அப்பாச்ச்சி ரக ஹெலிகாப்டர்கள்

இந்திய விமானபடையில் அப்பாச்ச்சி ரக ஹெலிகாப்டர்கள் சேர்க்கபட்டிருப்பது கூடுதல் பலம், 8 ஹெலிகாப்டர்கள் சேர்க்கபட்டிருக்க்கின்றன‌

எனினும் இது போதாது, மிகபெரும் எல்லையினை பாதுகாக்க வேண்டியதால் மேலதிக அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் வேண்டும், அந்த ரஷ்ய எம் 17 ரக ஹெலிகாப்டர்களை பழைய இரும்புக்கு போட வேண்டும்

இன்னும் சில நாட்களில் ரபேல் விமானத்தின் முதல் செட் வந்து சேரும் என்கின்றார்கள், வரட்டும்

எதுவந்தாலும் இந்த காயலான் கடை சரக்கான 1970களின் மாடலான மிக் ரக விமானங்களை கடாசமாட்டோம் என இந்தியா அடம்பிடிப்பது சரியல்ல‌

சாதாரண காலங்களிலே விபத்துக்குள்ளாகும் ரகம் அது, யுத்தகாலமென்றால் என்னாகும்

ஆனால் ரஷ்யா தான் சம்பாதிக்க அதை அப்படி செய்யலாம் இப்படி செய்யலாம் என சொல்லி ஏதோ செய்கின்றது, ரஷ்யாவினை மீறி மிக் ரகத்தை இந்தியாவாலும் கைவிட முடியவில்லை

ஏதாவது தந்திர முடிவெடுத்து மிக்ரக பழைய விமானங்களை பேரிட்சம் பழம வாங்க கொடுத்துவிட்டு மாற்றீடாக நல்ல விமானங்களை பயன்படுத்தலாம்

அரசுக்கும் திட்டமிருக்கும் விரைவில் அது மாற்றபடும் என எதிர்பார்ப்போம்

இனி அமித்ஷாபாடு அவ்வளவுதான்

சரஸ்வதி சபதம் படத்தில் யானை மாலை போட்ட அந்த ஏழைபெண்ணின் கதைபோல் ஆகிவிட்டது தமிழக பாஜக தலைவர் பதவி

அதுவரை அந்தபதவியினை கண்டால் பாழும் கிணறை பார்த்தது போல ஆளாளுக்கு தலைதெறிக்க ஓடினார்கள்

தமிழிசை அக்கா மட்டும் “தாய்தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா.. என்றும் நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா” என உள்ளுக்குள் அழுதபடி அமர்ந்திர்ந்தார்

திடீரென வானலோகத்தில் என்ன முடிவு எடுத்தார்களோ தெரியாது, மாலை போட்ட யானை தூக்கிதன் மேலேயே அமர்த்தியும் கொண்டது

அந்த நொடியிலிருந்து தென் ஆப்ரிக்க வைரசுரங்கத்தை சுற்றிவரும் கோஷ்டி போல ஆளாளுக்கு அந்த பதவியினை சுற்றுகின்றார்கள்

திடீரென “கொலை கொலையாய் முந்திரிக்காய்..நரியே நரியே சுற்றிவா” ஆட்டம் தொடங்கியதை அடுத்து பாஜக தலமையே அதிர்ந்துவிட்டது

புதிய தலைவர் நியமணத்தை தள்ளி வைத்திருக்கின்றார்களாம்

அனு சந்திரமவுலி, நயினார் நாகேந்திரன், கே.டி ராகவன், வானதி சீனிவாசன் என பல பெயர்கள் அடிபட்டாலும் அனு சந்திரமவுலி மற்றும் வானதி பெயர்கள்தான் போட்டியில் இருக்கின்றன என்கின்றார்கள்

ஒரு பெண்ணுக்கு பதவிகொடுக்கத்தான் டெல்லியும் விரும்புகின்றதாம்

இதில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். பாஜக தெற்கே வலுவான கட்சி. அங்கேதான் அதன் கோட்டை இருக்கின்றது. ஏகபட்ட அனுகூலம் அங்குதான் உண்டு

ஆக அடுத்த தலமை தெற்கில் இருந்துதான் வரவேண்டும் அது பெண்ணாகவும் இருத்தல் வேண்டும்

அப்பெண் தமிழிசை போல மருத்துவராகவும் இருப்பது கூடுதல் அவசியம்

அதனால் அந்த பணகுடி பராசக்தியும் பிரபல மருத்துவரும் அப்பகுதியின் பெரும் பாஜக அபிமானியுமான டாக்டர் Shyamala Mathi என்பவரை தலைவராக அமர்த்திவிடலாம்

அம்மையார் மிக சிறந்த மருத்துவர் மட்டுமல்ல அதை விட சிறந்த பாஜக அபிமானி

தமிழிசையின் இடத்தை மட்டுமல்ல, நிர்மலா மற்றும் அமித்ஷாவின் இடத்தை கூட நிரப்பும் ஆற்றல் அவருக்கு உண்டு

நம்மால் முடிந்த மிகசிறந்த தொண்டரை , மிக சிறந்த பாஜக தலைவராக வரகூடியவரை அடையாளம் காட்டியாயிற்று

இனி அமித்ஷாபாடு அவ்வளவுதான்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை தமிழில் வெளியிடுவது நிறுத்தம்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை தமிழில் வெளியிடுவது நிறுத்தம்: மொழி பெயர்ப்புக்கு தமிழக அரசு உதவும் – சி.வி.சண்முகம்

அதாவது தீர்ப்புகளை தமிழில் வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கின்றது உச்சநீதிமன்றம்

நிச்சயம் இது திமுகவுக்கான வாய்ப்பு அவர்கள் தங்க தமிழ்செல்வனுக்கு எண்ணெய் குளியல் செய்து வாயில் கொழுக்கட்டை ஊட்டி மகிழ்ந்துகொண்டிருப்பதால் வாய்ப்பினை பிடித்தவர் ராமதாஸ்

ஆனாலும் அவர் இப்போது பாஜக கூட்டணி என்பதால் முணுமுணுப்போடு நிறுத்தினார்

விஷயத்தை தாமதமாக‌ பிடித்த சட்டதுறை அமைச்சர் சன்முகம், “அது.. இது. ம்ம்… தமிழக அரசு மொழிமாற்றம் செய்யும், ….வலியுறுத்துவோம்…” என சமாளித்தார்

எனினும் இது பற்றி ஏன் உங்களுக்கு முன்பே ராமதாஸ் சொன்னார், நீங்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை என்ற நிருபரின் கேள்வியில் சிக்கிவிட்டார் சன்முகம்

அன்னார் என்ன சொன்னார்

ராமதாஸ் சொன்னபின்புதான் இந்த விஷயமே எனக்கு தெரிந்ததது என்றார்

ஆக தமிழக சட்ட அமைச்சர் பதவியினை ராமதாஸிடம் கொடுத்துவிடலாம் என அமைச்சரே சொல்லிவிட்டார் பார்த்தீர்களா?

பிரபல கம்பெனியில் வேலைக்கு ஆள் எடுக்கின்றார்கள்

பிரபல கம்பெனியில் வேலைக்கு ஆள் எடுக்கின்றார்கள், கம்பெனியின் CEO , COO ஆகியோர் போர்டு ஆப் டைரக்டர்ஸ் மற்றும் சேர்மன் சார்பில் அழைப்பு விடுத்திருக்கின்றார்கள்

நேர்காணலுக்கு செல்ல விரும்புகின்றவர்கள் செல்லலாம், விளம்பரம் மற்றும் மார்கெட்டிங் பிரிவுக்கு தற்போது ஆட்கள் தேவையாம்

தகுதி என்னவென்றால் நாட்டுபற்று இருக்க கூடாது, பகுத்தறிவில் இந்துமதத்தை மட்டும் திட்ட பிஎச்டி வாங்கியிருக்க வேண்டும் மற்றபடி தமிழோ இல்லை நாகரிகமாக பேசவோ தெரிந்திருக்கவே கூடாது அது கூடுதல் தகுதி

பிரிவினைவாத சிந்தனையிருந்தால் கூடுதல் புள்ளிகள் வழங்கபடும்

வேலைவாய்ப்பு மற்றும் சந்தை நிலவரத்தை கவனிப்பதால் உங்களுக்கு ஒரு ஆலோசனை சொல்கின்றோம், நிச்சயம் இது நல்ல கம்பெனி

சந்தையில் அதற்கு நல்ல வியாபாரம் இருக்கின்றது

பங்கு சந்தை வியாபாரத்தில் வல்லவர்கள். பங்கு வர்த்தகத்தில் அவர்களை அடிக்க ஆளே கிடையாது, அது ஒன்றினாலே பல்லாயிரம் மில்லியன் டாலர்களை குவித்தவர்கள்

இக்கம்பெனியில் 1 ரூபாய் முதலீடு அக்காலத்தில் செய்தவர்கள் இன்று மில்லியன் டாலர் தொழிலபதிபர்கள்

ஆனால் இப்பொழுது பொருளாதார நெருக்கடி நிலவுவதால் சம்பளம் இருக்காது, கம்பெனியின் வருமானம் பெருகும் பொழுது நல்ல கமிஷன் வழங்கபடும்

இன்றைய உலகின் தேவையும் அதுவேதான்

உலகமெல்லாம் சென்று பலரை மதம் மாற்றுவதுதான் உண்மை மதம் என்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை

அது மதமாகவும் இருக்கம்முடியாது. இதை கொடுத்தால் அது கிடைக்கும் என்பது வியாபாரம் அன்றி வேறு என்ன?

இதுதான் பரலோக வழி,ரட்சிப்பின் வழி,உண்மையின் வழி என எதுவுமில்லை

நதிகளெல்லாம் கடலுக்கு தானே சென்று சேர்வது போல ஒவ்வொரு ஆத்மாவும் கடவுளிடம் திரும்பியே தீரும்

இதை செய்தால் இது கிடைக்கும் அது கிடைக்கும் என போதித்து வியாபாரம் செய்யும் மதங்களை விட, “கடமையினை செய்.. பலனை எதிர்பாராதே” என்பதில் எல்லா மானிட தத்துவமும் மத தத்துவமும் அடங்கிவிடுகின்றது

இன்றைய உலகின் தேவையும் அதுவேதான்

அடுத்த தலைவர் யார்

எல்லா கட்சியிலும் ஒரு தலைவர் விடைபெறும் பொழுது அடுத்த தலைவர் யார் எனும் எதிர்பார்ப்பும் விவாதமும் அணல் பறக்கும்

இப்பொழுதும் தமிழக பாஜகவில் அடுத்த தலைவர் யார் என்ற விவாதம் மிக கடுமையாக நடக்கின்றது

தமிழகத்திலே, இல்லை இந்தியாவிலே இல்லை இல்லை அகில உலகிலே சிக்கலே இன்றி, கொஞ்சமும் எதிர்பார்ப்பும் சுவாரஸ்யமுமின்றி, தலைவர்கள் தயாராக வந்து அமர்வது திமுக ஒரு கட்சியில் மட்டும்தான்

அதுதான் தெரியுமே என ஆளாளுக்கு அவர்கள் போக்கில் இருப்பார்கள்

உலகில் மன்னர் குடும்பத்தை தவிர அது திமுகவில் மட்டுமே சாத்தியம், அடுத்து 5 தலைமுறைக்கு தலைவர்கள் அங்கு தயாராக இருக்கின்றார்கள் என்பது கூடுதல் தகவல்

5%

காவலில் இருக்கின்றார் ப.சிதம்பரம், அவரை அழைத்து செல்லும் பொழுது அவரின் வழக்கு பற்றி செய்தியாளர்கள் கேட்க , 5% என சொல்லிவிட்டு சென்றிருகின்றார் சிதம்பரம்

செய்தியாளர் என்ன கேட்டார்கள்? இவர் என்ன சொல்லியிருக்கின்றார் பார்த்தீர்களா?

எல்லாம் கலைஞர் கருணாநிதியோடு நெடுநாள் பழகிய பழக்க தோஷம் வேறொன்றுமில்லை.

5% என எதை சொல்கின்றார் சிதம்பரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5% சரிந்ததை சிதம்பரம் குறிப்பிட்டார் என கைதட்டி மகிழ்கின்றது காங்கிரஸ் கூட்டம்

ஆக 5% பொருளாதாரம் சரிய ப.சிதம்பரத்தின் கைதுதான் காரணம் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டி இருக்கின்றது

சிதம்பரத்தின் கைது கண்ட உலக முதலீட்டாளர்கள் பயந்தார்களா? இல்லை சிதம்பரம் மிரட்டி பின் வாங்க வைத்தாரா என்ற கேள்விக்கு இன்னொரு விசாரணையினை சிபிஐ பதிய வேண்டும் போலிருக்கின்றது

அவர் 5விரலை காட்டி 5% என சொல்லியது என்னவென்றால், காங்கிரஸ் இனி 5% கூட தேறாது என சூசகமாக சொன்னதாகவும் எடுத்து கொள்ளலாம்