பாஜகவினர் கே.ஆர் விஜயா போல இயல்பான புன்னகையில் வாழ்த்தினார்கள்

எதிர்கட்சியினர் சுஹாசினி போல முகத்தை ஒருமாதிரி சுளித்துகொண்டு வாழ்த்தினார்கள்

விஷயம் வாழ்த்து அல்ல, கேரள கவர்ணரை பற்றியது

கேரளாவின் கவர்ணராக நியமிக்கபட்டிருப்பவர் ஆரிப் முகமது கான், உபி இஸ்லாமியர்

நம்ம ஊர் ப.சி போல அக்கால காங்கிரசில் முக்கிய புள்ளி

ராஜிவ் அரசில் அவர் அமைச்சராக இருந்தபொழுது ஷபானு என்பவரின் விவாகரத்து சர்ச்சையான பொழுது காங்கிரஸில் இருந்து வெளிவந்தார்

ஷாபானு வழக்கு அக்காலத்தில் பிரசித்தி பெற்றது, பெரும் கதை அது, சுருக்கமாக இப்படி சொல்லலாம்

இஸ்லாமிய விவகாரத்து வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை சொன்னது, அது அதிருப்தியாகி நாடெல்லாம் போராட்டம் கண்டது

ராஜிவ் காந்தி தலையிட்டு நீதிமன்ற தீர்ப்புகள் இஸ்லாமிய மகளிர் உரிமையினை பாதிக்காதவாறு ஒரு சட்டம் கொண்டுவருவதாக சொல்லி சட்டத்தை மாற்றினார்.

அதாவது மற்ற சமய பெண்கள் ஜீவனாம்சம் பெறுவது போல மாத மாதம் இஸ்லாமிய பெண்கள் பெறமுடியாத அளவு ஒரு மாதிரி ஆக்கிவைத்தார் ராஜிவ்

ஒருமாதிரியான சட்டம் அது, பொதுசிவில் சட்டம் வேண்டும் என்ற குரலே அது வந்தபின்புதான் ஓங்கி ஒலித்தது

சிறுபான்மையினர் என்றால் சீக்கியர் தவிர எல்லோர் மேலும் பொங்கும் காங்கிரஸ் ஆரிப்பின் மேல் பொங்கியது, அந்த சர்ச்சையில் அந்த சட்ட திருத்தத்தில் வெளிவந்தார் ஆரிப்

வந்தவர் ஜனதாவில் இருந்தார் பின் பாஜக கட்சிக்கு தாவினார்,அக்கட்சியும் அவரை அணைத்தது

இவ்வளவுக்கும் உபியில்தான் பாபர் மசூதி இருந்தது குறிப்பிடதக்கது

பாஜக முழு இந்து கட்சியோ இல்லை சங் பரிவார் கூட்டமோ அல்ல, இஸ்லாமியரும் அங்கு உண்டு

அந்த ஆரிப் இஸ்லாமியரின் மேம்பாட்டுக்கு பாஜகவில் இருந்து உழைத்தார், முத்தலாக் விவகாரத்தில் பாஜகவின் பக்கம் பெரும் பலமாய் நின்றார்

பாருங்கள், இது பாஜகவின் இரும்பு ஆட்சிதான் ஆனால் ஐநா சபை தூதர் முதல் கேரள ஆளுநர் வரை இஸ்லாமியரே

ஆரிப் கேரள கவர்ணராக நியமித்து பாஜக எல்லா மதத்தாருக்குமான கட்சி என என்கின்றது அக்கட்சி

அப்படியே தமிழிசை அக்காவினை கவர்ணராக்கி இது எல்லா சாதிக்குமான கட்சி கூட என்கின்றது

ஆக பாஜக சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி எனும் பிம்பத்தை மிக வேகமாக பூண்டு வருகின்றது என்பது புரிகின்றதல்லவா?

அட்டகாசமான அரசியல் இது..

தமிழகத்திலும் தமிழக பாஜகவில் இனி மாற்று மதத்தினர் வரலாம் , பெரும் உயரம் அடையலாம்

வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது.

ஒரு குடிமகனுக்கு கூட பாதுகாப்பு வழங்கமுடியாத என்ன ஆட்சி இது?

வட மாநிலத்தில் அச்சம்பவம் நிகழ்ந்திருகின்றது

ஒரு ஆணுடன் ஒரு பெண் நெருங்கி பழகியிருக்கின்றாள், உலகில் மிக பலமான ஆயுதம் இளமையான பெண் எனும் சாணக்கியனின் சொல் அங்கு உண்மையாக இருந்திருக்கின்றது

அவனை மறைவான இடத்திற்கு ஒருநாள் அப்பெண் அழைத்து சென்றிருக்கின்றாள், அங்கு 6 குண்டு பெண்கள் அதாவது ஆயுதம் தரித்த சமூக விரோத பெண்கள் இருந்திருக்கின்றார்கள்

கொஞ்சம் போதை, பாக்கு என இருந்த பெண்கள் அவனை மிரட்டி காசு பர்ஸ் ஏடிம் கார்டு மறக்காமல் பாஸ்வேர்ட், போன் என எல்லாவற்றையும் மிரட்டி பிடுங்கியிருக்கின்றார்கள்

அழைத்து சென்ற பெண் அவனை அடித்து ஆடை களைந்து நிர்வாண படம் எடுத்திருக்கின்றாள்

உடனே 10 லட்சம் பணம் வேண்டும் இல்லாவிட்டால் உன் வீடியோ இணையத்தில் ஏற்றபடும் என மிரட்டியிருக்கின்றாள்

சுற்றி நின்ற பெண்களும் பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட முயன்றிருக்கின்றார்கள்

அவரை அந்த சுலோகம் காப்பாற்றியிருக்கின்றது, ஆம் ஆண்களுக்கு அதுதான் எப்பொழுதும் கவசம்

ஜெய் ஸ்ரீராம் என கத்திவிட்டு நான் ஏகபத்தினி விரதன் என்னை களங்கபடுத்தாதீர் என கெஞ்சியிருக்கின்றான்

அவர்களோ ஏக பத்தினி விரதனுக்கு இவள் பின்னால் என்ன வேலை என சாத்தியிருக்கின்றார்கள்

தன் ஸ்ரீராம கோஷமும் பலனளிக்காத நிலையில் என் ஆடையினை கொடுங்கள் பணம் எடுத்து வருகின்றேன் என சொல்லி ஓடியிருக்கின்றான்

அவன் வீட்டுக்கு ஓடுவான் , அவன் மானம் அவனுக்கு முக்கியம் , என்ன இருந்தாலு அவன் இந்திய ஆண்கமகன் அல்லவா? ஆக பணத்தோடு வருவான் என நினைத்த அந்த கொடூர பெண்கள் நினைப்பில் மண் விழுந்திருக்கின்றது,

அவன் காவல் நிலையம் ஓடி தனக்கு நிகழ்ந்த கொடுமையினை சொல்லி கதறியிருக்கின்றான்

ஆணின் கஷ்டம் ஆணுக்குத்தானே புரியும், அதனால் காவலர்களும் மனம் இறங்கியிருக்கின்றார்கள்

அக்கும்பல் வளைக்கபட்டிருக்கின்றது

இவன் சொல்வது உண்மையா இல்லையா என்பது வீடியோவில் இருந்த நிர்வாண உருவமும் இவனும் ஒன்றா இல்லையா என பலத்த சோதனை எல்லாம் நடந்திருக்கின்றது

எப்படி சோதித்திருப்பார்கள் என்பதை சபை நாகரீகம் கருதி நாம் சொல்லமுடியாது அல்லவா, மன்னித்துவிடுங்கள்

இப்பொழுது அந்த 6 பெண்களும் கைதுசெய்யபட்டு தீவிரவிசாரணை நடக்கின்றது

ஆக இந்த பாசிச பாஜக ஆட்சியில் நாட்டில் ஆண்களுக்கு கொஞ்சமும் பாதுகாப்பில்லை என அகில உலக ஆண்கள் உரிமை ஆணையம் கவலை தெரிவித்துள்ளது

இனி தங்கள் நாட்டு ஆண்கள் தனியாக அல்லது தகுந்த பாதுபாப்பில்ல்லாமல் இந்தியாவுக்கு பயணம் செல்ல வேண்டாம் என உலக நாடுகள் தங்கள் நாட்டு ஆண்களை எச்சரிக்கும்

ஒரு குடிமகனுக்கு கூட பாதுகாப்பு வழங்கமுடியாத என்ன ஆட்சி இது?

என்று ஒரு ஆண் பை நிறைய பணத்துடனும், கழுத்து நிறைய‌ தங்க சங்கிலியுடனும் தனியாக‌ இந்நாட்டில் நடமாட முடிகின்றதோ அன்றுதான் இந்நாடு சுதந்திரம் பெற்ற நாடு எனும் நிலை பெயரை அடைய முடியும் என சங்கமும் தன் கண்டனத்தை அரசுக்கு சொல்லி கொள்கின்றது

தெரிந்தால் என்ன செய்வார்?

சிம்புவால் தங்களுக்கு நஷ்டம் அவரிடமிருந்து நஷ்ட ஈடு வேண்டும் ஏதாவது காவல்துறை அல்லது நீதிமன்றம் செய்ய வேண்டும் என தயாரிப்பாள சங்கம் சொல்லிகொண்டே இருந்தது

அவர்களை மேலும் கடுப்பேற்ற என்ன செய்யலாம் என கடுமையாக சிந்தித்த சிம்பு வெற்றி புன்னகையுடன் தாய்லாந்து சென்றுவிட்டார்

ஆம் அந்த தாய்லாந்துதான்

தயாரிப்பாளர்களை கதற கதற அழ வைக்க அதை தவிர வெறு திட்டம் அவரிடம் இல்லை, இதனை விட சிறந்த‌ திட்டம் இருக்கவும் முடியாது

இதனால் ஆடிபோன தயாரிப்பாளர்கள் இப்படியே விட்டால் சிம்பு இனி அப்படியே மக்காவ், ஜப்பான், ஸ்பெயின், நெதர்லாந்து, கோஸ்டோரிக்கா என சுற்றிகொண்டே இருப்பார் அவர் பாஸ்போர்ட்டை முடக்குங்கள் என கதறி புகார் கொடுத்திருக்கின்றது

(நல்ல காவல் அதிகாரி என்றால் எம்.ஆர் ராதா பாணியில் ஏண்டா டேய் என்கிட்ட கேட்டுட்டா அவனை வச்சி படம் எடுத்தீங்க?

ஆசை பூரா பயலுக்கும் அதிக ஆசை, அப்புறம் ஏண்டா இங்க வந்து அழுறீங்க என விரட்டியிருக்க வேண்டும்)

சிம்புவுக்கு விஷயம் தெரியுமா தெரியாதா என தெரியவில்லை

தெரிந்தால் என்ன செய்வார்?

டிவிட்டரும், முகநூல் பக்கமு, வீடியோ எடிட்டிங்கும் எதற்கு இருக்கின்றன‌

பழைய கமல், எம்ஜிஆர் படங்களுக்கு கண்ணதாசனும் வாலியும் ஏன் சில டி.ஆர் எழுதிய‌ பாடல்களை எப்படி எடிட் செய்து தயாரிப்பாளர்களை எப்படி வெறுப்பேற்ற வேண்டும் என்பதை சினிமாவிலே பிறந்து வளர்ந்த சிம்புவுக்கு சொல்லியா தரவேண்டும்?

“காலை ஜப்பானில் காபி,
இரவில் நியூயார்க்கில் காபரே” எனும் வரிகள் கொண்ட
எங்கேயும் எப்போதும்
சங்கீதம் சந்தோஷம்…
. ராத்திரிகள் வந்துவிட்டால்,,” என கண்ணதாசன் எழுதியது யாருக்காக?

“பச்சைகிளி முத்துசரம்
முல்லை கொடியாளோ..” என தாய்லாந்து நடிகையுடன் ராம்சந்தர் ஆடியது யாருக்காக?

“ஹத்தியக்கு சுக்காவா,
லாலுகத்து ஹிந்தாவா.
சாயா பாண்டாங் திரிமு..” என மலாய் நடிகையுடன் ரஜினி ஆடியது எதற்காக?

எல்லாம் தாய் கிளிகளுக்காக…

அட ” ரீனா, கீதா. மீரா, கீதா, பார்வதி வர்றடா பாத்துக்கோடா…

மன்மதன் ரட்சிக்கணும்
இந்த மங்கையர் காளைகளே,
மங்கையய் மயக்கும் மந்திர பூஜை என்னென்ன சொல்லடா..
இளம் பெண்களை வெல்லடா” என டி.ஆரே எழுதி ஜாலி ஆபிரகாம் ஜாலியாக பாடியதெல்லாம் என்ன வகை

“தந்தை மகற்காற்றும் உதவி”யன்றி வேறென்ன‌

மிஸ்டர் சிம்பு, எம்முடைய ஏராளமான பணி சுமைகளுக்கிடையே உங்களுக்கும் ஆலோசனை தந்திருக்கின்றோம், இதை பயன்படுத்தி அந்த தயாரிப்பாளர்களுக்கு இன்னும் கடும் வெறுப்பினை ஏற்றிவிடுங்கள், கதறி சாகட்டும்.

இனி உங்களுக்கு வாய்ப்பே தர கூடாது எனமுடிவெடுத்த பின் அந்த தயாரிப்பாளர்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன?

இல்லை இப்படி எல்லாம் பாடினால் உங்கள் திருமணம்தான் தடைபடுமா? அது நடக்கவா போகின்றது?

ம்ம் ஸ்டார்ட்..

திமுகவினை விட நன்றாகத்தான் இருக்கின்றது

திமுக எம்பிக்களிலும் இஸ்லாமியர் இல்லை

திமுகவின் ராஜ்யசபா எம்பிக்களிலும் இஸ்லாமியர் இல்லை

கட்சியின் தலைவர், இளந்தலைவர் எல்லாம் திமுகவில் ஒரே சாதி, பாஜகவில் அப்படி அல்ல‌

அவ்வகையில் கேரள கவர்ணராக இஸ்லாமியரை நியமித்திருக்கும் பாஜகவில் சமூகநீதி மதநீதி எல்லாம் திமுகவினை விட நன்றாகத்தான் இருக்கின்றது.