ஒரு வகையான வியாதி இது

அந்த சாவித்திரி பூலே என்பவர் பிறந்தநாள்தான் ஆசிரியர் நாள் என கொண்டாடபட வேண்டுமாம் ஒரு கோஷ்டி கிளம்பிற்று

அவர்களை பொறுத்தவரை தலித்துகளுக்கு கல்வி கொடுத்தவர்கள்தான் உலக பிரபலங்கள், சாதனையாளர்கள்

சரி அன்றே பீமாராவ் எனும் தலித் மாணவனுக்கு கல்வி கொடுத்தாதானே ஒரு பிராமண ஆசிரியன், அவன் பிறந்த நாளை ஏன் ஆசிரியர் தினமாக கொண்டாட கூடாது என கேட்டால் பதில் இருக்காது

சரி, நாமும் நம் பங்குக்கு ஒரு கல்லை வீசிவிட்டு செல்வோம்

தமிழகத்தில் கல்வியினை குறிப்பகா பெண் கல்வியினை தொடங்கி வைத்ததில் கிறிஸ்தவ மெஷினரிகளுக்கு பெரும் பங்கு உண்டு மறுக்கமுடியாது

லண்டனில் இருந்தாள் அந்த சாரா, அவள் குடும்பத்து பெயர் ட்க்கர்

அம்மணிக்கு நடக்க முடியாது வெறும் நாற்காலி வாசம்தான்

இந்தியாவில் இருந்து திரும்பும் மிஷனரிகளிடம் அவள் கதை கேட்பது வழக்கம், அவர்கள் அக்கால இந்தியாவின் நிலையினை சொல்வார்கள் அதில் மிகைபடுத்தலும் உண்டு

உதாரணத்துக்கு இன்று தரித்திர தேசமாகிவிட்ட வங்கம் அன்று பொன் விளையும் பூமியாய் இருந்தது, அதை சுரண்டியது கிழக்கிந்திய கம்பெனி ஆனால் அம்மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் என அழுததும் அதே லண்டன் மிஷினரி

கட்டபொம்மனை கொன்றதும் கிழக்கிந்திய கம்பெனி அதே நெல்லைபகுதியில் வறுமை என அழுததும் மிஷனிரி

சரி நாம் விஷயத்துக்கு வருவோம்

இந்தியாவில் கல்வி இல்லை,பெண் கொடுமை அதிகம், அய்யகோ விபச்சாரிகளாக வறுமையில் வாடுகின்றார்கள் என மிஷினரிகள் சொல்ல சொல்ல மனம் மாறுகின்றாள் சாரா, ஒரு கட்டத்தில் அந்த கண்ணீர் கதைகளை கேட்டு மனம் நொந்து அழுகின்றாள்

தன் முடமான வாழ்வு அவளை மேலும் சிந்திக்க வைக்கின்றது, இந்திய பெண்கள் படித்தால் வாழுவார்களா? கல்வி பெற்றால் வாழுவார்களா என் திரும்ப திரும்ப கேட்கின்றாள்

மிஷினரிகள் ஆம் என்கின்றன‌

தன் முடங்கிய கால்களோடு இந்திய பெண்களுக்காக லண்டனில் பிச்சை எடுத்தாள் அவள், வீடு வீடாக கதவை தட்டி பிச்சை கேட்டாள்

நிதி திரண்டது, தன் நகையினை விற்றாள் சொத்துக்களை விற்றாள் செலவுகளை எல்லாம் சுருக்கி அந்த நிதியினை இங்கு அனுப்பினாள்

அதில் எழுந்ததுதான் நெல்லையில் காணும் சாரா டக்கர் பள்ளி, கல்லூரி எனும் பெண்களுக்கான கல்வி சாம்ராஜ்யம்

அப்பொழுதெல்லாம் திராவிடம் என்றொரு குரலே இங்கு கிடையாது, சமூக நீதி எனும் அர்த்தமில்லா வாதங்களெல்லாம் இல்லா காலம்

ஆம் அவள் இந்தியாவிற்கு வந்ததுமில்லை நேரில் இம்மகளிரை கண்டதுமில்லை

ஆனால் துடித்து கதறி தன்னால் முடிந்ததை செய்து கல்வி விதை ஊன்றியிருக்கின்றாள்

இந்த பூலே போன்ற புரட்சிகளை விட ஆயிரம் மடங்கு சிலாகிக்க கூடியது அந்த மாற்றுதிறனாளியின் சேவை

மனதால் இந்தியர் கஷ்டத்தை உணர்ந்த மகத்துவம் அது

சரி அந்த மாபெரும் பெண்மணி சாரா டக்கரின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக அறிவிப்போமா என கேளுங்கள் ஓடிவிடுவார்கள்

இவ்வளவுக்கும் தாழ்த்தபட்ட பெண்களுக்கு கல்வி கொடுத்த முதல் நிறுவணம் இந்தியாவில் அதுதான்

ஆனால் செய்யமாட்டார்கள்

காரணம் சாரா டக்கர் தலித்தியம் பேசவில்லை, அம்பேத்காரியம் பிராமண எதிர்ப்பு பேசவில்லை

மாறாக மனிதம் பேசினாள்

அவளின் கனவாக நெல்லையில் பள்ளி கல்லூரி பெண்களுக்காக திறக்கபட்டபொழுது பெரியார் பிறக்கவே இல்லை

இதனால்தான் பெரியாரால் படித்தோம் என சில அரைவேக்காடுகள் அலறும்பொழுது ஆத்திரம் வருகின்றது

மனிதம் பேசியது யாராக இருந்தாலும் பிராமணன் ஒழிக, இந்துமதம் ஒழிக பார்ப்பான் ஒழிக என சொல்லாவிட்டால் இவர்கள் ஏற்க மாட்டார்கள்

எந்த மானிடநேயனும் இந்துமதத்தையும் பிராமணியத்தையும் சீண்டினால் மட்டுமே இவர்கள் ஏற்றுகொள்வார்கள்

ஒரு வகையான வியாதி இது, மருந்து இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை

பெரிசுகள் இல்லாத வீட்டு குழந்தைகள்

அமைச்சர் சீனிவாசன் இந்தோனேஷியாவுக்கும், நிலோபர் கபில் ரஷியாவுக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ மொரிசியஸ் நாட்டுக்கும், அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து நாட்டுக்கும் அரசு முறை பயணமாக சென்று வந்துள்ளனர் என்பது தெரிந்த செய்தி

கேப்டன் பழனிச்சாமி அமெரிக்காவில் இருக்கின்றார்

அமைச்சர் சி.வி.சண்முகம், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகிய இருவரும் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றனர்.

இதில் சன்முகம் சொந்த விஷயமாக செல்கின்றாராம், அன்பழகன் எதற்கு செல்கின்றார் என தெரியவில்லை டைகர் பாம் அல்லது கோடாரி தைலம் வாங்க செல்லலாம்

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் எகிப்து நாட்டுக்கு சென்றுள்ளார். அது தனிபட்ட பயணமாம்

எகிப்தில் தமிழ்வளர்ப்பாரோ?

வளர்ப்பு அம்மா ஜெயலலிதா இல்லை, கார்டியன் சசிகலா சென்னையில் இல்லை

புதிதாக‌ தத்தெடுத்த‌ அப்பா மோடி நாட்டில் இல்லை

பெரிசுகள் இல்லாத வீட்டு குழந்தைகள் தெரு தெருவாய் ஆட செல்வது போல இவர்கள் அலைந்துகொண்டிருக்கின்றார்கள்

இதில் பன்னீர் செல்வம் மற்றும் செல்லூர் ராஜூ என இருவரும் எங்கும் சென்றதாக தெரியவில்லை

நிச்சயம் அவர்கள் மனம் வருந்தியிருக்கும்

அநேகமாக செல்லூர் ராஜு மனம் வெறுத்து கள்ள தோணியில் ஏறி பாண்டியராஜன் ஸ்டைலில் துபாய் செல்லலாம்

சேக் டிரெஸ் சகிதம் அவரும் ரெடியாக கிளம்பலாம்

கொச்சியில் அவரை இறக்கிவிட்டு இதுதான் துபாய் என்றால் அந்த அப்பாவி மனிதர் நம்பாமல் இருப்பாரா என்ன?

ஆர்ப்பாட்டகாரருக்கே சாதகம்

ஹாங்காங்கின் போரட்டாம் ஆர்ப்பாட்டகாரருக்கே சாதகமாக முடிந்துவிட்டது

பொருளாதார குற்றவாளிகள் சீனாவுக்கு நாடு கடத்தபடமாட்டார்கள் அவர்கள் ஹாங்காங்கிலே தொடர்ந்து தங்கி இருந்து குற்றம் புரியலாம் என ஹாங்காங் அரசு அறிவித்தாயிற்று

ஹாங்காங்கின் பதற்றத்தால் தென்னக தொழில்முடக்கம் ஏற்படுவதை சீனா விரும்பவில்லை,அந்த டிராகன் பதுங்கி பின்வாங்கிற்று

ஹாங்காங் இனி இயல்பு நிலைக்கு திரும்பும், அதாவது எந்த சட்டத்துக்கும் அடங்காமல் பழையபடி தில்லு முல்லு செய்யலாம்

கப்பலோட்டிய இந்தியன் என்பதே சரி

கப்பல்லோட்டிய இந்தியன் என அவரை சொன்னால்தான் என்ன?

கப்பலோட்டிய தமிழன் என சொல்ல வேண்டியது அதன் பின்பு அய்யய்யோ வட இந்தியனுக்கு இவரை தெரியாது என புலம்ப வேண்டியது

அவர் கப்பலோட்டிய தமிழன் அல்ல, தமிழனுக்காக அவர் கப்பல் விடவில்லை

ஏதோ மற்ற இனமெல்லாம் கப்பல் விட்டதை போலவும் அதில் தமிழன் ஏறகூடாது என சொன்னது போலவும் இவர் தனியே கப்பல்விட்ட தமிழராம்

அவர் கப்பலோட்டிய இந்தியன் என்பதே சரி

ஆசிரியர் தினத்தில் வணங்கிகொள்ளலாம்

சிக்கல் மிகுந்த வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் எப்படி கடக்கவேண்டும் என சொல்லிகொடுத்த ஆசிரியர் அவர்தான்

அவமானம், துரோகம், பிரிவு, வலி, தாழமுடியா சோகம் , இனி எழவே முடியாதபடி அடி என எல்லாவற்றையும் தாண்டி வரும் தன்னம்பிக்கை அவரின் வாழ்வினை படித்தால் யானை பலத்தோடு வந்து அமரும்

சாதி பலமோ, உடன்பிறப்போ, தந்தையோ , பெரும் கல்வியோ, பணமோ எதுவுமே இல்லாமல் போராட்ட வாழ்வு ஒன்றாலே தன்னை நிரூபித்த மனிதன்

எவ்வளவு எதிர்ப்பு? எவ்வளவு ஏளனம்? எவ்வளவு சதி? அனைத்தையும் தாண்டி தனிமனிதனாய் களத்தில் நின்றது சாதாரணம் அல்ல‌

இனி அப்படி ஒரு சுவாரஸ்ய மனிதன் வரவே மாட்டான்

நிச்சயம் நெருப்பை பலமுறை தாண்டிய மனிதன்

அவர் மாபெரும் தத்துவாசிரியன், அவர் வாழ்வு சொல்லிவிட்டு சென்ற பாடம் ஏராளம்

எதிர்முகாம் ஆயினும் பீஷ்மருக்கான மரியாதையே தனி

ஆம், அந்த மனிதனே பெரும் ஆசிரியன் அரசியல் உட்பட‌

அரசியலை விடுங்கள், அதை தாண்டி அவரிடம் கற்றுகொள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயம் இருக்கத்தான் செய்கின்றது

அவர் இல்லாவிட்டாலும் அந்த சமாதி நோக்கி ஆசிரியர் தினத்தில் வணங்கிகொள்ளலாம்

இன்னுமா முன் ஜாமீன் விளையாட்டு?

இவ்வளவு ஆனபின்னும் இன்னும் சிறைக்கு செல்லமாட்டேன் என ப.சிதம்பரம் அடம்பிடிப்பது சரி அல்ல‌

இனி சிறைக்கு சென்றால் என்ன? செல்லாவிட்டால்தான் என்ன?

இன்னுமா முன் ஜாமீன் விளையாட்டு?

இரு நாட்டு தலைவர்கள் சந்திக்கும் இடம் சில அரசியல் குறியீடுகளை சொல்லும்

பொதுவாக இரு நாட்டு தலைவர்கள் சந்திக்கும் இடம் சில அரசியல் குறியீடுகளை சொல்லும்

அமெரிக்காவின் கேம்ப் டேவிட் அப்படிபட்டது, தாவீது முகாமில் அமெரிக்க அதிபர் யாரையாவது சந்தித்தால் விஷயம் இஸ்ரேலுக்கு சாதகம் எனபொருள்

வாஷிங்டனில் சந்திக்கும் சந்திப்பு அரசியல் என்றும், நியூயார்க் சந்திப்பு வர்த்தக பயன்பாடுஎன்பதும் அமெரிக்க குறியீடு என்பார்கள்

ரஷ்யா பொதுவாக மாஸ்கோவில்தான் சந்திப்பு நடத்தும், ஆசிய விவகாரங்களை முன்பு தாஷ்கண்டில் நடத்துவார்கள் காரணம் அது தைமூரின் பூமி, இந்தியா மற்றும் அரேபியாவினை மிரட்டிய மன்னன் அவன், ஆசிய தாதா

உஸ்பெக் பிரிந்தபின் சகலமும் மாஸ்கோ மட்டுமே

அப்படிபட்ட ரஷ்யா திடீரென தன் முக்கிய மாநாட்டை விலாடிவிஸ்டோக் நகரில் அதுவும் கிழக்கில் நடத்துவது பெரும் எச்சரிக்கையினை உலகுக்கு கொடுக்கின்றது

அதாவது 1900 வரை ரஷ்யா பின் தங்கிய நாடே, செங்கிஸ்கான் தொடங்கி நெப்போலியன் ஜப்பான் வரை போட்டு அடியோ அடி என அடித்தார்கள்

ஏன் ரஷ்யாவின் பகுதியான அலாஸ்கா கூட அமெரிக்காவுக்கு விற்கபட்டது

அவர்கள் எழுச்சி ரஷ்ய புரட்சிக்கு பின் வந்தது இரண்டாம் உலகபோருக்கு பின் சிகப்பு பட்டையுடன் ரெவிடியானவர்கள் மங்கோலியாவினை மிரட்டி அடக்கி பழிவாங்கினார்கள்,சீனாவினை தட்டி வைத்தார்கள்

ஜப்பானை மிரட்ட இந்த நகரில் பெரும் கடற்படை தளம் அமைத்தாரகள் அதிலிருந்து கொரிய போர் நடத்தினார்கள், வியட்நாம் யுத்தம் உட்பட பல விஷயங்களில் பின்னால் இருந்தார்கள்

மாவோ கொஞ்சம் ஆடியபொழுது அதிலிருந்தே அடக்கி வைத்தார்கள்

சோவியத்தின் மிகபெரும் கோட்டையாக அந்நகர் இருந்தது பின்பு அது உடைந்ததும் ரஷ்யாவின் மர்ம நகரமானது சோவியத்தின் அணுகுண்டெல்லாம் இங்குதான் புதைக்கபட்டது என்றார் எல்ட்சின்

இன்று ரஷ்யாவின் மிகபெரும் கப்பல் கட்டும் தளம் மற்றும் கடற்படை தளம் அது

மிகபெரும் பாதுகாப்பு கோட்டையும் கூட, ஜிபிஎஸ் வைத்தெல்லாம் ஏவுகனை கூடஅதை நெருங்க முடியாது

அப்படிபட்ட நகரில் அதாவது சோவியத் காலத்தில் உலகை மிரட்டிய நகரில் இன்று மறுபடியும் கூட்டத்தை நடத்தி உலகுக்கு ஏதோ சொல்கின்றார் புட்டீன்

அதை மோடியும் தலையினை ஆட்டி ஆமோதிக்கின்றார்

தென் கொரியா, ஜப்பான், தைவான் என அமெரிக்க பிடி இருக்கும் பகுதியில் சீனாவும் அடிக்கடி ஆடும் பகுதியில் நாமும் இருக்கின்றோம் மறக்க வேண்டாம் என பழைய ரவுடி திரும்பியது போல் திரும்பியிருகின்றது ரஷ்யா

அதாவது மேற்கு பகுதியில் ரஷ்யாவினை அன்மித்த போலந்து போன்ற நாடுகளில் அமெரிக்கா கால் பதிக்கும் பொழுது இந்த எல்லையில் இருந்து அமெரிக்காவின் மேற்கு பகுதியினை மிரட்ட முடியும்

அதைத்தான் இப்பொழுது உலகுக்கு சொல்கின்றது ரஷ்யா

“ஏ அமெரிக்காவே என் மேற்கு பக்கம் நீ வந்தால் உன் எல்லையின் மேற்கு பக்கம் நானும் வருவேன் அதனால் அடங்கு”

எதையுமே நமக்கு சாதகமாக பயன்படுத்துவதுதான் நம் வெற்றி

இந்தியாவும் இந்த சந்தடி சாக்கில் சீனாவின் கடற்பரப்பில் கப்பல் விட்டு, “ஒழுங்கா வழிவிடு.. ரஷ்யா போறோம்” என அட்டகாசம் செய்ய வாய்ப்பு ரெடி.

நடக்கும் காட்சிகளை உன்னிப்பாக கவனிக்கின்றது அமெரிக்கா

அங்கு டிரம்புக்கு கையில் சாக்ஸ் எல்லாம் மாட்டி கை சூப்பும் குழந்தையினை பார்ப்பது போல் கடும் எச்சரிக்கையாக பார்த்து கொண்டிருக்கின்றது வெள்ளை மாளிகை

ஆம் இல்லையென்றால் டிவிட்டரில் ஏதாவது சொல்லிவிடுவார் அது சிக்கலாகிவிடும் அல்லவா? அதனால்தான்